இலங்கை: சுகாதாரத் தொழிலாளர் நடவடிக்கை குழுவின் இணையவழி கூட்டத்தின் நேரடி கலந்துறையாடல்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை சுகாதார தொழிலாளர் நடவடிக்கை குழுவானது டிசம்பர் 9 அன்று “சுகாதார தொழிலாளர்களின் கோரிக்கைகளை வெல்வதற்கு எவ்வாறு போராட வேண்டும்?“ என்பதை பற்றி கலந்துறையாடுவதற்கு தனது முதலாவது இணையவழி பொதுக் கூட்டத்தை நடத்தியது

வைத்தியர்கள், தாதிகள், ஏனைய சுகாதார தொழிலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உட்பட இந்த கூட்டத்தில் 35க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். உலகசோசலிசவலைத்தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியினால் பிரசுரிக்கப்பட்ட சுாகாதார தொழிலாளர்களின் செய்தி மடல் இந்த கூட்டத்தை கட்டியழுப்புவதில் உதவியது.

சுகாதார ஊழியர் செய்தி மடல்

சுகாதார ஊழியர்கள் நடவடிக்கைக் குழுவினதும் சோசலிச சமத்துவக் கட்சியினதும் (சோ.ச.க.) உறுப்பினரான சகுந்த ஹிரிமுதுகொட கூட்டத்தை ஆரம்பித்து வைத்தார். உலகத் தொற்று நோயின் நிலை மற்றும் உலகம் முழுவதும் மற்றும் இலங்கையிலும் உள்ள முன்நிலை சுகாதாரத் தொழிலாளர்கள் மீதான அதன் தாக்கம் பற்றியும் அவர் விளக்கினார்.

அவர், உலகம் முழுவதும் 20,000 சுகதார ஊழியர்கள் இந்த வைரஸினால் ஏற்கனவே மரணித்துள்ளதை சுட்டிக் காட்டினார். இலங்கையில் ஒரு வைத்தியரின் உயிழிப்பு பதிவாகியுள்ளதோடு நுாற்றுக்கும் அதிகமான சுகாதார தொழிலாளர்கள் ஏற்கனவே தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். ஹிரிமுதுகொட, சர்வதேச ரீதியாகவும் மற்றும் இலங்கையிலும் சுகாதாரத் தொழிலாளர்களின் போராட்டங்களை சுட்டிக் காட்டி, “இந்தப் போராட்டங்கள், சுகாதார ஊழியர்களுக்கு போராடுவதற்கு இருக்கின்ற அவசர நிர்ப்பந்தத்தினை சுட்டிக்காட்டுவதாக கூறினார்.

சோசலிச சமத்துவக் கட்சி அரசியல் குழுவின் உறுப்பினரான சமன் குணதாச, பிரதான அறிக்கையினை வழங்கினார். அவர் கொவிட்-19 தொற்று நோயானது ஒரு துாண்டுதல் நிகழ்வு என சுட்டிக்காட்டினார். இது கடந்த தசாப்தங்களின் போது ஆழமடைந்த உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியினை தீவிரப்படுத்தியுள்ளது. இலங்கையில் உட்பட முதலாளித்துவமானது இந்த கடுமையான நெருக்கடி சூழ்நிலையில் மனித உயிர்களுக்கு மேலாக இலாபத்தை தூக்கி வைத்துள்ளது.

அரசாங்கங்களும் அவற்றின் ஒத்திசைவான ஊடகங்களும், உயிரிழப்புகளையும் கொரோனா வைரஸையும் வழமையானதாக ஆக்குவதற்கு முயற்சிக்கின்றன. அனேகமாக ஒவ்வொரு நாட்டிலும் கொவிட்-19, உயிரிழப்பின் பிரதான காரணியாக மாறியுள்ளது. பிரதான முதலாளித்துவ நாடான அமெரிக்காவில், இந்தத் தொற்றுநோயானது இருதய நோய், புற்றுநோய் ஆகியவற்றினால் ஏற்படும் உயிரிழப்புக்களை விட முன்னிலையில் உள்ளது.

