இந்தியாவின் பாஜக மற்றும் அதன் இந்து வலது கூட்டணிகள் பெரும் தொற்றுநோய் பரவலுக்கு முஸ்லீம்களை பலிக்கடா ஆக்குகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

“கோவிட்-19, இனம், மதம், நிறம், சாதி, பாகுபாடு, மொழி அல்லது எல்லைகளை தாக்குவதற்கு முன்னர் பார்ப்பதில்லை. அதற்கு பிறகு நமது பதிலும் நடத்தையும் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்துக்கு முதன்மை அளிப்பதாக இருக்க வேண்டும், இதில் நாம் ஒன்றாக இருக்கிறோம் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 19 அன்று ஒருவார கால நீண்ட தூக்கத்திலிருந்து திடீரென எழுந்ததைப்போன்று அவர் டிவீட்டர் வழியில் பதிவு செய்துள்ளார்.

மோடி ஒரு மோசமான இந்து மேலாதிக்கவாதி, அவருடைய பாரதிய ஜனதாக் கட்சி (பாஜக) அரசாங்கமும் மற்றும் இந்து வலது கூட்டணியும் இந்தியாவின் முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிராக இடைவிடாமல் விரோதத்தை தூண்டிவிட்டிருக்கின்றன. கோவிட்-19 தொற்றுநோய் பரவலுக்கு முஸ்லீம்களை பலிக்கடா ஆக்குவதற்கான ஒரு அப்பட்டமான முயற்சியும் இதில் உள்ளடங்கியிருக்கிறது.

சமீபத்திய வாரங்களில், டெல்லியில் தப்லிகி ஜமாஅத் எனும் ஒரு முஸ்லீம் மத குழுவின் விடுதியில் தங்கியிருந்தபோது கோவிட்-19 ஆல் அவர்களில் பலர் பாதிப்புக்குள்ளாகினர், அந்த உறுப்பினர்களை கொரோனா வைரஸ் நோயாளிகள் போர்வையில் “மனித வெடிகுண்டுகள்” என மூத்த பாஜக தலைவர்கள் இழிவுபடுத்தியிருக்கின்றனர். வைரஸ் மூலம் முஸ்லீம்கள் வேண்டுமென்றே இந்துக்களுக்கு நோய்தொற்றை ஏற்படுத்தினார்கள் என்று குற்றத்தைச் சுமத்துவதற்காக #கோரோனாஜிஹாத் மற்றும் #கொரோனாபயங்கரவாதம் போன்ற ஹேஷ்டேக்குகளின் கீழ் சேர்த்து சக இந்து வகுப்புவாதிகள் சமூக ஊடகங்களை பயன்படுத்தியிருக்கிறார்கள். முஸ்லீம் வியாபாரிகள் காய்கறிகளை விற்பதற்கு முன்னர் அவைகளை நக்குவதாக காட்டும் பொய்யாக சித்தரித்த போலியான மற்றும் உருவாக்கம் செய்யப்பட்ட வீடியோக்களை பரப்பியிருப்பதும் இதில் உள்ளடங்கியிருக்கிறது.

இந்த மோசமான பிரச்சாரத்தின் விளைவாக, வேலை மற்றும் வருமானம் இல்லாமல் ஒரு வார காலம் நீடித்த கொரோனா வைரஸ் முடக்கத்தினால், ஏழை முஸ்லீம்களுக்கு உணவு கிடைக்கவிடாமல் மறுக்கப்பட்டது, அதேவேளை ஏழைகளுக்கு உணவு வழங்குவதில் ஈடுபட்ட மற்றவர்கள் சரீரரீதியாக தாக்கப்பட்டார்கள்.

சமீபத்தில் உத்திரப் பிரதேசத்தில் ஒரு மருத்துவமனை உள்ளூர் பத்திரிகைக்கு ஒரு விளம்பரம் கொடுத்திருந்தது. ஏனைய அனைத்து நோயாளிகளைப் போலல்லாமல் முஸ்லீம்கள் முதலில் கோவிட்-19க்கு ஆய்வுசெய்யப்பட்டிருந்தால் மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்படுவர் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கிடையில், குஜராத்தில் மற்றொரு மருத்துவமனையில் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் தனித்தனி வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளதாக செய்தியொன்று குறிப்பிட்டுள்ளது.

