இலங்கையின் நீண்டகால ட்ரொட்ஸ்கிசவாதியான கே. ரட்நாயக்கவின் 80 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துக்கள்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இந்த வாழ்த்துச் செய்தியானது உலக சோசலிச வலைத் தள ஆசியர் குழுத் தலைவர் டேவிட் நோர்த், நவம்பர் 14 அன்று கொழும்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு அனுப்பியது ஆகும். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக உலக ட்ரொட்ஸ்கிச இயக்கதிற்காக சோசலிச சமத்துவக் கட்சியில் முன்னணி உறுப்பினராக உத்வேகத்துடன் செயலாற்றி வரும் கே. ரட்நாயக்கவின் 80வது பிறந்த தினம் நவம்பர் 14 ஆகும்.

அன்பு தோழர் ரத்நாயக்க,

உங்கள் 80ஆவது பிறந்தநாளில் எனது வாழ்த்துக்களையும் மிக அன்பான விருப்பங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

இந்த நாள், குறிப்பிடத்தக்க தனிப்பட்ட மைல்கல்லை மட்டும் குறிக்கவில்லை. உங்களது எண்பது ஆண்டுகால வாழ்க்கையில் அறுபது ஆண்டுகள் ட்ரொட்ஸ்கிசம், அனைத்துலக குழுவின் பாதுகாப்பு மற்றும் சோசலிச புரட்சிக்கான உலகக் கட்சியாக நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்புதலுக்குமான போராட்டத்துடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன.

உங்கள் வாழ்க்கை நான்காம் அகிலத்தின் வரலாற்றின் பெரும் பகுதியை கொண்டுள்ளது. பப்லோ மற்றும் மன்டேலின் கட்டுப்பாட்டில் இருந்த ட்ரொட்ஸ்கிச-விரோத சர்வதேச செயலகத்தில் இருந்து முறித்துக் கொண்டு, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவை ஸ்தாபிப்பதை அறிவித்து 1953 நவம்பர் 16 அன்று பகிரங்கங்க கடிதம் வெளியிடப்பட்டு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் உங்களது பத்தாவது பிறந்த நாளை நீங்கள் கொண்டாடி இருப்பீர்கள்.

இலங்கையில் மற்றும் உங்களது ஒட்டுமொத்த வாழ்க்கை காலத்திலும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தலைவிதி மீதான அவற்றின் பரந்த தாக்கங்கள் ஒருபுறம் இருக்க, நான்காம் அகிலத்தின் தலைமைத்துவத்தில் கட்டவிழ்ந்த போராட்டங்கள் பற்றி உங்களது அந்த வயதில் நிச்சயமாக நீங்கள் அறிந்திருந்திருக்க மாட்டீர்கள்.

நீங்கள் 21 ஆவது வயதை அடையும் போது, 1964 ஜூன் மாதத்தில் முதலாளித்துவ கூட்டணி அரசாங்கத்தினுள் லங்கா சம சமாஜக் கட்சி நுழைந்துகொண்டு புரட்சிகர சோசலிசம் மற்றும் ட்ரொட்ஸ்கிச நிரந்தரப் புரட்சி வேலைத்திட்டத்தையும் மோசமாக காட்டிக் கொடுத்தமைக்கு பதிலடி கொடுப்பதற்கான அரசியல் கோட்பாடுகளின் உணர்வுடன், போதுமான வகையில் உள்வாங்கப்பட்டிருந்தீர்கள். அதைத் தொடர்ந்து வந்த முக்கியமான ஆண்டுகளில், 1968ல் புரட்சிக் கம்யுனிஸ்ட் கழகத்தின் ஸ்தாபகத்தில் நீங்கள் தீர்க்கமான பங்கைக் கொண்டிருந்தீர்கள்.

உங்கள் வாழ்க்கை பற்றிய ஆய்வுக்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் இலங்கைப் பகுதியின் விரிவான வரலாற்றைத் தவிர வேறொன்றும் அவசியமில்லை. 55 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பிரிவு நிறுவப்பட்டது முதல் அதன் அனைத்து முக்கிய போராட்டங்களிலும் ஆழமாகவும் மையமாகவும நீங்கள் ஈடுபட்டுள்ளீர்கள்.

ஆனால், புரட்சிகரப் செயற்பாட்டில் உங்களது தசாப்தங்களில் மிகச்சுருக்கமாக கூறி வலியறுத்த வேண்டியது என்னவெனில், நீங்கள் அரசியல் புத்துயிர்ப்பு, அரசியல் வேலைத்திட்டம் மற்றும் கொள்கைகளுக்கான அர்ப்பணிப்பு மற்றும் சோசலிசத்திற்கான போராட்டம் சார்ந்து இருக்கும் தனிப்பட்ட தைரியம் தளராமையால் ஆளுமைபடுத்தப்பட்டுள்ளீர்கள் என்பதாகும். மற்றும் இலங்கை சோ.ச.க., உலக சோசலிச வலைத் தள ஆசியர் குழு மற்றும் அனைத்துலகக் குழுவில் உள்ள உங்களது சகல தோழர்களும் சக பணியாளர்களும் உறுதிப்படுத்துவது போல, இந்த அனைத்து தரங்களுக்கும், நீடித்த கடின உழைப்புக்கான அசாதாரண திறன் உண்டு என்பதை கூறியே ஆக வேண்டும்.

அன்பின் ரட்நாயக்க, வெறும் நான்கு தசாப்தங்களுக்கும் குறைவான காலமே உங்களுடன் நெருக்கமாக பணியாற்றும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. முதுமையடையும் நிகழ்வுப் போக்கில் உள்ள சவால்களுக்கு சலுகைகள் வழங்க உங்களுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என நான் அறிவேன். இது போன்ற கவலைகளை நீங்கள் நிராகரிப்பீர்கள். உலகப் புரட்சிகர எழுச்சியின் புதிய காலகட்டத்தில் எமது அரசியல் பணியின் தொடர்ச்சியை நான் எதிர்பார்க்கின்றேன் என கூறி இந்த பிறந்தநாள் செய்தியை முடிக்க என்னை அனுமதியுங்கள்.

உங்கள் தோழர்,

டேவிட்

Loading