நெதன்யாகுவுக்கு எதிரான எதிர்ப்பு அதிகரிக்கையில், இஸ்ரேலின் பாசிச மந்திரி ஸ்மோட்ரிச், ஹுவாரா நகரம் அழிக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வடக்கு மேற்குக் கரை நகரமான நப்லஸ் அருகே ஹுவாரா மற்றும் பிற பாலஸ்தீனிய கிராமங்கள் மீது ஞாயிற்றுக்கிழமை நடந்த இனப்படுகொலை-பாணி தாக்குதலைத் தொடர்ந்து, பாசிச இஸ்ரேலிய அமைச்சர்கள் பாலஸ்தீனியர்கள் மீதான தீமூட்டும் தாக்குதல்களை முடுக்கி விட்டுள்ளனர்.

நூற்றுக்கணக்கான குடியேற்றவாசிகள், சிலர் முகமூடி மற்றும் ஆயுதம் தரித்தபடி வெறித்தனமாகச் சென்று, பாலஸ்தீனியர்களின் வீடுகள், கடைகள், கார்கள், சொத்துக்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு தீ வைத்தனர். அதில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 120 பேர் காயமடைந்ததுடன், குறைந்தது 35 வீடுகள் அழிக்கப்பட்டன, மேலும் 40 வீடுகள் சேதமடைந்தன. 400 க்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் விவசாய சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன. அதனால் நகரத்தை மணிக்கணக்கில் புகைமூட்டம் பிடித்திருந்தது.

மார்ச் 1, 2023 புதன்கிழமை, மேற்குக் கரை நகரமான நப்லஸுக்கு அருகிலுள்ள ஹவாராவில் குடியேற்றவாசிகள் நடத்திய வெறியாட்டத்தின் போது எரிக்கப்பட்ட வாகனங்களினால் சேதமடைந்த பகுதியில் இஸ்ரேலிய படையினர்கள் ரோந்து செல்கின்றனர். [AP Photo/Majdi Mohammed]

சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்படி பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க இஸ்ரேலிய படையினர்கள் எதுவும் செய்யவில்லை. அடுத்த நாள், பாலஸ்தீனியர்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும், கடைகளை மூடுமாறும் இராணுவம் கட்டளையிட்டு, குடியேற்றவாசிகளை ஜெருசலேம் போஸ்ட் 'பேய் நகரம்' என்று வர்ணித்த தெருக்களில் சுற்றித் திரிய அனுமதித்தது.

பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவோ அல்லது அவரது அமைச்சரவை அமைச்சர்கள் எவரும் இத்தாக்குதலைக் கண்டிக்கவில்லை. 'சட்டத்தை நம் கைகளில் எடுப்பது எங்கள் வழி அல்ல' என்று வெறுமனே கூறினர்.

பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, இஸ்ரேலிய அதிகாரிகள் ஒரு சிலரைக் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் பின்பு விடுவிக்கப்பட்டனர். ஒருவருக்கு மட்டும் நான்கு நாட்கள் வீட்டுக் காவல் தண்டணை விதிக்கப்பட்டது.

தீவிர வலதுசாரிக் கட்சித் தலைவர்கள் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளுக்கு (IDF) மேற்குக் கரையில் இனச் சுத்திகரிப்பு அல்லது பாலஸ்தீனியர்கள் அழைப்பது போல் இரண்டாவது 'நக்பா' என்ற வெளிப்படையான அழைப்பின் மூலம் பாலஸ்தீனியர்களை அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றுமாறு அழைப்பு விடுத்துள்ளனர். இஸ்ரேலுக்கும் அதன் அரபு அண்டை நாடுகளுக்கும் இடையே 1948-49 போருக்கு முன்னும் பின்னும் குறைந்தது 700,000 பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்த வெறியாட்டம் பற்றி விவாதிக்க எதிர்க்கட்சி அழைப்பு விடுத்தபோதும், நெத்தன்யாகுவின் தீவிர வலதுசாரிக் கட்சிகள் மற்றும் மதக் கூட்டணிக் கட்சிகள் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்கவில்லை

திங்களன்று, யூத சக்தி அமைப்பின் ஸ்விகா ஃபோகல் பின்வருமாறு அறிவித்தார். “நேற்று, ஹுவாராவில் இருந்து ஒரு பயங்கரவாதி வந்தான்-ஹுவாரா மூடப்பட்டு எரிக்கப்பட்டது. அதைத்தான் நான் பார்க்க விரும்புகிறேன். அதனால்தான் நாம் தடுப்பைப் பெற முடியும். ஞாயிற்றுக்கிழமை முன்னதாக அண்டையிலுள்ள குடியேற்றத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் நகரத்தின் வழியாகச் வாகனத்தில் சென்றபோது கொல்லப்பட்டதைக் குறித்து அவர் குறிப்பிடுகிறார்.

