India

பெரும்தொற்றிலிருந்து இலாபமடைதல்: கிலியாட் சயன்செஸ் நிறுவனம் கோவிட்-19 இலிருந்து இலாபமடைகின்றது

Bryan Dyne, 9 July 2020

ஒரு கிராம் மருந்தின் பத்தில் ஒரு பகுதியைக் கொண்ட ரெம்டெசிவிர் என்ற ஒரு குப்பிக்கு 520 டாலர் செலவாகும். இது அதனளவிலான தங்கத்தின் எடையை விட நூறு மடங்கு அதிக விலையானதாகும்

இலட்சக்கணக்கான இந்திய நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் தனியார்மயமாக்கலுக்கு எதிராக மூன்று நாள் வேலைநிறுத்தத்தை நடத்துகின்றனர்

By Arun Kumar, 8 July 2020

எந்தவொரு வேலைநிறுத்தமும் சட்டவிரோதமாக கருதப்படும் என்ற CIL தலைவர் பிரமோத் அகர்வால் எச்சரிக்கையை வெளிப்படையாக மீறி சுரங்கத் தொழிலாளர்கள் தங்கள் வேலை நிறுத்த நடவடிக்கையை தொடங்கினர்

தென்னிந்திய நகரில் பொலிஸ் சித்திரவதை கொலைகளுக்கு எதிராக வளர்ந்து வரும் போராட்டங்கள்

By Arun Kumar, 6 July 2020

சாத்தான்குளம் நகரில், இரண்டு சிறு கடைக்காரர்களான ஜெயராஜ், மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை பொலிஸ் சித்திரவதை கொலை செய்ததிற்கு எதிராக வெகுஜன போராட்டங்கள் வளர்ச்சி கண்டன

இந்தியாவின் எதிர்க்கட்சிகள் சீனாவுடன் எல்லை மோதலில் மோடியின் போர்க்குணமிக்க நிலைப்பாட்டை ஆதரிக்கின்றன

By Wasantha Rupasinghe, 2 July 2020

மோடியின் போர்க்குணமிக்க பிரகடனங்கள் மற்றும் இராணுவ அச்சுறுத்தல்கள் சீனாவை மட்டும் குறி வைத்தது அல்ல, ஆனால் அது உள்நாட்டு அரசியலை கூர்மையாக வலது பக்கம் தள்ளுவதையும் கூட நோக்கமாகக் கொண்டுள்ளன

ஆசியாவில் COVID-19 தொற்றுநோயின் மையப்புள்ளியாக இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது

By Wasantha Rupasinghe, 27 June 2020

அரசாங்கத்தின் உயர்மட்ட விஞ்ஞான நிபுணர்களில் ஒருவர் பொருளாதாரத்தை மீண்டும் திறக்கும் கொள்கையால் 2 மில்லியன் உயிர்களை இழக்க நேரிடும் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார்

இந்திய-சீன மோதல் ரஷ்ய வெளியுறவுக் கொள்கையை பலவீனப்படுத்தும் அச்சுறுத்தலை கொண்டுள்ளது

By Clara Weiss, 24 June 2020

ரஷ்யா-இந்தியா-சீனா முத்தரப்பு குழுமத்தின் (RIC) ஒரு பகுதியாக மாஸ்கோவில் சீன, இந்திய வெளியுறவு அமைச்சர்களுடன் ரஷ்யா இன்று ஒரு கூட்டத்தை நடத்துகிறது

இந்தியாவும் சீனாவும் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிக்கு தொடர்ந்து துருப்புக்கள், ஆயுதங்களை விரைந்து அனுப்புகின்றன

By Keith Jones, 23 June 2020

இந்தியப் பெருங்கடலில் சீனக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை எதிர்கொள்வதற்காக இந்தியாவின் கடற்படை எச்சரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது

யுத்த பதட்டங்கள் தொடரும் போது இந்தியாவும் சீனாவும் கத்தி விளிம்பில் உள்ளன

By Shuvu Batta and Keith Jones, 20 June 2020

தங்கள் எல்லைப் படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டால் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட மாட்டாது என்று பெய்ஜிங்குடனான பல தசாப்த கால ஒப்பந்தத்தை நிராகரிப்பதை புது தில்லி பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது

அமெரிக்கா இந்திய-சீன மோதலை தூண்டுகிறது, எல்லை மோதலுக்கு சீன “வலியத்தாக்குதலை” குற்றம் சாட்டுகிறது

By Keith Jones, 20 June 2020

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட மற்றும் போட்டி அணுசக்தி சக்திகளுக்கும் இடையில் ஒரு மோதலைத் தூண்டுவது குறித்து ட்ரம்ப் நிர்வாகம் என்ன தான் அடக்கி வைத்திருந்தாலும் இப்போது அது தெளிவாக புறந்தள்ளப்பட்டுள்ளது

இந்தியா-சீனா எல்லை மோதலும் உலக புவிசார் அரசியலின் தீப்பற்றக்கூடிய நிலையும்

Keith Jones, 19 June 2020

45 ஆண்டுகளில் இந்திய சீன துருப்புக்களுக்கு இடையிலான அபாயகரமான மோதலாக உள்ளது

இந்தியா-சீனா எல்லை மோதலில் டஜன் கணக்கானவர்கள் இறக்கின்றனர்

By Keith Jones, 18 June 2020

1962 ல் இரு நாடுகளும் சிறிய எல்லைப் போரை நடத்தியதற்கு பின்னர் இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையிலான மிகக் கடுமையான எல்லை மோதல் டஜன் கணக்கான உயிரிழப்புகளுக்கு வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது

தமிழ்நாட்டு அரசாங்கத்தின் வேலைக்குத் திரும்பும் கொள்கையால் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகின்றனர்

By V. Jayasakthi, 17 June 2020

பெரும் வணிகத்தின் இலாபத்தை காப்பதன் பேரில் தமிழ்நாட்டு அரசாங்கம் மீண்டும் தொழிலாளர்ளை வேலைக்குச் செல்ல நிர்ப்பந்தித்துள்ளதன் விளைவாக மாநிலத்தில் கொரோனா தீவிரமாக பரவிவருகின்றது.

இந்திய அனல்மின் நிலைய வெடிப்பில் நான்கு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்

By Arun Kumar, 8 June 2020

தென்னிந்தியாவில் உள்ள நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட பிரமாண்டமான வெடிப்பு நான்கு தொழிலாளர்களின் உயிரை பறித்தது

தெற்காசியாவில் மில்லியன் கணக்கானவர்கள் தொற்றுநோய் சம்பந்தமாக ஆளும் உயரடுக்கின் இயலாமையை கண்டு திகிலுடனும் பீதியுடனும் செயல்படுகின்றனர்

By Wije Dias, 2 June 2020

முதலாளித்துவ அமைப்பானது தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்தே பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான சாதாரண மக்களை அடையாளம் காணவோ அல்லது சிகிச்சையளிக்கவோ தவறிவிட்டது.

