முன்னோக்கு

வெள்ளை மாளிகையும் அமெரிக்க ஊடகங்களும் வூஹான் ஆய்வக பொய்யைப் புதுப்பிக்கின்றன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

'கோவிட்-19 பெருந்தொற்று வூஹானில் ஓர் ஆய்வக சம்பவத்தில் உருவாகி இருக்க மிக அதிக வாய்ப்புள்ளது,” என்று அமெரிக்க மத்தியப் புலனாய்வுத்துறை (FBI) இயக்குனர் கிறிஸ்டோபர் ரே செவ்வாய்கிழமை பகிரங்கமாக வலியுறுத்தினார்.

கோவிட்-19 பெருந்தொற்றுக்குச் சீனா தான் காரணம் என்று கூறி, முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் அவரது வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோவும் ஆதாரமின்றி முன்வைத்த சதிக் கோட்பாடான வூஹான் ஆய்வகப் பொய்க்கு பகிரங்கமாகத் தனது ஆதரவை வலியுறுத்தி இருப்பதில் ரே, பைடென் நிர்வாகத்தின் முதல் அதிகாரி ஆவார்.

ஈராக்கில் 'பேரழிவுகரமான ஆயுதங்கள்' இருப்பதாக புஷ் நிர்வாகத்தின் பொய்களை இழிவான முறையில் பரப்பிய மதிப்பிழந்த பத்திரிகையாளர் மைக்கெல் ஆர். கோர்டனின் ஒரு கட்டுரை, ரேயின் அறிக்கைக்கு முன்னதாக, அந்த ஆய்வக பொய்க்கு எரிசக்தித்துறை ஆதரவு தெரிவித்திருப்பதாக வாதிட்டது. CNN, NBC News மற்றும் நியூ யோர்க் டைம்ஸ் ஆகியவற்றில் பேசும், அனேகமாக வெள்ளை மாளியைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடிய பிற 'அமெரிக்க அதிகாரிகளும்' கோர்டனின் வலியுறுத்தல்களை ஆதரித்திருந்தனர்.

ஈராக் மீதான சட்டவிரோத படையெடுப்புக்கு ஒரு நியாயப்பாட்டை உருவாக்குவதற்கான புஷ் நிர்வாகத்தின் முயற்சிகளில், அமெரிக்க புலனாய்வுத் துறை அமைப்புகள் பொதுமக்களிடம் பொய்யான வாதங்களை ஜோடிக்கும் பணியில் முடுக்கி விடப்பட்டிருந்தன. இந்த நிலையில், அதைப் போலவே, அமெரிக்க அரசாங்கத்திற்குள் வூஹான் ஆய்வக சதிக் கோட்பாட்டை அறிவுறுத்துபவர்களும் நனவுப்பூர்வமாக வேண்டுமென்றே பொய்யுரைத்து வருகிறார்கள்.

கோவிட்-19 இயற்கையாக உருவானது என்பது நன்கு நிறுவப்பட்டுள்ளதுடன், இந்தச் சதிக் கோட்பாட்டை எதிர்ப்பதில் நுண்ணுயிரியியல் வல்லுனர்களிடையே பெருவாரியான கருத்தொற்றுமை உள்ளது என்ற உண்மையைப் புறக்கணிக்கும் ஊடகங்கள், இத்தகைய பொய்களைப் பின்னர் ஒருமித்த விஞ்ஞானப்பூர்வ கருத்தாகப் பொதுமக்களிடையே கொண்டு செல்லும்.

ரேயின் பகிரங்க அறிக்கையானது, 'அமெரிக்காவுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான மூலோபாய போட்டிக்கான தேர்வுக் குழுவின்' இருகட்சிகளது விசாரணை நடந்த அதே நாளில் வந்திருந்தது. இந்த விசாரணையில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனாவுக்கு எதிராக பைடென் நிர்வாகத்தின் வர்த்தகப் போர் மற்றும் இராணுவ விரிவாக்கத்திற்கு, தமது ஆதரவை வெளிப்படுத்த அணிதிரண்டனர்.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அக்குழுவின் தலைவர் மைக் கல்லாகர், தனது தொடக்க உரையில், சீனா உடனான அமெரிக்காவின் 'போட்டி' 'பண்பான விதத்தில் இருக்காது' என்று கூறிய அவர், பெய்ஜிங்குடனான அமெரிக்க மோதலை '21 ஆம் நூற்றாண்டில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது மீதான உயிர்பிழைப்புக்கான போராட்டம்' என்று குறிப்பிட்டார்.

