திருப்புமுனை: வெடிகுண்டு மற்றும் பனிப்போர் அல்லது: அமெரிக்க ஏகாதிபத்தியம் எப்படி கவலைப்படுவதை நிறுத்தவும் வெடிகுண்டை நேசிக்கவும் கற்றுக்கொண்டது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

திருப்புமுனை: வெடிகுண்டு மற்றும் பனிப்போர் (Turning Point: The Bomb and the Cold War), பிரையன் நாப்பன்பெர்கரின் (Brian Knappenberger) நெட்ஃபிலிக்ஸ் (Netflix) இன் புதிய தொடரானது, பனிப்போர் மற்றும் ரஷ்யாவுடனான தற்போதைய அமெரிக்க மோதலைப் பற்றிய ஆவணப்படமாக இருக்கிறது.

“பெறப்பட்ட முதல் தரவுகளுடனும் மற்றும் உலகெங்கிலும் உள்ள முக்கிய நபர்களைத் தொடர்புகொண்டதன் மூலமும், இந்த விரிவான தொலைக்காட்சித் தொடர்கள் பனிப்போர் மற்றும் அதன் பின்விளைவுகளை ஆராய்கின்றன” என்று நெட்ஃபிலிக்ஸ் இன் மூச்சுவிடாமல் தொகுக்கப்பட்ட விளம்பரம் கூறுகிறது.

நவம்பர் 1, 1952 அன்று மார்ஷல் தீவுகளில் உள்ள என்வெடக் அட்டோல் (Enewetak Atoll) மீது, ஐவி மைக் (Ivy Mike) என அழைக்கப்படும் உலகின் முதல் தெர்மோநியூக்ளியர் (thermonuclear) சாதனத்தின் பரிசோதனையின் போது ஏற்பட்ட காளான் மேகம் (The mushroom cloud) [AP Photo/Los Alamos National Laboratory]

இந்த ஆவணப்படத்தின் டிரெய்லரில், சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ள அரசாங்கத்தின் தகவல்களை அம்பலப்படுத்துபவரான (whistleblower) டேனியல் எல்ஸ்பெர்க் பென்டகன் ஆவணங்களை வெளியிட்ட பகுதிகளும், மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் இரகசியத் திட்டத்தின் கதை தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும்போது - எஞ்சியவர்கள் இறக்கும் போது (2017) (Raven Rock: The Story of the U.S. Government’s Secret Plan to Save Itself–While the Rest of Us Die) என்ற அமெரிக்காவின் இரகசிய அணு ஆயுத யுத்த திட்டங்களைப் பற்றிய புத்தகத்தின் ஆசிரியர் காரெட் எம். கிராஃப், மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முன்னணி ஜேர்மன் நாசிக்களுடன் அமெரிக்க அரசாங்க ஒத்துழைப்பை வெளிப்படுத்திய வரலாற்றாசிரியரான திமோதி நஃப்தலி ஆகியோர்களுடன் மேற்கொண்ட நேர்காணல்களில் சிலிர்க்க வைக்கும் பகுதிகள் இடம்பெற்றுள்ளன.

இருப்பினும், இந்த தொடர் முன்னேறும்போது, ​​அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் வரலாற்றாசிரியர்களும் விமர்சகர்களும் - சிறந்த சொற்றொடர் இல்லாததால் - ஈராக் போரின் சிற்பிகளில் ஒருவரான முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் கொண்டலீசா ரைஸ் (Condoleezza Rice), உட்பட சிலரால் மாற்றப்பட்டனர். ஈராக் போர், மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பின் (CIA) இயக்குநராக இருந்த ராபர்ட் கேட்ஸ், ஈரான்-கான்ட்ரா ஊழலுக்கு (Iran-Contra scandal) தலைமை தாங்கி, பின்னர் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றினார்.

திருப்புமுனை: வெடிகுண்டு மற்றும் பனிப்போர் தொடரில் கொண்டலீசா ரைஸ்

இந்த “ஈர்க்கக்கூடிய” ஆவணப்படம், உண்மையில், அமெரிக்க இராணுவவாத பிரச்சாரத்தை பரப்புரை செய்வதில் ஒரு சமமான படிப்பினையாக இருக்கிறது என்பதை படிப்படியாக வெளிப்படுகிறது. வாஷிங்டனின் வெளியுறவுக் கொள்கையின் குற்றங்கள் பற்றிய அதன் வெளிப்பாடுகள், முதன்மையாக ரஷ்யாவிற்கு எதிரான உலகப் போருக்கு கிளர்ச்சி செய்யும் அதன் மைய நோக்கத்திற்கு நம்பகத்தன்மையை வழங்க உதவுகின்றன.

