இளவரசர் பிலிப்: வம்சாவழி தனியந்தஸ்துகளின் ஓர் ஆக்ரோஷமான பாதுகாவலர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இளவரசர் பிலிப் அவரின் நீண்ட ஆயுள் முழுவதையும் முடியாட்சியின் மங்கி வரும் பிரகாசத்தைக் காப்பாற்றி வைக்கும் முயற்சியிலேயே செலவிட்டார். அது, "குறிப்பிட்ட மதிப்போ அல்லது சிறப்போ இல்லாத மதிப்பிழந்த பால்கன் இளவரசர்" என்ற சுய-விவரிப்புடன் பிரபுத்துவ வர்க்க தனிச்சலுகைகளைப் பாதுகாத்து பேணுவதற்கான ஒரு கணக்கிட்ட இழிந்த முயற்சியாக இருந்தது.

பிலிப்பின் மரணத்தில் பிரிட்டிஷ் பத்திரிகைகள் தங்களுக்குள் தடுமாறி உள்ளன. ஊடகங்களின் இடைவிடாத நேர்மையற்ற செய்தி மழை வெறுப்பூட்டுவதுடன், எந்தவிதத்திலும் அந்த மனிதரைக் குறித்தோ அல்லது அவர் வகித்த பாத்திரம் குறித்தோ ஆழ்ந்த பார்வையை வழங்கவில்லை. இதற்கும் மேலாக அந்த சரமாரியான பிரச்சாரம் அதை எழுதியவர்கள் விரும்பிய விளைவுக்குப் பதிலாக எதிர்மறை விளைவை ஏற்படுத்தி, “தேசப்பிதா" என்று அர்த்தமின்றி குறிப்பிடப்படும் மதிப்பிழந்த இளவரசர் ஆண்ட்ரூ என்ற அந்த மனிதரின் இழப்பு மீதான பலவந்தமான உணர்வுகளைப் பெருந்திரளான உழைக்கும் மக்கள் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்தி இருந்தது.

பிபிசி ஒட்டுமொத்தமாக அதன் ஒரு சேனலை இடைநிறுத்தி இருந்ததுடன் கூட, அதன் எல்லா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் நேரங்களையும் மாற்றியிருந்தது. அதன் தேசிய வானொலி நிலையங்களில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் சுழற்சியான செய்தி ஒலிபரப்புகளாக மாற்றப்பட்டிருந்தன. அதன் ஆவணக் காப்பக வானொலி நிலையம் ஒரு வாரம் முழுவதும் மறுஒலிபரப்புகளையே செய்தன. வணிகரீதியிலான ஒளிபரப்பு நிலையம் ITV உம் இடைவிடாது "இறுதியஞ்சலி" மற்றும் வர்ணனைகளாக இருக்கக்கூடியவற்றின் மீதே ஒருங்குவிய அதன் தொலைக்காட்சி நிகழ்ச்சி நேரங்களை மாற்றியமைத்திருந்தது. அந்த விடையிறுப்புக்குப் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்தது. பிபிசி இன் பிரதான செய்தி சேனலான பிபிசி1, பார்வையாளர்களின் 6 சதவீத சரிவைக் கண்டது. மற்ற இடங்களிலும், பார்வையாளர்கள் ஆர்வமிழந்திருந்தனர். பிபிசி2 மற்றும் ITV, அவற்றின் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் 60-65 சதவீத சரிவைக் கண்டன.

Philip Mountbatten, Princess Elizabeth and Louis St. Laurent on a tour of Canada in 1951 (nagualdesign/Flickr)

பிலிப்பின் சுய-மதிப்பீடே துல்லியமாக அவரின் தனிப்பட்ட முக்கியத்துவமற்ற தன்மையை தெரிவிக்கிறது. என்ன தான் இருந்தாலும், அவர் வாழ்நாள் முழுவதும் வகித்த அழுகிய அரசியல் பாத்திரம் மிகவும் முக்கியமானது தான். முடியாட்சி மற்றும் பிரபுத்துவ சலுகையை அவர் பாதுகாத்தமை, அது எதன் மீது தங்கியிருக்கிறதோ அந்த இப்போதைய முதலாளித்துவ அமைப்புக்கு அவரின் நன்றி விசுவாசம் ஆகியவை இது நிலையின்றி உயிர்பிழைத்திருக்கிறது என்ற நன்கறிந்த பெரும் உணர்வாலும், அதை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய பெருந்திரளான மக்கள் மீது ஆழமாக அமைந்த அச்சத்தினாலும் உந்தப்பட்டதாகும்.

