ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் சீனாவுக்கு எதிராக இராணுவ உறவுகளை ஆழப்படுத்துகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஆஸ்திரேலிய பிரதம மந்திரி அந்தோணி அல்பனீஸ் அமெரிக்காவிற்கு வந்துள்ளார், அங்கு அவர் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியா கையகப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கங்களுடன் விரைவில் அறிவிப்பார். இதை வாங்குவதற்கு $200 பில்லியனுக்கும் அதிகமாக செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் ஒரு பரந்த இராணுவக் கட்டமைப்பின் மையப் பகுதியாக உள்ள இந்தக் கொள்முதல், வெளிப்படையாகவே இந்தோ-பசிபிக்கில் போருக்குத் தயாராகும் நோக்கில் இயக்கப்படுகிறது.

மார்ச் 10, 2023, வெள்ளிக்கிழமை, இந்தியாவில், புது தில்லியில் உள்ள இந்திய ஜனாதிபதி மாளிகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அவரது சகபாடியான ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பனீசும் ஊடகங்களுக்குக் கை அசைக்கின்றனர். [AP Photo/Manish Swarup]

இந்த வேலைத்திட்டத்தின் ஆக்ரோஷமான தன்மையானது அல்பனீஸ் தனது அமெரிக்க பயணத்திற்கு முன்னதாக உடனடியாக இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டதன் மூலம் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. அங்கு, நரேந்திர மோடியை சந்தித்த ஆஸ்திரேலிய பிரதமர், இந்தியாவை 'உயர்மட்ட மூலோபாய பங்காளியாக' அறிவித்தார். ஆஸ்திரேலிய தலைவர் ஒருவர் இந்தியாவைப் பொறுத்தவரை அந்த பதவிப் பெயரை  பயன்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.

அதன் தெளிவான இலக்கு சீனா. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பூகோள  மேலாதிக்கத்திற்கு முக்கிய அச்சுறுத்தலாகக் கருதப்படும் பெய்ஜிங்கிற்கு எதிரான அமெரிக்க அச்சுறுத்தல்கள் மற்றும் ஆத்திரமூட்டல்களை ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பைடென் நிர்வாகம் அதிகரித்து வருவதால், மோடி  அரசாங்கம் வாஷிங்டனுடன் இந்தியாவின் பங்காளித்துவத்தை ஆழப்படுத்தியுள்ளது.

இந்தியா, அதன் அபாரமான மக்கள்தொகை, பூகோள மூலோபாய ரீதியாக முக்கியமான நிலைநிறுத்தப்பட்டிருப்பது மற்றும் சீனாவுடனான வரலாற்று மோதல்கள் ஆகியவை இந்த போர் உந்துதலின் ஒரு முக்கிய அங்கமாக பார்க்கிறது. ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவுடன் சேர்ந்து, இது நாற்கர (குவாட்) மூலோபாய உரையாடலின் ஒரு பகுதியாக இருப்பதோடு, இது சீனாவிற்கு எதிராக இயக்கப்பட்ட பிராந்தியத்தின் மிகப்பெரிய இராணுவ சக்திகளின் கூட்டணியாகவும் உள்ளது.

கடந்த ஆண்டு அதன் தேர்தலுக்குப் பிறகு, குவாட்டின் வளர்ச்சியானது தொழிற்கட்சி அரசாங்கத்தின் ஒரு குறிப்பிட்ட கவனமாக இருந்து வருகிறது, அதற்கு காரணம் அது சீனாவுடனான அமெரிக்க மோதலின் முக்கிய தாக்குதல் நாயாக செயல்படுகிறது. டோக்கியோவில் நடந்த குவாட் கூட்டத்தில் கலந்துகொள்வதே பிரதமராக அல்பானீஸ் செய்த முதல் நடவடிக்கையாக இருந்தது.

மாத தொடக்கத்தில், புதுதில்லியில் ஜி20 உச்சிமாநாட்டை ஒட்டி வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை குவாட் நடத்தியது. அதன் அறிக்கை சீனாவை நேரடியாகக் குறிப்பிடவில்லை, ஆனால் பெய்ஜிங்கின் மெல்லிய-மறைக்கப்பட்ட கண்டனங்களை உள்ளடக்கி இருந்தது.