இந்தியா முழுவதும் கோவிட்-19 வெடித்துப் பரவும் நிலையில், மும்பை சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறை நோயாளிகளால் நிரம்பி வழிகின்றது

By Wasantha Rupasinghe, 1 June 2020

கொரோனா வைரஸ் நோயாளிகளின் விரைவான பெருக்கத்தின் காரணமாக, இந்தியாவின் வணிக தலைநகரமும், இரண்டாவது பெரிய நகரமுமான மும்பையில் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறை சீர்குலைந்து வருகிறது

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகின்ற நிலையில் அரசாங்கம் தொழிலாளர்களை பணிக்கு திரும்பும்படி நெருக்குகின்றது

V Jayasakthi, 27 May 2020

தமிழ் நாட்டில் ஒவ்வொரு நாளும் 700 பேருக்கும் அதிகமானோர் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், வேலைக்குத் திரும்புவதற்கான இந்த அழைப்பானது மிகப் பாரதூரமான விளைவுகளுடன் தொற்று நோய் மாநிலம் முழுதும் பரவுவதற்கு வழிவகுக்கும்

வறிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தமது நாடுகளுக்கு திரும்ப அழைக்கும்படி இந்தியா மற்றும் பிற தெற்காசிய நாடுகளை வளைகுடா நாடுகள் கட்டாயப்படுத்துகின்றன

By Shuvu Batta, 27 May 2020

நோய்தொற்று வெடிப்பதற்கு முன்னர், தெற்காசியா, பிலிப்பைன்ஸ், எகிப்து, பாலஸ்தீனம், மத்திய கிழக்கின் பிற பகுதிகள் மற்றும் கிழக்கு ஆபிரிக்காவிலிருந்து 23 மில்லியன் அல்லது அதற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வளைகுடா நாடுகளில் இருந்தனர்

ஆம்பன் சூறாவளி 90 க்கும் மேற்பட்டோரை கொன்றதுடன் கிழக்கு இந்தியா மற்றும் பங்களாதேஷின் பரந்த பகுதிகளில் மிகப்பெரிய சேதாரத்தை ஏற்படுத்தியது

By Arun Kumar, 23 May 2020

சூறாவளி ஒரு சுற்றுச்சூழல் பேரழிவு என்றாலும், இந்தியா மற்றும் பங்களாதேஷில் உள்ள மில்லியன் கணக்கான மக்களை பாதுகாக்க தேவையான அனைத்தையும் வழங்க ஆளும் உயரடுக்கு கடுமையாக மறுப்பதால் மோசமடைந்துள்ளது

உலகெங்கிலும் கொரொனா வைரஸ் பரவி வருகின்ற நிலையில், உலக சுகாதார மாநாட்டில் அமெரிக்க-சீன மோதல் மேலோங்கியது

Bill Van Auken, 21 May 2020

கோவிட்-19 தொற்றுநோய் தொடர்ந்து பரவும் என்ற பயங்கரமான முன்கணிப்புகளுக்கு மத்தியில், வாஷிங்டன் திங்கட்கிழமை WHO இன் வருடாந்தர மாநாட்டை சீனாவைப் பலிக்கடா ஆக்குவதற்கான அதன் இடைவிடாத பிரச்சாரத்திற்கான அரங்கமாக மாற்ற முனைந்தது

மோடி “சமூக நோய் எதிர்ப்பு சக்தியை” ஊக்குவிக்கிறார், முதலீட்டாளர் சார்பு சீர்திருத்தங்களில் “பெரிய முன்னேற்றம்” என சூளுரைக்கிறார்

By Wasantha Rupasinghe and Keith Jones, 20 May 2020

பொருளாதாரத்துக்கு புத்துயிர் அளிப்பதன் பெயரில், பாஐக அரசாங்கம், தொற்றுநோய் மூர்க்கத்தனமாக சீற்றம் கண்டு வரும் நிலையிலும் வேலைக்கு திரும்புவதைக் கட்டாயமாக்க முயன்றுகொண்டிருக்கிறது

இந்தியாவின் பாஜக மற்றும் அதன் இந்து வலது கூட்டணிகள் பெரும் தொற்றுநோய் பரவலுக்கு முஸ்லீம்களை பலிக்கடா ஆக்குகின்றன

By Wasantha Rupasinghe and Keith Jones, 18 May 2020

மோடி ஒரு மோசமான இந்து மேலாதிக்கவாதி, அவருடைய பாஜக அரசாங்கமும் மற்றும் இந்து வலது கூட்டணியும் இந்தியாவின் முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிராக இடைவிடாமல் விரோதத்தை தூண்டிவிடுகின்றன

சென்னையில் உள்ள இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் WSWS உடன் கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்து பேசுகிறார்கள்

By Sasi Kumar and Moses Rajkumar, 9 May 2020

wsws நிருபர்கள் சமீபத்தில் சென்னையில் குடியேறிய தொழிலாளர்கள் மற்றும் வீடற்ற மக்களுடன் கொரோனா வைரஸ் பெரும் தொற்றுநோயால் அவர்கள் எதிர்கொள்ளும் மோசமான சமூக நிலைமைகள் குறித்து பேசினர்

"மத்திய, மாநில அரசாங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு உண்மையில் மனித உயிர்கள் மீது அக்கறை இல்லை”

கொரோனா வைரஸ் குறித்த இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தமிழ் நாடு வாகன தொழிலாளர்கள் கண்டனம் செய்கின்றனர்

By Sasi Kumar and Moses Rajkumar, 2 May 2020

கோடிக்கணக்கான தொழிலாளர்கள், குறிப்பாக முறைசாரா துறையை சார்ந்தவர்கள் என்று அழைக்கப்படுபவர்களுக்கு உணவு மற்றும் பிற அடிப்படை பொருட்களை வாங்குவதற்கு எந்த வருமானமும் இல்லாமல் விடப்பட்டனர்

தெற்காசியா முழுவதிலுமாக கொரொனா வைரஸ் நோய்தொற்று வேகமாக பரவி வரும் நிலையிலும், தொழிலாளர்களை வேலைக்குத் திரும்பும் படி அரசாங்கங்கள் அழுத்தம் கொடுக்கின்றன

By our correspondents, 1 May 2020

உலகளவில் 3 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களை பாதிப்படையச் செய்ததும் மற்றும், 210,000 க்கும் மேற்பட்டவர்களை பலிகொண்டதுமான கொரொனா வைரஸ் நோய்தொற்று தெற்காசியா முழுவதிலுமாக விரைந்து பரவி வருகிறது

இலங்கையின் வடக்கில் கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளால் ஏழைகள் மேலும் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்

By N. Rangesh and P.T. Sampanthar, 24 April 2020

முப்பது ஆண்டுகால யுத்தத்தின் பேரழிவில் இருந்து இன்னமும் தலைதூக்க முயலும் வறிய குடும்பங்கள் கொரோனா தடுப்புக்காக விதிக்கப்பட்ட அடைப்பினால் வருமானம் இன்றி உணவின்றி திண்டாடுகின்றன.

