உயிர்களைப் பாதுகாக்க சிகாகோ கல்வியாளர்களின் போராட்டத்திற்கான சர்வதேச ஆதரவு குவிகின்றது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலக சோசலிச வலைத் தளமானது சிகாகோ கல்வியாளர்களுக்கான ஆதரவு அறிக்கைகளைத் தொடர்ந்து தொகுத்து வெளியிடும், மற்றும் உங்கள் அறிக்கைகளை இங்கே அனுப்புமாறு எங்கள் வாசகர்களுக்கு அழைப்புவிடுகிறோம்.

திங்களன்று மாலை, சிகாகோ ஆசிரியர்கள் சங்க (CTU) பிரதிநிதிகள் சபை 85 சதவீத வாக்கு வித்தியாசத்தில், சிகாகோ பொதுப் பள்ளிகள் (CPS) மற்றும் ஜனநாயகக் கட்சி மேயர் லோரி லைட்ஃபூட் உடன் அமெரிக்காவின் மூன்றாவது பெரிய பள்ளி மாவட்டத்தில் பள்ளிகளை மீண்டும் திறக்க உடன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்தது. தற்காலிக உடன்பாடு இப்பொழுது முழு உறுப்பினர் முன் செல்கிறது, இந்த திட்டம் மீது வாக்களிக்க செவ்வாய்கிழமை நள்ளிரவு வரை உள்ளது.

இந்த உடன்பாடு ஆழ்ந்த செல்வாக்கிழந்துள்ளது, மேலும் தொழிற்சங்கம் பெருகிய முறையில் அடிமட்ட உறுப்பினர்களின் பார்வையில் மதிப்பிழந்து விட்டது. ஆசிரியர்களின் எதிர்ப்பைத் தணிக்கவும், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்பதை அவர்களை ஏற்றுக்கொள்ள வைப்பதற்கான ஒரு முயற்சியாக, CTU ஆனது சிகாகோ கல்வியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், ஒரு வேலைநிறுத்தம் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தாது என்ற பொய்யையும் ஊக்குவித்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில், CTU தலைவர் ஜெஸ்ஸி ஷர்கி இந்த மோசமான சரணடைதலுக்கான தொனியில் குறிப்பிட்டார், “நாங்கள் [ஒப்பந்தத்தை] நிராகரித்தால், நாங்கள் மற்ற பாதையை பார்க்கிறோம். நாங்கள் பூட்டப்பட்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது போல் தெரிகிறது. … அந்த பாதையில் ஆபத்து இருப்பதால் நாம் தெளிவாக இருக்க வேண்டும். இது ஒரு பெருந்தொற்று நோய். குளிராக உள்ளது. இது எளிதான வேலைநிறுத்தம் அல்ல. இது ஒரு வேலைநிறுத்தமாக இருக்கும், அதில் நிர்வாகக்குழு மக்களை தொலைதூர வேலைக்கு அழைக்கும். எனவே, வீட்டிற்குச் சென்று அவர்களின் கணினியில் உள்நுழைவதன் மூலம் மக்கள் மறியல் செய்யும் கோட்டைக் கடக்க முடியும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.”

ஆசிரியர்களை அடிபணிய வைக்கும்படி மிரட்ட முயற்சிக்கும் ஷர்கி, "சட்டபூர்வ விளைவுகளை நாம் எதிர்கொள்ளக்கூடும். இந்த நிலையில், வேலைநிறுத்தம் சட்டவிரோதம் என்று அறிவிக்கப்பட்டால், மக்கள் ஊதியத்தைப் பெற முடியாது, மற்றும் நிர்வாகக்குழு தனிப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் தொழிற்சங்கம் ஆகிய இரண்டின் மீதும் அபராதங்களை விதிக்கலாம்" என்று எச்சரித்தார்.

இந்த மோசமான விற்றுத்தள்ளலுக்கு எதிரான எதிர்ப்பு சிகாகோ கல்வியாளர்கள் சாமானிய பாதுகாப்பு குழுவால் முன்னெடுக்கப்படுகிறது, இது சிகாகோ கல்வியாளர்களை மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய எல்லைகளைக் கடந்து தங்களுடைய வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்படுத்த போராடுகிறது. திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், "உண்மை என்னவென்றால், பெருநிறுவன இலாபங்களுக்காக மனித உயிர்களை தியாகம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கும் மில்லியன் கணக்கான பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவு சிகாகோவில், அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ளது" என்று குறிபிட்டது.

