வுஹான் (Wuhan) ஆய்வகப் பொய்: "பேரழிவுகரமான ஆயுதங்களின்" மறுவடிவம் 

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஒரு விசித்திரமான நிகழ்வில் வரலாறு மீண்டும் வருகிறது. 'பேரழிவு ஆயுதங்கள்' பற்றிய தவறான கூற்றுகளின் அடிப்படையில் 2003 ஈராக் மீதான படையெடுப்பை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்ட பொய்கள், சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு இராணுவக் கட்டமைப்பை ஊக்குவிக்க பயன்படுத்தப்படுகிறது.

கடந்த 26 ம் திகதி, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகையானது 'வுஹான் ஆய்வகக் கசிவு, கோவிட்-19 தொற்றுநோய்க்கான மிகவும் சாத்தியமான தோற்றமாக இருக்கலாம் என்று எரிசக்தி துறை இப்போது கூறுகிறது' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. கோவிட்-19 என்பது, சீனாவின் வுஹான் வைராலஜி நிறுவனத்திலுள்ள ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ் என்ற தவறான கூற்றை நியாயப்படுத்த, முழு அமெரிக்க ஊடகங்களின் பிரச்சாரத்தைத் தொடங்க இது பயன்படுத்தப்பட்டுள்ளது.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் அறிக்கையை எழுதியவர் மைக்கேல் ஆர். கார்டன் ஆவர். இவர், அமெரிக்க ஊடகங்களில் மிகவும் இழிவான பொய்யர் என்ற உண்மையை எந்த ஊடகமும் குறிப்பிடவில்லை. இவருடைய புனைகதைகள் மிகப் பெரியவை, நியூயார்க் டைம்ஸில் உள்ள இவரது முன்னாள் முதலாளிகள் கூட இவரிடமிருந்து பலமுறை தங்களைத் தாங்களே விலகிக்கொள்ள வேண்டியிருந்தது.

இடது: வெளியுறவுச் செயலர் கொலின் பவல், பிப். 5, 2003 அன்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழுவில் ஈராக்கின் ஆயுதத் திட்டங்களின் ஆதாரங்களை முன்வைக்கும்போது, ஆந்த்ராக்ஸ் வைரஸ் இருக்கலாம் என்று அவர் ஒரு குப்பியை காட்டுகிறார். வலது: குடியரசுக் கட்சியின் செனட்டர் ரோண்ட் போல், COVID-19 தொடர்பான செனட் சுகாதாரம், கல்வி, தொழிலாளர் மற்றும் ஓய்வூதியக் குழு விசாரணையின் போது வுஹான் வைராலஜி நிறுவனத்தில் COVID-19 உருவாக்கப்பட்டது என்று கூறுகிறார். [AP Photo]

ஆனால், அமெரிக்க ஊடக வணிகத்தில், இந்தப் பிரச்சனை எளிதில் தீர்க்கப்படுகிறது. கோர்டனின் கட்டுரையின் ஊடகக் கணக்குகள், எழுத்தாளர் பொய் சொன்னதற்கான பதிவைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிடவில்லை. இந்த அடிப்படை உண்மையை யாராவது கவனித்தால், அவர்கள் அமெரிக்க ஊடகங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரை-இனவாத மொழியில் 'சீனர்கள்' என்று குறிப்பிடப்படுகிறார்கள்.

புஷ் நிர்வாகத்தின் அநாமதேய ஆதாரங்களை மேற்கோள் காட்டி, கோர்டன் செப்டம்பர் 8, 2002 ல் எழுதிய கட்டுரையில், ஈராக் ஜனாதிபதி சதாம் ஹுசைன் அணுவாயுதத்தை உருவாக்க முயல்வதாக பொய்யாக எழுதினார். “வெடிகுண்டு உதிரிப் பாகங்களுக்கான தேடலை ஹுசைன் தீவிரப்படுத்தியதாக அமெரிக்கா கூறுகிறது'', ஈராக் அரசாங்கம் 'பேரழிவுகரமான ஆயுதங்களை' தயாரிக்க முயல்கிறது என்று கோர்டன் தனது கட்டுரையில் எழுதினார்.

