ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கத் (UAW) தேர்தல் நெருக்கடி பற்றிய சாமானிய தொழிலாளர் நடவடிக்கை குழு வேட்பாளர் வில் லெஹ்மனின் அறிக்கை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

சகோதர சகோதரிகளே:

ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கத் (UAW) தேசிய அதிகாரிகளின் இரண்டாவது சுற்று தேர்தல் முடிவு, அந்தத் தேர்தல், சாமானிய தொழிலாளர் உறுப்பினர்களின் உரிமைகளை அவமதித்து நடத்தப்பட்ட ஒரு மோசடி என்பதை உறுதியாக நிரூபித்துள்ளது. சவால் செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஷான் ஃபைன் (Shawn Fain) 12 வீதமான வாக்குகளுடன் வெறும் 505 வாக்குகள் வித்தியாசத்தில் ரே கரியை (Ray Curry) விட முன்னிலையில் உள்ளார்.

குறுகிய முடிவு மற்றும் குறைந்த வாக்குப்பதிவுகள் என்பன, ஃபைன் மற்றும் கரி தங்களின் அதிகாரத்துவ வலைப்பின்னல்களுக்கு அப்பால் வாக்குகளைப் பெற போராடினர் என்பதையும், எந்த ஒரு அதிகாரியும் சாமானிய தொழிலாளர்களின் குறிப்பிடத்தக்க ஆதரவைக் கொண்டிருக்கவில்லை என்பதையும் காட்டுகிறது. இரண்டாவது சுற்றில், பல உள்ளூர்வாசிகள் உண்மையில் தேர்தலைப் பற்றி தொழிலாளர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்தாலும் (அவர்கள் முதல் சுற்றில் இல்லை), ஃபைன் மற்றும் ரே கரி ஒவ்வொருவரும் சாமானிய தொழிலாளர் உறுப்பினர்களில் 5 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளனர்.

இந்தத் தேர்தல் ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்க அதிகாரத்துவத்திற்கு ஒரு தோல்வியாக இருந்துள்ளதோடு, கடுமையான நெருக்கடியையும் அதற்கு ஏற்படுத்தியுள்ளது.

GM இன் பிளின்ட் அசெம்பிளி ஆலையில் வில் லெஹ்மன்

மார்ச் 16ம் திகதியன்று, 'இத் தேர்தலை கேள்விக்குள்ளாக்குகிறது மற்றும் உடனடி விசாரணை தேவை' என்று தேர்தல் முடிவுகளைச் சான்றளிக்க மறுக்கும் 'பரவலான வாக்குரிமை மறுப்பு' தொடர்பாக நீதிமன்றம் நியமித்த கண்காணிப்பாளரைக் கோரி ரே கரி முறையான எதிர்ப்பைத் தாக்கல் செய்தார்.

ஃபைனின் பிரச்சார மேலாளர் இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். இத் தேர்தலின் சட்டபூர்வமான தன்மை மற்றும் நம்பகத்தன்மை பற்றிய கவலைகள் 'தவறானவை அல்லது பொருத்தமற்றவை' என்று அவர் கூறி, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளர் மற்றும் தொழிற் துறை, இத்தேர்தலுக்கு சான்றளித்து, ஃபைனை தலைவராக அமர்த்துமாறு அழைப்பு விடுத்தார். இரண்டாவது சுற்றில், ஃபைனை ஆதரித்த பிரையன் கெல்லர், இத்தேர்தல் குறித்து எந்த விசாரணையும் நடத்தக்கூடாது என்று கோரி தொழிற்சங்க அரங்குகளுக்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்ய தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். 'இந்தத் தேர்தல் இன்று நடக்க வேண்டும், ஷான் ஃபைன் பதவியேற்க வேண்டும்' என்று கெல்லர் கூறினார்.

கரி, ஃபைன் மற்றும் கெல்லரின் பதில்கள், ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்க அதிகாரத்துவம் மற்றும் அதன் பாதுகாவலர்கள், சாமானிய தொழிலாளர்களின் உரிமைகள் மீதான மொத்த அவமதிப்பை வெளிப்படுத்துகின்றனர்.

