UAW தலைவருக்கான சோசலிச வேட்பாளர் வில் லெஹ்மன், வாகனத் தொழிலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

UAW தலைவருக்கான வாக்கெடுப்புக்கு கடந்த மாதம் அவர் பரிந்துரைக்கப்பட்டதைத் தொடர்ந்து, வாகனத் தொழிலாளியான வில் லெஹ்மான், அமெரிக்கா முழுவதிலும் உள்ள தொழிலாளர்களிடமிருந்து அவரது பிரச்சாரத்தை ஆதரித்தும், அவருடைய வேலைத்திட்டத்தைப் பற்றிய கேள்விகளுடனும் கடிதங்களைப் பெற்றுள்ளார்.

உலக சோசலிச வலைத் தளம் (WSWS) லெஹ்மனின் பிரச்சாரத்திற்கு ஆதரவு அளிக்கிறது. லெஹ்மனிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்கள் மற்றும் பதில்களை கீழே வெளியிடுகிறோம். தொழிலாளர்களின் பெயர் தெரியாமல் இருக்க கடிதங்கள் திருத்தப்பட்டுள்ளன.

வில் லெஹ்மனின் பிரச்சாரம் பற்றிய மேலதிக தகவலுக்கு, WillforUAWPresident.org ஐப் பார்வையிடவும்.

******

அன்புடன் வில்,

எனது தொழிற்சங்க பிரதிநிதிகளும் நிறுவனமும் ஒரேமாதிரியானவர்கள்! எங்களிடம் சரியான பிரதிநிதித்துவம் இல்லை, நிறுவனத்திற்கு பல சலுகைகள் விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் தேவையான சில மாற்றங்களைச் செய்வீர்கள் என்று நம்புகிறேன். நாம் போராடி வருகிறோம், ஏதாவது செய்யாவிட்டால் வருங்கால சந்ததியினரும் போராடுவார்கள். கொடுப்பனவுகள் பாரியளவில் அதிகரிக்க வேண்டும். நாங்கள் போர்டை ஆதரிக்கிறோம். இருப்பினும் அவர்கள் ஆலையில் உள்ள வாகனம் கழுவும் அமைப்பு, பாரம்தூக்கிகள், தலைக்குமேலான கதவு உலர்த்திகள் ஆகியவற்றில் மில்லியன் கணக்கான டாலர்களை செலவிட்டுள்ளன. அவை இயங்குவதில்லை. ஆயினும்கூட, வாழ்க்கை செலவுகள் அதிகரிக்கையில் நமது ஊதியம் தேங்கியிருப்பதால், பொருளாதாரம் நமது வரவு-செலவுக்கு ஏற்றதாக இல்லை.

இதனை அர்த்தமுள்ளதாக்குங்கள், சரி! இந்த நிறுவனங்களுக்கு வேலைநிறுத்தம் செய்து அறிக்கை அளிக்கும் ஒரு குழு எங்களுக்குத் தேவை. அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு பொய் சொன்னார்கள். தொழிற்சங்க பிரதிநிதித்துவம் ஒப்பந்தத்திற்காக அவர்களுடன் கைகுலுக்கியது, உண்மையில்! எங்களுக்கு சிறந்த தலைமை தேவை.

UAW ஐ பாதிப்படைய செய்பவர்களை பொறுப்புக்கூறவைப்பதை நீங்கள் கருத்தில் எடுப்பதாக இருந்தால், என்னுடைய ஆதரவைப் பெறுவீர்கள்.

R

அன்புள்ள R,

நன்றி, ஆனால் நான் வலியுறுத்தியபடி, என்னால் தனியாக இதைச் செய்ய முடியாது. மேலும் நான் ஒருவித மந்திரத்தால் சிக்கலைத் தீர்ப்பவன் அல்ல. மாற்றங்களைக் கொண்டுவர தொழிலாளர்கள் சாமானிய தொழிலாளர்களின் குழுக்களை உருவாக்க வேண்டும். எதிர்கால சந்ததியினர், எதிர்காலத்தில் எல்லா இடங்களிலும் உள்ள தொழிலாளர்களின் பொருளாதாய நிலைமைகளை மேம்படுத்துவதற்கு முன்னெப்போதையும் விட இப்போது நாம் உழைக்க வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