பென்சில்வேனியாவில் இருந்து இலங்கை, பின்லாந்து, சீனா, பிரேசில், ஜேர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் உலகம் முழுவதும், ஆசிரியர்கள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் சிகாகோ ஆசிரியர்களின் நடவடிக்கைகளால் ஊக்கமளிக்கப்பட்டுள்ளனர். சிகாகோவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது பற்றி அவர்கள் ஈர்க்கப்பட்டது மட்டும் அல்லாமல், உலகளாவிய வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள உலக சோசலிச வலைத் தளத்திற்கு டஜன் கணக்கான ஆதரவு அறிக்கைகளை அனுப்பியுள்ளனர்.

மாநில எல்லைகளைக் கடந்து ஒரு வலுவான வெளிப்பாடாக, திங்களன்று மாலை பல பிலடெல்பியா கல்வியாளர்கள் சிகாகோ கல்வியாளர்களுக்கு ஆதரவு அறிக்கைகளை நகரத்தின் ஜனநாயகக் கட்சி மேயர் ஜிம் கென்னி வகுப்பறைகளுக்கு திரும்பவேண்டும் என்று கூறியதன் உத்தரவுகளுக்கு மீறி, WSWS க்கு ஆதரவு அறிக்கைகளை அனுப்பிவைத்தனர்.

ஜூலியன்னா எழுதினார், "நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்பதை அறிந்து, எங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பரவலாக பகிர்ந்து கொள்கிறோம். பாதுகாப்பான பள்ளிகளுக்கான போராட்டத்தில் தலைவர்கள் என்ற முறையில் நாங்கள் உங்களுக்கு ஆதரவு அளிக்கிறோம், நன்றி! இன்று உங்கள் உதாரணத்தை பின்பற்றி, Philly மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஊசியை மிகவும் சரியான திசையில் நகர்த்தியிருக்கிறோம். விரைவில் நல்ல முடிவுகளை நீங்கள் காண்பீர்கள் என்று நான் நம்புகிறேன்! நாம் அவதானித்துக் கொண்டும் ஆதரவளித்துக் கொண்டுமிருக்கிறோம்! மிகுந்த அன்புடன், ஒற்றுமையாக!"

மற்றொரு பிலடெல்பியா ஆசிரியரான ஜோவான் எழுதினார், "தொலைதூரக் கற்றல் COVID தொற்று அச்சுறுத்தலில் இருந்து அனைவரும் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கிறது. அது பாதுகாப்பாக இருக்கும் போது மட்டுமே நேரடியான கற்றலுக்கு திரும்ப முடியும்." பார்ப் கருத்து தெரிவித்தார், "நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், உங்களுக்கு ஆதரவு!" பெத் எழுதினார், "நான் உங்களுடன் நிற்கிறேன். நீங்கள் செய்து கொண்டிருக்கும் அனைத்துக்கும் நன்றி."

நியூ ஜெர்சியில் ஒரு தொழிலாளி மைக்கேல் எழுதினார், "ஆசிரியர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்காக எழுந்தமைக்கு நன்றி. நாங்கள் உங்களுக்கு பின்னால் இருக்கிறோம்."

கனெக்டிகட்டில் இருந்து ஒரு தொழிலாளியான வாண்டா கூறினார், "சிகாகோ ஆசிரியர்கள் மற்றும் குடும்பங்களுக்கு நான் முழு ஆதரவு. பெருநிறுவன இலாபங்களை விட உயிர்கள் மிக முக்கியமானதாக மாற வேண்டும். ஆசிரியர்கள், குழந்தைகள் மற்றும் ஊழியர்கள் தங்களுடைய குடும்பத்திற்குள் மாற்றீடாக இருக்க முடியாது. 400.000 மேலாக ஒரு கொடிய வைரசத்திற்கு தங்கள் உயிர்களை இழந்த ஒரு உலகளாவிய பெருந்தொற்றின் போது, பாதுகாப்பான பணி நிலைமைகள் முன்னுரிமையாக இருக்க வேண்டும்!