கரியின் அறிக்கையானது, இத் தேர்தலில் முறைகேடு உள்ளது என்றும், முடிவை தூக்கி எறிய வேண்டும் என்றும் அறிவிக்கிறது. இது ஒரு வெறும் குற்றச்சாட்டு அல்ல, இது குற்றவாளிகளே செய்த குற்றத்தை ஒப்புக்கொள்வதுபோல் ஆகும்.

'பல்லாயிரக்கணக்கான' வாக்காளர்கள் போதிய அஞ்சல் பட்டியல்களால் வாக்களிக்கத் தடை செய்யப்பட்டுள்ளனர் என்பதை இப்போது கரி ஒப்புக்கொள்கிறார். மேலும் அவர், கண்கானிப்பாளர் ஹாட்லைனுக்கு (Monitor hotline) மாற்றாக அழைப்பு விடுத்த பிறகும், வாக்குச் சீட்டுகள் கிடைக்காததால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தமது வாக்குரிமையை இழந்துள்ளனர் என்றும் கூறுகிறார். கரி மற்றும் அவரது பிரிவினருக்கு இது உண்மை என்று  நன்றாகத் தெரியும். ஏனெனில் இது ஆரம்பத்திலிருந்தே அவர்களின் திட்டமாக இருந்துள்ளது. தொழிற்சங்க எந்திரத்தின் கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக்கொள்ளும் கடைசி முயற்சியாக இப்போது இதனை இவர்கள் உரக்கச் சொல்கிறார்கள்.

நவம்பர் 2022 இல், எனது பிரச்சாரம் ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கம் மற்றும் கண்கானிப்பாளர் மீது வழக்குத் தொடுத்து, இது ஒரு மோசடித் தேர்தல் என்றும் UAW தேர்தலில் அர்த்தமுள்ள வகையில் வாக்களிப்பதற்கான சாமானிய தொழிலாளர்களின் உரிமைகளை முறையாக மீறுவதாகவும் எச்சரித்து இருந்தது. நான் நீதிபதி டேவிட் லாசனிடம் வாக்களிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்குமாறும், உறுப்பினர்கள் உள்ளூர் தொழிற்சங்க அரங்குகளில், நேரில் வாக்களிக்க அனுமதிப்பது உட்பட, தேர்தல் நடைபெறுவதை ஒவ்வொரு உறுப்பினருக்கும் தெரிவிக்கும் படியும், இதுபற்றி ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கத்துக்கு உத்தரவிடுமாறும் கேட்டுக் கொண்டேன்.

UAW அதிகாரத்துவம், அதிகாரத்தில் இருந்து அதனை அகற்றுவதற்கான வாய்ப்பை எங்களுக்கு மறுப்பதற்காக நூறாயிரக்கணக்கான உறுப்பினர்களிடமிருந்து வாக்குகளை வேண்டுமென்றே தடுத்து நிறுத்தியது என்று எனது வழக்கு ஆவணப்படுத்தியது. UAW, உள்ளக மின்னஞ்சல் பட்டியலை (உள்ளூர் சங்க தகவல் அமைப்பு அல்லது LUIS என அழைக்கப்படுகிறது) பயன்படுத்தியது என்றும், எந்த ஒரு சாமானியத் தொழிலாளியும் வாக்குச் சீட்டுகள் அனுப்பப்படுவதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கவில்லை என்றும் எனது பிரச்சாரம் நிரூபித்தது. நீதிபதி கூட உறுப்பினர் எண்ணிக்கையை குறைக்கிறது என்று கூறினார்.

நான் சொல்வது சரிதான் என்று இப்போது கரி ஒப்புக்கொள்கிறார். அவரது அறிக்கை, 'அஞ்சல் வாக்குச் சீட்டைப் பெற்றுக்கொள்ளாத UAW உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ள என்ன முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன?' மேலும், 'வாக்குச் சீட்டுகளைப் பெறுவதற்காக வாக்காளர்கள் பலமுறை அழைப்பு விடுக்கவில்லையா?'' என்பது உட்பட பல கேள்விகளைக் கேட்கிறது.

