இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் ஆகஸ்ட் 22, செவ்வாய்க்கிழமை, பி.ப 4 மணிக்கு, பேராதனைப் பல்கலைகழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையில், ”உக்ரேன் போர் - அதை எவ்வாறு நிறுத்துவது?” என்ற தலைப்பில் ஒரு பகிரங்க போர்-எதிர்ப்புக் கூட்டத்தை நடத்துகின்றன. இந்த நிகழ்வுக்கு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான துறையில் உள்ள அரசியல் விஞ்ஞான சங்கம் அனுசரனை வழங்குகின்றது.
இந்த கூட்டமானது, ரஷ்யாவிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் அமெரிக்க-நேட்டோ போரை நிறுத்துவதற்கு, தொழிலாள வர்க்கத்தின் ஒரு இயக்கத்தை எவ்வாறு கட்டியெழுப்புவது, மற்றும் பேரழிவுகரமான அணு ஆயுத மூன்றாம் உலகப் போருக்குள் இறங்குவதைத் எவ்வாறு தடுப்பது என்பது பற்றி கலந்துரையாடும். கிட்டத்தட்ட 200,000 உக்ரேனியர்கள் மரணித்துள்ள அதே நேரம், பல்லாயிரக்கணக்காண ரஷ்யர்களின் உயிரிழப்புகள் தொடர்பான ஊடகத் தகவல்கள், அதிகரித்துவரும் உக்ரேன் போரின் கொடூரங்களை தெளிவாக்குின்றன.
இருப்பினும், அமெரிக்கா மற்றும் நேட்டோ இந்தப் போரை தீவிரப்படுத்தி வருவதோடு மேலதிகமாக ஆயுதங்களையும் நிதியையும் உக்ரேனுக்குள் கொட்டுகின்றன. பைடன் நிர்வாகம் உக்ரேனுக்கு கொத்தணி குண்டுகளை அனுப்புவதுடன் ஆயுதங்களுக்காக நேரடியாக 70 பில்லியன் உட்பட இந்தப் போருக்கு 113 பில்லியன் டொலர் தொகையை வழங்க அனுமதி அளித்துள்ளது.
அதே சமயம், அமெரிக்கா 345 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை தாய்வானுக்கு வழங்கி சீனாவுடனான ஒரு ஆத்திரமூட்டும் மோதலை தீவிரப்படுத்துகின்றது.
சீனாவுக்கு எதிரான அமெரிக்கப் போர் உந்துதலில் இந்தியா முன்னணி நாடாக மாறியுள்ளது. பாசிசவாதியான இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாசிங்டனுக்கான அரச பயணமானது ஆயுத விற்பனை மற்றும் இணைந்த இராணுவ உற்பத்தி ஆகிய ஒப்பந்தங்களோடு முடிந்துள்ளது.
அமெரிக்காவின் கூட்டாளியான அவுஸ்திரேலியா, இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் பிரதான சக்திகளான அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் பரந்த - அளவிலான கடல் போர் பயிற்சியை தற்போது மேற்கொள்கின்றது. மலபார் பயிற்சியானது சீனாவிற்கு எதிரான பிராந்தியம் முழுவதிலும் மேற்கொள்ளப்படும் அமெரிக்க தலைமையிலான பயமுறுத்தும் இராணுவ நடவடிக்ககைகளின் உச்சத்தில் இடம்பெற்றுள்ளது.
மூன்றாம் உலப் போருக்கான தயாரிப்புகள், உழைக்கும் மக்களின் இழப்பில், வான், கடல் மற்றும் தரைப்படைகளை உயர்த பல நாடுகள் மேற்கொள்ளும் பில்லியன் கணக்கான டொலர்களின் வீண்விரயத்துடன் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
போருக்கு எரியுட்டும் முதலாளித்துவத்தின் அதே புறநிலையான நெருக்கடிகள் உலகம் முழுவதிலும் தொழிலாளர் போராட்டங்களை உருவாக்குகின்றன.
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவும் உலகம் முழுவதிலும் உள்ள அதன் பிரிவுகளும் இந்தப் போரை நிறுத்தும் ஒரே வர்க்கமான தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதில் ஈடுபட்டுள்ளன.
அத்தயை இயக்கம் அடித்தளமாகக் கொள்ளவேண்டிய வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கின் மீதான முக்கியமான கலந்துரையாடலில் பங்குபற்ற, இந்தக் கூட்டத்திற்கு வருகைதருமாறு நாம் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை வலியுறுத்துகின்றோம்.
இடம்: விரிவுரை மண்டபம், இல.08, அரசியல் விஞ்ஞான துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்.
காலம் மற்றும் நேரம்: 22 ஆகஸ்ட் செவ்வாய்க்கிழமை, பி.ப 4 மணி.
