தமிழர் போராட்டமும், ஹீலி, பண்டா, சுலோட்டரின் துரோகமும்

Forth International Volume-14 No.1 March-1987

நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் இலங்கை பகுதியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (Revolutionary Communist League -RCL) மீது அரசின் அண்மைய தாக்குதலை பயன்படுத்தி ட்ரொட்ஸ்கிசத்தை நசுக்குவதற்கான தன்னுடைய ஆதரவை தெரிவிக்க ஜி.ஹீலி சற்று நேரத்தைகூட இழக்கவில்லை.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பகுதிகள் வியத்தகுமுறையில் ஐக்கியத்திற்கான பிரசாரத்தை காட்டியதால் பெரும் திகைப்பிற்கு உட்பட்டு ஐக்கிய தேசிய கட்சி (UNP) அரசாங்கம் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கு எதிராக ஒரு சர்வதேசப் பொய்கள் மற்றும் அவதூறுப் பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கையில், ஹீலி தன்னுடைய விதத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரச்சாரத்தில் சேர்ந்து கொள்ளும் வகையில் தன்னுடைய News Line பத்திரிகையில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இருந்து புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஒரு "வெளியேற்றப்பட்ட" அமைப்பு என்ற பொய்க்கூற்றை வெளியிட்டுள்ளார்.

இப்படித் துரோகத்தனமாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக தனிமைப்படுத்த ஹீலி மேற்கொண்ட முயற்சி மிகப் பரிதாபமாக தோல்வியுற்றது; ஏனெனில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதிகளும் அமெரிக்காவின் வேர்க்கர்ஸ் லீக்கும் உலகம் முழுவதும் இருக்கும் தொழிலாள வர்க்கத்தின் மிகக் கணிசமான ஆதரவைத் திரட்டி UNP அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூன்று புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக உறுப்பினர்களை விடுவிக்க உதவின. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடைய ஒருமித்த கருத்து (இது அனைத்துலகக் குழுவின் பகுதிகள் ஒவ்வொன்றினாலும் பகிர்ந்து கொள்ளவும்படுகிறது) ஹீலி மற்றும் அவருடைய எடுபிடிகளான பண்டா, சுலோட்டர் ஆகியோர் உலக இயக்கத்தின்மீது கொண்டிருந்த பிற்போக்குத்தன பிடியை அனைத்துலகக் குழு தகர்த்திராவிட்டால், இத்தகைய ஆதரவு கிடைத்திருக்காது என்பதாகும்.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கு ஆதரவான சர்வதேச ஒற்றுமைப் பிரச்சாரத்தை சேதப்படுத்த ஹீலி மேற்கொண்ட முயற்சி ஒன்றும் தற்செயல் நிகழ்வு அல்ல. ட்ரொட்ஸ்கிசத்தின் மீதான அவருடைய தாக்குதல் முயற்சியின் நேரடித் தொடர்ச்சியாகும். இது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இருந்து அவருடைய தேசப்பற்றுவாத, குட்டிமுதலாளித்துவ பிரிட்டிஷ் மத்தியவாதிகளின் குழு உடைத்துக் கொள்ள இட்டுச்சென்றது. பிரிட்டனில் WRP-ன் அரசியல் சீரழிவை பற்றி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு சமீபத்தில் ஒரு ஆவணத்தில் முற்றிலும் தெளிவாக காட்டியுள்ளதைப்போல், 1970 களின் ஆரம்பத்தில் இருந்தே ஹீலி, பண்டா, மற்றும் சுலோட்டர் தலைமையில் WRP நனவுடன் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வளர்ச்சியை எதிர்த்துள்ளதுடன், அது மத்திய கிழக்கில் இருக்கும் தேசிய முதலாளித்துவத்தின் பிரிவுகளுடனும், பிரிட்டனில் உள்ள தொழிற்சங்க அதிகாரத்துவத்திடமும் கொண்டிருக்கும் அதன் முழு சந்தர்ப்பவாத உறவுகளையும் தடைக்குட்படுத்திவிடும் என்று அது சரியாக அஞ்சியிருந்தது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இருந்து புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் "வெளியேற்றப்பட்டதாக" ஹீலி விடுத்த பொய் அறிவிப்பு, முக்கியமில்லை என்று தோன்றினாலும், அவருடைய குழுவின் ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பு தன்மை பற்றி நிறையக் கூறுகிறது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலிருந்து பிரிந்த பின்னர் ஹீலியின் குட்டி முதலாளித்துவ குழு இலங்கையில் இருக்கும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை பற்றி News Line பத்திரிகையில் (July 11, 1986) குறிப்பிட்டுள்ளது இதுதான் முதல் தடவையாகும். அதுவும் இந்த நாட்டில் அவர்களுடைய சக சிந்தனையாளர்கள் ஒருவரும் இல்லை என்று அறிவிப்பதற்காக மட்டுமே!

இலங்கை தொழிலாள வர்க்கம் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் கொண்டுள்ள பங்கின் பின்னணியில், குறிப்பாக ட்ரொட்ஸ்கிசத்திற்கும் பப்லோவாத திருத்தல்வாதத்திதற்கும் இடையே நடந்த வரலாற்றுப் பின்னணியில், ஹீலியின் அறிவிப்பு, ட்ரொட்ஸ்கிசத்திற்கான அவருடைய போராட்டத்தை நீண்ட நாள் முன்னரே அவர் கைவிட்டுவிட்டார் என்பதைத்தான் மிகத் தாமதமாக தெரிவிக்கிறது. மேலும் இலங்கை தொழிலாள வர்க்கத்திற்காக "வெளியேற்றப்பட்ட" புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கு எதிரான ஒரு மாற்றீட்டு திட்டத்தை முன்வைக்காமல், முற்றுமுழுதான தேசியவாதி மட்டுமே புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை கண்டிப்பதில், ஹீலி போல் நடந்து கொண்டிருப்பார். உண்மையில், ஹீலியின் WRP இலங்கையில் இருக்கும் தொழிலாள வர்க்கத்திற்கு முன்வைக்கும் வேலைத்திட்டம், அல்லது மற்ற நாடுகளில் இருக்கும் தொழிலாளர்களுக்கு முன்வைக்கும் வேலைத்திட்டம் என்ன? எதுவும் இல்லை. அதுதான் ஹீலியின் "சர்வதேசியத்தின்" உண்மையான அளவு ஆகும்.

ஹீலிக்கு வக்காலத்து வாங்கும், குட்டி முதலாளித்துவ கிரேக்க சொற்புரட்டாளர் சவாஸ் மைக்கேல், ஏற்கனவே இந்த வினாவிற்கு, வினாவைத் தாக்கிய முறையிலேயே விடையிறுத்துவிட்டார். இந்த பண்பாடற்றவர் கூற்றின்படி, ட்ரொட்ஸ்கிச கோட்பாடுகளையும் வேலைத்திட்டங்களையும் பாதுகாத்தலும் அபிவிருத்தி செய்தலும் "ட்ரொட்ஸ்கிச இயக்கம் தோல்விகளை கண்டு தனிமைப்படுத்தப்பட்ட காலத்தின் நடைமுறைகளுக்கு பிற்போக்குத்தனமாக மீண்டும் செல்லும் தன்மை உடையதாகும்." அனைத்துலகக் குழு சமீபத்தில் குறிப்பிட்டுள்ளபடி, நான்காம் அகிலம் நேரடியாக ட்ரொட்ஸ்கியினால் தலைமை தாங்கப்பெற்று வழிநடத்தியபோது வளர்த்திருந்த நடைமுறைகளைத்தான் சவாஸ் மிசேல் "பிற்போக்குத்தனம்" என்று கூறி நடத்தும் தாக்குதல்கள் ஆகும்.

தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை வெற்றிகொள்வதற்காக தொழிலாள வர்க்க கட்சிகளின் வளர்ச்சிக்கான அடித்தளமாக ட்ரொட்ஸ்கிசத்தின் கோட்பாடுகள் மற்றும் வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தை நிராகரித்தல் என்பது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தை நிராகரிப்பது போல் ஆகும். உண்மையில் 1970களின் ஆரம்பத்தில் இருந்து ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டர் ஆகியோர் தாங்கள் சந்தர்ப்பவாத வகையில் பல பிற்போக்குத்தன சக்திகளுக்கு அடிபணிந்ததன் மூலம் ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தை நிராகரிப்பதை ஒரு புதிய "கோட்பாடு" என்ற மட்டத்திற்கு உயர்த்தினர்.

ஆனால் அவர்களுடைய கூற்றுகளுக்கு மாறாக, ஹீலியின் குழு சோசலிசப் புரட்சிக்கான ஒரு உலக கட்சியை கட்டமைப்பதில் சிறிதும் அக்கறை கொண்டிருக்கவில்லை. இவர்கள் பிரிட்டனில் இருக்கும் இவர்களுடைய அமைப்பை தக்க வைத்துக் கொள்ள உலகம் முழுவதும் தொழிலாள வர்க்கத்திற்கு குரோதமான சக்திகள் மத்தியில் கூட்டாளிகளை தேடிக் கொண்டிருக்கும் ஒரு வலதுசாரி மத்தியவாத குழுவினர் ஆவர்.

இந்த உள்ளடக்கத்தில், நீண்ட காலமாக ஹீலிக்கும் இப்பொழுது சிதைந்து கொண்டிருக்கும் முன்னாள் WRP பிரிவுகள் பலவற்றிற்கும் இடையே இலங்கையில் தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் மிக முக்கியமான ஆதரவாளர்கள் எனக் காட்டிக் கொள்ளும் மோசடி எப்படி நீடித்திருந்தது என்பதும் கூறப்படவேண்டும். இதைவிட உண்மையில் இருந்து மாறுபட்டது ஏதும் கிடையாது.

இலங்கையில் தொழிலாள வர்க்கத்திற்காக தமிழ் தேசத்திற்கு சுய நிர்ணய உரிமையை உத்திரவாதம் செய்வதற்கு தொழிலாள வர்க்கத்தை திரட்டிப் போராடும், ஒரே தொழிலாள வர்க்க கட்சியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மீதான ஹீலியின் தாக்குதல், எந்த அளவிற்கு ஹீலி, தொழிலாள வர்க்கத்தை புரட்கரமாக அணிதிரட்டுவதன் மீதான ஒரு முன்னோக்கின் மீது உண்மையாய் இழிவுணர்வை கொண்டுள்ளார் என்பதைக் காட்டுகிறது.

உண்மையில், ஹீலி மற்றும் பண்டாவின் தமிழ் தேசத்திற்கான ஆதரவு எனக்கூறப்படுவது எந்த கோட்பாடுகளையும் அடித்தளமாகக் கொண்டது அல்ல. தேசிய விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு முன்பு, தமிழர்களுடைய சுயநிர்ணய உரிமையை மிக மூர்க்கமான எதிர்ப்பாளராக இருந்த பின்னர், அது மக்களிடையே கணிசமாக ஆதரவைப் பெற்ற பின் அவர்கள் தங்களுடைய சொந்த சந்தர்ப்பவாதக் காரணங்களுக்காக அதற்கு ஆதரவைக் கொடுத்திருந்தனர். இப்படி முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது இலங்கை தொழிலாள வர்க்கத்திற்காக ஒரு முன்னோக்கு கொடுப்பதற்காக செய்யப்படவில்லை; மாறாக இந்தியா மற்றும் இலங்கையில் தொழிலாள வர்க்கங்களை நோக்கிய எவ்விதமான அணிதிரளலையும் தாக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்டது. 1973ல் இருந்து WRP இன் அரசியல் நிலைப்பாடு பற்றி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு செய்துள்ள அரசியல் பகுப்பாய்வில் இருந்து புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகக்கு எதிரான ஹீலி, பண்டாவின் நிலைப்பாடு பூர்த்திசெய்யப்பட, ஜனநாயகப் புரட்சியின் கடமைகளை முடிக்க வேண்டிய பணிகளில் தொழிலாள வர்க்கத்தின் பாத்திரத்தை நிராகரிப்பதை மையமாக கொண்டிருந்தது என்பது மிகத் தெளிவாகிறது.

இலங்கையில் 1964ம் ஆண்டு பெரும் பப்லோவாத காட்டிக் கொடுப்பு நிகழ்ந்தது பற்றிய பகுப்பாய்வில், லங்கா சம சமாஜக் கட்சி (LSSP) மண்டேல், ஹான்சென் இன் ஐக்கிய செயலகத்தின் பகுதி என்ற வகையில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) யுடன் முதலாளித்துவ ஆட்சியில் கூட்டுச்சேர்ந்த நிலையில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் இக்குற்றத்தின் அரசியல் வேர்களை, ஜனநாயகப் புரட்சியின் அர்த்தத்தில் LSSP தலைவர்கள் 1948ல் இலங்கை அரசு தோற்றுவிக்கப்பட்டதின் அரசியல் சட்டபூர்வதன்மையை ஏற்றுக்கொண்டதில் கண்டது.

1947ம் ஆண்டு சுதந்திரமான அரசு என அழைக்கப்படுவது அமைக்கப்பட்டமை, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் அவர்களுடைய உள்ளூர் முகவர்களால் மக்களுக்கு எதிராக தோற்றுவிக்கப்பட்ட சதி என்று எதிர்த்தபின், அப்பொழுது நான்காம் அகிலத்தின் ஒரு பகுதியாக இருந்த போல்ஷிவிக் சம சமாஜக் கட்சி, இந்தக் கருத்தாய்வை 1950ல் விரைவில் கைவிட்டது. 1950ல் என்.எம்.பெரேராவின் தலைமையில் இருந்த LSSPன் தேசிய மற்றும் சந்தர்ப்பவாத கிளையுடன் மறு ஐக்கியமானது, 1948 சுதந்திரம் எப்படியும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதன் மூலம் ஜனநாயகப் புரட்சி பூர்த்திசெய்யப்படுவதற்கான ஒரு நியாயபூர்வமான மாற்றீடு என்ற உள்ளார்ந்த ஊகத்தின் மீது மேற்கொள்ளப்பட்டது.

இவ்விதத்தில் LSSP தலைவர்கள் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை காட்டிக் கொடுத்தனர்; அது கூறியிருந்ததாவது: "ஒரு நீண்ட ஜனநாயக காலகட்டத்திற்கு பின்னர் பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்திற்கான பாதை உள்ளது என்பது மரபார்ந்த கருத்தாக இருந்தபோதிலும்கூட, நிரந்தரப் புரட்சி தத்துவம் பின்தங்கிய நாடுகளில் ஜனநாயகத்திற்கான பாதை பாட்டாளி வர்க்கத்திற்கான சர்வாதிகாரத்தின் மூலம் அடையப்படும் என்பதை நிறுவிக்காட்டுகின்றது" (ட்ரொட்ஸ்கி, The Permanent Revolution, New Park Publications, 1971, p.8]

1950ல் LSSP இன் மறு ஐக்கிய வேலைத்திட்டம், சுயநிர்ணயத்திற்கான தேசங்களின் உரிமையை ஏற்றபோதிலும், இது போல்ஷிவிக் சம சமாஜ கட்சியின் தொழிலாளர்களுக்கு தலைமையில் உள்ள மத்தியவாதிகளால் வெறும் பேச்சளவிலான சலுகையாக மாற இருந்தது. நிஜ வாழ்வில், ஒன்றுபட்ட LSSP, 1948 உடன்பாட்டின் வடிவமைப்பை ஏற்ற வகையில் செயல்படத் தொடங்கியது. ஜனநாயகப் புரட்சியின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் அனைத்தும், தொழிலாள வர்க்கத்தினால் நடத்தப்படும் ஒரு புரட்சி மூலம் அது தீர்க்கப்பட வேண்டும் என்பதற்கு பதிலாக இப்பொழுது இருக்கும் அரசை சீர்திருத்தம் செய்வதன் மூலம் நிறைவேற்றப்படலாம் என்று கருதப்பட்டது.

இவ்விதத்தில் 1968-72ம் ஆண்டுகள் காலகட்டத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதி என்னும் முறையில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமானது, திருத்தல்வாதிகளால் நிரந்தரப் புரட்சி தத்துவம் காட்டிக் கொடுக்கப்பட்டதற்கு எதிரான போராட்டத்தில் 1950க்குப் பின்னர் முதல் தடவையாக தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ் மக்களின் சுயநிர்ணயத்திற்கான உரிமை பற்றிய பிரச்சினையை எழுப்பியது. 1964 காட்டிக் கொடுப்பிற்கு பின்னர், LSSP மற்றும் ஸ்ராலினிஸ்ட்டுக்களால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இனவெறிக் கொள்கைகளுக்கு துரோகத்தனமாக கொடுத்த ஆதரவினால், தமிழ் சிறுபான்மையினர் தொழிலாள வர்க்கத்தில் இருந்து முற்றிலும் அந்நியப்படுத்தப்பட்டனர்.

LSSP- CP -SLFP கூட்டணி அரசாங்கம் தமிழ்ப் பகுதியின் மீது தன்னுடைய தாக்குதல்களை தீவிரப்படுத்திய அளவில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தொழிலாள வர்க்கத்திடையே தமிழ், சிங்கள தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் போராட்டத்தினூடாக முதலாளித்துவ ஆட்சியை தூக்கிவீசுவதனால் தமிழ்ப் பகுதியின் சுயநிர்ணய உரிமையை நிலைநிறுத்தும் போராட்டத்திற்கு பிரச்சாரம் செய்தது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக செய்தி ஊடகத்தின்மீது சுமத்தப்பட்டிருந்த தடை 1971ல் நீக்கப்பட்ட பின்னர், கட்சியின் கம்கறு மாவத்தை, தொழிலாளர் பாதை என்னும் சிங்கள, தமிழ் ஏடுகள் ஜூன் 1972ல் தொடக்கப்பட்டன. தங்கள் இரண்டாம் பதிப்பில் செய்தித்தாட்கள் மிக விரிவாக தமிழர்களின் தேசிய உரிமைகள் பற்றி தொழிலாள வர்க்க கொள்கையை விரிவாகக் கூறியது:

"ஏகாதிபத்தியத்தாலும் பெரும் சிங்கள தேசிய பேரினவாதத்தாலும் அடக்கப்பட்ட நாட்டின் வடபகுதியில் இருக்கும் தமிழ் சிறுபான்மையினர், இப்பொழுது தங்கள் ஜனநாயக உரிமைகளை காப்பாற்றும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.

"லெனின் சுட்டிக்காட்டியுள்ளது போல் மார்க்சிஸ்ட்டுக்கள் அனைத்து ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் போராட்டங்களுக்கும் நிபந்தனையற்ற ஆதரவை கொடுக்க வேண்டும். தேசிய பிரச்சினை மற்றும் விவசாயிகள் பிரச்சினைகள் இந்த நாட்டில் முதலாளித்துவ ஜனநாயக புரட்சியில் முற்றுப்பெறாத இரு பணிகளாக தொடர்ந்து உள்ளன. தேசிய ஒடுக்குமுறைக்கு ஆளாகியுள்ள தமிழ் தேசத்தின் பிரச்சினைகள் முதலாளித்துவ அமைப்பை தூக்கிவீசி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவுவதின் மூலம் தொழிலாள வர்க்கத்தினால் மட்டுமே தீர்க்கப்பட முடியும்.

"ஆயினும், தொழிலாள வர்க்கத்தின் முக்கிய கட்சிகள் இன்று நேரடியாக தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான முதலாளித்துவ வர்க்கத்துடன் நேரடியாக பிணைந்து இருக்கின்றன.

"...இந்தக் காட்டிக் கொடுப்பினால், முதலாளித்துவ தமிழ் கட்சிகள் இன்று வடக்கில் வெகுஜனத்திடையே உள்ள அதிருப்தியை தமது கைகளுக்குள் எடுத்துக்கொள்ள முற்பட்டுள்ளன. தமிழரசுக்கட்சி (Federal Party) கடந்த காலம் முழுவதும் தேசியப் பிரச்சினை குறித்து சமரசப் போக்கை கையாள முற்பட்டது. முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடி காரணமாக அவர்களுடைய கொள்கை ஒரு பெரிய நெருக்கடியில் உள்ளது.

"தமிழ் காங்கிரஸ் கட்சி கடந்த காலத்தில் முதலாளித்துவ அரசாங்கத்தில் நுழைந்தது போல், இன்று தமிழரசுக் கட்சியின் ஒத்துழைப்புக் கொள்கையில் நாட்டம் கொண்டுள்ளது. சமரசவாதம் செய்யும் தமிழ் முதலாளித்துவ தலைவர்கள் தமிழ் பகுதிக்காக அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் தமிழ் தேசத்தின் சுயநிர்ணய உரிமைக்கு போராட இயலாதவர்கள் ஆவர். இந்த திவால் தன்மைக்கு விடையிறுக்கும் வகையில், ஒரு பகுதி தமிழ் குட்டி முதலாளித்துவ இளைஞர்கள் இப்பொழுது அரசியல் தீரச் செயல்கள் என்னும் தற்கொலைக்கு ஒப்பான பாதையை நாடுகின்றனர்.

"மார்க்சிஸ்ட்டுக்களாகிய நாங்கள் சுயநிர்ணய உரிமைக்கான தமிழ் தேசத்தின் உரிமையை அங்கீகரிக்கிறோம். அதே நேரத்தில், இந்த உரிமை சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களை ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை சோசலிச கொள்கைகள் அடிப்படையில் நிறுவி அதே உரிமைகளை அங்கீகரிக்கும் வகையில்தான் செயல்படுத்தப்பட முடியும் என்றும் வலியுறுத்துகின்றோம்." (Kamkarumavatha, June 24, 1972).

இந்த அரசியல் நிலைப்பாடு, ஹீலி மற்றும் அவருடைய நிரந்தப் புரட்சி தத்துவ வல்லுனர் என்று தன்னையே கருதிக்கொள்ளும் மைக்கல் பண்டா ஆகியோருடைய கருத்துக்களுடன் நேரடியான மோதலை கொண்டது. லண்டனில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு கூட்டம் ஒன்று 1972 கோடை ஆரம்பத்தில் நடைபெற்றபோது (இக்கட்டுரை ஆசிரியரும் அதில் பங்கு பெற்றிருந்தார்) பிரிட்டிஷ் பகுதியின் தலைமை (Socialist Labour League) தமிழ் தேசத்தின் சுயநிர்ணய உரிமைக்கான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஆதரவை கடுமையாக எதிர்த்தது. இந்த சுயநிர்ணய உரிமை பற்றிய விவாதம் ஒரு விஷயத்தைத்தான் நிரூபித்தது: 1972 ம் ஆண்டின்போதே, அதாவது மத்திய கிழக்கு மற்றும் அண்டை கிழக்கு ஆகியவற்றில் உள்ள தேசிய முதலாளித்துவ ஆட்சிகளிடம் இழிவான முறையில் நிபந்தனையற்ற சரண் அடைவதற்கு முன்பே, ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டர் ஆகியோர் அரைக் காலனித்துவ நாடுகளில் இருக்கும் மக்களை பாதுகாப்பது என்பதை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராட்டம் நடத்துகிறோம் என்ற பெயரில் முற்றிலும் தவறான கொள்கையான பிற்போக்கு முதலாளித்துவ அரசுகளின் ஆதரவை நாடும் வகையில் செயல்பட்டனர்.