1967 அரபு-இஸ்ரேலியப் போருக்குப் பின்னர் இஸ்ரேலால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையின் பொது நிர்வாகத்திற்கான பொறுப்பு வழங்கப்பட்ட மத சியோனிசத் தலைவரும் நிதி அமைச்சருமான பெஸாலெல் ஸ்மோட்ரிச் இஸ்ரேல் ஹுவாராவை 'அழிக்க வேண்டும்' என்றார். 7,000 பாலஸ்தீனியர்கள் வசிக்கும் ஹுவாரா கிட்டத்தட்ட இஸ்ரேலிய குடியேற்றங்களால் சூழப்பட்டுள்ளதோடு, ஒரு குடியேற்றவாசிகளின் சாலையால் பிரிக்கப்பட்டுள்ளது.

“பாலஸ்தீனத்தின் ஹுவாரா கிராமம் அழிக்கப்பட வேண்டும். அரசு அதைச் செய்ய வேண்டும், தனிப்பட்ட குடிமக்கள் அல்ல” என்று ஸ்மோட்ரிச் கூறினார்.

தாக்குதலுக்கு முன், ஸ்மோட்ரிச், சமாரியா பிராந்திய குழுவின் துணைத் தலைவரான டேவிட் பென்-சியோனின் அறிக்கைக்கு தனது ஆதரவை ட்வீட் செய்து, ஹுவாரா அழிக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். பின்னர் அவர் தனது கருத்துக்கள் உள்ளடக்கத்திலிருந்து பிரித்து எடுத்துக்காட்டப்பட்டதாக புகார் அளித்து, அவரது ட்வீட்டை நீக்கினார். இது அரசாங்கத்தின் பொறுப்பு என்று வலியுறுத்தினார்.

இது 'போர்க்குற்றங்களைத் தூண்டியதற்காக' ஸ்மோட்ரிச் மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகளை விசாரிக்க அரச வழக்குத்தொடுனருக்கு அழைப்பு விடுக்க இஸ்ரேலிய மனித உரிமை வழக்கறிஞர்கள் குழுவைத் தூண்டியது. ஹுவாராவில் பாலஸ்தீனியர்களுக்கான இணையவழி கையெழுத்து சேகரிப்புகளும், வாரத்தின் முற்பகுதியில் படுகொலைகளை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களும் நடந்துள்ளன.

புதனன்று, நீதித்துறையை செயலிழக்கவைக்கும் சர்வாதிகார அதிகாரங்களைப் பெறுவதற்கான அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இஸ்ரேலிய தொழிலாளர்களின் வெகுஜன வெளிநடப்பும், டெல்-அவிவ், ஜெருசலேம் மற்றும் பிற நகரங்கள் மற்றும் நகரங்களில் 'தேசிய சீர்குலைவு தினம்' என்று அழைக்கப்படும் ஒரு நடவடிக்கை நாளில் பெரும் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றன.  இது நாடு முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் நகரங்களில் சனி-இரவு வெகுஜன பேரணிகளின் எட்டு வாரங்களைத் தொடர்ந்து பலமாக வளர்ந்து வருகிறது.

ஏப்ரல் 2 ஆம் தேதி பாராளுமன்றம் இடைவேளைக்கு செல்லும் முன் சட்டமாக மாற்றப்படும் முன்மொழியப்பட்ட சட்டம், உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க அரசாங்கத்தை அனுமதிக்கும் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகளை மீறும் அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு வழங்கும். இது அரசாங்கத்திற்கு ஜனநாயக உரிமைகள் மீது கட்டுப்படுத்துவதற்கான பாதையை மென்மையாக்குவதுடன் மற்றும் நாட்டிற்குள் மதத்தின் பங்கை வலுப்படுத்த தீவிர மரபுவழி மற்றும் மத சியோனிச குழுக்களுக்கு உதவும். மேற்குக் கரை முழுவதும் தங்கள் இருப்பை விரிவுபடுத்தும் முயற்சியில் தீவிர-தேசியவாத குடியேற்ற இயக்கத்தின் மீது மீதமுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் இது அகற்றும்.

