கீர்த்தி பாலசூரியா

கீர்த்தி பாலசூரியா (நவம்பர் 4, 1948 - டிசம்பர் 18, 1987) இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (RCL) தேசிய செயலாளராகவும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்குழுவின் (ICFI) முன்னணி உறுப்பினராகவும் இருந்தார். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ட்ரொட்ஸ்கிசத்தின் மிகச் சிறந்த பிரதிநிதிகளில் ஒருவராவர்.

ஒரு இளைஞனாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சிதலைமையிலான முதலாளித்துவ கூட்டணி அரசாங்கத்தினுள், மிஷேல் பப்லோ, எர்னஸ்ட் மண்டேல் தலைமையிலான சர்வதேச செயலகத்துடன் இணைப்பைக் கொண்ட லங்கா சம சமாஜக் கட்சி (LSSP) இன் 1964ம் ஆண்டு நுழைவதைஎதிர்த்தவர்களுடன் பாலசூரியா தன்னை இணைத்துக் கொண்டார். LSSP இன் பாரிய காட்டிக்கொடுப்பு இலங்கையிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்திற்கு பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தியது.

1968 ஆம் ஆண்டில், தனது 19 வயதில், கீர்த்தி புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின்ஸ்தாபக மாநாட்டால் அதன் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். RCL தன்னைஉடனடியாகவே ICFI உடன் இணைவதற்கு முயன்றது.

1985-86ல் பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான பிளவினூடாக, ICFI இன் மீது ட்ரொட்ஸ்கிச கட்டுப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வெற்றிகரமான போராட்டத்தில் கீர்த்தி ஒரு தீர்க்கமான பங்கைக் கொண்டிருந்தார்.

டிசம்பர் 18, 1987 காலையில் அவரது அகால மரணம் மிகவும் துன்பகரமாக ஆகியது. அவரது 39 வது பிறந்தநாளுக்கு ஒரு மாதத்திற்குப் பின்னர்அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

வாசகர்கள் இந்த பக்கத்தில், தோழர் பாலசூரியாவின் வாழ்க்கை மற்றும் அவரது போராட்டங்களை கௌரவிக்கும் மற்றும் 1970 கள் மற்றும் 1980 களில் கீர்த்தி எழுதிய முக்கிய அறிக்கைகள் மற்றும் கட்டுரைகளையும் காணலாம்.

கீர்த்தி பாலசூரியா
அனைத்துலகக் குழுவின் ஆவணங்களில் இருந்து
சமீபத்திய கட்டுரைகள்