குவாட்  'விதிகளின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை' அமல்படுத்த முற்படும் என்று அறிக்கை அறிவித்தது, இது அந்த பிராந்தியத்தின் மீதான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தை குறிப்பிடுவதற்கான குறியீடாகும். அது இவ்வாறு வெளிப்படுத்தியது. 'சர்ச்சைக்குரிய அம்சங்களின் இராணுவமயமாக்கல், கடலோர பாதுகாப்பு கப்பல்கள் மற்றும் கடல்சார் ஆயுத்தாரிகளின் ஆபத்தான பயன்பாடு மற்றும் பிற நாடுகளின் கடல் வள சுரண்டல் நடவடிக்கைகளை சீர்குலைக்கும் முயற்சிகள் குறித்து தீவிர கவலையை வெளிப்படுத்தியது.'

இது தெற்கு மற்றும் கிழக்கு சீனக் கடல்களில் சீன நடவடிக்கைகள் பற்றிய தெளிவான குறிப்பாகும், அவை அமெரிக்காவினால் தூண்டிவிடப்பட்டு, பிராந்தியத்தில் வாஷிங்டனின் இராணுவக் கட்டமைப்பை நியாயப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டன.

கூடுதலாக, தொழிற்கட்சி அரசாங்கம் குவாட்களை உள்ளடக்கிய பல்வேறு இருதரப்பு உறவுகளை வளர்க்க முயன்றது. இராணுவ உறவுகள் மற்றும் செயல்பாடுகளின் பின்னிப்பிணைந்த வலைப்பின்னலை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இவை அனைத்தும் சீனாவிற்கு எதிராக இயக்கப்படுகின்றன. இது கடந்த ஆண்டு ஜப்பானுடன் ஒரு மூலோபாய ஒப்பந்தத்தை உள்ளடக்கியுள்ளது.

இப்போது, தொழிற்கட்சி அரசாங்கமும் இந்தியாவுடன் அதையே செய்கிறது. INS விக்ராந்த் கப்பலில் ஏறி நின்றபோது, குறிப்பாக இராணுவவாதத்தின் ஒரு மோசமான காட்சியாக, அல்பானீஸ் இந்தியா ஒரு 'உயர்மட்ட பங்குதாரர்' என்று அறிவித்தார். அது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி கப்பல் ஆகும். இந்திய கடற்படை தளபதிகளுடன் பேசுவதற்கு முன், அல்பானீஸ் போர் விமானத்தின் விமானி அறையில் ஏறினார்.

இந்தோ-பசிபிக் பகுதியில் நடக்கும் போர் என்பது கடற்படை மற்றும் வான் மோதலை மையமாகக் கொண்டதாக இருக்கும். பசிபிக் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு அருகிலுள்ள முக்கிய கப்பல் பாதைகளை முற்றுகையிடுவதில் ஆஸ்திரேலியா ஈடுபடலாம், அதேவேளை இந்தியா இந்தியப் பெருங்கடலில் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும். ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் 2014 ஆம் ஆண்டு முதல் கூட்டு கடற்படை பயிற்சியை நடத்தி வருகிறது.

அல்பானீஸ் போர்க்கப்பலில் இருந்து, இந்தியப் பெருங்கடல் 'இரு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கு மையமானது' என்று அறிவித்தார். 'எங்கள் இரு நாடுகளின் வரலாற்றிலும் இதுபோன்ற வலுவான மூலோபாய சீரமைப்பு இருந்ததாக ஒரு புள்ளி இருந்ததில்லை.' என்று அவர் கூறினார். அல்பானீஸ் தனது தொழிற்கட்சி அரசாங்கத்தின் கீழ், ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் 'முன்பை விட அதிகமான பயிற்சிகள், செயல்பாடுகள் மற்றும் உரையாடல்களை நடத்தி முடித்ததாக' பெருமையாக கூறினார்.

இது மேலும் அதிகரிக்கப்படும். அல்பானீஸ் மற்றும் மோடி ஆகியோர், முதலில் அமெரிக்க-இந்திய பயிற்சிகளாக நடத்தப்பட்ட மலபார் கடற்படை பயிற்சிகள், தற்போது வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவின் கடற்கரை பகுதியில் நடத்தப்படும் என்று அறிவித்தனர். இந்த பயிற்சியில் அனைத்து குவாட் சக்திகளும் உள்ளடக்கப்படுகின்றன.