நான் உருவாக்க உத்தேசித்துள்ள குழு தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களைக் கொண்டது. அதுவே எனது சாமானிய தொழிலாளர்களின் குழு அணுகுமுறை. உங்கள் ஆலையில் சாமானிய தொழிலாளர்களின் குழுவை உருவாக்க நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஆம், போர்டு தொழிலாளர்கள் மீது எந்த அக்கறையும் இல்லாமல் சுரண்டுவதை தீவிரமாக்குவதில் ஈடுபட்டுள்ளது. ஜூலை மாதம், இந்தியாவிலும் ஜேர்மனியிலும் உள்ள போர்டு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுடன் நான் இரண்டு முறை உரையாடினேன். இவை இரண்டும் ஆலை மூடல்களை எதிர்கொள்ளும் ஆலைகளாகும். எங்கள் போராட்டங்கள் அனைத்தும் தொடர்புபட்டவை என்பதை எல்லா இடங்களிலும் உள்ள தொழிலாளர்கள் உணர வேண்டும். நாங்கள் சாமானிய தொழிலாளர்களின் குழுவை உருவாக்கி, சர்வதேச அளவில் ஒருங்கிணைத்தால், வேலைகளை பாதுகாக்கவும், எங்கள் பணி நிலைமைகளை உயர்த்தவும் எங்களுக்கு அதிகாரம் உள்ளது. சாமானிய தொழிலாளர்களின் குழுக்களின் உருவாக்கம் குறித்த உங்கள் எண்ணங்களை எனக்குத் தெரிவிக்கவும்.

நன்றி,
வில் லெஹ்மன்

******

வில்,

UAW இல் உள்ள விஷயங்களை எவ்வாறு மாற்ற திட்டமிட்டுள்ளீர்கள்? அது எப்படியென்றால், தொழிற்சங்கங்களில் இல்லாதவர்களை விட சற்றே சிறந்த சுகாதாரம் மற்றும் ஊதியம் பெறுவதற்கு ஒரு சம்பிரதாயமாக நாங்கள் சந்தா தொகையை செலுத்துகிறோம். சந்தா தொகைகள் இலஞ்சப் பணமாகும். நான் Mack இல் பணிபுரிகிறேன், வொல்வோ பொறுப்பேற்றதிலிருந்து ஒவ்வொரு ஒப்பந்தத்தையும் இழந்துவிட்டோம். அவர்கள் தற்காலிக தொழிலாளர்களை விரும்பினர், மறைமுகமாக (6 வருட ஊதிய முன்னேற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம்) அதனைப் பெற்றனர். அவர்கள் விரும்பும் அனைத்தும், அவர்கள் பெறுகிறார்கள்.

2019ல் நடந்த வேலை நிறுத்தம் போலியானது. நான் வேலைநிறுத்த போராட்டத்தினை கடந்து போகமாட்டேன். ஆனால் நான் முட்டாள்தனமான போலி வேலைநிறுத்தங்களின் ஒரு பகுதியாக இருக்க மாட்டேன். எதுவும் அங்கீகரிக்கப்படாதபோது யார் மீண்டும் வேலைக்குச் செல்கிறார்கள்? வொல்வோ எப்படியும் வேலைவாரங்களை குறைக்க திட்டமிட்டது. மேலும் சிறிது காலம் மோசமான செய்திகளைப் பெறுவதற்கு அவர்கள் அதை நீண்ட நேரம் அனுமதித்தனர். பின்னர் அவர்கள் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இதையெல்லாம் தவிர்த்து ஆலையில் எலிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. எல்லோரும் மற்றவர்களைப் பற்றி மேற்பார்வையாளரிடம் சொல்கிறார்கள். சொந்த வேலையை எப்படி கவனிக்க வேண்டும் என்று யாருக்கும் தெரியாது. போராட முயற்சித்ததற்காக நான் உங்களைப் பாராட்டுகிறேன், ஆனால் நான் நினைப்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேரம் வந்து விட்டது, ஆனால் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

நான் நினைக்கின்றேன் அனைத்தும் முடிந்துவிட்டது.