இலங்கை: நிவராணம் வழங்காமை மற்றும் சம்பள வெட்டுக்களுக்கு எதிராக அக்கரபத்தன பெல்மோரல் தோட்டத்தில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்

By our correspondent, 24 April 2020

நிவாரணங்கள் வழங்காமை மற்றும் ஊதிய வெட்டுக்களும் கடும் வறுமையில் இருக்கும் தோட்டத் தொழிலாளர்களை படுகுழியில் தள்ளியுள்ளது.

தமிழ்நாட்டில் ஏழைகள் மருத்துவ பாதுகாப்பும் நிவாரணமும் இன்றி துன்பப்படும் போது செல்வந்தர்கள் கோடிகளைக் குவித்துக் கொண்டுள்ளனர்

V.Jayasakthi, 23 April 2020

தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் உட்பட செல்வந்தர்கள் ஆயிரக்கணக்கான கோடிகளை குவித்து வைத்திருக்கும் போது கொரோனா வைரஸைத் தடுப்பதற்கான செலவை தொழிலாள வர்க்கத்தின் முதுகில் சுமத்த நிதி வழங்கும்படி மக்களிடம் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

சிங்கப்பூரில் குடியேறிய தொழிலாளர்களிடையே பாரிய COVID-19 தொற்றுதல்

Gustav Kemper, 23 April 2020

சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் திங்களன்று மட்டும் மதியம் 1,426 புதிய COVID-19 நோய்த்தொற்றுகளைப் பதிவுசெய்தது. அவர்களில் 95% ஆனோர் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பிற நாடுகளைச் சேர்ந்த மனிதாபிமானமற்ற குடியிருப்புகளில் சிக்கியுள்ள தற்காலிக தொழிலாளர்களாவர்.

இந்தியாவில், ஊரடங்கு உத்தரவினால், பட்டினி சாவிற்கு முகம் கொடுக்கும் தொழிலாளர்கள்

Sasi Kumar and Moses Rajkumar, 20 April 2020

COVID-19 நோய்தொற்றால் தமிழ் நாட்டின் பூட்டுதலின் கீழ், முக்கிய தொழிற்துறை மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் போதிய உணவுமின்றி வாழ விடப்பட்டுள்ளனர்

இலங்கையில் ஊரடங்கில் சிக்குண்ட பெருந்தோட்ட இளைஞர்கள் தலைநகரில் நிர்க்கதி நிலையில் விடப்பட்டுள்ளனர்

M. Thevarajah, 17 April 2020

கொரோனா வைரஸைத் தடுப்பதற்காக நாடு பூட்டப்பட்ட போது போக்குவரத்து இன்றி தலைநகரில் சிக்கிக்கொண்ட டசின் கணக்கான பெருந்தோட்ட இளைஞர்கள் தெருவில் விடப்பட்டனர்

இந்தியா முழுவதும் COVID-19 பூகோள தொற்றுநோய் அதிகரிக்கையில் வணிக நிறுவனங்கள் வேலைக்கு உடனடியாக திரும்பும்படி அழுத்தம் கொடுக்கின்றன

Wasantha Rupasinghe and Keith Jones, 17 April 2020

தீவிர முன்யோசனை மற்றும் திட்டமிடல் எதுவுமின்றி வேகமாக தோன்றியதாக எந்தவித எச்சரிக்கைகளுமில்லாமல் இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு முடக்கத்தை மாரச் 24 அன்று அவர் அறிவித்தார்

ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டில் 13 மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு இந்திய நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையளிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள்

By Kranti Kumara, 14 April 2020

ஹரியானா மானேசரில் மாருதி சுசூகி தொழிற்சாலையில் பணியாற்றிய 13 போர்குணமிக்க தொழிலாளர்கள், அரசினால் கொடூரமான முறையில் ஜோடிக்கப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டு, தற்போது சிறையில் ஏழரை ஆண்டுகளுக்கும் மேலாக கழித்திருக்கிறார்கள்

மிருசுவில் படுகொலை இராணுவ அதிகாரியின் விடுதலையும் தமிழ் தேசியவாதிகளின் போலிக் கண்டனங்களும்

Thillai Cheliyan, 13 April 2020

வரலாற்று ரீதியாகவே இலங்கையில் தமிழ் தேசியவாதிகள் கொழும்பு அரசியல் ஸ்தாபகத்தின் ஒற்றை ஆட்சியை தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பாதுகாக்க செயற்பட்டு வந்துள்ளனர்

இலங்கை: புதிய தமிழ் கூட்டணி அமெரிக்க சார்பு நிகழ்ச்சி நிரலை பிரகடனப்படுத்துகிறது

R.Shreeharan, 10 April 2020

அவப்பேறுபெற்ற தமிழ் கூட்டமைப்புக்கு ஒரு மாற்றீடு என கூறிக்கொண்டாலும் இந்தக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளும் குழுக்களும் கடந்த காலத்தில் கூட்டமைப்புடன் நெருக்கமாக ஒத்துழைத்தவை ஆகும்

இலங்கை: கொரோனா ஆயிரக்கணக்கான உயிர்களை காவுகொள்கின்ற போது சி.வி. விக்னேஸ்வரன் இந்து மதவாதத்தை முன்னிலைப்படுத்துகின்றார்

Athiyan Silva, 10 April 2020

இந்து மதவாதியான தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன், அண்மையில் தினக்குரல் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவிக்கையில் கொரோனா வைரஸைத் தடுப்பதற்கு, பழமைவாத இந்துமத ஒழுக்க நெறிகளைப் பின்பற்ற பரிந்துரைத்தார்

இந்தியாவின் பேரிடர் முடக்கத்தின் மத்தியில், கொரோனா வைரஸ் செய்திகளை மோடி தணிக்கை செய்ய முயற்சி

Wasantha Rupasinghe and Keith Jones, 9 April 2020

கடந்த ஒன்றரை வாரங்களில், மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கடுமையான நிலமையைக் கண்டு இந்தியா மற்றும் உலக முழுவதிலும் உள்ள மக்கள் திகைப்படைந்ததுடன் மேலும் ஆத்திரமுற்றிருக்கின்றனர்

இலங்கை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் சோ.ச.க. தேர்தல் வேலைத்திட்டத்தை ஆதரிக்கின்றனர்

By our reporters, 8 April 2020

தேசிய அரசு அமைப்பு முறை பொறுத்தமற்றது என்பதை கொரோனா வைரஸ் தொற்றுநோய் நிரூபித்துள்ளது

இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் இணையவழி கூட்டத்துடன் தேர்தல் பிரச்சாரத்தைத் ஆரம்பித்தனர்

our reporters, 8 April 2020

இந்தக் கூட்டம் இலங்கையிலும் உலகம் முழுதும் அரசியல் ரீதியில் உத்வேகம் கொண்ட கனிசமானளவு பார்வையாளர்களை ஈர்த்தது

“கொவிட்-19 தொற்றுநோயும் முதலாளித்துவ மிலேச்சத்தனமும்”: இலங்கை சோ.ச.க. நடத்திய இணையவழி கூட்டம் மறு ஒளிபரப்பு

