சீன அதிகாரிகள்: அமெரிக்க போர் திட்டங்கள் பசிபிக்கில் "மோதலை" அச்சுறுத்துகின்றன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

சீனாவுக்கு எதிராக அமெரிக்காவின் வர்த்தகப் போர் மற்றும் இராணுவ விரிவாக்கத்திற்கு விடையிறுக்கும் வகையில், உலகின் இரண்டு மிகப் பெரிய பொருளாதாரங்களுக்கு இடையேயான உறவு 'தடம் புரண்டு' வருவதாக சீன அதிகாரிகள் எச்சரித்தனர்.

'அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் சீனாவை எல்லா விதத்திலும் அடக்கி, சுற்றி வளைத்து, அதன் மீதான ஒடுக்குதலை செயல்படுத்தி உள்ளன. இது எங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் கடும் சவால்களைக் கொண்டு வந்துள்ளது' என்று ஜி கூறினார்.

அவரைத் தொடர்ந்து செவ்வாய்கிழமை சீனாவின் புதிய வெளியுறவு மந்திரி குன் கேங், அமெரிக்கா அதன் போக்கை மாற்றாவிட்டால் 'நிச்சயமாக மோதலும் சண்டையும் இருக்கும்' என்று எச்சரித்தார்.

ஜூலை 28, 2022 இல் ரிம் ஆஃப் பசிபிக் இராணுவப் பயிற்சியின் போது Nimitz-ரக விமானந்தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் அணிவகுப்பில் பங்கேற்றிருந்தது [Photo: Canadian Armed Forces photo by Cpl. Djalma Vuong-De Ramos]

'அமெரிக்கா நிறுத்திக் கொள்ளாமல், மாறாக தவறான பாதையில் தொடர்ந்து வேகமாகச் சென்றால், எத்தனை பக்கச்சுவர்கள் இருந்தாலும் தடம் புரள்வதைத் தடுக்க முடியாது. நிச்சயமாக மோதலும் சண்டையும் ஏற்படும்.”

வர்த்தகப் போரின் மூலமாக சீனாவின் பொருளாதார வளர்ச்சியை முடக்குவது, பசிபிக் பகுதியில் அதன் இராணுவக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக தைவானை ஆயுதமயப்படுத்துவது, அமெரிக்க மக்களிடையே சீனாவைப் மூர்க்ககரமாகக் காட்டுவதற்காக இனவெறி மற்றும் வெளிநாட்டவர் விரோத பிரச்சாரத்தைத் தூண்டுவது போன்ற பலமுனைப் பிரச்சாரத்தை அமெரிக்கா கடந்தாண்டு செய்தது.

'மென்மையான' பலத்துடன் செய்யப்பட்டு வந்த இந்த நடவடிக்கைகள், எந்த சூழ்ச்சியும் இல்லாத ஓர் ஆராய்ச்சி பலூன் என்று சீனா கூறிய ஒன்று கடந்த மாதம் அமெரிக்கா மீது அடித்துச்செல்லப்பட்டபோது  சுட்டு வீழ்த்தியதால் கைகலப்பாக மாறியது. சீனா உளவுபார்ப்பதாக ஊடகங்களின் இடைவிடாத விஷமப் பிரச்சாரத்திற்குப் பின்புலத்தில் அந்த பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தது.

சீன அதிகாரிகளின் அறிக்கைகளுக்குப் பதிலளித்த தேசிய பாதுகாப்பு குழுவின் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி, 'இந்த இருதரப்பு உறவை நோக்கிய எங்களின் அடுத்தடுத்த அணுகுமுறையில், நாங்கள் மோதலை விரும்புகிறோம் என்று யாராவது யோசிக்க வழி வகுக்கும் என்பதற்கெல்லாம் அங்கே ஒன்றுமில்லை” என்று பதிலளித்தார்.