மே 26, 2004 அன்று, தி டைம்ஸ் அதன் ஆசிரியர்களின் கடிதத்தை வெளியிட்டது. குறிப்பாக கார்டனின் அறிக்கையை மேற்கோள்காட்டி, ஈராக் போர் பற்றிய டைம்ஸ் பத்திரிகையின் அறிக்கையில் 'தவறான தகவல்கள்' மீண்டும் மீண்டும் இருந்ததாக அது ஒப்புக்கொண்டது.

தவறான சித்தரிப்பு முறையின் ஒரு பகுதியான கோர்டனின் அறிக்கைகளை, பகிரங்கமாக திரும்பப் பெற வேண்டியிருந்தது. 2014 ஆம் ஆண்டில், அவர் உக்ரேனில் இயங்கும் ரஷ்ய படையினர்களின் புகைப்படங்கள் என்று அவர் கூறியதை வெளியிட்டார். பின்னர் டைம்ஸின் பொது ஆசிரியரினால், இத்தகவல்கள் 'மதிப்பிழந்தவை' என்று ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது.

கார்டனின் அறிக்கையின் சித்தரிப்புக்களை விளக்கிய பத்திரிக்கையாளர் ரொபர்ட் பாரியை மேற்கோள் காட்டி, டைம்ஸின் பொது ஆசிரியர் இந்த அறிக்கைகளை திரும்பப் பெற்றார் :

இந்தக் கதைகள் அனைத்தும் மிகவும் இருண்ட சான்றுகளிலிருந்து கடினமான முடிவுகளை எடுக்கின்றன. மாற்று விளக்கங்களை புறக்கணிக்கும்போது அல்லது ஒதுக்கித் தள்ளும்போது. அவர்கள் சுயநல ஆதாரங்களில் இருந்து தங்கள் முடிவுகளுக்கு ஆதரவான பாராட்டுக்களையும் குவிக்கின்றனர், அதே நேரத்தில் சந்தேகிப்பவர்களை ரூப்களாகக் கருதுகின்றனர்.

உண்மையில், இது சமீபத்திய வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கட்டுரைக்கான மாதிரியாகும், இது மறைந்த பாரியின் வார்த்தைகளில், 'மற்றொரு மைக்கேல் கார்டனின் சிறப்பு' ஆகும்.

கோர்டனின் பல அறிக்கைகளைப் போலவே, அவரது சமீபத்திய கட்டுரையும், அமெரிக்க அரசாங்கத்தின் ஒரு பகுதியாக, ஒரு பார்வையைக் கூறும் இரண்டாம் நிலை ஆதாரத்தைப் பற்றிய செவிவழி செய்திகளைக் கொண்டுள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தின் பல்வேறு பிரிவுகளின் கருத்துக்களை அறிக்கையின் உள்ளடக்கங்கள் சுருக்கமாகக் கூறுகின்றன. அத்தோடு, அநாமதேய அதிகாரிகள் அவரிடம் கூறியதன் அடிப்படையில், கோவிட்-19 இன் தோற்றம் குறித்த முடிவை அமெரிக்க எரிசக்தி துறை மாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.

முற்றிலும் அநாமதேய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட அவரது கட்டுரை, மூலோபாய ரீதியாக வைக்கப்பட்ட பிற கட்டுரைகளால் சில மணிநேரங்களில் 'உறுதிப்படுத்தப்பட்டது'. மேலும் 'அமெரிக்க அதிகாரிகளின்” அறிக்கைகளின் அடிப்படையில், நியூயார்க் டைம்ஸ், சிஎன்என் மற்றும் என்பிசி நியூஸ் ஆகியன, ஒரு ஆவணம் தொடர்பான ரகசிய தகவல்கள்பற்றிய அறிவு தமக்கு இருப்பதாகவும் கூறியுள்ளன.

ஒன்றுமில்லாத இந்த திரட்சியில் இருந்து, ஒன்றும் குவியவில்லை. அமெரிக்க ஊடகங்கள் COVID-19 இன் தோற்றம் பற்றிய கருத்தில் கடலளவு மாற்றத்தை உருவாக்கியுள்ளன. இதன் நோக்கம் ஆய்வக கசிவு கோட்பாடு 'நம்பகமானது' என்று சாதாரண மனிதர்களையும் நம்ப வைப்பதாகும்.