சீனாவிடமிருந்து பொருளாதாரத்தை 'துண்டிக்கும்' ட்ரம்ப் நிர்வாக திட்டத்திற்குச் சிற்பியாக இருந்த மத்தேயு பொட்டிங்கர் தான் அந்த விசாரணையில் முக்கிய சாட்சியாக இருந்தார். இந்தத் திட்டம் பைடெனின் கீழ் தொடர்ந்து விரிவாக்கப்பட்டுள்ளது.

'மொத்த அமெரிக்க அரசாங்கத்தில் உள்ள மிக முக்கியமானவர்களில் ஒருவர்' என்று கூறப்படுகின்ற பாசிச சித்தாந்தவாதியான ஸ்டீவ் பானனால் பாராட்டப்பட்ட பொட்டிங்கர், ட்ரம்ப் நிர்வாகத்திற்குள் இருந்து இந்த வூஹான் ஆய்வக சதிக் கோட்பாட்டைப் பகிரங்கமாக அறிவுறுத்திய முன்னனி பிரபலங்களில் ஒருவராவார்.

எதிர்வரவிருக்கும் மாதங்களில், அந்தக் குழு வூஹான் ஆய்வக சதிக் கோட்பாடுகளை வெளிப்படையாக பரப்பும் பல தொடர்ச்சியான கூட்டங்களை நடத்துமென எதிர்பார்க்கப்படுகிறது. அதன் தலையாய சாதனையாக, அது தேசவிரோத இரகசிய நடவடிக்கைகள் மீதான பிரதிநிதிகள் சபையின் குழுவை (HUAC) மீண்டும் தொடங்குவதற்கு முன்னர், டாக்டர் ஆண்டனி பௌசி, டாக்டர் பீட்டர் டாஸ்ஸாக் இன்னும் பலரையும் உள்ளிழுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

வூஹான் ஆய்வக பொய்யைப் புதுப்பித்து பரப்புவது, அதன் மீதான போரை நியாயப்படுத்துவதற்காக சீனாவைப் பூதாகரமாகக் காட்டி பொதுமக்கள் கருத்தில் நஞ்சூட்டும் ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தின் ஒரு அம்சமாகும். இந்தப் பிரச்சாரத்தின் சமீபத்திய கட்டம் கடந்த மாதம் தொடங்கியது. அப்போது பைடென் நிர்வாகம், அமெரிக்காவின் மீது தற்செயலாக பறந்த ஒரு சீன ஆராய்ச்சி பலூனை அமெரிக்க அணுசக்தி ஆலைகளை உளவுபார்ப்பதாகக் கூறியது. பின்னர் ஒன்று விடாமல் ஊடகங்களில் நடந்து வந்த சீன-விரோத விஷமப் பிரச்சாரத்திற்கு மத்தியில், முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசாங்கம் அதைச் சுட்டு வீழ்த்தும் நடவடிக்கையை எடுத்தது.

பானனும் மற்றும் சீனாவில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் தங்கியுள்ள அவரது கூட்டாளிகளும் வூஹான் ஆய்வக சதிக் கோட்பாட்டை உருவாக்கியதில் இருந்து இந்த மூன்று ஆண்டுகளில், இயற்கையாக உருவான Sars-CoV-2 இன் ஒரு வகை தற்செயலாக வெளிப்பட்டது என்பதற்கோ அல்லது அந்த நோய் திட்டமிட்டு மரபணு மாற்றம் மூலம் செய்யப்பட்டது என்பதற்கோ எந்த ஆதாரமும் வெளிவரவில்லை.

இதற்கு நேர்மாறாக, கடந்த மூன்றாண்டுகளாக SAR-CoV-2 இயற்கையாக உருவானது என்பதற்கான ஆதாரங்கள் கணிசமாக வந்துள்ளன. 'வெளிப்படும் எந்தவொரு வைரஸ் குறித்தும் நம்மிடம் இருக்கும் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாக இந்த ஆதாரங்கள் உள்ளன,” என்று பரிணாமத்துறை உயிரியியல் நிபுணர் மைக்கேல் வொரோபே NPR க்கு கூறினார். 'இந்த வைரஸ் பெருந்தொற்று இயற்கையாக உருவானதை ஆதரிக்கும் நிஜமான ஆராய்ச்சி கட்டுரைகளைத் தவிர, விஞ்ஞான இலக்கியத்தில் இன்றியமையாத வேறெதுவும் இல்லை,” என்று வொரோபே அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கூறினார்.

'கோவிட்-19 இயற்கையாக உருவானது என்று உணர்வே விஞ்ஞான சமூகத்தில் பெருவாரியாக மேலோங்கி உள்ளது,” என்று தடுப்பூசித்துறை நிபுணர் டாக்டர் பீட்டர் ஹோடெஸ் ABC News க்கு கூறினார்.

