UAW தலைமை வேட்பாளர் வில் லெஹ்மன் வென்ட்ரா மற்றும் GM சப்சிஸ்டம்ஸ் தொழிலாளர்களுக்கு ஆதரவைக் கோருகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வில் லெஹ்மனின் பிரச்சாரம் பற்றிய கூடுதல் தகவலுக்கு, WillForUAWPresident.org ஐ பார்வையிடவும்.

ஐக்கிய வாகன தொழிலாளர் (UAW) தொழிற்சங்கத்தின் தலைமைக்கான வேட்பாளராக தேர்தலில் நிற்கும் வில் லெஹ்மன் திங்களன்று வாகன உதிரிப்பாக நிறுவனமான வென்ட்ராவில் சாமானிய தொழிலாளர்களின் நடவடிக்கை குழு அமைப்பதை ஆதரித்தும், அனைத்து வாகனத் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தைத் தடுக்கும் UAW அதிகாரத்துவத்தின் முயற்சிகளைக் கண்டித்தும் ஒரு வீடியோ அறிக்கையை வெளியிட்டார்.

'வென்ட்ரா மற்றும் GM சப்சிஸ்டம்ஸ் வாகன உதிரிப்பாக தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்கவும்!' - UAW ஜனாதிபதி வேட்பாளர் வில் லெஹ்மன்

கடந்த வாரம், மிச்சிகன் Evart இல் உள்ள வென்ட்ரா வாகன உதிரிப்பாக ஆலையில் உள்ள தொழிலாளர்கள் 94.5 சதவீதம் பேர் UAW ஆதரவு பெற்ற ஒப்பந்தத்தை தோற்கடித்தனர், இது வறுமை நிலை கூலியை பராமரிக்கிறது, அதிக சுகாதார செலவுகளை தொழிலாளர்கள் தாமே செலுத்துமாறு சுமத்துகிறது மற்றும் ஆலையில் கொத்தடிமை நிலைமைகளை முடிவுக்கு கொண்டுவர எதுவும் செய்யவில்லை.

வியாழக்கிழமை, ஜெனரல் மோட்டார்ஸின் குறைந்த ஊதியம் பெறும் துணை நிறுவனமான GM சப்சிஸ்டம்ஸில் 700 தொழிலாளர்களை உள்ளடக்கிய கடைசி நிமிட ஒப்பந்தத்தை UAW அதிகாரத்துவம் அறிவித்தது. பொருட்களை கையாளுதல் மற்றும் பண்டகசாலை தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், மிச்சிகனில் உள்ள டெட்ராய்ட், லான்சிங், லேக் ஓரியன் மற்றும் பிளின்ட் ஆகிய இடங்களில் GM இன் முக்கிய பொருத்தும் ஆலைகளை விரைவாக மூடியிருக்கக்கூடும்.

பென்சில்வேனியாவின் மாக்கன்கியில் உள்ள மாக் ட்ரக்ஸ் (Mack Trucks) ஆலையில் 34 வயதான உற்பத்தி தொழிலாளி லெஹ்மன், கடந்த வாரம் UAW இன் தலைவர் பதவிக்கான தனது பிரச்சாரத்தை அறிவித்தார்.

அவரது சமீபத்திய அறிக்கையில், அவர் வென்ட்ரா மற்றும் GM சப்சிஸ்டம்ஸ் இன் தொழிலாளர்களுடனான தனது ஒற்றுமையை அறிவித்தார், அவர்கள் பெருநிறுவனங்கள் மற்றும் UAW அதிகாரத்துவத்திற்கு எதிராக அனைத்து சாமானிய தொழிலாளர்களின் ஆதரவிற்கு தகுதியான ஒரு முக்கியமான போராட்டத்தில் இருப்பதாக கூறினார். 'பெருநிறுவன உரிமையாளர்களின் ஆளும் வர்க்கம், தொழிலாளர்களால் கட்டாயப்படுத்தப்படாவிட்டால், எந்த இடத்திலும் சலுகைகளை வழங்கப் போவதில்லை. ஆனால் தொழிலாளர்கள் எல்லா இடங்களிலும், இலாபத்தைப் பாதுகாக்கும் ஊழல்மிக்க தொழிற்சங்க அதிகாரிகளால் தங்கள் பலத்தைப் பயன்படுத்துவதில் இருந்து தடுக்கப்படுகிறார்கள்” என்று அவர் கூறினார்.