"21 ஆம் நூற்றாண்டில், தொலைதூரத்தில் கற்றல் முறை ஏன் ஒரு பிரச்சினை? இந்த பெருந்தொற்று நோய்களின் போது பள்ளிகள் தங்கள் உயிரைப் பணயம் வைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த தேவையான வளங்கள் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். இலாபத்திற்கு முன் மனிதநேயம்! ”

சியாட்டிலை சேர்ந்த ஒரு தொழில்நுட்ப தொழிலாளி எழுதினார், "சிகாகோ ஆசிரியர்கள் தங்கள் உயிர்களை மற்றும் அவர்களின் மாணவர்களின் உயிர்களை பாதுகாக்க ஒரு தைரியமான நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். ஆசிரியர்களின் நடவடிக்கை என்பது ஒரு மின்னல் இடிதாங்கி கம்பியாகும். இது தொழிலாள வர்க்கத்தை ஒட்டுமொத்தமாக வெகுஜன வேலைநிறுத்த நடவடிக்கைக்குத் திருப்புகிறது. ஆசிரியர்கள் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் முன்னோக்கிய பாதையைக் காட்டுகின்றனர், உயிர்களைக் காப்பாற்ற, விஞ்ஞான-எதிர்ப்பு மற்றும் ஆளும் வர்க்கத்தால் மறைக்கப்படும் பொய்களை மூடிமறைப்பதற்கு எதிரான ஒரு முழு முன்னணி தாக்குதல் தேவைப்படுகிறது.

"ஆசிரியர்கள் 'அவர்களின்' தொழிற்சங்கங்களிலிருந்து துரோகத்தின் மிக மோசமான வடிவத்தை எதிர்கொள்கின்றனர், அவர்கள் உறுதியாக அவர்களிடமிருந்து முறித்துக் கொள்ள வேண்டும். அரசு, நீதிமன்றங்கள் அவர்களுடைய நண்பர்கள் அல்ல, மாறாக அவர்களின் கடுமையான எதிரிகள். விவிலிய விகிதாச்சாரங்களின் ஒரு பேரழிவை எதிர்கொள்ளும் தொழிலாள வர்க்கம் உள்ளது ஆசிரியர்கள் அவர்களை நோக்கித் திரும்ப வேண்டும். சிகாகோ ஆசிரியர்கள் வெற்றி பெறும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது."

சீனாவின் வூஹானில் ஆரம்ப தொற்று நோய் வெடித்த பின்னர், பெருந்தொற்று நோய் விரைவாக அங்கு கடுமையான பொதுமுடக்கங்கள், பரிசோதனை மற்றும் தொடர்புத் தடமறிதல் மூலம் கட்டுப்படுத்தப்பட்டது. சீனாவின் டியான்ஜின் நகரத்தில் இருந்து ஒரு தொழிலாளி WSWS க்கு எழுதினார், "சீனாவில் எங்கள் அனுபவத்தின் அடிப்படையில், உங்களை, உங்கள் மாணவர்கள் மற்றும் பரந்த சமூகத்தை COVID-19 இலிருந்து பாதுகாக்க பள்ளிகளை மூடுவது தவிர வேறு வழியில்லை.

"இது துல்லியமாக இருப்பதால், இங்குள்ள தொற்றுநோய் முடிவடையும் வரை எங்கள் பள்ளிகளும் அத்தியாவசியமற்ற வணிகங்களும் மூடப்பட்டிருந்தன, நாங்கள் இப்போது உயிருடன் இருக்கிறோம், ஆரோக்கியமாக இருக்கிறோம், சாதாரண வாழ்க்கையை நடத்த முடிகிறது."

