ஸ்பானிய ராப் பாடகரான பப்லோ ஹசெல் சிறைத்தண்டனைக்கு முகம்கொடுக்க இருப்பதை நூற்றுக்கணக்கான கலைஞர்கள் கண்டிக்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஸ்பெயினின் சோசலிஸ்ட் கட்சி (PSOE) - பொடேமோஸ் அரசாங்கம் "பயங்கரவாதத்தை பெருமைப்படுத்தல்", "வன்முறையைத் தூண்டுதல்", "ஸ்பெயினின் மன்னர் மற்றும் அரசு நிறுவனங்களை அவமதித்தல்" என கூறப்படும் ஒரு பாடல் மற்றும் அவரது ட்வீட் பதிவு தொடர்பாக ராப் பாடகர் பப்லோ ஹசெலை சிறையில் அடைக்க தயாராகி வருகிறது. 1978 இல் பிரான்சிஸ்கோ பிராங்கோவின் பாசிச சர்வாதிகாரத்தின் முடிவின் பின்னர் ஸ்பெயினில் சிறையில் அடைக்கப்படும் முதல் இசைக்கலைஞர் ஆவார். அவர் இரண்டு தசாப்தங்கள் வரை சிறையில் அடைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இரண்டு தசாப்த சிறைவாசத்தினை முகம்கொடுக்கிறார்.

Painting in defense of Pablo Hasel. (Image Credit: Twitter/VDefensa)

அவர் தானே சிறைக்குள் செல்வதற்கான காலக்கெடு இப்போது கடந்துபோய்விட்டது. ஹசெல், அவரின் உண்மையான பெயர் பப்லோ ரிவாதுல்லா துரோ, (Pablo Rivadulla Duro), கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் தானே சிறைக்குள் செல்வதை மறுத்து, அவர் தான் பொலிசாரினால் பலவந்தமாக இழுத்துச்செல்ப்படவேண்டும் என்று கூறினார். தனது சிறைவாச தண்டனைச் சட்டத்தை நிறுத்த பீனல் சட்டத்தினை சீர்திருத்துவதாக கூறிய PSOE- பொடெமோஸ் அரசாங்கம் தனது வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டிருப்பதாக அவர் கண்டித்துள்ளார், அதற்கு பதிலாக அவர் கலைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை சுயாதீனமாக அணிதிரளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். அவர் சிறையில் அடைக்கப்பட இருப்பதானது அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலாகவும் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கிய ஒரு முக்கிய படியாகவும் சரியாக இனம் காணும் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் அவருக்கு பரவலான ஆதரவு கிடைத்துள்ளது.

மாவோயிச கைதிகளை விடுவிப்பதற்கான அவரது அழைப்புகள் பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றன, அல்லது ஸ்பெயினின் ஊழல் முடியாட்சி குறித்த அவரது விமர்சனம் ஸ்பெயினுக்கு அவமானம் என அரசு கூறிய குற்றச்சாட்டுகள் மோசடியானவை மட்டும்மல்ல பிற்போக்குத்தனமானவை. சவூதி அரேபியாவுடனான ஊழல் நிறைந்த வணிக ஒப்பந்தங்களுக்காக அரசரான ஜுவான் கார்லோஸ் (Juan Carlos) ஸ்பெயினிலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், ஸ்பெயினிய அரசு ஹசெல் தனது கலைச் சுதந்திரத்தை பயன்படுத்தியதற்காக அவர் மீது வழக்குத் தொடுத்து, அவரைத் தண்டிக்க முனைகிறது. இது வெகுஜன கோபத்தைத் தூண்டியுள்ளது. சமீபத்திய வாரங்களில் ஸ்பெயினில் உள்ள Madrid, Barcelona, Valencia, Zaragoza, Granada, Sevilla, and Malaga மாட்ரிட், பார்சிலோனா, வலென்சியா, ஜராகோசா, கிரனாடா, செவில்லா மற்றும் மலகா உள்ளிட்ட நகரங்களில் ஹஸலைப் பாதுகாக்க நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டுள்ளன.

