ஸ்டாக்ஹோமில் 99 சதவிகித அளவிற்கு தீவிர சிகிச்சைப் பிரிவுகள் நிரம்புவதை சுவீடன் எதிர்கொள்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வைரஸை தீவிரமாக பரவ அனுமதிக்கும் சுவீடன் “சோதனை” முற்றிலும் பேரழிவுகரமானது என்பது நிரூபனமாகியுள்ளது. ஸ்டாக்ஹோமில் இறப்பு எண்ணிக்கை தடையின்றி தொடர்வதால், அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுகள் அநேகமாக அவற்றின் கொள்திறனை தாண்டி இயங்குகின்றன.

உலகில் தற்போது 70 மில்லியனுக்கும் மேற்பட்ட கோவிட்-19 நோய்தொற்றுக்கள் பரவியுள்ளன, மேலும் அண்ணளவாக 1.6 மில்லியன் பேர் அதனால் இறந்துள்ளனர். உலகளவில், ஏழு நாள் சராசரியாக நாளொன்றுக்கு புதிய நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை 623,488 என்றும், மற்றும் நாளொன்றுக்கு இறப்புக்களின் எண்ணிக்கை 10,862 என்றும் உச்சத்தை எட்டியிருந்தாலும், கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் வைரஸ் பரவுவதைத் தடுக்க முயற்சிக்கவில்லை, மாறாக தொற்றுநோயால் ஏற்படும் பொருளாதாரச் சீர்குலைவைத் தடுக்கவே முயற்சிக்கின்றன என்ற நிலையில், ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் நோய்தொற்றின் தற்போதைய எழுச்சியில் இன்னமும் கடுமையான வேகம் காணப்படுகிறது.

அமெரிக்காவில் நாளாந்த இறப்புக்களின் எண்ணிக்கை 3,000 ஐ கடக்கின்ற நிலையில், நிகழ்வுகள் மீது அங்கு மிகுந்த கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. நோய்தொற்றுக்களின் ஏழு நாள் சராசரி 213,000 ஐ கடந்துவிட்ட அதேவேளை மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கையும் 110,000 ஐ எட்டியுள்ளது. என்றாலும், அரசியல் ஸ்தாபகம் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கு எந்தவித பொறுப்புமின்றி கை கழுவிவிட்டது.

என்றாலும், குளிர்காலத்தில் நோய்தொற்று எழுச்சி காண்கின்றதான சுவிடனின் தற்போதைய சூழ்நிலை அமெரிக்காவை விட மோசமானதே. தனிநபர் அடிப்படையிலான, புதிய நோய்தொற்றுக்கள், இறப்புக்கள் மற்றும் நோய்தொற்று பரவலின் நேர்மறை விகிதம் ஆகியவற்றுக்கான மதிப்பீட்டு வளைவுகள் ஒன்றுக்கொன்று கடுமையாக பிரதிபலிப்பதானது, இரு நாடுகளின் குற்றவியல் கொள்கைகள் வைரஸை வெடித்துப் பரவ அனுமதிப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.

Sweden vs US per capita cases

வெறும் 10 மில்லியனுக்கு சற்று அதிகமான மக்கள்தொகை கொண்ட நாடான சுவீடன், 312,000 அல்லது ஒட்டுமொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேற்பட்ட கோவிட்-19 நோய்தொற்றுக்களை பதிவு செய்துள்ளது. இந்த நோய்தொற்று எழுச்சி ஸ்காண்டிநேவிய தேசத்தை முற்றிலும் சீர்குலைத்துவிட்டதால், கடைசி 200,000 நோய்தொற்றுக்கள் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பரவியுள்ளன. தொற்றுநோய் பரவ ஆரம்பித்ததிலிருந்து இந்நாட்டில் 7,200 இறப்புக்களும் நிகழ்ந்துள்ளன, இதில் 1,200 இறப்புக்கள் கடந்த மாதத்தில் தான் நிகழ்ந்துள்ளன, அதிலும் இந்த எண்ணிக்கை மேல்நோக்கி விரைந்து அதிகரித்து வருகிறது.

ஸ்டாக்ஹோமின் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளின் படுக்கைகள் செவ்வாயன்று புதிய நோயாளிகளின் வருகையால் விரைந்து நிரம்பிவிட்டதால், அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுகள் 99 சதவிகித கொள்திறனை எட்டியுள்ளன என்று சுவீடன் செய்தியிதழான Aftonbladet தெரிவித்தது. ஒரு மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஒரு நகரத்தில் ஒரு சில தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளே சிகிச்சைக்கு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஸ்டாக்ஹோமின் சுகாதார இயக்குநரான Bjorn Eriksson இந்த சூழ்நிலை முற்றிலும் தீவிரமானது என்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்: “அனைவருக்கும் தேவையான கவனிப்பு கிடைக்கும் வகையில், எங்களால் முடிந்த அளவிற்கு அனைத்து வளங்களையும் நாங்கள் திரட்டி, எங்களால் வழங்க முடிந்த அனைத்தையும் வழங்கினோம். வைரஸ் மற்றும் பெருந் தொற்றுநோய்க்கான எதிர்ப்பு சக்தியை வழங்க, சமூகத்தில் ஒட்டுமொத்த செயற்பாட்டாளர்களாக எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் தொடர்ந்து செய்வது அவசியம்.” இந்நிலையில், வெறுமனே நகரம் மற்றும் நாட்டின் பெயர்களை மட்டுமே மாற்றக்கூடிய நிலைமை ஐரோப்பா முழுவதுமாக அதிகரித்து வருகிறது.