ஆவணப்படத்தின் போக்கில், ரஷ்யாவிற்கான முன்னாள் அமெரிக்க தூதரும் உக்ரேன் இரத்தக்களரியை முன்னின்று ஆதரிப்பவருமான மைக்கேல் மெக்ஃபால் (Michael McFaul), ஆவணப்படத்தின் ஒட்டுமொத்த அணுகுமுறையை துல்லியமான சுருக்கமாக ஒரு கருத்தாக வழங்குகிறார்.

நான் மிகவும் வெளிப்படையாகச் சொல்வேன்: சிஐஏ (CIA) ஆட்சிக் கவிழ்ப்புகளில் ஈடுபட்டுள்ளதா? இந்த கேள்விக்கான பதில் ஆம், நிச்சயமாக. 1953 இல் மொசாடேக்கு (Mosaddegh) எதிராக ஈரானிய சதி. அதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. எனது அறிவைப் பொறுத்தவரை, CIA 2004 இல் உக்ரேனிலோ அல்லது 2011 இல் ரஷ்யாவிலோ அல்லது 2013 மற்றும் 2014 இல் உக்ரேனிலோ இதைச் செய்யவில்லை

எந்தவித கருத்துரை அல்லது விமர்சனம் இல்லாமல் முன்வைக்கப்பட்ட இந்தக் கருத்துரை, மறுக்க முடியாத உண்மையையும் அபத்தமான பொய்யையும் இணைக்கிறது. 1953 இல் ஈரானிய மொஹமட் மொசாடெக்கின் அரசாங்கத்தை கவிழ்த்ததற்கு சிஐஏ முன்னணி சக்தியாக இருந்தது என்பது நிச்சயமாக நன்கு அறியப்பட்ட ஒன்றாகும்.

எவ்வாறாயினும், சமீபத்திய நியூயார்க் டைம்ஸ் கட்டுரையின் வார்த்தைகளில் கூறுகையில், “ஒரு தசாப்தத்திற்கு முன்பு ... சிஐஏ மற்றும் பிற அமெரிக்க புலனாய்வு அமைப்புகள்” ஒரு “கூட்டுப்பங்காளிகளாக” வேலை செய்யத் தொடங்கியுள்ளன, அது “உக்ரேனை மாற்றியது ... இன்று கிரெம்ளினுக்கு எதிராக வாஷிங்டனின் மிக முக்கியமான உளவுத்துறை பங்காளிகளில் ஒன்றாக” மாற்றப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் இதை சதி (coup) என்று சொல்வார்கள்.

மெக்ஃபால் சங்கடமான உண்மைகளை பொய்களுடன் கலப்பது தொடரின் செயல்முறையாக இருக்கிறது. அவை பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவை போன்று வழங்கப்பட்டு, கருணை மற்றும் நற்பண்பு நோக்கங்களைத் தவிர வேறு எதையும் தவிர்த்து தற்போதைய அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் முன்மாதிரியான நடத்தைகளை சேர்த்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களை சுதந்திரமாக விவாதிக்கிறது

இந்த அணுகுமுறை, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்புதல்கள் மற்றும் பொய்மைப்படுத்தல்கள் இரண்டையும் உள்ளடக்கியது. இந்தத் தொடர் நாப்பன்பெர்கரின் (Knappenberger) முந்தைய ஆவணப்படமான திருப்புமுனை: 9/11 (Turning Point: 9/11) மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் (the War on Terror) ஆகியவற்றிற்கு இணையாக பிரபஞ்சத்தில் உள்ளது என்பதாகும்.

முந்தைய தொடரில் “முன்கூட்டிய போர்” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஒசாமா பின் லேடனுக்கு நிதியுதவி மற்றும் ஆயுதம் வழங்கிய மற்றும் ஈராக் மீதான பேரழிவுகரமான மற்றும் கொலைகார படையெடுப்பைத் தொடங்கிய வில்லன்கள், நடிப்பு மாற்றத்தை விளக்க எந்த முயற்சியும் இல்லாமல், புதிய தொடரில் “ஜனநாயகத்திற்கான போராட்டத்தின்” கதாநாயகர்களாக மாறுகிறார்கள்.

ஆதாரபூர்வமான வெளிப்பாடுகள்

இந்தத் தொடரின் ஒப்புதல்கள் குறிப்பிடத்தக்கவை மற்றும் மதிப்புமிக்கவையாக இருக்கின்றன.