சுமார் 300 நடிகர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் கலைஞர்கள் "கருத்துச் சுதந்திரம் இல்லாமல் ஜனநாயகம் இல்லை" என்ற தலைப்பில் ஒரு அறிக்கையில் கையெழுத்திட்டனர். கையொப்பமிட்டவர்களில் திரைப்பட இயக்குநர்கள் பெட்றோ அல்மோடோவர் மற்றும் பெர்னாண்டோ ட்ரூபா (Belle Epoque, The Artist and the Model); நடிகர்கள் சேவியர் பார்டெம், லூயிஸ் டோசர் (The Minions of Midas, Adu), ஆல்பா புளோரஸ் (La Casa de Papel), ஐதானா சான்செஸ் கிஜான் (The Machinist); மற்றும் இசைக்கலைஞர்கள் ஜோன் மானுவல் செராட், இசமெல் செரானோ, ஜோசெல் சாண்டியாகோ, கோக் மல்லா, பிரிசா ஃபெனாய், பெட்றோ குரேரா அல்லது ஃபெர்மன் முகுருசா ஆகியோராவர். அந்த அறிக்கை எச்சரிப்பதாவது:

"கருத்துச் சுதந்திரத்தை பயன்படுத்துவதற்காக ராப் பாடகர்கள், ட்வீட் பதிவாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் கலாச்சார மற்றும் கலையின் பிற பிரதிநிதிகள் தண்டிக்கப்படுவது இங்கே இடைவிடாமல் இடம்பெற்றுவருகிறது. கலைஞர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை தீவிரப்படுத்திய நாடுகளின் பட்டியலில் ஸ்பெயின் அரசு முதலிடம் வகிக்கிறது…

எந்தவொரு அரசு நிறுவனத்தின் நடவடிக்கைகளையும் பகிரங்கமாக விமர்சிக்கத் துணியும் எந்தவொரு பொது நபரின் தலையிலும் டாமோகிள்ஸின் (Damocles) வாள் தொங்குகிறது என்பது பப்லோ ஹசெலை சிறையில் அடைப்பதுடன் தெளிவாகிறது.

"நாம் இப்போது எங்கே இருத்தப்பட்டிருக்கிறோம் என்பதை முன்னிலைப்படுத்துவதற்கு, நாம் முகம்கொடுக்கும் இந்த நிலைமை சர்வதேச அளவில் பரவலாக மக்கள் அறியும்படி விளம்பரப்படுத்தப்பட வேண்டும். பப்லோவை நாம் சிறைக்குச் செல்ல அனுமதித்தால், எந்தவொரு கருத்து மாறுபடும் குரல்களும் மவுனிக்கப்படும் வரை அவர்கள் நாளை எங்களில் எவரையும் பின் தொடர முடியும் என்பதை நாங்கள் அறிவோம்.

"அதனால்தான், இந்த அறிக்கையில் கையொப்பமிடப்பட்டவர்களான நாம், ஸ்பானிய அரசின் கலை மற்றும் கலாச்சார உலகின் பிரதிநிதிகளான நாம், பப்லோவுக்கு எங்கள் ஆதரவைக் காட்டவும், அவரது சுதந்திரத்தை கோருவதற்கும், கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை நசுக்கும், அதுமட்டும்மல்ல கருத்தியல் மற்றும் கலை சுதந்திரத்தினையும் நசுக்கும் இந்த வகையான குற்றங்களை எதிர்ப்பதற்காவும் நாம் ஒன்றாக அணிதிரண்டுள்ளோம்”.