உள்ளூர் ஆளும் வர்க்கங்களின் துரோகங்களை பயன்படுத்தி மக்களின் ஒரு பகுதியினரை மற்றவர் மீது தூண்டிவிடும் வகையில், நைஜீரியாவை ஏகபோக உரிமைகளின் கட்டுப்பாட்டின்கீழ் வைப்பதற்காக நடந்த Biafra உதாரணத்தை காட்டி, பண்டா தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான ஆதரவும் இலங்கையை துண்டாடும் ஏகாதிபத்தியவாதிகளின் திட்டங்களுக்கு உதவும் என்ற கருத்தை முன்வைத்தார்.

அக்காலக்கட்டத்தில், வர்க்கப் போராட்டத்தில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் கொள்கையின் சரியான தன்மை அல்லது வேறுவிதமானதாக இருக்கவேண்டுமா என்பது பற்றி முடிவெடுக்க உடனடியான காரணங்கள் ஏதும் இல்லாததால் --தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பக் கட்டத்தில் இருந்ததால், தனிநபர் பயங்கரவாதம் என்னும் தீரச் செயல்களில் இளைஞர்கள் முக்கியமாக ஈடுபட்டிருந்த நிலையில்-- புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக தலைமை SLL தலைமையின் அனுபவம் மற்றும் அரசியல் அதிகாரத்திற்கு தலை வணங்கி, தயக்கத்துடன் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியது. ஹீலி, பண்டா, சுலோட்டர் ஆகியோருடைய இத்தகைய இரக்கமற்ற ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்திற்கு எதிரான வழிவகையால் தன்னுடைய பழைய நிலைப்பாட்டிற்கு அது திரும்பியிருந்த 1972-79 காலம் முழுவதும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மேலாதிக்கம் செலுத்திய முதலாளித்துவ சிந்தனைப் போக்கிற்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கியமான வேலைத்திட்ட ரீதியான ஆயுதம் ஏதும் இல்லாமல் செயல்பட்டு வந்தது.

ஹீலி மற்றும் சுலோட்டர் கருத்துக்களுடன் முற்றிலும் உடன்பட்ட வகையில் பண்டா சுயநிர்ணய உரிமைக்கு எதிராக முன்வைத்த வாதம் மிகவும் பலவற்றைப் புலப்படுத்தும் தன்மையை கொண்டிருந்தது. ஹீலி-பண்டா வழிவகையின் உண்மையான துரோகத் தன்மை அந்த நேரத்தில் முழுமையாக தெரியவில்லை என்றாலும், பின்னர் அவர்கள் எப்பொழுதும் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை திருத்துவதில் தீவிரமாக இருந்தனர் என்பது நிரூபணமாயிற்று. பண்டாவின் கருத்தில் சிறுபான்மை தேசங்கள் புதிதாக அமைக்கப்பட்ட "சுதந்திர" அரசுகளில் தங்கள் சுயநிர்ணய உரிமையை உயர்த்திப் பிடிப்பது என்பது ஏகாதிபத்தியத்தில் வலையில் விழுவது போல் ஆகும்; ஏனெனில் அத்தகைய கோரிக்கைகள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் அபிவிருத்தியடையாத அல்லது பின்தங்கிய நாடுகளில் உள்ள பல்வேறு தேசிய இனங்களுக்கு இடையில் வார்த்து உருவாக்கப்படும் பலமற்ற ஒற்றுமையை சீர்குலைத்துவிடும் என்று கூறப்பட்டது.

இந்த நிலைப்பாட்டை அவர்கள் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டர் இதை ஒரு அனைத்துக்கும் பொருந்தும் தத்துவமாக, அபிவிருத்தியடையாத அல்லது பின்தங்கிய நாடுகளில் இருக்கும் பல்வேறு முதலாளித்துவ அரசுகளுக்கு எதிராகவும் பொருந்தும் என்றும் கூறினர்.

1979ல் தமிழர் போராட்டம் பற்றி சந்தர்ப்பவாத காரணங்களுக்காக அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டாலும், WRP தலைமை 1972ல் பண்டா கூறியிருந்த தங்கள் வழிவகையை ஒருபோதும் கைவிட்டதில்லை. 1979ல் இதே வாதத்தை இந்தோனேசிய இராணுவக் குழுவிற்கு எதிராக கிழக்கு தீமோரிய மக்கள் நடத்திய தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்ததற்காக அவர்கள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆஸ்திரேலிய பகுதியான ஆஸ்திரேலிய சோசலிஸ்ட் லேபர் லீக்கை (SLL) தாக்குவதற்கு பயன்படுத்தினர். அதில் சுகர்ணோவின் தலைமையின்கீழ் தோற்றுவிக்கப்பட்ட இந்தோனேசியா நாடு ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தில் ஒரு வரலாற்றுபடி எனவும் அதை குழப்புவது ஏகாதிபத்தியத்திற்கு உதவும் என்று பண்டா வாதிட்டார். இவ்விதத்தில் பண்டாவின் கருத்தின்படி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முழு ஆதரவைப் பெற்ற சுகார்ட்டோவின் இராணுவ ஆட்சி கிழக்குத் தீமோரிய எழுச்சியை அடக்கியதில் ஒரு முற்போக்கான பங்கைக் கொண்டிருந்தது ஆகும்.

இதே நிலைப்பாடுதான் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதலாளித்துவ நாடுகள் தோற்றுவிக்கப்பட்டது பற்றியும் உட்குறிப்பாக ஏற்கப்பட்டது; இந்த அமைப்புக்கள் ஏகாதிபத்தியத்தினால் அடக்கப்பட்டிருந்த மக்களின் ஜனநாயக அபிலாசைகளை ஓரளவிற்கு பிரதிபலித்தன என்ற காரணம் கூறப்பட்டது. இவ்விதத்தில் ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டர் ஆகியோர் இலங்கை முதலாளித்துவ அரசாங்கத்தின் அரசியல் ரீதியான ஜனநாயகத் தன்மை பற்றிய LSSP யின் பலமற்றிருந்த "தத்துவத்திற்கு" துணை நின்றனர்.

WRP இன் நிலைப்பாடு தவிர்க்க முடியாமல் தேசிய முதலாளித்துவத்திற்கு முழு நிபந்தனையற்ற சரணடைதல் என்பதற்கு வழிவகுக்கும்; அதன் மூலம் ஏகாதிபத்தியத்திற்கும் சரணடைதல் என்று ஆகும்; ஏனெனில் அவர்கள் கோட்பாடு இந்த முதலாளித்துவ அரசு அமைப்புக்களை அப்படியே பாதுகாக்கப்படவேண்டும் என்ற தேவையை கொண்டிருந்தது. எந்த விதிவிலக்கும் இல்லாமல் இந்த அரசு அமைப்புக்கள் ஒரு தேசியத்தின் ஆதிக்கத்தை அடித்தளமாக கொண்டு அவற்றின் முதலாளித்துவ வர்க்கத்தினர் ஏகாதிபத்தியத்துடன் பிணைந்திருந்த வகையில் மிருகத்தனமான பலத்தை மற்ற தேசிய இனங்களை அடக்குவதற்கு பயன்படுத்திய முறையில், இந்த அரசுகளின் அமைப்புக்கள் பாதுகாக்கப்படுதல் என்பது ஏகாதிபத்தியத்தை பாதுகாப்பதற்குத்தான் ஒப்பாகும்.

மேலும் பண்டா இந்த அரசு கட்டமைப்புக்களுக்கு ஆதரவு கொடுப்பது ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒடுக்கப்பட்ட அனைத்து தேசிய இனங்களின் பகுதிகளையும் ஒன்று சேர்க்கும் திறனுடைய ஒரே சக்தியான தொழிலாள வர்க்கத்தை வலுவிழக்க செய்துவிடும். பின்தங்கிய முதலாளித்துவ அரசுகளுக்கு இதை பிரயோகிக்கும்போது, லெனின் அவற்றை தேசியரீதியாக மாறுபட்ட தன்மை கொண்ட நாடுகள் என்று கூறியிருந்தார், "தேசியரீதியாக மாறுபட்ட தன்மை கொண்ட நாடுகள் பிற்போக்குத்தனத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன: லெனினின் பார்வையில், முதலாளித்துவம் அனைத்து தேசிய பிரிவுகளையும் ஒரு அலகாக ஒன்றிணைக்கும் அளவிற்கு அபிவிருத்தியடையவில்லை அத்துடன் முதலாளித்துவத்தின் மட்டுப்படுத்தப்பட்ட வளர்ச்சி இந்த தேசிய பிரிவுகளை பொருளாதார நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து ஒரு தனி தேசிய சந்தைக்கு சேவைசெய்யுமாறும் நிர்ப்பந்திக்கின்றது; இதன் பொருள் ஒரு தேசியத்தின் சலுகைகளை பிறவற்றில் இருந்து பாதுகாத்துத் தக்கவைக்கும் அவசிய முயற்சிகள் இருக்கும் என்பதாகும். இதன் அர்த்தம் பல தேசிய இனங்களின் தொழிலாள வர்க்கத்தின் உண்மையான ஐக்கியத்தை தேசிய முறுகலை உக்கிரப்படுத்துவதன் ஊடாக இடையூறுசெய்துவிடும்.

உதாரணமாக இலங்கையில் சிங்கள இனம் மட்டும் ஒரு அரசை உருவாக்கும் சலுகையை பெற்றுள்ளது; அதே நேரத்தில் தமிழர்கள் இந்த உரிமையை அனுபவிப்பது இனவாத வன்முறை பயன்படுத்தப்படுவதின் மூலம் தடுக்கப்படுகிறது. பின்தங்கிய நாட்டில் ஒரு முதலாளித்துவ அரசின் கட்டமைப்பை பாதுகாப்பதன் ஊடாகவும் மற்றும் அரசை இடையூறு செய்வதற்கு எதிராகப் பாதுகாத்தலுக்கு முற்றுப்பெறான ஜனநாயகப் புரட்சியை அடிபணியசெய்ய பண்டா செய்வது போன்றதில் இருந்து மார்க்சிஸ்ட்டுக்கள் ஆரம்பிப்பதில்லை.

இரண்டாவது பிரச்சினை எழவில்லை; ஏனெனில் மார்க்சிஸ்ட்டுகள் பாட்டாளி வர்க்கப் போராட்டம் அனைத்துவித முதலாளித்துவ அரசுகளையும் அகற்றி உலகம் முழுவதும் தொழிலாளர்களின் குடியரசுகளை நிறுவுவதில் முன்னிற்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டுள்ளனர். தேசிய இனங்களை தேசிய அரசுகளாக பிரிப்பது பற்றி அவர்கள் புலம்பவில்லை; ஏனெனில் தங்கள் சொந்த தேசிய முதலாளித்துவத்தினரை எதிர்ப்பதற்கான வர்க்கப் போராட்டத்தின் பாதையினுள் ஒடுக்கப்பட்ட நாடுகளில் உள்ள தொழிலாள வர்க்கம் நுழைவதற்கான தடைகளை இவ்வாறான தேசிய சமத்துவம் இல்லாமல் செய்துவிடும் என்பதாலாகும். இது தொழிலாளர்கள் தங்களுடைய தேசிய முதலாளித்துவத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டத்தில் ஈடுபடவும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச படையில் சேர்ந்து உலக சோசலிசப் புரட்சிக்காக போராடுவதற்கும் இயலுமானதாக்கும்.

உதாரணத்திற்கு, லெனின் இந்தப் பிரச்சினையை ''தேசங்களின் சுயநிர்ணய உரிமை" (The Right of Nations to Self-Determination?") என்ற தலைப்பில் சீரிய முறையில் எழுப்பியது பற்றி எடுத்துக்காட்டுவோம்.

"ரஷ்யாவில் சுதந்திரமான தேசிய அரசை தோற்றுவிப்பது என்பது, தற்போதைக்கு பெரிய-ரஷ்ய (Great-Russian) தேசத்திற்கு மட்டும் உரிய சலுகையாகத்தான் இருக்க்கின்றது. எவ்விதமான சலுகைகளையும் பாதுகாக்காத பெரிய-ரஷ்ய தொழிலாள வர்க்கத்தினராகிய நாம் இந்த சலுகையையும் காப்பாற்ற தயாராக இல்லை. ஒரு குறிப்பிட்ட அரசின் தளத்தில் இருந்து நாம் போராடுகிறோம்; இந்த தேசத்தில் வசிக்கும் அனைத்து தேசிய தொழிலாளர்களையும் ஐக்கியப்படுத்துவோம்; எந்தக் குறிப்பிட்ட தேசிய வளர்ச்சிக்கான பாதைக்கும் உறுதியளிக்க மாட்டோம்; எமது வர்க்க இலக்கை நோக்கி சாத்தியமான அனைத்து பாதைகளிலும் பயணித்து முன்னேறுவோம்.

"ஆனால் அனைத்துவகை தேசியவாதங்களுடன் போராடி பல தேசங்களின் சமத்துவத்தையும் நிலைநிறுத்தாவிட்டால் அந்த இலக்கை நோக்கி நாம் செல்ல முடியாது. உதாரணமாக உக்ரைன் ஒரு தனி அரசாக இருக்க வேண்டுமா என்பது ஒரு ஆயிரம் நிர்ணயிக்க முடியாத காரணிகளால் உறுதி செய்யப்படும் விஷயமாகும். வெற்று "கருத்துக்களை" முயலாமல், சந்தேகத்திற்கு இடமில்லாமல் கீழ்க்கண்டதைக் கூறுவோம்: உக்ரைன் அத்தகைய நாடு ஒன்றைப் பெற வேண்டும். இந்த உரிமையை நாம் மதிக்கிறோம். பெரிய ரஷ்யர்கள் உக்ரைன்மீது கொண்டுள்ள சலுகைகளை காக்க நாம் விரும்பவில்லை; சாதாரண மக்களையும் எந்த தேசத்தின் அரச சலுகைகளையும் நிராகரிக்கும் உரிமை பற்றிய உணர்வில்தான் நாம் பயிற்றுவிக்கிறோம்.

"முதலாளித்துவ புரட்சிக்கால கட்டத்தில் அனைத்து நாடுகளும் செய்துள்ள பாய்ச்சலில், ஒரு தேசிய அரசின் உரிமை பற்றிய மோதல்களும் போராட்டங்களும் நடப்பது சாத்தியமானதும், நிகழக்கூடியவைதான். தொழிலாள வர்க்கத்தினராகிய நாம் முன்கூட்டியே பெரும் ரஷ்ய சலுகைகளை எதிர்ப்பவர்கள் என்று அறிவிப்போம்; அதுதான் எமது முழு பிரச்சாரத்தையும், கிளர்ச்சியையும் வழிநடத்தும்.

"நடைமுறை சாத்தியமானது" பற்றிய விழைவில், ரோசா லுக்சம்பேர்க் பெரிய ரஷ்ய பாட்டாளி வர்க்கம் மற்றும் பிற தேசங்களின் பாட்டாளி வர்க்கத்தின் முக்கிய நடைமுறைப் பணியை மறந்துவிட்டார். அதாவது அனைத்து தேசிய, அரசு சலுகைகளுக்கு எதிரான கிளர்ச்சி மற்றும் பிரச்சாரத்தின் தேவையையும், அவற்றின் உரிமை, அனைத்து தேசங்களின் சமமான உரிமை, அவர்களது தேசிய அரசுக்கு உண்டு என்பதை மறந்துவிட்டார். இது (தற்பொழுது) தேசிய பிரச்சினையில் எமது முக்கிய பணியாக உள்ளது; இந்த விதத்தில்தான் நாம் ஜனநாயகத்தின் நலன்களையும் சமமான தளத்தில் அனைத்து தேசங்களின் அனைத்து பாட்டாளி வர்க்கத்தின் கூட்டினையும் பாதுகாக்க முடியும்.

"இந்த பிரச்சாரம் பெரிய ரஷ்ய ஒடுக்குமுறையாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட தேசங்களின் முதலாளித்துவத்தினரின் பார்வையில் 'நடைமுறைக்கு ஒவ்வாதது' என்று இருக்கலாம் (இரண்டு பிரிவினரும் ஒரு உறுதியான "ஆம்", "இல்லை" என்பதைக் கோருவதுடன், சமூகஜனநாயகவாதிகள் தெளிவற்று இருக்கின்றனர் என்ற குற்றம்சாட்டுகின்றனர். உண்மையில் இது ஒரு பிரச்சாரம்; இந்தப் பிரச்சாரம் ஒன்றுதான் உண்மையான ஜனநாயகத்தினையும், மக்களின் உண்மையான சோசலிச கல்வியூட்டலை உறுதிப்படுத்தும். ரஷ்யாவில் அது ஒரு பல இனங்களை கொண்ட தேசமாக இருப்பதை உறுதிசெய்யக்கூடிய பிரச்சாரமாக இருக்கும்; மிகவும் சமாதானமான முறையில் தனித்தனி தேசிய அரசுகளாக பிரிவை காணக்கூடிய தன்மை இருக்கும் (பாட்டாளி வர்க்க போராட்டத்திற்கு தீமை பயக்காதது); அத்தகைய பிரிவுகள் வேண்டும் என்ற பிரச்சினை எழுந்தால் அதுதான் விடையிறுப்பாக இருக்கும்." (Lenin, Collected Works, Vol.20 pp.413-414)

இலங்கையில் "தேசிய சமாதானத்திற்கான பெரும் வாய்ப்புக்கள்" ஸ்ராலினிஸ்ட்டுக்கள், எல்லாவற்றிற்கும் மேலாக LSSP 1950 களில் இருந்து கடைப்பிடித்த நான்காம் அகிலத்தை தாக்கிய பப்லோவாத துரோகிகளுடனான துரோகத்தனமான கொள்கையினால் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட்டன. ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டர் ஆகியோர் தேசிய பிரச்சினை தொடர்பான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் கொண்டிருந்த கொள்கைரீதியான அரசியல் நிலைப்பாட்டை தாக்கியதின் மூலம், சற்று குறைந்த அளவில் தொழிலாள வர்க்கத்தினதும், 1964 காட்டிக் கொடுப்பிற்கு எதிரான சக்திகளினதும் நோக்குநிலை தவறலுக்கு காரணமாகின்றனர். இந்த நிலைப்பாட்டினால் விளைந்த அரசியல் சேதம் ஒரு விலையைக் கொடுத்தபின் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினால் கடக்கப்பட்டது; அது பின்னர் "வெகுஜனத்திற்கு உண்மையான ஜனநாயக மற்றும் உண்மையான சோசலிசத்தை பயிற்றுவிக்கும்" பாதைக்குத் திரும்பியது.

1979ம் ஆண்டு தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் சர்வதேச முக்கியத்துவத்தை அடைந்து இதன் அரசியல் பாதிப்பு லண்டனிலும் ஏற்பட்டபோது, ஹீலியும் பண்டாவும், தமிழ்ப் போராட்டத்தில் அவர்களது பாதிப்புமிக்க அரசியல் கொள்கையின் பற்றி ஆராயமுயலாமல், திடீரென அத்துடன் ஊடலாட முற்பட்டனர்.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கு அனுப்பிய அரசியல் வகையான மன்னிப்புக் கோரலில் பண்டா இலங்கையில் தேசியப் பிரச்சினையின் பரந்த முக்கியத்துவத்தை அசட்டை செய்ததாகவும், LSSP செய்துவிட்ட காட்டிக்கொடுப்பின் பாரிய தாக்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்திவிட்டதாகவும் ஒத்துக்கொண்டிருந்தார்.

ஆனால் இந்த மரபார்ந்த வகையில் ஒலிக்கும் சொற்றொடர்கள் ஹீலி மற்றும் பண்டா ஆகியோர் குறிப்பாக ஜனநாயகப் புரட்சியில் பூர்த்திசெய்யப்படாத பணி தொடர்பாக தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பங்கை நிராகரித்ததை மறைக்கும் வகையில்தான் இருந்தது.

இவ்விதத்தில் உண்மையான வாழ்வில், WRP தலைமை, தொழிலாள வர்க்கப் புரட்சிக்கான போராட்டத்திற்கும், இலங்கையிலும் இந்தியாவிலும் வெற்றிகரமாக ஒரு ட்ரொட்ஸ்கிச கட்சியை கட்டியமைப்பதற்கும் பதிலாக இப்பொழுது தமிழ் தேசிய விடுதலை போராட்டத்தை நோக்கி கவனத்தை திருப்பியுள்ளது.

ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டர் ஆகியோர் தாங்கள் 1972ல் இழைத்த மிகப் பெரிய தவறின் தத்துவார்த்த, அரசியல், வர்க்க வேர்களைப் பற்றி ஒருபொழுதும் பகுத்தாராயவில்லை. இன்னும் சொல்லப்போனால் தங்கள் நிலைப்பாடு ஒரு பெரிய தவறு என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனரா எனக் கூறுவது கூடக் கடினமாகும்; வர்க்கப் போராட்டக் களத்தில் அவர்கள் முயற்சி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என்றபோதிலும் நிலைமை அதுதான். 1979 ஐ ஒட்டி அவர்கள் முற்றிலும் கொள்கை நிறைந்த அரசியலில் இருந்து நன்கு கடக்கப்பட்ட சந்தர்ப்பவாத அரசியல் பாதைக்குச் சென்று விட்டனர்; அங்கு அரசியல் நிலைப்பாடு என்பது உடனடியான தேவையின் அடிப்படைப் பொறுத்துத்தான் முற்றிலும் அமையும். 1979க்குப் பின்னர் அவர்கள் பின்பற்றிய வழிவகை இன்னும் கூடுதலான வகையில் தொழிலாளகளுக்கும் விவசாயிகளுக்கும் ஒரு துரோக பொறி போல் ஆயிற்று.

