Socialist Equality Party (US)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

பூகோளமயமாக்கலும் தேசிய பிரச்சினையும்

230. சோவியத் ஒன்றியத்தின் கலைப்பின் அரசியல் விளைவுகளில், தேசியவாதம் மற்றும் புதிய அரசுகளை உருவாக்க கோரும் பிரிவினைவாத இயக்கங்கள் முளைவிட ஆரம்பித்தன. சோவியத் சிதைவுக்கு பின்னர் பல்வேறு தேசியம், இனம் மற்றும் மதம் அடிப்படையிலான சமூக பதட்டங்களை புத்துயிரூட்டும் வகையில் இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிந்தைய பூகோள-அரசியல் கட்டமைப்புக்குள் நிர்வகிக்கப்பட்ட பல்தேசிய அரசுகள் வெளிப்பட்டன. பெரும்பாலான விடயங்களில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளால் தங்களின் சொந்த பூகோள-மூலோபாய இலக்குகளை பின்பற்றுவதற்காக இந்த பதட்டங்கள் அதிகரிக்கப்பட்டன. 1990களின் ஆரம்பத்தில் யூகோஸ்லாவியாவிற்குள் அதன் அனைத்து கொடூரமான விளைவுகளுடன் ஏற்பட்ட அதன் பிளவு, அமெரிக்கா மற்றும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் மூலோபாய நோக்கங்களின் விளைவுகளால் ஏற்பட்டதாகும். பழைய சோவியத் ஒன்றியத்தின் பிளவும், புதிய "சுதந்திர" நாடுகளின் உருவாக்கமும் குறிப்பாக அமெரிக்காவிற்கு, காகசஸ் மற்றும் மத்திய ஆசியாவில் அமெரிக்க அதிகாரத்தை நிலைநாட்ட அசாதாரண வாய்ப்புகளை அளித்தது. மேலும் ரஷ்யாவின் எல்லையோரங்களில் கூட, செசென்யாவில் உருவானது போன்ற பிரிவினைவாத இயக்கங்கள் அமெரிக்க வெளிநாட்டு துறையால் பூகோள மேலாதிக்கத்தை முன்னிறுத்துவதில் முக்கிய சொத்துக்களாக பார்க்கப்பட்டன.

231. எவ்வாறிருப்பினும், அரசியல் நோக்கங்கள் மட்டுமே வகுப்புவாத தூண்டுதலை தீவிரப்படுத்தும் ஆதாரமாக இருக்கவில்லை. பூகோளமயமாக்கலின் முன்னேற்றம்... இருக்கும் அரசுகளில் பிளவை கோரும் ஒரு புதிய வகையிலான தேசியவாத இயக்கங்களுக்கான புறநிலைரீதியான உந்துதலை வழங்கியது என ICFI விளக்கியது. சர்வதேசரீதியாக இயங்கும் மூலதனமானது, சிறிய பிராந்தியங்களும் நேரடியாக உலக சந்தையில் தங்களைத் தாங்களே இணைத்துக் கொள்வதற்கான திறனை அளித்துள்ளது. ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் தாய்வான் ஆகியவை இந்த வளர்ச்சியின் புதிய மாதிரிகளாக உருவாகியுள்ளன. போதிய போக்குவரத்து தொடர்புகள், உள்கட்டமைப்பு மற்றும் மலிவு கூலியுழைப்பு தொழிலாளர்களை அளிக்கும் ஒரு சிறிய கடற்கரை நிலப்பகுதியானது, குறைந்த ஆக்கபூர்வ நிலங்களை கொண்ட ஒரு பெரிய நாட்டை விட நிறைய பன்னாட்டு மூலதனங்களை ஈர்க்கும் தளமாகலாம் என்பதை நிரூபிக்கலாம். [134]

232. தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தின் நலன்களுக்காக, அதில் விரோத மனப்பான்மை இருந்தாலும் கூட பிரிவினைவாத இயக்கங்களுக்கு எதிராக ஒரு தீவிர விமர்சனரீதியான அணுகுமுறை தேவைப்படுகிறது என்று அனைத்துலகக் குழு வலியுறுத்தியது. "சுய நிர்ணயத்திற்கான தேசங்களின் உரிமை" என்ற தொடர்ச்சியான வகையில் பிடிவாதமாக திரும்பக் கூறும் முழக்கமானது, தேசிய கோரிக்கைகளுக்கான ஓர் உறுதியான வரலாற்றுரீதியான, சமூக-பொருளாதார மற்றும் அரசியல் ஆய்விற்கான ஒரு மாற்றாக இல்லை. பொதுவாக சமகாலத்து தேசிய-பிரிவினைவாத போராட்டங்கள் பொதுவாக அப்பட்டமான பிற்போகுவாத சமூகப் பொருளாதார மற்றும் முன்னோக்குகளால் பண்பிடப்பட்ட காலங்களின் போது இது மிகவும் அவசியமானதாக இருந்தது. வெவ்வேறு வரலாற்று காலங்களில் தேசிய இயக்கங்களை ஒப்பிடும் போது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு குறிப்பிட்டதாவது:

இந்தியா மற்றும் சீனாவில், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் முற்றிலும் வேறுபட்ட மக்களை ஐக்கியப்படுத்துவதில் தேசிய இயக்கங்கள் ஒரு முற்போக்கு பணியை நிலைநாட்டின. அப்பணி தேசிய முதலாளித்துவ தலைமையின் கீழ் சாத்தியப்படாது என்பது நிரூபிக்கப்பட்டது. தேசியவாதத்தின் இந்த புதிய வடிவம், உள்நாட்டு சுரண்டல்வாதிகளின் நலன்களுக்காக, இருக்கும் அரசுகளை பிரிக்கும் நோக்கில் இன, மொழி மற்றும் மதவாத வழியில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கிறது. இதுபோன்ற போராட்டங்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு போராட்டத்துடனோ அல்லது ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக விருப்பங்களை உள்ளடக்கிய எந்த கருத்துடனோ தொடர்பற்றது. அவர்கள், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும், வர்க்கப் போராட்டத்தை இன-சமூக யுத்தத்திற்குள் திசை திருப்பவும் மட்டுமே சேவைசெய்கின்றனர்.[135]

233. எதிர்பார்த்த அளவில், Spartacist [ஸ்பாட்டசிஸ்ட்] கழகத்தின் குட்டி-முதலாளித்துவ தீவிரப்போக்கினர், "டேவிட் நோர்த் சுயநிர்ணய உரிமையை 'ஒழித்து' கட்டுகிறார்" என்று அறிவித்து சந்தர்ப்பத்திற்கேற்ப பல்வேறு பிரிவினைவாத குழுக்களுக்கேற்ப தங்களைத் தாங்களே மாற்றிக் கொண்டார்கள்.[136]

இந்த பழியுரையின் பொருத்தமற்ற முறைப்பாடுக்கு அப்பாற்பட்டு, சுயநிர்ணயம் என்ற கேள்விக்கு லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி இருவரின் அணுகுமுறைகளையும் பொய்மைப்படுத்துவதன் அடிப்படையில் ஸ்பாட்டசிஸ்ட் இன் தாக்குதல் அமைந்திருந்தது. சுயநிர்ணய கோரிக்கையானது எந்தக் காலத்திலும் மற்றும் அனைத்து சூழல்களின் கீழும் மாற்றிக்கொள்ளக்கூடிய ஒரு உறுதிமொழி கடன்பத்திரமென ஒருபோதும் மார்க்சிசவாதிகள் வரையறுக்கவில்லை. அதற்கும் மேலாக, இந்த கோரிக்கையை ஒரு சர்வதேச புரட்சிகர வர்க்கமான பாட்டாளிகளின் நலன்களுக்கு மேலாக அவர்கள் ஒருபோதும் உயர்த்தி பிடிக்கவில்லை.