''டெட்ராய்டில் உள்ள தவறாக பெயரிடப்பட்ட ஒற்றுமை இல்ல தலைமையகத்தில் UAW தலைவர் ரே கரி (Ray Curry) மற்றும் மீதமுள்ள தலைமைகள் கடைசியாக விரும்புவது உதிரிப்பாக நிறுவனங்களில் ஒன்றில் ஒரு வேலைநிறுத்தம் செய்வதாகும். கடந்த ஆண்டு டேனா மற்றும் நெக்ஸ்டீயரில் UAW செய்த ஒரே காரியம் இதுதான்.

UAW இன் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிநிதி டான் கோஷேபாவின் (Dan Kosheba) அறிக்கையை லெஹ்மன் கண்டனம் செய்தார். வென்ட்ரா தொழிலாளர்கள் ஒரு மணி நேரத்திற்கு 14 முதல் 17 டாலர்களை மட்டுமே சம்பாதிக்கிறார்கள், அவர்கள் 'பெரிய மூன்று இல்லை' என்பதால் அவர்களால் அதிக ஊதியம் எதுவும் பெற முடியாது என்று கூறினார். (அமெரிக்காவில் உள்ள பெரிய மூன்று வாகன உற்பத்தியாளர்கள்: ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் டைம்லர் கிரைஸ்லர்)

'உண்மையில், 1980 கள் வரை, உதிரி பாகங்களில் சுயதொழில் செய்பவர்களுக்கு பெரிய மூன்றைப் போலவே சம்பளமும் இருந்தது. டெட்ராய்ட் வாகன உற்பத்தியாளர்களின் இலாபத்தை அதிகரிக்க உதிரிப்பாக தொழிலாளர்களின் ஊதியத்தை குறைக்க UAW ஒப்புக்கொண்டது, பின்னர் GM மற்றும் ஃபோர்டின் துணை தயாரிப்பு நிறுவனமான விஸ்டியன் இல் உள்ள டெல்பி மற்றும் American Axle ஆகியவற்றில் பெரிய மூன்று உதிரிப்பாக தொழிலாளர்களை ஒருவருக்கொருவர் எதிராக குழிபறிக்க ஆதரித்தது.”

ஒரு சாமானிய தொழிலாளர்ககளின் நடவடிக்கை குழுவை அமைப்பதற்கான வென்ட்ரா தொழிலாளர்களின் முடிவை லெஹ்மன் பாராட்டினார், மேலும் அவர்களின் நிறுவன அறிக்கையில் அவர்கள் கூறிய கருத்தை மேற்கோள் காட்டினார்: 'நாங்கள் அனைவரும் ஒரு உறவின் பகுதியாக இருக்கிறோம். நாங்கள் இல்லாமல் நீங்கள் வேலை செய்ய முடியாது, நீங்கள் இல்லாமல் நாங்கள் வேலை செய்ய முடியாது. நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் தேவையானவர்கள். மேலும் நாம் அனைவரும் ஒற்றுமைக்காக ஒன்றாக ஒட்டிக்கொள்ள வேண்டும், மேலும் நமக்காகவும் முழு தொழிலாள வர்க்கத்திற்காகவும் ஒரு சிறந்த வாழ்க்கையை வெல்வோம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்” என்றார்.

'கடந்த இரண்டு ஆண்டுகளில், வொல்வோ ட்ரக்ஸ், டேனா மற்றும் ஜோன் டியர், தற்போதைய CNH தொழில் நிறுவன வேலைநிறுத்தம் மற்றும் வென்ட்ரா மற்றும் GM சப்சிஸ்டம்ஸ் நிறுவனங்களில் போராட்டங்கள் வரை UAW உறுப்பினர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் பிற போராட்டங்களில் அதிகரிப்பை நாங்கள் கண்டுள்ளோம். இது அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். நிறுவனத்திற்கு ஆதரவான UAW அதிகாரத்துவத்தை ஒழிக்கவும், சாமானிய தொழிலாளர் குழுவின் தொழிலாளர்களை அதிகாரத்தில் அமர்த்தவும், அனைவருக்கும் சமத்துவத்திற்காக போராடவும் தொழிலாள வர்க்கத்தை ஒன்றிணைக்கவும் நான் இத் தேர்தலில் போட்டியிடுகிறேன்' என தெரிவித்தார்.

வில்லின் பிரச்சாரம் பற்றிய கூடுதல் தகவலுக்கு, WillForUAWPresident.org ஐ பார்வையிடவும்.

Loading