லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயோர்க்கில் ஆயிரக்கணக்கான நடிகர்கள் மறியல் ஆர்ப்பாட்டத்தில் இணைகிறார்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

பல்லாயிரக்கணக்கான அமெரிக்க திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர்களின் வேலைநிறுத்தம் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. தொலைக்காட்சி மற்றும் ரேடியோ கலைஞர்களின் திரையுலக நடிகர்களது அமெரிக்க-கழக கூட்டமைப்பின் (Screen Actors Guild–American Federation of Television and Radio Artists - SAG-AFTRA) உறுப்பினர்களான நடிகர்கள், இப்போது மே 2 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அமெரிக்க எழுத்தாளர்கள் சங்கத்தின் (Writers Guild of America -WGA) 11,000 உறுப்பினர்களுடன் இணைந்துள்ளனர்.

அடிப்படை பொருளாதார பிரச்சினைகள் தொடர்பாக திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கூட்டணியில் (AMPTP) ஒழுங்கமைக்கப்பட்ட சக்திவாய்ந்த மேலாதிக்கம் செய்யும் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனங்களுக்கு எதிராக நடிகர்களும் எழுத்தாளர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இணையவழி (streaming) சேவைகளை அறிமுகப்படுத்துவதன் மூலமும், நியாயமான உபரி இலாபத்தினால் கிடைக்கும் ஊதியத்தின் முடிவு மற்றும் தொழில்துறை தொழிலாளர்களை “தற்காலிகமாக்க” மற்றும் நடிப்பு மற்றும் எழுத்துத் தொழில்களை “தற்காலிக அல்லது அழைக்கும்போது” வேலை என்னும் வடிவங்களாக மாற்றும் பல்வேறு வழிமுறைகள் மூலமும் ஒவ்வொரு தொழிலாளர் குழுவும் கணிசமான வருமானத்தை இழந்துள்ளது. பெருநிறுவன கொள்ளையர்களின் கைகளிலுள்ள செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பமானது, வருமானம் மற்றும் வேலைகள் மீது இன்னும் பேரழிவுகரமான தாக்குதல்களுக்கு உறுதியளிக்கிறது.

ஜூலை 14, 2023 இல் லாஸ் ஏஞ்சல்ஸில் வேலைநிறுத்தம் செய்யும் எழுத்தாளர்கள்

இருப்பினும், தற்போதைய பொழுதுபோக்கு துறையில் சக்திவாய்ந்த சமூக மற்றும் கலாச்சார செல்வாக்குள்ள நீரோட்டங்களும் வேலை செய்கின்றன, நடிகர்கள் இப்போது கணிசமான உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் இணைந்துள்ளனர்.

லொஸ் ஏஞ்சல்ஸில், முக்கிய ஸ்டுடியோக்களுக்கு வெளியே பெரிய அளவிலான மறியல் நடந்தது. நியூயோர்க்கில், Netflix, NBCUniversal, Paramount, Amazon மற்றும் Warner Bros. Discovery போன்ற பெரு நிறுவனங்களின் தயாரிப்பு அலுவலகங்களுக்கு வெளியே வேலைநிறுத்தக்காரர்கள் அணிவகுத்துச் சென்றனர்.

இரு நகரங்களிலும் பெரும் எண்ணிக்கையிலான கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மற்றும் குறிப்பாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற வெகுஜன மறியல் காட்சிகள் பொதுவாக கலகக்கார, கொண்டாட்டத் தன்மையைக் கொண்டிருந்தன. கடைசியில் சுரண்டல் எஜமானர்களுக்கு சவால் விட எங்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களும், அவர்களது ஆதரவாளர்களும் கூறுவதாகத் தெரிகிறது. தொழிற்சங்கங்களால் ஒழுங்கமைக்கப்பட்ட “பெருநிறுவன பேராசை” மற்றும் “பேராசை முதலாளிகள்” பற்றிய கோஷங்கள் அவற்றின் பொதுவான தன்மையைக் கொண்டிருக்கலாம், ஆனால் பலர் உண்மையான உற்சாகத்துடன் கோஷமிட்டனர். எழுத்தாளர்களுக்கும் நடிகர்களுக்கும் இடையே ஒரு வலுவான ஒற்றுமை உணர்வு மேலோங்கியது.

