கராபாக் மீதான ஆர்மீனிய-அஸெரி போருக்கு ரஷ்யா, துருக்கி போர்நிறுத்த பேச்சுவார்த்தை நடத்துகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நவம்பர் 10 ஆம் திகதி, சர்ச்சைக்குரிய நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தில் ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையிலான ஆறு வார போரில் மாஸ்கோ மற்றும் அங்காரா ஆதரவுடைய போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது. ரஷ்ய, பிரெஞ்சு மற்றும் அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய முன்னைய போர் நிறுத்தங்கள் உடனடியாக முறிவடைந்தது போலல்லாமல், இந்தப் போர் நிறுத்தம் இதுவரை கடைப்பிடிக்கப்படுகிறது. இது முன்னைய போர் நிறுத்தங்களைப் போலல்லாமல், அஸெரி அரசாங்கம் மற்றும் அதனுடைய முக்கிய சர்வதேச ஆதரவாளரான துருக்கியின் ஆதரவைக் கொண்டிருப்பதால் இது பெரும்பாலும் இருப்பதாக தெரிகிறது.

இரண்டு முன்னாள் சோவியத் குடியரசுகள் கராபாக் தொடர்பாக பலமுறை சகோதரப் போர்களை நடத்தியுள்ளன, முதலில் இது, 1991 ல் சோவியத் ஒன்றியத்தை ஸ்ராலினிச ஆட்சி கலைப்பதற்கு முன்னதாக 1988 ஆண்டில் வெடித்தது. 1988-1994 போரில் ஆர்மீனியா நாகோர்னோ-கராபாக்கைக் கைப்பற்றியது, இருப்பினும், ரஷ்ய, ஆர்மீனிய மற்றும் அஸெரி அதிகாரிகள் ஏற்றுக் கொண்ட தற்போதைய போர் நிறுத்தம் அஸெரி பிராந்திய கோரிக்கைகளுக்கு கணிசமான சலுகைகளை அளிக்கிறது, கராபாக்கின் பெரும்பகுதியை அஜர்பைஜானிடம் ஒப்படைக்கிறது.

Azerbaijan's soldiers fire from a mortar at the contact line of the self-proclaimed Republic of Nagorno-Karabakh, Azerbaijan, on September 27, 2020 (Azerbaijan's Defense Ministry via AP)

சமீபத்திய வாரங்களில் துருக்கிய மற்றும் இஸ்ரேலிய மிக வான் உயர் மட்ட ட்ரோன்களின் பேரழிவுகரமான தாக்குதல்களை சார்ந்திருந்ததால், அஸெரி பாரிய முன்னேற்றங்களைக் கண்டது. சிரியாவில் தசாப்த காலமாக நீடித்த நேட்டோ பினாமிப் போரில் சிரிய மற்றும் ரஷ்ய படைகளுக்கு எதிராக ஆர்மீனியாவின் பழைய வான் பாதுகாப்பு அமைப்புமுறைகளை தந்திரோபாயமாகத் தவிர்த்து கையாண்டு, அவர்கள் ஆர்மீனிய ஏவுகணை தளங்கள், பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்களை அழித்தனர். நாகோர்னோ-கராபாக்கின் இரண்டாவது பெரிய நகரமான ஷுஷாவைக் கைப்பற்றியதாக அஸெரி படைகள் இந்த வார இறுதியில் தெரிவித்த பின்னர், ஆர்மீனியா போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது.

போர் நிறுத்தத்தின்படி, ஆர்மீனிய மற்றும் அஸெரி துருப்புக்கள் ஆரம்பத்தில் தங்களுடைய தற்போதைய நிலைகளில் இருக்க வேண்டும். கவச வாகனங்கள் மற்றும் உபகரணங்களுடன் 1,960 ரஷ்ய அமைதி காக்கும் படையினர் தொடர்பு முன்னரங்கு வரிசையில் நிறுத்தப்படுவதால், ஆர்மீனிய துருப்புக்கள் பின்வாங்குவார்கள். தலைநகர் ஸ்டீபனகெர்ட் உட்பட, ஆர்மீனியா தற்போது வைத்திருக்கும் கராபாக்கின் பகுதிகளை தக்க வைத்துக் கொள்ளும். இது 1988-1994 போரின் போது நவம்பர் 20 திகதிக்குள் கைப்பற்றப்பட்ட அக்தாம் மற்றும் கல்பஜர் மாவட்டங்களும் அஜர்பைஜானுக்கு திருப்பி கொடுக்க வேண்டும்.

