சீனாவில் நடந்த போராட்டங்கள் குறித்து

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மார்ச் 2020 வரை கோவிட்-19 க்கு பிரதிபலிப்பாக 'சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும்' கொள்கைக்கு அழைப்புவிடுத்த நியூ யோர்க் டைம்ஸ், புனையப்பட்ட வூஹான் ஆய்வுகூட சதிக் கோட்பாட்டை ஊக்குவித்துள்ளது.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

நியூ யோர்க் டைம்ஸ் காணோளி ஒன்று, “பி.சி.ஆர் பரிசோதனை இல்லை. எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்!'' என்பதை வெளிவிட்டது. எதிலிருந்து விடுதலை? நோய் பரவும் சுதந்திரம்? முதியவர்களைத் தொற்றிக் கொண்டு அவர்களைக் கொல்ல சுதந்திரமா? சமூகப் பொறுப்பிலிருந்து விடுதலையா? பின்விளைவுகள் எதுவாக இருந்தாலும் 'களியாட்டத்துடன்' இருக்க சுதந்திரமா?

இந்த ஆர்ப்பாட்டங்கள் கோவிட் பரவுவதைத் தடுக்க தேவையான அத்தியாவசிய நடவடிக்கைகளை கண்டிக்கும் அளவிற்கு, அவை அரசியல் ரீதியாக பிற்போக்குத்தனமானவையும் மற்றும் எந்த ஆதரவிற்கும் தகுதியற்றவை. இந்த எதிர்ப்பாளர்கள் நடுத்தர வர்க்கத்திலிருந்து வந்தவர்கள் என்பதை காணோளிகள் சுட்டிக்காட்டுகின்றன.

சீனாவில் முதலாளித்துவத்தின் மறுசீரமைப்பு பரந்த சமூக சமத்துவமின்மையை உருவாக்கியுள்ளது. கணிசமான செல்வந்த நடுத்தர வர்க்கம் அதற்கேயுரிய நன்கு அறியப்பட்ட குணாம்சங்களான தீவிர தனித்துவம், சுயநலம் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு விரோதம் ஆகிய அனைத்தையும் வெளிப்படுத்துகிறது.

எதிர்ப்புக்கள் முற்றிலும் தன்னிச்சையான மக்கள் அதிருப்தியின் வெளிப்பாடுகள் என்ற கூற்றுக்கள் மிகவும் சந்தேகத்திற்குரியவை. வணிகங்கள் மீதான கோவிட்-எதிர்ப்பு கட்டுப்பாடுகளை எதிர்க்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மிகவும் வலதுசாரிப் பிரிவுகளின் அனுதாபமும், வெளிப்படையான ஆதரவும் மாணவர்களுக்கு இருப்பதாக ஒருவர் சந்தேகிக்க வேண்டியுள்ளது.

மிருகத்தனமான வேலை நிலைமைகள் மற்றும் சுரண்டலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களின் நோக்கங்கள் மேற்கத்திய பெருநிறுவன ஊடகங்களால் ஊதிப்பெருக்கப்படும் ஆர்ப்பாட்டங்களின் நோக்கங்களை விட முற்றிலும் வேறுபட்ட நோக்கங்களைக் கொண்டுள்ளன. அவர்களின் போராட்டங்களுக்கு ஆதரவு தேவை.

Loading