ஜூலை 14, 2023 இல் SAG-AFTRA உறுப்பினர்கள் மறியல் வரிசையில் WGA எழுத்தாளர்களுடன் இணைகிறார்கள்.

நடிகர்கள் மற்றும் எழுத்தாளர்களின் “இரட்டை வேலை நிறுத்தம்” மக்கள் ஆர்வத்தையும் ஆதரவையும் உருவாக்கும் ஈர்ப்புத் துருவம் என்பது ஏற்கனவே தெளிவாகத் தெரிகிறது. இது ஊடகங்களும் பொழுதுபோக்கு தொழில்துறையும் வேண்டுமென்றே அடக்கியுள்ள பிரச்சினைகளில் கவனம் செலுத்தியுள்ளது: அதாவது பரந்த மற்றும் கொடிய சமூக சமத்துவமின்மை, தொழிலாளர்களின் நிலைமைகள் மற்றும் உரிமைகளுக்கு எதிராக மாபெரும் பெருநிறுவனங்களின் இடைவிடாத உந்துதல், அமெரிக்காவில் பல மில்லியன்கணக்கான மக்களின் சமூக வாழ்க்கையின் கடுமையான யதார்த்தமாக இருக்கின்றது.

Deadline என்கின்ற இணையவழி செய்தி பத்திரிகையின் கூற்றுப்படி, Allison Janney, Timothy Olyphant, Josh Gad, Sean Astin, Charlie Barnett, Joey King, Chloe Fineman, Susan Sarandon, Ginnifer Goodwin, Patton Oswalt, Marg Helgenberger, Jake McDorman, Constance Zimmer, Michelle Hurd மற்றும் Jason Sudeikis உட்பட பல முக்கிய கலைஞர்கள் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஜூலை 14, 2023 அன்று SAG-AFTRA உறுப்பினர்கள் நியூயார்க் நகரில் மறியல் ஆர்ப்பாட்டத்தில் எழுத்தாளர்களுடன் இணைகிறார்கள்

பெரும்பாலான நடிகர்கள் வாழ்க்கைக்கான ஊதியம் பெறுவதில்லை அல்லது ஒழுங்கான அடிப்படையில் வேலை கிடைப்பதில்லை. ஒரு சிறிய சதவீதத்தினர் மட்டுமே ஒன்றியத்தின் சுகாதாரப் பாதுகாப்பு வரம்பு 26,470 டாலர்களுக்கு தகுதிபெறும் அளவுக்கு ஆண்டுதோறும் சம்பாதிக்கின்றனர். அதே நேரத்தில், Netflix இன் Ted Sarandon போன்ற ஒரு நிறைவேற்று நிர்வாகி ஒவ்வொரு இரண்டு நாட்களிலேயே அந்த “தொடக்கநிலை” தொகையை சம்பாதிக்கிறார் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.

பொழுதுபோக்கு வெளியீடான Deadline இல் ஜூலை 11 அன்று வெளியான ஒரு அறிக்கையானது, AMPTP இன் மூலோபாயம் பல மாதங்களாக எழுத்தாளர்களை பட்டினி போடுவதாகும் என்பதை வெளிப்படுத்தியது. இது, திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொழிலாளர்கள் மத்தியில் சீற்றத்தைத் தூண்டியுள்ளது. கட்டுரையின்படி, “மே 2 அன்று WGA வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதிலிருந்து வோல் ஸ்ட்ரீட்டிலிருந்து நேர்மறையான கருத்துக்களைப் பெற்று, Warner Bros Discovery, Apple, Netflix, Amazon, Disney, Paramount மற்றும் மற்றவைகளும் ஒரு ஸ்டுடியோ நிறைவேற்று நிர்வாகி அப்பட்டமாக கூறியது போல “WGA ஐ உடைக்க” உறுதியாகிவிட்டனர்.”