இந்த ஒப்பந்தம் மலைப் பிராந்தியத்திலிருந்து சிக்கலான நிலப் பாதைகளை பாதுகாக்கவும் அழைப்பு விடுகிறது. அஜர்பைஜான் ஸ்டெபனகெர்ட்டையும் ஷுஷாவையும் பின்னர் ஆர்மீனியாவையும் இணைக்கும் லாச்சின் வழிப்பாதையின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இந்த வழிப்பாதையில் ரஷ்ய அமைதி காக்கும் படையினர் ரோந்து செல்வார்கள். அஜர்பைஜானில் இருந்து ஆர்மீனியா வழியாக நக்சிவன் (Nakhchivan) தன்னாட்சி குடியரசு வரையிலான நிலப் பாதைகளின் பாதுகாப்பை ஆர்மீனியா உத்தரவாதம் அளிக்கும். இது, அஜர்பைஜானில் இருந்து ஆர்மீனிய பிரதேசத்தால் பிரிக்கப்பட்ட நிலத்தால் சூழப்பட்ட அஸெரியால் நிர்வகிக்கப்பட்ட இடமாகும்.

இந்த ஆட்டம் காணும் போர் நிறுத்தமானது அது கடைப்பிடித்தாலும், பிராந்தியத்தின் முதலாளித்துவ ஆட்சிகள் மூன்று தசாப்தங்களாக தீர்க்க இயலாது என்று நிரூபிக்கப்பட்டுள்ள நாகோர்னோ-கராபாக் மோதலை இது தீர்க்காது. முழு சூழ்பிரதேசத்தையும் உரிமைகோருதல்களை முன்வைக்க இரு தரப்பிலும் மிகவும் ஆக்கிரோஷமான தேசியவாத கூறுகளுக்கு இது திறந்திருப்பது மட்டுமல்லாமல், மக்கள்தொகை புதிய இடப்பெயர்வுகளைத் தூண்டக்கூடும், ஆர்மீனிய அதிகாரிகள் கால் நூற்றாண்டு காலமாக அவர்கள் வைத்திருந்த பகுதிகளை கைவிட 10 நாட்கள் மட்டுமே இருக்கிறது.

சமீபத்திய போரில் ஒரு புதிய, பாரிய உயிர் இழப்புக்குப் பின்னர் இது வருகிறது. செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 22 வரை போரில் குறைந்தது 5,000 பேர்கள் இறந்ததாக அஸெரி மற்றும் ஆர்மீனிய அதிகாரிகளால் தனிப்பட்ட முறையில் தெரிவித்த மதிப்பீடுகளின் அடிப்படையில் ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர். இருப்பினும், உத்தியோகபூர்வ அஸெரி அல்லது ஆர்மீனிய இறப்புகளின் மொத்தத் தொகை இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும், அஸெரி படைகளின் முன்னேற்றங்கள் மற்றும் ஆர்மீனிய குண்டு வீச்சுக்கள் 90,000 ஆர்மீனியர்களையும் 40,000 அஸெரிகளையும் அவர்களுடைய வீடுகளை விட்டு வெளியேற நிர்பந்தித்தன.

ஆயினும்கூட, பிராந்தியத்திலுள்ள அதிகாரிகள் இந்த ஒப்பந்தத்தை பாராட்டினார்கள், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் இடையே சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக துருக்கிய உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. கிரெம்ளின் ஊடகச் செயலாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ஈடுபட்டது "குறிப்பிடத்தக்கதல்லாத முயற்சிகள் அல்ல" என்று பாராட்டினார்.

