சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

French President Hollande tours Asia as divisions mount between US and Europe over China

சீனா தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையே பிளவுகள் அதிகரித்துள்ள நிலையில், பிரெஞ்சு ஜனாதிபதி ஹோலாண்ட் ஆசிய பயணம் மேற்கொண்டுள்ளார்

By Alex Lantier and Kumaran Ira
4 November 2015

Use this version to printSend feedback

சீனாவுடனான நிதியியல் மற்றும் மூலோபாய உறவுகளை ஆழப்படுத்துவதையும் மற்றும் பாரீஸில் இம்மாதம் நடைபெறவுள்ள Cop-21 சுற்றுச்சூழல் மாநாட்டிற்கு தயாரிப்பு செய்வதையும் நோக்கமாக கொண்ட, சீனாவிற்கான இரண்டு நாள் விஜயத்தை பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் வியாழனன்று முடித்துக் கொண்டார். பிரான்சிற்குத் திரும்புவதற்கு முன்னதாக இன்று அவர் தென் கொரியாவிற்கு விஜயம் செய்கிறார்.

சீனாவுடனான ஐரோப்பாவின் முன்னெப்போதையும் விட நெருங்கிய உறவுகளை உயர்த்திக்காட்டும் வகையில், பல்வேறு உயர்மட்ட அரச விஜயங்களில் ஹோலாண்டினது சமீபத்தியதாகும். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இலண்டனை சீன நாணயம் ரென்மின்பிக்கான ஐரோப்பாவின் பிரதான வெளிநாட்டு வர்த்தக மையமாக அபிவிருத்தி செய்யவதற்காக கடந்த மாதம் பிரிட்டனுக்கு விஜயம் செய்திருந்தார், மற்றும் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் சான்சிலராக பெய்ஜிங்கிற்கான அவரது எட்டாவது விஜயத்தில், ஒருசில நாட்களுக்கு முன்னர்தான் பல்வேறு பிரதான வணிக உடன்படிக்கைகளை வெளியிட்டிருந்தார்.

Cop-21 மாநாட்டில் ஏற்றுக்கொள்ள வேண்டிய மாசுக்கட்டுப்பாடு வரம்புகள் மீது சீன அதிகாரிகளுடன் பேரம்பேசியதற்கு அப்பாற்பட்டு, ஹோலாண்டும் மற்றும் அவருடன் சென்ற பிரெஞ்சு வணிக பிரதிநிதிகள் குழுவும் பல பில்லியன் யூரோ உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டனர். அவர்கள் அணுக்கழிவு மறுசுழற்சி செய்வதற்கான 20 பில்லியன் யூரோ தொழில்துறை உடன்படிக்கையில் கையெழுத்திட்டதுடன், மிகப்பெரும் பிரெஞ்சு அணுசக்தி நிறுவனமான அரேவாவில் சீனா முதலீடு செய்வதற்கும் அழுத்தமளித்தனர். முன்னதாக அது, பிரெஞ்சு எரிசக்தி சேவை நிறுவனமான Engie (முந்தைய Gaz de France-Suez) மற்றும் வாகன உற்பத்தி PSA நிறுவனங்களில் இருந்து பெரும் பங்குகளை வாங்கியிருந்தது.

பிரெஞ்சு அதிகாரிகள் ரென்மின்பியின் வெளிநாட்டு வர்த்தக மையமாக பாரீஸின் பாத்திரத்தை உயர்த்துவதற்கும் பேரம்பேசினர். 2013 இல் சீனாவில் பிரான்சின் ஆண்டு வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) 17.9 பில்லியன் யூரோவை எட்டியது, பிரான்சில் சீனாவின் வெளிநாட்டு நேரடி முதலீடு 4.3 பில்லியன் யூரோவை எட்டியது. பிரெஞ்சு வங்கிகளில் பத்து பில்லியன் கணக்கான ரென்மின்பி இருப்பதானது, அமெரிக்க டாலர் இல்லாமலே சர்வதேச முதலீட்டு பரிவர்த்தனைகளை நடத்துவதற்கு முதலீட்டாளர்களை அனுமதிக்கும்.

பிரெஞ்சு மற்றும் சீன அதிகாரிகளுக்கு இடையிலான முந்தைய பேரம்பேசல்களோடு ஒப்பிடுகையில், சீனாவை நோக்கிய ஐரோப்பிய மற்றும் அமெரிக்க மூலோபாயத்திற்கு இடையே தீவிரமடைந்துவரும் பிளவுகளை மறைப்பது மிகவும் சிக்கலானதாகிவிட்டது.