******

ஆம், இப்போது அப்படித்தான் இருக்கிறது, நாம் ஒன்றும் செய்யாவிட்டால், நாம் மண்ணில் தூசுகளாகும் வரை விஷயங்கள் மோசமாகிக்கொண்டே இருக்கும். இப்போது, தொழிற்சாலை மட்டத்தில் தொழிலாளர்கள் ஏதாவது செய்யுமாறு நான் முன்மொழிகிறேன். கடந்த ஆண்டு NRV வேலைநிறுத்தத்தில் இருந்தபோது இங்கு தொடங்கப்பட்ட சாமானிய தொழிலாளர்களின் குழுக்களில் நாங்கள் ஒன்றுசேர வேண்டும். இவ்வாறு ஏற்பாடு செய்வதற்குப் பல காரணங்கள் உள்ளன, முக்கியமாக UAW இன் வழமையான தோல்விடையும் மூலோபாயத்தால் தடுக்கப்படாமல் நாம் எடுக்க வேண்டிய செயல்களைப் பற்றி அனைவரும் சுதந்திரமாகப் பேசக்கூடிய ஒரு திறந்த அமைப்பு எங்களிடம் உள்ளது.

இரண்டாவதாக, எங்களுக்கு சாமானிய தொழிலாளர்களின் குழுக்கள் தேவை. எனவே நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வரும்போது, அந்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்துபவர்கள் தொழிலாளர்கள்தான். விவாதிக்கக்கூடிய வகையில், நாங்கள் 2019 இல் ஒரு குழுவை உருவாக்கி, ஒப்பந்தத்தின் அனைத்து விவரங்களையும் எங்களிடம் பெறும்வரை திரும்ப வேண்டாம் என்று அழைப்பு விடுத்திருக்க வேண்டும். அதிகாரத்துவத்தின் தலைமையின் கீழ் தவறாக வழிநடத்தப்படாமல், நம்முடைய சொந்த செயல்களை நாம் வழிநடத்த வேண்டும். ஆம், 2019 வேலைநிறுத்தம் ஏமாற்றப்பட்டது. ஆனால் நாங்கள் வேலைநிறுத்தம் செய்ய 79% உடன் வாக்களித்தோம். வேலைநிறுத்த அங்கீகார வாக்கெடுப்புக்கு 'இல்லை' என்று வாக்களித்ததாக அந்த நேரத்தில் எனக்குத் தெரிந்த எவரும் இல்லை. விருப்பம் இருந்தது, ஆனால் அது தவறாக வழிநடத்தப்பட்டது. மீண்டும் போராட நாம் தயாராக வேண்டும். நாம் வெற்றிபெற வேண்டும் என்றால், மீண்டும் தவறாக வழிநடத்தப்பட முடியாது.

நிலைமை மாறுமா இல்லையா என்பது தொழிலாளர்கள் போராடத் தயாராக இருப்பதைப் பொறுத்தது. உங்களையும் இணைத்து இக்குழுக்களை உருவாக்க உதவுமாறு பரிந்துரைக்கிறேன். உறுதியானவர்கள் என்று உங்களுக்குத் தெரிந்த சக ஊழியர்களை தேடுங்கள். நான் தனியொரு பெரிய சீர்திருத்தவாதி அல்ல. நான் தொழிலாளர்களை நோக்கி திரும்புகின்றேன். நாம் அனைவரும் ஒருங்கிணைத்து போராட முடிவு செய்தால் பாரிய மாற்றங்களை செய்ய தொழிலாள வர்க்கத்திற்கு அதிகாரம் உள்ளது.

'என்னால் மட்டுமே அதைச் சரிசெய்ய முடியும்' அல்லது 'விஷயங்களைச் திருத்திக்கொள்ள சில புதிய அதிகாரிகளை என்னுடன் கொண்டு வருவேன்' என்ற இலக்கில் நான் போட்டியிடவில்லை. தொழிற்சாலையில் இக்குழுக்களை கட்டுவதற்கு தொழிலாளர்களை ஊக்குவிக்க முயற்சிக்கிறேன். ஏனென்றால் அதனால் மட்டுமே இது நடக்கும். எங்கள் பொருளாதாய நிலைமைகள் சில காலமாக குறைந்து வருகின்றன. நாம் எதுவும் செய்யாவிட்டால் இது பயங்கரமான உச்சநிலையை அடையும். தொழிலாளர்கள் இனியும் இழப்பை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டால் இது ஒரு உடையும் நிலையை அடையும். நான் இப்போது முன்னோக்கி செல்லும் வழியை சுட்டிக்காட்ட முயற்சிக்கிறேன். அது நிகழும்போது நாங்கள் போராடுவதற்கான சிறந்த நிலையில் இருப்போம். ஏதேனும் மாற்றம் ஏற்பட வேண்டுமானால் நாம் புதிய முறையில் ஒழுங்கமைக்க வேண்டும்.