ரஷ்யாவைப் போலவே, பாரம்பரியமாக ஆர்மீனியாவிற்கு ஆதரவு கொடுத்த ஈரானின் வெளியுறவு அமைச்சகம், "ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றி திருப்தி" என்று அறிவித்ததுடன், "இந்த உடன்பாடு காக்கசஸில் நீடித்த சமாதானத்திற்கான இறுதி ஏற்பாடுகளுக்கு வழிவகுக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்தது.

அஸெரி ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் போர் நிறுத்தமானது "வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது" என்றும் ஆர்மீனியாவின் "சரணாகதி" என்றும் பாராட்டிய பின்னர், துருக்கிய பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசி அகார் நேற்று அஸெரி தலைநகரான பாகுவிற்கு விஜயம் செய்து அறிவித்தார்: "தற்போதைய நிலைமை எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நடவடிக்கை ஒரு விழிப்புணர்வு ... அஸெரி இராணுவம் தனது சக்தியை முழு உலகிற்கும் காட்டியுள்ளது."

ஆர்மீனியாவில் அரசாங்கம் அதன் பெருகிய இராணுவப் பின்னடைவுகளை பெருமளவில் மறைத்து வைத்திருந்த நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு பாராளுமன்ற சபாநாயகர் அரராத் மிசோயான் மீது தாக்குதல் நடத்தினர்.

போர் நிறுத்தம் ஆர்மீனிய பிரதமர் நிகோல் பாஷினியனுக்கு அவமானகரமான தோல்வியாகும். முன்னாள் பிரதமர் செர்ஜ் சர்க்சியனுக்கு எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னர், 2018 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், கராபாக் மீது ஆர்மீனிய அதிகாரத்தை முழுமையாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கக் கோரி ஒரு பேரினவாத செயற்பாட்டுத் தளத்தை முன்வைத்தார்.

பஷின்யான் முகநூலில் கராபாக்களின் பெரும் பகுதியை அஜர்பைஜானுக்கு ஒப்படைப்பதாக அறிவித்தது, அது "சொல்லமுடியாத வலி" என்று அழைத்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், "போர் நிலைமை பற்றிய ஆழமான பகுப்பாய்வுகள் மற்றும் களத்தின் சிறந்த நிபுணர்களுடன் கலந்துரையாடலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ... இது வெற்றியல்ல, ஆனால் தோற்கடிக்கப்பட்டுவிட்டீர்கள் என்று நீங்கள் உங்களைக் கருதாத வரை தோல்வியும் இல்லை. நாம் ஒருபோதும் தோல்வி அடைந்தவர்களாகக் கருதமாட்டோம், இது நமது தேசிய ஒற்றுமை மற்றும் மறுபிறப்பு சகாப்தத்தின் புதிய தொடக்கமாக மாறும்."

அவருடைய உத்தியோகபூர்வ இல்லத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால், பஷின்யான் மறைந்து இருக்க வேண்டியிருந்தது. அவரது அலுவலக கதவிலிருந்த அவரது பெயர் தாங்கிய இலட்சினையை கழற்றி எறிந்து, "நிகோல் எங்களை காட்டிக் கொடுத்துவிட்டார்" என்று கோஷமிட்டார்கள்.

யெரெவனில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் Middle East Eye இன் நிருபர்கள் கலகப் பிரிவு போலீசாரை நோக்கி ஒரு பெண் கூச்சலிடுவதைக் கண்டார்: “நான் எனது உறவினர்கள் அனைவரையும் இழந்துவிட்டேன். நான் எனது வீட்டை இழந்துவிட்டேன். இதற்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?” 1988-1994 போரில் போராடிய ஆனால் தற்போதைய போரில் யெரெவனுக்கு தப்பி ஓட வேண்டியிருந்த நாகோர்னோ-கராபாக்கின் முன்னாள் ஆர்மீனிய குடிமகனான மற்றொரு நபர், போர் நிறுத்தத்திற்கு ஆதரவு ஒப்புதல் அளித்தார்: “நாங்கள் தொடர்ந்திருந்தால், நாங்கள் இழந்திருப்போம். இன்னும் பல மக்கள் கொல்லப்பட்டிருப்பார்கள்” என்றார் அவர்.

சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச கலைப்பு, பேரழிவு தரும் புவிசார் அரசியல் விளைவுகளை நிரூபித்துள்ளது. மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவை இரத்தக்களரி இன மோதல்களுக்கும் ஏகாதிபத்திய போர்களுக்கும் திறந்து அது வைத்துள்ளது.

போர் நிறுத்தம் பற்றி இன்னும் பெரிய நிச்சயமற்ற தன்மை தொங்கிக் கொண்டிருக்கிறது. லிபியா மற்றும் சிரியா இரண்டிலும் நேட்டோ தலையீட்டால் தூண்டப்பட்ட உள்நாட்டு போர்களில் ரஷ்யாவும் துருக்கியும் எதிரெதிரான பக்கங்களுக்கு ஆதரவு கொடுத்து பினாமிப் போர்களை நடத்திவரும் நிலையில், அஸெரி படைகள் நவம்பர் 9 அன்று ஒரு ரஷ்ய M-24 ஐ சுட்டு வீழ்த்தின. பின்னர் பாகு அதை "துன்பகரமான தவறு" என்று அழைத்தது. போர் நிறுத்தத்தை செயற்படுத்த துருக்கி அமைதி காக்கும் படையினரை நியமிப்பார்கள் என்ற அவர்களின் கூற்றுகளுக்கு முரணாக கிரெம்ளின் ரஷ்ய அமைதி காக்கும் படையினர் மட்டுமே நிறுத்தப்படுவார்கள் என்று கூறியது.

2020 தேர்தல்களுக்குப் பின்னர் வாஷிங்டனில் ஏற்பட்ட வெடிக்கும் அரசியல் நெருக்கடியால் மிகப் பெரிய ஆபத்தும் மற்றும் பிராந்தியத்தில் புதிய அமெரிக்கப் போர்களின் ஆபத்தும் ஏற்படலாம். ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஜோ பைடன் தேர்தலில் வென்ற பின்னரும் பதவியில் இருக்க முயற்சிக்கும் சதித் திட்டத்தை ட்ரம்ப் தொடங்குகையில், ட்ரம்ப் மற்றும் பைடென் இருவரும் மிகவும் ஒரு ஆக்கிரோஷமான கொள்கையைத்தான் அடையாளம் காட்டியுள்ளனர். ட்ரம்ப் கடந்த ஆண்டு ஈரானுடன் கிட்டத்தட்ட போருக்குச் சென்றபோது, ஜனநாயகக் கட்சியானது ரஷ்யாவிற்கு எதிராக ஆக்கிரமிப்புக்கு இடைவிடாமல் கோரியதுடன், ட்ரம்பை ஒரு ரஷ்ய முகவர் என்றும் கண்டித்தது.

குறிப்பிடத்தக்க வகையில், ரஷ்யா மற்றும் ஈரான் இரண்டும் CIA ஆதரவு பெற்ற சிரிய இஸ்லாமியவாத போராளிகளுக்கு எதிராக எச்சரித்துள்ளன, அவர்கள் சிரியப் போரிலிருந்து அஜர்பைஜானுக்கு துருக்கிய ஆதரவுடன் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஈரானிய அரசு நடத்தும் IRNA ஏஜென்சியானது, "ஈரானிய எல்லைகளுக்கு எதிராக ஒரு கணக்கீடு செய்யப்பட்டு அவர்கள் மீறுவதாக இருந்தால், பயங்கரவாதிகளுக்கு இஸ்லாமிய குடியரசின் உறுதியான ஒரு திட்டமிட்ட, உறுதியான மற்றும் மூலோபாய விடையிறுப்பாக இருக்கும் என்று எச்சரித்தது. ... சிரியா மற்றும் ஈராக்கிலிருந்து [அல் கெய்தா தொடர்புடைய போராளிகள்] வெளியேற்றப்பட்ட பின்னர், சிலர் ஈரானிய எல்லைகளில் தங்களுடைய படைகளை நிறுத்த உதவுகிறார்கள் என்றால், அவர்கள் நிச்சயமாக ஒரு பெரிய தவறை செய்துள்ளனர்."