மார்ச்சில் பிரான்ஸ் உட்பட பிரதான ஐரோப்பிய சக்திகள், சீனாவின் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் (AIIB) சேர வேண்டாமென்ற வாஷிங்டனின் அழைப்பை நிராகரித்தன. AIIB, 2013 இன் இறுதியில் அறிவிக்கப்பட்ட ஒரு பரந்த சீன திட்டமான பொருளாதார பட்டுச்சாலை பிரதேசம் அல்லது "ஒரே பிரதேசம், ஒரே பாதை" (One Belt, One Road – OBOR) என்று அழைக்கப்படுவதன் பாகமாக இருந்தது. இத்திட்டம் சீனாவிலிருந்து யுரேஷியாவுக்கு குறுக்காக ரஷ்யா, மத்திய ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா வழியாக ஐரோப்பிய சந்தைகள் வரையில் துரித-போக்குவரத்து தரைமார்க்க பாதையை உருவாக்க இரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பில் ஏறத்தாழ 1.4 ட்ரில்லியன் டாலருக்கான ஒரு மிக பிரமாண்டமான முதலீட்டு திட்டமாகும்.

இந்த வாரம், ஹோலாண்ட் சீனாவைச் சுற்றி வளைக்கும் நோக்கங்கொண்ட அமெரிக்காவின் "ஆசியாவை நோக்கிய முன்னிலை" குறித்து மௌனம் காத்தார். அவர், தென் சீனக் கடலில் அமெரிக்க கடற்படை மற்றும் சீனப் படைகளுக்கு இடையே நிலவும் தற்போதைய வெடிப்பார்ந்த மோதலில், நேட்டோவின் ஒரு கூட்டாளியாக, அமெரிக்காவிற்கு பகிரங்க ஆதரவு எதுவும் தெரிவிக்கவில்லை.

இருப்பினும் ஹோலாண்ட் விஜயம் குறித்து அதன் கணக்கிற்கு, சீனாவின் Global Times நாளிதழ் OBOR திட்டத்திற்கு பிரான்ஸ் ஆதரவளிப்பதற்காக பாராட்டியது: “அவ்விரு நாடுகள் 'ஒரே பிரதேசம், ஒரே பாதை' முனைவின் கீழ் மூன்றாம்-தரப்பு சந்தைகளைக் கண்டறிவதிலும், உலகளாவிய பொருளாதாரத்தில் அவற்றின் தொழில்நுட்ப மற்றும் நிதியியல் பலத்திலிருந்து பலன்பெறுவதிலும் அவற்றின் கரங்களை இணைத்துக் கொள்ளும் முயற்சியைச் செய்துள்ளன.”

உக்ரேன் நெருக்கடியில் ரஷ்யாவை நோக்கிய அமெரிக்க கொள்கை மீது ஐரோப்பிய விமர்சனங்கள் தீவிரமடைந்து வருவதற்கு இடையே இது வருகிறது. நேட்டோ ரஷ்யாவுடன் "முழு போரைத்" தூண்டிவிடக்கூடும் என்று ஹோலாண்ட் மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளார்; கடந்த வாரம், முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி ரஷ்யாவிற்குப் பயணம் செய்து, அமெரிக்க அழுத்தத்தின் கீழ் ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பா செயல்படுத்திய நிதியியல் தடையாணைகளை பகிரங்கமாக தாக்கினார். இத்தகைய தடையாணைகள், ரஷ்யாவில் பிரெஞ்சு எண்ணைய் பெருநிறுவனம் டோட்டலின் மிகப்பெரும் முதலீடுகளைப் போலவே, பிரெஞ்சு நலன்களை பாதிக்கின்றன.

ஆனால் அத்தகைய விமர்சனங்கள் பிரெஞ்சு கொள்கையை அதிகமாக சீனாவினது கொள்கைகளுடன் இணையசெய்கின்றது. அது ரஷ்யா தடையாணைகளிலிருந்து தப்பிக்க உதவுவதற்கு ஜீவநாடியாக அதற்கு கடந்த ஆண்டு கடன்களை நீடிக்க முன்வந்தது.