இந்த ஆண்டுக்கான தாலிஸ்மேன் சேபர் பயிற்சியில் பங்கேற்க இந்தியாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும், இரண்டு வருட செயல்பாடுகள் அவை நடைபெறும் ஒவ்வொரு முறையும் விரிவடைகின்றன. சீனாவுடனான மோதலை உருவகப்படுத்தும் முதன்மையான போர் பயிற்சிகளில் அவை இப்போது உள்ளன.

இந்த உறுதியான முன்முயற்சிகளைத் தவிர, இரு நாடுகளுக்கும் இடையே அதிக இராணுவ மற்றும் மூலோபாய ஒத்துழைப்புக்கான பொதுவான உறுதிப்பாட்டை மோடியும் அல்பானீசும் அறிவித்தனர்.

அல்பானீசின் வருகையின் உள்ளடக்கம் மற்றும் தாக்கங்கள் பற்றி அமெரிக்க பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், அல்பானீஸ் வருகையைப் பாராட்டி, அதன் கட்டுரையை அப்பட்டமாக பின்வருமாறு தலைப்பிட்டது: “சீனாவின் அச்சுறுத்தல் பெரிதாக வளர்ச்சியடையும் போது ஆஸ்திரேலியா, இந்தியா நெருக்கமான ஒத்துழைப்பை நாடுகின்றன.”

Talisman Saber தொடர்பாக கிரிஃபித் ஆசியா இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த இயன் ஹால் மேற்கோளை அக்கட்டுரை குறிப்பிட்டது: 'இந்தியாவை ஈடுபடுத்துவது பிராந்தியத்தில் உள்ள மற்றவர்களுக்கு சில சமிக்ஞைகளை அனுப்பப் போகிறது, மேலும் இது நீர் மற்றும் நில நடவடிக்கைகளில் சில இந்திய திறனை உருவாக்கப் போகிறது. அது உண்மையில்  தற்போது அவர்களிடம்  கிடையாது.'

அல்பானீஸ் மற்றும் மோடி கடந்த ஆண்டு சுங்கவரி இல்லாத வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில் பல்வேறு பொருளாதார ஒப்பந்தங்களை வெளியிட்டனர். பெருவணிகத்தின் வணிக நலன்களுக்கு மேலதிகமாக, ஆழமடைந்துவரும் உறவுகள் சீனப் பொருளாதாரச் செல்வாக்கைக் பலவீனப்படுத்துவதையும் அமெரிக்க நட்பு நாடுகளுடன் வர்த்தகம் மற்றும் பிற பொருளாதார உறவுகளில் இந்திய சார்புகளை உயர்த்துவதையும் இந்த ஒப்பந்தங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ரஷ்யாவுடனான இந்தியாவின் தற்போதைய பொருளாதார உறவுகளின் அடிப்படையில் இது மிகவும் முக்கியமானது. மோடி அரசாங்கம், சீனாவிற்கு எதிரான அமெரிக்க தலைமையிலான ஆக்கிரமிப்புக்கு ஆதரவளிக்கும் அதே வேளையில், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமி யுத்தம் அதிகரித்து வரும் நிலையில், ஒரு இறுக்கமான கயிற்றில் நடக்க முற்பட்டுள்ளது. உக்ரைன் மோதலில் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சித்தீர்களா என்று அல்பானீசிடம், ஊடகங்கள் கேட்டபோது, அவர் இதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

அவரது பயணம் முழுவதும், அல்பானீஸ் மோடியுடன் நெருக்கமாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இதில் விமானம் தாங்கி கப்பலுக்கான கூட்டுப் பயணம் மட்டுமின்றி, ஆஸ்திரேலிய மற்றும் இந்தியப் பிரதமர்கள் கிரிக்கெட் மைதானத்தைச் சுற்றி ரதமாக அலங்கரிக்கப்பட்ட காரில் சவாரி செய்யும் வினோதமான காட்சியும் அடங்கும்.