இந்த தொடரின் முதல் பகுதியில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணுகுண்டுகள் வீசப்பட்டதன் விளைவுகளின் கொடூரமான சித்தரிப்புடனும் மேலும், அவற்றைப் பயன்படுத்துவதற்கான முடிவு சோவியத் யூனியனுக்கு ஒரு செய்தியை அனுப்புவதை நோக்கமாகக் கொண்டது என்ற உண்மையைப் பற்றிய ஒரு வெளிப்படையான குறிப்பு, கிழக்கு ஐரோப்பா மற்றும் சீனாவிற்குள் எந்த இராணுவ படையெடுப்பும் பெரும் அமெரிக்க இராணுவ சக்தியுடன் எதிர்கொள்ளப்படும் என்பது உள்ளடங்கியிருக்கிறது. “[இதனை] போர்க்குற்றம் என்று சிலர் கூறுவார்கள்,” என்று முதல் அத்தியாயத்தில் ஒரு வரலாற்றாசிரியர் அறிவிக்கிறார்.

இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பானிய அமெரிக்கர்கள் மீது அரசால் ஊக்குவிக்கப்பட்ட ஜப்பானிய-எதிர்ப்பு இனவெறியின் சூழலில் இடம்பெயர்ந்ததைப் பற்றிய விரிவான மற்றும் வேதனையான கணக்கை இந்த அத்தியாயத்தில் உள்ளடங்கியிருக்கிறது.

இரண்டாவது அத்தியாயம் - எல்ஸ்பெர்க்குடனான (Elsberg) நேர்காணலில் கனமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது- பனிப்போரின் போது மனித நாகரீகம் பொதுவில் அறியப்பட்டதை விட கியூபா ஏவுகணை நெருக்கடியின் போது மொத்த அழிவுக்கு மிக அருகில் வந்தது என்பதை வெளிப்படுத்துகிறது. அமெரிக்க ஜனாதிபதிக்கு மனித குலத்தை அழித்தொழிக்கும் அதிகாரம் இருந்தது மட்டுமல்லாமல், ஏராளமான மற்ற இராணுவ அதிகாரிகளும் அதைச் செய்தார்கள் என்று எல்ஸ்பெர்க் விளக்குகிறார். டாக்டர் ஸ்ட்ரேஞ்சலோவ் (Dr. Strangelove) ஒரு “ஆவணப்படம்”, ஒரு புனைகதை அல்ல என்று எல்ஸ்பெர்க் உற்றுநோக்கியிருக்கிறார்.

டாக்டர் ஸ்ட்ரேஞ்சலோவ்வாக பீட்டர் செல்லர்ஸ்

தொடரின் மூன்றாவது பகுதியில், பார்வையாளருக்கு பனிப்போரின் போது சிஐஏ குற்றங்கள் பற்றிய விளக்கங்கள் வழங்கப்படுகின்றன. இதில் உலகம் முழுவதும் நடந்த ஆட்சிக்கவிழ்ப்புகள், தவறான தகவல்களை ஊக்குவித்தல் மற்றும் பத்திரிகைகளின் கட்டுப்பாடு ஆகியவை அடங்கும். ஒரு வரலாற்றாசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

ஆரம்பகால சிஐஏ, 1940களின் பிற்பகுதியிலிருந்து 1960கள் வரை, அவர்கள் கெய்ரோ, டோக்கியோ அல்லது பேர்லின் போன்ற இடங்களில் அங்கு பத்திரிகை ஆசிரியரின் ஆதரவை பெற்று நூற்றுக்கணக்கான தாக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளைக் மேற்கொண்டிருந்தது. ஒரு சிலரை விட, சிஐஏ மூலம் ஊதியம் பெற்ற அல்லது இலவசமாக சிஐஏவுடன் ஒத்துழைத்த அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் அதிகமாக இருப்பதாக சிலர் கூறுகின்றனர்.

ஆவணப்படம் முதல் பிரச்சாரம் வரை

இருப்பினும், மேலே குறிப்பிட்டுள்ளபடி, இந்த தொடரின் ஆரம்பப் பகுதிகளுக்குப் பிறகு, தொடர் எந்த அர்த்தமுள்ள பாணியிலும் ஒரு ஆவணப்படத்தை ஒத்திருப்பதை நிறுத்துவதுடன் மேலும் அது ஒரு நீட்டிக்கப்பட்ட பிரச்சாரமாக மாறுகிறது.