இந்த நடவடிக்கைகள் சட்டமாக மாறினால், உச்ச நீதிமன்றம் அவை அரசியலமைப்பிற்கு முரணானது என்று தீர்ப்பளிக்க வாய்ப்புள்ளது. இது சியோனிச அரசு நிறுவப்பட்ட 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் கொண்டாட்டங்களுக்கு முன்னதாக ஒரு பெரிய அரசியல் நெருக்கடியைத் தூண்டும்.

மூன்று முறை தண்டனை பெற்ற ஷாஸ் கட்சித் தலைவர் ஆர்யே டெரி, உயர் நீதிமன்றத் தீர்ப்பை மீறி, அரசாங்க அமைச்சராகப் பணியாற்றுவதற்கான சட்டத்தையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் ஊழல் குற்றச்சாட்டில் பதவியில் இருந்து நீக்கப்பட்ட தற்போது நீதிமன்றத்தில் இருக்கும் ஊழலில் சிக்கித் தவிக்கும் நெதன்யாகுவைத் பாதுகாக்கும் மசோதாவை அறிமுகப்படுத்த உள்ளது. இது அவரது ஊழல் வழக்கு விசாரணைக்கும் நீதித்துறையை மழுங்கடிக்கும் திட்டங்களில் அவர் ஈடுபட்டதற்கும் இடையே உள்ள 'நலன்களின் மோதல்' காரணமாக   அவரை 'பதவிக்கு தகுதியற்றவர்' என்று பொது கட்டுப்பாட்டாளர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய தீர்ப்பு ஒரு அரசியலமைப்பு நெருக்கடியை துரிதப்படுத்தலாம். இதனால்  இராணுவம் மற்றும் உளவுத்துறை சேவைகள் பிரதமரிடமிருந்து உத்தரவுகளைப் பெறமுடியாது.

நாடாளுமன்றக் குழுக்கள் நெதன்யாகுவின் வீடுகள் மற்றும் தனிப்பட்ட செலவினங்களுக்கு கூடுதல் நிதியளிக்க தலையசைத்துள்ளன. அதே நேரத்தில் தீவிர வலதுசாரிக் கட்சிகளின் விருப்பமான திட்டங்கள் மற்றும் கூட்டாளிகளுக்கு தினசரி அடிப்படையில் இவை ஒப்புதல் அளித்தமை பொதுமக்களின் கோபத்தைத் தூண்டியது.

புதனன்று நூற்றுக்கணக்கான பொலிசார் டெல் அவிவில் ஆர்ப்பாட்டத்தை கலைக்க முயன்றபோது பதற்றம் சூழ்ந்தது. எதிர்ப்பாளர்களுக்கு எதிராக கண்ணீர்ப்புகை கையெறி குண்டுகள் மற்றும் தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தி அவர்களை சாலையில் இருந்து இழுத்துச் சென்றனர். சவுதியின் வெளியீடான அரபு நியூஸ், 'ஜனநாயகம்,' 'காவல் அரசும்' மற்றும் 'நீங்கள் எங்கே இருந்தீர்கள்?' என்ற முழக்கங்களுடன் காவல்துறையைச் மக்கள் சந்தித்ததாகக் கூறியது. இது ஹுவாராவில் குடியேறியவர்களுக்கு எதிராக படையினர்  அல்லது எல்லைப் பொலிசார் நடவடிக்கை எடுக்க மறுத்ததைக் குறிப்பிடுகிறது. 

டைம்ஸ் ஒப் இஸ்ரேல் செய்தி ஸ்தாபனம், “ஜெருசலேமின் சுற்றுப்புறமான ரெஹாவியாவில், நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் பிரதமரின் இல்லத்தை நோக்கி அணிவகுத்துச் சென்று சாலையை மறிக்க முயன்றபோது காவல்துறையினரால் தடுக்கப்பட்டனர். டசின் கணக்கானவர்கள், 'ஹுவாராவில் நீங்கள் எங்கே இருந்தீர்கள்' என்று அதிகாரிகளிடம் கூச்சலிடுவது கேட்கப்படுகிறது…” என தகவல் வெளியிட்டுள்ளது.