1913 இல், தேசிய இயக்கங்களின் வித்தியாசமான வரலாறு-நிலைமைக்குட்பட்ட வகைகளை லெனின் மிக கவனமாக வரையறுத்தார், தேசிய இயக்கங்களின் சுயமாக-நிர்ணயப்பட்ட வகைகளின் மெய்யான உள்ளடங்கள் பற்றிய தங்களின் மதிப்பீட்டில் மார்க்சிசவாதிகள் குறைவான கவனத்தை செலுத்த கடமைப்படவில்லை. ஒன்று அல்லது பல அரசியல் அமைப்புகளின் சுயநிர்ணய கோரிக்கைகளின் மெய்யான உள்ளடக்கத்தை பற்றிய தங்களின் மதிப்பீட்டிலும் மார்க்சியவாதிகள் குறைவான கவனத்தை செலுத்த கடமைப்படவில்லை. ICFI குறிப்பிட்டது போல:

ஒரு காலத்தில் முற்போக்கு மற்றும் புரட்சிகர கருத்துக்களை கொண்ட சூத்திரங்களும், வாசகங்களும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்ட அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன என்பது மார்க்சிச போராட்ட வரலாற்றில் அடிக்கடி நிகழ்ந்துள்ளது. தேசிய சுயநிர்ணயம் இதேபோன்ற நிலையை அளிக்கிறது.

சுயநிர்ணயத்திற்கான உரிமை குறித்து லெனின் எண்பதிற்கும் மேலான ஆண்டுகளுக்கு முன்னால் வரையறுத்த விதத்தில் இருந்து மிகவும் வேறுபட்ட வகையில் எடுத்துக் கொள்ளும் நிலைக்கு அது வந்துள்ளது. சுயநிர்ணயத்திற்கான உரிமையை மார்க்சிசவாதிகள் மட்டும் முன்னெடுக்கவில்லை, பின்தங்கிய நாடுகளில் இருந்த தேசியவாத முதலாளித்துவங்களும் மற்றும் ஏகாதிபத்தியவாதிகளும் கூட அதை முன்னெடுத்தார்கள். இரண்டாம் உலக யுத்த முடிவிலிருந்து, இருக்கும் நாடுகளை பிரிக்கும் நோக்கம் கொண்ட திட்டங்களை நியாயப்படுத்த இந்த "உரிமை" ஒன்று அல்லது பல ஏகாதிபத்திய சக்திகளால் தூண்டிவிடப்பட்டு வருகிறது.[137]