இதில் புதிய முகங்கள் மற்றும் புதிய குரல்கள் வெளிவருகின்றன, இதில் பத்திரிகையாளர் ஆன் ஆப்பிள்பாம் (Anne Applebaum) மற்றும் அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ நட்பு நாடுகளின் பிரதம மந்திரிகள் மற்றும் மூத்த அதிகாரிகளின் அதிர்ச்சியூட்டும் பரந்த அளவிலானவர்கள் உள்ளனர். இந்த தொடரின் இணை தயாரிப்பாளர் அலெக்ஸாண்ட்ரா பூலோஸ், பால்கனை உள்ளடக்கியதாக அமெரிக்க அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட சர்வதேச ஊடக அமைப்பான ஐரோப்பிய சுதந்திர ரேடியோவில் (Radio Free Europe) விளம்பரப்படுத்துவதன் மூலம் சிஐஏ/அரசுத் துறை பிரச்சாரத்தின் துர்நாற்றம் அதிகமாகிறது.

திருப்புமுனை: வெடிகுண்டு மற்றும் பனிப்போர் தொடரில் உக்ரேன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி

இறுதி அத்தியாயங்கள் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் கீழ் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் பின்னர் வெளியுறவு அமைச்சராக இருந்த ரைஸ் (Rice) மற்றும் இளைய புஷ் (Bush) மற்றும் பராக் ஒபாமா (Barack Obama) இருவரின் கீழ் பணியாற்றிய பாதுகாப்புச் செயலர் கேட்ஸ் (Gates) ஆகியோருக்கு நேரடியாக ஒதுக்கப்பட்டிருந்தது.

ஆவணப்படத்தின் அடித்தளம்

திருப்புமுனை: வெடிகுண்டு மற்றும் பனிப்போர் தொடரின் இரண்டாம் பகுதி தற்போது உக்ரேனில் நடக்கும் போர் அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான மோதலின் தடையற்ற தொடர்ச்சி என்று வலியுறுத்துவதைச் சுற்றியே சுழல்கிறது.

ஒரு நேர்காணலில், நாப்பன்பெர்கர் (Knappenberger) விளக்குகிறார்,

பனிப்போர் முடிந்துவிடவில்லை, அது முடிந்துவிடவில்லை என்பதே அடிப்படைக் கருத்து. நாங்கள் இன்னும் பனிப்போரின் அதே பதட்டங்களுடன் வாழ்கிறோம். உக்ரேனின் படையெடுப்பு வரையிலான அந்த நிகழ்வுகளை நாங்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறோம், அது பனிப்போரின் மற்ற எல்லாவிதமான தந்திரங்களையும் அதே பதட்டங்களையும் கொண்டுள்ளது. நாம் செய்யாத முக்கிய விஷயம் அதுதான். சோவியத் ஒன்றியத்தின் சரிவு இந்தக் கதையின் ஒரு பகுதி மட்டுமே.

ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி பனிப்போரை “1945 முதல் 1990 வரை சோவியத் சார்ந்த நாடுகளுக்கும் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய சக்திகளுக்கும் இடையே இருந்த அரசியல் விரோத நிலை” என்று வரையறுக்கிறது.

நாப்பன்பெர்கரின் இந்த ஆவணப்படம், அரச பிரமுகர்களுடனான நேர்காணல் வடிவில், இந்த வரையறையை மறுவரையறை செய்ய முயற்சிக்கிறது, பனிப்போர் ஒருபோதும் முடிவுக்கு வரவில்லை என்று வலியுறுத்துகிறது. சோவியத் ஒன்றியத்தின் முடிவில் தேசியமயமாக்கப்பட்ட சொத்து தனியார்மயமாக்கப்பட்டிருந்தாலும், சோவியத் யூனியனும் தற்போதைய ரஷ்ய கூட்டமைப்பும் ஒன்றுதான் என்றும், அவை இரண்டும் “பேரரசுகள்” என்று கூறுகிறது.

இதற்கிடையில், சுதந்திரம் மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகிய இலட்சியங்களுக்காக நிற்கும் அமெரிக்கா, சோவியத் மற்றும் ரஷ்ய வடிவங்களிலான “ஏகாதிபத்தியத்தை” எதிர்க்கிறது.

இந்த ஆய்வறிக்கை கொச்சையானது, முட்டாள்தனமானது மற்றும் பிற்போக்குத்தனமானது. ஆனால் இத்தொடரின் தயாரிப்பாளர்கள், 12 மணி நேரத் தொடரை வடிவமைத்துள்ளனர், அதில் நூற்றுக்கும் மேற்பட்ட நேர்காணல் செய்பவர்கள், மிகவும் சிறப்பு வாய்ந்த மற்றும் அறிவுள்ளவர்கள்.

