விக்கிலீக்ஸ் வெளியீட்டாளரான ஜூலியன் அசான்ஜ் கைது செய்யப்பட்டமைக்கு உலகளாவிய சீற்றம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வியாழக்கிழமை காலை லண்டனில் உள்ள ஈக்வடோரிய தூதரகத்தில் பத்திரிகையாளர் மற்றும் விக்கிலீக்ஸ் வெளியீட்டாளருமான ஜூலியன் அசான்ஜ் கைது செய்யப்பட்ட பின் சீற்றம் பெருகியுள்ளது. அவரது அரசியல் தஞ்சம் சட்டவிரோதமாக ஈக்வடோரிய ஜனாதிபதி லெனின் மொரேனோவால் இரத்து செய்யப்பட்டமையால், அசான்ஜ், தூதரகத்தில் இருந்து ஒரு பிரிட்டிஷ் பொலிஸ் குழுவால் இழுத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தூதரகத்திற்குள் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் அடைபட்டிருந்ததற்கு பின்னர், அசான்ஜ் இப்போது, இங்கிலாந்தின் சிறைச்சாலையில் ஒரு வருட சிறைத் தண்டனை மற்றும் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படல் ஆகியவற்றை எதிர்கொள்கிறார். நீதிக்குப்புறம்பான மரணதண்டனை பற்றிய ஐ.நா. சிறப்புப் பிரதிநிதி, ஆக்னஸ் கால்மார்ட், அசான்ஜை அகற்றுவதற்கான நடவடிக்கை மற்றும் அமெரிக்காவிற்கு அவர் அனுப்பப்படும் நடவடிக்கை என்பன அவரை "தீவிர மனித உரிமை மீறல்கள்" அபாயத்தில் தள்ளும் என எச்சரித்துள்ளார்.

அசான்ஜ் கைது செய்யப்பட்டமையைக் கண்டனம் செய்வதற்கும், அவரை விடுதலை செய்யக் கோரியும், அசான்ஜின் தாய்நாடான அவுஸ்ரேலியாவில் சோசலிச சமத்துவக் கட்சியால் சிட்னி மற்றும் மெல்பேர்னில் ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். சோசலிச சமத்துவக் கட்சியின் பேரணிகள் பேஸ்புக் வழியாக நேரடியாக ஒளிபரப்பப்பட்டதுடன், அவை ஒரு சில மணித்தியாலத்தினுள் ஆயிரக்கணக்கானோரால் பார்வையிடப்பட்டது. வாஷிங்டனில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்திற்கு வெளியிலும் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

"விக்கிலீக்ஸ் வெளியீட்டு நடவடிக்கைகளுக்கான திரு.அசான்ஜின் மீதான அமெரிக்காவின் எந்தவொரு குற்றச்சாட்டும், முன்னெப்போதும் நடைபெறாததும் அரசியலமைப்பிற்கு உட்படாததும் ஆகும். அத்துடன் மற்ற செய்தி நிறுவனங்களுக்கு எதிரான குற்ற விசாரணைகளுக்கும் வழிவகுக்கும் என அமெரிக்க குடியியல் சுதந்திரத்திற்கான யூனியனின் பேச்சு, தனியுரிமை மற்றும் தொழில்நுட்ப திட்டத்தின் இயக்குனர், பென் விஸ்னர் தெரிவித்தார். மேலும், வழக்கமாக பொதுமக்களின் நலனிற்கு தகவல் வழங்குவதற்காக வெளிநாட்டு இரகசிய சட்டங்களை மீறுகின்ற அமெரிக்க பத்திரிகையாளர்களுக்கு, ,அமெரிக்க இரகசிய சட்டங்களை மீறும் ஒரு வெளிநாட்டு வெளியீட்டாளரை பழிவாங்குவது ஒரு ஆபத்தான முன்னுதாரணமாக அமையும்” என்றும் அவர் தெரிவித்தார்.

வெளியீட்டாளரின் கைது "சட்டத்தின் விதிமுறை மற்றும் ஊடக சுதந்திர உரிமைகள் அனைத்தினதும் போலித்தனத்தை வெளிப்படுத்துகிறது" என்று சுயாதீன அமெரிக்க பத்திரிகையாளர் கிறிஸ் ஹெட்ஜஸ், எழுதினார். தூதரகம், ஈக்வடோர் அரசாங்கத்திற்கு உடந்தையாக இருந்து அசான்ஜை கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டது "மிகவும் அடிப்படை இயற்கை நீதிக்கு எதிரான குற்றங்கள்", மேலும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் ஒரு எச்சரிக்கை என்று அவுஸ்திரேலிய பத்திரிகையாளர் மற்றும் ஆவணதாரரான ஜோன் பில்ஜர் தெரிவித்தார்.