ஸ்டுடியோக்களும் AMPTP யும் “அக்டோபருக்குள் பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு மறியல் போராட்டத்தின் ஐந்து மாதங்களுக்குப் பிறகு பணம் தீர்ந்துவிடும் வேலையும் கிடைக்காது என்று நம்புகின்றன.” தொழிற்சங்க உறுப்பினர்கள் தங்கள் குடியிருப்புகளை இழந்து தங்கள் வீடுகளை இழக்கத் தொடங்கும் வரை விஷயங்கள் இழுபறியாக இருக்க அனுமதிப்பதே இறுதி விளையாட்டு” என்று ஒரு ஸ்டுடியோ நிறைவேற்று நிர்வாகி Deadline இடம் கூறினார். இந்த அலட்சிய அணுகுமுறையை ஒப்புக்கொண்ட பல வட்டாரங்கள் இந்த அறிக்கையை மீண்டும் வலியுறுத்தின. அவர்களுக்குள் உள்ள ஒரு நபர் அதை ‘கொடூரமான ஆனால் அவசியமான தீமை’ என்று அழைத்தார்.” இதுதான் அமெரிக்க “ஜனநாயகத்தின்” உண்மையான முகம்: தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கான தங்கள் சட்டப்பூர்வ உரிமையைப் பயன்படுத்தினால், அவர்களை அழித்து விடுங்கள்.

இந்த வேலைநிறுத்தம் ஏற்கனவே அமெரிக்காவில் பல ஆண்டுகளில் மிகப்பெரிய வேலைநிறுத்தங்களில் ஒன்றாகும். ஆனால் தொழிலாள வர்க்கத்தின் பெரும் பட்டாலியன்கள் நடவடிக்கைகளில் இறங்க தயாராக காத்திருக்கின்றன என்பதை நடிகர்களும் எழுத்தாளர்களும் நன்கு அறிவார்கள். பல வேலைநிறுத்தக்காரர்கள் குறிப்பாக நூறாயிரக்கணக்கான UPS தொழிலாளர்களை குறிப்பிடுகின்றனர், அவர்களின் ஒப்பந்தம் ஜூலை 31 உடன் முடிவடைகிறது. நடிகை சூசன் சரண்டன் (Susan Sarandon) வெள்ளியன்று நியூயோர்க்கில் ஒரு நிருபரிடம் கூறினார், “ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்வதை நாங்கள் காண்கிறோம், UPS தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்கும் விளிம்பில் உள்ளனர். இரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்திருக்க வேண்டும், ஆனால் பைடன் அந்த வேலைநிறுத்தத்தை முறியடித்தார். வியாழனன்று நியூயோர்க்கில் உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய ஒரு எழுத்தாளர், எழுத்தாளர்கள் மற்றும் நடிகர்களின் வேலைநிறுத்தத்தை UPS மற்றும் பிற பிரிவு தொழிலாளர்களின் சாத்தியமான வேலைநிறுத்தங்களுடன் இணைத்தார். “வேலை நிறுத்தங்களின் கோடைக்காலத்தை” நாம் காணலாம் என்று அவர் கூறினார்.

ஜூலை 14, 2023 அன்று மறியல் ஆர்ப்பாட்ட வரிசையில் நடிகர்கள் மற்றும் எழுத்தாளர்கள்.

லொஸ் ஏஞ்சல்ஸில் வேலைநிறுத்தத்தின் முதல் நாளில் உலக சோசலிச வலைத் தள நிருபர் இந்த அறிக்கையை வழங்கினார்: அதாவது “வெயிலையும் பொருட்படுத்தாமல், எழுத்தாளர்களும் நடிகர்களும் இன்று அமேசான் ஸ்டுடியோவுக்கு முன்னால் உள்ள மறியல் ஆர்ப்பாட்ட வரிசையில் ஒன்றாக அணிவகுத்தனர். நடிகர்கள் போராட்டத்தில் இணைந்ததால் எழுத்தாளர்கள் பொதுவாக நிம்மதியும் புத்துணர்ச்சியும் அடைந்தனர். எழுத்தாளர்கள் பல மாதங்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட வலுவூட்டல்கள் இறுதியாக போருக்குச் சென்று விட்டன என்ற உணர்வு இருந்தது. எழுத்தாளர்களில் பலர் நடிகர்களாகவும், நடிகர்கள் பலர் எழுத்தாளர்களாகவும் இருந்தனர், மற்றவர்கள் எதிர்கொண்ட போராட்டங்களை அவர்கள் எளிதில் புரிந்து கொண்டனர். அவர்கள் ஊதியம் மற்றும் உபரி இலாபத்தினால் கிடைக்கும் ஊதியம், தற்காலிகமயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மாற்றுவதற்கான அச்சுறுத்தல் போன்ற பொதுவான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர், மேலும் அவர்கள் ஒரே ஸ்டுடியோக்களுக்காக வேலை செய்கிறார்கள் மற்றும் எதிராக வேலைநிறுத்தமும் செய்கிறார்கள். அவர்களின் போராட்டங்கள் பிரிக்க முடியாதவை என்ற உண்மையான உணர்வு இருந்தது.