Socialist Equality Party, 7 April 2020

ஏப்ரல் 5 அன்று ஒளிபரப்ப முடியாமல் போன கூட்டம் இன்று மறு ஒளிபரப்பு செய்யப்படும்

பங்களாதேஷ்: COVID-19 நெருக்கடி மத்தியில் பாதுகாப்பு கோரி ஆடைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

Wimal Perera, 6 April 2020

COVID-19, தொடர்ந்து நாடுமுழுவதும் பரவுதால் உற்பத்தியை தடைபடாமல் வைத்திருக்கவேண்டும் என்ற முதலாளிகளின் கோரிக்கைகளுக்கு எதிராக கடந்த மாத இறுதியில் ஆடைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தினை மேற்கொண்டனர்

தமிழ்நாட்டில் மருத்துவ வசதி பற்றாக்குறையால் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை துரிதமாக அதிகரிக்கும் ஆபத்து உள்ளது

Jayasakthi and Sasi Kumar, 6 April 2020

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையில் தமிழ் நாடு மாநிலம் வெள்ளிக்கிழமையுடன் இரண்டாவது இடத்தை எட்டியுள்ளது.

பேரழிவுமிக்க கொரொனா வைரஸ் முடக்கத்திற்கு மத்தியிலும் நம்பிக்கையிழந்த புலம்பெயர் தொழிலாளர்களை மோடி அரசாங்கம் நசுக்குகிறது

Wasantha Rupasinghe and Keith Jones, 4 April 2020

இந்திய அரசாங்கத்தின் தவறான மற்றும் சமூக பொறுப்பற்ற 21-நாள் தேசியளவிலான கொரொனா வைரஸ் முடக்கத்திற்குள் சிக்கித் தவிக்கும் ஏழை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் புகைப்படங்களைக் கண்டு இந்தியாவிலும் உலகெங்கிலுமுள்ள மக்கள் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ளனர்

இலங்கையில் கொரோனா வைரஸ் நெருக்கடி: தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு வேலைத்திட்டம்

the Socialist Equality Party, 4 April 2020

ராஜபக்ஷ அரசாங்கம் ஜனாதிபதி சர்வாதிகாரத்துக்கு தயார் செய்யவும் தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகள் மீதான தாக்குதல்களை மேலும் கடுமையாக்கவும் இந்த தொற்று நோயையைப் பயன்படுத்திக்கொள்கின்றது.

இந்தியாவின் பேரிடர் முடக்கம், ஏழைகளைத் தண்டிக்கும் அதேவேளை கொரோனாவைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளை பலவீனப்படுத்துகிறது

Wasantha Rupasinghe, 2 April 2020

மோடி முடக்கத்திற்கு உத்தரவிட்டு இரண்டு நாட்கள் கழித்து, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவின் GDP இல் வெறும் 0.8 சதவீதத்துக்கு இணையாக, ஒரு 1.7 லட்சம் கோடி ரூபாய்கள் நிவாரண நடவடிக்கைகளுக்கான தொகுப்பினை அறிவித்துள்ளார்

இலங்கை கோவிட்-19 தேசிய ஊரடங்கு உத்தரவு, உழைக்கும் மக்களுக்கு அடிப்படையான உணவு மற்றும் மருத்துவ நெருக்கடிகளை தீவிரப்படுத்தியுள்ளது

Thillai Cheliyan, 2 April 2020

இலட்சக்கணக்கான மக்கள், குறிப்பாக உத்தியோகபூர்வமாக அரசாங்க நிவாரணம் பெறும் கிட்டதட்ட, 24 இலட்சம் பேர் உயிர் வாழ்வதற்கு எவ்வித அடிப்படை உதவியும் இன்றி விடப்பட்டுள்ளார்கள்

இலங்கையில் சோ.ச.க. இணையவழி பொதுக் கூட்டம்: கொவிட்-19 தொற்றுநோயும் முதலாளித்துவ மிலேச்சத்தனமும்

2 April 2020

இந்த கூட்டம் சோ.ச.க. உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் ஒளிபரப்பப்படும்

போரினால் நாசமாக்கப்பட்ட வட இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் பட்டினிக்கும் வழிவகுக்கிறது

Vimal Rasenthiran, 1 April 2020

வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக நாடு பூராவும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தாலும் வாரத்துக்கு இரு முறை பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பிற்பகல் வரை ஊரடங்கு தளர்த்தப்படுகின்றது.

கொரோனாவைரஸ் தாக்கும் அடுத்த ஆபத்துக்குரிய பகுதியாக இந்தியா இருக்கும் என மருத்துவ நிபுணர் எச்சரிக்கிறார்

Wasantha Rupasinghe, 30 March 2020

இந்தியாவுக்கு கொரோனாவைரஸ் தாக்கத்தினால் நாடு முழுவதும் பேரழிவு ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக பல்வேறு மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்

இந்தியப் பிரதமரின் கொரோனா வைரஸ் முடக்கம் மில்லியன் மக்களை அச்சுறுத்தும் சமூக பேரழிவு

Wasantha Rupasinghe, 27 March 2020

COVID-19 ஐ கையாள்வதில் இந்தியாவின் விரைவான தன்மை உலகளவில் பரவும் நோயை தடுப்பதற்கு முக்கியமானது என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்த நாளுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 24 நள்ளிரவிலிருந்து தேசிய அளவில் மூன்று வார முடக்கத்தை அறிவித்துள்ளார்

இலங்கையில் தேசிய கொரோனா வைரஸ் ஊரடங்குக்கு மத்தியில் இரண்டு கைதிகள் கொல்லப்பட்டதுடன் ஆறு பேர் காயமடைந்தனர்

By Saman Gunadasa and K.Ratnayake, 27 March 2020

இலங்கை சிறைகள் மிக நெருக்கமானவை. சில சமயம், 800 பேருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் 5,000 கைதிகள் நெருக்கமாக வாழ்கின்றனர்

ஊடகத்துறை மீதான பூகோள யுத்தத்தின் மத்தியில், இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது

Naveen Dewage, 27 March 2020

கடந்தாண்டு கோடாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன

இலங்கை இராணுவத் தளபதிக்கு அமெரிக்கா பயணத் தடை விதிக்கிறது

K. Ratnayake, 27 March 2020

கொழும்பு ஆளும் தட்டின் எல்லாப் பிரிவினருக்கும், சீனாவுக்கு எதிரான தனது போர் திட்டங்களுடன் அணிதிரளுமாறு வாஷிங்டன் கட்டளையிடுகின்றது.