1979 ஐ ஒட்டி ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டர் ஆகியோர் தங்களுக்குள்ளேயே ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டம் மற்றும் கோட்பாடுகள் பற்றிய விவாதம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இருப்பதை எதிர்ப்பது என்ற முடிவிற்கு நனவுடன் ஏற்றுக்கொண்டனர். அத்தகைய கேள்விகளை எழுப்பும் அனைத்து முயற்சிகளையும் "பிரச்சாரவாதத்தை" தொடர்தல் என்று தாக்கினர். இவை உண்மையில் இயங்கியல் சடவாத முறையைப் பெரிதும் காட்டிக் கொடுக்கும் என்றும் அவர்கள் கருதினர்! சி.சுலோட்டரின் உதவியுடன் ஹீலி அரசியலுடன் இயங்கியல் சடவாதத்திற்கு தொடர்பாக இருக்கும் வர்க்க அளவுகோல்களை மறைப்பதற்கு இயங்கியல் சடவாதத்தை முழுமையாக திரிக்கும் வழிவகையை கையாண்டார்.

தமிழ் போராட்டம் மற்றும் இலங்கையின் தொழிலாள வர்க்கத்தை இவர்கள் காட்டிக் கொடுத்த விதம், சற்றும் குறைந்த வகைத் துரோகம் அல்ல; மற்ற இடங்களில் இவர்கள் நடத்திய காட்டிக் கொடுப்புகளை போல்தான் இவை இருந்தன; அவை இப்பொழுது WRP இன் அரசியல் சீரழிவு பற்றிய நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுப்பாய்வினால் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன.

சுயநிர்ணய உரிமை பற்றிய தமிழ் தேசியத்திற்கான உரிமை பற்றி ஆதரவிற்கு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் திரும்பி இலங்கை முதலாளித்துவத்தின் இனக் கொலைக் கொள்கைகளுக்கு ஆதரவு கொடுத்த LSSP மற்றும் ஸ்ராலினிஸ்ட்டுகளின் காட்டிக் கொடுப்பிற்கு எதிராகத் தொழிலாள வர்க்கத்தை திரட்டிய அளவில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் முக்கிய உறுப்பினர் தோழர் ஆர்.பி. பியதாசா 1979ல் மிருகத்தனமான முறையில் ஐக்கிய தேசிக் கட்சி ஏற்பாடு செய்திருந்த குண்டர்களால் கொலை செய்யப்பட்டார்.

இதே காலகட்டத்தில், ஹீலி, பண்டா, சுலோட்டர் ஆகியோர் செய்திருந்த உதவியால் சிங்கள இனவெறியாளர் குழு ஒன்று, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினுள் செயல்பட்டு வந்திருந்தது. இது விவாதம், போராட்டம் ஏதுமின்றி கழகத்தை விட்டு மிகத் தீயவகையிலான இனவெறித் தாக்குதல்களை அதன்மீது நடத்தியது. தர்மவிமலா ரணசிங்கா, சந்திரதிலகே புளத்சிங்கலா மற்றும் சேபால விஜேசேகரா ஆகியோரை சுற்றியிருந்து இந்த குழு தற்காலிகமாக ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பு மற்றும் சந்தர்ப்பவாதத்திற்கு பேர்பெற்ற நவ சம சமாஜக் கட்சியினுள் (NSSP) அடைக்கலம் பெற்றது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக செய்தி ஊடகம் வெளிப்படையாக அவர்களை தாக்கி அவர்கள் எவருடைய அரசியல் முகவர்கள் என்ற வினாவையும் எழுப்பியது.

WRP தலைமையின் அரசியல் கொள்கைகள் பற்றிய முற்றிலும் கவனமெடுக்காத தன்மையை உள்ளுணர்வில் அறிந்த ரணசிங்கா குழு, ஹீலி மற்றும் பண்டாவிற்கு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக தலைமை பற்றி மிக மட்டமான குற்றச்சாட்டுக்களை எழுப்பி உதவிக்கு அழைத்தது. தமிழ் விடுதலை போராட்டத்திற்கு அவர்கள் ஆதரவு கொடுப்பதனூடாக, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் சிங்கள தொழிலாளகளிடையே கட்சியை இல்லாதொழித்துவிட்டதாக உறுதியளித்து கூறினர்!

1980ல் பண்டாவிற்கு எழுதிய கடிம் ஒன்றில் இந்த விட்டோடிகள் 1977-80 காலத்திய தமிழர் எதிர்ப்புக் கலகத்திற்கு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தையும் மற்றும் தமிழ் அமைப்புக்களை குற்றம் சாட்டினர். அவர்களுடைய கருத்தின்படி, தமிழ் விடுதலை இயக்கங்களுடன் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் இலங்கையில் தமிழர்களுக்கான தாய்நாடு பற்றிய வினாவை எழுப்பியதனூடாக சிங்களவர்கள் காட்டிய "நியாயபூர்வமான வெறுப்பை" தூண்டிவிட்டதாகவும் கூறினர்.

ஒரு புரட்சிகர மார்க்ஸிஸ்ட் ஒரு புறம் இருக்க, எந்த முதலாளித்துவ ஜனநாயகவாதியும் இத்தகைய பேரினவாத அயோக்கியர்களை முழுமையாக கண்டித்து புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தொழிலாள வர்க்கத்தின் பிரிவினருள்ளே படர்ந்திருக்கும் பேரினவாதத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதற்கு ஆதரவு கொடுத்திருப்பார். ஆனால் WRP தலைமை அவ்வாறு நடந்து கொள்ளவில்லை!

மாறாக, தமிழ் முதலாளித்துவத்துடன் மிக அதிகமான சந்தர்ப்பவாதத்தை வளர்க்கும் நம்பிக்கையுடன் WRP தலைவர்கள் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அழிக்கப்பட வேண்டும் என்ற முடிவிற்கு வந்தனர். சுயநிர்ணய உரிமை பாதுகாப்பிற்காக இலங்கை தொழிலாள வர்க்கம் எந்தப் போராட்டமும் செய்யக்கூடாது என்று ஹீலியும் பண்டாவும் விரும்பினர். எனவே, ஹீலியின் கட்டளைகளின்படி, பண்டா புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அந்த இனவெறி பிடித்த, நெறிபிறழ்ந்த கூட்டத்தின்மீது பகிரங்கத் தாக்குதலை திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் மீண்டும் கட்சியில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்றும் கூறினார். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் பகிரங்கத் தாக்குதலை திரும்பப் பெறத் தயாராக இல்லை என்றும் ஹீலி மற்றும் பண்டாவின் ஆலோசனைகளை நெறிபிறழ்ந்தவர்களுக்கு அறிவிக்கவும் செய்தது; அவர்கள் அதை இகழ்வுடன் நிராகரித்தனர். அவர்களுக்கு "விவாதம்" ஒன்றும் தேவைப்படவில்லை; தங்கள் இனவெறி பிடித்த எஜமானர்களுக்காக அவர்கள் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை முற்றிலும் அழிக்கத்தான் விரும்பினர்.

இந்த ஹீலி மற்றும் பண்டாவில் முற்றிலும் கொள்கையற்ற சந்தர்ப்பவாதக் குறுக்கீடுகள் திருத்தல்வாதிகளை மற்றும் இனவெறியாளர்களுக்கு ஊக்கம் கொடுத்ததுடன், பேரினவாதிகளிடம் இருந்து தொழிலாள வர்க்கம் அரசியல் சுயாதீனத்திற்காக போராடிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நெருக்கடியான காலத்தில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக காரியாளர்களிடையேயும் அவநம்பிக்கையையும் வளர்த்தது. அவர்கள் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை பெரும் சங்கடமான நிலையில் தள்ளினர்; ரணசிங்கா குழுவினர் தங்களுக்கு WRP இன் ஆதரவு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கு எதிரான பிரச்சாரத்தில் உள்ளது என்று கூறினர். இலங்கை ஆசிரியர் சங்கம் (Ceylon Teachers Union) இவர்களுடைய முற்றிலும் இனவெறிப் பிரச்சாரத்திற்காக ஓடுகாலிகளை வெளியேற்றியபோது, ஹீலியும், பண்டாவும் அவர்களுடன் இணைந்திருந்தால் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தால் ஒன்றும் கூறமுடியவில்லை!

1982-83 காலத்தில் சிங்கள முதலாளித்துவத்தினர் முன்னோடியில்லாத வகையில் இனவெறி வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்தனர்; இது ஜூலை 1983ல் கொடூரமான முறையில் தமிழ் இனப் படுகொலைக்கு இறுதியில் வழிவகுத்தது. தொழிலாள வர்க்கத்தின் மீது எதிர்ப்புரட்சி அழுத்தம் மிகக் கடுமையாக இருந்த நேரத்தில் LSSP-CP தலைமைகள் அரசியல் களத்தில் இருந்து முழுமையாக ஒதுங்கிக் கொண்டனர்: இதனால் இனவாதிகள் தமிழ்-எதிர்ப்புப் பிரச்சாரத்தை எந்தத் தடையும் அல்லது சவாலும் இல்லாமல் நடத்த முடிந்தது. 1983 படுகொலைகளுக்கு சற்று முன்பு நடைபெற்ற மாநகரசபை தேர்தல்களில் கொழும்பு நகர மையத்தில் தொழிலாள வர்க்கப்பிரிவின் மத்தியில் வேட்பாளர்களை நிறுத்தக் கூட LSSP மறுத்தபோதுதான் இந்தத் துரோகத் தலைமை கும்பல் பற்றி தொழிலாள வர்க்கம் முதல்தடவையாக உணர்ந்தது.

ஆனால் அதற்குள், ஹீலி மற்றும் பண்டாவின் அரசியல் செல்லப் பிள்ளையான ரணசிங்க தர்மவிமலா ஒரு முழுவட்டமடித்துவிட்டு Island குழு செய்தி ஏடுகளில் ஒரு முக்கியமான தமிழர் எதிர்ப்பு பிரச்சாரகர் ஆகி, உடலியல் ரீதியாக தமிழர்களை தாக்க வேண்டும் என்று பகிரங்கமாக பிரச்சாரம் செய்தார்.

நவம்பர் 1982 தொடங்கி ஜூலை 1983ல் தமிழினப் படுகொலைகள் வரை அவர் தொடர்ந்து சிங்கள பத்திரிக்கையான Island குழுவின் Divaina ஏட்டில் எழுதி வந்தார். அவர் எழுதிய கட்டுரைகள் அனைத்தும் தமிழர்களுக்கு எதிரான இனவெறி வன்முறையைத் தூண்டின.

1982, நவம்பர் 7ம் தேதி Divaina பத்திரிகை இவருடைய "ஈழம் என்பது தமிழ் முதலாளித்துவத்தினரின் ஒரு கனவு ஆகும்" என்ற முதல் கட்டுரையை ஒரு முழுப் பக்கத்திற்கு வெளியிட்டது. நவம்பர் 14ம் தேதி மற்றொரு முழுப்பக்க தாக்குதல் "ஷைலாக், ஸ்ராலின் மற்றும் ஈழம்" என்ற தலைப்பில் வெளிவந்தது; மற்றொரு முழுப்பக்க கட்டுரை "யாழ்ப்பாணத்தில் சிங்கள பௌத்த மரபியம்" என்ற தலைப்பில் ஜனவரி 30ம் தேதி அன்று வெளிவந்தது; ஜனவரி 23ம் தேதி "பௌத்த மரபியம் வடக்கில் அழிக்கப்பட முடியுமா? என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வந்தது; மார்ச் 23ம் தேதி, "ஒரு தென்னிந்திய அரசரால் வரவேற்கப்பட்ட சிங்கள அரசர்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளிவந்தது. இந்த தலைப்புக்களே முதலாளித்துவ செய்தி ஊடகத்தின் மூலம் இந்த நபர் நடத்திக் கொண்டிருந்த பிரச்சாரத்தின் தன்மையை வெளிப்படுத்த போதுமானதாக இருந்தன.

ஆனால் ஹீலியோ, பண்டாவோ இந்தக் குழுவில் இருந்து தங்களை ஒதுக்கிக் கொள்ளவில்லை; WRP இன் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி "ட்ரொட்ஸ்கிச" வகையிலான தமிழர்-எதிர்ப்பு பிரச்சாரத்தை சிங்கள முதலாளித்துவத்திற்கு ஆதரவாக நடத்தினர். இந்தக் குழுவிடம் ஹீலியும் பண்டாவும் கொண்டிருந்த மதிப்பிற்கு எல்லையே இல்லாமல் இருந்தது.

ரணசிங்கா குழு முதலாளித்துவத்தின் பிற்சேர்க்கைதான் என்று அம்பலப்படுத்தப்பட்ட இரு ஆண்டுகளுக்கு பின்னரும் ஹீலியும், பண்டாவும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை அதன் பத்தாவது நிறை பேரவையில் 1985ல் அனைத்துலக் குழுவில் இருந்து வெளியேற்றுவதற்கான நகர்வில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக தலைமையின் கலைப்புவாதம் என்று சொல்லப்படுவதன் மீதாக இக்குழுவினால் அனுப்பப்பட்ட "அறிக்கைகளை" இன்னும் பயன்படுத்தினர். (இந்த நடவடிக்கை செயல்படுத்தப்படவில்லை.)

ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டர் ஆகியோரால் செய்யப்பட்ட குற்றம்மிக்க அரசியல் மற்றும் அமைப்புரீதியான நாசவேலைகள் இருந்தாலும், தொழிலாள வர்க்கத்தை மூர்க்கமான இனவெறிக் கூச்சல்களில் அது மூழ்கடிப்பதற்கு இலங்கை முதலாளித்துவ வர்க்கத்தால் தோற்றுவிக்கப்பட்ட எதிர்ப்புரட்சி அழுத்தத்தை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தன்னத்தனியே எதிர்கொண்டு நின்றது.

லங்கா சம சமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் காட்டிக் கொடுப்புக்களால் ஏற்பட்ட நிலைமை இருந்த போதிலும், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனத்தை பாதுகாப்பதற்கு தொழிலாள வர்க்கத்திற்குள்ளே பாட்டாளி வர்க்க சர்வதேசியத்திற்காக போராடியது.

அதனிடத்தில் மிகக் குறைந்த சடரீதியான வளங்கள் இருந்தபோதிலும், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் லங்கா சம சமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி இரு கட்சிகளும் ஐக்கிய தேசிய கட்சி (UNP) மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி (SLFP) ஆகியவற்றிற்கு எதிரான போராட்டத்தை தொழிலாள வர்க்கத்திடம் கைவிட்டதில் அவற்றின் துரோகத்தை அனுமதிக்காதிருக்குமாறு வெற்றிகரமாக வேண்டுகோள் விடுத்தது. கொழும்பு மாநகரசபை தேர்தல்களில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக வேட்பாளர்களின் பட்டியல் தொழிலாளகளின் ஆதரவைப் பெற்றது. (ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் இயற்றியுள்ள புதிய கடுமையான தேர்தல் விதிகளின்படி, எந்தக் குழு தேர்தலில் நின்றாலும் முழுப் பட்டியல் வேட்பாளர்கள் கொடுக்கப்பட வேண்டும். இவ்விதத்தில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் 60 வேட்பாளர்களை நிறுத்தி மிகப் பெரிய பணத்தை மனுத்தாக்கல் கட்டணமாகவும் செலுத்த வேண்டியிருந்தது.)

ஜூலை மாதம் நடைபெற்ற தமிழ்-எதிர்ப்பு இனப் படுகொலைகளுக்கு சற்று முன்னதாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தமிழ் பகுதி பிரிந்து சென்று தன்னுடைய சொந்த ஈழ அரசை அமைப்பதற்கான உரிமைக்கு ஆதரவு கொடுத்து, சோசலிச வேலைத் திட்டத்தின் கீழ் ஒரு தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்று கொழும்பில் பரந்த வெகுஜன கிளர்ச்சி ஒன்றை தொழிலாள வர்க்கம் முழுவதிலும் நடத்தியது. ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் தூக்கி வீசப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியது.

உள்ளூர் அரசாங்க தேர்தல்களை அடுத்து, ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் மிகப் பெரிய அளவில் இராணுவப் படைகளை திரட்டி வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பி இனவாத யுத்தம் ஒன்றை தொடக்கியது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஒன்றுதான் இலங்கை தொழிலாளர்களின் அரசியல் கட்சியாக இருந்து தொழிலாளர்கள் போருக்கு எதிராக நிற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தது. 1983 ஜூன் 17ம் தேதி, "ஐக்கிய தேசிய கட்சியின் இனவாத யுத்தத்திற்கு வர்க்கப் போர் மூலம் விடையிறுங்கள்" என்ற தலைப்பில் விடுத்த அறிக்கை ஒன்றில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் வடக்கில் இருந்து இராணுவம் திரும்பப் பெற வேண்டும் என்று கோரியது மட்டும் அல்லாமல், தமிழர்களுக்கு எதிராக இலங்கை முதலாளித்துவ வர்க்கம் நடாத்திய போருக்கு ஒரு புரட்சிகர தோற்கடிப்பு நிலைப்பாட்டை அபிவிருத்தி செய்தது. இந்த வழிவகையில் இருந்த கோட்பாடுகளை அடிக்கோடிட்டு காட்டுகையில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக அறிக்கை கூறியதாவது:

"ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் தேசிய முதலாளித்துவத்தினரால் சுரண்டப்படும் சிங்கள மொழி பேசும் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள், வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் தேசிய இனத்திற்கு எதிராக எந்த போரையும் கொள்ளவில்லை.

"வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமையை உத்தரவாதம் செய்வதன் மூலம் துல்லியமாக தொழிலாள வர்க்கம் தேசிய ஐக்கியம் மற்றும் தேசிய நல்லிணக்கத்தின் தலைமையாக எழுச்சி பெற்று வர முடியும்.

"நாடுகளுக்கு இடையேயான ஐக்கியம் மற்றும் சமத்துவத்திற்கான போக்குகள் உற்பத்தி சக்திகளின் உலக அளவிலான வளர்ச்சியின் விளைவு ஆகும்; ஆனால் இந்த உற்பத்தி சக்திகளை குறுகிய காட்டுமிராண்டித்தனமான இலாப நோக்குகளுக்காக பயன்படுத்தும் முதலாளித்துவ வர்க்கம், இப்பொழுது தங்களை தாங்களே அதன் அபிவிருத்தியாளர் என்ற நிலையிலிருந்து அதன் அழிப்பாளர் என்ற நிலைக்கு மாற்றிக்கொண்டுள்ளது.

"உற்பத்தி முறையின் திவால்தன்மையில் இருந்து விளையும் மிகப் பெரிய அளவிலான வேலையின்மை, பொருளாதாரப் பேரழிவு மற்றும் மூலவளங்கள் பற்றாக்குறையின் மத்தியில், தீவிர நெருக்கடியின் ஒவ்வொரு நிலையிலும் அவர்கள் (முதலாளித்துவ வர்க்கத்தினர்) இனப் பாகுபாட்டையும் இன மோதல்களை உருவாக்க முன்வருகின்றனர்.

"வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் ஈழ தேசிய விடுதலைப் போராட்டம் இந்த பாகுபடுத்தும் பிற்போக்கு பூசல்களை எதிர்க்கும் இலக்கை கொண்டவையாகும். எனவே தமிழர்கள் வடக்கிலும் கிழக்கிலும் தொடக்கியுள்ள தேசிய போ£ட்டம் வடிவத்தில் ஒரு தேசிய போராட்டமாக இருந்தாலும் சாராம்சத்தில் அது ஒரு சர்வதேசிய போராட்டம் ஆகும்.

"இந்தப் போராட்டத்தில் எழும் பிரச்சனை ஓர் ஒற்றை இன அரசாக சீரழிந்துகொண்டிருக்கும் முதலாளித்துவ அரசை இல்லாதொழிப்பதும், தேசிய சமத்துவத்திற்கான நிலைமைகளை ஏற்படுத்துவதும் ஆகும். இப்போராட்டம் நசுக்கப்பட முடியாதது ஆகும்; ஏனெனில் இது உலகம் முழுவதும் இருக்கும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியுடன் தொடர்புபட்டதாகும்.

"அதே நேரத்தில் இது தொழிலாள வர்க்கத்தினால் மட்டுமே நிறைவேற்றப்பட முடியும்; அது ஒன்றுதான் உற்பத்தி சக்திகளை முதலாளித்துவ வர்க்கத்தின் பிடியில் இருந்து விடுவித்து அவற்றை திட்டமிட்ட சோசலிச அடிப்படையில் அபிவிருத்தி செய்யமுடியும்.

"இவ்விதத்தில்தான் தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான வடக்கிலுள்ள போராட்டமானது உற்பத்தி சக்திகள் மீதான தனிச்சொத்துடைமையின் மேலாதிக்கத்தினை அழிப்பதற்கான தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்துடன் ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ளது மற்றும் இவை இரண்டுமே சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்தில் ஒன்றுபடுத்தப்பட வேண்டும்."

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தால் நடத்தப்பட்ட இந்த உறுதியான போராட்டத்தின் காரணமாக, ஜூலை 1983ல் தமிழின அழிப்புக்கள் மேற்கொள்ளப்படுவதற்கு சற்று முன்னதாக அது தீமை மிகுந்த செய்தி ஊடக வேட்டையாடலுக்கும் அரச தாக்குதலுக்கும் உட்பட்டது.

டி. ரணசிங்கா தன்னுடைய தாக்குதல்களை வெளியிடக் கொடுத்திருந்த செய்தித்தாட்கள் குழுவின் ஒரு பகுதியான Island, ஜூலை 31 அன்று அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டிருந்த ஒரு கட்டுரையை வெளியிட்டு, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கு எதிராக அரசு மற்றும் இனவெறி கும்பலின் வன்முறையை தூண்டும் வகையில் நடந்து கொண்டது. இதன் பின்னர் போலீஸ் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக அச்சகத்தை தடைசெய்யும் ஒரு முயற்சியில் செய்தித்தாட்களின் பதிவு பெற்ற உரிமையாளரான ஆனந்த வக்கும்புறவை கைது செய்ய முற்பட்டது; தமிழர்களுக்கு எதிராக அரசால் ஒழுங்கு செய்யப்பட்ட இனவாத வன்முறையின் ஒன்றுதிரண்ட புயலை தொடர்ந்து அம்பலப்படுத்தின.

அரசு மற்றும் செய்தி ஊடக சூனிய வேட்டையை திருப்பித் தாக்கும் வகையில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் உடனடியாக இலங்கை மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை பாதுகாக்க அணிதிரளுமாறு வேண்டிக் கொண்டது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் குழு மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் இனவாத யுத்தம் பற்றிய தன்னுடைய அணுகுமுறையை விரிவாகக் கூறியது.

"இது ஒரு போர்க்கால நிலைமையாகும். ஆனால், சமசமாஜவாதிகள், ஸ்ராலினிஸ்ட்டுக்கள் மற்றும் மத்தியவாத தலைமையை பொறுத்த வரையில், இந்த யுத்தத்தை பற்றி வர்க்கப் பகுப்பாய்வும், தொழிலாள வர்க்கம் போரைப் பற்றி வர்க்க அணுகுமுறையை எடுப்பதும் தேவையில்லாதுள்ளது.

