இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
வில்னியஸ் நகரில் நடைபெறும் நேட்டோ உச்சி மாநாட்டிற்கு முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திங்கள்கிழமை இங்கிலாந்து வந்தார். அவரது வருகைக்கான பெயரளவிலான காரணமாக கூறப்பட்ட, மூன்றாம் சார்லஸ் மன்னருடன், தனது முதல் இருதரப்பு சந்திப்பில் கலந்து கொள்வதற்கு முன், அவர் பிரிட்டிஷ் பிரதம மந்திரி ரிஷி சுனக்கை காலையில் சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து பேசினார்.
சுனக் உடனான பைடனின் கலந்துரையாடல் நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போரை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதற்கான தயாரிப்பாக இருந்தது. அன்று பிற்பகல் பிரிட்டிஷ் மன்னரை சந்தித்த பைடென், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றி அவருடன் அரட்டை அடித்தார்.
அமெரிக்க-இங்கிலாந்து உறவு என்பது “பாறை போன்று திடமானதாக” இருப்பதாக பைடன் ஊடகங்களுக்கு தெரிவித்தார். அவர் சுனக்கிடம் “நெருங்கிய நண்பரையும் சிறந்த கூட்டாளியையும் சந்திக்க முடியவில்லை” என்று கூறியதாக கூறப்படுகிறது.
இது முற்றிலும் கேமராக்களுக்கானது அல்ல. உக்ரேனில் நேட்டோவினுடைய போரில் அமெரிக்காவும் இங்கிலாந்தும் தங்கள் முக்கிய நோக்கங்களில் நெருக்கமாக இணைந்துள்ளன, பிரிட்டன் அதன் மேலாதிக்க ஏகாதிபத்திய பங்காளி என்ன கேட்டாலும் செய்ய தயாராக உள்ளது.
இந்த சந்திப்புக்கு முன் ஊடகங்களில் கூறப்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் “அருவருக்கத்தக்க” புள்ளிகள் மிகவும் மிகைப்படுத்தப்பட்டவை ஆகும். இந்த ஊடகங்களில் கிளஸ்டர் கொத்துக் குண்டுகள் பற்றிய பிரச்சினையைத் தவிர அதில் வேறு எதுவும் இல்லை, அது தொடர்பாக பல பரபரப்பு மிக்க கட்டுரைகளே மிகையாக எழுதப்பட்டுள்ளன.
இந்த ஆயுதங்களை உக்ரேனுக்கு வழங்குவதாக கடந்த வாரம் அமெரிக்கா அறிவித்தது. அமெரிக்காவோ, ரஷ்யாவோ, உக்ரேனோ கிளஸ்டர் கொத்துக் குண்டுகள் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. ஆனால், அமெரிக்காவின் நேட்டோ நட்பு நாடுகள் அடுத்த பிரச்சனைக்கு செல்வதற்கு முன்பு கண்ணியமான, சார்பு வடிவ கருத்து வேறுபாடுகளை முணுமுணுக்க வேண்டியிருந்தது.
“கிளஸ்டர் கொத்துக் குண்டுகளை உற்பத்தி செய்வதையோ அல்லது அதனை பயன்படுத்துவதையோ தடை செய்யும் ஒரு உடன்படிக்கையில் இங்கிலாந்து கையெழுத்திட்டுள்ளது மற்றும் அவற்றின் பயன்பாட்டை ஊக்கப்படுத்த மாட்டாது’’ என்று சர்வ சாதாரணமாக கூறிய சுனக், “ரஷ்ய படையெடுப்பை நாம் கூட்டாக எதிர்ப்பது” சரிதான் என்று அவர் மேலும் தெரிவித்தார். “தனிப்பட்ட முறையில் பிரிட்டிஷ் அதிகாரிகளுடனான இந்த விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமானதாக” இருந்ததாகக் பைனான்சியல் டைம்ஸ் கூறியது.
இராஜதந்திர விவகாரங்களுக்கான ஆசிரியர் பேட்ரிக் வின்டோர் பைடனின் வருகையைப் பற்றி எழுதுகையில், “ஆயுதங்களின் பற்றாக்குறை இடைவெளியை நிரப்ப கொத்துக் குண்டுகளை வழங்குவதற்காக, கடந்த வெள்ளியன்று அமெரிக்க எடுத்த முடிவு மீதான வெளிப்படையான கருத்து வேறுபாடு, குறைவான முக்கியத்துவம் வாய்ந்தது. கிளஸ்டர் கொத்துக் குண்டுகள் தொடர்பான உடன்பாட்டில் கையெழுத்திட்ட பிரிட்டன், அமெரிக்காவின் முடிவை அங்கீகரிக்க முடியாது’’ என்று குறிப்பிட்டார்.
அவரது மதிப்பீட்டை, முன்பு இங்கிலாந்தின் முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ரிக்கெட்ஸ் பிரபு எதிரொலித்தார், அவர் டெய்லி மிரரில் வாஷிங்டனின் கூட்டாளிகள் “இதில் மிகவும் சங்கடமாக இருக்கிறார்கள்” என்று விவரித்தார்.
