கிறிஸ் ஹெட்ஜஸ் மற்றும் பாசிச வலது குறித்து 

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

இந்த கட்டுரை முதலில் ட்விட்டரில் ஒரு நூலாக வெளியிடப்பட்டது.

அமெரிக்க பாசிஸ்டுகள் என்ற தனது புத்தகத்தில், கிறிஸ் ஹெட்ஜஸ் பாசிச வலதுசாரிகளுடனான பேச்சுவார்த்தைகளை கண்டித்ததோடு, அவர்கள் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டவர்கள், ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள், 'சுய அழிவில் இருக்கிறார்கள்' என்று எழுதினார். இன்று, அதே ஹெட்ஜஸ் 'அரசியல் முதிர்ச்சியுடன்' நவ-நாஜிக்களிடம் சரணடைந்ததை நியாயப்படுத்துகிறார்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

ஜனவரி 16, 2018 அன்று, இணைய தணிக்கை பிரச்சினை மற்றும் அமெரிக்காவில் அரசியல் நெருக்கடி குறித்து ஹெட்ஜஸ் மற்றும் நானும் ஒரு மணிநேர இணையவழி கலந்துரையாடலை நடத்தினோம். கடந்த ஐந்து வருடங்களில், ஹெட்ஜஸ் எவ்வளவு தூரம் வலது நோக்கி நகர்ந்துள்ளார் என்பதைப் இதன்மூலம் பாருங்கள்.

சுமார் 55 நிமிடங்கள் நடந்த இந்தக் கலந்துரையாடலில், போர், தணிக்கை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அனைத்து தாக்குதல்களுக்கும் எதிராக சோசலிஸ்டுகள் மற்றும் இடது-முற்போக்கு சக்திகளின் ஒன்றுபட்ட நடவடிக்கையை நான் முன்மொழிந்தேன். ஹெட்ஜஸ் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டார். அவர் மார்க்ஸ் மற்றும் ட்ரொட்ஸ்கியைப் பற்றிய வாசிப்பைக் கூட வலியுறுத்தினார்!

இந்த கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஹெட்ஜஸ் தனது “தொடர்பு” என்ற நேர்காணல் நிக்ழ்ச்சியில் என்னை தோன்றும்படி அழைத்தார். ஆனால், அந்த நேர்காணலுக்குப் பிறகு, வலது சக்திகளின் வெளிப்படையான அழுத்தத்தில், பாரியளவில் மனச்சோர்வடைந்த ஹெட்ஜஸ், பிற்போக்கு இயக்கமான, அமெரிக்காவை மீண்டும் பெரியதாக உருவாக்குங்கள் (MAGA) என்பதை நோக்கி தன்னை நோக்குநிலைப்படுத்தத் தொடங்கினார்.

எனவே, இப்போது அவர் பாசிஸ்டுகளுடன் கூட்டு நடவடிக்கையை ஆதரிக்கும் நிலையை அடைந்துவிட்டார். இது, திறமையான, முன்னர் இடதுசாரி மற்றும் கொள்கை ரீதியான பத்திரிகையாளரின் பரிதாபகரமான சீரழிவாகும்.

Loading