இந்தியாவின் பாழடைந்த சுகாதார அமைப்பை கொரோனா வைரஸ் பூகோள தொற்றுநோய் அச்சுறுத்துகிறது

Wasantha Rupasinghe, 26 March 2020

இந்தியாவின் மிகப்பரந்தளவிலான வறுமை, கவனிப்பாரற்றிருக்கும் சேரிகள் மற்றும் மோசமான நிலையிலுள்ள அல்லது இல்லாத பொதுக் கட்டமைப்பு வசதிகள் ஆகியவை, கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவுவதற்கும் மில்லியன் உயிர்களை அச்சுறுத்தும் ஒரு மனிதயின பேரழிவுக்கான சூழலையும் உருவாக்கியிருக்கிறது

நேபாளம் ஒரு வாரம் கொரொனாவைரஸ் முடக்கத்தை அறிவித்திருக்கிறது

By Rohantha De Silva, 25 March 2020

நேபாள அரசாங்கம் திங்களன்று இரண்டாவது COVID-19 தொற்றுநோய் பாதிக்கப்பட்டவரை சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்ததன் பின்னர் நாட்டினை ஒரு வாரம் முடக்குவதாக அறிவித்துள்ளது

ட்ரம்பின் இந்திய விஜயம் மற்றும் புது டெல்லி முஸ்லிம் விரோத படுகொலைகளைப் பற்றி இலங்கை தமிழ் தேசியவாத கட்சிகள் மயான அமைதி

V.Gnana and S. Jayanth, 10 March 2020

தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் தமிழ் தேசியவாதிகளினதும் எதிர்வினை ஒரு விபத்து அல்ல. 21 மில்லியன் தமிழ் சிறுபான்மையினரது நலன்களை வென்றெடுக்க பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் தமிழ் தேசியவாதிகளின் எந்தவொரு கன்னையும் இந்தியாவில் 205 மில்லியன் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு மேலான இந்து மத வெறியர்களின் பாசிச வகைப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராக ஒரு சிறுவிரலைக்கூட உயர்த்தவில்லை

மோடி அரசாங்கம் மில்லியன் கணக்கான மக்களை மிக மோசமான கொரோனா வைரஸ் பாதிப்புக்குள் விட்டுள்ளது

Wasantha Rupasinghe, 9 March 2020

கொரோனா வைரஸ் தொற்றுநோய் நோய் பரவுதல் பற்றிய கவலை மிகவும் பரந்தளவில் அதிகரித்திருக்கும் வேளையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் மில்லியன் கணக்கான மக்களை மிக மோசமாக பாதிக்கப்படும் நிலையில் விட்டுள்ளது

மோடியின் ஆதரவாளர்கள் டெல்லியை வகுப்புவாத வன்முறையில் மூழ்கடிக்கையில், ட்ரம்ப் அவரை புகழ்கிறார்

Keith Jones, 2 March 2020

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று அகமதாபாத்தில் நடந்த ஒரு பேரணியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சிங்கமாக வருணித்தார்

ட்ரம்ப் மோடியை கட்டித்தழுவுகையில், இந்தியாவின் தலைநகரத்தில் வகுப்புவாத வன்முறை கொந்தளித்து கொண்டிருக்கிறது

Keith Jones, 27 February 2020

அனைத்து அறிக்கைகளின் படி, தில்லி பிஜேபி தலைவர் கபில் மிஸ்ரா தான் இந்தியாவின் தலைநகரை தற்போது கொந்தளிப்பில் மூழ்கடித்திருக்கும் இந்த வன்முறையை தொடங்கினார்

வேலை நெருக்கடி, மற்றும் ஆழமடைந்து வரும் பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் இந்திய வரவு-செலவுத் திட்டம் மேலதிக சிக்கன நடவடிக்கைகளை திணிக்கிறது

Kranti Kumara, 17 February 2020

இந்தியாவின் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி அரசாங்கம், 2020-21 ஆம் நிதியாண்டிற்காக 30.4 டிரில்லியன் ரூபாய் மதிப்பு கொண்ட வரவு/செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளது

காஷ்மீரில் மோடி அரசாங்கத்தின் இணைய தடை விதிப்புக்கு இந்தியாவின் உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டுகிறது

Wasantha Rupasinghe, 28 January 2020

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு காஷ்மீருக்கும் அப்பாற்பாட்ட தாக்கங்களைக் கொண்டுள்ளது. “ஜனநாயக” நாடான இந்தியாவைக் காட்டிலும் எந்தவொரு நாடும் இணைய அணுகலை இந்தளவிற்கு அடிக்கடி தடை செய்யவில்லை.

இந்திய அரசாங்கத்தின் வகுப்புவாத குடியுரிமைச் சட்டங்களுக்கு எதிராக தமிழகத்தில் வெகுஜன போராட்டங்கள் தொடர்கின்றன

WSWS reporting team, 28 December 2019

1947 பிரிவினை தொழிலாள வர்க்கத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம், ஆனால் இந்திய அரசியலமைப்பு இரண்டு மில்லியன் மக்களை வகுப்புவாத கொலை செய்ததிலிருந்து உருவாக்கப்பட்டது

இந்தியாவில் வகுப்புவாத பிற்போக்குத்தனத்திற்கு எதிரான போராட்டம் என்பது சோசலிசத்திற்கான போராட்டமாகும்

Keith Jones, 21 December 2019

இந்த சட்டத்தின் மூலம் இந்திய சுதந்திர வரலாற்றில் முதல்முறையாக மதத்தை வரையறையாக கொண்டு குடியுரிமை தீர்மானிக்கப்பட உள்ளது. இது, பிஜேபி மற்றும் அதன் நிழலுலக பாசிசவாத சித்தாந்த அறிவுரையாளர் RSS இன் வெளிப்படையான முக்கிய இலக்கை நடைமுறைப்படுத்துவதை நோக்கிய ஒரு முக்கிய படியாகும். அதாவது, இந்தியாவை ஓர் இந்து ராஷ்டிரமாக அல்லது அரசாக மாற்றுவதும், அதில் முஸ்லீம் சிறுபான்மையினர் இந்து மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் மட்டுமே அவர்கள் "சகித்துக் கொள்ளப்படுவர்.”

பத்தாயிரக்கணக்கானவர்கள் இந்திய அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களை மீறி இந்து மேலாதிக்க சட்டங்களுக்கு எதிராக போராடுகின்றனர்

Deepal Jayasekera, 20 December 2019

மோடி அரசாங்கம், நாடு முழுவதிலுமாக இன மற்றும் மத ரீதியான குழுக்களின் பல்லாயிரக்கணக்கானவர்கள் உட்பட, பெரும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் வெடிப்பது குறித்து அதிகரித்தளவில் பொலிஸ் மிருகத்தனம் மற்றும் அரசு அடக்குமுறை கொண்டு பதிலிறுத்து வருகிறது.

இலங்கையில் வேலை அதிகரிப்புக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டத்தை தொழிற்சங்கங்கள் காட்டிக் கொடுத்தன

M Thevarajah, 19 December 2019

தொழிற்சங்கங்கள் மீது தொழிலாளர்கள் கோபப்படுவது நியாயமானது. தொழிற்சங்கங்களின் துரோகம் செய்வது, இலங்கையிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் பொதுவான சூழ்நிலை ஆகும்.