இதைத் தவிர்த்து, Jordi Évole, Rosa María Calaf, Manuel Rivas et Maruja Torres ஜோர்டி ஓவோல், ரோசா மரியா கலாஃப், மானுவல் ரிவாஸ் மற்றும் மருஜா டோரஸ் உட்பட 140 எழுத்தாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பப்லோ ஹசெலுக்கு ஆதரவாக ஒரு அறிக்கையை வெளியிட்டனர்,அதில் அவர்கள் குறிப்பிட்டிருப்பதாவது, ராப் பாடகரின் பாடல் வரிகள் உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் கூட, ராப் பாடுவது ஒரு குற்றம் அல்ல”. தெரு ஓவியக் கலைஞர்களும் பப்லோ ஹசெலுக்கு தங்கள் ஆதரவைக் காட்டினர். பார்சிலோனா உட்பட ஸ்பெயின் முழுவதும் ஏராளமான சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன.

பப்லோ ஹசெலை பாதுகாப்பதற்காக வளர்ச்சியடைந்துவரும் வெகுஜன ஆதரவானது ஹசெலை கண்டித்த பிற்போக்கு நீதித்துறை எந்திரத்திற்கும் மற்றும் முக்கியமாக பொடேமோஸ் அரசாங்கத்திற்கும் எதிரான ஒரு அரசியல் கண்டனமாக இருக்கிறது. சமூக ஜனநாயகவாதிகளையும் குட்டி முதலாளித்துவ 'இடது ஜனரஞ்சகவாதிகளையும்' ஒரு வர்க்க பிளவானது தொழிலாள வர்க்கத்திலிருந்தும், இடது பக்கம் நகர்ந்துகொண்டிருக்கும் சிரத்தையான கலைஞர்களின் தட்டினரிடம் இருந்தும் பிரிக்கிறது.

ஆளும் உயரடுக்கு பாசிச சர்வாதிகாரங்கள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்-மூலம் மட்டுமே தங்கள் ஆட்சியை திணிக்க முடியும் என்பது பெருகிய முறையில் தெளிவாகிறது. இதன் உயர்வெளிப்பாடாக, ஐரோப்பா முழுவதும் COVID-19 சுதந்திரமாக பரவுவதற்கான நிபந்தனைகளை திறந்துவிட்டு, 750,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்ற ஜரோப்பிய ஆளும் வர்க்கத்தின் கொலைகார 'சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும்' அரசியல் கொள்கை இருக்கிறது. பொலிஸ் வன்முறை, புலம்பெயர்ந்தோர் கொலை, பாசிசம் மற்றும் ஸ்பானிய முடியாட்சி ஆகியவற்றைக் கண்டனம் செய்த பப்லோ ஹஸல் போன்ற கலைஞர்களை சிறையில் அடைப்பது இந்த செயல்முறையின் ஒரு பகுதியாகும்.

கலைஞர்ளது அறிக்கையின் அவசர எச்சரிக்கை முழுமையாக உறுதிப்படுத்தப்படுகிறது, அதாவது: உலக ஆளும் உயரடுக்கு பாசிச சர்வாதிகாரத்தினை நோக்கி திரும்புவதற்கான ஆபத்து சர்வதேசியரீதியாக உள்ளது. 2020 ஜனாதிபதித் தேர்தலை மறுதலிப்பதன் பாகமாக அமெரிக்க பாராளுமன்றத்தின் மீது ஜனவரி 6 ம் தேதி ட்ரம்ப் தீவிர வலதுசாரி கிளர்ச்சியைத் தூண்டிய பின்னரும், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவி நீக்க குற்றச்சாட்டில் இருந்து விடுவிப்பதற்காக அமெரிக்க செனட் சனிக்கிழமை வாக்களித்தது. முதலாளித்துவ ஆளும் உயரடுக்கானது ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகள், இடதுசாரி ஆர்ப்பாட்டங்களை அடக்குதல் மற்றும் அரசியல் எதிர்ப்பினை வன்முறையினால் குறிவைத்தல் ஆகியவற்றை தயார் செய்து வருகிறது.