The Wire ஊடக வலைத் தளத்தில் ஏப்ரல் 22அன்று வந்த ஒரு செய்திக் கட்டுரை கவனத்தில் எடுத்து பின்வருமாறு குறிப்பிட்டது, ‘’ பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையிலிருக்கும் முஸ்லீம்கள் மத்தியில், சிலர் தினக்கூலித் தொழிலாளர்கள் அல்லது சிறு வியாபாரிகளாக இருக்கின்றனர், மதரீதியான விவரக்குறிப்பு தாக்குதல் மிக மோசமாக இருந்துள்ளது. முஸ்லீம் காய்கறி வியாபாரிகளைப் பற்றி எண்ணற்ற கதைகள் இருக்கின்றன. வாயிற் காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதன்படி வியாபாரிகள் முஸ்லீமா இல்லையா என அறிவதற்கு அடையாள ஆவணங்களை சரிபார்த்து பாதுகாப்பு நுழைவாயிலைக் கொண்ட காலணிகளுக்குள் அவர்கள் உள்ளே வர அனுமதி மறுக்கப்படுகிறது.

மோடியின் டிவீட்டர் குறிப்புகள் அவருடைய அரசியல் தடங்களை மூடிமறைப்பதற்கான ஒரு அப்பட்டமான முயற்சியாக இருக்கிறது. கொரோனா வைரஸ் குறித்த அரசாங்கத்தின் குற்றவியல் அலட்சிய நிலைப்பாட்டுக்கு எதிராக எழும் வெகுஜன கோபங்களை வேறுதிசையில் திருப்புவதற்காக பாஜக மற்றும் வலது இந்து வகுப்புவாதிகள், முஸ்லீம் சிறுபான்மையினரின் மீது திருப்பும் முயற்சியானது இந்தியா மற்றும் உலகம் முழுவதும் பரந்தளவில் ஒரு மானக்கேடான எதிர்ப்பை தூண்டிவிட்டிருக்கிறது.

இவை எதுவுமே, எவ்வாறாயினும், “ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம்” நாடும் மோடியின் ஆழ்ந்த இழிந்த வேண்டுகோளை ஒரு பெரும் அரசியல்வாதியின் புத்திசாலித்தனமான ஆலோசனை என்று இந்தியாவின் பெருநிறுவன ஊடகம் வாழ்த்துரை கூறுவதை நிறுத்தவில்லை. 2002 இல் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, 1,800 மக்களுக்கு மேல் சாகடித்த ஒரு முஸ்லீம் எதிர்ப்பு படுகொலைகளைத் தூண்டிவிட்டும் மற்றும் அதற்கு தலைமையும் தாங்கிய மோடியின் பங்கினை ஊடகங்கள் நினைவு கூர்ந்து பார்க்கவில்லை என்பதை சொல்லத் தேவையில்லை. மேலும் அவர் 2002 நிகழ்வுகளின் மீது எந்த பச்சாதாபத்தையும் ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை என்று யாரெல்லாம் அவரை விமர்சித்தார்களோ அவர்களுக்கு அவர் 2013 இல் எப்படி பதிலளித்தார் என்றோ அவை குறிப்பிடவில்லை, 2002 நிகழ்வுகள் பற்றிய உணர்வுகளை, ஒரு குட்டி நாய் மீது வண்டியை ஏற்றிய வாகனத்தில் பயணித்த ஒரு பயணியின் உணர்வுகளுடன் ஒப்பிட்டார். இது குறித்து மோடி ரொயிட்டேர்ஸிடம் இவ்வாறு கூறினார்;”வேறு ஒருவர் வாகனத்தை ஓட்டுகிறார். நாங்கள் பின்னால் உட்கார்ந்து இருக்கிறோம், அப்போது கூட வண்டிச்சக்கரத்தின் கீழ் ஒரு குட்டி நாய். வருமாயின் அது வேதனையாக இருக்குமா அல்லது இல்லையா? நிச்சயமாக அப்படித்தான் இருக்கும்.