எனது பிரச்சாரம், UAW தொழிற்சங்கம், கண்கானிப்பாளர், அமெரிக்க தொழிற் துறை மற்றும் நீதிபதி டேவிட் லாசன் ஆகியோரிடம், இந்த ஒவ்வொரு கேள்விக்கும் முதல் சுற்று வாக்கெடுப்பு முடிவதற்குள் திறந்த நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால் கரியின் கீழிருந்த UAW தொழிற்சங்க எந்திரம், கண்காணிப்பாளர் மற்றும் தொழிற் துறை ஒவ்வொன்றும், காலக்கெடுவை நீட்டிப்பதற்கும், மேலும் UAW யின் முழு உறுப்பினர்களுக்கும் இதனை தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையையும் எதிர்த்தன. நீதிபதி லாசன் எனக்கு எதிராக தீர்ப்பளித்தார். மேலும் அவர் ஒரு தேர்தலுக்கு பின்னால் உள்ள சட்ட அமைப்பின் ஆதரவை தூக்கி வீசினார். UAW இன் தற்போதைய தலைவர் இப்போது அது ஒரு முறைகேடான மோசடி என்பதை ஒப்புக்கொண்டார்!

டிசம்பர் 20 அன்று, UAW தேர்தல்களின் முதல் சுற்று வெறும் 9% வாக்குப்பதிவுடன் முடிவடைந்த பிறகு, UAW அதிகாரத்துவம் எப்படி வாக்களிப்பதை நசுக்கியது என்பதை நிறுவும் ஒரு விரிவான எதிர்ப்பைத் நான் தாக்கல் செய்தேன். அத்தோடு, முழு உறுப்பினர்களுக்கும் உண்மையான அறிவிப்புடன் இந்த முறை தவிர, முதல் சுற்றில் இருந்து அனைத்து வேட்பாளர்களையும் உள்ளடக்கிய புதிய தேர்தலை கண்கானிப்பாளர் நடத்த வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்தேன்.

கண்கானிப்பாளர் எனது எதிர்ப்புக்கு உத்தியோகபூர்வ பதிலை வழங்கவில்லை மற்றும் முதல் சுற்று தொடர்பாக சான்றளிக்கவில்லை. ஆனால் எதுவும் நடக்காதது போல், தொடர்ந்தும் தேர்தலை மேற்பார்வையிட்டு வந்தார். 

UAW தொழிற்சங்க அதிகாரத்துவம் முறையாக சாமானிய தொழிலாளர்களின் உரிமையை மறுத்தது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. இருந்தபோதிலும், ஷான் ஃபைனின் பிரச்சார மேலாளர் நாதன் பென்ஸ்லர், தேர்தல் நியாயமானதாக நடந்ததற்கான ஆதாரங்களை வழங்காமல், தொழிலாளர்களின் உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறப்படுவது 'தவறானது அல்லது பொருத்தமற்றது' என்று அவர் கூறினார். உரிமை மறுக்கப்பட்டது குறித்த 'கவலைகளை' குறிப்பிடுகையில், அவை 'கண்காணிப்பாளராலும், தேவைப்பட்டால் தொழிற் துறையாலும் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்' என்று குறிப்பிட்டார்.

பெரும்பான்மையான சாமானிய தொழிலாளர் உறுப்பினர்களின் உரிமைகளை அதிகாரத்துவம் திட்டமிட்டு மீறுவதை மன்னிப்பதன் மூலம், UAW வின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற அதிகாரத்துவத்தின் ஃபைனின் பிரிவு போராடுகிறது என்பது இதன் மூலம் மிகவும் வெளிப்படுத்தப்படுகிறது. அவர்களின் நடத்தை 'சீர்திருத்த' பிரிவை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான அவர்களின் கூற்றை வெடிக்கச் செய்கிறது. சாமானிய தொழிலாளர்களுக்கு வாக்களிக்கும் அர்த்தமுள்ள உரிமையை அளிப்பதில் ஃபைனின் எதிர்ப்பு, அவரது பிரிவும், சாமானிய தொழிலாளர்களின் நலன்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அதன் குரோதத்தில் கரியில் இருந்து வேறுபட்டதல்ல என்பதைக் காட்டுகிறது.