பாசிச மற்றும் பொலிஸ்-அரசு முறைகளுக்கு எதிரான எதிர்ப்பு, PSOE போன்ற சமூக ஜனநாயகக் கட்சிகளுக்கு மட்டுமல்ல, பொடேமோஸ் போன்ற குட்டி முதலாளித்துவ “இடது ஜனரஞ்சக” கட்சிகளுக்கும் எதிர்ப்பில் மட்டுமே உருவாக முடியும் என்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் எச்சரிக்கைகளை, நிகழ்வுகள் முழுமையாக நிரூபித்துள்ளன.

பப்லோ ஹசெலைப் பாதுகாக்கும் அறிக்கையில் கையெழுத்திட்ட பல கலைஞர்கள் முன்னர் பொடேமோஸுடன் இணைந்த PSOE அல்லது ஸ்ராலினிச சக்திகளை ஆதரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. முந்தைய வலதுசாரி மக்கள் கட்சி அரசாங்கம் பங்கேற்ற ஈராக் போரை எதிர்ப்பதற்கான ஒரு வழியாக 2004 ஆம் ஆண்டில் PSOE ஐ தேர்ந்தெடுப்பதை பார்டெம் மற்றும் அல்மோடோவர் ஆதரித்தனர். எவ்வாறாயினும், பாசிசம் மற்றும் பொலிஸ் ஆட்சி முறைகளுக்கு எதிரான இந்த எதிர்ப்பிற்கு PSOE மற்றும் பொடெமோஸுக்கு எதிராக ஒரு சுயாதீனமான இயக்கத்தை உருவாக்குவது உடனடி அவசியமானது என்பதை கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் பெருகிய முறையில் உணர்ந்திருக்கிறார்கள்.

ஈராக் போருக்கு ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர், PSOE மற்றும் பொடேமோஸ் ஆகியவை குற்றவியல் "சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கையை செயல்படுத்திவருகின்றன, வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு பில்லியன்கணக்கான யூரோக்களை கொடுத்து பிணை எடுக்கின்றன மற்றும் புலம்பெயர்ந்தோரை தொடர்ந்து துன்புறுத்திவருவதுடன், இணையத்தின் ஊடாக உளவுபார்ப்பதை தீவிரப்படுத்தியிருக்கின்றன. கடந்த ஆண்டு, PSOE-Podemos அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் -சமூக உதவிமானியங்கள் அழிப்பு-, “சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும்” மற்றும் வேலைக்கு போக நிர்பந்திக்கும் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்கள், பொலிஸ் வன்முறை மற்றும் இராணுவத்தை நிலைநிறுத்துவதற்கான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டன.

பாசிசக் கொள்கையை நோக்கிய இந்த வெளிப்படையான திருப்பம் பாசிசத்தினை உத்தியோகபூர்வமாக புனர்நிர்மாணம் செய்வதுடன் கைகோர்த்துக்கொண்டுள்ளன. அமைதியான போராட்டங்களை நடத்தியதற்காக கட்டலான் தேசியவாதிகளுக்கு ஸ்பெயினின் நீதிமன்றங்கள் ஒரு தசாப்த கால சிறைத்தண்டனைகளை விதித்துள்ளன. பிரான்சிஸ்கோ பிராங்கோவின் 1936 ஆண்டு பாசிச சதியானது சட்டரீதியானதே என கூறியதுடன், அவரது ஆட்சி மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்யவில்லை என்று அறிவித்தது.

கடந்த வாரம், ஒரு முன்னாள் வலதுசாரி அதிகாரி, PSOE- பொடேமோஸ் அரசாங்க அமைச்சர்களின் படங்களை நோக்கி தானே துப்பாக்கியால் சுடுவதுபோலான புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்ட அந்த அதிகாரியை நீதிமன்றம் விடுவித்துள்ளது. நீதிமன்றம் தீர்ப்பில் கூறியதாவது, "நேரத்தைக் வீணடிப்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் அவருக்கு இருக்கவில்லை". அவர் "அரச அதிகாரிகளை மிரட்டும் நோக்கில்" செயல்படவில்லை என்று அது மேலும் கூறியது.