பாரபட்சமான குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு இந்தியாவின் உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி காட்டுகிறது

Keith Jones, 18 December 2019

இந்தியாவை கொந்தளிப்புக்குள்ளாக்கிய CAA எதிர்ப்பு போராட்டங்களை நசுக்குவதை பொலிஸூம் மற்றும் நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி அரசாங்கமும் தொடர்வதற்கும் தீவிரப்படுத்துவதற்கும் நீதிமன்ற தீர்ப்பு கண்கூடாக பச்சைக்கொடி காட்டுகிறது.

புதிய இந்து பேரினவாத குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதுமாக ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன

Rohantha De Silva, 16 December 2019

இந்த பிரிவினையின் உடனடி தாக்கமாக பெரும் வகுப்புவாத வன்முறை வெடித்தது, அதன் விளைவாக ஒரு மில்லியனுக்கும் (பத்து இலட்சத்துக்கும்) அதிகமானோர் பலியானார்கள் மேலும் கிட்டத்தட்ட 20 மில்லியன் (2 கோடி) பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர்.

இலங்கையின் வடக்கில் பத்தாயிரக்கணக்கானோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்

our correspondents, 13 December 2019

இலங்கையில் கடந்த வாரங்களாக பெய்துவரும் மழை காரணமாக நாடு பூராவும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பரந்தளவு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. செய்திகளின்படி நாடுபூராவும் 44,952 குடும்பங்களைச் சேர்ந்த 153,377 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்கத்தினதும் அதிகாரிகளதும் அலட்சியம் காரணமாக இந்த தொடர் மழை மக்களின் சமூக மற்றும் வாழ்க்கை பிரச்சினைகளை மேலும் உக்கிரமாக்கியுள்ளது.

இந்து மேலாதிக்க குடியுரிமை சட்டத்திற்கு இந்தியா ஒப்புதல் அளிக்கிறது

Rohantha De Silva and Keith Jones, 13 December 2019

இந்தியாவின் இருசபை பாராளுமன்றங்களில் கீழ்சபையில் மட்டும் திங்களன்று தாக்கல் செய்யப்பட்டதான குடியுரிமை (திருத்த) மசோதா, 2019 அல்லது CAB க்கு நேற்று இரவு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்திய தொழிற்சாலை தீ விபத்தில் 40 க்கும் அதிகமான தொழிலாளர்கள் பலி

Wasantha Rupasinghe, 9 December 2019

தில்லி தீயணைப்பு சேவை இயக்குநர் அதுல் கார்க், கட்டிடம் மிகப் பழமையானது என்றும், தீ பாதுகாப்பு சான்றிதழ் அல்லது தீ பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் அங்கில்லை . தீயணைப்பு படையினர் ஜன்னல் கம்பிகளை வெட்டியெடுத்தே கட்டிடத்திற்குள் நுழைய வேண்டியிருந்தது.

இந்தியா: மகாராஷ்டிராவில் பாசிச சிவசேனா கட்சியை காங்கிரஸ் கட்சி ஆட்சிக்குக் கொண்டுவருகிறது

Kranti Kumara, 9 December 2019

சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேக்கு மாநில பாராளுமன்றத்தில் ஒரு இடம் கூட இல்லாத நிலையிலும், அவரது சர்வாதிகாரத்தினால் இந்த கூட்டணி அரசாங்கத்தில் முன்னணி வகிக்கும் வாய்ப்பு அந்த கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மதர்சன் வாகனத்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை மாவோயிச தொழிற்சங்கத் தலைவர்கள் தனிமைப்படுத்துகிறார்கள்

Arun Kumar and Moses Rajkumar, 5 December 2019

மதர்சன் தொழிலாளர்கள் மாவோயிச சிபிஐ-எம்எல்-விடுதலை மற்றும் அதன் ஏ.ஐ.சி.டி.யுவில் இருந்து மட்டுமல்லாமல், குமாரசாமி மற்றும் அவரது எல்.டி.யூ.சி ஆகியோரிடமிருந்தும் அரசியல் மற்றும் அமைப்பு ரீதியாக முறித்துக் கொள்ள வேண்டும்.

இலங்கையின் புதிய ஜனாதிபதியை அமெரிக்கா கவனத்தில் கொள்கிறது

K.Ratnayake, 20 November 2019

அமெரிக்க இராணுவப் படைகளை தீவுக்குள் சுதந்திரமாக நுழைய அனுமதிக்கும் படை நிலைகொள்ளல் உடன்படிக்கையான SOFA ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதானது சந்தேகத்திற்கு இடமின்றி புதிய ஜனாதிபதிக்கு வாஷிங்டன் வைக்கும் பிரதான சோதனையாக கருதப்படும்.

இந்தியா: திருச்சியில் குழந்தையின் துயர மரணம் பேரழிவு தரும் சமூக நிலைமைகளை அடிக்கோடிட்டு காட்டுகிறது

Yuvan Darwin, 20 November 2019

அக்டோபர் 25ம் தேதி சுஜித் வில்சன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தான், பல்வேறு மீட்பு முயற்சிகள் இருந்தபோதிலும் அங்கு சிக்கிக்கொண்டான், இறுதியாக அவனது துண்டிக்கப்பட்ட மற்றும் மிகவும் சிதைந்த உடல் நான்கு நாட்களுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தியா: 48,000 தெலுங்கானா போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் முக்கிய முடிவு எடுக்க வேண்டிய கட்டத்தை எட்டியுள்ளது

Kranti Kumara, 19 November 2019

TSRTC தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் சம்பளமின்றி மிகுந்த கஷ்டத்தை சகித்துக் கொண்டிருக்கின்ற போதிலும், முதலமைச்சரின் பரந்த பணிநீக்க அச்சுறுத்தலை அவர்கள் மீறி மேலும் முன்னோக்கிச் சென்று கொண்டிருப்பது குறித்து அவர்கள் மீது மிகப்பெரிய அனுதாபமும் மரியாதையும் அங்கு நிலவுகிறது.

இடிக்கப்பட்ட மசூதி குறித்த தீர்ப்பை வழங்கி

இந்தியாவின் உச்ச நீதிமன்றம் இந்து மேலாதிக்க வன்முறையை சட்டபூர்வமாக்குகிறது

Keith Jones, 11 November 2019

இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியல் மற்றும் அனைத்து மதங்களின் சமத்துவம் தொடர்பான பாசாங்குத்தனமான மறு உறுதிப்படுத்துதல்களில் புதைந்துள்ளது. 1992 பாபர் மசூதி இடிப்பு சம்பவம் ஒரு குற்றமே என அது ஒப்புக்கொள்கிறது.

