மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஈரானிய நாகரீகத்தை “இன்றிரவு அழிந்துபோகச் செய்வேன்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தலுக்குப் பதிலளிக்கும் விதமாக, உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழுத் தலைவர் டேவிட் நோர்த் செவ்வாய்க்கிழமை காலை பின்வரும் அறிக்கையை வெளியிட்டார்.

கடந்த ஒரு மணி நேரத்திற்குள், ஈரான் மக்களுக்கு எதிராக டொனால்ட் ட்ரம்ப் மற்றுமொரு அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.
“ஒரு முழு நாகரீகமே இன்றிரவு அழிந்துபோகும்” என்று அவர் கூறியுள்ளார்.
இந்தக் குற்றம், ஒருவேளை நிறைவேற்றப்பட்டால், இரண்டாம் உலகப் போரின் போது நாஜிக்களால் இழைக்கப்பட்ட குற்றங்களுடன் மட்டுமே ஒப்பிடத்தக்க, முற்றிலும் அரக்கத்தனமான பரிமாணங்களைக் கொண்ட ஒரு செயலில் அமெரிக்காவைக் குற்றவாளியாக்கும்.
இந்தக் கடைசி நேரத்திலாவது, உலகம் முழுவதிலுமுள்ள தொழிலாள வர்க்கம் இந்தக் கொடூரமான குற்றத்திற்கு எதிராகத் தனது எதிர்ப்பைப் பிரகடனம் செய்ய வேண்டும். இது நிறுத்தப்பட வேண்டும். இது நடப்பதற்கு அனுமதிக்கப்படக் கூடாது.
ஈரான் மக்களுடனான எமது ஒற்றுமையை நாங்கள் பிரகடனம் செய்கிறோம். இந்த நடவடிக்கை இடம்பெறுவதற்கோ அல்லது இதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படாமல் தப்பிப்பதற்கோ நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
இது தொழிலாள வர்க்கத்தின் பொறுப்பாகும், உண்மையில் இது முழு மனிதகுலத்தினதும் பொறுப்பாகும்.