"இந்த போர் நம்முடையதா? ஆம் என்று சமசமாஜவாதிகள், ஸ்ராலினிஸ்ட்டுக்கள், நவ சமசமாஜ கட்சி, மக்கள் விடுதலை முன்னணி (JVP) தலைவர்கள் விடையிறுக்கின்றனர். ஆனால் தமது வேறுபாடு போர் எந்த விதத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதில்தான் உள்ளது என்கின்றனர்.

"இது நம்முடைய போரா? ஒருபோதும் இல்லை என்று நாம் பதிலளிக்கிறோம். இந்தப் போருக்கு எதிராக நாம் கிளர்ந்தெழ வேண்டும், மற்றும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தையும் முதலாளித்துவ அமைப்பையும் தூக்கி வீசுவதற்கு தொழிலாள வர்க்கமானது வடக்கில் விடுதலைப் போராட்டத்துடன் ஒன்று சேர வேண்டும் என்று நாம் கூறுகிறோம்.

"இந்தப் பிற்போக்கு இராணுவ தீரச் செயலின் சமூக மற்றும் வர்க்க நோக்கங்கள் வடக்கிலும் மற்ற இடங்களிலும் நடக்கும் ஏதோ நிகழ்வுகளினால் உறுதி செய்யப்படுவதில்லை; மாறாக போரை நடத்தும் வர்க்கம் எதிர்கொண்டிருக்கும் ஒட்டுமொத்த புறநிலைமையினால் நிர்ணயிக்கப்படுகிறது.

"இந்த ஒட்டுண்ணி வர்க்கத்திற்கும் ஏகாதிபத்திய வங்கிகள் மற்றும் ஏகபோகங்களுக்கும் மற்றும் ஒட்டுமொத்த சர்வதேச நிலைமைக்கும் இடையே இருக்கும் பிணைப்புக்கள் இவற்றின் புறநிலைமைகளின் முக்கிய பகுதியே ஆகும்.

"எனவேதான் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் வடக்கிற்கும் கிழக்கிற்கும் படைகளை அனுப்புவது என்பது ஆளும் வர்க்கத்தின் ஒட்டுமொத்த பொருளாதார திவால் மற்றும் உலக வங்கி-ஐக்கிய தேசிய கட்சி இவற்றின் சதியுடன் தொடர்புடையது என்று வலியுறுத்துகிறது; இது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக வரவிருக்கும் மிகக் காட்டுமிராண்டித்தனமான வர்க்கப் போருக்கு ஒரு முன்னோடிதான் என்றும் கூறுகிறது.

"வடக்கில் இராணுவச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது மற்றும் இனவாத ஆத்திரமூட்டல்களை வலிமையுடன் செய்தல் ஆகியவை ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு முற்றிலும் தேவையாக போய்விட்டது; பொருளாதார அழிவிற்கு எதிராக கிளர்ந்தெழும் தொழிலாளகள் மற்றும் விவசாயிகள் மீது ஒரு இராணுவ, போலீஸ் அராசங்கத்தை திணிப்பதற்கும் இது துல்லியமாக பயன்படுத்தப்படும்.

"எனவேதான் இந்த இனவாத யுத்தத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் முழு எதிர்ப்பு தேவையாகின்றது; வடக்கில் இருந்து படைகளை திரும்பப் பெற வேண்டும் என்ற போராட்டம், அரசியல் கைதிகளை விடுவிக்க கோரிய போராட்டம், தமிழ் தேசியத்தின் சுய நிர்ணயத்திற்கான உரிமையை காக்க முன் வருதல் ஆகியவை உலக வங்கியின் சதித்திட்டத்திற்கு எதிராக நடத்த வேண்டிய போராட்டத்தின் பிரிக்க முடியாத பகுதிகள் ஆகும்.

இந்த அறிக்கை லண்டனை சென்று அடைந்தபொழுது, ஜூலை இனப் படுகொலைகள் தொடங்கி முழு வீச்சில் நடந்து கொண்டிருந்தன. 1983 ஆகஸ்ட் 10 அன்று News Line பத்திரிகை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அறிக்கையை முழுமையாக வெளியிட்டு, WRP பொதுச் செயலாளர் மைக்கேல் பண்டா எழுதிய வியத்தகு கட்டுரை ஒன்றையும் வெளியிட்டது; அதில் கூறப்பட்டிருந்ததாவது:

"போலீஸ் மற்றும் இராணுவம், அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அவசரகால சட்டங்களை, ஒருதலைப்பட்ச கட்டுப்பாடில்லாத அதிகாரத்தை பயன்படுத்தி எமது தோழர்களை கொன்று எமது செய்தி ஊடகத்தை தகர்த்திருக்க இயலும், செய்தது... ஆனால் முதலாளித்துவ செய்தி ஊடகத்தின் பொய்களோ, அவதூறுகளோ அல்லது இலங்கை அரசாங்கத்தின் சித்திரவதைகளோ அல்லது அடக்குமுறைகளோ ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை மௌனப்படுத்திவிட முடியாது."

இது வியப்பை தருவதற்கு காரணம் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக காரியாளர்கள் இன வன்முறை பிரம்மாண்டமாக பெருகியதில் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டனர் என்று கருத்திக்கொண்டு, WRP இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் பாதுகாப்பிற்கு ஒன்றையுமே செய்யவில்லை, ஒரு விரலைக்கூட உயர்த்தவில்லை. அதிகாரிகளிடம் ஒரு எதிர்ப்புக் கடிதம் கூடக் கொடுக்கப்படவில்லை. இறுதியில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழத்திடம் இருந்து விடுவிக்கப் பெற்றுவிட்டோம் என்று கருதிக்கொண்டு, பண்டா கீழ்க்கண்டவிதத்தில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை பற்றி புகழாரத்தையும் சூட்டினார்:

"ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்ற முறையில் சிங்கள அல்லது தமிழ் முதலாளித்துவத்திற்கு எதையும் நாங்கள் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை; இலங்கையில் உள்ள இவர்களுடைய பிரதிநிதிகள் தொடர்ச்சியாக ஆயுதமேந்திய போராட்டத்தை எதிர்த்துள்ளனர்; அறிக்கைகளின்படி ஒரு தனி ஈழ நாடு என்பதையும் கைவிட்டுள்ளனர்.

"இரு முதலாளித்துவ குழுக்களில் எதுவும் தேசிய அல்லது மொழிப் பிரச்சினையை தீர்க்க இயலாதவை. அவர்களுடைய முக்கிய அக்கறை தமிழ் மற்றும் சிங்கள தொழிலாளர்களை சுரண்டுதல் மற்றும் ஒடுக்குவதாக இருப்பதால் அவர்கள் நிலைமையை மோசமாக்கத்தான் கட்டுப்பட்டுள்ளனர்.

"தமிழர், சிங்களவர் என்று இருவருக்குமே இந்த இனப்படுகொலைகள் முடிவில்லாத இனவாத யுத்தத்திற்கு ஒரே மாற்று ஒரு சர்வதேச சோசலிச ட்ரொட்ஸ்கிச கொள்கையை அடிப்படையாக கொண்ட ஒரு கட்சியால், அதாவது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தால் தலைமைதாங்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தால் திவாலாகிவிட்ட முதலாளித்துவ அமைப்பைத் தூக்கி வீசுவது என்பதற்கான மதிப்புக்குரிய நினைவூட்டல் ஆகும்.

"இலங்கையில் ஒரு சோசலிசக் குடியரசு நிறுவப்படுதல்தான் அனைத்து சிறுபான்மையினரின் நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் வென்றெடுக்க முடியும்; ஏகாதிபத்திய வளர்ச்சிக்குறைவால் விளைந்துள்ள பாதுகாப்பின்மை, கிளர்ச்சி என்பவற்றிற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கமுடியும்."

இத்தகைய கருத்தின் முற்றிலும் பாசாங்குத்தன தன்மை சொற்களால் விவரிக்கப்பட முடியாதது ஆகும். இந்த அறிக்கையின் ஒவ்வொரு சொல்லும் 1983-85 காலத்தில் WRP தலைமையிலானல் காட்டிக் கொடுக்கப்பட்டது. மேலும் இந்தக் கருத்தை எழுதிய 18 மாதங்களுக்குள் ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டர் ஆகியோர் அனைத்துலகக் குழுவில் இருந்து புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் வெளியேற்றப்பட வேண்டும் என்று முயன்றனர்.

WRP இத்தகைய பெரும் காட்டிக் கொடுப்புக்களை நடத்துவதற்கு, வேலைத்திட்டத்தில் இருந்த ட்ரொட்ஸ்கிச கருத்தாய்வுகளையே தாக்க வேண்டியதாயிற்று. 1984 இறுதியை ஒட்டி, ஹீலி, சுலோட்டரின் உதவியுடன் ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டம் மற்றும் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எந்த அமைப்பும் எதிர்ப்புரட்சியின் கருவியாக இப்பொழுது மாறிவிட்டிருக்கிறது என்று நிறுவத் தலைப்பட்டார்.

இந்த நிலைப்பாடு வெளிப்படையாக நான்காம் அகிலத்தின் அனைத்துலக்குழுவின் 10வது காங்கிரசில் சுலோட்டர் எழுதிய ஆவணம் ஒன்றின் மூலம் முன்வைக்கப்பட்டது. WRP இன் சந்தர்ப்பவாத வழிவகை பற்றிக் கூறப்பட்ட விமர்சனங்களுக்கு விடையிறுக்கும் வகையில் சுலோட்டர் அறிவித்தார்: "அனைத்துலகக் குழுவில் உள்ள போராட்டம் இன்றைய வரலாற்று நிலைமைகளில் இயங்கியல் சடவாத பயிற்சியை அடிப்படையாக கொண்ட ஒரு புரட்சிகரக் கட்சி ஒரு புறம், ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்திற்கு முறையாக கட்டுப்பட்டும் இருக்கும் குழுக்கள் மறுபுறம் என்ற அளவில் இவற்றிற்கிடையே ஒரு கோடு வரையப்பட்டதாய், புரட்சிக்கான தயாரிப்பிற்கும் எதிர்ப்புரட்சிகர நடவடிக்கைகளுக்கான தயாரிப்பிற்கும் இடையே போராட்டம் என்ற உண்மையை தெளிவுபடுத்தியது."

WRP தலைமையின் துரோகிகளின்படி, "பரந்த மக்கள் தீவிரமயப்படலின்" இந்த "புதிய காலத்தில்" கோட்பாடுகள் மற்றும் வேலைத்திட்டங்களுக்கான போராட்டம் புரட்சிகரக் கட்சிக்கு தொழிலாள வர்க்கத்தை வென்றெடுப்பதற்கு ஒரு உண்மையான தடையாக ஆகிவிட்டது. "சரியான வழிவகையை" கண்டு பிடித்தவர்கள் மட்டும் (வேலைத்திட்டத்திற்கு எதிராக இருப்பவர்கள்), வெகுஜன புரட்சிகர கட்சிகளை வழிநடத்துவர். இவ்விதத்தில் ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டர் WRP நாள் ஒன்றுக்கு 200 தொழிலாளகளை தேர்ந்தெடுப்பதில் -- ஏட்டளவிலேனும்-- போட்டி போடக்கூடிய புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் இயலாத் தன்மை இருப்பதை கண்டுபிடித்தனர்; இது "சரியான பாதையை" கைவிட்டதை குறிக்கும் என்றும் ட்ரொட்ஸ்கிச கோட்பாடுகள் மற்றும் வேலைத்திட்டத்தை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் பாதுகாக்க முற்படுவது முற்றிலும் பயனற்ற செயல் என்றும் முடிவாகக் கூறினர். இதற்கு மாறாக, ஹீலியும் அவருடைய எடுபிடியான, பணத்திற்காக உண்மையில் கொள்கைகளை விற்றுவிட்ட கிரேக்கத்தின் மிசேல் சவாசும், இத்தகைய அப்பட்டமான காட்டிக் கொடுப்புக்களால் நலன் பெற்றவர்களும், "சரியான வழிமுறையை" தங்கள் வசத்தில் கொண்டு, முற்றிலும் துரோகத்தனமான மத்தியவாத குப்பைக் கூட்டங்களுடன் தங்களை அந்தந்த நாடுகளில் இருக்கும் முதலாளித்துவ அமைப்புக்களுடன் இணைத்துக் கொண்டனர்.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் மீது இத்தகைய இழிந்த தாக்குதலை நடத்தியதற்கு காரணம் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவில் ட்ரொட்ஸ்கிசத்தை பாதுகாத்தல் என்பது அரைக் காலனித்துவ நாடுகளில் இருக்கும் தேசிய முதலாளித்துவ வர்க்கப் பகுதியினருடனான தங்களுடைய சந்தர்ப்பவாத உறவுகளுக்கு தவிர்க்க முடியாத ஆபத்து நேருமோ என்று WRP தலைவர்கள் அஞ்சியதுதான். ஆனால் வேர்க்கர்ஸ் லீக்கின் அமெரிக்க ட்ரொட்ஸ்கிசவாதிகள் WRP தலைவர்கள் ட்ரொட்ஸ்கிசத்தை காட்டிக் கொடுத்ததற்கு எதிரான தாக்குதலை முன்னெடுத்த நேரத்திலிருந்து, ஹிலீ, பண்டா மற்றும் சுலோட்டர் ஆகியோருக்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவினுள் இருக்கும் உண்மையான ட்ரொட்ஸ்கிச சக்திகள் அனைத்தையும் அழித்தல் என்பது அத்தியாவசிய தேவையாக ஆயிற்று; அப்பொழுதுதான் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவினுள் தங்கள் பிற்போக்கு மேலாதிக்கத்தை எதிர்த்து எந்த சக்தியும் வளர்ச்சி அடையாது என்று அவர்கள் நம்பினர். இவ்விதத்தில் WRP தலைவர்கள் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கு அரசியல் ரீதியான விரோதப் போக்கை காட்டி 1983-85 காலத்தில் அதை அழிக்கவும் முற்பட்டனர்.

ஜூலை 1983 இனப் படுகொலை திட்டங்கள் தமிழ் தேசிய இனம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீது ஒரு முன்னோடியில்லாத வகையில் அரசியலமைப்பு தாக்குதலுடன் முடிவடைந்தன. இனக்கலவரத்தின் இறுதியில், அரசாங்கம் பாராளுமன்றத்தில் அவசர அவசரமாக அரசியலமைப்பிற்கு ஒரு திருத்தத்தை, ஆறாம் திருத்தம் என்ற பெயரில், கொண்டு வந்தனர்; இது தனி அரசுக்கான எந்தக் கோரிக்கையும் சட்டவிரோதம் என்று அறிவித்தது. இந்தத் தாக்குதலையும் லங்கா சம சமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஆதரித்தனர். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக செய்தி ஊடகம் அரசாங்கத்தின் கடுமையான தணிக்கை விதிகளால் நடைமுறையில் தடைக்குட்படுத்தப்பட்டாலும், இக்காட்டிக் கொடுப்பை எதிர்த்தும், தமிழர்கள் தனிநாடு வேண்டும் என்ற உரிமைக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்பு விடுத்து பிரசுரத்தை வெளியிட்டது. "தமிழர்கள் எப்படி காட்டிக் கொடுக்கப்பட்டனர்" என்ற தலைப்பில் வந்த இந்த அறிக்கை லங்கா சம சமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி நவ சம சமாஜக் கட்சி தலைவர்களின் துரோகத்தை கீழ்க்கண்ட வகையில் அம்பலப்படுத்தி விளக்கியது:

"ஆறாம் அரசியலமைப்பு திருத்தம் ஜூலை படுகொலைகளின் எதிர்ப்புரட்சி தன்மையை முறைப்படுத்தி, சட்டபூர்வமாக்குவதை சாராம்சமாக கொண்டிருந்தது. இந்த திருத்தத்தின் மூலம் தமிழ் தேசிய இனம், ஒடுக்கப்பட்ட தேசிய இனம் ஒவ்வொன்றும் பிரிந்து தங்களின் சொந்த அரசை அமைப்பதற்கான எங்குமுள்ள ஜனநாயக உரிமையை இழக்கச் செய்தது. அது மட்டும் இல்லாமல், இந்தப் பிற்போக்குத்தனமான சட்டம் இலங்கையின் தொழிலாள வர்க்கத்தின்மீது நடத்தப்பட்ட மூர்க்கமான சட்டபூர்வ தாக்குதல்களிலேயே மிக மோசமானது ஆகும்.

"இது முதலாளித்துவ வர்க்கத்தின் இனவெறிப் படுகொலை கொள்கைக்கு சவால் விடும் தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை ஜனநாயக உரிமையை பறித்து விட்டது.

"சாராம்சத்தில் சட்டதிருத்தம் முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்து தொழிலாள வர்க்கம் அரசியல் பூர்வமாக பிரிந்து செல்வதை தடை செய்துள்ளது. இந்தச் சட்டத்தின் நோக்கமும் பொருளும் இலங்கையில் உள்ள அனைத்துக் குடிமக்களையும் மிரட்டி இனவெறிபிடித்தவர்களாக செய்வதும், தேசிய ஒடுக்குமுறை மற்றும் இனவாதத்தை எதிர்ப்பவர்களின் அனைத்து குடி உரிமைகளையும் பறித்தல் ஆகும்.

"இந்தப் பிற்போக்கு சட்டம் தமிழ் தேசிய இனத்தை ஒடுக்க விரும்பும், தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக எப்பொழுதும் அடிமைகளாக வைக்க விரும்பும் முதலாளித்துவ கட்சிகள், அவற்றின் முகவர்கள் ஆகியோரின் ஆதரவைத்தான் பெறும்.

"தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனத்தை முதலாளித்துவ வர்க்கத்திற்கு விற்பதை தமது தொழிலாக கொண்ட ஸ்ராலினிஸ்ட்டுக்கள், சமசமாஜவாதிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் இப்பொழுது இந்தப் பிற்போக்கு சட்டத்தை தங்களுடைய காட்டிக் கொடுப்பை மறைப்பதற்கு பயன்படுத்துகின்றனர்."

இந்த அறிக்கை தமிழர்களுடைய சுய-நிர்ணய உரிமைக்கு எதிராக முற்றிலும் இனவெறிப் பிரச்சாரத்தை வளர்த்து வழிநடத்தும் வகையில் "ஒரு தனி நாடு என்பது புவியியல் அளவிலும், அரசியல் தன்மையிலும் ஏற்கப்பட முடியாது" என்று கூறிய ஸ்ராலினிஸ்ட்டுக்களின் முகத் திரையை கிழிக்கவும் செய்தது.

"வாதம் என்பதைவிட, மிரட்டல் தான் இதில் உள்ளது. புவியியல், பொருளாதாரப் பிணைப்புக்களின் முக்கியத்துவம், ஒரு பெரிய சந்தை, பெரிய அரசு என்பதின் நலன்கள், தேசிய சமத்துவத்திற்கான அனைத்து நிலைமைகளும் இருக்க வேண்டிய தன்மை ஆகியவை பற்றி மக்கள் அறிந்து கொள்ளத் தவறிவிட்டனர் என்பதுதான் இப்பொழுது பிரச்சினையா? என அவ்வறிக்கை மேலும் குறிப்பிட்டது.

"இது தமிழ் தேசிய இனத்திற்கு ஒரு பெரிய அவமதிப்பு ஆகும். பலமுறையும் லெனின் விளக்கியுள்ளபடி மக்களில் பெரும்பாலானவர்கள் அவர்களுடைய அன்றாட அனுபவத்தின்மூலம் அத்தகைய விஷயங்களின் முக்கியத்துவம் பற்றி நன்கு அறிந்துள்ளனர்.

"தேசிய ஒடுக்குமுறை, இன அழிப்பு ஒடுக்குமுறை ஆகியவற்றுடனான அவற்றின் உறவுகள் இல்லாமல் இந்தப் பிரச்சினைகளை எழுப்புவது என்பது, சோசலிசம் அல்ல; மிருகத்தனமான, வல்லாட்சிக்கு முட்டுக் கொடுத்து நிறுத்தும் ஒரு "தத்துவம்" ஆகும். ஸ்ராலினிஸ்ட்டுகள் இந்த "தத்துவத்தை" ஐக்கிய தேசிய கட்சி இனவாதிகளுடன் பகிர்ந்து கொள்ளுகின்றனர்.

"நீண்ட காலத்திற்கு முன்பே லெனின் சுட்டிக் காட்டியது போல் முக்கிய பிரச்சினை, இந்த உண்மைதான்: 'தேசிய ஒடுக்குமுறையும் தேசிய மோதல்களும் கூட்டு வாழ்க்கையை முற்றிலும் சகித்துக் கொள்ள முடியாததாக செய்து, அனைத்து பொருளாதாரத் தொடர்பையும் தடைக்கு உட்படுத்தும்போது, அவர்கள் பிரிவினையை நாடுவர். அவ்விதத்தில், முதலாளித்துவ வளர்ச்சி மற்றும் வர்க்கப் போராட்ட சுதந்திரம் ஆகியவற்றின் நலன்கள் பிரிவினை மூலம் சிறப்பாக நடைபெறும்' (The Right of Nations to Self-Determination, Collected Works, Vol.20, p.423)

"எனவே தேசிய ஒடுக்குமுறை, தேசிய மோதல்கள் ஆகியவை கூட்டு வாழ்க்கை என்பதை முடியாததாக்கிவிட்டதா என்பதுதான் ஒரே அளவுகோல் ஆகும். அது தவிர்ந்த அனைத்தும் குப்பைக்கு ஒப்பானதுதான்.

"ஸ்ராலினிசவாதிகளும் திருத்தல்வாதிகளும் இந்த முக்கியமான வினாவைப் பற்றி ஏதும் கூறவில்லை. முதலாளித்துவம் பொதுவாக அவ்வளவு மோசமில்லை என்று அத்தகைய நிலை கூட்டணி அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ளபோதிலும் அவர்கள் வாதிடுவதுடன், முதலாளித்துவ வர்க்கத்தினுள்ளேயே சில 'முற்போக்கு' சக்திகள் உள்ளன என்றும் கூறுகின்றனர்.

"ஒரு கூட்டணி அரசாங்கத்தின் கீழ் நிலைமை அவ்வளவு மோசமாக இல்லை என்ற தோற்றத்தை அவர்கள் தோற்றுவிக்க முயலுகின்றனர்; அல்லது எதிர்ப்பு இயக்கத்தின் பின்னணியில் அது அவ்வாறு வளராது என்றும், பிரிவினைக்கு ஒரு மாற்று இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

"இது ஒரு விருப்பமான சிந்தனை அல்ல. இது தொழிலாள வர்க்கத்தை முழு அளவில் காட்டிக் கொடுப்பதாகும். 'அன்றாடம் தீவிர நெருக்கடிப் பிரச்சினைகளில் இருந்து தப்பியோடுவது, வருங்காலத்தில் தீவிரமற்ற பிரச்சினைகளை பற்றி கனவு காண்பது' என்பது ஏகாதிபத்தியத்தின் மிக இழிந்த வக்காலத்து வாங்குபவர்களின் செயற்பாடு ஆகும்.