ஒரு போலீஸ்காரர் ஒரு போராட்டக்காரரின் கழுத்தில் முழங்கால்களால் அழுத்திக்கொண்டிருக்க காணப்பட்டார். டெல் அவிவில் 42 பேர் உட்பட நாடு முழுவதும் குறைந்தது 71 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் 11 பேருக்கு அவசர மருத்துவ அவசர சிகிச்சை தேவைப்பட்டது. யூத சக்தியின் தலைவரும், தேசிய பாதுகாப்பு அமைச்சருமான  பென்-க்விர், அராஜகம் என்று அவர் குற்றம் சாட்டிய எதிர்ப்பாளர்களை கலைக்க 'கிடைக்கும் அனைத்து வழிகளையும் பயன்படுத்த வேண்டும்' என்று காவல்துறைக்கு உத்தரவிட்டதை அது பின்பற்றியது.

எதிர்க்கட்சித் தலைவர் ஜெயர் லாபிட்  அராஜகத்தை ஊக்குவிப்பதாக பென்-க்விர் குற்றம் சாட்டினார். மேலும் அவரையும் மற்ற தலைவர்களையும் காவல்துறைக்கு எதிராக தூண்டுவதை நிறுத்துமாறு அழைப்பு விடுத்தார்.

தங்கள் பங்கிற்கு, லாபிட் மற்றும் எதிர்கட்சியின் சியோனிசத் தலைவர்கள் இஸ்ரேலிய அரசைப் பாதுகாப்பதற்கான காவலர்களாக தங்களை முன்னெடுத்துச் செல்கின்றதுடன் தீவிர வலதுசாரிகளின் ஒத்த வார்த்தைகளை பேசுகின்றனர். 'ஒரு முழுமையான வலதுசாரி அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு, பாலஸ்தீனியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. பயங்கரவாதிகள் தலையை உயர்த்துகிறார்கள், இராணுவம் குழப்பமடைந்துள்ளது மற்றும் அதன் கட்டளைச் சங்கிலியைப் புரிந்து கொள்ளவில்லை.' என லாபிட் கூறுகின்றார்.

நெதன்யாகு பென்-க்விர் பொலிஸுக்கு வழங்கிய உத்தரவுகளை ஆதரித்து ஸ்மோட்ரிச்சின் கருத்துக்களை கூற மறுத்துவிட்டார். நாடு முழுவதும் எதிர்ப்பாளர்கள் அணிவகுத்துக்கொண்டிருந்தபோது புதன்கிழமை பேசிய அவர், அவர்களை அராஜகவாதிகள் என்றும் குற்றம் சாட்டி, மேலும் ஆர்ப்பாட்டங்களுக்கு 'வெளிநாட்டு பிரிவுகள்' நிதியளிப்பதாகக் கூறினார்.

நெத்தன்யாகுவின் தீவிர வலதுசாரி அரசாங்கம் முன்னெப்போதும் இல்லாத குழப்பங்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் துண்டுதுண்டாக உடையத் தொடங்குகிறது. மூத்த வழக்கறிஞர்கள், சட்ட வல்லுநர்கள், முன்னாள் ஜெனரல்கள், இஸ்ரேலின் உளவுத்துறைத் தலைவர்கள் மற்றும் வணிகத் தலைவர்களின் விமர்சனங்கள் மற்றும் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் சேவை செய்ய மறுப்பதாகக் கூறிய இராணுவ சேமப்பிரிவினர்களின் ஆர்ப்பாட்டங்களும், அத்துடன் வழக்கமான வெகுஜனப் போராட்டங்களும் இதில் அடங்கும். 9.3 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டில் 100,000க்கும் அதிகமான மக்கள் தொடர்ந்து வரும் சனிக்கிழமைகளில், வழக்கமான வெகுஜன எதிர்ப்பு போராட்டங்களில் கலந்துகொள்கின்றனர்.

மத சியோனிசம் தேர்தல் கூட்டணியின் ஒரு பகுதியான நோம் கட்சியின் தலைவரான அவி மோவாஸ் அரசாங்கத்தில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். நெதன்யாகு பொதுப் பள்ளிகளில் மதக் கல்வியை வலுப்படுத்துவதற்கான தனது ஆணையை செயல்படுத்த அனுமதிக்கவில்லை என்று புகார் கூறினார். சிறிது நாட்களின் பிறகு, மதவாதக் கட்சிகளில் ஒன்றின் மந்திரி, அதிதீவிரமான யூதர்களுக்கான நிதியுதவி தொடர்பாக நெதன்யாகுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது பதவிகளில் ஒன்றை இராஜினாமா செய்தார்.

Loading