“அமெரிக்கர்களைத் தவிர, நாங்கள் அனைவரும் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளோம், அதாவது நாங்கள் இந்த ஆயுதங்களை உற்பத்தி செய்யவோ, சேமித்து வைக்கவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. நிச்சயமாக அவை கண்மூடித்தனமான ஆயுதங்கள். உக்ரேனியர்களுக்கு இந்த ஆயுதங்கள் ஏன் தேவை என்பதைப் புரிந்துகொள்ள நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்று நினைக்கிறேன்.
“அவர்கள் தொடங்கிய இந்த தாக்குதலில் நிறைய கடக்கவேண்டியுள்ளது. அது தேக்கமடைந்தால், தடுமாறிப் போனால், இந்தப் போர் தொடரும் அபாயம் உள்ளது. போர்க் காலங்களில் நாடுகள் எடுக்கின்ற கடினமான தேர்வு இது. இது எனக்கு சங்கடமாக உள்ளது, ஆம், இது செய்யப்படவில்லை என்று நான் விரும்புகிறேன், ஆனால், அவர்கள் ஏன் இதைச் செய்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கார்டியன் எழுத்தாளர் வின்டோரின் கூற்றுப்படி, நேட்டோ பொதுச்செயலாளர் பதவிக்கான பிரிட்டனின் பாதுகாப்புச் செயலர் பென் வாலஸின் முயற்சியை, வாஷிங்டன் வெளிப்படையாகத் தடுப்பதுதான் பதற்றத்தின் முக்கிய புள்ளிகளாக இருக்கின்றன. தற்போதைய தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் இன்னும் ஒரு வருடம் பதவியில் இருக்க ஊக்குவிக்கப்பட்டுள்ளார். அத்தோடு, உக்ரேனுக்கு ஒரு தெளிவான நேட்டோ “உறுப்பினர் பாதைக்கு” பிரிட்டன் ஆதரவளிக்கிறது.
இங்கிலாந்து வெளியுறவுச் செயலர் ஜேம்ஸ் புத்திசாலித்தனமாக சமீபத்தில் கருத்து தெரிவிக்கையில், “சுவீடன் மற்றும் பின்லாந்திற்கான சலுகைக்கு அது தேவையில்லை என்பதை உணர்ந்து, உறுப்பினர் செயல் திட்டத்திலிருந்து நாங்கள் நகர்ந்தால், இங்கிலாந்தின் நிலைப்பாடு மிகவும் ஆதரவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன், மேலும் உக்ரேனியர்கள், நேட்டோ உறுப்பிராகும் தேவைக்காக இராணுவத்தை சீர்திருத்தி, தங்கள் அர்ப்பணிப்பையும், செயல்களையும் போர்க்களத்தில் நிரூபித்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.
இந்த இரண்டு பிரச்சினைகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன, இவை இரண்டும் போரின் வேகம் மற்றும் நேட்டோ கூட்டணியை, குறிப்பாக அதன் முக்கிய உறுப்பினர்களான ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகியவற்றைத் தக்கவைக்க வேண்டிய பைடனின் தேவை பற்றிய தீர்ப்புகளில் வேரூன்றியுள்ளன. பெரும்பாலான கணக்குகள் வாலஸின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக, ஒப்புக்கொள்கின்றன, ஆனால் ஐரோப்பிய ஆணையத்தின் தற்போதைய தலைவரான உர்சுலா வான் டெர் லேயன், மேலும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான உகந்த தேர்வும் நிராகரிக்கப்பட்டது.
“உக்ரேனை எவ்வாறு கையாள்வது” என்பதில் இங்கிலாந்தும் அமெரிக்காவும் பெருகிய முறையில் நீண்ட தூரத்தில் இருப்பதாக கார்டியன் பத்திரிகையின் வின்டோர் மேலும் கூறுகிறார். “ஜூனியர் பார்ட்னர் (பிரிட்டன்) ஏதேனும் கருத்து வேறுபாட்டுடன் பகிரங்கமாகச் சென்றாலோ அல்லது வாஷிங்டனைச் செயலில் ஈடுபடுத்த முயற்சிப்பதாகக் கருதப்பட்டாலோ அமெரிக்கா முகம் சுளிக்கின்றது. பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளரான பென் வாலஸ், ஆயுத விநியோகத்தின் வேகத்தை விரைவுபடுத்த முயற்சித்த பின்னர், நேட்டோ பொதுச் செயலர் அபிலாஷைகளை இந்த வலியுறுத்தல் முறியடித்ததாக சிலர் கூறுகின்றனர்” என்று கார்டியன் மேலும் தெரிவித்துள்ளது.