234. பொஸ்னியா, இந்தியாவில் காஷ்மீர் மற்றும் பஞ்சாப், கியூபெக் மற்றும் இலங்கையில் ஸ்பாட்டசிஸ்ட் (Spartacist) கழகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய பிரிவினைவாத போராட்டங்கள், குறிப்பாக சுயநிர்ணய கோரிக்கையின் பிற்போக்குவாத பண்புகளை கொண்டவைகளில் மிகத் தெளிவான வெளிப்பாட்டை கண்டன. பொஸ்னியாவை பொறுத்த வரை, மக்களின் ஒரு பிரிவிரினரான முஸ்லிம்களிடையே மத அடிப்படையிலான தேசியவாதத்தின் ஏகாதிபத்திய திரித்தல்கள், யூகோஸ்லாவேகியாவை பிரிப்பதற்கான பரந்த பிரச்சார நலன்களுக்கு உதவின. பஞ்சாப் மற்றும் காஷ்மீரின் தேசிய பிரிவினைவாத தூண்டுதலில், ஸ்பாட்டசிஸ்டுக்கள் குறிப்பாக காஷ்மீரை பொறுத்த வரையில் இந்த மத அடிப்படையிலான போராட்டங்களின் பிற்போக்குவாத பண்புகளையும் மற்றும் அப்பிராந்தியத்தின் முக்கிய தேசிய அரசாங்கங்களுக்கு இடையிலான அவர்களின் பரந்த பூகோள-மூலோபாய முரண்பாடுகளுடனான தொடர்புகளையும் முழுமையாக தவிர்க்க விரும்பினார்கள். கியூபெக்கை பொறுத்த வரை, பல தசாப்தங்களாக இருந்த தேசிய இயக்கங்கள் கனேடிய முதலாளித்துவத்தின் வேறுபட்ட பிரிவினரின் முரண்படும் நலன்களை தீர்த்துக்கொள்ளும் வழியாக சேவை செய்தது. தொழிலாள வர்க்கத்துடனான உறவுகளில், கியூபெக்கின் ஆளும் வர்க்கம் இரக்கமற்ற தன்மையில் ஒன்டாரியோவின் ஆங்கிலோபோன் முதலாளித்துவம் அல்லது சாஸ்கட்செவனை விட குறைந்துவிடவில்லை. இறுதியாக, தமிழ் தேசியவாதத்தை ஸ்பாட்டசிஸ்டினரின் ஊக்குவிப்பானது தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவினைவாத நோக்கத்திடம் ஓர் அரசியல் சரணடைவை வெளிப்படுத்தியதுடன், இலங்கை முதலாளித்துவ அரசாங்கத்திற்கு எதிராக சிங்களம் பேசும் மற்றும் தமிழ் பேசும் தொழிலாள வர்க்கத்தை ஒரு பொதுவான போராட்டத்தில் ஐக்கியப்படுத்துவதற்கான பல தசாப்த ட்ரொட்ஸ்கிச இயக்க போராட்டங்களின் நிராகரிப்பையும் அது எடுத்துகாட்டியது. ஓர் ஆதாரமற்ற மற்றும் முந்தைய-வரலாற்றுத் தன்மையுடன் தேசிய போராட்டங்களை இணைத்துக் கொண்ட, பிரிவினைவாத போராளிகள் போன்ற குட்டி முதலாளித்துவ குழுக்கள், ஒடுக்கப்பட்ட சிறுபான்மை சமூகத்தின் மத்தியில் தேசிய உணர்வுகளை தூண்டிவிடுவதில் தொழிலாள வர்க்கத்தின் சந்தர்ப்பவாத அமைப்புகளால் செய்யப்பட்ட அரசியல் காட்டிகொடுப்புகளின் விளைவுகளை புறக்கணித்தன. தமிழ் சமூகத்தை பொறுத்த மட்டில், 1960 மற்றும் 1970களில் தேசியவாத போக்குகளின் வளர்ச்சியானது சமசமாசக் கட்சியின் அரசியல் காட்டிகொடுப்புடன் இணைக்கப்பட்டிருந்தது. அனைத்திற்கும் மேலாக, 1964இல் முதலாளித்துவ கூட்டரசாங்கத்தில் அது இடம்பெற்றது மற்றும் அதன் தொடர்ச்சியாக தமிழ் மொழிக்கு எதிராக ஸ்தாபன ரீதியாக பாரபட்சம் கொண்ட, 1972இல் கொண்டுவரப்பட்ட அரசியல் அமைப்பை வரைவதில் அது பங்களித்தது.

235. சுயநிர்ணய கோரிக்கையின் முக்கியத்துவம் மற்றும் தேசியவாத முதலாளித்துவத்திற்கு எதிரான அனைத்துலக குழுவின் போராட்டம் மற்றும் குட்டி முதலாளித்துவ அனுதாபிகள் குறித்த அதன் விளக்கங்கள் நான்காம் அகிலத்தின் புரட்சிகர சர்வதேசவாத அமைப்புகளை வலுப்படுத்த பாரியளவில் பங்களிப்பு செய்தன. சோவியத் ஒன்றியத்தின் பொறிவு மற்றும் இந்த நிகழ்வால் உருவான பாரிய அரசியல் குழப்பங்களுக்கு பின்னர், நிரந்தர புரட்சி தத்துவத்தின் அடிப்படையில் மட்டுமே தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு உண்மையான சர்வதேச முன்னோக்கினை உருவாக்க முடியும் என்பதை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆய்வு உறுதி செய்தது.


[134]

Globalization and the International Working Class: A Marxist Assessment, Statement of the International Committee of the Fourth International (Oak Park, MI: Mehring Books, 1998), p. 108.

[135]

Ibid, p. 109.

[136]

Cited in Globalization and the Working Class, p. 109.

[137]

Globalization and the Working Class, p. 112.