பாஜகவின் முஸ்லீம் எதிர்ப்பு தாக்குதல்

கடந்த மே மாத மறுதேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, மோடி மற்றும் பாஜக, இந்தியாவை இந்து ராஷ்ட்ரா அல்லது இந்து அரசாக மாற்றுவதற்கான அவர்களுடைய உந்துதலை தீவிரப்படுத்தினர். இதில் முஸ்லீம்கள் இந்து மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பொறுத்துக்கொள்ளப்படுவார்கள். ஆகஸ்டில், முஸ்லீம்கள் மட்டும் பெரும்பான்மையாக இருக்கிற இந்தியாவின் ஒரே மாநிலமான ஜம்மு காஷ்மீரின் அரை தன்னாட்சி அரசியலமைப்பு நிலையை பாஜக சட்டத்திற்கு புறம்பாக இரத்துசெய்தது. பின்னர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக அதனை மாற்றியதன் மூலம் மத்திய அரசாங்கத்தினை நிரந்தரமாக சார்ந்து இருக்கும் நிலமையின் கீழ் அதனை வைத்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலுடன், அயோத்தியில் பாப்ரி மசூதி இருந்த இடத்தில் ஒரு இந்து கோயிலை கட்டுவதற்கு பாஜக அரசாங்கம் வேகம்காட்டிவருகிறது. இது பாஜக தலைவர்களின் தூண்டுதலாலும் மற்றும் இந்தியாவின் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஒரு நேரடி சவாலாகவும் இந்து அடிப்படைவாத வெறியர்களால் 1992 இல் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

இந்தியாவின் பொருளாதாரம் சரிந்துகொண்டிருக்கும் நிலமைகளின் கீழ் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதில் பாஜகவின் பாசிச செயற்பாட்டாளர்களின் தளத்தை தூண்டி விடவும் மற்றும் வகுப்புவாதத்தை வளர்ப்பதற்கும் இத்தகைய நடவடிக்கைகள் ஒரு திட்டமிடப்பட்ட முயற்சியாக இருந்தன, மேலும் தனியார்மயம், பாஜகவின் மானிய வெட்டுக்கள் மீதான நடவடிக்கைகள், ஒப்பந்த தொழிலாளர்கள் ஆபத்தான வேலை முறைகள் மற்றும் பிற முதலீட்டாளர்கள் சார்பான கொள்கைகளை மேம்படுத்துதல் போன்றவற்றால் சமூக எதிர்ப்பு வளர்ந்துகொண்டிருக்கும் நிலைமைகளின் கீழ் தான் இவ்வாறு செய்யப்பட்டது.

முஸ்லீம் விரோத குடியுரிமை திருத்த சட்டத் திருத்தத்திற்கு (CAA) எதிராக இந்தியாவில் ஒரு வெகுஜன எதிர்ப்பு வெடித்த போது அது பின்வாங்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டது, இச்சட்டம், டிசம்பர் நடுப்பகுதியில் பாராளுமன்றத்தில் விரைவாக கொண்டுவரப்பட்டது. அதன் ஆட்சிக்கு எதிராக பெருகிவரும் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியுடன், இந்தியா மழுவதும் CAA க்கு எதிரான வீரியமான இயக்கத்துடன் ஒன்றாக கலப்பதற்கான வாய்ப்பை எதிர் கொண்ட நிலைமையில் பாஜக தன்னுடைய வகுப்புவாத வன்முறையை இரட்டிப்பாக்கியது. ஜனவரி மற்றும் பிப்ரவரியில் பாஜக தலைவர்கள் CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக வெளிப்படையாக வன்முறைக்கு அழைப்புவிடுத்தனர்.