உண்மையில், ஆவணப்படத்தின் அடிப்படை ஆய்வறிக்கை தொடரின் மூன்றாவது பகுதியில் எல்ஸ்பெர்க்கால் (Ellsberg) மறுக்கப்பட்டிருக்கிறது. அவர் அறிவிக்கிறார்:

ரஷ்ய இராணுவம் மிகவும் மிகைப்படுத்தப்பட்டிருந்தது. ரஷ்யர்கள் ஏவுகணைகளை உருவாக்கும் ஒரு செயலிழந்த திட்டத்தில் ஈடுபடவில்லை, என்னைச் சுற்றியுள்ள மக்கள் அனைவரும் அவர்கள் உயர்ந்தவர்கள் இல்லை என்று எடுத்துக் கொண்டனர். நாங்கள் உயர்ந்தவர்களாக இருக்க முயற்சிக்கவில்லை, அதாவது அவர்கள் அமெரிக்காவிற்கு எதிரான முதல் தாக்குதல் நடத்தும் திறனுக்காக முயற்சிக்கவில்லை, இதன் விளைவாக அவர்கள் உலகில் இராணுவ ரீதியாக ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கவில்லை என்று அர்த்தம், அந்த கண்டுபிடிப்பு மறுபரிசீலனைக்கு வழிவகுத்திருக்க வேண்டும். எங்களுடைய முழு முன்னுதாரணமும், நாம் யாரை எதிர்கொள்கிறோம், அவர்களின் நோக்கங்கள் என்ன, மற்றும் நாம் அவர்களை எவ்வாறு வைத்திருக்கவில்லை என்பது பற்றிய அவர்களின் முழு உலகக் கண்ணோட்டம், ஆனால் அது அப்படி இல்லை.

நிரந்தர “தீய சாம்ராஜ்யத்தை” பற்றிய கதை வெறும் புனைகதை அல்ல, மாறாக, யதார்த்தத்தின் நேரடியான தலைகீழாக இருக்கிறது. அமெரிக்க முதலாளித்துவம், சோவியத் யூனியனோ அல்லது சோவியத்துக்கு பிந்தைய ரஷ்ய அரசோ அல்ல. மாறாக, உலகை அடிமைப்படுத்த தீர்மானித்துள்ள “பேரரசாக” இருக்கிறது.

விடுபட்டதன் வெளிப்பாடுகள்

அணுஆயுதப் போரின் ஆபத்துகள் மற்றும் பயங்கரங்களுடன் தொடர்புடைய ஒரு பிம்பம் சில தலைமுறை அமெரிக்கர்களின் உணர்வில் உறுதியாகப் பதிந்திருந்தால், அது “டெய்சி” (Daisy) விளம்பரம் என்று அழைக்கப்படும் லிண்டன் பி. ஜோன்சனின் (Lyndon B. Johnson) 60-வினாடி 1964 பிரச்சார விளம்பரமாகும். ஒரு சிறு பெண், டெய்சி செடியிலிருந்து இதழ்களைப் பறிக்கும்போது எண்ணுவதை இது சித்தரிக்கிறது, அதைத் தொடர்ந்து அணுசக்தி கவுண்டவுன் மற்றும் அணு வெடிப்பின் காட்சிகள் வரும்.

இன்னும், வெளித்தோற்றத்தில், விவரிக்கமுடியாதபடி, திருப்புமுனை: வெடிகுண்டு மற்றும் பனிப்போர் , அதன் 12 மணிநேர ஆவணப் படத்தில், இந்த 60-வினாடி பகுதியைச் சேர்க்க இடம் கிடைக்கவில்லை. ஏன்?

இது விடுபட்டிருப்பது ஒரு தவறாக நடக்கவில்லை. பிரபலமான பிரச்சார விளம்பரம் உட்பட, சோவியத் ஒன்றியத்துடனான அணு ஆயுத யுத்தம் தொடர்பாக அமெரிக்க அரசிற்குள் உள்ள கசப்பான பிரிவினைவாத பிளவுகள் பற்றிய விளக்கம் தேவைப்படும்: ஆவணப்படம் அதனைக் கடுமையாக மறுக்கும் ஒரு ஆய்வாக இருக்கிறது.