"ஏனெனில், இந்த தேசிய ஒடுக்குமுறை என்பது தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராகப் போராடுவதை தடை செய்யும் வழிவகை ஆகும். தேசிய ஒடுக்குமுறை, அதாவது தமிழ் தேசத்தின் சுய நிர்ணய உரிமைக்காக போராடாமல், முதலாளித்துவத்தை அகற்றுவதற்கு தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு முன்னேற்றப் பாதை இல்லை.

"இச் சூழ்நிலைகளின் கீழ் ஒரு தனிநாட்டை ஏற்படுத்துவது ஒன்றுதான் தொழிலாள வர்க்கம் மற்றும் வறிய விவசாயிகளின் வர்க்கப் போராட்டத்திற்கான தடையற்ற வளர்ச்சிக்கான மிகச் சாத்தியமான சிறந்த நிலைமைகளை ஏற்படுத்தும்.

"ஸ்ராலினிஸ்ட்டுக்கள் போல் 'ஒரு நாட்டில் சோசலிசம்' என்ற கருத்தை நாங்கள் நிலைப்பாடாக கொள்ளவில்லை. தமிழ்தேசிய இனத்தின் பிரிவினை, ஒரு தனி நாடு நிறுவப்படுதல் என்பது முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் தமிழ் மற்றும் சிங்களம் பேசும் தொழிலாள வர்க்கத்திற்கிடையிலான ஐக்கியத்திற்கு அடிப்படை ஆகும்.

"ஸ்ராலினிஸ்ட்டுக்கள் ஆதரவு கொடுப்பது போல் தேசிய ஒடுக்குமுறைக்கு ஆதரவளிப்பது ஒரு இழிந்த வரலாற்றுக் கெதிரான, எதிர்ப்புரட்சிகர சட்டத்திற்கு, வடக்கில் முதலாளித்துவ வளர்ச்சியை கட்டாயத் தடைக்கு உட்படுத்துதல், அதையொட்டி சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்க போராட்டத்தை துருவமுனைப்படுத்துவது மற்றும் வடக்கில் இருக்கும் தொழிலாளர்கள் மற்றும் வறிய விவசாயிகள் மீதான உள்ளூர் முதலாளித்துவ வர்க்கத்தின் பிடியை உறுதிப்படுத்துவது ஆகும்.

"ஏகாதிபத்திய வாதிகளால் தேசிய முதலாளித்துவத்தினரின் உதவியுடன் வன்முறை, சலுகைகள் மூலம் நிறுவப்பட்ட அரசு எல்லைகளின் பாதுகாப்பு, நேரடியாக "சமாதானம்", "சமாதான சகவாழ்வு" போன்ற கொள்கைகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது; இது சோவியத் அதிகாரத்துவம், ஏகாதிபத்தியத்துடன் இணைந்து கொண்டுவந்த கருத்தாகும்."

தொழிலாள வர்க்கத்தின் பணிகளை விரிவுபடுத்திய வகையில் அறிக்கை முடிவுரையாக கூறியது: "தற்போதைய போரில் தொழிலாள வர்க்கத்தின் பணி முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக எழுச்சி செய்து, அவர்களையும் அவர்களுக்கு ஆதரவு தரும் ஏகாதிபத்தியவாதிகளையும் தகர்த்து, இராணுவங்களை கலைத்துவிட்டு தமிழ் தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமையை காப்பது ஆகும்."

லங்கா சம சமாஜக் கட்சி, ஸ்ராலினிஸ்ட்டுக்கள் மற்றும் நவ சம சமாஜக் கட்சி ஆகியோர் இலங்கை தொழிலாள வர்க்கம் தமிழர்களுடைய பாதுகாப்பிற்கு வருவதை தடுக்க முற்படுகையில், தமிழர்கள் மீது நடத்திய இனவெறித் தாக்குதல்கள் இந்திய தொழிலாள வர்க்கம் மற்றும் இந்தியாவில் இருக்கும் பல ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களிடையேயும் பெரும் அலையென எதிர்ப்புக்களை தோற்றுவித்தன. பெருகிய தமிழ்ப் போராட்டம் இந்தியாவில் ஜனநாயக புரட்சியின் தீர்க்கப்படாத அனைத்து பிரச்சினைகளையும் முன்னுக்கு நிறுத்தக் கூடும் என்ற அச்சத்தில், இந்திய முதலாளித்துவம் தமிழ்நாட்டில் இருக்கும் முதலாளித்துவக் கட்சிகளுடைய உதவியுடன் தமிழ் விடுதலை இயக்கத்தின் மீது ஒரு காட்டிக் கொடுப்பை சுமத்தும் தொடர்ச்சியான சூழ்ச்சிக்கையாளல்களை செய்தது.

இந்திய முதலாளித்துவம் தமிழ் தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமைக்கு ஒருபொழுதும் ஆதரவு கொடுத்தது இல்லை. ஆனால் தமிழ் போராளிகள் தங்கள் விடுதலைப் போராட்டத்தை இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடத்துவதற்கு இந்தியாவில் நுழைவதைத் தடுக்க முடியவில்லை. இந்த நிலைமையை பயன்படுத்தி, இந்திய முதலாளித்துவ வர்க்கம் விடுதலை இயக்கத்தின்மீது சிங்கள முதலாளித்துவத்துடன் ஒரு கௌரவமற்ற சமரசத்தை அடைவதற்கான அழுத்தத்தை கொடுத்தது. இலங்கையின் வடக்கில் இருக்கும் தமிழ் முதலாளித்துவத்தினர் பின்னர் விடுதலைப் போரையே தங்களுடைய வர்க்க சலுகைகளுக்காக பயன்படுத்தும் விதத்தில் சுரண்டவும் பேரம் பேசவும் தயாராயினர்.

இவ்விதத்தில், விடுதலைப் போர் தவிர்க்கமுடியாமல் ஏகாதிபத்திய சகாப்தத்தில் வினாக்களிலேயே பெரிய வினாவை எழுப்பியது: ஜனநாயகப் புரட்சியின் பணிகள் தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் கீழ்த்தான் வெற்றிகரமாக தொடக்கப்பட்டு, தொழிலாள வர்க்க வர்க்கப் போராட்ட வழிவகைகள் மூலம்தான் வெற்றியை அடையமுடியும். இலங்கையிலும் இந்தியாவிலும் பாட்டாளி வர்க்க புரட்சிக் கட்சிகளை கட்டியமைப்பது இதையொட்டி மிகவும் கட்டாயமானது ஆயிற்று; ஸ்ராலினிஸ்ட்டுக்கள், சீர்திருத்தவாதிகள் (LSSP) மற்றும் மத்தியவாதிகள் தொழிலாள வர்க்கத்தின்மீது கொண்டிருக்கும் எதிர்ப்புரட்சிகர பிடியை உடைக்க வேண்டும் என்றும் ஆயிற்று. தமிழ் போராட்டத்தின் ஆதரவாளர்கள் என்று போலியாக காட்டிக் கொண்டு --அதை தொலைவில் இருந்து புகழ்வது மூலம்-- ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டர் ஆகியோர் இப்போராட்டத்தை தங்களால் இயன்ற அளவிற்கு நாசப்படுத்தினர்.

ஜூலை மாத இனப்படுகொலைகளுக்கு பின்னர், இத்தகைய முற்றிலும் தேவையான நடைமுறை வினாக்களை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் எழுப்பியது; இந்தியாவில் ஒரு ட்ரொட்ஸ்கிச கட்சிக்கான போராட்டத்தை வலிமைப்படுத்தவும் போராடியது.

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின்பால் இந்திய முதலாளித்துவ வர்க்கம் கொண்டிருந்த கொள்கையை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் கீழ்க்கண்ட விதத்தில் பகுப்பாய்வு செய்தது:

"ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் நிலைத்து நிற்க முடிந்ததற்கு காரணமே, இந்திய அரசாங்கம் அதன் உதவிக்கு வந்ததால்தான்; முதலாளித்துவ துணைக் கண்டத்தின் வடிவமைப்பிற்குள் தேசிய இனப் பிரச்சினைக்கு "தீர்வு காணுதற்கு" பொறுப்பை எடுத்துக் கொள்ள குறுக்கீடு செய்வதற்கு நிர்பந்திக்கப்பட்டதாலாகும். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சம சமாஜக் கட்சி இரண்டும் இந்த ஆதரவிற்கு விரைந்து நின்றன...

"இந்திய அரசாங்கம் தமிழர்களுடைய உரிமைகளை காப்பதற்கு தலையிடாது. ஆனால் அவ்வாறு செய்வதாக தமிழர்களிடையே ஒரு பிரமையை தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது.

"வெகுஜனப் போராட்டங்கள் வெடிக்குமோ என்ற அச்சத்தில், இந்திய அரசாங்கம் தமிழர்கள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இரண்டையும் ஒரு சமரசத்திற்கு வருமாறு அழுத்தம் கொடுத்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தலைவர்கள் ஜெயவர்த்தனாவுடன் பேச்சு வார்த்தை நடத்த விரும்பவில்லை; ஆனால் இந்திரா காந்தி தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி இன்னும் பலரும் வட்ட மேசை பேச்சுக்களில் கலந்து கொள்ளுவதற்கு உறுதியளித்தார்.

"தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தலைவர்கள் இந்தப் "பேச்சுக்களில்" கலந்து கொள்வார்கள் என நினைப்பதற்கு முடிகிறது; காந்தி ஆட்சியும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும் இலங்கையின் வடக்கு பகுதியில் தன்னாட்சிக்காக அழுத்தம் கொடுக்கக்கூடும்.

"இது மற்றொரு குருதி தோய்ந்த பொறியாக தமிழர்களுக்கு ஆகக் கூடும்..." (News Line, August 24, 1983)

இக்காலக்கட்டம் முழுவதும், ஹீலியும் பண்டாவும் இந்தியாவில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் இன் பணியை தொடர்ந்து எதிர்த்தனர்; அது ஒரு திசைதிருப்புதல் எனக் கூறினர். இந்தப்பணிக்கு ஹீலி, பண்டாவின் விரோதப் போக்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் பிரிவு ஒன்றை இந்தியாவில் அமைப்பது பற்றிய முன்னோக்கை கூட விவாதிக்க தயாராக இல்லாத வெறிக்கட்டத்தை அடைந்தது. ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டர் ஆகியோர் மிக நனவுடன் தமிழ் விடுதலைப் போராட்டத்தை இலங்கை மற்றும் இந்திய தொழிலாள வர்க்கத்திடம் இருந்து ஒதுக்கி வைக்கப் பார்ப்பதில் கொண்டிருந்த முயற்சி எந்த அளவிற்கு இருந்தது என்றால், அவர்கள் தமிழ் முதலாளித்துவப் பிரிவு ஒன்றுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அதை ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சியாக வளர்வதை தடுத்தனர். WRP இன் ஆதாரங்களை ஆராய்வதின் மூலம் இது சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் உறுதி செய்யப்பட முடியும்; டிசம்பர் 1983 ல் நடைபெற்ற முதல் "அனைத்துக் கட்சிகள் மாநாட்டிற்கு" பின்னர் இது நடந்தது.

டிசம்பர் மாதம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, லங்கா சம சமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவை முதல் அனைத்து கட்சிகள் மாநாட்டை கொழும்பில் நடத்தின. இந்த மாநாட்டை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஒரு மோசடி என்று கண்டனத்திற்கு உட்படுத்தி, இந்திய தொழிலாளர்களை இந்திய முதலாளித்துவத்திடம் சிறிதுகூட நம்பிக்கை கொள்ள வேண்டாம் என்றும், தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை தங்கள் கைகளிலேயே நேரடியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தது. இவர்களின் மோசடித்தனமான பேச்சுக்கள், ஐக்கிய தேசிய கட்சி பிரிவுகள் சில ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் சேர்ந்து இனவெறிப் பிரச்சாரத்தை திரட்டி ஜெயவர்த்தனாவை போரை தீவிரப்படுத்துமாறு செய்தபோது, திடீரென முடிவிற்கு வந்தன. தேசிய முதலாளித்துவ வர்க்கத்தை தூக்கி வீசி அவர்களது சொத்துடமை உரிமை அபகரிக்கப்பட்டால் ஒழிய எந்த வித "சமாதானமும்" அடையப்பட முடியாது என்பதை இந்த உண்மை மீண்டும் நிரூபித்தது. தமிழ் முதலாளித்துவத்தின் முக்கியத்துவம் அவர்கள் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு எதிரான எந்த தொழிலாள வர்க்க போராட்டத்தையும் முற்றிலும் எதிர்த்தனர் என்பது ஆகும். ஆயுதமேந்திய போராட்டத்தை நடத்தி வந்த விடுதலைக் குழுக்கள் இதை ஒரு முன்னோக்காக கருதவே இல்லை.

பேச்சுக்கள் முறிந்தது (தேசிய பாதுகாப்பு அமைச்சரகம்) ஒரு போர் அமைச்சரகம் நிறுவப்படுவதற்கு வழிவகுத்து வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்கள்மீது பெரிய தாக்குதல்கள் நடத்தவும் வழிவகுத்தது. மார்ச் ஏப்ரல் 1984ல், ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் யாழ்ப்பாண தீபகற்ப பகுதியை ஒரு "போர்ப்பகுதி" என்று அறிவித்தது. இராணுவம் மிகப் பெரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு 200க்கும் மேற்பட்ட சாதாரண குடிமக்களை கொன்றது. விடுதலை இயக்க சக்திகள் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில், இந்திய அரசாங்கமும் லங்கா சம சமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் முற்றிலும் மௌனமாக இருந்தனர். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமானது ஒடுக்கு முறையின் பரந்த தன்மையை அம்பலப்படுத்தி இந்த இனவாதப் போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற பிரச்சாரத்தை தொழிலாள வர்க்கத்திடம் தீவிரப்படுத்தியது. 1984 ஏப்ரல் 26ல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டது; இது இராணுவத்தின் இனவெறிக் கொலை நடவடிக்கைகள் பற்றி விவரமாகக் குறிப்பிட்டதுடன், இன்னும் முக்கியமான வகையில் கொள்கை, முன்னோக்குகள் பற்றிய முக்கியமான வினாக்களையும் எழுப்பியது.

"தமிழர்களை ஒரு ஒற்றை ஆட்சி முறைக்குள் காப்பாற்றமுடியும் எனப் பீற்றிக் கொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் இப்பொழுது எங்கே நிற்கின்றனர்? வடக்கிற்கு எதிரான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் இப்பொழுது நிகழ்த்தும் போரின் ஒவ்வொரு கட்டத்திற்கும் அவை ஆதரவு கொடுத்து வருகின்றன. இவ்வாறு செய்கையில், விடுதலை இயக்கத்திற்கு எதிராக ஒரு நயமற்ற சூனிய வேட்டையைத் தொடக்கியுள்ளனர்.

"இராணுவச் சட்டத்தை சுமத்தி, அரசாங்கம் தொடக்கியுள்ள தாக்குதல்களில் இருந்து தமிழ் தேசிய இனத்தை காப்பாற்றிக் கொள்ளும் தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் உரிமைக்கு நிபந்தனையற்ற ஆதரவை கொடுக்கிறோம். கொலைக்கு உதவியாக இருப்பவர்கள்தாம் உலகில் எப்பகுதியில் இருந்தும் தங்கள் உரிமைகளை காப்பாற்றி கொள்ள தேவையான சடரீதியான வளங்களையும் நண்பர்களை பெறும் உரிமையை எதிர்ப்பர் என்றும் நாங்கள் உறுதியாக கூறுகிறோம்.

"யாழ்ப்பாணத்தில் நடக்கும் இனப்படுகொலை பரவிக் கொண்டிருக்கையில், ஸ்ராலினிஸ்ட்டுகள் தொழிலாள வர்க்க இயக்கத்தை முடக்குவதற்கு (விடுதலை இயக்க அமைப்புக்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் நிதி அளிக்கப்படுகின்றன) என்ற பொய்யை பரப்புவதுடன் தேசிய பாதுகாப்பு மந்திரி லலித் அதுலத்முதலி சாதித்த வெற்றி; இந்திய முதலாளித்துவ அரசாங்கம் இந்தப் பிரச்சினையில் நடுநிலையாக இருக்க வைத்துள்ளது பற்றியும் புகழ முன்வந்துள்ளனர்; "ஒரு தேசிய அளவில் முக்கியமான காரியத்தை அவர் முழுத் திறமையுடன் செய்து கொண்டிருப்பதால் எந்தத் தயக்கமும் இன்றி அவரை நாங்கள் புகழ்கிறோம்". (Editorial of Stanlist daily, Attha, April 21)

"... இந்த ஸ்ராலினிஸ்ட்டுக்களின் முழு இனவெறிக் கொள்கையும் வடக்கில் இருக்கும் தமிழர்களுடைய தியாகம் தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் இருக்கும் வகுப்புவாத தி.மு.க இயக்கத்திற்கு கிடைப்பதற்கு ஒரு உதவிக் கரத்தையும் கூட கொடுக்கிறது மேலும் வடக்கே இருக்கும் மக்களிடையே உள்ள தொழிலாள வர்க்க எதிர்ப்பு சக்திகளின் பிடியை வலுப்படுத்தவும் உதவுகிறது.

"தொழிலாள வர்க்கமும் தொழிற்சங்க இயக்கமும் ஒட்டுமொத்தமாக இந்த ஸ்ராலினிச காட்டிக் கொடுப்பை உடைப்பதற்கு எழுச்சி செய்ய வேண்டும்; வடக்கில் இருந்து இராணுவப் படைகள் திரும்பப் பெற வேண்டும் என்று கோருவதுடன் தமிழ்தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமை வேண்டும் என்றும் கோர வேண்டும். மீண்டும் இது ஸ்ராலினிசத்திற்கு எதிராக, நான்காம் அகிலத்தின் தலைமை தொழிலாள வர்க்கத்திற்குள் அவசரமாக கட்டியமைக்கப்பட வேண்டியதின் தேவையை எழுப்புகிறது. தொழிலாள வர்க்கத்தின் முன்னேற்றகரமான பகுதிகள் ஸ்ராலினிசத்திற்கு எதிரான இந்தப் போராட்டத்தை அசட்டை செய்ய முடியாதது போல், வடக்கில் நடக்கும் விடுதலைப் போராட்டமும் இந்தப் பொறுப்பை தவிர்க்க முடியாது.

"யாழ்ப்பாணத்தில் ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்வுகள் வடக்கில் நடக்கும் தேசிய விடுதலை இயக்கத்தை ஒரு திருப்பு முனைக்குக் கொண்டுவந்துள்ளன. வடக்கில் நடக்கும் இராணுவ அடக்குமுறை ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தால் வடக்கில் இருக்கும் மக்களின் பெரும்பகுதியினர் விவாதங்கள் மூலம் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என விரும்புவதாகவும் அதற்கான சூழ்நிலை தோற்றுவிக்கப்பட வேண்டும் என்ற போலிக் காரணத்தால் நடைபெறுகிறது. இந்த மாபெரும் மோசடிக்கான நம்பகத்தன்மை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தலைமையினால் அளிக்கப்படுகிறது.

"1947ல் இருந்து இந்த முதலாளித்துவத் தலைமை அதன் நம்பிக்கையை சிங்கள முதலாளித்துவ வர்க்கத்தில் வைத்தது; இப்பொழுது அது இந்திய முதலாளித்துவ வர்க்கம் அதன் சார்பில் தலையிடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறது.

"இந்திய அரசாங்கம் படுகொலைகளை கண்டனம் செய்யக் கூட இல்லை... பெருளாதார நெருக்கடி மற்றும் தேசிய விடுதலைப் போராட்டம் மற்றும் தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் பிடியில் அகப்பட்டுக் கொண்டிருக்கும் இந்திய அரசாங்கம் ஒடுக்கப்பட்ட தமிழ் தேசத்தின் உதவிக்கு வராது.

ஒரு புறம் சிங்கள முதலாளித்துவ வர்க்கத்தின் பின்னாலும் மறுபுறம் இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் பின்னாலும் ஊர்ந்துகொண்டிருக்கும் கோழைத்தனமான இந்த கொள்கையின் பின்விளைவானது, சிங்கள முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இலங்கை தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான புறநிலை முரண்பாட்டின் வெடித்தெழுதலை அலட்சியம் செய்வதுடன், இலங்கை தொழிலாள வர்க்கத்தை இனவாதிகள் என கண்டனம் செய்வதற்கும் இட்டுச்சென்றது.

"இந்த திவாலான கொள்கையின் மற்றொரு அம்சம் தமிழ் நாட்டிலுள்ள தி.மு.க முதலாளித்துவத்தின் வகுப்புவாத சதியாலோசனைகளுக்கு தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை கீழ்ப்படுத்தும் முயற்சியாக இருக்கிறது. காந்தி அரசாங்கமோ, மாநிலத்தின் எம்.ஜி.ஆர் அரசாங்கமோ, கருணாநிதியின் எதிர்க்கட்சியான தி.மு.கழகமோ இலங்கையில் தமிழ்தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமையை ஏற்கவில்லை. இதற்கு முற்றிலும் மாறாக, தி.மு.க முதலாளித்துவத்தினர் விடுதலை இயக்கத்தின்மீது மிக அதிகமான அழுத்தத்தை செலுத்தி சுதந்திரமான முடிவுகளை அது எடுக்க முடியாமல் செய்து வருகின்றனர்.

"வாய்ப்புக் கிடைத்தால், அவை தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஒரு தமிழர்-சிங்களவர் போராக மாற்ற முற்படுகின்றனர். இந்த முயற்சியின் நோக்கம் தமிழ் முதலாளித்துவத்தின் சலுகை பெற்ற நிலைமையை சிங்கள முதலாளித்துவத்தின் சலுகை பெற்ற நிலைமைக்கு எதிராக நிறுத்துவதற்கான முயற்சியாகும்...