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் போக்குவரத்து வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான பொலிஸ் வன்முறை, 5,000 க்கும் அதிகமானோர் கைது

Kranti Kumara, 11 November 2019

TSRTC ஓட்டுநர்கள், பேருந்து நடத்துனர்கள், இயந்திர வல்லுநர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் அக்டோபர் 5 முதல் கைது மற்றும் அவர்களின் மோசமான ஊதியங்கள் மற்றும் பணி நிலைமைகளில் கணிசமான முன்னேற்றத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை சோ.ச.க. ஜனாதிபதி தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டங்களை அறிவிக்கிறது

Sri lankan SEP, 9 November 2019

இலங்கை ஆளும் வர்க்கம் ஒரு ஆழமான அரசியல் நெருக்கடியை எதிர்கொள்கிறது –இந்த நெருக்கடி உலகப் பொருளாதார பொறிவு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் உக்கிரமாக்கப்படும் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மீள் எழுச்சியின் ஒரு பகுதியாக வளர்ந்து வரும் தொழிலாள வர்க்க வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் விளைவாகும்.

வர்க்கப் போர் கைதிகளான ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சி மனிங்கை விடுவிக்க ஒரு வெகுஜன இயக்கத்தை உருவாக்குங்கள்

By SEP (Sri Lanka) presidential candidate Pani Wijesiriwardena, 9 November 2019

சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் நிறுவனர் மற்றும் வெளியீட்டாளரான ஜூலியன் அசான்ஜ் மற்றும் தகவல் அம்பலப்படுத்திய செல்சி மானிங்கின் விடுதலைக்காக ஒரு வெகுஜன இயக்கத்தை கட்டியெழுப்புவோம்.

இலங்கை சோ.ச.க. ஜனாதிபதி வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தனவின் அறைகூவல்இந்தியாவின் தெலுங்கானாவில் வேலைநிறுத்தம் செய்யும் போக்குவரத்துத் தொழிலாளர்களைப் பாதுகாத்திடுங்கள்

Socialist Equality Party srilanka, 8 November 2019

இந்தியா, இலங்கை, தெற்காசியா மற்றும் சர்வதேச அளவில் உள்ள தொழிலாளர்கள் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு பிரிவினர் மீதும் இந்த பிற்போக்குத்தனமான சமூக தாக்குதல்களை கட்டவிழ்த்து விட முதலாளித்துவ அரசாங்கங்களை அனுமதிக்கக் கூடாது. சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அத்தியாவசியமான ஒருங்கிணைந்த போராட்டம், சர்வதேச சோசலிச வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

இலங்கை சோ.ச.க. ஹட்டனில் ஜனாதிபதி தேர்தல் கூட்டத்தை நடத்தியது

our correspondents, 6 November 2019

டிசம்பரில் தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தின் போது சோ.ச.க.வின் அரசியல் உதவியுடன் உருவாக்கப்பட்ட எபோட்சிலி தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவின் உறுப்பினர்கள் உட்பட தோட்டத் தொழிலாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்தியாவின் தெலுங்கானா மாநில அரசாங்கம், பணிநீக்கம் செய்யப்பட்ட 48,000 வேலைநிறுத்தக்காரர்களுக்கு புதிய இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளது

Kranti Kumara, 5 November 2019

JAC இன் பேரழிவு தரும் சுய-குற்றச்சாட்டாக இருந்தன என்பதுடன், TSRTC தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தின் தலைமையை முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்களின் கைகளிலிருந்து விடுவிக்க வேண்டிய அவசரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

காஷ்மீர் மற்றும் இந்திய தொழிலாள வர்க்கம் மீதான மோடியின் தாக்குதல்

Keith Jones, 5 November 2019

புது தில்லி, ஏற்கனவே உலகிலேயே மிகவும் தீவிரமாக இராணுவமயமாக்கப்பட்ட மற்றும் பொலிஸ் காவலுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு பிராந்தியமான அம்மாநிலத்தை முன்நிகழ்ந்திராத வகையில் முற்றுகையிடுவதன் மூலமாக அதன் வெளிப்படையான சட்டவிரோத அரசியலமைப்பு மாற்றங்களை அங்கு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் நவ சம சமாஜ கட்சி வலதுசாரி ஐ.தே.க. வேட்பாளரை அரவணைத்துக்கொள்கிறது

Wilani Peris, 5 November 2019

நவ சம சமாஜக் கட்சி வேட்பாளர் பெத்தேகமகே ஒரு தொலைக்காட்சி உரையில், . ந.ச.ச.க. ஜனநாயகத்தின் ஓட்டத்துடன் இணைந்து செயல்படுவதாக அவர் பெருமிதம் கொண்டார்.....

இலங்கை தமிழ் கட்சிகள் ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுப்பது ஏன்

Pani Wijesiriwardena--presidential candidate of the Socialist Equality Party, 4 November 2019

தமிழ் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையிலான கட்சிகளின் திவாலான மற்றும் பிற்போக்கு தேசியவாத நிகழ்ச்சி திட்டத்தை நிராகரிக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

இந்தியா: வேலைநிறுத்தம் செய்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட 48,000 தெலுங்கானா தொழிலாளர்களுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது

Arun Kumar and Kranti Kumara, 2 November 2019

SRTC தொழிலாளர்கள் மீது தனது தாக்குதலை அதிகரிக்கவே சந்திரசேகர ராவ் தயார் செய்து கொண்டிருக்கிறார். இன்றைய சந்திப்பின் போது, அரசுக்கு சொந்தமான பெரும்பாலான பேருந்து சேவைகளை தனியார்மயமாக்குவதற்கான திட்டங்களை அவரது அமைச்சரவை இறுதி செய்யும் என்பதை முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கான முதலாளித்துவ வேட்பாளர்கள் மீது தோட்டத் தொழிலாளர்கள் வெறுப்பை வெளிப்படுத்துகிறார்கள்

M. Thevarajah, 2 November 2019

சோ.ச.க. பிரச்சாரகர்களுடன் பேசிய தொழிலாளர்கள் தாங்கள் எதிர்கொண்ட கடினமான சமூக மற்றும் வேலை நிலைமைகளை விவரித்து முதலாளித்துவ கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் மீது சீற்றத்தை வெளிப்படுத்தினர்.

ஹந்தான தோட்டத் தொழிலாளர்களின் தொழில் மற்றும் வீட்டு உரிமைகளை பாதுகாப்பது எப்படி?

Pradeep Ramanayaka, 1 November 2019

முதலாளித்துவ அமைப்பு முறையின் நெருக்கடியின் மத்தியில், அதைத் தூக்கி வீசுவதில் தொழிலாள வர்க்கத்திற்கு உள்ள வரலாற்றுப் பங்கு குறித்து தீவிரமாக கலந்துரையாடுவது மிக முக்கியமானது.

இலங்கை: சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் உரையாற்றினார்

our reporters, 30 October 2019

சோ.ச.க. மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பின் உறுப்பினர்கள் யாழ்ப்பாண கூட்டங்களுக்கு முன்பாக பல்கலைக்கழக மாணவர்கள், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் தொழிலாளர்கள், பிரதான தபால் நிலையம் மற்றும் குருநகர் மற்றும் காரைநகர் குடியிருப்பாளர்கள் மத்தியில் தீவிரமாக பிரச்சாரம் செய்தனர்.