போரினால் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களான செச்னியா மற்றும் தாகெஸ்தான் ஆகிய நாடுகளும் அஜர்பைஜானின் எல்லையாகவும் இருக்கும் ரஷ்யாவும் இதே போன்ற எச்சரிக்கைகளை விடுத்தது. வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ், “கூலிப் படையினரை கொண்டு செல்லுவதைத் தடுக்க அழைப்பு விடுத்தார், மோதல் மண்டலத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை, கிடைக்கக்கூடிய தரவுகளின்படி, ஏற்கனவே 2,000 பேர்களை நெருங்குகிறது. குறிப்பாக, அக்டோபர் 27 அன்று துருக்கிய ஜனாதிபதி எர்டோகனுடன் ஒரு தொலைபேசி அழைப்பின் போதும், அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியாவின் தலைவர்களுடன் வழக்கமான உரையாடல்களின்போதும் புட்டின் இந்தப் பிரச்சினையை எழுப்பினார்.”

ரஷ்யாவின் சோவியத் ஒன்றியத்திற்குப் பிந்தைய முதலாளித்துவ தன்னலக்குழுவினால் ஏற்படுத்தப்பட்ட இந்தப் போர் நிறுத்தம் முடிவு அல்ல, ஆனால் சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் பிராந்தியத்தில் ஒரு போருக்கான ஆரம்பம் என்று நிரூபிக்க முடியும் என்ற கவலைகள் அதிகரித்து வருகின்றன. நேற்று நிதிய தினசரியான Vedomosti இன் கட்டுரையின் தலையங்கமாக "ரஷ்யா இரண்டாவது கராபாக் போரை எவ்வாறு இழந்தது" என்று அது தலைப்பிட்டது.

துருக்கி-அஸெரி இனத்திற்கு அங்காராவின் வெற்றிகரமான ஆதரவானது "அகல-துருக்கிய திட்டங்களை" ஊக்குவிக்கும் என்று எச்சரித்து அது எழுதுகிறது: "மத்திய ஆசியாவின் துருக்கிய குடியரசுகளில் அதிகார சமநிலையும் தீவிரமாக மாறும் ... துருக்கிய தேசியவாதிகள் மற்றும் பிரிவினைவாத குழுக்கள் ரஷ்யாவிற்கு உள்ளே இன்னும் வலுவாக செயற்படும் என்பதில் சந்தேகமில்லை” என்றும் "இந்த நடவடிக்கை, அதனுடைய மரணதண்டனையை மதிப்பிடுவது, அஸெரிகளால் அல்லது துருக்கியர்களால் கூட, திட்டமிடப்படவில்லை என்று நாம் கருத வேண்டும்" என்றும் இது மேலும் சேர்த்துக் கொண்டது.

கிழக்கு உக்ரேனில் ரஷ்யாவுடன் தனது மோதலைத் தொடரும்போது, உக்ரேனில் நேட்டோ ஆதரவுடைய ஆட்சி இப்போது துருக்கிய ட்ரோன்களை வாங்குகிறது என்பதைக் குறிப்பிட்டுள்ள Vedomosti, ரஷ்யாவை "நடமாடும் ஆயுதங்கள் மற்றும் தாக்குதல் ட்ரோன்களை" கட்டமைக்க அழைப்பு விடுத்தது. இது மேலும், “2020 ஆம் ஆண்டின் ஆர்மீனிய பேரழிவு மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இதனால் நாங்கள் இதே போன்ற பாடத்தை கற்றுக்கொள்வதை நிறுத்தக்கூடாது” சேர்த்துக் கொண்டது.

இனத் தேசியவாதத்திற்கும் ஸ்ராலினிச சக்திகளின் அதனுடைய ஊக்குவிப்பிற்கு எதிரான ஒரு போராட்டத்திற்கும் மற்றும் பிராந்தியத்திலும் உலகம் முழுவதிலுமுள்ள தொழிலாளர்கள் மத்தியில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர்-எதிர்ப்பு இயக்கத்தையும், ஒரு சர்வதேச மற்றும் சோசலிச அதாவது ட்ரொட்ஸ்கிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவற்கான அவசியத்திற்குமான அவரசர எச்சரிக்கைகளாக இந்த அறிக்கைகளானது இருக்கின்றன.

Loading