"விடுதலை இயக்கத்தின் போராளிகளை அந்த இயக்கத்தை முதலாளித்துவத்தின் தலைமை வழிபிறழச்செய்யும் செயல்களுக்கு எதிராக இலங்கை மற்றும் இந்தியாவில் இருக்கும் தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்பி நடக்குமாறு நாம் வலியுறுத்துகிறோம். தொழிலாள வர்க்கத்தின் அத்தகைய மாற்றம் இன்றைய தொழிலாள வர்க்கத்தை சங்கிலிகளில் பிணைத்து வைத்துள்ள எதிர்ப்புரட்சிகர ஸ்ராலினிசம், திருத்தல்வாதம் இவற்றுக்கு எதிரான எதிர்ப்பில் தவிர்க்க முடியாமல் ஒரு பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தின் போராட்டமாகத் திரும்பும். இன்று நான்காம் அகிலத்தின் அனத்துலக் குழுவினால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் ட்ரொட்ஸ்கிசம் ஒன்றுதான் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து செல்கிறது. நான்காம் அகிலத்தின் அனத்துலக் குழுவின் இலங்கை பகுதியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் இந்தப் போராட்டத்திற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. வடக்கிலும் தெற்கிலும் இருக்கும் இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை கட்டியமைக்க முன்வருமாறு வலியுறுத்துகிறோம்.

News Line மே 23, 1984 பதிப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்ட போது தடித்த எழுத்துக்களில் இருக்கும் முழுப் பிரிவும் தேசிய முதலாளித்துவத்தின் முன் ஹீலியின் இழிவான நிபந்தனையற்ற சரணடைதல் என்ற வழிவகையின் கீழ் நீக்கப்பட்டு விட்டது. (ஆனால் ஆஸ்திரேலிய ட்ரொட்ஸ்கிச வாதிகளின் Workers News, மே 29 பதிப்பில் இந்த முழு அறிக்கையும் வெளியிடப்பட்டது.) இந்த நேரத்தில் ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டர் ஆகியோர் தொழிலாள வர்க்கத்தின் பங்கை முற்றிலும் கைவிட்டதுடன், இலங்கை மற்றும் இந்தியாவிற்கு ஒரு சுயாதீன தொழிலாள வர்க்க முன்னோக்கிற்கான போராட்டமும் கலைக்கப்பட வேண்டும் என்று கோரினர்.

ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டர் ஆகியோர் இன்னும் கூடுதலான காட்டிக் கொடுப்பு தாக்குதலை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மீது நடத்த தயாரிப்புக்களை மேற்கொண்டிருக்கையில், ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் பிரச்சாரத்தை எதிர்கொள்ளும் வகையில் மீண்டும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் செய்தி ஏடுகளுக்கு சட்டபூர்வமாக பொறுப்பு கொண்டிருந்த ஆனந்த வக்கும்புறவை அரசியலமைப்பு ஆறாம் திருத்தத்தை மீறியதற்காக மே 18 அன்று கைது செய்து கொழும்பில் இருக்கும் முகத்துவாரம் போலீஸ் நிலையத்தில் 14 நாட்கள் காவலில் வைத்தது. அப்படியும் இத்தாக்குதல் ஹீலி, பண்டா, சுலோட்டர் ஆகியோர் மட்டுமல்லாது, இலங்கை ஆளும் கட்சி இந்நாட்டில் உள்ள தொழிலாள வர்க்கத்தின் புரட்சித் திறன் பற்றி சரியான முறையில் அஞ்சியது: லங்கா சம சமாஜக் கட்சி, ஸ்ராலினிஸ்ட்டுக்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஆகியவற்றின் துரோகத்தனமான அரசியல் பிடி துண்டிக்கப்பட்ட பின், தொழிலாள வர்க்கம் இனவாத முதலாளித்துவ அரசையும் உடைக்க எழும் என்று நினைத்தது.

இந்தக் குறிப்பிட்ட கைது தமிழ்நாட்டிலும் பெரும் கவலையை ஏற்படுத்தியது; ஏனெனில் இலங்கை அராசங்கம் அதன் அரசியலமைப்பு ஆறாம் திருத்தத்தை முதல் தடவையாக நீதிமன்ற நடவடிக்கைக்காக ஒரு அரசியல் கட்சி மீது பயன்படுத்தியதாகும். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை அந்த அடிப்படையில் விசாரணைக்கு உள்ளாக்க முயற்சிக்கப்பட்டது என்றால், ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியையும் தடைசெய்ய முடிவு செய்திருந்தது என்று அர்த்தப்படுத்தியது. (இறுதியில் வாக்கும்புற மீது குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை; இன்னமும் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை.)

WRP தலைமைக்கு கைது செய்யப்பட்டதின் மகத்தான முக்கியத்துவம் பற்றி புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் விளக்கியது; அதையொட்டி தொழிலாளர்களுக்கு முக்கியமான தொடர்புடைய பிரச்சினைகள் பற்றி விளக்குவதற்கான அறைகூவலையும் எதிர்கொள்ளத் தயாராயிற்று. 1984 ஜூன் 14 அன்று News Line, நான்காம் அகிலத்தின் அனத்துலக் குழுவின் சார்பில் ஒரு சுருக்கமான அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கை முடிவுரையாக கூறியது:

"ஐரோப்பிய, அமெரிக்க, ஆஸ்திரேலிய மற்றும் ஆசிய தொழிற்சங்க வாதிகளையும் முன்னேற்றகரமான பகுதியினரையும் தோழர் ஆனந்த வக்கும்புறவின் விடுதலைக்கு பிரச்சாரம் செய்யுமாறும், தமிழர்கள் மீதான அனைத்து அடக்குமுறைகளும் நிறுத்தப்பட வேண்டும் என்றும் தமிழ் பகுதியில் இருந்து அனைத்து ஆயுதப் படைகளும் பின்வாங்கப்பட வேண்டும் என்றும் கோருகிறோம்."

"எப்படியாயினும் WRP யே புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் பாதுகாப்பிற்கு ஆதரவை திரட்ட எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. ஆனால் இன்னமும் மோசமானது வரவிருந்தது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக மத்திய குழு நீதிமன்ற நடவடிக்கையை எதிர்பார்த்து ஒரு விரிவான பாதுகாப்பு ஆவணத்தை தயாரித்திருந்தது. அதாவது தன்மீது சுமத்தப்பட்ட "நாட்டின் பிளவிற்காக உழைக்கிறது" என்ற குற்றச்சாட்டை அதைத் தொடுத்த ஐக்கிய தேசிய கட்சி மீதே திருப்பியது:

"சிங்கள, தமிழ் தேசிய இனங்களுக்கு இடையேயான உறவுகளை உடையும் கட்டத்திற்குக் கொண்டு வந்து, இப்பொழுது நாடுகளை துண்டாடும் நடவடிக்கைகளை கொண்டிருப்பதுடன், சிதைத்துவிடவும் முயன்று வருபவை சிங்கள முதலாளித்துவ வர்க்கம் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆகியவைதான், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், தொழிலாள வர்க்கம் மற்றும் தமிழ் தேசிய இனம் அல்ல. நாடுகளை பிரித்தல், சிதைத்தல், தகர்த்தல் என்பவை பற்றி உண்மையான விசாரணை இருந்தால், அவர்கள் தங்கள்மீதே குற்றம் சாட்டிக் கொள்ளட்டும், எங்கள் மீது அல்ல!

அனைத்துலகக் குழுவின் இலங்கை பகுதியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் கூட்டம்

"1948ல் ஏகாதிபத்தியத்துடனான உடன்பாட்டை மறைக்க சுதந்திரம் என்ற திரை பயன்படுத்தப்பட்டதில் இருந்து, இதே வகை அடக்குமுறை, வகுப்புவாதக் கொள்கைதான் சிங்கள முதலாளித்துவ வர்க்கம் மற்றும் அனைத்து அரசாங்கங்களாலும் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. தேசிய ஒடுக்குமுறை 1947ம் ஆண்டு பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்கீழ் பல நூறாயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களின் குடி உரிமைகள் அகற்றப்பட்டதில் இருந்து தொடங்கியது. இதில் வடக்கில் சிங்கள குடியிருப்புக்கள் வலுக்கட்டாயமாக தோற்றுவிக்கப்பட்டது, சிங்கள, தமிழ் மொழிகளுக்கு இடையே சமத்துவம் வேண்டும் என்பது நிராகரிக்கப்பட்டது, கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய பிரிவுகளில் இனப்பாகுபாடு காட்டல் ஆகியவையும் அடங்கும். இப்பொழுது உலக முதலாளித்துவ நெருக்கடி ஆழ்ந்துள்ள நிலையில், இது மிகப் பெரிய இனப்படுகொலை, பரந்த அளவில் சொத்துக்கள் அழிக்கப்படுதல், தமிழ் தேசிய இனத்திற்கு எதிராக முழு இராணுவ அடக்குமுறை என உயர்த்தப்பட்டுள்ளது."

இந்த அறிக்கை பின்னர் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் கொள்கை, தமிழர்களுடைய சுய நிர்ணய உரிமைக்கு ஆதரவு பற்றியதை எடுத்துக் கூறியது:

"தமிழ் தேசிய இனம் தன்னை இனவாத சர்வாதிகார வன்முறையில் இருந்து விடுவித்துக் கொள்ள நடத்தும் போராட்டம் தவிர்க்க முடியாமல் தேசிய சுதந்திரம் என்ற வடிவமைப்பை கொண்டுள்ளது; அதே நேரத்தில் தொழிலாள வர்க்கம் இந்த இனவாத சர்வாதிகாரத்திற்கு எதிராக நடத்தும் போராட்டம் இனவாத முதலாளித்துவ சொத்துக்களை தேசியமயமாக்கி தொழிலாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் சோசலிச போராட்டமாகவும் வடிவத்தை எடுக்கிறது, வாழ்க்கைத் தரங்கள், வேலைகள், பணிகள் ஆகியவற்றிற்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக கிளர்ந்தெழும் போராட்டமாகவும் உள்ளது. இவை புறநிலை ரீதியாக ஒன்றுபட்ட போராட்டங்களாகும்."

லங்கா சம சமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களின் காட்டிக் கொடுப்பை எதிர்த்து ஒரு வழிவகையையும் கூட விரிவாகக் கூறியது:

"தேசிய இனங்களை சிதைக்க வைத்து, தொழிலாள வர்க்கத்தின் அமைப்புக்களை அழிக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் உந்ததுதலை தோற்கடிக்க, தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாள வர்க்க அரசியல் கட்சிகளை ஒன்று திரட்டுதலும், வடக்கில் இருந்து படைகள் திரும்பப் பெற வேண்டும் என்று கோருதலும், அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோருதலும், தமிழ் தேசிய இனத்தின் தேசிய உரிமைகளுக்காக போராடுதலும் மிகவும் அவசியமாகும்.

"இன்று தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு முன்னேற்ற பாதையைக் காட்டுவது இந்த புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் கொள்கை ஒன்றுதான். கம்யூனிஸ்ட் கட்சி இன் ஸ்ராலினிச தலைவர்களும், "நாட்டைப் பிரிக்கிறார்கள்" என்ற காரணம் கூறி லங்கா சம சமாஜக் கட்சியின் தலைவர்களும், வடக்கிலும் கிழக்கிலும் இருக்கும் ஒடுக்கப்பட்டுள்ள தமிழ்தேசிய இனத்தை மற்றும் தொழிலாள வர்க்கம், விவசாயிகளை வேட்டையாடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு மூச்சு விடுவதற்கு நேரம் கொடுத்துள்ளனர்.

"இந்தத் தலைவர்கள் தமிழ்தேசிய இனத்தின் அடிப்படை ஜனநாயக உரிமையான தன்னுடைய விதியைத் தானே நிர்ணயிப்பதை எதிர்த்து, தமிழர்கள் மீதும் தொழிலாள வர்க்கத்தின் மீதும் சிங்கள தேசிய இனத்தின் ஆதிக்கத்தைச் சுமத்தும் ஐக்கிய தேசிய கட்சியின் முயற்சிக்கு நேரடியாக உதவினர். ஏன் இந்தக் கொள்கை? தமிழர்கள் தங்கள் விதியை நிர்ணயிப்பதற்கு எந்த ஜனநாயக கோட்பாடு தடையாக உள்ளது, சிங்களவர்களுக்கு தங்கள் ஆதிக்கத்தை தமிழர்கள் மீது சுமத்துவதற்கு எந்த உரிமை அதிகாரம் கொடுக்கிறது?...

"முதலாளித்துவ அரசின் முன் இந்த தலைமை காட்டியுள்ள இழிவான நிபந்தனையற்ற சரணாகதியை பயன்படுத்தி ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையை தீவிரப்படுத்த முயன்றுவிட்டது, தொழிலாளர் விவசாயிகள் பெரும்பான்மைக்கு எதிரான தாக்குதலை தீவிரப் படுத்திவிட்டது, தொழிலாளர் இயக்கத்தை சேர்ந்த போராளிகளை தங்கள் விருப்பப்படி காவலில் வைக்கின்றது.

"இலங்கை தொழிலாள வர்க்கம் முக்கியமான சமூக மற்றும் அரசியல் ஆதாயங்களை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மற்றும் சுதந்திரத்திற்கு பிந்தைய காலத்தில் முதலாளித்துவத்தில் இருந்து அரசியலில் சுயாதீனமாக நடத்திய போராட்டத்தின் மூலம்தான் அடைந்தது. இந்தப் போராட்டத்தின் அடிப்படைக் கூறுபாடு தொழிலாள வர்க்கம் இந்திய போல்ஷிவிக்-லெனினிச கட்சி (BLPI) மற்றும், பின்னர் லங்கா சம சமாஜக் கட்சியின் தலைமையின்கீழ் முதலாளித்துவ வர்க்கத்தின் இனவாதக் கொள்ககளுக்கு எதிராகப் போராடியதாக இருந்தது.

"லங்கா சம சமாஜக் கட்சி தோட்டத் தொழிலாளர்கள் வாக்குரிமைகளை இழந்ததற்கு எதிராக நடத்திய போராட்டம், தமிழர்களின் மொழி உரிமைக்காக நடத்திய போராட்டம், கல்வி மற்றும் வேலை ஆகியவற்றில் பாகுபாடு காட்டப்பட்டதற்கு எதிராக நடத்திய போராட்டம், முதலாளித்துவ வர்க்கத்தின் "சிங்களர் மட்டும்" என்ற கொள்கைக்கு எதிராக நடத்திய போராட்டம், அரசாங்கத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கம் மற்றும் தமிழ் மக்களின் ஐக்கியத்துக்காக நடத்திய போராட்டத்தின் மையத்தில் இருந்தன. 1953 ஹர்த்தால் (பொது வேலைநிறுத்தம்) நேரத்தில் வெளிப்பட்ட ஒற்றுமையும் அதன் விளைவுதான்.

"லங்கா சம சமாஜக் கட்சியினால் அக்காலத்தில் நிறுவப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் கொள்கை தேசிய இனங்களுக்கு இடையே உள்ள உறவுகள் பற்றி எப்படி இருந்தது? 'இந்தக் கட்டத்தில் இந்தப் பிரச்சினை வெறுமனே கைகளை எண்ணுவதால் மட்டும் சரியாக தீர்மானிக்கப்பட முடியாது என்பது வலியுறுத்தப்பட வேண்டும். ஒரு நாட்டிற்குள் அல்லது தேசத்திற்குள் இன உறவுகள் பற்றிய பிரச்சினைகளை தீர்மானிப்பதற்கு வெறும் தலைகளை மட்டும் எண்ணி பெரும்பான்மையின் மூலம் முடிவெடுப்பது ஜனநாயக வழிவகை ஆகாது. வெறும் எண்ணிக்கை பெரும்பான்மைக்கு பதிலாக அத்தகைய விஷயங்களில் இனச் சமத்துவத்தை கொண்டுவருவது துல்லியமாக ஜனநாயகம் ஆகும்.' ((On the State Language Question--A Declaration of the LSSP, 1955, p.4)

"... லங்கா சம சமாஜக் கட்சி தலைவர்கள் இந்தக் கொள்கைகள், கோட்பாடுகள் ஒவ்வொன்றையும் 1960 களில் காட்டிக் கொடுத்தனர். லங்கா சம சமாஜக் கட்சி 1964ம் ஆண்டு முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் நயமற்ற முறையில் சென்று கூட்டணி அமைத்துக் கொண்டது ... தேசிய இனப் பிரச்சினையில் தேசிய முதலாளித்துவத்தை வலுப்படுத்துவதற்கு உதவியது...

"இத்தலைமைகளின் காட்டிக் கொடுப்புக்கள், தவிர்த்தல்கள் ஆகியவற்றிற்கு எதிராக ஒரு மாற்று மார்க்சிச புரட்சிகர தலைமையை கட்டியமைப்பதுதான் முக்கிய பிரச்சினை ஆகும். இத்தலைமையை கட்டியமைப்பதற்குத்தான் புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் போராடி வருகிறது.

"இப்போராட்டத்தில், தீர்க்கமானதாகவும் தவிர்க்க முடியாததாகவும் வெளிப்பட்டுள்ளது இந்தத் தலைவர்கள் முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அரசுடன் கொண்டுள்ள பிற்போக்குத்தன உடன்பாட்டை உடைப்பதற்கு தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட வேண்டியதன் அவசியமாகும். இதில் நேரத்தை தாமதப் படுத்தக்கூடாது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சம சமாஜக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமைகள் அரசாங்கம் மற்றும் முதலாளித்துவ கட்சிகளுடன் இருந்து அனைத்து உறவுகளையும் உடைத்துக் கொள்ள வேண்டும் என்று தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பகுதிகளும் கோர வேண்டும் என்றும், தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பகுதிகளின் ஒரு தேசிய பிரதிநிதிகள் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுகிறோம்.

"அத்தகைய மாநாட்டில், வடக்கில் இருந்து இராணுவப் படைகள் திரும்பப் பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட வேண்டும், தமிழர்களின் தேசிய உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும், அரசியல் அமைப்பின் ஆறாம் திருத்தம் கைவிடப்பட வேண்டும், அடிப்படைப் பணிகள், வேலைகள், வாழ்க்கை நிலைமைகள் ஆகியவற்றைக் காக்க ஒரு சோசலிசக் கொள்கையை வழங்க வேண்டும் என்றும் கோர வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன நடவடிக்கை மூலம் ஐக்கிய தேசிய கட்சியின் இனவாத சர்வாதிகாரத்தை விரட்டுவதற்கான சூழலைத் தயாரிக்கவும் மற்றும் ஒரு புரட்சிகர வேலைத்திட்டம், புரட்சிகர தலைமையை நோக்கி தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான சூழலை தயாரிக்கவும் இப்போராட்டம் அத்தியாவசியமானதாகும். இவ்விதத்தில்தான் சீர்திருத்தவாதத் தலைமைகள் தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கத்திற்கு போராடும் புரட்சிகரத் தலைமையின்மூலம் அகற்றப்படும். (Published in Workers News, Australia, June 30, 1984)

WRP இந்த ஆவணத்தைப் பெற்றுக் கொண்டது என்ற குறிப்பைக் கொண்ட அறிவிப்பையும் News Line வெளியிட்டது; இது வரவிருக்கும் News Line பதிப்புக்களிலும் வெளியிடப்படும் என்றும் கூறியது. ஆனால் WRP இதை வெளியிடவே இல்லை; வெளியிட மறுப்பதற்கான காரணத்தையும் கூறவில்லை. இதில் இருந்த வழிவகை பற்றி WRP உடன்படவில்லையா என்பது பற்றி புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கு தெரியாது. தகவல் கொடுக்கப்பட வேண்டும் என்ற முறையில், WRP தலைமை இந்த அறிக்கை பற்றி எந்தக் குறையும் கூறவில்லை, அல்லது 1983-85 காலத்தில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அளித்திருந்த பல ஆவணங்கள் பற்றியும் ஏதும் கூறவில்லை என்பதும் தெரிவிக்கப்பட வேண்டும். ஆனால் பண்டாவின் உதவியுடன் ஹீலி அனைத்துலக் குழுவின் பத்தாம் காங்கிரசில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் இந்த முழுக் காலத்திலும் WRP உடன் ஒத்துழைக்கவில்லை என்ற பொய்யை கூறினார்.

இதற்குப் பின் நடந்தவை, ஹீலி, பண்டா, சுலோட்டர் ஆகியோர் தொழிலாள வர்க்கத்தின்பால் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் கொண்டிருந்த நோக்குநிலைக்கு முழு எதிர்ப்பைக் காட்டியது என்பதுதான். உண்மையில் அவர்கள் தொழிலாள வர்க்கம் சர்வதேச அளவில் ஒன்றுபட்டு நிற்கும் முன்னோக்கு எதையும் எதிர்க்கும் போக்கைத்தான் வளர்த்துக் கொண்டிருந்தனர். இக்காலத்தில்தான் சி. சுலோட்டர் "அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம் மீதாக கடுமையாக வலியுறுத்தியதற்கு" வேர்க்கர்ஸ் லீக்கை தாக்கினார். ஹீலியும் பண்டாவும் பின்னர் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கு எதிரான அவதூறுகள் நிறைந்த சூனிய வேட்டையை ஆரம்பிக்க முடிவெடுத்து இலங்கை அரசாங்க அடக்குமுறையை எதிர்த்துப் போரிட உதவுதல் எனக் கூறிய வகையில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கு ஒரு பிரதிநிதியை அனுப்பினர்.

ஹீலியின் பரிதாபத்திற்குரிய தூதர், இலங்கைக்கு வந்த பின்னர், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சம சமாஜக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமைகள் மீது அரசியல் கோரிக்கைகள் வைக்கும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் தந்திரோபாய வழியை தாக்கினார்; இதற்குக் காரணம் இத்தலைமைகள் ஏற்கனவே அம்பலப்படுத்தப்பட்டுவிட்டதாக அவர் கூறினார். இந்நேரத்தில்தான் ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டர் தங்கள் வலதுசாரி-மத்தியவாத அணுகுமுறையை பிரிட்டனில் உள்ள தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு ஏற்ப பொருத்திக் கொள்ளும் வகையில் ஈடுபட்டனர் என்பது நினைவிற் கொள்ளத் தக்கது; இதற்கு அவர்கள் தீவிர-இடது சொற்றொடர் ஜாலங்களின் பின் தம்மை மறைத்துக் கொண்டனர். தங்கள் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் எஜமானர்களுக்குப் பணிபுரியும் வகையில் --WRP தலைமைக்கு கணிசமாக அவர்கள் பணம் கொடுத்திருந்தனர் -- ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டர் ஆகியோர் துரோகம் நிறைந்த தலைவர்களை அம்பலப்படுத்தும் விதமாக கோரிக்கைகளை வைக்கும் மார்க்சிய தந்திரோபாயத்தை திருத்துவதற்கு அரும்பாடு பட்டனர்.