“மேலும், பரந்த போராட்டங்கள் குறித்து தொழிலாளர்களுடன் பேசுவது எளிதானது. நாங்கள் UPS மற்றும் துறைமுகங்களில் போராட்டங்கள் எழுந்தபோது, தொழிலாளர்கள் தொழிலாள வர்க்கத்தின் பிற பிரிவுகளின் போராட்டங்களை உள்ளுணர்வுடன் ஆதரித்தனர். ‘ஊசல் நீண்ட நேரம் ஒரே திசையில் சுழன்று கொண்டிருந்தது’ என்றும், கடைசியில் அது திரும்பத் தொடங்கியிருப்பதாகவும் ஒருவர் சொன்னார். நிச்சயமாக, அரசியல் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை, ஆனால் அவர்களின் போராட்டம் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த எதிர்த்தாக்குதலின் ஒரு பகுதியாகும் என்ற உணர்வு நிச்சயமாக உள்ளது.”

உலக சோசலிச வலைத் தள நிருபர் நியூயார்க்கில் மன்ஹாட்டனின் மத்திய மேற்குப் பகுதியிலுள்ள Amazon/HBO தலைமையகத்திலும், டைம்ஸ் சதுக்கத்திலுள்ள தியேட்டர் மாவட்டத்தின் மையத்திலுள்ள பாரமவுண்ட் ஸ்டுடியோவிலும் மறியல் நடந்ததை விவரித்தார்: “ஒவ்வொரு இடத்திலும் சுமார் 150 மறியல்கள் இருந்தன. இறுக்கமான வட்டத்தில் அவர்கள் நகர்ந்து கொண்டிருந்தாலும், குறிப்பாக சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் கார்கள், லாரிகள் மற்றும் டபுள் டெக்கர் பேருந்துகள் தங்கள் ஆதரவு ஒலிகளை ஒலிக்கச் செய்யும் போது மனநிலை உற்சாகமாக இருந்தது” என்று குறிப்பிட்டார்.

எங்களது துண்டுப்பிரசுரங்களுக்கு பரந்த அளவில் வரவேற்பும், அவர்களின் வேலைநிறுத்தத்திற்கு பரந்த ஆதரவையும், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலுமுள்ள தொழிலாள வர்க்கத்தின் மற்ற பிரிவுகளுக்கு அதன் முக்கியத்துவம் மற்றும் அதன் கலாச்சார தாக்கத்தையும் கோரும் எங்கள் கோஷங்களுக்கு பரந்த ஏற்பு இருந்தது.

எங்களுடன் பேசிய ஒரு நடிகர், தயாரிப்பாளர்களுக்கும், வேலைநிறுத்தத்திலுள்ள நடிகர்களுக்கும் இடையிலான ஏற்றத் தாழ்வுகளை கடுமையாக எதிர்த்து பேசினார். பெரும் மில்லியனர்களாகவும், பில்லியனர்களாகவும் இருக்கும் தயாரிப்பாளர்கள், நடிகர்களுக்கு நியாயமான பங்கை கொடுக்காமல், ஏழைகளாக நடிக்க முயற்சிப்பதாக அவர் கண்டனம் தெரிவித்தார். அது சரியில்லை.’ மற்றொருவர் ,’எழுத்தாளர்களைப் பட்டினி போட முயற்சிக்கும் (Deadline கட்டுரையைக் குறிப்பிட்டு) இங்கு நாம் கையாளும் நபர்களைப் பற்றி கவனத்தை ஈர்த்தார். அவர்களின் இரக்கமற்ற போக்கைக் கண்டு வியந்த அவர், எழுத்தாளர்களைச் சார்ந்திருக்கும் அவர்களது குடும்பங்களையிட்டும் கவனத்தையும் ஈர்த்தார். ‘எப்படி இப்படி மக்களைப் பட்டினி போட முடியும் ?’