அவர் வாழ்க்கை புரட்சிகர கொந்தளிப்புக்கு எதிரான பிற்போக்குத்தனத்தால் வடிவமைக்கப்பட்டது. ஜாரிசத்தைத் தூக்கி வீசி, போல்ஷிவிக்குகளின் கீழ் உலகின் முதல் தொழிலாளர்கள் அரசை நிறுவிய 1917 ரஷ்ய புரட்சியே பிலிப்பையும் அவரின் உலக கண்ணோட்டத்தையும் வடிவமைத்த மிகவும் விளைபயன் நிறைந்த அத்தியாயமாக இருந்தது. ஐரோப்பாவின் முடியாட்சிகளும் அவை எதன் மீது தங்கியிருந்தனவோ அந்த முதலாளித்துவ ஒழுங்கும், அதேபோன்றவொரு கதி ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சி, விடையிறுக்க நடுநடுங்கின. பிலிப் ஒருபோதும் இந்த பயத்தையோ அல்லது அதற்கான காரணத்தையோ மறந்தவர் இல்லை.

ரோமானோக்களின் (ரஷ்யாவை ஆண்ட அரச பரம்பரையினர்) சடலங்களை அடையாளம் காணவும் கூட அவரது உயிரணு பயன்பட்டது, ரஷ்ய ஜார் மன்னர்கள் உடனான அவரது உறவுகளுக்குத் தான் நன்றி கூற வேண்டும். ரஷ்யாவுக்கு விஜயம் செய்ய விரும்புகிறீர்களா என்று அவர் வாழ்வின் இறுதி நாட்களில் வினவிய போது, “அந்த வேசிமகன்கள் எங்கள் குடும்பத்தில் பாதி பேரைக் கொன்றிருந்தாலும்,” என்பதை முன்னெச்சரிக்கையாக சேர்த்துவிட்டு, அங்கே அவர் செல்ல விரும்புவதாக தெரிவித்தார்.

அதிகாரத்தின் மீது ஐரோப்பிய அரச குடும்பத்தின் பிடி எந்தளவுக்கு மிகவும் பலவீனமாக இருந்தது என்பதன் மீது அவருக்கு தனிப்பட்ட அனுபவம் இருந்தது. பிலிப் கிரேக்க தீவான கோர்ஃபூவில் பிறந்து, ஐந்து குழந்தைகளில் ஒரே மகனாக கிரீஸ் மற்றும் டென்மார்க்கின் இளவரசர் பிலிப்பாக ஆனார். அவர் தாத்தா, டென்மார்க் இளவரசர் வில்லியம் முதலாம் ஜார் நிக்கோலஸின் பேத்தியை மணந்தார். இளவரசர் வில்லியம் ஹெலினெஸ் அரசர் முதலாம் ஜோர்ஜாக ஆவதற்கான கிரேக்க அரசாங்கத்தின் 1863 அழைப்பை ஏற்றுக் கொண்டார். அவர் 1913 இல் படுகொலை செய்யப்பட்டார்.

அவருக்குப் பின்னர் அவரின் மூத்த மகன் கிரேக்கத்தின் முதலாம் கான்ஸ்டன்டைன் ஆக வந்தார்.

வில்லியம்/ ஜோர்ஜின் இளைய மகன், கிரீஸ் மற்றும் டென்மார்க்கின் இளவரசர் ஆண்ட்ரூ பிலிப்பின் தந்தை ஆவார். அவரின் அன்னை, பேட்டன்பேர்க்கின் ஜேர்மன் இளவரசர் லூயிஸின் மகளும் மகாராணி விக்டோரியாவின் கொள்ளு பேத்தியும் ஆவார்.