வியாழக்கிழமை, ஒரு பிரிட்டிஷ் நீதிமன்ற நீதிபதி, நீண்ட காலமாக வழக்குத்தொடுனர்களால் கைவிடப்பட்ட, சுவீடனில் பாலியல் தாக்குதலுக்கான பொய்யான குற்றச்சாட்டுகளால், அசான்ஜ் பிணையில் விடுவிக்கப்படும் நிலைமைகள் மீறப்படுவதாக குற்றஞ்சாட்டினார். அவரது தீர்ப்புத் திகதி இன்னும் முடிவாகவில்லை.

பின்னர், ஈக்வடோர் தூதரகத்தில் அடைக்கலம் பெற அசான்ஜை தள்ளிவிடக் கூடிய அச்சங்களை உறுதிப்படுத்திய ஒரு நடவடிக்கையில், ட்ரம்ப் நிர்வாகத்தால் அவரை இலக்காகக் கொண்ட குற்றவியல் குற்றச்சாட்டின் முத்திரைகளால், அவர் பிணையில் விடுவிக்கப்படும் நிலைமைகளை மீறியதற்காக சிறையிலடைக்கப்பட்டார். ஒரு வருடத்திற்கு முன்னர் மார்ச் 6, 2018 அன்று குற்றச்சாட்டுகள் வழக்கறிஞர்களால் தாக்கல் செய்யப்பட்டன.

"2010 ல் இருந்து ஜூலியன் அசான்ஜ் வழக்கிற்கு முகங்கொடுப்பார் மற்றும் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று நாங்கள் எச்சரித்தோம். துரதிஷ்டவசமாக, இன்று, நாங்கள் சரியான முறையில் நிரூபிக்கப்பட்டுள்ளோம்" என்று அசான்ஜின் வழக்கறிஞர், ஜெனிபர் ரொபின்சன், வியாழக்கிழமை பிற்பகல் பொலிஸ் காவலில் வைத்து அசான்ஜை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். "நான் இப்போதுதான் திரு. அசான்ஜை பொலிஸ் காவலில் சந்தித்தேன். தொடர் ஆதரவுக்கு, தனது ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்பினார். "அதனால் நான் உங்களிடம் சொல்கிறேன்" என்று கூறினார்.

அவர் ஒப்படைத்தல் விசாரணைக்காக அமெரிக்காவிற்குச் செல்ல வேண்டுமா என்பதை தீர்மானிப்பதற்காக, அசான்ஜ் இப்போது மே 2 வரை சிறையில் காத்திருக்க வேண்டும்.

கணனி மோசடி மற்றும் துஸ்பிரயோக சட்டத்தை மீறுவதில் கணினி ஊடுருவல் செய்வதற்கு சதித்திட்டத்திற்கு அமெரிக்க நீதித்துறையால் அவர் குற்றஞ்சாட்டப்பட்டார். செல்சீ மானிங்கிற்கு ஒரு பாதுகாப்பு அமைச்சகத்தின் கணினி வலையமைப்பு துறையின் இரகசிய தகவலை அணுகும்போது அவரின் அடையாளத்தை மறைக்க அனுமதிக்கும் ஒரு கடவுச்சொல்லை உடைக்க அசான்ஜ் முயன்றார், ஆனால் தோல்வி அடைந்தார் என்று கூறப்படுகிறது.

மானிங் மற்றும் விக்கிலீக்ஸுக்குள்ளான ஒரு தனிப்பட்ட நபர் “Ox” ஆகியோருக்கிடையிலான மற்றும் "அந்த நபர்", அசான்ஜ் என்று அரசாங்கம் கூறுகின்ற, அமெரிக்க அரசாங்கத்தின் வெளியிடப்படாத இணையக் கலந்துரையாடலின் பதிவுகளில் இருந்து குற்றச்சாட்டுகள் உருவாகின்றன. இந்த இரகசிய பதிவு உரையாடல்களின் அடிப்படையில், அசான்ஜ், மானிங் உடன் ஒரு குற்றவியல் சதித்திட்டத்தில் நுழைந்து "இரகசிய ஆவணங்களை கையகப்படுத்துவதற்கும் பரப்புவதற்கும் ஒத்துழைத்ததாக" அரசாங்கம் கூறுகிறது.