பேச்சாளர், பன்நாட்டு நிறுவனங்கள், சர்வதேச நிதி மூலதனம் மற்றும் பில்லியனர்களின் இலாப வேட்டையாடல், தொழிலாள வர்க்கத்தின் மிக அடிப்படையான தேவைகளுக்கு நேர் எதிராக இருப்பது எப்படி என்பதை விளக்கினார்.

தொற்றுநோயின் ஆபத்தை மூடி மறைக்கவும் மற்றும் முதலாளித்துவ உற்பத்தியினை தொடர்வதற்கும் அரசாங்கங்களினால் பயன்படுத்தப்படும் வாசகங்களான “புதிய வழமை“, “வைரஸ் உடன் வாழ்தல்” ஆகியவற்றின் கீழ் தொழிலாளர்கள் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என குணதாச அறிவித்தார்.

குணதாச, முன்நிலை சுகாதார ஊழியர்கள், பாரிய ஆபத்துக்கனை முகங்கொடுப்தையும் அதனாலேயே கலந்துரையாடப்படுகின்ற இந்தத் தலைப்பு அவர்களுக்கு பொருத்தமாக உள்ளதென வலியுறுத்தினார்.

“ஏனைய இடங்களில் உள்ள அவர்களின் ஏனைய சகாக்களைப் போலவே, சுகாதராத் துறை தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களின் நலன்களிற்கு முற்றிலும் எதிராக செயற்படுகின்றன. அவர்கள் முதலாளித்துவ வர்க்கத்தின் முகவர்களாக வேலை செய்கின்றனர். பல சந்தர்ப்பங்களிலும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை தராதர அடிப்படையில் பிரித்தும் அவர்களின் போராட்டங்களை கட்டுப்படுத்தியும், ஏனைய தொழிலாளர்களுக்கு எதிராக ஒரு பகுதியினரை குழியில் தள்ளியும் செயற்படுவதை போன்ற பல அனுபவங்களைக் நாம் கொண்டுள்ளோம். தொழிற்சங்கங்கள் அவ்வாறான செயற்பாட்டின் மூலம் தொழிலாளர்களின் போராட்டங்களைப் பலவீனப்படுத்தி காட்டிக்கொடுக்கும் நோக்கத்தில், அவர்களின் ஐக்கியத்தையும் மற்றும் வர்க்க பலத்தையும் உடைக்கின்றன.

பலபிட்டிய வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் 2020 ஜூனில் நடத்திய போராட்டம் (WSWS Media)

பேச்சாளர், தொழிலாளர் போராட்டங்களுக்கான மூலோபாயத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். கடந்த மாதங்களில் நடந்த போராட்டங்களின் அனுபவங்கள், தொழிலாள வர்க்கத்துக்கு முதலாளித்துவ அமைப்பு முறைக்குள் தீர்வு காண முடியாது,

என்பதை தெளிவுபடுத்துகின்றன. தொழிலாள வர்க்கமானது, அதன் கோரிக்கைகளை முன்வைப்பதற்கு பிற்போக்கு முதலாளித்தவ ஆட்சியாளர்கள் மீது எந்தவொரு நம்பிக்கையும் வைப்பதற்கு மாறாக, விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட பகுதியினரின் ஆதரவைத் திரட்டி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முன்னோக்கி செல்ல வேண்டும்.

குணதாஸ, சுகாதாரத் தொழிலாளர்கள் வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய வேலைத்தளங்களில், பல்வேறுபட்ட தரங்களில் மற்றும் பிரிவுகளில் உள்ளவர்களை ஒன்றிணைக்கவும் மற்றும் அவர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதன் பேரில் ஒரு பொதுவான போராட்டத்தை ஒழுங்கமைப்பதற்கும் தங்கள் சொந்த தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை அமைக்க வேண்டும் என முன்மொழிந்தார். சுகாதார தொழிலாளர்கள் நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பகுதியினருடன் ஐக்கியக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக் காட்டினார்.