முதலாம் உலகப் போரில் கிரேக்க நடுநிலைமை காரணமாக 1917 இல் முதலாம் கான்ஸ்டன்டைன் பதவி நீக்கம் செய்யப்பட்டு, பின்னர் 1920 இல் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டார். 1922 இல், ஓர் இராணுவக் கிளர்ச்சியைத் தொடர்ந்து அவர் மீண்டும் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். சாகர்யா சண்டையின் போது "உத்தரவுக்குக் கீழ்படியவில்லை" என்பதற்காக இளவரசர் ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டு இராணுவ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார், கிரேக்க-துருக்கிய மோதலின் முடிவில் இராணுவம் அந்த பிரதேசத்தை இழந்திருந்தது. கிரேக்க தேசிய குடியுரிமை பறிக்கப்பட்ட ஆண்ட்ரூ தேசத்துரோக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். அவர் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்படலாமென அஞ்சிய பிரிட்டனின் ஐந்தாம் ஜோர்ஜ், ஒரு வயதான பிலிப் உள்ளடங்கலாக அந்த குடும்பத்தை இத்தாலிக்குக் கொண்டு வர கடற்படை கப்பலை அனுப்பினார்.

தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்கள் ஸ்ராலினிசத்தால் காட்டிக் கொடுக்கப்பட்டமை பிலிப்பின் தலைவிதியை வடிவமைத்த மற்றொரு காரணியாக இருந்தது, ஸ்ராலினிச காட்டிக்கொடுப்பு ஐரோப்பிய மற்றும் உலக முதலாளித்துவம் தப்பிப் பிழைக்க அனுமதித்ததுடன், 1920 கள் மற்றும் 1930 கள் நெடுகிலும் அரசியல் பிற்போக்குத்தனத்தின் வளர்ச்சிக்கு உதவியது. சான்றாக, கிரேக்கத்தில் முடியாட்சியின் உயிர்வாழ்வானது, முசோலினியின் பாசிசவாதிகளிடமிருந்து உத்வேகம் பெற்று, ஆனால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் சேர்ந்திருந்த மெட்டாக்சாஸ் (Metaxas) சர்வாதிகாரத்தின் பாதுகாப்பைச் சார்ந்திருந்தது. இறுதியில் கிரேக்க முடியாட்சி 1973 இல் இராணுவ ஆட்சிக் குழுவால் கலைக்கப்பட்டது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை நோக்கிய பிலிப்பின் நோக்குநிலையும் அதேபோன்ற புவிசார் அரசியல் உண்மைகள் மற்றும் பணிவடக்கமான அரசியல் பரிசீலனைகளால் கட்டளையிடப்பட்டிருந்தன. ஒரு முறிவுக்குப் பின்னர் அவர் தாயார் அமைப்புக்குள் உள்ளிணைத்துக் கொள்ளப்படும் வரையில் நாடுகடத்தப்பட்ட அவரது குடும்பம் பாரிஸிற்கு வெளியே வாழ்ந்து வந்தது. அவரது தந்தை 1944 இல் இறக்கும் வரையில் விச்சி பிரான்சில் தங்கியிருந்து, மொண்ட கார்லோவின் சூதாட்ட விடுதிகளுக்குப் பொறுப்பேற்றிருந்தார்.

பிலிப்பின் சகோதரிகள் அனைவரும் ஜேர்மன் இளவரசர்களை மணந்தனர். அவரது மூன்று மைத்துனர்கள் நாஜி கட்சியில் சேர்ந்து அவர்களுக்காக போரிட்டனர். அவரது சகோதரி சோபியின் முதல் கணவர் நாஜி அதிரடிப்படை SS இல் இருந்தார். 1937 இல், சமீபத்தில் தான் நாஜி கட்சியில் சேர்ந்திருந்த சிசிலி என்ற ஒரு சகோதரி விமான விபத்தில் உயிரிழந்தார். பிலிப் டார்ம்ஸ்டாட்டில் பாசிசவாத வீரவணக்கம் செலுத்தி இறுதி ஊர்வல கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் அந்த காலகட்டத்தைக் குறித்து கூறுகையில், “ஏதோ நடந்துவிட்டது. குடும்பம் உடைந்து போனது… நான் அதிலிருந்து முன்நகர வேண்டியிருந்தது. நீங்களாக இருந்தாலும் சரி. யாராக இருந்தாலும்,” என்று கூறி, அவரது பிரபுத்துவ நீதியின் வெறுப்பை எடுத்துக்காட்டினார்.