“டெய்சி” விளம்பரம் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பாரி கோல்ட்வாட்டரை (Barry Goldwater) குறிவைத்தது, ஏன் வெற்றி பெறவில்லை? (Why Not Victory?) என்ற நூலின் ஆசிரியர், சோவியத் ஒன்றியத்தை எதிர்கொள்வதில் அமெரிக்கா போதுமான அளவு ஆக்ரோஷமாக இல்லை, ஏனெனில் அமெரிக்க மக்கள் அணு ஆயுதப் போரைப் பற்றி மிகவும் பயந்துள்ளனர் என்று வாதிட்டார்.

உண்மையில், கோல்ட்வாட்டரின் பெயர் குறுநேரத் தொடரில் குறிப்பிடப்படவில்லை.

அரிசோனா குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர் “மரணத்தைப் பற்றிய ஒரு வெறித்தனமான பயம் அமெரிக்க நனவில் நுழைகிறது,” என்றும், “நிச்சயமாக நாங்கள் உயிருடன் இருக்க விரும்புகிறோம்; ஆனால் அதை விட நாங்கள் சுதந்திரமாக இருக்க விரும்புகிறோம்” என்று எழுதினார்.

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோன்சன், கோல்ட்வாட்டரின் இந்த முழக்கத்தை எதிர்த்தார், “உங்கள் இதயத்தில், அவர் சொல்வது சரி என்று உங்களுக்குத் தெரியும்”, என்ற சத்தத்துடன், “உங்கள் இதயத்தில், அவர் இருக்கலாம் என்று உங்களுக்குத் தெரியும்” – கோல்ட்வாட்டர் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதன் மூலம் உலகின் முடிவைக் கொண்டு வரக்கூடும் என்பதை இது குறிக்கிறது.

கோல்ட்வாட்டரின் பிரச்சாரத்தைப் பற்றி அவரது நன்கு அறியப்பட்ட “அமெரிக்க அரசியலில் சித்தப்பிரமை பாணி” (“The Paranoid Style in American Politics,”) என்ற கட்டுரைக்கு கருத்துரைத்த அமெரிக்க அரசியல் கோட்பாட்டாளர் ரிச்சர்ட் ஹாஃப்ஸ்டாடர், “1964 இல் தெளிவாகியது மற்றும் பிரச்சாரத்தில் செயல்தவிர்க்க முடியாதது, கோல்ட்வாட்டரின் கற்பனையானது தெர்மோ ஆணுவாயுத போரின் தாக்கங்களை ஒருபோதும் எதிர்கொள்ளவில்லை என்பது பொதுமக்களின் கருத்து” என்று குறிப்பிட்டார். “குடியரசுக் கட்சி வேட்பாளர், ஹாஃப்ஸ்டாடர் (Hofstadter) “முழு அழிவின் வாய்ப்பைப் பற்றி விசித்திரமாக சாதாரணமாகத் தோன்றியிருக்கிறது” என்று எழுதினார்.

அந்த நேரத்தில், ஜோன்சனும், அவருடன் அமெரிக்க அரசியல் அமைப்பின் மேலாதிக்கப் பிரிவுகளும், கோல்ட்வாட்டரை ஒரு அரை-பைத்தியக்காரன் என்று நிராகரித்தனர். சோவியத் யூனியனை தோற்கடிப்பதற்கான ஏகபோக தேடலில் பூமிக் கிரகத்தை அழிக்க அவர்கள் தயாராக இருந்தனர்.

எவ்வாறாயினும், 1970 களின் பிற்பகுதி மற்றும் 1980 களில் தொடங்கி, அமெரிக்க முதலாளித்துவத்தின் வளர்ந்து வரும் வீழ்ச்சியில் வேரூன்றி, சோவியத் ஒன்றியத்துடன் தொடர்புடைய “கட்டுப்படுத்தல்” கொள்கை “பின்வாங்குதல்” மூலம் மாற்றப்பட்டது. வாஷிங்டன், ஆப்கானிஸ்தானில் ஒசாமா பின்லேடன் தலைமையிலான முஜாஹிதீன் (Mujahideen) மற்றும் நிகரகுவாவில் உள்ள கான்ட்ராஸ் (Contras) போன்ற பினாமி படைகளுக்கு ஆயுதங்களை வழங்கியதுடன், ஒரு பாரிய அணு ஆயுதக் கட்டமைப்பையும் தொடங்கியது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பெரும் இராணுவ மற்றும் அரசியல் அழுத்தத்திற்கு முகங்கொடுத்து, சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தை கலைக்க முடிவெடுத்தது மற்றும் அரசுக்கு சொந்தமான தொழில்துறையின் செல்வத்தை அதன் சொந்த பாக்கெட்டுகளிலும் அதன் ஏகாதிபத்திய சம்பளதாரர்களின் பாக்கெட்டுகளிலும் செலுத்தியது.

சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு வளைகுடாப் போரிலிருந்து முன்னர் இருந்த யூகோஸ்லாவியா மீதான குண்டுவீச்சு வரை, “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற கட்டமைப்பிற்குள் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு வரை ஏகாதிபத்திய வன்முறையின் களியாட்டம் வெடிப்பதற்கு சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு வழிவகுத்தது.

இந்த காலகட்டத்தில், பனிப்போரின் போது சோவியத் ஒன்றியம் தொடர்பாக மிகவும் ஆக்கிரோஷமான நடவடிக்கைகளுக்கு வாதிடும் அரசியல் சக்திகள் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் ஆதிக்கம் செலுத்தின. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கோட்பாடு 1991 வோல் ஸ்ட்ரீட் ஜர்னலில் ஒரு தலையங்க அறிக்கையில் “பலாத்காரம் வேலை செய்கிறது” என்று தொகுக்கப்பட்டிருந்தது

திருப்புமுனை: வெடிகுண்டு மற்றும் பனிப்போர் தொடரில் ராபர்ட் கேட்ஸ்

திருப்புமுனை: வெடிகுண்டு மற்றும் பனிப்போர்: தொடரின் கடைசி இரண்டு பகுதிகளில் நேர்காணல் செய்யப்பட்டவர்களான ரைஸ் (Rice) மற்றும் கேட்ஸ் (Gates) இடம் இது நம்மை அழைத்துச் செல்கிறது.

இந்த இரண்டு ஏகாதிபத்திய கொள்ளைக்காரர்கள், அவர்களுக்கு இடையே ஆக்கிரமிப்பு போர் மற்றும் எண்ணற்ற பயங்கரவாத தாக்குதல்களின் சதித்திட்டத்தை மேற்பார்வையிட்டவர்கள் மற்றும் அதிர்ச்சியூட்டும் கொடூரமான சித்திரவதை வடிவங்களை வகுத்தவர்கள் அல்லது ஒப்புதல் அளித்தவர்கள், அமெரிக்க இராணுவத்தை எதிர்க்க விளாடிமிர் புட்டினின் துணிச்சலைப் பற்றிய தங்களின் திகில் மற்றும் திகைப்பைப் பற்றி அதிர்ச்சியைக் காட்டி, தாங்களே பேசிக்கொள்வதற்கு இந்த தளத்தை நீண்டநேரம் பயன்படுத்தியுள்ளார்கள்.

எனினும், உண்மையில், இந்த இருவரும் ஆவணப்படத்தில் தடையின்றி பொருந்துகிறார்கள் மற்றும் இராணுவ, இராஜதந்திர மூலோபாயத்தின் ஏறக்குறைய ஒரே மாதிரியான ஒரே கலாச்சாரத்தில் டசின் கணக்கான பிற நேர்காணல்களுடன் பெரும்பாலும் ஜனநாயகக் கட்சியினர், இணைந்துள்ளனர்.

தொடரின் இரண்டாம் பாதியில் உள்ள ஒட்டுமொத்த கருத்து, தொடர்களை அறிவிக்கும் எஸ்தோனிய பிரதம மந்திரி காஜா கல்லாஸின் (Kaja Kallas) சமூக ஊடக இடுகை பொருத்தமான வெளிப்பாட்டைக் காண்பிக்கிறது:

அதாவது பனிப்போர் பற்றிய புதிய @netflix தொடர் வெளியாகியுள்ளது. எஸ்டோனியா மற்றும் எனது குடும்பத்தின் வரலாற்றை வரைந்து, ரஷ்ய ஆக்கிரமிப்பை உக்ரேனில் ஏன் பலன் கொடுக்க முடியாது என்பதை விளக்குகிறேன். நாம் தோல்வியுற்றால், நாம் மிகவும் ஆபத்தான உலகத்திற்கு விழித்துக்கொள்வோம். பலவீனம் தாக்குபவர்களைத் தூண்டுகிறது, அது வலிமை அல்ல.