வில் லெஹ்மன்

******

எங்கள் தொழிற்சாலை என் கருத்துப்படி நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். ஒவ்வொரு இரண்டு சனிக்கிழமைகளிலும் 3வது விடுமுறையிலும் நாங்கள் நீண்ட நேரம் வேலை செய்துகொண்டிருந்தோம், ஆனால் கோவிட்டின் போது “உதிரி பாகங்கள் பற்றாக்குறை” காரணமாக அது குறைந்துவிட்டது. நான் இங்கு புதிதாக இணைந்துள்ளேன். ஆனால் நான் எனது முழு வயதுவந்த வாழ்க்கையிலும் தொழிற்சங்கத்தில் இணைந்திருக்கிறேன். ஜெனரல் மோட்டார்ஸ் எங்கள் தற்காலிக தொழிலாளிகளை தவறாகப் பயன்படுத்துவதாகவும் உணர்கிறேன். எனது முக்கிய குறிக்கோள் 90 நாட்களுக்கு அவர்களை நிரந்தரமாக்குவதை நோக்கித் திரும்பவேண்டும். பணியமர்த்தினாலும் அல்லது பணிவிலக்கினாலும், தற்காலிகமானவர்களுக்கு ஒரு மணிநேரத்திற்கு குறைந்தபட்சம் $20 என்ற போட்டி ஊதியத்துடன் செய்யப்படவேண்டும்.

B

அன்புள்ள B,

8 மணி நேர வேலை, 40 மணி நேர வேலைக்காக தொழிலாளர்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிய காலம் இருந்தது. அந்த கடின போராட்ட வெற்றிகள் ஒருபோதும் விட்டுக்கொடுக்கப்படக்கூடாது. அதே போல் சம வேலைக்கு சம ஊதியம் மற்றும் குடும்பத்தை பராமரிப்பதற்கான ஊதியம் வழங்கப்படவேண்டும்.

நான் நிற்கும் இடத்திலிருந்து, தொழிலாளி வர்க்கமே அனைத்து இலாபத்தையும் உருவாக்குகிறது. எனவே தொழிலாளி வர்க்கம் அது எங்கு செல்கிறது என்பதை தீர்மானிக்க வேண்டும். இயற்கையாகவே அந்த விவாதத்தின் முன்னணியில் சமத்துவத்துடன். நான் இவ்வாறு கூற முனைகிறேன்: ஒரு தொழிலாளி முழுநேர வேலையைச் செய்கிறார் என்றால், உயர்மட்ட ஊதியத்துடன் எந்தவொரு தொழிலாளியும் செய்யக்கூடிய ஒரு வேலையை, அந்த வேலையை முடிப்பதற்கு அவர்கள் அதிக ஊதியத்தைப் பெற வேண்டும். பணியமர்த்தல் மற்றும் பணிநீக்கம் செய்வதற்கான நிறுவனங்களின் 'உரிமைகள்' அல்லது தற்காலிகமானவர்களை முழுநேரத்திற்கு மாற்ற முடிவு செய்வதற்கான 90 நாட்களுக்கு 'உரிமை' பற்றி நான் கவலைப்படவில்லை. அந்த முடிவெடுப்பவர்கள் பெரும்பாலும் ஒருவிதமான வேலையையும் செய்வதில்லை. குளிரூட்டப்பட்ட அலுவலகத்தில் அமர்ந்துகொண்டு, உண்மையான ஒரு தொழிலாளி செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தால் உண்மையான வேலை என்னவென்பது அவர்களுக்குத் தெரியாது.

'தற்காலிகமானவர்கள்' நிலையிலும் எனக்கு உடன்பாடு இல்லை. அதிக வேலையாட்கள் தேவை என்றால், அதிக வேலையாட்கள் இருக்க வேண்டும். தற்காலிக நிலை என்பது ஒரு நிறுவனம் முழுநேர வேலையைச் செய்ய ஒரு தொழிலாளிக்கு ஊதியம் கொடுப்பதில் இருந்து வெளியேறுவதற்கான மலிவான வழியாகும். இது தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தும் நோக்கத்துடன், அனைத்து முறைகேடான இலாபங்களையும் எவ்வித வேலையிலும் ஈடுபடாத சோம்பேறி அதிகாரத்துவம் மற்றும் பங்குதாரர்களுக்கு அனுப்பும் நோக்கத்தை கொண்டுள்ளது.