சுகாதாரத் தொழிலாளர் நடவடிக்கை குழுவானது ஏற்கனவே ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக குணதாஸ அறிவித்தார். அதன் மூலம் இந்தக் குழு, இராஜபக்ஷ அரசாங்கத்தினால் அத்தியாவசிய சேவைகள் சட்டம் திணிக்கப்பட்ட கொழும்பு துறைமுகத் தொழிலாளர்களுடனான ஒற்றுமையை வெளிப்படுத்துகின்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை குழுவானது, தாம் எதிர்கொண்ட தாங்கிக்கொள்ள முடியாத நிலைமைகளை அம்பலப்படுத்தியமையினால் பணி நீக்கம் செய்யப்பட்ட சுவ சரிய நோயாளர் காவுவண்டி தொழிலாளர்களை மீள வேலைக்கு அமர்த்தவும் கோரியது.

இந்த கலந்துரையாடலின் போது பேராதனை போதனா வைத்தியசாலையில் இருந்து பங்கேற்ற ஒரு சுகாதார ஊழியர், “நாம் சுகாதார ஊழியர்களாக இருந்தபோதும் எம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு நாங்களாகவே முகக் கவசத்தை வாங்க வேண்டி இருப்பதுடன் மருத்துவ ஆலோசனைக்கு எதிராக மீண்டும் அதைப் பயன்படுத்த தள்ளப்பட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

அரசாங்கமானது பொலிஸ், இராணுவம் மற்றும் பெருவணிகங்களிற்காக ஒதுக்கப்பட்ட பாரிய நிதியினை வளப் பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பதன் பேரில் சுகாதாரத் துறைக்கு மீளத் திருப்ப வேண்டுமென அவர் சுட்டிக்காட்டினார். இந்தத் தொற்று நோயின் வேளையில், பில்லியனர்கள், தொழிலாளர்களைச் சுரண்டுவதன் மூலம் அவர்களின் சொத்துக்களை ஊதிப் பெருக்கியுள்ளதாக தெரிவித்த அவர், அரசாங்கங்கள் கொலைகார “சமூக நோயெதிர்ப்பு” கொள்கையினைப் பின்பற்றி எவ்வாறு பல நலிவடைந்த மக்களை இந்த தொற்றுக்கு உள்ளாக்கியுள்ளன என்பதை அவர் விளக்கினார்.

கம்பளை வைத்தியசாலையில் இருந்து ஒரு வைத்திய அதிகாரி இந்த கலந்தறையாடலில் இணைந்து கொண்டு, சுகாதாரத் தொழிலாளர் மத்தியிலான அமைதியின்மையானது தொற்றுநோயின் தோற்றத்துடன் கூர்மையாகியுள்ளதாக வலியுறுத்தினார். அரசாங்கமானது தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளை அழித்து சுகாதார ஊழியர்கள் முறையான பாதுகாப்பு இன்றி தமது பணிகளை செய்வதற்கு கட்டாயப்படுத்துகின்ற அதேவேளை, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் போலி இடது கட்சிகளும் தொழிலாளர்களின் எதிர்பை பயனற்ற ஆர்ப்பாட்டங்களுக்குள் சிக்க வைத்து தனிமைப்படுத்த முயற்சித்தனர்.

2020 ஜுலையில் கண்டி வைத்தியசாலை தாதிமார்கள் நடத்திய போராட்டம். ஒரு பதாதை, தாதிமார்களுக்கு கொவிட்-19 நோயாளர்களை பேணுவதற்கு செலுத்தப்பட வேண்டிய கொடுப்பனவின் மிச்சத்தை கொடுக்குமாறு கோருகிறது. மற்றொன்று “எங்களை சுகாதார கதாநாயகர்கள் என அழைக்கத் தேவையில்லை” “ஆடம்பர தனிமைப்படுத்தல் ஹோட்டல்கள் எங்களுக்கு வேண்டாம். எங்களுக்கு தரவேண்டிய கொடுப்பனவுகளை கொடு.” (WSWS Media)

இந்த அடக்குமுறைகளை முகங்கொடுக்கையில் வைத்தியசாலைகளில் நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்புவதானது ஒரு புற நிலை தேவையாக மாறியுள்ளதை அந்த வைத்திய அதிகாரி சுட்டிக்காட்டினார்.