ஜூலை 14, 2023 அன்று நியூயோர்க் நகரில் மறியல் பதாகை

இப்போதைக்கு அமெரிக்க ஊடகங்கள் திகைத்து நிற்கின்றன. அமெரிக்க சமூகத்தைப் பற்றிய தங்கள் சொந்த உந்துதலை நம்பும் ஊடக பண்டிதர்கள், பெருநிறுவன தன்னலக்குழு மற்றும் இன்னும் அச்சுறுத்தும் வகையில், முழு “சுதந்திர நிறுவன” அமைப்புமுறைக்கும் வெகுஜன மக்கள் விரோதத்தின் வெளிப்பாட்டைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்கள்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

பெருநிறுவனங்களின் நலன்களுக்காக எழுத்தாளர்களின் வேலைநிறுத்தத்தை தனிமைப்படுத்த சதி செய்த பல்வேறு தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் — Teamsters, IATSE மற்றும் ஏனையவை — பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களின் திட்டங்கள் சீர்குலைந்துள்ளன.

இந்த சக்திகள் ஒன்றிணைந்து எழுத்தாளர்கள் மற்றும் நடிகர்கள் மீது புதிய தாக்குதல்களை நடத்தும். SAG-AFTRA தலைவர் Fran Drescher வெள்ளியன்று “மிகவும் பேராசை கொண்ட அமைப்பான” AMPTP இன் மூர்க்கமான எதிர்ப்பாளராக தனது தோரணையைத் தொடர்ந்தார். மறியல் போராட்டத்தின் முதல் நாளில், “இந்த பேராசை பிடித்த கொடுங்கோலர்களிடமிருந்து இந்த நிலைமையை நாம் கட்டுப்படுத்தாவிட்டால், நாங்கள் அனைவரும் எங்கள் வாழ்வாதாரங்களை இழக்கும் அபாயத்தில் இருப்போம்” என்று அவர் வலியுறுத்தினார். உண்மையில், Drescher உம் SAG-AFTRA இன் தேசிய வாரியமும் தீவிரமாக எதிர்பார்ப்பது பெருநிறுவனங்களில் இருந்து ஒரு சில துண்டுகளை ஒரு “வரலாற்று” வெற்றியாக தங்கள் உறுப்பினர்களுக்கு வழங்க முடியும் என்பதாகும்.

ஆயிரக்கணக்கான நடிகர்களும் எழுத்தாளர்களும் இப்போது அதே தாக்குதல்களை எதிர்கொள்ளும் மற்றும் போராடுவதற்கான வாய்ப்பைத் தேடும் தொழிலாள வர்க்கத்தின் பெரும் திரளை நோக்கி தங்களை வழிநடத்துவதை தங்கள் நடவடிக்கையாகக் கொள்ள வேண்டும். SAG-AFTRA மற்றும் WGA தலைமைகளின் எதிர்ப்பைத் தவிர, நடிகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஏன் தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் பிற பணியிடங்களில் தங்கள் நிலைமைகளை விளக்கக்கூடாது? மற்றும் ஒரு பரந்த வேலைநிறுத்த இயக்கத்திற்கான ஆதரவை ஏன் கட்டமைக்கக்கூடாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை. எனவே அழைப்பு விடுக்கப்பட்ட அரசியல், சமூக மற்றும் தொழில்துறை தாக்குதலுக்கு தலைமை வகிக்க, நடிகர்களும் எழுத்தாளர்களும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் கட்டுப்பாட்டிற்கு வெளியே, ஜனநாயக முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட சாமானிய நடவடிக்கை குழுக்கள் மூலம் தங்கள் சொந்த வேலைநிறுத்தத்திற்கு தலைமை தாங்க வேண்டும்.

Loading