அசான்ஜ் மீதான குற்றச்சாட்டு "கசிவடைந்த செய்தி வெளியீட்டின் மீதான தாக்குதல் மற்றும் ஒரு கசிவடைந்த செய்தி வெளியீட்டாளரான ஒரு வெளியீட்டாளரை தண்டிக்க கிட்டத்தட்ட ஒரு பத்தாண்டு நீடித்த முயற்சியில் மிக சமீபத்திய செயல்......... அசான்ஜ் உண்மையில் ஒப்படைக்கப்பட்டால், அரசாங்கம் மேலும் குற்றச்சாட்டுகளை வழங்கலாம். அது அவ்வாறு செய்யக்கூடாது. நம்முடைய ஜனநாயகத்திற்கு அத்தியாவசியமான தகவல்களின் கசிவுகள் தகவல் சுதந்திரத்தின் ஓட்டத்தில் ஒரு முக்கிய பகுதியாகும். இரகசிய தகவலைப் பதிவு செய்வது உட்பட, கசிவடைந்த தகவல்கள், அமெரிக்க பத்திரிகைத் துறைக்கு முக்கிய பங்களிப்பு ஆகும்" என்று Electronic Frontier Foundation அறிக்கை வெளியிட்டது.

2 ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் உட்பட குறைந்தது 12 பொதுமக்கள் கொல்லப்பட்ட, பாக்தாத்தில் ஒரு ஹெலிகாப்டர் ஏவுகணை தாக்குதலைக் காட்டுகிற அடக்குமுறை கொலை வீடியோ உட்பட ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க போர்க் குற்றங்களை அம்பலப்படுத்திய இரகசிய தகவல்களை 2010 ல் விக்கிலீக்ஸிற்கு மானிங் கசியவிட்டார். நியூயோர்க் டைம்ஸ் மற்றும் கார்டியன் உட்பட உலகெங்கிலும் உள்ள செய்தி ஊடகங்கள் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களை வெளியிட்டன.

"மனித உரிமை மீறல்களின் கடுமையான ஆபத்து, அதாவது, சித்திரவதை மற்றும் பிற தவறாக நடத்தப்படுதல் போன்றவை உள்ளடங்கலாக சிறை நிலைமைகள் மற்றும் விக்கிலீக்ஸுடனான தனது வேலைக்காக ஒரு நியாயமற்ற விசாரணையை தொடர்ந்து அவர் மரணதண்டனை பெறக்கூடியது" உட்பட மனித உரிமை மீறல்களை எதிர்கொள்ளக்கூடிய ஒரு உண்மையான ஆபத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், அமெரிக்காவிற்கு அசான்ஜ் ஒப்படைக்க அல்லது வேறு எந்த விதத்திலும் அனுப்ப" பிரிட்டன் மறுக்க வேண்டும் என்று கோரி, ஐரோப்பாவில் ஆராய்ச்சிக்கான சர்வதேச மன்னிப்பின் சர்வதேச இயக்குநர் மஸ்ஸிமோ மொராட்டி ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

சித்திரவதை செய்யப்படலாம் அல்லது மரண தண்டனைக்கு முகம் கொடுக்கலாம் என்று கருதப்படும் ஒரு நாட்டிற்கு அசான்ஜ் அனுப்பப்படமாட்டார் என்று மொரேனோ அரசாங்கத்திற்கு இங்கிலாந்து அரசாங்கத்தின் உத்தரவாதம் பயனற்றது.

சதி குற்றச்சாட்டிற்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையை வழங்க முடியும் என்றாலும், அத்துடன் மரண தண்டனையை தரக்கூடிய உளவு குற்றச்சாட்டுகள் உட்பட, அசான்ஜ் அமெரிக்க காவலில் இருக்கும்போது அமெரிக்க அரசாங்கம் கூடுதல் குற்றச்சாட்டுகள் வழங்க காத்திருக்கிறது என்பது சாத்தியமில்லை என்று கூற முடியாது. ஒபாமா நிர்வாகம் மானிங்கை தனிமைப்படுத்தி சித்திரவதை செய்தமையால், அவர் தற்கொலைக்கு பல முறை முயன்றார்.

அசான்ஜ் இற்கு எதிரான ஒரு ஜூரிகளின் விசாரணையில் சாட்சியமளிக்க மறுத்தமையால், 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட சிறை உட்பட மானிங் மார்ச் 8 ம் தேதி முதல் அலெக்ஸாண்ட்ரியா, வேர்ஜீனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். வியாழக்கிழமை அசான்ஜிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கப்பட்ட பின்னர், ஏற்கனவே "பெரிய ஜூரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள" போலியான சாட்சியங்களின் அடிப்படையில் சாட்சியமளிக்க மானிங்கை நிர்ப்பந்திப்பதற்கு எதிராக அவரது வழக்கறிஞர்கள் மேன் முறையீடு செய்துள்ளனர்.. மேலும், இது அவரது தொடர்ச்சியான இன்னும் தடுப்புக்காவலில் இருப்பது ஒரு நிர்ப்பந்தமல்ல மாறாக சட்டத்தினை மீறும் "தண்டனை மட்டுமே" என்பதை மேலும் நிரூபித்துள்ளது.

Loading