மேலும், ஹீலியின் தூதர் ஒரு இரகசிய அறிக்கையை கொடுத்திருந்தார்; அதில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சம சமாஜக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி இவற்றிற்கு இடையில் முதலாளித்துவ அரசு பற்றிய அணுகுமுறையில் அடிப்படை வேறுபாடு எதுவும் இல்லை என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இத்தகைய வெளிப்படையான பொய்கள் நிறைந்த இவ்வகை அறிக்கை தேவையை ஒட்டி இரகசியமாகவே இருக்கும்; ஏனெனில் முன்னேற்றம் அடைந்த தொழிலாளர்கள் இத்தகைய கூற்றிற்கு ஜனநாயக முறையற்ற விதத்தில் விடையிறுக்க முற்படுவர்!

இதற்கு பின்னர் 1985 ஜனவரி மாதம் நடைபெற்ற அனைத்துலக் குழுவின் பத்தாம் காங்கிரசிற்கு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், நிரந்தரப் புரட்சி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விரிவான முன்னோக்குகள் பற்றிய தீர்மானத்தை சமர்ப்பித்தது. இந்தியத் துணைக் கண்டத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு இருந்த தலைமை நெருக்கடி பற்றி இந்த ஆவணம் விரிவாக கூறியதுடன், அதைத் தீர்ப்பதற்கு ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டம் ஒன்றையும் முன்வைத்தது. இந்த ஆவணம் ஹீலி-பண்டா-சுலோட்டர் தலைமையினால் நசுக்கப்பட்டது, (இலங்கை வேலைத்திட்டம் பற்றிய சில பக்கங்களை தவிர மற்றவை) பிரதிநிதிகளால் ஆராயப்படவில்லை.

பின்னர் ஹீலி வெளியேற்றப்பட்டபின், அவருடைய ஆதரவாளர்களுக்கு இடையே பிளவு வந்தபின், ட்ரொட்ஸ்கிசம் பற்றிய ஹீலி மற்றும் WRP இன் குற்றம்சார்ந்த காட்டிக் கொடுப்பிற்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் நடத்தப்பட்ட போராட்டத்தின் ஒரு பகுதியாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் மீண்டும் இந்த நசுக்கப்பட்ட, முன்னோக்குகள் கொண்ட ஆவணத்தை, WRP மத்திய குழுவிற்கு அளித்தது. பண்டா-சுலோட்டர் மற்றும் பிரானி ஆகியோர் தலைமையில் இருந்த முகாமும் ட்ரொட்ஸ்கிச முன்னோக்கு பற்றி விவாதிக்கக் கூட விரோதப் போக்கை கொண்டிருந்தது என்பது உடனடியாக தெளிவாயிற்று. அவர்கள் ஹீலியையும் விட திமிர்த்தனமாக அதே மாதிரியான காட்டிக் கொடுப்பு தாக்குதலைத்தான் ட்ரொட்ஸ்கிசத்தின்மீது கொண்டிருந்தனர்.

ஜூலை-அக்டோபர் 1985ல் WRP யில் நடைபெற்ற அரசியல் வகை வெடிப்பிற்குப் பின், கிளீவ் சுலோட்டர் எளிதில் moral rearmament மற்றும் universal democracy க்கு டான் க்விக்சோட் வகையில் மாற்றம் கண்டபின், WRP யின் செய்தி ஊடகத்தின் பக்கங்கள் அனைத்தையும் நான்காம் அகிலத்தை கண்டிக்க அனைத்துவித ட்ரொட்ஸ்கிச எதிர்ப்புக் கருத்துக்களை கொண்டு நிரப்பினார். ஆனால் ட்ரொட்ஸ்கிசத்தின் தத்துவம், முன்னோக்குகள் பற்றிய கோட்பாட்டு ரீதியான விவாதம் என்று வரும்போது சுலோட்டரின் ஜனநாயகம் முடிந்து போயிற்று. இவ்விதத்தில் சுலோட்டர்-பிரானி கன்னை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் கொடுத்த கருத்துக்களை சுற்றறிக்கைக்கு விட மறுத்தது; அதே போல் வேர்க்கர்ஸ் லீக் ஹீலியின் காட்டிக் கொடுப்பு பற்றி 1982-84 காலத்தில் அளித்திருந்த கருத்துக்களையும் வெளியிட மறுத்தது போல்தான் இதுவும் இருந்தது. அறநெறியை பொறுத்த வரையில், சுலோட்டரும் பிரானியும், பண்டாவின் முழு ஆதரவுடன் அனைத்துலக் குழுவின் ஆதரவாளர்கள் WRP யின் திட்டமிடப்பட்ட இந்த ஆண்டு பெப்ருவரி மாதம் நடைபெறவிருக்கும் எட்டாம் மாநாட்டில் கலந்து கொள்ளுவதை தடுக்க போலீசாரை அழைத்தனர்.

"இவ்விதத்தில் சுலோட்டர்-பிரானி குழு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை கண்டித்த பின்னர் அரசாங்க சக்தியை பயன்படுத்தி WRP உறுப்பினர்களின் ஜனநாயக உரிமைகளைத் தாக்கிய முறையில், இப்பொழுது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் மீதான அரசாங்க தாக்குதலுக்கு மௌனமாக ஆதரவு கொடுத்திருப்பது ஒன்றும் தற்செயல் நிகழ்வு அல்ல. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகள் சிலவற்றை தடை செய்ய முறையாக பிரச்சாரம் செய்துவரும்போதே, சுலோட்டர் ட்ரொட்ஸ்கிசத்தின் முன்னோக்குகள் பற்றி விவாதிக்கத் தயார் என்று பாசாங்கு புரிகிறார். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு குழப்புவதற்கு இழிந்த முறையில் தடைக்குட்படுத்த தந்திர உத்தியைக் கையாள்கையில், பெப்ருவரி 1986ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்குழுவுடன் பிளவு அடைந்தபின் சுலோட்டர் கீழ்க்கண்ட கடிதத்தை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கு எழுதினார்:

"உங்களுடைய புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் முன்னோக்குகளை கடைசிக் காங்கிரசில் (1985) முன்வைத்ததற்கு நன்றி. உங்களுடைய "முன்னுரை" சரியாக இல்லை. "WRP குழு இந்த ஆவணத்தை நசுக்குவதற்கு நடவடிக்கைகள் முயற்சிகளை எடுத்துக் கொண்டது" என்று எழுதியிருக்கிறீர்கள். தொழிலாளர் புரட்சி கட்சித் தலைமை மற்றும் அனைத்துலகக் குழுவில் இருந்த கொள்கையற்ற உறவுகளின் தன்மையை ஒட்டி WRP ஆவணத்தை விவாதிக்கவும் இல்லை, அதைச் சுற்றறிக்கைக்கு விடவும் இல்லை.

"பிரிட்டிஷ் குழு'வை ஏன் நீங்கள் பிரித்துக் காட்டுகிறீர்கள்? உங்களுக்கு வேர்க்கர்ஸ் லீக் குழுவும், குறிப்பாக டே.நோர்த் உம் ஹீலி மற்றும் WRP குழுவினரின் வேலைத்திட்டங்கள், அரசியல் நடவடிக்கைகள் அனைத்தையும் 10ம் காங்கிரசின் நடைமுறைகள் அனைத்திலும் ஆதரித்தனர் என்பது நன்கு தெரியும். இதில் திட்டமிடப்பட்ட (ஆனால் செயல்படுத்தப்படாத) புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை வெளியேற்றல் மற்றும் காங்கிரசின் கடைசி நாளுக்கு முதல் தினம் வெளிநடப்பு செய்தது ஆகியவையும் அடங்கும்.

"உங்கள் ஆவணம் WRP யில் சுற்றறிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது."

அனைத்து அறநெறியும் வர்க்க அறநெறிதான். எப்படித் திசைதிருப்பினாலும், சுலோட்டர் இதில் இருந்து தப்ப முடியாது. முதலில் அவர் முழுமையாகப் பொய் கூறுகிறார். WRP இன் உள்-கட்சி சுற்றறிக்கைகள் எதிலும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினுடைய முன்னோக்குகள் பற்றிய தீர்மானம் வெளியிடப்படவில்லை. WRP இன் ஏமாற்றுகரமான வேலைக்கு வேர்க்கர்ஸ் லீக்கை அவர் குற்றம் சாட்டுவது, குறைந்த பட்சமாகக் கூறினாலும் வெறுப்பேற்றுகின்றது. அனைத்துலகக் குழுவிற்கு வந்த குழுக்களில் எதுவும், வேர்க்கர்ஸ் லீக்கில் இருந்து வந்திருந்த சகோதரக் குழு உட்பட, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் அளித்திருந்த ஆவணத்தை பார்க்கவில்லை; புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் 1982-84 காலத்தில் வேர்க்கர்ஸ் லீக் அளித்திருந்த ஆவணத்தை பார்க்காததுபோல்தான் இதுவும்.

மேலும், வேர்க்கர்ஸ் லீக்கும் மற்றைய அனைத்துலகக் குழுவின் பிரிவுகளும் அரசியலில் ரீதியாக கூட்டுழைக்க ஹீலி-பண்டா-சுலோட்டர் அனைத்துலகக் குழுவில் இருந்த காலத்தில் அனுமதிக்கப்படவே இல்லை. வேர்க்கர்ஸ் லீக் அளித்திருந்த தகவல்கள் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திடம் அக்டோபர் 1985க்கு முன்பாகவே கிடைத்திருந்தால், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், WRP உடன் கொண்டிருந்த பிரச்சினைகளுக்கான மூலகாரணம் பற்றி நல்ல முறையில் முன்கூட்டியே அறிந்திருக்க முடியும், வேர்க்கர்ஸ் லீக் அபிவிருத்தி செய்திருந்த அரசியல் நிலைப்பாட்டிற்கும் ஆதரவையும் கொடுத்திருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களுடைய கொள்கைகளின் குற்றம் சார்ந்த தன்மை பத்தாம் காங்கிரசிற்கு பின் இன்னும் வெளிப்படையாக தெரிந்தது. பொருள்சார் நலன்களை பெறுவதற்காக WRP காட்டிக் கொடுத்தவர்கள் தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் ஒவ்வொரு அரசியல் வலுவற்ற தன்மையையும் நன்கு அறிந்து, சிங்களம் பேசும் தொழிலாளர்களை மற்றும் விவசாயிகளை ஜெயவர்த்தனாவின் இனவாத சர்வாதிகாரத்தின் கைக்கூலிகள் என அழைத்துத் தாக்குமாறு தூண்டிவிட்டிருந்தனர். ஏகாதிபத்திய பிரிட்டனில் இருக்கும் குழுவில் இருந்து வரும் இந்நடைமுறை, உறுதியாக ஒரு தீய உளப்பாங்கைத்தான் காட்டுகிறது. ஒடுக்கப்பட்டுள்ள மக்களில் ஒரு பிரிவை மற்றொன்றுக்கு எதிராகத் தூண்டிவிடும் ஹீலியின் முயற்சிகள் ஒரு வெறித்தனமான மட்டத்தை அடைந்து, தமிழர்கள் குழு ஒன்று நாட்டின் வடமத்திய மாகாணத்தில் உள்ள அனுராதபுர பகுதியில் இருக்கும் விவசாயிகள்மீது தாக்குதலை நடத்தியதில் காண முடியும். News Line, மே 16, 1985ல் இந்தத் தாக்குதல் பற்றிப் பெருமையுடன் உரைத்து, இன்னும் அத்தகைய தாக்குதல்கள் வேண்டும் என்ற கருத்தையும் வெளியிட்டது:

"வியாழனன்று, வட மத்திய மாகாண நகரமான அனுராதாபுரத்தை தாக்கிய தமிழ் விடுதலை கெரில்லாக்களை கண்டு பிடிக்க, இலங்கைவின் இராணுவப் படைகள் நேற்று ஒரு தரைவழி, வான்வழித் தேடுதலை காட்டுப்பகுதிகளில் நடத்தின.

"புலிகள் நகரத்திற்குள் இரு பஸ்களில் வந்து, இலங்கை இராணுவீரர்கள் போல் வேடமணிந்து, வியாழனன்று அதிகாலை தெருக்களில் கண்மூடித்தனமாக சுட்டனர். ஐந்து பௌத்த விகாரைகள் தாக்குதலுக்கு உட்பட்டன என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

"புலிகள் சிங்களவர்கள் பெரும்பான்மையான வாழும் ஒரு நகரத்தின்மீது பெரிய அளவில் தாக்குவது இது முதல் தடவையாகும்; அவர்கள் வட மேற்கு மாநிலத்தில் இருக்கும் ஆனமடுவாவையும் தாக்கினர்.

"இந்த இரு பகுதிகளும் சிங்கள முதலாளித்துவ ஆட்சியான ஜனாதிபதி ஜூனியஸ் ஜெயவர்த்தனாவின் வலுவான கோட்டைகளாகும்.

"தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) இப்பகுதியை தாக்கியது கிழக்கு மாகாண பகுதியில் தமிழ் மற்றும் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் ஆட்சியால் ஒழுங்கு செய்யப்பட்ட இரத்தம் தோய்ந்த தாக்குதலுக்கு பதிலடியாகும்."

மே 17ம் தேதி News Line மீண்டும் கூறியது: "அரசாங்க சார்புடைய சிங்கள பெரும்பான்மையான இடத்தில் இது முதல் மிகப் பெரிய ஊடுருவல் ஆகும்."

தமிழ் குழுவால் நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு மிருகத்தனமான இராணுவ அடக்குமுறை பற்றிய உண்மையான வெறுப்புணர்வில் இருந்து விளைந்தது என்றுகூட புரிந்து கொள்ள முடியும். ஆனால் அதற்காக இது நியாப்படுத்தப்பட முடியாதது ஆகும்: தனக்குத்தான் புலனாகியிருக்கும் ஒரு வழிவகையில் ஒரு கொள்ளையன் ஒடுக்கப்பட்ட பிரிவு ஒன்றை மற்றொன்றின்மீது தூண்டிவிடுவது பற்றி ஏதும் தவறில்லை எனக் கருதக்கூடும். இவ்விதத்தில் காலனித்துவ காலத்தில் இருந்து நிலைமையில் முன்னேற்றம் இல்லாத மற்றும் இலங்கைவின் மிகப் பிற்பட்ட பகுதிகளில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் விவசாயிகள், News Line இன் கருத்தின்படி, "இனவாத சிங்கள முதலாளித்துவ ஆட்சியின் வலுவான கோட்டைகள்" என்று ஆகின்றன. இத்தகைய விதத்தில் முற்றிலும் இழிந்த விதத்தில் அவற்றைக் காட்டுவது, மேற்கூறிய நிகழ்வுகளுக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பு இப்பகுதி ஒடுக்கப்பட்ட மாணவர்கள் பல்கலைக் கழகத்தில் போலீசார் தங்கள் சக மாணவர்களை தாக்கி, ஒருவரை கொன்றதற்கு எதிராக ஒரு மிகப் பெரிய எதிர்ப்பை வெளிப்படுத்தியற்காக போலீசாரின் மிருகத்தனத் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

ஹீலியின் News Line மார்க்சிச-விரோத மொழியைக் கையாண்டது; ஏனெனில் மார்க்சிஸ்ட்டுக்கள் ஒரு பொழுதும் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் இனவெறிக் குற்றச்சாட்டிற்கு உட்படுத்த மாட்டார்கள். தொழிலாளர்கள், விவசாயிகள் மீது சிங்கள முதலாளித்துவம் சுமத்திய பிற்போக்குத்தன போருக்கு அரசாங்கம்தான் காரணம் என்று புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் குற்றம் சாட்டியதுடன், அரசாங்கப் படைகள் தமிழர்களின் தாயகப் பகுதியில் இருந்து திரும்பப்பெறும் வரை இரு சமூகங்களின் தொழிலாளர்களினதும் விவசாயிகளினதும் வாழ்வு ஆபத்திற்கு உட்பட்டுள்ளது என்றும் விளக்கியுள்ளது.

அனுராதாபுர தாக்குதலை News Line பயன்படுத்தி தமிழ்-சிங்கள யுத்தம் என்ற பிற்போக்குத்தன கருத்ததாய்விற்கு வாதிட்டாலும், தமிழ் விடுதலை அமைப்புக்கள் இகழ்வுடன் இந்த வழிவகையை தமிழர்களுக்கு ஒரு பொறி என்று நிராகரித்தன. 1985 மே 17ம் தேதி, News Line அத்தகைய கருத்துக்களை பெருமையுடன் வெளியிட்ட தினத்திலேயே நான்கு விடுதலை இயக்கங்களான தமிழீழ விடுதலைப்ப புலிகள் (LTTE), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF), ஈழப்புரட்சி அமைப்பு (EROS), தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) ஆகியவை சென்னையில் இருந்து அனுராதாபுரத்தின் மீது நடந்த தாக்குதலைக் கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டன. அவை அறிவித்ததாவது:

"கீழே கையெழுத்திட்டுள்ள விடுதலை அமைப்புக்கள் இந்தக் கூட்டு அறிக்கையில் எங்களுடைய ஆயுதமேந்திய பிரிவுகள் எதுவும் இலங்கையில் உள்ள அனுராதாபுரத்தில் சாதாரண மக்களை படுகொலை செய்த நிகழ்வுகளில் எந்தவித தொடர்பையும் கொள்ளவில்லை என்று உறுதியாகக் கூறுகிறோம்.

"இறந்தவர்களுக்கும் காயமுற்றவர்களுக்கும் ஆழ்ந்த பரிவுணர்வை தெரிவித்துக் கொள்ளுகையில், இந்த அர்த்தமற்ற வன்முறையையும் கடுமையாகக் கண்டிக்கிறோம்.

"நிரபராதிகளான சிங்கள மக்களை எங்களுடன் ஒரே நாட்டில் வாழ்பவர்களாக, இலங்கையின் பாசிச ஆட்சியின் இரக்கமற்ற அடக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றிற்கு உட்பட்டிருப்பவர்களாக நாங்கள் கருதுகிறோம்.

"எங்களுடைய பரிவுணர்வும் ஒற்றுமை உணர்வும் எப்பொழுதும் சிங்கள தேசிய இனத்தின் உழைக்கும் மக்களுடன் இருக்கும்; அவர்கள் சர்வாதிகார இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான எங்களுடைய போராட்டத்தில் புரட்சிகர நண்பர்கள் ஆவர்.

"நிரபராதியான சிங்கள குடிமக்கள் படுகொலை பற்றி நாங்கள் எங்கள் அதிர்ச்சியையும், கடும் வெறுப்பையும் தெரிவித்துக் கொள்ளுகையில், பெருகி வரும் அரச பயங்கரவாதம் மற்றும் இனப் படுகொலைதான் இந்த வன்முறை நிகழ்விற்குக் காரணம் என்றும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

"இலங்கை அரசாங்கம் இழிந்த மூலோபாயமான கூட்டுத் தண்டனை என்பதை புரட்சிகர ஆயுதமேந்திய விடுதலை இயக்கத்தின் போராட்டத்திற்கு விடையிறுப்பு என்று ஏற்று, சாதாரண தமிழ் பொதுமக்கள் மீது இரக்கமற்ற பதிலடிகள் கொடுத்தல் என்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

"இராணுவப் படைகள் மீது நடத்தப்படும் ஒவ்வொரு கெரில்லாத் தாக்குதலுக்கும் நிரபராதியான தமிழர்கள்மீது மிருகத்தனமான தாக்குதல் என்ற விடையிறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

"இத்தகைய கூட்டுத் தண்டனை ஜூலை 1983 இன அழிப்பில் ஸ்தூலமான வடிவத்தை எடுத்துகொண்டு, இன்றும் குறையாமல் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கொலைசெய்யப்படல், படுகொலைகள், தமிழ் மக்களுடைய சொத்துக்கள் பரந்த அளவில் அழிக்கப்படுதல் என்று தொடர்வதுடன், எமது மக்களுக்கு பொறுத்துக் கொள்ள முடியாத அளவிற்கு மிகக் கடுமையான சட்டங்களும் சுமத்தப்பட்டுள்ளதுடன் இணைந்துள்ளன.

"இந்த அரச பயங்கரம் மற்றும் இனப் படுகொலை கடந்த சில நாட்களில் இணையில்லாத கொடூரத்தை அடைந்துள்ளன; கூட்டு தண்டனைகள் பொறுத்துக் கொள்ள முடியாமலும், உணர்வுகள் கட்டுப்பாட்டை மீறியும் செல்லுகின்றன; இவை ஒரு சில தீவிரவாத பிரிவினரை சிங்கள குடிமக்கள்மீது பதிலடி கொடுக்க தூண்டியிருக்கக்கூடும்.

"இத்தகைய தவறான போக்குடைய வன்முறையை நாங்கள் கண்டித்தாலும், இலங்கை அரசாங்கம்தான் இந்த வன்முறை விரிவாக்கத்திற்கு காரணம் என்று நாங்கள் குற்றம் சாட்டுகிறோம்...

"சிங்கள மக்களை அரசாங்கத்தின் இந்த ஆபத்தான இனப்படுகொலை மூலோபாயங்களில் இழுக்கப்பட்டுவிடாமல் இருக்குமாறு முறையீடு செய்கிறோம்; அது இன்னும் கூடுதலான வகையில் நிரபராதியான தமிழர்கள் மற்றும் சிங்களர்களின் வாழ்வு, சொத்து என்று இரண்டையும் அழிக்கத்தான் செய்யும்."

தமிழ் விடுதலை இயக்கங்களினால் வெளியிடப்பட்ட இத்தகைய கோட்பாட்டு ரீதியான அறிக்கையின் ஒளியில், ஹீலி, மற்றும் WRP ஆகியோரின் கொள்கை முற்றிலும் எதிர்ப்புரட்சி தூண்டுதலாக தமிழ் மற்றும் சிங்களத் தொழிலாளர்களுக்கு அமைகிறது என்பது அம்பலப்படுத்தப்படுகிறது. ட்ரொட்ஸ்கிசத்தை இழிவிற்கு உட்படுத்திய நிலையில், அவர்கள் நனவுடன் உலகத் தொழிலாள வர்க்கத்தினரிடையே ஐக்கியமின்மையை ஏற்படுத்த முற்படுகின்றனர்; அதையொட்டி ஹீலியும் அவருடைய ஏகாதிபத்திய எஜமானர்களும், அதையொட்டி வரக்கூடிய பேரிடர்களால் ஒரு அரசியல் அறுவடையை பெறலாம் என்றும் நினைக்கின்றனர்.