இந்தியத் தலைவரை மிக அதிகமாக உயர்த்தி பேசுவது, சீனாவுடனான மோதல், 'சர்வாதிகாரத்திற்கு' எதிராக 'ஜனநாயகத்தை' பாதுகாப்பது என்ற கூற்றுக்களின் மோசடித் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தீவிர வலதுசாரி தேசியவாதியான மோடி, பாசிச இந்து மேலாதிக்க குழுக்களுடன் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளார். அவரது அரசாங்கம் சிவில் உரிமைகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த மாதம், பிரிட்டிஷ் ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் (பிபிசி) புது டெல்லி தலைமையகத்தில் சோதனை நடத்த மோடி உத்தரவிட்டார். 2002ல் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலையைத் தூண்டியதில் அவரது பங்கை ஆவணப்படுத்திய பிபிசி நிகழ்ச்சிக்கான பதிலடி நடவடிக்கையாக இந்த போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. குஜராத் வகுப்புவாத வன்முறையில் சுமார் 2,000 பேர்வரை கொல்லப்பட்டனர்.

உண்மையில், மோடியின் சர்வாதிகாரம் வாஷிங்டனின் போர் நோக்கங்களுடன் முழுமையாக ஒத்துப்போகிறது. ரஷ்யா மற்றும் சீனா போன்ற அணுஆயுத சக்திகளுக்கு எதிரான ஆக்கிரமிப்புப் போர்களை நடத்துவது என்பது ஜனநாயக உரிமைகளுடன் ஒருபோதும் பொருந்தாது. 

அல்பானீஸ், பைடென் மற்றும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி ரிஷி சுனக் ஆகியோருடன் சேர்ந்து, அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியா கையகப்படுத்தும் திட்டத்தை அறிவிக்கும் போது, அந்த போர்த் திட்டம் வரும் நாட்களில் மேலும் முன்னெடுக்கப்படும். நவீன கடல் போரில் கப்பல்கள் மிக முக்கியமான சொத்துக்களில் ஒன்றாகும்.

அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய பத்திரிகைகளில் கசிந்த, அறிக்கைகளின் அடிப்படையில், ஆஸ்திரேலியா 2030 களின் முற்பகுதியில் யுஎஸ் வேர்ஜீனியா கிளாஸ் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும். இது பிரிட்டிஷ் அஸ்டூட் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறும், அவை சமீபத்திய அமெரிக்க இராணுவ தொழில்நுட்பத்துடன் மீண்டும் உருவாக்கப்படுகின்றன. கொள்முதலுக்கு $200 பில்லியன் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, தற்போதுள்ள ஆஸ்திரேலிய இராணுவ செலவினங்களுக்கு மேல், இது ஏற்கனவே இந்த தசாப்தத்தில் அரை டிரில்லியன் டாலர்களுக்கு அதிகமாக உள்ளது.

ஆஸ்திரேலிய ஆளும் உயரடுக்கின் மிகவும் மோசமான பிரிவுகள் துணை ஒப்பந்தத்தை பாராட்டி வருகின்றன. உதாரணமாக, ஒன்பது ஊடக வெளியீடுகள், நாடு இனி ஒரு 'நடு ஒழுங்கு சக்தியாக' இருக்காது, ஆனால் ஆஸ்திரேலிய கடற்கரையிலிருந்து வெகு தொலைவிலிருந்து வரும்  கட்டளைகளை செயல்படுத்தும் திறன் கொண்ட ஒன்று, என்று பாராட்டின. இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டவுடன், அதைச் செயல்படுத்துவதில் இருந்து எந்த விலகலும் இருக்க முடியாது என்று முர்டோக்கின் ஊடகம் வலியுறுத்தியுள்ளது.

இருப்பினும், அதே வெளியீடுகள், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள், அதாவது அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள்  ஆஸ்திரேலியாவுக்கு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, சீனாவுடன் ஒரு போர் நடக்கக்கூடும் என்று வலியுறுத்துகின்றன. இந்த முரண்பாட்டின் தர்க்கம், அந்த வெளியீடுகளில் சிலவற்றால் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் பிற கடற்படை சொத்துக்கள் ஆஸ்திரேலியாவை அடிப்படையாகக் கொண்டிருக்கும். நாடு, பெருகிய முறையில், அமெரிக்கா தலைமையிலான போருக்கான தயாரிப்புகளுக்கு ஒரு மாபெரும் விமானம் தாங்கி கப்பலாக மாறும்.

Loading