அவர் மேலும் கூறுகையில், “எங்கள் தொற்றுநோய் முடியும் வரை சீனா மொத்தம் 85,000 தொற்றுக்களையும் சுமார் 4,900 இறப்புகளையும் சந்தித்தது, அதே நேரத்தில் திறந்த பள்ளிகள் மற்றும் பணியிடங்களைக் கொண்ட அமெரிக்காவில் ஒவ்வொரு மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு 90,000 நோய்த்தொற்றுகள் உள்ளன, மேலும் ஒரு நாளைக்கு 3,000 க்கும் மேற்பட்ட இறப்புகள்! நாங்கள் தப்பிப்பிழைத்து உயிர் வாழ்ந்து எமது கதை சொல்ல இருப்பதற்கு பள்ளி மூடுதல்கள் ஒரு முக்கிய காரணம் ஆகும். முதலாளித்துவ ஊடகங்கள் அல்லது முதலாளித்துவ அரசியல்வாதிகள் உங்களை முட்டாளாக்க விடாதீர்கள்! சீனா எவ்வாறு வைரஸை வென்றது என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் கவலைப்படுவது உங்கள் உயிர்களையோ அல்லது மாணவர்களோ அல்ல, பணம்.”

பின்லாந்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளியான ரெய்மோ, WSWS க்கு எழுதினார், "இந்த தொற்று நோய் கட்டுப்பாட்டில் இல்லை, மற்றும் சமூகங்கள் மூலம் வைரஸ் பரவலில் ஒரு பங்கைக் காட்ட பள்ளிகள் காட்டப்படுகின்றன. விஞ்ஞானத்தின் துணையுடன் பாதுகாப்பு, 'இயல்பு நிலைக்கு திரும்புதல்' என்ற நிலைக்கு முன்னுரிமை பெறுகிறது. சிகாகோவிலுள்ள பள்ளி ஊழியர்கள் எனது முழு ஆதரவையும் பெற்றிருக்கிறார்கள்."

சிகாகோ கல்வியாளர்கள் தங்கள் பக்கத்தில் விஞ்ஞானத்தை வைத்திருக்கிறார்கள் என்பது மட்டுமல்லாமல், இந்த நிலைமைகளின் கீழ் பள்ளிக்குச் செல்வது மாணவர்களுக்குத் தேவையான சமூகமயமாக்கலை அனுமதிக்காது என்பதையும் தொழிலாளர்கள் பேசினார்கள். CPS பள்ளிகளின் ஒரு பாதுகாப்பு ஊழியர் குறிப்பிட்டார், “பள்ளி இப்போது சிறார் தடுப்பு மையமாக நடத்தப்படும். மாணவர்கள் ஒருவருக்கொருவர் எந்தவிதமான தொடர்புகளையும் கொண்டிருக்க மாட்டார்கள், அவர்களால் சாதாரணமாக பேசமுடியாது, மேலும் கூடத்தில் நடந்து செல்லும் சுவருக்கு எதிராக வரிசையில் நிற்க வேண்டும். மதிய உணவு வகுப்பறையில் இருக்கும், அங்கு மாணவர்கள் நாள் முழுவதும் உட்கார வேண்டும், ஜன்னல் திறந்திருக்கும், அவர்களுக்கு உடற்பயிற்சி இடைவெளி இருக்காது. மாணவர்களின் உயிரை ஏன் ஆபத்தில் வைக்கிறார்கள்? தொலைதூரக் கற்றல் மூலம், அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.”

முறையாக நிதியளிக்கப்பட்ட தொலைதூரக் கற்றல் வழங்கக்கூடிய சாத்தியம் பற்றி பேசிய லியோனோர், “குழந்தைகள் COVID க்கு ஆளாகக்கூடாது என்றும், பிற குழந்தைகளுடனான பொழுதுபோக்கு / சமூக தொடர்பு வாய்ப்புகள் உட்பட நேரடி தொடர்புக்கு இணையவழி கல்வி விரிவாக்கப்பட வேண்டும் என்றும் நான் நீண்ட காலமாக நம்புகிறேன். பள்ளிகளுக்கு, குறிப்பாக பொது மக்களுக்கு இந்த நோக்கத்திற்காக அதிக வளங்கள் ஒதுக்கப்பட வேண்டும். எங்கள் குழந்தைகள் எங்கள் எதிர்காலம், அவர்களின் நல்ல வளர்ச்சிக்கான சிறந்த வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்குவதற்கான அனைத்து அக்கறையையும் நாங்கள் எடுக்க வேண்டும்.”