உலக விவகாரங்களுக்கான ஹென்றி ஏ. கிசிங்சர் மையத்தைச் (Henry A. Kissinger Center for Global Affairs) சேர்ந்த மேரி சரோட்டின் (Mary Sarotte) இறுதி அத்தியாயத்தில் இந்த பார்வை ஓரளவு அதிக நுட்பத்துடன் தொகுக்கப்பட்டுள்ளது, அவர் கூறுகிறார்:

அணு ஆயுதப் பேரழிவின் அபாயம் இருந்தபோதிலும், புட்டின் என்ன செய்கிறார் என்பதை நாம் எவ்வாறு அறிந்துகொள்வது மற்றும் நமது மதிப்புகளைப் பாதுகாப்பது எப்படி? அது மிகப்பெரிய சவால். அதிர்ஷ்டவசமாக, பனிப்போரின் வரலாறு எங்களிடம் உள்ளது. அது எங்களுக்கு வழிகாட்ட உதவுகிறது, ஏனெனில் பனிப்போரின் போது நாம் கற்றுக்கொண்டவை மீண்டும் எங்களுக்குத் தேவைப்படும். ஆகவே, அணு ஆயுத அதிகரிப்பின் அபாயத்தைப் பற்றிய முழு நனவில் கூட மதிப்புகளுக்காக நிற்கவும், தீமையை எதிர்கொள்வதில் சரியானதை நிலைநிறுத்தவும் ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்.

அணு ஆயுத மறுசீரமைப்பு மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் கைவிட்டு, பின்லேடன் மற்றும் கொன்ட்ராஸ் போன்ற பயங்கரவாதிகளை ஆயுதம் ஏந்த வைத்ததன் மூலமும், அணுஆயுத அழிப்பை சகித்துக் கொள்ளத் தயாராக இருந்ததன் மூலமும் அமெரிக்கா, பனிப்போரை “வெற்றி பெற்றது” என்பதே அடிப்படைக் கருத்து.

இந்த பொறுப்பற்ற கோட்பாட்டின் படி, அணு ஆயுதப் போர் விளையாட்டில் வெற்றி பெறுபவர் அதிக ஆபத்துக்கு தயாராக இருக்கிறார். 1983 ஆம் ஆண்டு வெளியான WarGames திரைப்படத்தின் முடிவு, “வெற்றி பெற ஒரே வழி, விளையாடாமல் இருப்பதே” அத்துடன், வெற்றிக்கான ஒரே வழி, இறக்கத் தயாராக இருப்பதுதான்.

பனிப்போரில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் “வெற்றி”, உலகின் இரண்டாவது பெரிய அணு ஆயுதக் களஞ்சியத்தை வைத்திருக்கும் நாடான ரஷ்யாவை உடைக்க கட்டாயப்படுத்துவதன் மூலம் இன்னும் பெரிய அளவில் மீண்டும் மீண்டும் செய்யப்பட உள்ளது.

கோல்ட்வாட்டரின் சீடர்கள், ஒரு காலத்தில் அமெரிக்க அரசியலின் “பித்துப்பிடித்தவர்கள்”, “சித்தப்பிரமை பாணியை” பின்பற்றுபவர்களாக இருந்தனர். இது, இப்போது “நவ பழமைவாத” ரைஸ் முதல் முன்னாள் கோல்ட்வாட்டர் குடியரசுக் கட்சியிலிருந்து ஜனநாயகக் கட்சியின் போர்வெறியாளராக மாறிய வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் வரை கிட்டத்தட்ட உத்தியோகபூர்வ அமெரிக்க இராணுவம் மற்றும் மூலோபாய சிந்தனையின் முழுமையையும் உள்ளடக்கியிருக்கிறார்கள்.

அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் இராணுவ வன்முறையின் சக்தியின் தொடர்ச்சியான அழைப்புகள், எச்சரிக்கையானது தேசத்துரோகத்திற்குச் சமம் என்ற பிரகடனம், ஆழமான மற்றும் சரிசெய்ய முடியாத நெருக்கடியின் வெளிப்பாடாகும்.

அமெரிக்க முதலாளித்துவம் திவாலாகியுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியம் கடனில் மூழ்கி, ஆயுதங்களை உருவாக்குவதற்கும், போர்களை நடத்துவதற்கும், முதலீட்டு மோசடி திட்டங்களை செயல்படுத்துவதற்கும், பொருளாதாரத்தை அகலத் திறந்த நிலையில் வைத்து, ஒரு பேரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது, அதில் இருந்து எந்த வன்முறை நடவடிக்கைகளும் அதைக் காப்பாற்ற முடியாது, அது புரட்சிகரமாக தூக்கியெறியப்பட்டு சோசலிசத்தைக் கொண்டு பிரதியீடு செய்யப்பட வேண்டும்.

Loading