ஸ்டாலின்: புரட்சியை குழிதோண்டி புதைத்தவர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

இந்த கட்டுரை முதலில் ட்விட்டரில் வெளியிடப்பட்டது.

எழுபது ஆண்டுகளுக்கு முன்பு, மார்ச் 5, 1953 இல், ஜோசப் ஸ்டாலின் தனது 73 வயதில் இறந்தார். 20 ஆம் நூற்றாண்டில் தொழிலாள வர்க்கத்தின் மோசமான தோல்விகளுக்கு ஒரு தனிநபரின் குற்றங்கள் மற்றும் துரோகங்கள் காரணமாக இருக்குமாயின், அந்த நபர் ஸ்டாலின் தான்.

1927 ஆம் ஆண்டிலேயே, ட்ரொட்ஸ்கி ஸ்டாலினை 'புரட்சிக்கு புதைகுழி தோண்டுபவர்' என்று அவரது முகத்திற்கு நேரேயே விவரித்தார். அந்த வார்த்தையின் மிக நேரடியான அர்த்தத்தில் அது உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஜோசப் ஸ்டாலின் 1943 இல் [AP Photo]

அக்டோபர் புரட்சியின் வெற்றிக்காகவும், சோவியத் ஒன்றியத்தின் உருவாக்கத்திற்காகவும், உலக சோசலிசத்தின் வெற்றிக்காகவும் போராடிய போல்ஷிவிக் கட்சியின் தலைவர்களையும், நூறாயிரக்கணக்கான சோசலிஸ்டுகளையும் கொல்ல உத்தரவிட்ட ஒரு வெகுஜன கொலைகாரனாக ஸ்டாலின் வரலாற்றில் நினைவு கூரப்படுகிறார்.

ஆனால் ஸ்டாலின் என்ற தனிமனிதர் ஒரு சாதாரணமானவர். அவரது  அதிகார உயர்வு போல்ஷிவிக் கட்சியின் அதிகாரத்துவச் சீரழிவுடன் முற்றிலும் பிணைந்திருந்தது. ஸ்ராலினிசம், சாராம்சத்தில், தொழிலாள வர்க்கத்திடம் இருந்து அரசியல் அதிகாரத்தை, அதிகாரத்துவம் கைப்பற்றியதன் விளைவாகும்.

அதிகாரத்துவம் ஸ்டாலினைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது, ஏனெனில் அதன் நலன்கள் மற்றும் சலுகைகளைப் பாதுகாக்கத் தேவையான தனிப்பட்ட மற்றும் அரசியல் பண்புகளை அவர் கொண்டிருந்தார், அதாவது இரக்கமற்ற தன்மை, தனிப்பட்ட அதிகாரத்திற்கான வெறி, மோசமான நடைமுறைவாதம் மற்றும் தேசியவாதக் கண்ணோட்டம் ஆகியவை.

அவரது அரசியல் கண்ணோட்டத்தின் பிந்தைய கூறு தீர்க்கமான முக்கியத்துவம் வாய்ந்தது. 1924 டிசம்பரில் முதன்முதலில் ஸ்டாலினால் முன்வைக்கப்பட்ட 'தனி ஒரு நாட்டில் சோசலிசம்' என்ற மார்க்சிச எதிர்ப்பு 'கோட்பாடு' ஸ்ராலினிசத்தின் வேலைத்திட்ட அடித்தளமாகும்.

மார்க்சிசம் இவ்வாறாக தேசியவாத திருத்தல்வாதம் செய்யப்பட்டதனால், அது உலக சோசலிச புரட்சி வேலைத்திட்டம் கைவிடப்படுவதையும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை சோவியத் அதிகாரத்துவத்தின் தேசிய நலன்களுக்கு கீழ்ப்படிய செய்யப்படுவதையும் நியாயப்படுத்தியது. 

இது தான் ட்ரொட்ஸ்கி மீதான ஸ்ராலினிச தாக்குதலின் தத்துவார்த்த மற்றும் அரசியல் அடித்தளமாக இருந்தது, நிரந்தரப்புரட்சி தத்துவத்தை கண்டனம் செய்தல் மற்றும் சோவியத் அதிகாரத்துவத்தினால் தொழிலாள வர்க்கம் காட்டிக்கொடுக்கப்படுதல். 

ஸ்ராலினிச ஆட்சி 1933 இல் ஒரு எதிர்ப்புரட்சி சக்தியாக மாறியது. ஜேர்மனியில் ஹிட்லரின் நாஜிக்களின் வெற்றி - ஒரு அரசியல் பேரழிவு அதற்கு ஸ்ராலினும் ஸ்ராலினிசமும் பொறுப்பு – அது நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்ப ட்ரொட்ஸ்கி அழைப்பு விடுப்பதற்கு வழி வகுத்தது. 

ஸ்ராலினிசத்தின் எதிர்-புரட்சிகர பாத்திரம் பற்றிய ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வு - அவரது மாபெரும் படைப்பான காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சியில் (Revolution Betrayed இல்) ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது - வரலாற்றால் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஸ்ராலினிச ஆட்சி, தொழிலாள வர்க்கத்தால் தூக்கியெறியப்படாவிட்டால், முதலாளித்துவ மீட்சியில் முடிவடையும் என்று அதில் ட்ரொட்ஸ்கி எச்சரித்தார்.

ஸ்டாலினின் அரசியல் வாரிசுகள் -அதாவது, அவர் படுகொலை செய்த போல்ஷிவிக்குகளுக்குப் பதிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரத்துவ  கையாட்கள் -அரசியல் காட்டிக்கொடுப்புச் செயல்முறையைத் தொடர்ந்து செய்து முடித்தனர். சோவியத் யூனியன் 1991 இல் கலைக்கப்பட்டது, ஸ்டாலின் இறந்து வெறும் 38 ஆண்டுகளுக்குப் பிறகு அது நடந்தது.

'வரலாற்று விதிகள் அதிகாரத்துவ எந்திரத்தை விட மிகவும் சக்திவாய்ந்தவை' என்று ட்ரொட்ஸ்கி முன்கணித்து கூறினார். ஸ்ராலினிச  கட்டிடம் இடிபாடுகளின் ஒரு குவியல் தான். ஆனால் ட்ரொட்ஸ்கிச இயக்கம்  ஸ்தாபிக்கப்பட்டு நூற்றாண்டு நெருங்குகையில், நான்காம் அகிலம், உலகம் முழுவதும் வளர்ந்து வருகிறது.

Loading