[twitter]

https://twitter.com/ABCNewsLive/status/1630307307379646465?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1630307307379646465%7Ctwgr%5E4c563582e6765ac0352183e618d646906d927123%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.wsws.org%2Fen%2Farticles%2F2023%2F03%2F02%2Fgvhy-m02.html

[/twitter]

கடந்த மூன்றாண்டுகளில், மாட் ரிட்லி, அலினா சான் மற்றும் ரிச்சர்ட் எப்ரைட் உட்பட வூஹான் ஆய்வக பொய்யை அறிவுறுத்துபவர்களில் முன்னணியில் உள்ளவர்களிடம் இது பற்றி வலியுறுத்தி கேட்கப்பட்ட போது, எப்ரைட்டின் வார்த்தைகளில் கூறினால், ஏதோவொன்றைச் சுட்டிக்காட்ட 'புதிய விஞ்ஞானப்பூர்வ ஆதாரமோ அல்லது பிற நம்பத்தகுந்த ஆதாரமோ இல்லை' என்பதால், அவர்கள் எந்த விதமான சதிக் கோட்பாட்டை அறிவுறுத்துகிறார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார்.

ஆனால் ஜூலை 2022 இல், மைக்கேல் வொரோபே மற்றும் கிறிஸ்டியன் ஜி. ஆண்டர்சனும் Nature இதழில் ஓர் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டனர். அது, வூஹான் திறந்தவெளி மாமிச சந்தையைச் சுற்றியே கோவிட்-19 இன் ஆரம்ப வெடிப்பு இறுக்கமாக குவிந்திருந்ததை எடுத்துக்காட்டியது. மிருகங்களை வைத்திருந்த அந்தக் கடைகளும், அவற்றைப் பதப்படுத்த பயன்படுத்தப்பட்ட சாதனங்களும், கோவிட்-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ் இருக்கிறதா என்ற பரிசோதனையில் வைரஸ் இருப்பதைக் காட்டியதாக அந்தக் கட்டுரை விவரித்தது.

அந்த கட்டுரை வெளியானதைத் தொடர்ந்து, அமெரிக்க அரசாங்கத்தால் சதிக் கோட்பாட்டை தொடர்ந்து அறிவுறுத்த ஏறக்குறைய சாத்தியமில்லாமல் இருந்ததாகத் தெரிந்தது.

ஆனால் விஞ்ஞானத்திற்கும் அமெரிக்க அரசாங்கம் வூஹான் ஆய்வக பொய்யை அறிவுறுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது, உளவுத்துறை அமைப்புகளின் நிபுணத்துவம் பெற்றுள்ள போர் பிரச்சாரம் மற்றும் பொய்யான தகவலின் ஒரு பகுதியாக உள்ளது. அமெரிக்க முதலாளித்துவத்திற்கு எதிரான இடதுசாரி எதிர்ப்பாளர்களைத் தொல்லைப்படுத்தவும் மிரட்டவும் ஜே. எட்கர் ஹூவர் நிறுவிய அமைப்பான மத்திய புலனாய்வுத்துறை அமைப்புக்கு (FBI) நோய்களின் தோற்றம் பற்றி ஆராயும் தொழில் இல்லை.

FBI அமைப்பு, COINTELPRO திட்டத்தின் கீழ், கொள்ளைகள், சட்டவிரோத உளவுவேலைகள், மிரட்டல்கள் மற்றும் கொலை அச்சுறுத்தல்களை மேற்கொண்டது. அது டாக்டர் மார்ட்டின் லூதர் கிங்கை 'இல்லாதொழிக்க' 'எதற்கும் தடையில்லா' முயற்சியை மேற்கொண்டது. 'FBI பயன்படுத்திய தந்திரோபாயங்கள்' 'சட்டவிரோதமானவை' என்பதோடு, 'ஒரு சுதந்திர சமூகத்தை சர்ச்சைக்கிடமின்றி இழிவுபடுத்துவதாக' Church Committee  அதன் இறுதி அறிக்கையில் முடிவிற்கு வந்தது.

இப்போது, FBI அதன் பிரபலமான 'அழுக்கமிக்க தந்திரோபாயங்களில் மற்றொன்றை தொடங்கி உள்ளது. அது, இராணுவ வெற்றிக்காக அமெரிக்காவின் இலக்கில் வைக்கப்பட்டுள்ள ஒரு நாட்டின் மீது கோவிட்-19 பெருந்தொற்றின் பழியைச் சுமத்த முயன்று வருகிறது.