கிர்பியின் பகிரங்கமான அறிக்கைகள், உண்மையான அமெரிக்க இராணுவக் கோட்பாட்டுடன் முற்றிலும் முரண்படுகின்றன. இந்தக் கோட்பாடு, சமீபத்திய நேட்டோ மூலோபாய ஆவணத்தின் வார்த்தைகளில் கூறினால், அணு ஆயுதமேந்திய 'நேரடியான போட்டியாளர்களுடன்' முழு அளவிலான போருக்கு அமெரிக்கா தயாராக வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது.

“அணு ஆயுதமேந்திய நேரடி-போட்டியாளர்களுக்கு எதிரான அதிதீவிரமான, பன்முகப் போருக்கு…  நாங்கள்… முழு அளவிலான படைகளை வழங்குவோம்,” என்று ஜூன் 30 இல் வெளியிடப்பட்ட நேட்டோவின் மூலோபாய ஆவணம் அறிவிக்கிறது.

அமெரிக்கா ஒரு 'தீர்மானகரமான தசாப்தத்தின்' மத்தியில் இருப்பதாகவும், இதில் அந்நாடு '21 ஆம் நூற்றாண்டிற்கான போட்டியில் ஜெயித்தாக வேண்டும்' என்றும் கடந்த அக்டோபரில் பைடென் கூறினார்.

கடந்தாண்டு மார்ச் மாதம் பைடென் அறிவிக்கையில், உலகம் ஒரு 'புதிய உலக ஒழுங்கின்' விளிம்பில் இருப்பதாகவும், 'நாங்கள் தான் அதை வழி நடத்தியாக வேண்டும்' என்றும் அறிவித்தார்.

'2025 இல் நாம் போரில் இருப்போம் என்று என் உள்மனம் சொல்கிறது' என்று குறிப்பிட்டு விமான இயக்க கட்டளையகத்தின் தலைவர் ஜெனரல் மைக் மினிஹன் அவருடைய சக அதிகாரிகளுக்கு ஜனவரியில் ஒரு கடிதம் அனுப்பியதுடன், சீனாவுடனான ஒரு மோதலுக்குத் தயாராக அவர்களின் 'தனிப்பட்ட விவகாரங்களை' ஒழுங்குபடுத்திக் கொள்ளுமாறு அவர்களை வலியுறுத்தினார்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு மூலோபாயத்துடன் 2018 இல் முதன்முதலில் தொடங்கப்பட்ட 'வல்லரசு மோதல்' கோட்பாடு பெரும்பாலும் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தாமலேயே நடைமுறையில் கொண்டு வரப்பட்டுள்ள அதேவேளையில், ஒருபுறம் அமெரிக்கா மற்றும் நேட்டோவும், மறுபுறம் சீனா மற்றும் ரஷ்யாவும் என இரண்டு தரப்புக்கும் இடையிலான 'இருமுகப்பு போரின்' சாத்தியக்கூறைக் குறித்து ஊடகங்கள் இன்னும் அதிக வெளிப்படையாகவே பேசத் தொடங்கி உள்ளன.

ஈராக்கில் பேரழிவுகரமான ஆயுதங்கள் இருந்ததாக பொய்களைப் பரப்பிய இழிவான பிரச்சாரகர் மைக்கெல் ஆர். கோர்டன், 'சீனா மற்றும் ரஷ்யாவுடனான 'வல்லரசு' மோதல் சகாப்தத்திற்கு அமெரிக்கா இன்னும் தயாராகவில்லை' என்ற தலைப்பிலான ஒரு நீண்ட கட்டுரையில், சீனாவுடனான ஒரு போருக்கான தயாரிப்பில் அமெரிக்க இராணுவம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான போர் பயிற்சிகளை ஆவணப்படுத்துகிறார்.

தைவான் மீது சீனாவின் தரைவழி மற்றும் கடல்வழி தாக்குதலை உருவகப்படுத்தி கடந்தாண்டு வாஷிங்டன் சிந்தனைக் குழுவான மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் ஒரு போர் விளையாட்டை நடத்திய போது, அமெரிக்காவின் தரப்பில் கப்பலில் இருந்து ஏவப்படும் நீண்டதூர கப்பல் தகர்ப்பு ஏவுகணைகள் ஒரே வாரத்திற்குள் தீர்ந்து போய் விட்டன.