வில்னியஸில் நடக்கின்ற நேட்டோ உச்சிமாநாட்டிலும் இதே கேள்வி உயர் மட்டத்தில் எழுப்பப்படுகிறது. ஜேர்மனியும் அமெரிக்காவும் இந்தக் கட்டத்தில் உக்ரேனுக்கான நேட்டோ உறுப்புரிமைக்கான பாதைக்கு முழு ஒப்புதலைத் தவிர்க்கும் இறுதிப் பிரகடனத்தை ஆதரிக்கின்றன. அத்துடன், நிதி மற்றும் இராணுவ ஆதரவை வலுப்படுத்தும் பலதரப்பு கட்டமைப்பிற்கான ஆதரவின் கீழ் ஒரு கோட்டை வரைய அவர்கள் முயல்கின்றனர்.
இது, ஆட்சி மாற்றத்திற்காக ரஷ்யாவை சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பிளவுபடுத்துவதற்கு போதுமான சக்தியுடன் போரைத் தொடர வாஷிங்டன் நடந்துகொண்டிருக்கும் இறுக்கமான கயிற்றைப் பிரதிபலிக்கிறது. நேட்டோவிற்கும் உக்ரேனுக்கும் இடையே போதுமான முறையான பிரிவினையை பராமரிக்கும் அதே வேளையில், ஏகாதிபத்திய கூட்டணி இன்னும் தயாராகாத ஒரு குறிப்பிடத்தக்க கிரெம்ளின் விரிவாக்கத்தைத் தடுக்கிறது.
இவை முற்றிலும் தந்திரோபாயப் பிளவுகளாகும் அமெரிக்காவை விட மிகவும் சிறிய இராணுவ மற்றும் பொருளாதார சக்தியான பிரிட்டன் முதன்மையாக நேட்டோ ஆக்கிரமிப்புக்கு சிறப்பாக செயல்படுகிறது, வாஷிங்டன் தற்போது வாதிடுவதை விட, அதிக ஆயுதங்கள் மற்றும் அதிக நேட்டோ ஈடுபாட்டை தொடர்ந்து வழங்குவதில் பிரிட்டன் முன்னணியில் உள்ளது, ஆனால் பின்னர் அது கொள்கையாக ஏற்றுக்கொள்கிறது. ஏற்கனவே போர் டாங்கிகள் மற்றும் F16 போர் விமானங்களை வழங்குதல் போன்றவற்றை அது செய்திருக்கிறது.
உள்நாட்டில் உள்ள வளங்களையும், வெளிநாட்டில் உள்ள அரசியல் உடன்பாட்டையும் பாதுகாத்து கொண்டு வாஷிங்டன் நகரத் தயாராக இருக்கும் போது, பிரிட்டன் ஒரு பிரமாண்டமாக இருந்து ஐரோப்பாவின் மற்ற பகுதிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக மாற்றப்பட்டுள்ளது.
பைடனின் வருகைக்குப் பிறகு, சுனக்கின் செய்தித் தொடர்பாளர் இங்கிலாந்தின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார், “நேட்டோ கூட்டணியில் இணைவதற்கான வழியில் உக்ரேனை நாங்கள் நிச்சயமாக ஆதரிக்க விரும்புகிறோம், இதற்கான சரியான வழிமுறைகள் நேட்டோ நட்பு நாடுகளுடன் விவாதிக்கப்படும்” என்று குறிப்பிட்ட அவர், ஆனால் லண்டனுக்கும் வாஷிங்டனுக்கும் இடையே பிளவு பற்றிய பரிந்துரைகளை அவர் நிராகரித்தார். இந்த அறிக்கையைப் பார்த்தேன், ஆனால் அது துல்லியமானது என்று நான் நம்பவில்லை” என்று குறிப்பிட்டார்.
நேட்டோ உறுப்புரிமைக்கான உடனடி வாய்ப்பை ஸ்டோல்டன்பெர்க் நிராகரித்த நிலையில், நேட்டோவின் கட்டமைப்புகள் மூலம் முறையாக தொடராமல், இராணுவ உதவி, மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் நிதி வழங்குவதில் உறுப்பு நாடுகள் இணைந்து செயல்படுவதற்கான கட்டமைப்பை வகுத்து, பலதரப்பு உரையில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகியவை பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியுடன் இணைந்து செயல்படும்.
மேலும் கிளேவர்லி பரிந்துரைத்தபடி, உக்ரேனின் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா, கூட்டணியில் சேருவதற்கு உறுப்பினர் செயல் திட்டத்தில் (MAP) தொடர்ச்சியான இலக்குகளை கியேவ் சந்திக்க வேண்டியதில்லை என்று நேட்டோ ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளதால், “நேட்டோவுக்கான நமது பாதையை இது சுருக்கியுள்ளது” என்று கூறுகிறார்.
துருக்கி மற்றும் ஹங்கேரியின் எதிர்ப்பை சமாளிக்கும் வகையில், நேட்டோவில் சுவீடன் உறுப்பினர் பதவியைப் பெற பிரிட்டன் மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றவும் சுன்னத் ஒப்புக்கொண்டுள்ளார்.