சிகாகோவில் ஒரு வேலைநிறுத்தத்திற்கான சாத்தியத்தை மூடிவிட ஆளும் வர்க்கம் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறது, ஏனெனில் அது தொழிலாள வர்க்கத்தின் எஞ்சிய பகுதியை இயக்குவதற்கான தீப்பொறியாக இருக்க முடியும் என்பதை அவர்கள் நன்கு அறிவர்.

ஆஸ்திரேலியாவில் அரசாங்க ஊழியர் கிரேம், சிகாகோ போராட்டத்தின் இந்த முக்கியமான அம்சத்தைப் பற்றி கருத்து தெரிவித்தார். "சிகாகோ ஆசிரியர்கள் வழிகாட்டுகிறார்கள். COVID-19 க்கு எதிரான போராட்டம் ஒரு தொழிற்துறை போராட்டம் அல்ல, அது முழு தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கான ஒரு அரசியல் போராட்டமாகும். சர்வதேச அளவில் அனைத்து அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் அப்பால் வேலைநிறுத்தத்தை விரிவாக்க போராடுங்கள். இடம்பெயர்ந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு ஊதியத்துடன் பள்ளிகளையும் அத்தியாவசியமற்ற உற்பத்திகளையும் மூடுவதற்கு ஒரு பொது வேலைநிறுத்தத்திற்காக போராடுங்கள்!"

மற்றொரு தொழிலாளி டோபி எழுதினார், “எங்கள் எதிர்காலத்தின் மூளைகளை கவனித்துக்கொள்வதால் முன்னணி கதாநாயகர்கள், நீங்கள் அனைவருக்கும் ஒரு உத்வேகம்! வலுவாக நிற்க, தோளோடு தோள் கொடுத்து, உங்களுக்கு உலகளாவிய தொழிலாளர் ஆதரவு இருப்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் சேவை மற்றும் ஒன்றுதிரண்ட குரல்களுக்கு நன்றி !! ”

சிகாகோ ஆசிரியர்களுக்கு சர்வதேச அளவிலும், தங்கள் சொந்த நகரத்திலும் பெரும் ஆதரவு உள்ளது. தற்காலிக ஒப்பந்தம் செவ்வாயன்று நிராகரிக்கப்பட்டு, கல்வியாளர்களைத் தண்டிக்க CPS நகர்ந்தால், அமெரிக்காவின் மூன்றாவது பெரிய மெட்ரோ பிராந்தியத்தில் சக்திவாய்ந்த தொழிலாள வர்க்கத்தின் ஆதரவு தங்களுக்கு இருப்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

CPS பள்ளிகளில் ஒரு சிறப்பு கல்வி வகுப்பறை உதவியாளர் (SECA) "இறுதிவரை போராடுவோம்" என்று ஆணித்தரமாக எழுதினார்.

சிகாகோவில் வசிக்கும் அலிசன், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்தால் அவர்களுக்கு நேரடியாக உதவி வழங்குவதாக உறுதியளித்தார். “நான் சிகாகோவில் வசிப்பவன், ஆனால் எனக்கு குழந்தைகள் இல்லை, பெருந்தொற்று நோய் தொடங்கியதிலிருந்து தொலைதூர முறையில் பணிபுரியும் வசதி எனக்கு கிடைத்தது. சிகாகோவில் ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு மற்றும் அவர்களின் உயிர்களைப் பாதுகாக்க எடுக்கும் நடவடிக்கைகளை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்களின் சம்பள காசோலைகள் தொடர்ந்து நிறுத்தப்பட்டால், குழுவானது பரஸ்பர உதவி வலையமைப்பை அமைக்குமா என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன். அப்படியானால், உணவு, பொருட்கள் அல்லது என்னால் முடிந்த பணத்தை பங்களிப்பதன் மூலம் எனது ஆதரவைக் காட்ட விரும்புகிறேன்.”