1933 இல், பிலிப் ஜேர்மனியில் குர்ட் ஹனின் கௌரவமிக்க சலெம் உறைவிடப் பள்ளியில் (Schule Schloss Salem) சேர்ந்தார். ஆனால் நாஜிசத்தை விமர்சித்ததற்காக பின்னர் இரண்டு முறை யூதரான ஹன் ஜேர்மனியிலிருந்து வெளியே வேண்டியிருந்தது. பிலிப் அவரைப் பின்தொடர்ந்து ஸ்காட்லாந்து சென்றார், அவரது புதிதாக நிறுவப்பட்ட கோர்டன்ஸ்டவுன் பள்ளியில் சேர்ந்தார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு பிலிப்பின் தனிப்பட்ட விசுவாசம் உறுதி செய்யப்பட்டது.

ஒரு செவிலித் தந்தையான ஹன், பிரிட்டிஷ் சமூகத்தின் உயர் மட்டங்களில் ஒரு பாத்திரம் வகிப்பதற்கேற்ப பிலிப்பை வடிவமைக்க உதவ இருந்தார். அவர் எழுதினார், இளவரசர், “எந்தவொரு தொழிலிலும் அவரது அடையாளத்தை வெளிப்படுத்துவார், அங்கே அவர் பலத்தின் சோதனையை நிரூபிக்க வேண்டியிருக்கும்.” எடின்பேர்க்கின் ட்யூட் விருதும் ஹன்னை ஈர்த்திருந்தது, அது இளைஞர்களுக்கான "நாகரீக வாழ்க்கை கலையில் தனக்குத்தானே செய்ய வேண்டியவையாக" சமூக பொறுப்புடன் தனிநபர்வாதத்தைக் கலந்து அதற்காக வழங்கப்பட்ட விருதாகும். அது இளவரசரின் பெயரைத் தாங்கியிருந்தாலும், பிலிப் கூறுகையில், “ஹன் இல்லையென்றால் நான் தொடங்கி இருக்கவே மாட்டேன்,” என்றார்.

போருக்கு முன்னதாக பிலிப் கடற்படை கல்லூரிக்கு அனுப்பப்பட்டார், அங்கே அவர் முதலில் இளவரசி எலிசபெத்தை ஒரு குழந்தையாக சந்தித்தார். 1940 இல் அவரின் பட்டதாரி வகுப்பில் முதலிடத்தில் தேறியதும், அவர் கடற்படையில் சேர்ந்து, இராணுவ நடவடிக்கையை மேற்பார்வையிட்டு, பதவி உயர்வு பெற்றார். இங்கேயும் கூட அவருக்கான மதிப்பு அவரை சகித்துக் கொள்ள முடியாத நிலைமைக்காக கிடைத்தது. “அவரின் குழுவினரில் ஒருவர்" “மீண்டும் அவரின் கீழ் வேலை செய்வதை விட இறப்பதே மேல் என்றார்,” என்று ஒரு வாழ்கை வரலாற்றாளர் எழுதினார்.