சீனாவின் AIIB/OBOR திட்டங்கள் மீது அமெரிக்க-ஐரோப்பிய கருத்துவேறுபாடுகள் முரண்பாடான நிதியியல் கொள்கைகளில் மட்டும் பிரதிபலிக்கவில்லை, மாறாக அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் ஐரோப்பிய போட்டியாளர்களுக்கு இடையிலான மூலோபாய மோதல்கள் தீவிரமடைவதிலும் பிரதிபலிக்கிறது என்பது முன்பினும் தெளிவாக உள்ளது. அமெரிக்காவின் "ஆசியாவை நோக்கிய முன்னிலை", ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளை, அமெரிக்காவுடனான அவற்றின் உறவுகளை விலையாக கொடுத்து, சீனாவுடன் நெருக்கமான மூலோபாய உறவுகளை அபிவிருத்தி செய்வதை கருதிக்கொள்ள இட்டுச் சென்றுள்ளது.

மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவை நோக்கிய சீனாவின் OBOR ஆரம்பத்தில் ஒபாமா நிர்வாகத்தால் 2011 இல் அறிவிக்கப்பட்ட "ஆசியாவை நோக்கிய முன்னிலைக்கு" விடையிறுப்பாக இருந்தது. சீனா மத்திய கிழக்கிலிருந்து வரும் அதன் எரிசக்தி ஆதாரவளங்களுக்காக அதன் கடல்சார் வர்த்தக பாதைகளாக இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலை பார்த்தபோது, அது ஜப்பான், ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் இந்தியா உட்பட வாஷிங்டனால் ஒருங்கிணைக்கப்பட்ட விரோத சக்திகளின் ஒரு கூட்டணியை முகங்கொடுத்தது. கடல்சார் பலத்தை கொண்டு பார்க்கையில் பாரியளவில் தரமிழந்து இருந்தால் சீன ஆட்சி, அதற்கு பதிலாக யுரேஷியாவின் தரைமார்க்க வர்த்தக பாதைகளை அபிவிருத்தி செய்ய தீர்மானித்தது.

2013 இல் OBOR தொடங்கியபோது, பெய்ஜிங் 1990களில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர் வெகு விரைவில் கருத்தில் ஏற்றிருந்த ஒரு மூலோபாயத்திற்கு திரும்பியது. பெய்ஜிங் அந்த தசாப்தத்தில், "ஆசியா-சார்பு உலகளாவிய எரிசக்தி பாலம்" (Pan-Asian Global Energy Bridge) முன்மொழிவு போன்ற மத்திய கிழக்கிலிருந்து சீன பெருநிலத்திற்கான தரைவழிப் பாதை திட்டங்களை அபிவிருத்தி செய்தது. ஆனால் 2001 இல் அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் படையெடுப்பு இத்தகைய திட்டங்களுக்கு திடீர் முட்டுக்கட்டையாக ஆனதுடன், அதன் விளைவாக மத்திய ஆசியாவில் அமெரிக்க செல்வாக்கு மேலோங்கியது.

ஆழமடைந்துவரும் உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடிக்கு இடையே, ஏற்கனவே 14 ஆண்டுகள் கடந்து விட்டன என்பதுடன் வாஷிங்டன் பெரிதும் ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை திரும்ப பெற்றுள்ள நிலையில், சீனாவின் OBOR திட்டங்கள் இன்னும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. 2008 பொறிவுக்குப் பின்னரில் இருந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒப்பீட்டுரீதியிலான பொருளாதார நிலை, பரந்தளவில் பலவீனமடைந்துள்ள அதேவேளையில், சீன முதலாளித்துவம் இப்போது ஒரு பலவீனமான பொருளாதார நிலைமையை முகங்கொடுத்துள்ளதுடன் மற்றும் அதன் பண்டங்களுக்கு பொருளாதார மையங்களை காண பெரும்பிரயத்தன முயற்சியில் உள்ளது. அதேநேரத்தில் ஐரோப்பா கட்டுப்படுத்தவியலாத அதன் சொந்த பொருளாதார நெருக்கடியை முகங்கொடுக்கின்ற நிலையில், ஐரோப்பிய ஏகாதிபத்தியம், ஹோலாண்ட் விஜயத்தில் எடுத்துக்காட்டப்பட்டதைப் போல, அதிகரித்தளவில் சீனாவுடனான அதன் இலாபகரமான உறவுகளை சார்ந்துநிற்க வேண்டிய நிலை உள்ளது.