பேராதனை போதனா வைத்தியசாலையில் இருந்து ஒரு தாதி பேசினார். “வைத்தியசாலையினுள் தொற்றுநோய் நிலைமையை தரப்படுத்துவதில் ஆபத்துக்கள் உள்ளன. உதாரணமாக கிளினிக் குறைந்த ஆபத்து உள்ள இடமாகவும், வார்டுகள் உயர் ஆபத்து கொண்டதாகவும் கருதப்படுகின்றன. இத்தகைய தரப்படுத்தலானது பாதுகாப்பு கருவிகளை வழங்குவதைக் கட்டுப்படுத்த பயன்படுகின்றது. அதனாலேயே, எமது நோயாளர்களுக்கு வினைத்திறனுள்ள வகையில் சிகிச்சையளிக்க முறையான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை கிடைப்பதில்லை.”

“எங்களுக்கு தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களின் சில பகுதிகளை வாங்க வேண்டும் ஆனால் அவற்றின் தரங்கள் குறைந்தவையாகும். அதனாலேயே எம்மால் சரீர ரீதியாகவோ உளவியல் ரீதியாகவோ எமது பணிகளை மேற்கொள்வதற்கு சௌகரியமற்றவர்களாக இருக்கிறோம். எங்களிடம் முறையான தனிநபர் பாதுகாப்பு கருவிகள் இல்லையெனில், நாங்கள் எந்த வேளையிலும் தனிமைப்படுத்தலுக்கு ஆளாகுவோம். எங்கள் குடும்பங்கள் முழுதும் ஆபத்தில் இருப்பதோடு முழுக் குடும்பங்களும் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்படுகின்றனர். நாங்கள் நிறைய பிரச்சினைகளை முகங்கொடுத்தாலும், தற்போது இதுவே மிக அடிப்படையான பிரச்சினையாகும்.

அதே வைத்தியசாலையின் மற்றொரு தாதி குறிப்பிட்டதாவது: “நாங்கள் நாடு முழுவதிலிருந்தும் நோயாளர்களைப் பெறுகின்றோம், ஆனாலும் நாங்கள் வெறும் முகக் கவசத்தையும் தரமற்ற பாதுகாப்பு அங்கிகளையுமே அணிகின்றோம். இவற்றை நாங்களாகவே வாங்வேண்டியுள்ளது. மிகவும் கடினமான சூழ்நிலைக்கு நாங்கள் முகங்கொடுக்கின்றோம். எங்களிடம் கொவிட்-19 தொற்றுநோய் சந்தேக நபர்களை பேணுவதற்கென தனி பகுதி இல்லை, எனவே அனைத்து நோயாளர்களும் ஒன்றாகவே பேணப்படுகின்றனர். இவை கடுமையான பிரச்சினைகளாக உள்ள போதும், பதில் கூறக்கூடிய நிலையில் உள்ள எவரும் எங்களை கவனிக்கமாட்டார்கள். எங்களுக்கு பலவீனமான வயோதிப பெற்றோர்கள் மற்றும் நோயுள்ள பிள்ளைகள் இருக்கிறார்கள். நாங்கள் எமது வீட்டு வேலையினைச் செய்வதற்கு பின்னிரவில் வீடடுக்குத் திரும்ப வேண்டியிருக்கிறது.

மஹரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலையில் இருந்து ஒரு வைத்திய அதிகாரி, கொவிட்-19 தொற்று பரவல் அதிகரித்த ஒக்டோபரின் முற்பகுதியில், வைத்தியசாலையில் தொழிலாளர்கள் தொற்றுநோயின் மத்தியில் செயற்படுவதற்கான தயாரிப்புகள் இருக்கவில்லை என சுட்டிக்காட்னார்.

“முகாமைத்துவமானது மிக பிந்திய பற்றாக்குறையான நடவடிக்கைகளை எடுத்தது. இந்த வைத்தியசாலையில் வைரஸ் தொற்றிய நோயாளர்களுக்கான தனிமைப்படுத்தல் விடுதி இன்னும் இல்லை. ஆகையால் தொற்றுநோய் எண்ணிக்கை அதிகரித்ததோடு சுகாதார ஊழியர்கள் கூட தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இப்போது வரை கூட மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான தனிநபர் பாதுகாப்பு கருவிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதோடு நாம் அவற்றை மறு உபயோகம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.