அவர் முதன்முதலில் எலிசபெத்தை நீதிமன்றத்திற்கு இழுத்த போது, பிரிட்டிஷ் முடியாட்சி அவரின் கலவையான பாரம்பரியம், கடுமையான குணாம்சம் மற்றும் பட்டங்கள் இல்லாத தன்மை ஆகியவற்றால் அவர்களை விட தகுதியில் குறைந்தவராக அவரை கருதியது. எலிசபெத்தை திருமணம் செய்ய அவர் கோரியதற்கு அரச குடும்பத்தின் எதிர்வினைகள் அந்த சமூக அடுக்கின் பிற்போக்குத்தனத்தைக் காட்டுகிறது. மகாராணியின் தாயார் அவரை "ஹன்" என்றழைத்தார். அவரின் சகோதரர் அவரை "ஒரு ஜேர்மானியர்" என்று நிராகரித்தார். ஆனாலும், அந்த திருமணம் ஒப்புக் கொள்ளப்பட்டது. அவரது கிரேக்க பட்டத்தைத் துறந்து, அவர் பிரிட்டிஷ் தேசிய குடியுரிமை ஏற்று, மவுண்ட்பேட்டன் என்ற ஆங்கில பெயரை ஏற்றுக் கொண்டார். 1947 இல் அவரது திருமண நாளில் அவர் எடின்பேர்க் டியூக் ஆனார். நோய்வாய்ப்பட்ட தனது தந்தையிடமிருந்து கடமைகளை ஏற்றுக் கொண்டிருந்த எலிசபெத்துக்கு உதவுவதற்காக, பிலிப் 1951 இல் கடற்படையில் இருந்து விடுப்பு எடுத்தார். 1952 இல் ஜோர்ஜ் இறந்தார், எலிசபெத் மகாராணியானார்.

பிலிப் மீதான பெரும்பாலான இரங்கல்கள் இந்த புள்ளியிலிருந்து தான் ஒருமுனைப்படுகின்றன—அண்மித்து ஏழு தசாப்தங்கள் அவர் மகாராணியின் கணவராக பாத்திரம் வகித்து, அவர் பிரிட்டிஷ் வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் அரச குடும்ப வாழ்க்கை துணைவராக சேவையாற்றி இருந்தார். பெரும்பாலான காலம், மிகவும் விட்டுக்கொடுப்புடன் அவர் விசுவாசமாக அந்த பாத்திரம் தான் வகித்தார் என்று விவரிப்பு தொடர்கிறது.

அரியணைக்கு தேவையான வாரிசுகளை வழங்கியமை குறித்து கூற வேண்டியதே இல்லை என்றாலும், மகாராணியை ஆதரிக்க அவர் தயாராக இருந்தமை பிரிட்டன் ஆளும் உயரடுக்கிற்கு ஒரு மிகப்பெரும் வெகுமதியாக இருந்தது. ஆணாதிக்கத்தைத் தியாகம் செய்து தன் மனைவியின் பின்னால் தேவையான இடைவெளியில் செல்ல அவர் தயாராக இருந்தார் என்பது எண்ணற்ற நினைவஞ்சலிகளில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றாக உள்ளது. இவற்றில் மிகவும் அர்த்தமற்ற ஒன்று கார்டியனில் கேபி ஹின்ஸ்லிஃப் இன் இதயாஞ்சலியில் வருகிறது, அவர் பிலிப்பை "பெண் அதிகாரத்திற்கு தலை வணங்கும் ஆண் என்ற கருத்துடன் இப்போதும் ஒத்துப் போகாத ஒரு சகாப்தத்தில்" வாழ்ந்த ஒருவர் என்று பிலிப்பை விவரிக்கிறார், அவர் "வேறுவிதமான ஆண்பால் இலட்சியத்தை வரையறுக்க [வந்தவர்]; அவர் அர்பணிப்பு மற்றும் ஆதரவிலும், இடைவிடாது வெளிச்சத்தில் தன்னை காட்ட வேண்டிய அவசியமில்லாத ஒருவித பலத்திலும்" வேரூன்றியிருந்தார். “பொது வாழ்க்கையில்" "தன் வாழ்க்கை துணையை வெளிச்சத்தில் இருக்க அனுமதித்து பின்புலத்தில் ஒளிமங்கி இருப்பதற்கான அவரின் கருணையே [அவரின்] நிஜமான செயல்பாடாக இருந்தது.”