இதன் ஒரு விளைவாக, புவிசார்-மூலோபாய பதட்டங்கள் அதிகரிக்கின்றன. 2013 இல் சிரியா மற்றும் 2014 இல் உக்ரேன் மீது ரஷ்யா உடனும் மற்றும் 2013 இல் கொரியா விவகாரத்தில் சீனா உடனும் அமெரிக்காவின் இராணுவ விட்டுக்கொடுப்பற்ற நிலைக்குப் பின்னர், உலகெங்கிலுமான அரசாங்கங்கள் அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான உலகளாவிய போர் அபாயத்தை கருதிப் பார்க்கத் தொடங்கியுள்ளன.

இப்போது சீன ஆளும் உயரடுக்கின் அடுக்குகள், அமெரிக்காவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனான கூட்டுக்களை அபிவிருத்தி செய்யும் முன்மொழிவுகளை பரப்பிவிட தொடங்கியுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிணைப்புக்கள் அமெரிக்க-ஜப்பான் கூட்டணியை ஈடு செய்யும்" என்று வெளிப்படையாக தலைப்பிட்டு அக்டோபர் 27 இல் Global Times எழுதியது: “சீனா இப்போது சீன-ஐரோப்பிய உறவுகளை முன்னெடுக்க தொடங்கியுள்ளது. மூன்று ஐரோப்பிய அரசு தலைவர்கள் ஒரு மாதத்திற்குள் சீனாவின் உயர்மட்ட தலைவரை சந்தித்திருப்பது தற்செயல் நிகழ்வுக்கு மேலான ஒன்றாகும். அமெரிக்க ஊடகங்கள் அவற்றின் கரங்களைப் பிசைந்து கொண்டிருப்பதையோ அல்லது ஐரோப்பா அவற்றின் 'கோட்பாடுகளை' கைவிடுவதை குறித்து குற்றஞ்சாட்டுவதையோ ஒருபோதும் நிறுத்திக் கொள்ளப்போவதில்லை. சீனாவுடன் ஐரோப்பா ஒரு சுமூகமான உறவை மேற்கொள்ள பெரிதும் தீர்மானகரமாக இருப்பதன் மீதான அவர்களின் பொறாமையிலிருந்து அமெரிக்கர்களின் கோபம் எழுகிறது.”

இதுபோன்ற கருத்துக்கள், நிலவும் சமூக அமைப்புமுறையின் திவால்நிலைமை குறித்து, சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு அளிக்கும் ஓர் எச்சரிக்கையாகும். உற்பத்தி சக்திகளின் அபிவிருத்திக்கும் தேசிய-அரசு அமைப்புமுறையின் பகுத்தறிவற்ற குணாம்சத்திற்கும் இடையிலான முரண்பாட்டில் வேரூன்றியுள்ள.

உண்மையில் அங்கே சீன-ஐரோப்பிய ஒன்றிய அனுமான கூட்டணி மேலெழுவதில் நிறைய முட்டுக்கட்டைகள் உள்ளன: அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையிலான நேட்டோ கூட்டணி, சீனா OBOR உடன் ஒருங்கிணையும் பிராந்தியங்களில் நிலவும் ஸ்திரமின்மை, மற்றும் ஐரோப்பாவிற்குள்ளேயே நிலவும் பிளவுகள் ஆகியன. “அமெரிக்க-ஐரோப்பிய உறவுகள் மோசமாக இருப்பதாக நாம் நினைப்பதற்கும் அப்பாற்பட்டவையாகும், மேலும் சீனாவிற்கு ஆதரவாக இங்கிலாந்து, ஜேர்மனி மற்றும் பிரான்சிற்கு இடையிலான போட்டி என்பதும் நாம் நினைப்பதைப் போல நம்பகமானதல்ல என்பதை சீனா குறிப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும்,” என்பதை Global Times ஒப்புக்கொண்டது.

எவ்வாறிருப்பினும், சீனாவும் மற்றும் பல்வேறு ஐரோப்பிய சக்திகளும், யுரேஷிய பெருநிலத்தை ஒரு பொருளாதார பிரிவுக்குள் ஒருங்கிணைப்பதற்கு அவசியமான போக்குவரத்து மற்றும் நிதியியல் உள்கட்டமைப்பின் தொடக்கநிலையை திட்டமிடுவதில், வாஷிங்டனின் விருப்பங்களுக்கு எதிராக இப்போது ஒன்றுகூடி வருகின்றன என்ற உண்மையும் உள்ளது. அத்தகையவொரு அமைப்பு, அபிவிருத்தி அடைந்தால், அமெரிக்காவை அதன் ஒரேயொரு முக்கிய புவிசார்-மூலோபாய போட்டியாளராக எதிர்நோக்குவது மட்டுமல்லாது, அது மக்கள்தொகை மற்றும் தொழில்துறை பலத்திலும் அமெரிக்காவை தீர்மானகரமாக தாண்டிச்சென்றுவிடும்.

குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் இரண்டாந்தர அந்தஸ்திற்கு புறக்கணிக்கப்படுவதை தவிர்க்க முயலுகையில், இத்தகைய முரண்பாடுகள் போராக வெடிக்கக்கூடிய அபாயமே, சீனா குறித்து தற்போதைய அமெரிக்கா-ஐரோப்பிய ஒன்றிய பிளவுகளிலிருந்து எழும் மத்திய அபாயங்களில் ஒன்றாக உள்ளது. உண்மையில் யுரேஷிய பெருநிலம் ஒருங்கிணைவதை என்ன விலைக்கொடுத்தாவது தடுப்பது என்பது நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே அமெரிக்க வெளியுறவு கொள்கையின் ஒரு மத்திய இலக்காக இருந்து வருகிறது.

அதுபோன்றவொரு விளைவைத் தடுப்பதற்காக ஆக்ரோஷமாக நடந்து கொள்ள வேண்டிய அவசியம், முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜ்பிக்னீவ் பிரிஜேஜென்ஸ்கி (Zbigniew Brzezinski) இன் The Grand Chessboard எனும் பரவலாக வாசிக்கப்பட்ட 1997 நூலின் பிரதான கருத்துருக்களில் ஒன்றாக இருந்தது.

அவர் யுரேஷிய கண்டத்தின் இரண்டு முனைகளிலும் பொருளாதார சக்தி மேலெழுவதைக் குறித்து எச்சரித்தார்: “உலகளாவிய அளவில் ஈடுப்பட்டு வருகின்ற அமெரிக்கா எவ்வாறு சிக்கலான யுரேஷிய சக்திகளின் உறவுகளோடு இணங்கியிருக்க போகிறது. அதுவும் குறிப்பாக ஒரு மேலாதிக்கம் மிக்க மற்றும் எதிர்விரோத யுரேஷிய சக்திகளின் எழுச்சியை அது தடுக்குமா. இந்த பிரச்சினை, உலகளாவிய மேலாளுமை நடைமுறைப்படுத்துவதற்கான அமெரிக்காவின் தகைமைக்கு முக்கியமானதாக உள்ளது... அவ்விதத்தில் யுரேஷியா ஒரு சதுரங்கப்பலகையாகும், அதில் உலக மேலாளுமைக்கான மோதல் தொடர்ந்து விளையாடப்படும்.”

2005ல் ஒரு கட்டுரையில், அமெரிக்க புவிசார்-மூலோபாய பகுப்பாய்வு நிறுவனம் Stratfor, ஒரு ரஷ்ய-மேலாதிக்கம் செலுத்தப்படும் யுரேஷியா குறித்த அமெரிக்காவின் அச்சங்களே, ரஷ்யாவை உடைக்க வாஷிங்டன் விரும்புவதற்கான ஒரு காரணமாக உள்ளது என்று மேற்கோளிட்டது. “யுரேஷியாவை ஒரே, ஒருங்கிணைந்த, கண்டமாக ஐக்கியப்படுத்தில் இதுவரையிலும் வேறெந்த சக்தியை விடவும் சோவியத் ஒன்றியம் நெருக்கமாக வந்தது. அத்தகையவொரு புற அபிவிருத்தியானது அமெரிக்காவின் அதி-வல்லமையை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய ஒரே சக்தியாக விளங்கும். இத்தகைய சிறிய உண்மை துணுக்குகளைக் கூட கொள்கை வகுப்பாளர்கள் மறந்துவிடவும் இல்லை அல்லது முக்கியமற்றதாக எடுத்துக் கொள்ளவும் இல்லைரஷ்யாவை நோக்கிய அமெரிக்க கொள்கை மிகவும் எளிமையானதும் ஆகும்: அதாவது, இறுதியில் அதை உடைப்பது,” என்று அது எழுதியது.

பிரதான சக்திகள் தீவிரமடைந்துவரும் நெருக்கடியை முகங்கொடுத்திருப்பதுடன், அதற்கான முற்போக்கான எந்த தீர்வும் அவற்றிடம் இல்லாத நிலையில், அவை முன்பினும் அதிக ஆக்ரோஷ கொள்கைகளை பாவிப்பார்கள் என்பதால் இப்போது அபாயம் மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.