David North, 1991
ஜெரி ஹீலியும் நான்காம் அகிலத்தின் வரலாற்றில் அவரது இடமும்

ஜெரி ஹீலி (1913-1989) நான்காம் அகிலத்தின் நீண்டகால தலைவராவர். அவர் 1985 இல் அனைத்துலகக் குழுவுடன் முறித்துக் கொள்ளும் வரை பிரிட்டிஷ் மற்றும் சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் அவரது போராட்டம் ஐந்து தசாப்தங்கள் நீடித்துள்ளது.

ஹீலியின் அரசியல் வாழ்க்கை (அவர் 1928 இல் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து 1937 இல் வெளியேற்றப்பட்டார்) கம்யூனிச அகிலத்தின் சீரழிவு, 1930 களின் பேரழிவுகரமான துரோகங்கள் மற்றும் தோல்விகள், 1938 இல் நான்காம் அகிலத்தை ஸ்தாபித்தல், 1940 இல் ட்ரொட்ஸ்கியின் படுகொலை மற்றும் இரண்டாம் உலகப் போர் போருக்குப் பிந்தைய காலம் வரை வியாபித்துள்ளது.

'அத்தகைய மனிதனின் வாழ்க்கை, தவிர்க்க முடியாவாறு ஒரு முழு சகாப்தத்தின் செறிவான மற்றும் அர்த்தமுள்ள வெளிப்பாடாக உள்ளது. ஹீலியின் வாழ்க்கை வரலாற்றைப் படிப்பது என்பது நான்காம் அகிலத்தின் அத்தியாவசியப் பிரச்சினைகளை விமர்சன ரீதியாக ஆராய்வதாகும், அதன் வளர்ச்சியுடன் ஜெரி ஹீலியின் வாழ்க்கை பிரிக்கமுடியாத வகையில் பிணைக்கப்பட்டுள்ளது.'