முன்னாள் உயர்நிலைப் பள்ளி ஆசிரியரான ஜஸ்டைன், பலரின் உணர்வுகளை எதிரொலித்தார், உண்மையிலேயே அதிகாரத்தை வைத்திருக்கும் சிகாகோ கல்வியாளர்களை நினைவுபடுத்துகிறார். "கல்வியின் காலாற்படை வீரர்கள் என்ற முறையில், ஆசிரியர்களின் சாமானிய மற்றும் அடிமட்டத் துருப்புக்கள் ஊழல் அதிகாரிகளை (தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள்) அதிகார பதவிகளில் இருந்து தள்ளிவருகின்றன— இதன் மூலம் வழக்கமான ஆசிரியர்கள் பின்னர் தொலைதூரக் கற்றல் மூலம் முன்னெச்சரிக்கைக் கொள்கையைகப் பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் சுமையை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வரும் ஒரு மனிதாபிமான கொள்கையை விரைவாக நிறுவ முடியும்.

கல்வி மேலாளர்களை தியாக வழிகாட்டிகளாக அனுமதிப்பதற்கு பதிலாக மோசமான கடுமை தணிப்புடன் ஒத்த (பணத்தால் மட்டுமே நியாயப்படுத்தப்பட்டது), நோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஆசிரியர்களின் வழிகாட்டல் COVID-19 ஐ வெல்வதற்கான ஒரே இரக்கமுள்ள மற்றும் பயனுள்ள வழிமுறையாகும். அறிவிக்கப்பட்ட நடவடிக்கையின் எனது சக அறிவொளி போராளிகளை மறைவின்றி நான் பாராட்டுகிறேன், ஆர்வத்தை தெரிவிக்கிறேன், நடனமாடுகிறேன்: பள்ளி அமைப்புமுறை, எனது படித்த சகாக்கள். இது அவர்களின் இறுதி சோதனை, அது வெற்றி அல்லது தோல்வி.”

எலிசபெத் காஸ்டிலோ கலிபோர்னியாவின் லக்வுட் நகரைச் சேர்ந்தவர். “அன்புள்ள சிகாகோ ஆசிரியர்களே, நான் கலிபோர்னியாவில் பதிவுசெய்யப்பட்ட ஒரு செவிலியர், அனைத்து சிகாகோ ஆசிரியர்களையும் உங்கள் சுயாதீனமான தளத்தில் நிற்கும்படி கேட்டுக்கொள்கிறேன், சிகாகோ அரசியல் தலைவர்களையும் தொழிற்சங்க முதலாளிகளையும் ஆபத்தான பொங்கி எழும் பெருந்தொற்று நோய்களின் போது உங்களை மீண்டும் பள்ளிக்கு கட்டாயப்படுத்த அனுமதிக்க வேண்டாம்.

"COVID-19 மூலம் தொற்று ஆபத்துக்களை நன்கு அறிந்த ஒரு செவிலியர் என்ற முறையில், வைரஸ் முழுமையாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் வரை ஆசிரியர்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது மற்றும் குழந்தைகள் உட்பட மக்கள் தொகையில் குறைந்தது 50-90 சதவீதம் தடுப்பூசி மூலம் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கம் அடையப்படுகிறது. ஜனநாயகக் கட்சியும் தொழிற்சங்கங்களும் இலாபத்தின் பெயரால் தொழிலாள வர்க்கத்தை இந்த சமூகக் கொலைக்கு உடந்தையாக உள்ளன, ஆனால் செவிலியர்கள் உங்களுடன் இருக்கிறார்கள் என்பதையும் இந்தப் போராட்டத்தில் உங்களுடன் நிற்பார்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். ஒற்றுமையுடன்."

அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் சிகாகோவில் போராட்டத்தை விரிவுபடுத்த ஒவ்வொரு முயற்சியும் எடுக்கப்பட வேண்டும். இலாபங்களுக்கு மேல் உயிர்களைப் பாதுகாப்பதில் ஒரு சக்திவாய்ந்த இயக்கத்தின் முன்னணியில் இது உள்ளது. WSWS ஆனது சிகாகோ கல்வியாளர்களுக்கான ஆதரவு அறிக்கைகளை தொடர்ந்து வெளியிடும், மேலும் உங்கள் அறிக்கைகளை இங்கே அனுப்புமாறு எங்கள் வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.

Loading