சர்வதேச மே தினம் இணையவழி கூட்டம்நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு
கொரோனா வைரஸின் ஒராண்டு:உலகளாவிய தொற்றுநோய் முதல் உலகளாவிய வர்க்கப் போராட்டம் வரை
உலக சோசலிச வலைத் தளம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் ஏற்பாடு செய்துள்ள, உலகெங்கிலும் இருந்து பேச்சாளர்கள் பங்குபற்றும் இணையவழி கூட்டம்.
உடன் பதிவுசெய்துகொள்ளுங்கள்
சனிக்கிழமைமே 1இரவு 8.30இலங்கை மற்றும் இந்திய நேரம்
Los Angeles: 8:00 am, Saturday, May 1
Mexico City: 10:00 am, Saturday, May 1
São Paulo: 12:00 pm, Saturday, May 1
London: 4:00 pm, Saturday, May 1
Berlin: 5:00 pm, Saturday, May 1
Istanbul: 6:00 pm, Saturday, May 1
Mumbai: 8:30 pm, Saturday, May 1
Beijing: 11:00 pm, Saturday, May 1
Tokyo: 12:00 am, Sunday, May 2
Sydney: 1:00 am, Sunday, May 2
மே 1 அன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அதனது வருடாந்த இணையவழி மே தின கூட்டத்தை நடத்துகிறது. இந்த கூட்டத்தில் உலகெங்கிலும் இருந்து அனைத்துலகக் குழுவினதும் மற்றும் அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளினதும் பிரதிநிதிகள் உரையாற்றவுள்ளனர். இது wsws.org/mayday இல் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
உலகளாவிய கொவிட்-19 தொற்றுநோயின் புதிய எழுச்சி நிலைமைகளின் கீழேயே இந்த ஆண்டின் மே தினம் நடத்தப்படுகிறது. ஒரு வருடத்திற்கு முன்னர் தொற்றுநோய் தோன்றியதில் இருந்து, கிட்டத்தட்ட மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மரணித்துள்ளதுடன், 136 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொற்று வகைகளின் தோற்றத்தால் தூண்டப்பட்ட, புதிய பரவல் பற்றிய ஏழு நாள் சராசரி எண்ணிக்கை இப்போது 7 இலட்சத்தை நெருங்குவதுடன் ஜனவரி மாதத்தில் இருந்த அதன் முந்தைய உச்சத்தை மீண்டும் நெருங்கியுள்ளது. உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்து கொண்டிருக்கின்றார்கள்.
தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் வெறுமனே ஒரு மருத்துவ பிரச்சினை அல்ல என்பதை கடந்த ஆண்டின் அனுபவம் நிரூபித்துள்ளது. முதலாளித்துவ அமைப்பிற்கு எதிரான அரசியல் போராட்டத்தின் அவசியத்தை அது வலியுறுத்தியுள்ளது. சமூகத்தை அழித்து முதலாளித்துவ இலாபத்திற்காக நடவடிக்கை எடுத்தல், சிறு தன்னலக்குழுக்கள் பேராசையுடன் அப்பட்டமாக தனிப்பட்ட செல்வத்தை குவித்தல் மற்றும் உலக மக்களின் உயிர் வாழ்வு மற்றும் நலனில் காட்டப்படும் மனிதாபிமானமற்ற அலட்சியமும் ஒரு உலகளாவிய சமூகப் பேரழிவை உருவாக்கியுள்ளது.
உலகளாவிய தொற்றுநோய் உலகளாவிய வர்க்கப் போராட்டமாக மிகவும் வெளிப்படையாக வளர்ந்து வருகிறது. தொற்றுநோய்க்கு ஆளும் வர்க்கத்தின் பிரதிபலிப்பானது வெகுஜன மரணத்தையும் சமூக துயரத்தையுமே உருவாக்கியுள்ளது. இது உலகம் முழுவதும் சமூக கோபம் மற்றும் எதிர்ப்பின் வளர்ச்சியைத் தூண்டிவிட்டுக்கொண்டிகின்றது. இந்த போராட்டங்கள் ஒரு சர்வதேச, புரட்சிகர மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தால் வழிநடத்தப்பட வேண்டும்.
கூட்டத்தில் ஆற்றப்படும் உரைகளின் தமிழாக்கம் விரைவில் வெளியிடப்படும்.
கூட்டத்திற்கு பதிவு செய்துகொள்ளுங்கள்
கூட்டத்தைப் பற்றிய நினைவூட்டல் மற்றும் பின்னூட்டங்களையும் மற்றும் WSWS ஏற்பாடு செய்கின்ற எதிர்கால நிகழ்வுகள் பற்றிய தகவல்களையும் பெறுவதற்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்யுங்கள்.