இவ்வாறு, கோவிட்-19 ஒரு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்ற பொய்யானது, மாயமாக உண்மையாக மாற்றப்பட்டது. அதை உறுதிப்படுத்தவோ அல்லது அதை ஆதரிக்க எந்த உண்மையும் கொடுக்கவோ யாரும் பதிவு செய்ய முன்வரவில்லை.

ஆனால் கோர்டனின் அறிக்கை மிகவும் அடிப்படையான பத்திரிகை கொள்கைகளை மீறுவதால், அவரது எழுத்து வெள்ளை மாளிகையின் இலக்குகளை பிரதிபலிக்கவில்லை என்று அர்த்தமல்ல.

காலப்போக்கில், புஷ், ஒபாமா மற்றும் இப்போது பைடென் நிர்வாகங்கள் கோர்டனைப் பயன்படுத்தி பொதுமக்களிடம் பொய்களை சலவை செய்கின்றன, அதே நேரத்தில் மறுப்புத் தன்மையைக் கடைப்பிடிக்கின்றனர். இந்த விஷயத்திலும், பைடென் நிர்வாகம், பசிபிக் பகுதியில் அமெரிக்க இராணுவத்தை கட்டியெழுப்புவதை நியாயப்படுத்த, சீனாவிற்கு எதிரான வெறுப்பு மற்றும் இனவெறியை ஊக்குவிப்பதற்காக, வுஹான் ஆய்வக சதிக் கோட்பாட்டை ஊக்குவிக்க முயல்கிறது. 

கோவிட்-19 வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்படவில்லை. இதற்கு முன் வந்த அனைத்து தொற்றுநோய்களையும் போலவே, இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. டாக்டர் பீட்டர் ஹோடெஸின் வார்த்தைகளில், 'COVID-19 இன் இயற்கையான தோற்றம் குறித்து விஞ்ஞான சமூகத்தில் ஒரு மிகப்பெரிய உணர்வு உள்ளது.'

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

எவ்வாறாயினும், 'உருவாக்கப்பட்டது' என்பது வுஹான் ஆய்வக சதிக் கோட்பாடு ஆகும், இது பாசிச சித்தாந்தவாதியான ஸ்டீவ் பானன் மற்றும் அவரது வலதுசாரி வெளிநாட்டைச் சேர்ந்த சீன வணிக பங்காளிகளான மைல்ஸ் குவோ மற்றும் வாங் டிங்காங் ஆகியோரால் ஜனவரி 2020 இல் புனையப்பட்டது.

அடுத்த மூன்று ஆண்டுகளில், இந்த சதிக் கோட்பாடு அமெரிக்க செய்தி ஊடகத்தில் எப்போதும் பரந்த பிரிவுகளால் ஏற்றுக்கொள்ளப்படும். மே 25, 2021 அன்று, முந்தைய 'மைக்கேல் கார்டன் சிறப்பு' வெளியானதைத் தொடர்ந்து, வாஷிங்டன் போஸ்ட் 'வுஹான் ஆய்வகக் கசிவுக் கோட்பாடு திடீரென எப்படி நம்பகத்தன்மை பெற்றது' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது.

அடுத்த நாள், மே 26 அன்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், COVID-19 இன் தோற்றம் குறித்து 'இரண்டு சாத்தியமான காட்சிகள்' இருப்பதாக பகிரங்கமாக அறிவித்தார். டொனால்ட் டிரம்பின் கீழ் இருந்த வெளியுறவுத்துறையின் நிலைப்பாட்டை இதன் மூலம் அவர் மீண்டும் உறுதிப்படுத்துகிறார். மேலும் அவர் பாசிச சதிக் கோட்பாட்டிற்கு சமமான எடையை இயற்கைத் தோற்றம் பற்றிய பெரும் அறிவியலின் ஒருமித்த கருத்துக்கு வழங்குகிறார்.