எவ்வாறாயினும், அதே நீதிமன்றம், பப்லோ ஹசெலின் ட்வீட்டர் பதிவுகள் மற்றும் பாடல்கள் ஒரு "சாத்தியமான ஆபத்து" இனை கொண்டுள்ளன, ஏனெனில் யூடியூப்பில் அவரைப் பின்தொடர்பவர்களில் 50,000 பேரில் ஒருவர் "அவரது வார்த்தைகளால் தைரியமடையக்கூடும்" மற்றும் "வன்முறையைப் பயன்படுத்தலாம்" எனக் கூறித் தீர்ப்பளித்தது.

PSOE-பொடேமோஸ் அரசாங்கத்தின் பதில் முற்றிலும் இழிந்ததாக உள்ளது. இந்த வார இறுதியில் கட்டலான் பிராந்திய தேர்தல்களுக்கு முன்னதாக பப்லோ ஹசெல் சிறையில் அடைக்கப்படுவது குறித்து பெருகிவரும் சீற்றத்தை அமைதிப்படுத்தும் முயற்சியாக, கருத்துச் சுதந்திரம் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கு சிறைத் தண்டனையைத் தடை செய்வதற்கான நடவடிக்கைகளைத் தயாரிப்பதாக அது சுருக்கமாக அறிவித்தது. எவ்வாறாயினும், ஞாயிற்றுக்கிழமை இரவு, ஸ்பெயினின் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் PSOE-பொடேமோஸ் அரசாங்கம் ஹசெலை சிறையில் அடைப்பதை ஆதரிக்கிறது என்று அறிவித்தது. பார்சிலோனாவில், பொடேமோஸ் ஆதரவு மேயர் அடா கோலாவின் வழிகாட்டுதலின் கீழ் ஹசெலுக்கு ஆதரவாக ஒரு சுவரோவியம் வரையப்பட்டது.

PSOE-பொடேமோஸ் அரசாங்கத்தின் வாக்குறுதிகள் அனைத்தும் மோசடியானவை என்று பப்லோ ஹஸல் சரியான முறையில் நிராகரித்தார். அவரது சமீபத்திய பாடலான, ஆறாம் பெலிப்பெ வேண்டாம் (Ni Felipe VI), கிட்டத்தட்ட கால் மில்லியன் வருகையாளர்களை கொண்டிருந்தது. "முற்போக்கானது என தவறாக பெயர்சூட்டப்பட்ட, அடக்குமுறையை நிலைநாட்டும் [PSOE-பொடேமோஸ்] அரசாங்கம், அந்தப் பாடலை கண்டனம் செய்தது. பேச்சு சுதந்திரத்திற்காக வீதிகள் எங்கும் மனிதர்கள் திரண்டதால் பதட்டமடைந்த அவர்கள், ஏதாவது செய்வதாக சபதம் செய்தனர், உரிமைக்காய் திரண்ட கூட்டத்தினை நிறுத்த முயன்றார்கள், இருந்தும் இதுனூடாக மட்டுமே இந்த போராட்டத்தில் நாம் வெற்றி பெறுவோம்."

பப்லோ ஹசெலையும் கருத்துச் சுதந்திரத்தையும் பாதுகாக்க முற்படும் கலைஞர்கள் மற்றும் இளைஞர்கள், தொழிலாள வர்க்கத்தினை நோக்கி திரும்புவதும் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு இயக்கத்தை உருவாக்குவது என்பதும் சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகளுமான பொடேமோஸ் போன்ற ஊழல் நிறைந்த குட்டி முதலாளித்துவத்திற்கு எதிராக சோசலிசத்தினை நோக்கி திரும்புவதாகும்.

Loading