கடந்தகால சலுகைகளை நாங்கள் திரும்பப் பெறுவதற்கான வழி, சாமானிய தொழிலாளர்களின் குழுக்களை அமைப்பதுதான். மேலும் இது அந்தக் குழுக்களை உருவாக்குவதால் வெற்றிகள் அடையலாம் என்பதை அங்கீகரிக்கும் உங்களைப் போன்ற தொழிலாளர்களில் தங்கியுள்ளது. நீங்கள் ஒன்றைத் தொடங்க ஆர்வமாக இருந்தால், எனக்குத் தெரியப்படுத்துங்கள், நாங்கள் அதைப் பற்றி மேலும் விவாதிக்கலாம்.

நன்றி,
வில் லெஹ்மன்

******

வணக்கம் வில்,

UAW தலைவருக்கான உங்கள் பிரச்சாரம் பற்றிய மின்னஞ்சல்கள் என்னை ஊக்கப்படுத்தியுள்ளன. உங்கள் மேடையில் நான் முழு மனதுடன் உடன்படுகிறேன். அதிகாரத்தை மீண்டும் சாமானிய தொழிலாளர்களின் குழுக்களின் கைகளில் கொடுப்பதற்கான நேரம் ஏற்கெனவே வந்துவிட்டது.

நான் மிச்சிகன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் UAW இன் உறுப்பினராக உள்ளேன். இங்கு எனது அங்கத்துவ காலம் முழுவதும், தொழிற்சங்கம் அதன் உறுப்பினர்களுக்கு போதுமான அளவு செய்யவில்லை என்பதை நான் அடிக்கடி உணர்ந்திருக்கிறேன். உண்மையில், இது மேல்நோக்கி செல்வதைத் தடுக்கிறது. இங்கு நான் சம்பளம் வாங்கும் ஊழியராக தொழிற்சங்கத்தில் இருப்பது எனது தொழில் மற்றும் ஊதியத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. தொழிற்சங்க ஊழியர்களாக நாங்கள் மிகவும் கீழ்மட்டத்தில் இருக்கின்றோம்.

நான் தொழிற்சங்க பதவியில் இருப்பதால் உரிய இழப்பீடு வழங்காமல் கூடுதல் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எந்த விதமான வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு அல்லது குறிப்பிடத்தக்க உயர்வுகளை நாங்கள் பெறுவதில்லை. அவர்களின் பணியின் மதிப்பை அறிந்தவர் மற்றும் அவர்களின் வேலையை உண்மையாக நேசிப்பவர் அவமானப்படுத்தப்படுவதாக உணர்கின்றனர். உண்மையில், தற்போது வளாகத்தில் பல நிரப்பப்படாத தொழிற்சங்க பதவிகள் உள்ளன. பதவிக்கு முன்வருபவர்களுக்கு அவை $1,000 மேலதிக கொடுப்பனவை வழங்க முனைகின்றனர்; அவர்கள் புதிதாக ஊழியர்களே தேடுகின்றனர், ஆனால் அவர்களிடம் உள்ளவர்களைக் கவனித்துக் கொள்வதில்லை. தொழிற்சங்க ஊழியர்களுக்கு சிறந்த ஊதியம் வழங்கப்பட்டால், இவ்வளவு நிரப்பப்படாத பதவிகள் இருக்காது.

அதன் உறுப்பினர்களுக்கு குறைந்தபட்சம் எதையும் செய்யாத ஒரு நிறுவனத்திற்கு எதிராக தோல்வியடைந்த போராக உணரும் வகையில் போராடுவது விரக்தியையும் மனஉளைச்சலையும் தருகிறது. நம்மில் பலர் நேர்மறையான மாற்றத்திற்கான எந்த நம்பிக்கையையும் கைவிட்டுவிட்டோம்.

உங்கள் நேரத்தினை செலவளிப்பதற்கு நன்றி. உங்கள் பிரச்சாரம் வெற்றிகரமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். UAW க்கு தேவையான சில மாற்றங்களை உங்களால் கொண்டு வர முடியும் என்று நான் நம்புகிறேன்.