அதிகாரத்துவத்தின் இரு பிரிவினரும் பதவிகளுக்காகவும், எங்களின் நிலுவைப் பணத்திற்காகவும் சண்டையிட்டுக் கொள்வதோடு, சாமானிய தொழிலாளர்களின் இயக்கத்தை அடக்குவது பற்றியே அவர்களின் உண்மையான கவலையாக இருக்கிறது.

'முன்னாள் UAW தலைவர் பாப் கிங் UAW தேர்தலை இறுதி செய்வதில் எந்த தாமதத்தையும் எதிர்க்கிறார்' என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை மாலை வெளியிடப்பட்ட அறிக்கையில், சான்றிதழில் ஏதேனும் தாமதம் இருந்தால், 'முழு UAW உறுப்பினர் மற்றும் வரவிருக்கும் பேரம் பேசுவதற்கான முழு தயாரிப்புக்கும் தீங்கு விளைவிக்கும்' என்று கிங் எச்சரித்தார். மார்ச் 27-ம் தேதி டெட்ராய்டில் நடைபெற உள்ள சிறப்பு பேரம் பேசும் மாநாட்டிற்கு முன், 'ரே கரி அல்லது ஷான் ஃபைன் யாராக இருந்தாலும், உறுப்பினர்களின் நலனுக்காக அடுத்த தலைவராக பதவிப்பிரமாணம் செய்து வைப்பது நல்லது' என்று அவர் கூறினார். கிங் கூறுவதில் உண்மையான அர்த்தம் என்னவென்றால், ஒப்பந்த போராட்டம் தொடங்கும் முன் 'சட்டபூர்வமான' தலைமை இருப்பதை உறுதி செய்வது வாகன நிறுவனங்களின் நலன்களுக்கு சிறந்தது என்பதாகும்.

ஆனால், இந்த அழுகிய செயல்பாட்டிலிருந்து எந்தத் தலைமை உருவானாலும், இந்த மோசடித் தேர்தலின் துர்நாற்றத்தை ஒருபோதும் அகற்ற முடியாது. ஊழல் மோசடி 'சில மோசமான ஆப்பிள்களின்' விளைபொருள் அல்ல. ஆனால் ஒட்டுமொத்த UAW அதிகாரத்துவமும் பல தசாப்தங்களாக எங்கள் செலவில் கார்ப்பரேட் சார்பு உறவைப் பேணி வருகிறது.

ஒவ்வொரு நாளும் UAW இன் சாமானிய தொழிலாளர்களின் உறுப்பினர்கள் அவசர சவால்களை எதிர்கொள்கின்றனர்: அவை, பாரிய பணவீக்கம், ஊதியங்களின் வீழ்ச்சி, உற்பத்தி அதிகரிப்பு, நியாயமற்ற பணிநீக்க அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பற்ற பணி நிலைமைகள் என்பனவாகும். இந்த தேர்தலின் அனுபவம், UAW அதிகாரத்துவம் நமது போராட்டங்களுக்கு ஒரு தடையாக இருப்பதையும், நமது மிக அடிப்படையான உரிமைகளை மீறுவதை எதிலும் நிறுத்தாது என்பதையும் காட்டுகிறது.

வரவிருக்கும் போராட்டங்களுக்குத் தயாராவதற்கு, UAW தொழிற்சங்க எந்திரத்தை ஒழித்து, அடி மட்டத்திலிலுள்ள தொழிலாளர்களுக்கும் அதிகாரத்தைக் கொடுப்பதை இலக்காகக் கொண்ட சாமானிய தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதன் மூலம் தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் கைகோர்க்க வேண்டும். அதற்காகத்தான் எனது பிரச்சாரத்தில் நான் போராடினேன், அதைத்தான் முன்னோக்கிச் செல்ல நாம் போராட வேண்டும்.

Loading