வூஹான் ஆய்வகப் பொய்யை FBI பகிரங்கமாக அறிவுறுத்துவது பத்திரிகையாளர் க்ளென் கிரீன்வால்ட், நகைச்சுவை நடிகர் ஜிம்மி டோர் மற்றும் Grayzone இன் பத்திரிகையாளர்கள் மேக்ஸ் புளூமெண்தல் மற்றும் ஆரோன் மேட் போன்றவர்களையும் அம்பலப்படுத்தி உள்ளது. இவர்கள் இன்னும் அதிக பகிரங்கமாக பாசிச வலதை நோக்கி நோக்குநிலை எடுத்து வருகிறார்கள்.

வெகுஜனங்களுக்கு தொற்றுநோய் ஏற்படுத்துவதை அவர்கள் பகிரங்கமாக ஆதரித்ததுடன் சேர்ந்து, கோவிட்-19 பெருந்தொற்றை உருவாக்கியதற்காக EcoHealth Alliance அமைப்பின் டாக்டர் பீட்டர் டஸ்ஸாக் மற்றும் வூஹான் நுண்கிருமியியல் பயிலகத்தின் ஷி ஜெங்லி உட்பட விஞ்ஞானிகளைப் பலிக்கடாவாக்க முனைந்துள்ளனர்.

வூஹான் ஆய்வக சதிக் கோட்பாட்டை அறிவுறுத்துபவரான பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாச்ஸ் உடன் ஒரு உற்சாகமான நேர்காணலில் கடந்த அக்டோபரில் புளூமெண்தல் கூறுகையில், “EcoHealth Alliance அமைப்பு … கோவிட் உருவாவதற்கு முக்கிய பொறுப்பாளியாக உள்ள வூஹான் நுண்கிருமியியல் பயிலகத்திற்கு நிதியுதவி வழங்கும் USAID திட்டம் மற்றும் பென்டகனின் DARPA திட்டத்திற்கான வடிகாலாக இருந்தது,” என்றார்.

குறிப்பாக கடந்த ஆண்டில், புளூமெண்தல் மற்றும் மேட் இருவரும் கிரேட் பேரிங்டன் பிரகடனத்தை எழுதிய முக்கிய பிரமுகர்களான ஜே பட்டாச்சார்யா மற்றும் மார்டீன் குல்டோர்ஃப் ஆகியோரை ஊக்குவித்து, இந்த பெருந்தொற்று மீதான அதிவலது கொள்கையை முழுமையாக தழுவி உள்ளனர். இந்தப் பிரகடனம் தான் ட்ரம்பின் கீழும் பின்னர் பைடெனின் கீழும் கோவிட்-19 கொள்கையின் முன்மாதிரியாக சேவையாற்றி, 1 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்படுவதற்கு வழிவகுத்தது.

இவர்கள் தான், கடந்த மாதம், 'இடது-வலது' ஒற்றுமை என்ற அடிப்படையில் ஒரு 'போர்-எதிர்ப்பு' பேரணியை ஏற்பாடு செய்தார்கள். பாசிச வலதுடனான ஒற்றுமையின் அடிப்படையில் ஒரு போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைக்க முடியாது என்று விளங்கப்படுத்தி, உலக சோசலிச வலைத்தளம் அந்தப் பேரணியை எதிர்த்தது.

வூஹான் ஆய்வக சதிக் கோட்பாட்டை FBI பகிரங்கமாக தழுவும் நிலையில், இவர்கள் சீனாவுடனான ஓர் அமெரிக்கப் போரை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்படும் பொய்க்குப் பிரச்சாரகர்களாக அம்பலமாகிறார்கள்.

சீனாவுடன் அதிகரித்து வரும் அமெரிக்க மோதல், தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான அவசரத் தேவையை எழுப்புகிறது. இந்த இயக்கம் இந்தப் பெருந்தொற்றுக்கான ஒரு விஞ்ஞானப்பூர்வ பதிலைப் பாதுகாப்பதோடும், கோவிட்-19 நோய்தொற்றுக்கள் ஏற்படுவதைத் தடுத்து இறுதியில் இந்நோயை அகற்றி முற்றிலுமாக ஒழிக்கும் போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். இந்தப் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டமானது, பாதுகாப்பற்ற மற்றும் நெரிசலான பணியிடங்களில் தொடர்ந்து முதலாளிகளால் இந்த வைரஸ் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வரும் தொழிலாளர்களின் ஒரு முக்கிய சமூகக் கோரிக்கையாகும். முதலாளிகள் இந்த நோய் வெடிப்புகளை மூடிமறைத்து தொழிலாளர்கள் நோய்தொற்று பாதிப்புக்கு ஆளாகி இருந்தாலும் கூட அவர்களை வேலை செய்ய வைக்கின்றனர்.

இந்தப் பாசிச வேட்டையாடுபவர்களிடம் இருந்தும் அவர்களின் அனுதாபிகளிடம் இருந்தும் விஞ்ஞானிகளைப் பாதுகாப்பது இந்தப் போராட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாகும்.

Loading