உண்மையுள்ள,
K

வணக்கம் K,

என்னால் மட்டும் அதிகாரத்தை மீண்டும் சாமானிய தொழிலாளர்களின் குழுக்களின் கைகளில் கொடுக்க முடியாது என்பதையும், அதற்காகப் போராட வேண்டியதன் அவசியத்தையும், சாமானிய தொழிலாளர்களின்குழுக்களை அமைப்பதன் அவசியத்தையும் தொழிலாளர்கள் உணர்ந்து கொள்ளும் அளவிற்கு மட்டுமே மாற்றம் ஏற்படும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். உங்களால் எனது பிரச்சார செய்திகளில் ஏதேனும் ஒன்றை உங்கள் சக பணியாளர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிந்ததா, அப்படியானால், அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? நீங்கள் பணிபுரியும் இடத்தில் ஒரு சாமானிய தொழிலாளர்களின் குழுவை அமைப்பதில் ஆர்வம் உள்ளதா என்பதை அறிய நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். UAW அதிகாரத்துவத்தினால் நீங்கள் மட்டும் தனியாக கைவிடப்படவில்லை. சர்வதேச மற்றும் உள்ளூர் மட்டத்தில் உள்ள அதிகாரத்துவம் அவர்களுக்கு சந்தா தொகையை செலுத்தும் அனைவரையும் கைவிட்டுள்ளது. சில மற்றவர்களை விட மோசமாக உள்ளது.

எங்கள் ஆலையில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டு ஒன்றுக்கும் மேற்பட்ட சக பணியாளர்கள் இறந்தனர். ஒரு தொழிலாளி, வில்லியம் டி, நன்றி கூறும் கொண்டாட்டத்தின் பின்னர் மரணமடைந்தார். எங்கள் சாமானிய தொழிலாளர்களின்குழு அதைப் பற்றி எங்கள் உள்ளூர் தொழிற்சங்க பிரிவிடம் கேட்டபோது, அவர் இறந்ததைக் கூட அவர்கள் அறியவில்லை. நான் பணிபுரியும் Mack Trucks இல், இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஒரு மேற்பார்வையாளர் அவரது வேலைக்காக என்னை பரிந்துரை செய்தார். மற்ற எந்த நிரப்பப்படாத பதவியைப் போலவே அவர் பதவியும் நிரப்பப்படாது தற்காலிகமாக பதவியில் இருந்திருந்தார். சமூகக் கொலைகளைப் பற்றிய அந்த வகையான அக்கறையற்ற மற்றும் அலட்சிய மனப்பான்மையே நான் போட்டியிடுவதற்கான முக்கிய காரணமுமாகும்.

தொடர்ந்து மோசமடைந்து வரும் எங்களின் பொருளாதார நிலை எனது போட்டியிடலுடன் தொடர்புடையது. அதே போல் மாற்றத்தை கொண்டு வர தொழிலாளர்கள் செய்யும் ஒரு முனைவை பிரபலப்படுத்துவது. முதலாளித்துவத்தை ஒழித்து சோசலிசத்தைக் கொண்டு வருவதற்கான தேவையானது சாமானிய தொழிலாளர்களின் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியாகும். சமூக ஊடகங்களிலும் உங்கள் பணியிடத்திலும் நீங்கள் இந்த செய்தியைப் பரப்பினால் அது எனது பிரச்சார முயற்சிக்கு பெரிதும் உதவும்.

நன்றி,
வில் லெஹ்மன்

******

கட்டிட பராமரிப்புப் பணியாளர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள். அதாவது ஒப்பந்தம், அவர்களிடமிருந்து பெரிய மூன்று வேலைகள், ஊதியம் போன்றவற்றை நாங்கள் எடுத்தது போல் நடத்தப்படுவதைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள்.

P

வணக்கம் P,

Mack நிறுவனத்தில் அவர்கள் பராமரிப்பாளர்களை 'பொது பராமரிப்பு' என வகைப்படுத்தப்பட்ட ஒரு தனி, கீழ் மட்டஅடுக்கில் வைத்தனர். என் கருத்துப்படி, தொழிற்சாலையில் இருக்கும் எந்த ஒரு தொழிலாளியும் தனது சொந்த வேலை என்று ஒடுக்கப்பட்ட வேலையைச் செய்கிறார் என்றால், தொழிற்சாலையில் உள்ள மற்ற தொழிலாளர்களை விட அவர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கக்கூடாது.