தங்களது உயிருக்காக போராடும், தீவிர பாதிப்புள்ள கோவிட்-19 நோயாளிகளுக்கான கடைசி பாதுகாப்பு வலையமைப்பாக தீவிர சிகிச்சைப் பிரிவுகள் தான் உள்ளன. உயிர்காக்கும் ஆக்ஸிஜன், டெக்ஸாமெதாசோன் மற்றும் பல்வேறு சிகிச்சை கூறுகள் உள்ளன, என்றாலும் தொற்றுநோயையும் அதன் மோசமான வெளிப்பாடுகளையும் எதிர்த்துப் போராடத் தேவையான மருத்துவக் களஞ்சியத்தில் ஒரு சில மருந்துகள் மட்டுமே உள்ளன. நோயாளிகளின் உடலியல் நுட்பமான மாற்றங்களை கண்காணிக்க, முக்கிய நோயறிகுறிகள் மற்றும் ஆய்வக கண்டுபிடிப்புக்கள் தொடர்பாக மருத்துவர்களும் செவிலியர்களும் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இந்த திறன்கள், குறிப்பாக தீவிர சிகிச்சைப் பிரிவு அணி அதன் வரம்பை எட்டும்போது, நிலைமை விரைந்து படுமோசமாக மாறத் தொடங்குகிறது.

Sweden vs US per capita deaths

கரோலின்ஸ்கா பல்கலைக்கழக மருத்துவமனையில் நோயாளிகளுக்கான செவிலியர் விகிதங்களின் அனுசரிப்புக்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாக தீவிர சிகிச்சைப் பிரிவின் செயல்பாட்டு மேலாளர் Bjorn Persson தெரிவித்துள்ளார். ஊழியர்களுக்கான பணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது, அல்லது பணியாளர் பற்றாக்குறையை சமாளிக்க பணி நேரம் முடிந்த பின்னர் அடுத்த மாற்றுப் பணி நேரத்திலும் வேலை செய்ய அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். மேலும் எரிக்சன் இவ்வாறு தெரிவித்தார்: “இவ்வாறாக இது சரியாக வளர்ச்சியடைவதை நாங்கள் காண விரும்பவில்லை. ஸ்டாக்ஹோமை சேர்ந்த நாங்கள் கூட்டமாக இருந்ததையும், வீட்டு நபர்களைத் தாண்டி, பல வெளி தொடர்புகளைக் கொண்டிருந்ததையுமே இது காட்டுகிறது. சுகாதார அமைப்புமுறைகளில் பெரியளவில் வரம்புகள் இல்லை என்பதால், சுகாதார அமைப்புமுறைகளுக்கு அதிகபட்ச அழுத்தங்கள் எதுவும் இல்லை.”

செப்டம்பர் பிற்பகுதியில் நோய்தொற்றுக்கள் அதிகரிக்கத் தொடங்கியதிலிருந்து, சுவீடன் சின்ன சின்னதாக கட்டுப்பாடுகளை செயல்படுத்தும் நிலைக்கு மாறியது. நவம்பர் 20 அன்று, இரவு 10 மணிக்குப் பின்னர் மதுபானகங்களும் மற்றும் உணவகங்களும் மதுபான விற்பனை செய்வதற்கு தடை விதித்தது. நாடு முழுவதிலுமுள்ள 21 பிராந்தியங்களில் ஐந்து பிராந்தியங்கள் கடுமையான வழிகாட்டுதல்களுக்குட்படுத்தப்பட்டன, அவை பொது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வலியுறுத்தின. உட்புற மற்றும் வெளிப்புற கூட்டங்களில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 50 ஆக இருந்தது தற்போது எட்டாக குறைக்கப்பட்டது. விருந்து விழாக்களில் கலந்துகொள்வதற்கு எதிராகவும், உட்புறக் கூட்டங்களை தவிர்க்கவும் மற்றும் தேவைப்பட்டால் பொது போக்குவரத்தை பயன்படுத்தக் கூடாது என்றும் விடுக்கப்பட்ட பொது சுகாதார எச்சரிக்கைகள் கூடுதல் நடவடிக்கைகளில் அடங்கும். என்றாலும் கூட, இந்த எழுச்சியைத் தடுக்க இந்த நடவடிக்கைகள் சிறிதும் செய்யவில்லை.