இந்த வெறுக்கத்தக்க பரப்புரை பிப்ரவரி பிற்பகுதியில் வடக்கு டெல்லியில் முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டு அதன் உச்சக்கட்டத்தை அடைந்தது. பிப்ரவரி 23 தொடங்கப்பட்டு மூன்று நாட்களுக்கு, உள்ளூர் பாஜக தலைவர்கள் மூலம் தூண்டப்பட்டிருந்த இந்து பாசிச குண்டர்கள் மற்றும் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படைகள் உடந்தையாக இருந்து முஸ்லீம்களையும் அவர்களுடைய வீடுகள் மற்றும் வணிக வளாகங்களை தாக்கி வன்முறையில் ஈடுபட்டனர்.

கோவிட்-19 தொற்றுநோயும் முஸ்லீம்களை பலிக்கடாக்களாக்குவதும்

ஜனவரி 30 அன்று இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து அறிவிக்கப்பட்டது. இந்தியா மற்றும் சர்வதேச மருத்துவ நிபுணர்கள் நீண்டகாலமாக எச்சரித்து வந்தனர், அதாவது வறுமை, பாழடைந்திருக்கும் சுகாதார பராமரிப்பு உள்கட்டமைப்பு மற்றும் அதிக அடர்த்தியாக இருக்கும் மக்கள்தொகை ஆகியவற்றினால் நாடு குறிப்பாக மோசமான பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். ஆனால் அடுத்த ஏழு வாரங்களுக்குமேல் கோவிட்-19 பரவலுக்கு எதிர்நடவடிக்கையாக பாஜக அரசாங்கம் எதுவுமே செய்யவில்லை. அது குறைந்தளவே பரிசோதணை செய்தது மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு கருவிகளை (PPE) பெற்றுக் கொள்ள மற்றும் மருத்துவ அமைப்பை தயார்நிலையில் வைத்திருப்பதற்கு தேவையான அரசு வளங்களை திரட்ட அல்லது இந்தியாவின் 120 வலுவான பில்லியனர்களின் செல்வங்களை எடுக்கத் தவறியது. கோவிட்-19 க்கு எதிரான அதன் ”போராட்டம்” என்பது பயணம் செய்வதற்கான தடை மற்றும் உள்ளே வருகின்ற பயணிகளை துரிதமாக பரிசோதித்தல் ஆகியவற்றில் தான் முற்றிலுமாக தங்கி இருந்தது.

அதன்பின்னர் மார்ச் 24 மாலையில், அரசாங்கம் வியக்கத்தக்க முறையில் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்தது. நடுஇரவில் தேச அளவிலான ஒரு கடுமையான மூன்றுவாரகாலம் தொடங்கிய முடக்கம் எந்தவித மிகமுக்கியமான தயாரிப்பு அல்லது முன்னறிவிப்பும் இல்லாமல் அது தடையை நடைமுறைப்படுத்தியது. அது இந்தியாவின் நூறாயிரக்கணக்கான வறிய நாளாந்த தொழிலாளர்களுக்கு உணவு அல்லது பணம் ஆகியவற்றை ஈவிரக்கமின்றி வழங்கத் தவறியது, அவர்கள் வேலை இழந்தவர்கள் என்பதால் எந்தவொரு வழியுமின்றி இருந்தனர். இந்திய தொழிலாளர்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் இந்த முடக்கம் பேரழிவானதாக இருக்கிறது. மேலும் முடக்கத்தின் முன்தாயாரிப்பில்லாத தன்மை மற்றும் தொடர்ச்சியாக குறைந்தளவிலான பரிசோதனையின் காரணமாக தொற்றுநோய் பரவல் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அது, முடக்கத்தை 19 நாட்கள் மே 3 வரை மேலும் நீட்டிக்குமாறு அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்தியிருக்கிறது.