Godon’s article continued,

கோர்டனின் கட்டுரை பின்வருமாறு தொடர்ந்தது,

சீனாவுடனான ஒரு மோதலானது ரஷ்யாவுக்குக் கிழக்கு ஐரோப்பாவில் மேலதிக நடவடிக்கை எடுப்பதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தினால், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இருமுனைப் போரை நடத்த வேண்டியிருக்கும். சீனாவும் ரஷ்யாவும் இரண்டுமே அணு ஆயுதமேந்திய சக்திகள். இந்த நடவடிக்கை ஆர்டிக் வரை  நீளலாம். அப்பிராந்தியத்தில் மொஸ்கோ பெய்ஜிங்கின் உதவியை வரவேற்க தயாராக இருப்பதாக தெரிகின்ற நிலையில், அங்கே பனிக்கட்டிப் பாறைகளிலும், துறைமுகங்களிலும் அமெரிக்கா ரஷ்யாவை விட பின்தங்கி உள்ளது.

சீன அதிகாரிகளின் அறிக்கைகளுக்கு கெர்பி பதிலளிக்கையில், “தைவானின் சுதந்திரத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. அதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். அந்த ஜலசந்தியில் நடைமுறையில் உள்ள நிலைமையை ஒருதலைபட்சமாக மாற்றுவதைக் காணவும் நாங்கள் விரும்பவில்லை,” என்றார்.

கடந்தாண்டு தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தான் அவர் இந்த வார்த்தைகளைப் பேசுகிறார் என்ற உண்மை கெர்பிக்கு நன்றாகவே தெரியும்.  அந்தச் சட்டம், ஒரே-சீனா கொள்கையை நடைமுறையளவில் முடிவுக்குக் கொண்டு வரும் விதத்தில், தசாப்தங்களாக சீனாவின் பாகமாக கையாளப்பட்டு வந்த தைவானை முதல்முறையாக நேரடியாக ஆயுதமயப்படுத்த அமெரிக்காவுக்கு வழிவகைகளை வழங்கியது.

பெப்ரவரியில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் குறிப்பிடுகையில், அந்தத் தீவில் நிறுத்தப்பட்டுள்ள துருப்புக்களின் எண்ணிக்கையை நான்கு மடங்காக அதிகரிக்கவும், தைவான் துருப்புக்களுக்கு அமெரிக்க நிலத்தில் நேரடியாக பயிற்சி அளிக்கவும் அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகக் குறிப்பிட்டது.

கடந்த வாரம், அமெரிக்காவுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான மூலோபாயப் போட்டி சம்பந்தப்பட்ட பிரதிநிதிகள் சபையின் விசாரணைக் குழு அதன் முதல் விசாரணையை நடத்தியது. அதில் அக்குழுவின் தலைவர் மைக்கேல் கல்லாகர் கூறுகையில், '21 ஆம் நூற்றாண்டில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது பற்றிய உயிர்பிழைப்புக்கான போராட்டம் இது. மிகவும் அடிப்படையான சுதந்திரங்கள் ஆபத்தில் உள்ளன,” என்றார்.

புதன்கிழமை காலை, அந்தக் குழு மற்றொரு விசாரணையை நடத்தும். இந்த முறை அது சீன விஞ்ஞானிகளால் கோவிட்-19 உருவாக்கப்பட்டது என்ற பொய்யை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டிருக்கும். இந்த விசாரணை, இழிவான முறையில் இனவாத போலி-விஞ்ஞானத்தை அறிவுறுத்துபவரான நிக்கோலஸ் வேட் ஐ ஒரு முக்கிய சாட்சியாக வரவழைக்க உள்ளது. மரபணுரீதியில் 'யூதர்கள் முதலாளித்துவத்திற்கு தகவமைந்தவர்கள்' என்று வாதிட்டுள்ள இவரின் எழுத்துக்களை, குக்குளுக்ஸ் கிளானின் (KKK) பெரும் வழிகாட்டி டேவிட் ட்யூக் பாராட்டி இருந்தார்.

Loading