wsws.org இன் நேரலையில், இணையவழி பொதுக்கூட்டம் - பிப்ரவரி 25 சனிக்கிழமை

உக்ரைன் போரை நிறுத்துவது எப்படி

உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்களால் இப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்படுகிறது.

உக்ரேனில் போர் வெடித்ததன் முதலாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், உலக சோசலிச வலைத் தளமும், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்களும் தற்போதைய நிலைமையை விளக்கி, போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு சோசலிச மற்றும் சர்வதேச மூலோபாயத்தை விரிவுபடுத்த ஒரு வட்ட மேசை விவாதத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.

REGISTER

முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அமெரிக்க மற்றும் நேட்டோ சக்திகள் மேலும் வெளிப்படையாக ரஷ்யாவுடன் நேரடிப் போரை நோக்கி நகர்கின்றன. பைடனின் கியேவ் பயணமும், போலந்தில் இந்த வாரம் அவர் ஆற்றிய உரையும், தவறாகப் புரிந்து கொள்ள முடியாத தெளிவான செய்தியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது: அமெரிக்காவும் நேட்டோவும் ரஷ்யாவின் இராணுவத் தோல்விக்கு முழுமையாக உறுதிபூண்டுள்ளன. இந்த இலக்கை அடைய அனைத்து வளங்களும் பயன்படுத்தப்படும், தரைப்படைகள் உட்பட. 1960 களில் இருந்து எந்த நேரத்திலும் இல்லாத அளவுக்கு அணுவாயுத சக்திகளுக்கு இடையிலான முழு அளவிலான மோதலுக்கு உலகம் நெருக்கமாக வந்துள்ளது.

இந்தப் போரின் பரிணாமம், ஏகாதிபத்திய சக்திகளாலும் முதலாளித்துவ ஊடகங்களாலும் ஒரு 'ஆத்திரமூட்டப்படாத போர்' தொடர்பாக இடைவிடாமல் ஊக்குவித்த பொய்யை அம்பலப்படுத்தியுள்ளது. உக்ரேனில் புட்டின் ஆட்சியின் படையெடுப்பு பிற்போக்குத்தனமானதோடு, பொறுப்பற்றது மற்றும் ரஷ்ய தன்னலக்குழுவின் நலன்களைப் பாதுகாப்பதற்காக தொடங்கப்பட்டது.

இருப்பினும், நீண்டகால இலக்குகளைத் தொடர அமெரிக்க மற்றும் நேட்டோ சக்திகளால் இந்தப் போர் தூண்டப்பட்டுள்ளது.

இந்தப் போரை எதிர்த்து, மூன்றாம் உலகப் போரை நோக்கிய உந்துதலை நிறுத்த வேண்டும்! தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கான ஒரு மூலோபாயமானது, போரின் மூல காரணங்கள் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய புரிதலின் அடிப்படையில் இருக்க வேண்டும்: போரின் வரலாற்று பின்னணி என்ன? அமெரிக்கா மற்றும் நேட்டோ சக்திகளை இயக்கும் பூகோள அரசியல் நலன்கள் என்ன? உக்ரேனை ஆக்கிரமிப்பதற்கான புட்டின் ஆட்சியின் முடிவை என்ன சமூக மற்றும் அரசியல் காரணிகள் வடிவமைத்துள்ளன? போருக்கும், உலகெங்கிலும் வளர்ச்சியடைந்துவரும் வர்க்கப் போராட்டத்திற்கும் உள்ள தொடர்புகள் என்ன?

இந்தக் வட்டமேசை விவாதத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் சமூக சமத்துவத்திற்கான இளைஞர் மற்றும் மாணவர்களின் முன்னணி உறுப்பினர்கள் இந்தப் பிரச்சினைகளைப் பற்றி விவாதித்து ஏகாதிபத்தியப் போரை முடிவுக்கு கொண்டுவர தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களுக்கான ஒரு மூலோபாயத்தை விரிவுபடுத்துவார்கள்.

கலந்துரையாடல் நேரடியாக ஒளிபரப்பப்படும், பார்வையாளர்களுக்கு கேள்விகளை சமர்ப்பிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

பேச்சாளர்கள்:

  • David North உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) சர்வதேச ஆசிரியர் குழு மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தலைவராக உள்ளார்.
  • Nick Beams சோசலிச சமத்துவக் கட்சியின் (ஆஸ்திரேலியா) முன்னாள் தேசிய செயலாளர் மற்றும் மார்க்சிச அரசியல் பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்ற WSWS எழுத்தாளர் ஆவார்.
  • Christoph Vandreier ஜேர்மனியில் Sozialistische Gleichheitspartei (சோசலிச சமத்துவக் கட்சி) யின் தலைவர்.
  • Andre Damon பூகோள அரசியல் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தில் நிபுணத்துவம் பெற்ற WSWS எழுத்தாளர் ஆவார்.
  • Clara Weiss கிழக்கு ஐரோப்பிய வரலாறு மற்றும் அரசியலில் நிபுணத்துவம் பெற்ற WSWS எழுத்தாளர் ஆவார்.

மதிப்பீட்டாளர்கள்:

  • Joseph Kishore சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசிய செயலாளர் ஆவார்.
  • Andrea Peters ஒரு சமூகவியலாளர் மற்றும் WSWS எழுத்தாளர் ஆவார், இவருடைய பணி சோவியத் யூனியன் மற்றும் ரஷ்யாவில் கவனம் செலுத்துகிறது.
Loading