இலங்கை: ஜே.வி.பி. கல்வி மற்றும் சுகாதரம் சம்பந்தமாக ஒரு முதலாளித்துவ கற்பனாவாத திட்டத்தை முன்வைக்கிறது

W.A. Sunil, 26 October 2019

கல்வி மற்றும் சுகாதார சேவைகளை மேம்படுத்துவது பற்றிய வாய்ச்சவடால்களை மீறி, இப்போது சேவைகளில் இருக்கும் மற்றும் வளர்ந்து வரும் தனியார் முதலாளித்துவ முதலீட்டாளர்களின் வருகையைப் பாதுகாக்கின்றன.

இலங்கை சோ.ச.க. ஜனாதிபதி தேர்தலுக்கான ஆரம்ப கூட்டத்தை நடத்தியது

our correspondents, 26 October 2019

சிங்கள மற்றும் தமிழில் "சோசலிச சமத்துவக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றது என்ற தலைப்பில் உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியான கட்டுரையின் ஆயிரக்கணக்கான பிரதிகள் தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டன.

இந்தியாவில் மாவோயிச தொழிற்சங்க தலைவர்கள் மதர்சன் வாகனத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து தனிமைப்படுத்துகிறார்கள்

Moses Rajkumar and Sasi Kumar, 25 October 2019

சென்னையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மதர்சன் தொழிற்சாலையில் பணிபுரியும் 1500 ஒப்பந்த தொழிலாளர்களையும், பயிற்சியாளர்களையும் போராட்டத்திற்கு அழைப்பதற்கு AICCTU தலைவர்கள் மறுக்கிறார்கள்.

இந்திய ஸ்ராலினிஸ்டுகள் தேர்தல் பிரச்சார நிதிக்காக வலதுசாரி கட்சியிடமிருந்து பெருமளவிலான “நன்கொடைகளை” பெற்றுள்ளனர்

Kranti Kumara, 25 October 2019

இந்திய முதலாளித்துவ அரசியல் சாக்கடையில் ஸ்ராலினிஸ்டுகள் நீந்துவது ஆச்சரியப்படத்தக்க விடயமாக தோன்றவில்லை.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோடாபய இராஜபக்ஷவை ஆதரிக்கிறது

W.A. Sunil, 23 October 2019

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் நடைபெறுகிறது. உலக வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாக வளர்ச்சியடைந்து வரும் வர்க்கப் போராட்டத்தை தகர்த்து உழைக்கும் மக்கள் மீது நெருக்கடியின் சுமையை சுமத்தக்கூடிய ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு மாறுவதில் அவர்கள் அனைவரும் ஒருமனதாகவே உள்ளனர்.

இலங்கை சோ.ச.க. ஜனாதிபதி வேட்பாளர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்

our correspondents, 15 October 2019

இலங்கையில் நவம்பர் 16 அன்று நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தன, அக்டோபர் 10 அன்று கொழும்பில் தேசிய நூலக கட்டிடத்தில் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தினார்.ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை செயல்படுத்த, தொழிலாளர்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான அமைப்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.

இந்தியா; மதர்சன் வாகனத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நிலையை அடைந்துள்ளது

Arun Kumar, 9 October 2019

500க்கும் அதிகமான மதர்சன் வாகனத் தொழிலாளர்கள் அவர்களது புதிய தொழிற்சங்கமான செங்கை அண்ணா மாவட்ட ஜனநாயக தொழிலாளர் சங்கம் அங்கீகரிக்கப்படவேண்டும் என்றும் அத்துடன் ஊதிய உயர்வு மற்றும் கடுமையான வேலை நிலைமைகளை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்றும் கோரி ஆகஸ்ட் 26 இலிருந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.

அசாமில் வசிக்கும் 1.9 மில்லியன் பேரின் பாரிய நாடுகடத்தலுக்கு முன்னோடியாக அவர்களை “வெளிநாட்டவர்கள்” என்று இந்தியா முத்திரை குத்துகிறது

Wasantha Rupasinghe, 5 October 2019

அசாமின் வங்காள மொழிபேசும் சிறுபான்மையினரில், கணிசமான பகுதியினரை நாடற்றவர்களாக அறிவிக்கும் முயற்சிக்கு எதிராக ஏற்படும் வெகுஜன போராட்டங்களுக்கு அஞ்சி கடந்த சனிக்கிழமை இறுதியாக தயாரிக்கப்பட்ட NRC பட்டியலை வெளியிடுவதற்கு முன்னர், பாஜக மத்திய அரசானது மாநிலம் முழுவதும் மத்திய ஆயுதப் போலிஸ் படையின் (CAPF) 145க்கு மேற்பட்ட படைப்பிரிவுகளை நிறுத்தியிருகிறது.

இந்தியா: வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான மதர்சன் வாகனத் தொழிலாளர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்

Moses Rajkumar and Sasi Kumar, 28 September 2019

சென்னையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் மதர்சன் தானியங்கி தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் நிறுவனத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் நூற்றுக்குமதிகமான தொழிலாளர்கள் செப்டம்பர் 24 அன்று இருங்காட்டுக்கோட்டையில் இருக்கும் துணை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்துக்கு முன்னால் எதிர்ப்பு பேரணியை நடத்திக்கொண்டிருந்தபோது காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

இலங்கையில் இரண்டு இலட்சம் அரசாங்க ஆசிரியர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தை நடத்தினர்

our correspondents, 27 September 2019

தமிழர்-விரோத மற்றும் முஸ்லிம்-விரோத பேரினவாத குழுக்களின் தூண்டுதல்களை நிராகரித்தும் தரவரிசை பிரிவுகளைக் கடந்தும் அனைத்து ஆசிரியர்களும் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொண்டமை வேலைநிறுத்தத்தின் மிக முக்கியமான வளர்ச்சியாகும். இதனால் இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் உள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

இலங்கை ஆசிரியர்களின் போராட்டத்தில் வெற்றி பெறுவது எப்படி

the Socialist Equality Party teachers group, 25 September 2019

கல்வி, சுகாதாரம் மற்றும் ஏனைய அடிப்படை சமூகத் தேவைகள் மீது பெருகிவரும் தாக்குதல்களைத் தோற்கடிக்க, தொழிலாள வர்க்கத்திற்கு அதன் சொந்த சோசலிச மற்றும் சர்வதேச மூலோபாயம் அவசியமாகும். ஆசிரியர்கள் மற்றும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கான மூல காரணம், இந்த இலாப நோக்கு அமைப்பு முறையே ஆகும்.

இலங்கை போக்குவரத்துச் சபை தொழிற்சங்கங்கள் தொடர் வேலைநிறுத்தத்தை நிறுத்திக்கொண்டன

Nandana Nanneththi, 23 September 2019

வேலைநிறுத்தத்தை முறியடிக்க அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்தே செயல்பட்டு வந்தது. வேலைநிறுத்தத்தில் பங்கேற்காத தொழிற்சங்கத்தின் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பயன்படுத்தி அரசாங்கம் பேருந்துகளை இயக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டது.