எவ்வாறாயினும், “அனேகமாக அது அரச கிரீடமாக இருந்தது, பெரும்பாலும் அதை பெண்களே அணிந்திருப்பார்கள், நாட்டை விட்டு வெளியேறி வந்த இந்த கிரேக்க அரச குடும்ப வாரிசுக்காக அது விட்டுக்கொடுக்கப்பட்டது; அந்த அரச கிரீடத்திற்காக தான் அவர் மனைவியின் முடிசூட்டு விழாவின் போது அவருக்கு முன்னால் மண்டியிட்டு தனது விசுவாசத்தைப் பகிரங்கமாக பறைசாற்றினார்,” என்று குறிப்பிட்டு, ஹின்ஸ்லிஃப் ஒரு பயனுள்ள அவதானிப்பை வழங்குகிறார்.

கிரீடத்தின் அதிகாரத்தைப் பாதுகாப்பதற்கான அவரின் தனிப்பட்ட அவமானத்தை தெளிவாக அவர் ஓர் அமைப்புரீதியாக காண்பதற்கு உண்மைமையில் பிலிப் தன்னை தயார்படுத்தி இருந்தார். பிலேபிய விரோதம் வெடிப்பதற்கு எதிராக அதை பாதுகாக்கவும் மற்றும் மக்களுக்கு முடியாட்சியை விருப்பத்திற்குரியதாக ஆக்குவதற்கும் அவர் வாழ்க்கை அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. உண்மையில் முடியாட்சி தப்பிப் பிழைக்க வேண்டும் என்ற அவரின் வலியுறுத்தலின் காரணமாகவே, அவர் அதனை "நவீனமயப்படுத்தியவர்" (moderniser) என்று அறியப்பட்டார். அவரது உண்மையான எதேச்சதிகார உணர்வுகள் இருந்தாலும் கூட, முடியாட்சியின் மீதான விமர்சனங்களை ஆராய்ந்து தவிர்ப்பதற்காக, முன்னணி அரச குடும்பத்தினர்கள் மற்றும் அவர்களின் ஆலோசகர்களின் Way Ahead குழுமத்திற்கு அவர் தலைமை தாங்கினார். "மகாராணி ஆட்சி செய்வதை உறுதிப்படுத்துவதே" அவர் வகிக்கும் பாத்திரம் என்பதை அவர் கூறினார்.

அவரது "தொண்டு பணிகள்" மற்றும் ஏராளமான பொதுப் பணிகளைக் கௌரவப்படுத்துவதற்கு அவர் பொறுப்பேற்றிருந்ததைக் குறித்தும் இதையே கூற முடியும்—ஏனென்றால் இது அசாதாரண தனியந்தஸ்துகளுக்காகவும், கிரிக்கெட், போலோ, சொகுசு படகு சவாரிகள், ஆடம்பர கப்பல் பயணங்கள், விருந்து, உல்லாச களிப்புகள் இன்னும் பிறவற்றைக் கொண்ட தனிப்பட்ட வாழ்க்கைக்காக விலையாக கொடுக்க வேண்டியதாக இருந்தது.

ஆயினும்கூட அவர் தனது "தியாகத்துடன்" கட்டுப்பட்டிருந்தார், மேலும் தனிப்பட்ட முறையில் மட்டுமல்ல, பகிரங்கமாகவே கூட கண்கூடாகவே கடுமையானவராக இருந்தார். அவரது கடற்படை தொழில் வாழ்வைத் தொடர முடியாமல் போனதற்கு வருந்திய அவர், மவுண்ட்பேட்டனை விட விண்ட்சர் என்ற பெயரை தனது குழந்தைகள் பெற்றிருப்பதாக குறைகூறினார், “இந்நாட்டில் தன் குழந்தைகளுக்கு தன் பெயரை வழங்க அனுமதிக்கப்படாத ஒரே மனிதர் நானாக தான் இருப்பேன். நான் இரத்தக்கறை படிந்த ஓர் அமீபா என்பதைத் தவிர வேறொன்றுமில்லை,” என்றவர் அறிவித்தார்.

உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்த போது அவரது எண்ணற்ற அர்த்தமற்ற மற்றும் சில வேளைகளில் பட்டவர்த்தனமான இனவாத அறிவிக்கைகள், அவருக்குள் மறைந்து கிடந்த அதிருப்தி மற்றும் அடக்கி வைக்கப்பட்டிருந்த தன்மைகளின் இழிவார்ந்த வெளிப்பாடுகளாக உள்ளன. ஆனால், பராகுவிய சர்வாதிகாரி ஆல்ஃபிரடோ ஸ்ட்ரோஸ்னரிடம் "அதன் மக்களால் ஆளப்படாத ஒரு நாட்டில் இருப்பது இனிமையான மாற்றமாக இருக்கிறது,” என்றவர் கூறிய போது, அது அனேகமாக மிகவும் அப்பட்டமாக வெளிப்பட்டிருந்தது.

முடியாட்சி மீதான அந்த இளவரசனின் அக்கறை பொதுவாக முதலாளித்துவத்தின் ஸ்திரத்தன்மை பற்றிய பரந்த சிந்தனையில் தங்கியிருந்தது. "நெருக்கடி எப்போது தொடங்குகிறது என்பது உங்களுக்குத் தெரியாது, எப்போது நெருக்கடி நிலவுகிறது என்பதும் உங்களுக்குத் தெரியாது, ஆனால் அந்த இடம் படிப்படியாக வசிக்க முடியாததாக ஆகிவிடுகிறது,” என்று கூறி, அவர் 1977 இல் பிரிட்டிஷ் பொருளாதாரத்தை ஒரு வீட்டின் அழுகிய குப்பைகளுடன் ஒப்பிட்டார்.

இதேபோல பெரிதும் தம்பட்டம் அடிக்கப்பட்ட பிலிப்பின் சுற்றுச்சூழல் பாதுகாப்புவாதமும் (environmentalism) ஒரு மனித சமூகத்தை வெறுக்கும் வர்க்க தனியந்தஸ்தை அடிப்படையாக கொண்டது என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இயற்கை பாதுகாப்பை அவர் வக்காலத்துவாங்கியமை விளையாட்டுத்துறைக்காக பெரிய விளையாட்டை தேடும் உரிமையைக் கொண்டிருந்தது. “குறிப்பாக ஓர் உயிராபத்தான வைரஸாக மறுபிறவி கொடுக்குமாறு கேட்க ஆசைப்படுகிறேன், ஆனால் அது அனேகமாக நீண்ட காலத்திற்கு நீண்டு செல்கிறது,” என்று எழுதி, மனிதகுலத்தின் பெருந்திரளான மக்கள் மீதான ஓர் அப்பட்டமான விரோதத்தையும் உயிர்களின் அழிவுக்கு எதிரான பாதுகாப்புடன் சேர்த்திருந்தார்.

இந்த அரசியல் மற்றும் வர்க்க யதார்த்தங்கள் பிரிட்டனின் அரசியல் தலைவர்களிடமிருந்து வரும் புகழாரங்களில் வெளிப்பாட்டைக் காண்கின்றன. நேர்மையற்ற பிரிட்டிஷ் முதலாளித்துவ வர்க்கத்தின் மிகவும் வெளிப்படையான சுய-சேவை பிரதிநிதிகளில் ஒருவரான பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன், பிலிப்பின் "சேவை நெறியை" பாராட்டினார். பிரிட்டன் "ஓர் அசாதாரண பொது சேவகரை இழுந்து" விட்டதாக தொழிற் கட்சி தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்தார்.

இந்த அபத்தமான மற்றும் ஒட்டுண்ணித்தனமான அமைப்பும் அதன் பிரதிநிதிகளும் இன்னமும் 2021 இல் விவாதிக்கப்பட்டு வருகிறார்களே என்பதை வரவிருக்கும் சந்ததியினர் அவநம்பிக்கையோடு திரும்பி பார்ப்பார்கள். இதன் பாதுகாப்புக்காகவே ஒட்டுமொத்த வாழ்வையும் அர்ப்பணித்திருந்த இளவரசர் பிலிப்பின் மரணம், அரச குடும்பத்தை ஒரேயடியாக வரலாற்று புத்தகங்களோடு அடக்கி வைக்க வேண்டிய அவசர அவசியத்தை மீண்டுமொருமுறை எடுத்துக்காட்டுகிறது.

Loading