நவம்பர் 22 அன்று, உணர்ச்சிவசப்படக்கூடிய பிரதமர் ஸ்ரெஃபான் லோவென் தொற்றுநோய் பற்றி தேசத்திற்கு உரையாற்றுகையில், “நாம் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு முன்னால் இது கொஞ்சம் காலம் எடுத்துக்கொள்ளும். இந்த கோடை மற்றும் இலையுதிர் காலங்களில் எங்களுக்கு கிடைத்த சிறிய ஓய்வு உண்மையிலேயே முடிந்துவிட்டது. இப்போது நவம்பர் நடக்கிறது. மக்களின் ஆரோக்கியமும், உயிரும் இன்னமும் ஆபத்தில் உள்ளன. மேலும் ஆபத்து அதிகரித்து வருகிறது” என்றார்.

தற்போதைய சூழ்நிலைகளை அவர்கள் எதிர்கொள்வதில், முகக்கவசங்களை பயன்படுத்துவது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் விரிவாக பரிந்துரைத்துள்ள போதிலும், அவற்றின் செயல்திறன் பற்றிய “மோசமான ஆதாரங்களை” மேற்கோள் காட்டி, தனிமைப்படுத்தப்படுவதை தவிர்க்கவே மக்கள் அவற்றை பயன்படுத்துவார்கள் என்று கவலை தெரிவித்து அவற்றை அணிவதை சுவீடன் சுகாதார அமைப்பு தொடர்ந்து நிராகரித்து வருகிறது.

நாட்டின் தொற்றுநோயியல் நிபுணரான ஆண்டர்ஸ் டெக்னெல் (நன்றி: விக்கிபீடியா)

“சில சூழ்நிலைகளில் முகக்கவசங்கள் அணிய தேவைப்படலாம். [சுகாதார] பிராந்தியங்களுடனான எங்களது உரையாடலின் படி, சுவீடனில் அந்த சூழ்நிலை இன்னும் எழவில்லை” என்று அரசாங்கத்தின் தலைமை தொற்றுநோயியல் நிபுணரான ஆண்டர்ஸ் டெக்னெல் கூறினார். மேலும், இது சமூகத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாக்கும் எனக் கூறப்படும் “கூர்ந்த கவனம் செலுத்தப்பட்ட பாதுகாப்பை” இது உட்படுத்தியது என்ற வஞ்சகமான பாசாங்கின் கீழ் கூட்டு நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை என்ற கொலைகாரக் கொள்கைக்கு டெக்னெல் ஒப்புதல் அளித்திருந்தார். சமூகத்தில் மிகப்பரந்தளவில் நோயெதிர்ப்பு சக்தியை ஏற்படுத்த வேண்டும் என்றளவிற்கு இளைஞர்கள் மற்றும் ஆரோக்கியமானவர்கள் மத்தியில் போதுமான எண்ணிக்கையினருக்கு நோய்தொற்று ஏற்பட்டிருக்க வேண்டும், அதேவேளை நோய்தொற்றை தவிர்க்க வயோதிபர்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டனர். என்றாலும், சுவீடனில் பாதியளவு இறப்புக்கள் நீண்டகால பராமரிப்பு வசதிகளில் நிகழ்ந்துள்ளன.

மாறாக, பல விஞ்ஞானிகள் சுகாதார அமைப்புமுறையின் அணுகுமுறையை விமர்சித்துள்ளனர். கரோலின்ஸ்கா நிறுவனத்தின் நுண்ணுயிரியில் பேராசிரியரான ஆண்டர்ஸ் வால்னே, “அவர்கள் தமது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முயற்சிக்கவில்லை. தீவிர சிகிச்சைப் பிரிவுகள் நோயாளிகளால் நிரம்பி வழியும் என்ற நிலையில், உங்களால் இளைஞர்களை கவனித்துக்கொள்ள முடியாது என்று அவர்கள் அச்சுறுத்துகிறார்கள். எனவே, சற்று கடுமையாக அவர்கள் [நோயாளிகளை] தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.

கரோலின்ஸ்காவில் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் ஒரு மருத்துவரான Piotr Nowak, “ஐரோப்பாவின் மற்ற பகுதிகளுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு மூலோபாயத்தைத் அதிகாரிகள் தேர்ந்தெடுத்தனர் என்ற நிலையில், அதன் காரணமாக நாடு நோய்தொற்றின் முதல் எழுச்சியில் கடும் பாதிப்பை எதிர்கொண்டது. இரண்டாவது அலை பற்றி அவர்கள் கணிக்கத் தவறிவிட்டார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. மேலும், ஒட்டுமொத்த மருத்துவ சமூகமும் பொது சுகாதார நிறுவனத்தின் தவறான “நம்பிக்கையை” பகிர்ந்து கொள்ளவில்லை என்று அவர் விளக்கினார்.

Loading