UAW அதிகாரத்துவத்தின் ஆசியுடன், பல ஆண்டுகளாக நிறுவனங்கள் உருவாக்கிய மிகப்பெரிய விஷயங்களில் ஒன்று, வெளிப்படையான சமத்துவமின்மை. அவர்கள் தொழிலாளர்களைப் பிரித்து, தொழிலாளர்களுக்கு எதிரான கருத்துக்களை தொழிலாளர்களாகிய நம்மிடையே வளர்க்க முயல்கின்றனர். ஒரு தொழிலாளி ஏன் மற்றொரு தொழிலாளி இந்த அல்லது அந்த வகையான சமத்துவத்திற்கு தகுதியானவர் அல்ல என்று எந்த நேரத்திலும் நீங்கள் கேட்கும்போது, நான் குறிப்பிடும் விடயமும் அதுதான்.

அந்த வகையான பேச்சு தொழிலாளர்களை திசைதிருப்பவும், நமது சொந்த தொழிலாள வர்க்க சகோதர சகோதரிகளை எதிரிகளாகப் பார்க்கவும், அதே நேரத்தில் UAW அதிகாரிகளுக்கு வழங்கப்படும் நூறாயிரக்கணக்கான டாலர்களில் இருந்தும் சில சமயங்களில் பெருநிறுவன அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கான டாலர்களை வழங்குவதிலிருந்து திசைதிருப்புவதாகவும் உள்ளது. இதை மாதிரியான கருத்துக்களையே வேறு நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களைப் பற்றி கூறுகின்றார்கள். நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், எங்களை ஒன்றிணைக்க வேண்டியது தொழிலாள வர்க்க ஒற்றுமைதான்.

GM இன் தலைமை நிர்வாக அதிகாரி மேரி பார்ரா, வொல்வோவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்ட்டின் லுன்ட்ஷ்ரெட், Flex-N-Gate தலைமை நிர்வாக அதிகாரி ஷாஹித் கான் மற்றும் HarperCollins உரிமையாளர் ரூபேர்ட் மேர்டோக்கின் நீங்கள் பார்க்க விரும்பாத மொத்த வருமானம் ஆகியவை உண்மையான ஒட்டுண்ணி குற்றவாளிகளின் ஊதியத்திற்கு முக்கிய எடுத்துக்காட்டுகளாகும். அவர்கள் தங்களுக்குத் தாங்களே எடுத்துக்கொண்டிருக்கும் பணம் நாம் உழைக்கும் பணமாகும். ஆனால் அவை எங்கள் கைகளுக்கு வருவதில்லை. ஏனென்றால் நாங்கள் தொழிற்சாலையில் பிளவுபட்டுள்ளோம். எங்கள் வர்க்க ஒற்றுமையின் தேவையைப் புரிந்து கொள்ளவில்லை. மேலும் எங்களுக்கு தேவையான தொழிலாள வர்க்க ஐக்கியம் ஒற்றுமையைப் பற்றிய நன்றாகப் புரிந்துகொள்ள வழிவகுக்கும் வரலாற்றுரீதியான உழைக்கும் வர்க்க அறிவு இல்லாதுள்ளது.

சுருக்கமாக, தொழிலாள வர்க்க ஒற்றுமையைப் புரிந்துகொள்வதற்கு நிறைய சொல்ல வேண்டும். ஆனால் அது அங்கே தொடங்குகிறது என்று நான் கூறுவேன். மேலும் அனைத்து இலாபங்களையும் உருவாக்குபவர்களான ஒவ்வொரு தொழிலாளியும், அந்த இலாபங்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதில் ஜனநாயகரீதியாக கருத்தைக் கூறும் உரிமையைக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் எங்கிருந்தாலும் அல்லது எந்த வகையான வேலை செய்தாலும் அவர்களுக்கு ஒரு கண்ணியமான வாழ்க்கை தேவை. அந்த நிலைக்குச் செல்ல, நாம் சாமானிய தொழிலாளர்களின் குழுக்களில் அணிதிரளத் தொடங்க வேண்டும் மற்றும் அந்த சமத்துவத்தை அடைவதற்கான வழியில் நம்மைப் பயிற்றுவிக்க வேண்டும். ஊழல்மிக்க தொழிற்சங்கவாதத்தால் வழிநடத்த அனுமதிப்பதில் தங்கியிருப்பதன் மூலம் அது அடையப்படமுடியாது.

நன்றி,
வில் லெஹ்மன்

வில் லெஹ்மனின் பிரச்சாரம் பற்றிய கூடுதல் தகவலுக்கு, WillforUAWPresident.org ஐப் பார்வையிடவும்.

Loading