WRP ஏன் இத்தகைய முற்றிலும் கொள்கையற்ற, துரோகத்தனமான தந்திர உத்திகளில் ஈடுபட்டது? இதற்குக் காரணத்தைத் தேடி அலைய வேண்டியதில்லை. உலக சோசலிசப் புரட்சி முன்னோக்குகளை WRP முற்றிலும் கைவிட்டதின் மிக தீமை மிகுந்த வெளிப்பாடுகளில் இதுவும் ஒன்று ஆகும். இலங்கையில் இனப் படுகொலைப் போர் என்று தமிழ் தேசத்திற்கு எதிராக ஸ்தூலமான வடிவெடுத்துள்ள முதலாளித்துவக் காட்டுமிராண்டித்தனத்திற்கு முடிவு கட்டக்கூடிய, நான்காம் அகிலத்தின் கீழ் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் திறனை அது நிராகரித்துள்ளது. ஹீலி-பண்டா-சுலோட்டர் தலைமை 1964ல் லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக் கொடுப்பிற்கு முன் விபச்சாரம் செய்வதன் மூலம் இது வெளிப்படுகிறது.

ஒடுக்கப்பட்டுள் நாடுகளில் ஹீலி மற்றும் பண்டாவின் முன்னோக்கில் தொழிலாள வர்க்கத்தின் செயற்பாட்டிற்கு இடமில்லை. தொழிலாள வர்க்கத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள இகழ்வின் முழுத் தன்மை முதலாளித்துவ அரசாங்கங்களிடம் இருந்து ஆதரவை நாட வைத்துள்ளதை தவிர பின்தங்கிய நாடுகளில் முதலாளித்துவ அரசுகளை தக்க வைக்க ஆதரவைக் கொடுக்கவும் வைத்துள்ளது; ஏனெனில் அவர்கள் சாதாரண மக்களுக்கு வேறு எவ்வித முன்னேற்றப் பாதையும் இல்லை என்று கருதுகின்றனர். தொழிலாள வர்க்கம் எங்கு தேசிய முதலாளித்துவத்தின் பிடியை உடைக்க முற்பட்டாலும், ஹீலியும், பண்டாவும் தீய முறையில் அதற்கு எதிராகத் திரும்பியது. இது WRP இன் இழிந்த ஆதரவு பெற்ற ஹுசைன் ஆட்சி ஈராக்கிய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு மரணதண்டனை கொடுத்ததில் வெளிப்பட்டது. இவ்விதத்தில் WRP இன் அரசியல் வழிவகை அரைக் காலனித்துவ நாடுகளில் ஸ்ராலினிசத்தில் இருந்து வேறுபடாத வகையில்தான் இருக்கிறது.

தமிழ் தேசிய விடுதலை போராட்டம் பற்றி WRP முற்றிலும் அணுகமுடியாத நிலையில்தான் உள்ளது; அதனால் எந்த விடுதலைப் போராட்டம் பற்றியும் இது "தொழிலாளர்களுக்கான வர்க்கப் போராட்ட கண்ணோட்டத்தில் அணுகமுடியாது உள்ளது". (லெனின்) இதன் முன்னோடி அமைப்பான SLL 1972ல் வங்க விடுதலைப் போராட்டத்தை, வங்கதேச அரசு என்ற வடிவமைப்பில் தேசிய முதலாளித்துவத்தின் மேலாதிக்கத்தை நிறுவுதலுக்கு தடைகூடாது என்று செயல்பட்டது போலவே, இன்றும் WRP ஆனது மக்கள் போராட்டம் தமிழ் முதலாளித்துவம் காட்டும் ஒரு வரம்பிற்குள் நின்றுவிட வேண்டும் என்று விரும்புகிறது. ஹீலியோ, பண்டாவோ ஒரு போதும் தேசிய இனப் பிரச்சினைகளில் லெனினுடைய கொள்கையை புரிந்து கொள்ளவில்லை.

"ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதலாளித்துவம் ஒடுக்குபவருக்கு எதிராக போராடுகையில், ஒவ்வொரு நேரத்திலும், பிறரை விடக் கூடுதலாக நாம் அதற்கு ஆதரவு கொடுக்கிறோம்; ஏனெனில் ஒடுக்குமுறைக்கு மிக நம்பிக்கையுடன், உறுதியாக நாம் விரோதிகள் ஆவோம். ஆனால் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதலாளித்துவத்தை பொறுத்த வரையில் அது தன்னுடைய முதலாளித்துவ தேசியத்திற்காக நிற்பதை நாம் எதிர்ப்போம். ஒடுக்கும் தேசிய இனத்தின் வன்முறை சலுகைகளுக்கு எதிராக நாம் போராடுவோம்; ஆனால் எந்த விதத்திலும் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதலாளித்துவத்தின் சலுகைகளுக்காக முனைவுகளை நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம்(Collected Works, Vol.20, pp.411-12)

ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டர் ஆகியோரின் கொள்கை லெனின் கோடிட்டுக் காட்டியுள்ள மேலே உள்ள கொள்கைக்கு முற்றிலும் எதிர்த்தன்மை உடையது ஆகும். பிரிட்டனில் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் திரைக்குள், இவர்கள் சலுகைகளுக்கான விழைவுகளை ஏற்றுக் கொள்ளுவது மட்டும் இல்லாமல், இந்தச் சலுகைகள் ஈரான், ஈராக், லிபியா போன்றவற்றில் இருக்கும் தேசிய முதலாளித்துவத்திற்கும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இந்த தேசிய முதலாளித்துவ வர்க்கங்கள் தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதைத்தான் ஏகாதிபத்தியம் நம்பியுள்ளது; ஒடுக்கப்பட்டுள்ளோரிடையே ஐக்கியமின்மை என்ற இழிந்த தன்மையை தோற்றுவிப்பதில் ஆர்வம் கொண்டிருப்பதை போலத்தான் இதுவும். முதலாளித்துவ சகாப்தத்தில் மத்தியவாதத்தின் முக்கிய பங்கு இதுதான்.

1985 ஜூலை-அக்டோபர் பெரும் சரிவு நோக்கி செல்லமுன், WRP ஒரு மிகப் பெரிய அளவில் வர்க்க சக்திகளுக்கு இடையேயான போராட்டத்தை எதிர்கொள்கையில் மத்தியவாதத்தின் விதி எப்படி இருக்கும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணத்தை கொடுத்தது. ஜூல் 1985ல் இந்திய அரசாங்கம் தமிழ் விடுதலை போராளிகளிடம் போர்நிறுத்தத்தை திணித்து, அவர்களை திம்பு, பூட்டானில் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ள கட்டாயப்படுத்தியது. அவர்கள் இந்த மிரட்டலை எதிர்த்தபோது, இந்திய அரசாங்கம் சாட்டையை கையில் கொண்டு, இரண்டு தமிழ் தலைவர்களை இந்தியாவில் இருந்து நாடு கடத்தியது. இந்திய தொழிலாள வர்க்கம் பரந்த வர்க்க நடவடிக்கையை எடுத்து, இலங்கையின் தொழிலாள வர்க்கமும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்த பின்னர்தான், அவர்கள் மீண்டும் இந்தியாவிற்கு செல்ல முடிந்தது. தமிழ் அமைப்புக்கள் இத்தகைய இலங்கை மற்றும் இந்தியாவின் ஆளும் வர்ககங்கள் திணிக்கும் வழிவகையான நிபந்தனையற்ற சரணாகதியை நிராகரிக்க உதவ முடிந்தது.

ஒரு சில வாரங்களுக்கு முன்புதான் சிங்கள தொழிலாளர்களையும் விவசாயிகளையும் தாக்குமாறு தமிழர்களை வலியுறுத்தியிருந்த ஹீலியும் பண்டாவும், இந்திய முதலாளித்துவத்தின் இந்த துரோக நடவடிக்கையை எதிர்பார்க்காததுடன், திடீரென முற்றிலும் எதிரிடையாக கருத்தை முடிவாகக் கூறினர். ஆடம்பர சொற்கள் நிறைந்த, அரசியலில் தற்குறித் தன்மை நிறைந்த இரு பக்க அறிக்கை ஒன்று News Line ல் 1985 ஆகஸ்ட் 26 அன்று வெளியிடப்பட்டது; அது வேண்டுமென்றே இலங்கையில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் இருப்பது பற்றிக் கூட குறிப்பிடவில்லை. WRP கீழ்க்கண்டவாறு கூறியது:

"அவர்கள் (தேசிய விடுதலை இயக்கங்கள்) இப்பொழுது முதலாளித்துவ சிங்கள-பௌத்த அரசாங்கத்திற்கு எதிராக (முதலாளித்துவ அரசுக்கு எதிராக அல்ல) சிங்கள தொழிலாள வர்க்கத்திடமும் மற்றும் விவசாயிகளிடமும், முதலாளித்துவ இந்து அரசுக்கு எதிராக (இதன் பொருள் எதுவாயினும்) ஐக்கியப்பட்ட இந்திய மக்களினை நோக்கியும் இப்பொழுது கட்டாயம் திரும்ப வேண்டும்.

"தேசிய விடுதலைப் போராட்டங்களின் விருப்புகள் அடிப்படையில் சோசலிசத் தன்மை கொண்டவை; இந்த நோக்கங்கள் தங்கள் உண்மையான சமூக உள்ளடக்கத்துடன் தொடர்பு இல்லாமல் அடையப்பட முடியாதவை."

தமிழ் தேசிய விடுதலை என்ற நோக்கத்திற்காக மட்டும் தோற்றுவிக்கப்பட்ட அமைப்புக்கள் எவ்வாறு இந்தியாவிலும், இலங்கைவிலும் தொழிலாள வர்க்கத்தையும் விவசாயிகளையும் அந்தந்த நாட்டில் இருக்கும் முதலாளித்துவ அரசாங்கத்திற்கு எதிராகத் திரட்ட முடியும்? அதற்கான விடை அந்த அறிக்கையில் கொடுக்கப்படவில்லை. சுய நிர்ணயத்தை அடைவதற்கான தமிழ் உரிமையை உத்திரவாதம் செய்ய தொழிலாள வர்க்கத்தைத் திரட்டுதல் பற்றிய கருத்தாய்வு ஏதும் WRP க்கு இல்லை என்ற நிலை மீண்டும் அறிக்கையின் அடுத்த பகுதியில் போராட்டத்தின் "உண்மையான சமூகப் பொருளுரை" என்பதை விளக்குகையில் வெளிவருகிறது:

"இதன் பொருள் இரு தேசிய முதலாளித்துவ வர்க்கங்களும் பிரித்து ஆளுவதற்கும் தீய வகுப்புவாத விரோதத்தை நீண்டகாலம் பேணுவதற்கும் பல நூற்றாண்டுகளாக சுரண்டி வந்துள்ள சாதி, மத தளைகளை தகர்க்க வேண்டும் (!) என்பதாகும்.

"இலங்கையில் மட்டுமில்லாமல் இந்தியத் துணை கண்டம் முழுவதும் தேசியப் போராட்டத்தில் ஒரு சமூகப் போராட்டத்தையும் விரிவாக்கம் செய்தால்தான், இலங்கை தமிழர்கள் தங்கள் மனித சமுதாயம் காக்கப்படுவதற்கான பாதையைத் திறந்து கொள்ள முடியும்; அது பெருகிய முறையில் முதலாளித்துவக் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக சர்வதேச அளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ந்து வரும் எதிர்ப்பின் ஒரு பகுதியாக இருக்கும்."

இவை அனைத்தும் புரட்சிகரமாகத்தான் கேட்கும். ஆனால் போலித்தன முற்போக்கு வெற்றுச் சொற்களை நீக்கினால், அது முற்றிலும் மாறுபட்ட ஒன்றை வெளிப்படுத்துகிறது: வர்க்கப் போராட்டம் பற்றிய தீவிர வினாக்களை எதிர்கொள்ளுகையில் மக்களை திருப்தியடையச் செய்யும் கோஷங்களை உரக்கக் கூவுவதைத்தவிர வேறெதுவும் செய்ய முடியாத குட்டி முதலாளித்துவ தீவிரப் போக்கினரின் முழு இயலாத்தன்மையை அது காட்டுகிறது.

"போராட்டத்தின் உண்மையான சமூக உள்ளடக்கம் ...சாதி, மத தளைகளை தகர்த்தல்" ஆக உள்ளதே தவிர ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ சொத்தை பறிமுதல் செய்வது அல்ல!

ஏற்கனவே போரில் ஈடுபட்டுள்ள தமிழ் விடுதலை இயக்கங்களுக்கு தேசிய ஒடுக்குமுறையின் தளைகளை உடைக்கவும் என்று பரிந்துரைக்கப்படுவதில் பொருள் என்ன? இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் இருக்கும் சாதி, மத தளைகளை உடைப்பதற்கான போராட்டம் நடத்த வேண்டுமா? ஒன்றில் இருந்து மற்றொன்றிற்கான மாற்றத்தை அவை எவ்விதம் அடைவர்? பழைய ஸ்ராலினிச மருந்து புதிய பதிப்பில் வந்துள்ளது என்பதை தவிர இது வேறு ஒன்றும் அல்ல; முதலில் தொழிலாள வர்க்கம் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு போராட்டத்திற்கு கீழ்ப்படுத்தப்பட வேண்டும், அனைத்துவித நிலப்பிரபுத்துவ தளைகள் அகற்றப்பட்ட பின்னர்தான் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்திற்கான முன்னோக்கு ஏதும் முடியும். எனவே தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்புவது என்பது, முதலாளித்துவ ஜனநாயகவாதிகள், விவசாயி தீவிரப்போக்கினர் ஆகியோருக்கு அது அடிபணிந்து இருக்க வேண்டும் என்பதாகும்.

ஏகாதிபத்தியத்துடனான ஒத்துழைப்பில் ஈவிரக்கமற்ற சுரண்டலை மேற்கொள்வதில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படாது வைத்திருக்கும் நோக்கத்திற்காக உள்ளூர் முதலாளித்துவ வர்க்கத்தால் சாதி, மத தேசிய பிளவுகள் நீண்டகாலமாய் பேணப்பட்டுவருகின்றன மற்றும் இந்த தளைகள் பாட்டாளி வர்க்க போராட்டத்தின் மூலம்தான், அதாவது முதலாளித்துவத்தின் உடைமைகளை அபகரித்து ஒரு தொழிலாள வர்க்கத்தின் சர்வாதிகாரம் நிறுவப்படுவதின் மூலம்தான் வெற்றிகரமாக சவால் செய்யப்பட முடியும் என்பதை WRP நீண்டகாலமாய் மறந்து விட்டிருக்கின்றது. அந்த நோக்கத்தை அடைவதற்கு, முதலாளித்துவத்தால் தோற்றுவிக்கப்பட்ட இப்பிளவுகளை அகற்றுவதற்கு, தொழிலாள வர்க்கம் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். இவ்விதத்தில் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் உரிமையை நிலைநிறுத்துவதற்கான போராட்டம், எந்த குறிப்பிட்ட மொழி அல்லது மதத்தின் சலுகைகளை அகற்றுவதற்கான போராட்டம், முதலாளித்துவத்தை தூக்கி எறிந்து தன்னுடைய வர்க்க ஆட்சியை கொண்டுவருவதற்காக தொழிலாள வர்க்கத்தை புரட்சிகரமாக அணிதிரட்டும் ஒரு வேலைத்திட்டத்தின் பகுதியாகிவிடும்.

ஆனால், WRP வல்லுனர்களின் படி, "அரைக் காலனித்துவ முதலாளித்துவ அரசாங்கள் சவாலுக்கு உட்படுத்தப்படாத வகையில், தொழிலாள வர்க்கமும் அதிகாரத்திற்கான போராட்டத்தில் தலைமை தாங்க முடியாது இருக்கும்..."

இந்த அசாதாரண உறுதிப்பாடு WRP தலைமையில் இருக்கும் முற்றிலும் அழுகிய தன்மையை வெளிப்படுத்துகிறது. அவர்களை பொறுத்தவரையில், தொழிலாள வர்க்கம் "அதிகாரத்திற்கான போராட்டத்திற்கு தலைமை தாங்கும்" திறனை அடைய வேண்டும் என்றால், வேறு எவரோ அரை காலனித்துவ முதலாளித்துவ ஆட்சிக்கு சவால் விடவேண்டும். இந்த அறிக்கையில் இருந்து அரசாங்கத்திற்கு எவர் சவால் விடுவர் என்பது தெளிவாகத் தெரியவில்லை; இந்த அறைகூவல் அரசியல் ரீதியாக எத்தன்மை கொண்டிருக்கும் என்பதும் தெரியவில்லை. அரசையே தகர்த்தல் என்பது இதன் பொருளா? அப்படியானால், தொழிலாள வர்க்கம் தேவைப்படும் அதிகாரத்திற்கான போராட்டத்திற்கு தலைமை தாங்கும் திறன் பெறும் வரை எவர் அரசு அதிகாரத்தை செலுத்துவர்?

ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டரால் அறிமுகப்படுத்தப்படும், இத்தகைய சொற்ஜாலங்கள், தொழிலாள வர்க்க முன்னணிப்படையை குழப்பவும், தடம்மாறச் செய்யவும்தான் உதவும். மேலும், ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டர் ஆகியோர் தொழிலாள வர்க்கம் அதிகாரத்திற்கான போராட்டத்திற்கு தலைமை தாங்க திறனின்மையின் வேரையும் "கண்டுபிடித்திருந்தனர்" என்பது ஒரு முதலாளித்துவ அரசு உள்ளது என்ற உண்மையையும் "கண்டுபிடித்தது போல்தான்! இடைமருவு வேலைத்திட்டத்தின் முக்கிய கருத்தாய்வான, பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர தலைமை பற்றிய நெருக்கடி இவ்விதத்தில் ஜன்னல் வழியே நெறியற்று தூக்கி எறியப்படுகிறது.

ட்ரொட்ஸ்கிசத்தை இழிவுபடுத்த இந்த அபத்த களஞ்சியம் போதாது என்பது போல், WRP துரோகிகள் மேலும் அறிவிப்பதாவது: "நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு மற்றும் WRP என்ற அதன் பிரிட்டிஷ் பகுதி ஆகியவைதான் இந்த உலக சோசலிசப் புரட்சியில் ட்ரொட்ஸ்கிச முன்னோக்கிற்கு போராடுகின்றன; இலங்கை தமிழர்களையும் அவர்களுடைய போராளிகளையும் எமது வேலைத்திட்டத்தை அவசரமாக படிக்குமாறு வலியுறுத்துகிறோம்."

இந்த அறிக்கை இந்திய மற்றும் இலங்கை தொழிலாளகளுக்கு கூட முறையீடு செய்யவில்லை; மிகுந்த நனவுடன் புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் பற்றி குறிப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. அதுதான் 1985ல் WRP யின் சகோதரக் கட்சியாக இருந்தது. ஹீலியின் சிறப்பு வகை "உலக சோசலிச புரட்சி"யில், தொழிலாள வர்க்கம், அதன் ட்ரொட்ஸ்கிச முன்னணிப்படைக்கு எந்தப் பங்கும் இல்லை! WRP இன் தலைமை தன்னுடைய ஒருதலைப் பட்ச மாற்றங்கள், நீக்கங்கள், வர்க்க சக்திகளை அகற்றுதல், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு ஏற்ப தொழிலாள வர்க்கத்தில் இருந்து நகர்ந்து மற்றொரு சமூக அடுக்கைப் பிரதிபலிக்கும் வகையில் இருந்தல், என்ற விதத்தில் திமிர்த்தனமாக நடந்து கொண்டு வந்துள்ளது; பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின் அணுகுமுறையான தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழை விவசாயிகள் தம் சொல் கேட்க வேண்டும் எனக் கூறியதற்கு துணை நின்றுள்ளது.

ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டர் ஆகியோர் தமிழ் விடுதலைப் போராட்டத்தில் கொண்டிருந்த வரலாற்றுச் சான்றுகளை இப்படி ஆராய்ந்த பின் தெளிவாகத் தெரிவது போல், இந்த அயோக்கியர்கள் குழு ட்ரொட்ஸ்கிசவாதிகள் என்று போலித் தோற்றம் அணிந்து உலவி முறையாக தமிழர்களையும் சிங்கள தொழிலாளர்களையும் ஒரேமாதிரி காட்டிக் கொடுத்துள்ளனர் என்பதும் தெளிவாகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, வெற்றிபெறாவிட்டாலும், அவர்கள் இலங்கையில் இருக்கும் ஒரே கட்சி, நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் முன்னோக்கிற்குப் போராடும் கட்சியான புரட்சி கம்யூனிஸ்ட் கழகத்தை அழிக்க வேண்டும் என்பதற்கு முழு நனவுடன் வேலை செய்தனர்.

1972ல் இருந்து 1986 வரை அவர்கள் தங்கள் நிலைப்பாடுகளை இலங்கை அரைக் காலனித்துவ முதலாளித்துவ அரசை உயர்த்திப் பிடிக்கும் தங்களின் நிலைப்பாட்டில் இருந்து 1980ல் தமிழ் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான இனவாத எதிர்ப்புடன் ஒன்றிய வகையில், தமிழ் தொழிலாளிகளை சிங்கள தொழிலாளர்களுக்கு எதிராக தூண்டிவிட்டது முதல் இந்தியா, இலங்கை மற்றும் தமிழ்த்தாயகமான ஈழத்தில் இருக்கும் தொழிலாளர்களை தேசிய முதலாளித்துவத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் என்பது வரை மாற்றிக் கொண்டுள்ளனர்.

புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் மீதான சமீபத்திய அரச தாக்குதலில், WRP யின் இரு குழுக்களும் --ஹீலி மற்றும் சுலோட்டர்-பிரானி பிரிவுகள்-- கொண்டிருந்த தீய பங்கு வர்க்க துரோக வரலாற்றில் இருந்து விளைவதாகும்; இது நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவால் உணரப்பட்டு, எதிர்த்து போராடப்பட்டது. தாங்கள் ட்ரொட்ஸ்கிசத்தையும் நான்காம் அகிலத்தையும் ஏதோ ஒருவகையில் பிரதிபலிக்கிறோம் என்று கூறும் இந்த துரோகிகளை நிராகரிக்குமாறு பிரிட்டனிலும், உலகெங்கிலும் இருக்கும் தொழிலாளர்களிடம் கோருகிறோம்.

பிரிட்டனில் இருக்கும் ஒரே ட்ரொட்ஸ்கிச கட்சி நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் பிரிட்டிஷ் பகுதியான இன்டர்நேஷனல் கம்யூனிஸ்ட் கட்சியாகும்; இது ஹீலி, பண்டா மற்றும் சுலோட்டர் ட்ரொட்ஸ்கிசத்தை காட்டிக் கொடுத்த போராட்டத்தில் வடிவெடுத்தது. ஹீலி, சுலோட்டர் தலைமையிலான தொழிலாளர் புரட்சிக் கட்சிகள் என்று அழைக்கப்படுபவைகளை பொறுத்தவரையில், அவை ஏகாதிபத்தியத்தின் இரண்டாம் பட்ச முகவாண்மை அமைப்புக்கள்தான்.

Loading