பிரித்தானியாவிலிருந்து வைத்தியர் ஜானக, பிரித்தானியாவில் சுகாதாரத் தொழிலாளர்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளை விளக்கினார். அவர், தொற்று நோய் பரவல் இருந்தும் வணிகங்கள் முழுமையாக திறக்கப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டினார். ஆளும் வர்க்கத்துக்கு உயிர்களை பாதுகாப்பாதற்கு அக்கறை கிடையாது.

அவர் இலங்கையுடன் இந்த நிலைமையினை ஒப்பிட்டார. “பிரித்தானிய அரசாங்கம் மற்றும் ஊடகங்களும் அவசியமான முறையான சுகாதார வழிமுறைகளுக்கு செலவு செய்வதற்குப் பதிலாக, மக்களை ஏமாற்றுவதற்கு மூடநம்பிக்கை மற்றும் விஞ்ஞானம் அற்ற நாட்டு வைத்தியத்தை ஊக்குவிக்கின்றனர்.

இந்த கலந்துறையாடல், பங்குபற்றியவர்களிடம் இருந்து மேலதிக கருத்துக்கள் மற்றும் கேள்விகளுடன் தொடர்ந்தது. எம்பிலிபிட்டியவில் இருந்து செவிமடுத்த ஒருவர், இலங்கையில் இலவச சுகாதார முறைமையானது அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினால் அழிக்கப்பட்டதை விளக்கினார்.

ருஹுணு பல்கலைக்கழக மாணவர் ஒருவர், அரசாங்கம் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரு முறையான வேலைத்திட்டத்தை அமுல்படுத்தவும் நகர்ப்புற குறைந்த-வருமானம் கொண்ட பல அடுக்கு மாடிகளில் அடைபட்டுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளை வழங்குவதற்கும் கரிசனை கொள்ளவில்லையென சுட்டிக்காட்டினார்.

மக்களை ஏமாற்றுகின்ற அரச பிராச்சாரத்தில் இருந்து இந்தத் தொற்றுநோயின் உண்மையை மக்களுக்கு சுகாதாரத ஊழியர்களால் விளக்க முடியுமா? உழைக்கும் மக்களுக்கு இந்த இலாப-நோக்கான, உயர்-விலையுடைய தடுப்புசிகயை பெற்றுக்கொள்வது சாத்தியமானதா? என்பது உட்பட பல கேள்விகள் எழுப்பப்டடன.

இந்தக் கலந்துறையாடலானது எவ்வாறு சுகாதார சேவைகள் நோயாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் கிடைக்காமல் தடுக்கப்பட்டுள்ளன என்பதையும், இந்த நிலைமையை எதிர்கொள்ள வைத்தியசாலைகள் மற்றும் வேலைத் தளங்களில் நடவடிக்கைக் குழுக்களை ஆரம்பிப்பதற்கான அவசியத்தையும் குணதாஸ விளக்கினார்.

பணக்காரர்கள் மட்டும் தனிப்பட்ட சுகாதார பாதுகாப்பு முறைமையினைப் பயன்படுத்தும் வாய்ப்பை கொண்டிருப்பர். தடுப்புசிகளுக்கும் இதுவே நடக்கும். ஏனெனில், சில தடுப்பூசிகளுக்காக உலக சுகாதார ஸ்தாபனம் கொடுத்த வாக்குறுதி அளவுக்கும் மேலாக தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் அரசாங்கங்கள் எந்தவொரு ஏற்பாடுகளையும் இன்னும் செய்திருக்கவில்லை.

உரையின் முடிவுக்கு வந்த குணதாஸ, உற்பத்தியை இலாபத்திற்காக அன்றி, மனித தேவைக்கு முன்னுரிமை கொடுத்து, சோசலிச முறையில் ஒழுங்குபடுத்தும் போதே, இலங்கை மக்கள் முகங்கொடுக்கின்ற அனைத்த தீர்க்கமான பிரச்சினைகளையும் அனுகுவதற்கான அடிப்பைடைகளை நிலைநாட்ட முடியும் என்றார்.

Loading