கோர்டனின் சமீபத்திய அறிக்கை இரண்டு நிகழ்வுகளால் பிணைக்கப்பட்டுள்ளது. கடந்த 23ம் திகதி, பல தசாப்தங்களாக சீனாவின் ஒரு பகுதியாக அமெரிக்காவால் கருதப்படும் தைவானில் நிலைகொண்டுள்ள அமெரிக்க துருப்புக்களின் எண்ணிக்கையை மூன்று மடங்காக அதிகரிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

செவ்வாயன்று, குடியரசுக் கட்சியின் தலைமையிலான பிரதிநிதிகள் சபை 'அமெரிக்காவிற்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான மூலோபாய போட்டிக்கான தேர்வுக் குழு' அதன் முதல் உயர்மட்டக் கூட்டத்தை, 'அமெரிக்காவிற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அச்சுறுத்தல்' என்ற தலைப்பில் நடத்தியது. 

இந்த விசாரணையின் மைய நபராக டொனால்ட் டிரம்பின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மேத்யூ பாட்டிங்கர் இருப்பார். அமெரிக்கா மற்றும் சீனாவின் பொருளாதாரங்களை 'துண்டிக்கும்' முயற்சி மற்றும் சீனாவிற்கு எதிரான அமெரிக்க இராணுவ விரிவாக்கத்தை நியாயப்படுத்த வுஹான் ஆய்வக பொய்யை ஊக்குவிப்பது ஆகிய இரண்டிலும் ஒன்றோடொன்று தொடர்புடைய கொள்கைகளின் மூளையாக பாட்டிங்கர் இருந்தார்.

வுஹான் ஆய்வக பொய்யின் மற்றொரு பத்திரிகை ஆதரவாளரான ஜோஷ் ரோகினுடைய வார்த்தைகளில், பாட்டிங்கரின் கருத்துக்கள் பைடன் நிர்வாகத்தில் வாழ்கின்றன என்பதாகும். 'பதவிக்குவரும் பைடென் நிர்வாகம், சீனா மீதான அரசாங்கத்தின் அணுகுமுறையில் பல மாற்றங்களைப் பாதுகாக்க அமைக்கப்பட்டது. பாட்டிங்கர், இதர ஒத்த எண்ணம் கொண்ட அதிகாரிகளுடன் சேர்ந்து இதனை செயல்படுத்த வேலை செய்தார்.'

எவ்வாறாயினும், கடந்த இரண்டு மாதங்களில், பைடென் நிர்வாகம் சீனாவுடனான அதன் மோதலை பாரியளவில் தீவிரப்படுத்தியுள்ளதோடு, கடந்த ஆண்டு இறுதியில் தைவானை நேரடியாக ஆயுதபாணியாக்கும் ஒரு மசோதாவைத் திணித்து, அமெரிக்கத் துருப்புக்களை இத்தீவிற்குள் கொண்டு வந்துள்ளது. அதே நேரம், அமெரிக்க வான் பரப்புக்குள் பறந்த, அனைத்து அறிகுறிகளாலும் அறியப்பட்ட ஒரு சீன ஆராய்ச்சி பலூன் மீது பைடன் நிர்வாகம் தாக்குதலையும் நடத்தியது.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கட்டுரையின் இடம், பொருள், மற்றும் அது பெற்ற ஒட்டுமொத்த ஊடக அறிக்கை ஆகியவை சீனாவிற்கு அருகே இந்த அச்சுறுத்தும் மற்றும் ஆக்கிரோஷமான இராணுவக் கட்டமைப்பை நியாயப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

கோவிட்-19-இன் 1 மில்லியன் அமெரிக்கர்களின் மரணங்களுக்கு, சீனா மற்றும் முன்னணி விஞ்ஞானிகளை பலிக்கடா ஆக்குவதற்கு, பைடென் நிர்வாகம் மற்றும் அமெரிக்க ஊடகங்களால் ஊக்குவிக்கப்படும் இனவாதப் பொய்களை, சுயமாக சிந்திக்கும் மக்கள் அனைவரும் நிராகரிப்பார்கள். அதே நேரம், ட்ரம்ப் மற்றும் பைடன் ஆகிய இருவரின் கீழ் பொது சுகாதாரத்தை தனியார் இலாபத்திற்கு அடிபணியச் செய்ததன் காரணமாகவே இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Loading