தொற்றுநோயின் அழிவுகளிலிருந்தும், மற்றும் அதன் பொருளாதார வீழ்ச்சிகளிலிருந்தும் மக்களைப் பாதுகாப்பதற்கு மோடி அரசாங்கத்தின் மற்றும் இந்திய ஆளும் தட்டினரினரின் வெளிப்படையான தோல்விகளின் விளைவாக எழுச்சிபெற்றுவரும் வெகுஜன கோபங்கள் மற்றும் பதட்டங்களை முஸ்லீம்களுக்கு எதிரான அதன் வகுப்புவாத அவதூறுகளை மீண்டும் ஒருமுறை தூண்டுவதற்கு பாஜகவை தள்ளியுள்ளது, அது ஆரோக்கியம் மற்றும் சமூக பொருளாதார பேரழிவுகளுக்கு முஸ்லீம்களை பலிக்கடாக்களாக்கும் நோக்கம் கொண்டது.

அவர்களுடைய பிரச்சாரத்தில் முதலும் மற்றும் மையமுமாக ஒரு இஸ்லாமிய மத குழுவான தப்லிகி ஜமாஅத் (Tablighi Jamaat – TJ) இருந்துகொண்டிருக்கிறது. முஸ்லீம்கள் தப்லிகி ஜமாஅத் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு மேலும் அல்லது மதநிறுவன பயிற்சியை பெறுவதற்கு மார்ச்சில் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார்கள் மேலும் அதன் தங்கும்விடுதியில் தங்கி இந்தியா முழுவதும் தொற்றுநோயை பரவச் செய்வதற்கு ஒரு பிரதான பங்கினை வகித்திருக்கிறார்கள் என்றும் அதனைப் பெருநிறுவன ஊடகங்களின் உதவியுடனும் மற்றும் சட்டவிரோதமாகவும் ஊக்குவித்து அந்த கதையாடல்களை அரசாங்கம் முன்னுக்கு தள்ளியது. TJ உறுப்பினர்கள் தொற்றுநோயை ”சூப்பராக பரப்புவோர்” என்று ஊடகம் அடையாளப்படுத்தியது, அதேவேளை சுகாதார அமைச்சகம் இன்னும் மேலே சென்று அதன் தினசரி குறிப்புகளில் புதிய COVID-19 பாதிப்புகளை TJ உடன் தொடர்புடையதாக வெளிச்சத்தில் காண்பித்தது.

கோவிட்-19 பாதிப்புகளில் இந்தியாவின் ஒரு பெரிய சதவீத அளவுக்கு தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்கள் விகிதாசார அளவில் இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. கொவிட்-19 குழு குறித்து பதிலளிக்கையில் இந்திய அறிவியலாளர்கள் சுட்டிக்காட்டினார்கள் அதாவது டெல்லி தலைமையகத்திற்கு சென்றவர்கள் அனைவரும் கட்டாயம் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளவேண்டும் என அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது, ஆனால் மற்றப்படி பரிசோதனை செய்வதை கடுமையாக கட்டுப்படுத்தி வைத்திருந்தது.

மார்ச் 31 அன்று ”அரசாங்கத்தின் ஒரு தொடர் வழிகாட்டுதல்களை மீறியதற்காக” தப்லிகி ஜமாஅத் தலைவர்களுக்கு எதிராக ஒரு குற்றவியல் வழக்கினை காவல்துறையினர் பதிவு செய்தனர். அதைத்தொடர்ந்து பத்திரிகை செய்திகளின்படி தப்லிகி ஜமாஅத் தலைவர் மெளலான சாத் என்பவருக்கு எதிராக “குற்றமுள்ள மனிதக்கொலை” (படுகொலை) குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் கூடுதலாக சேர்த்துள்ளார்கள்.

பாஜக மற்றும் அதன் கூட்டணிகள் ஒரு வசதியான வழிமுறையாக தொற்றுநோயின் முழுமைக்கும் காரணமாக முஸ்லீம் மக்களை குற்றம்சாட்டுவதற்கு தப்லிகி ஜமாஅத் கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களை பயன்படுத்தியிருக்கிறார்கள். தப்லிகி ஜமாஅத் ஒரு “தலிபான் குற்றச்செயலினை” செய்திருப்பதாக பிப்ரவரி டெல்லி கலவரத்தை தூண்டுவதற்கு முக்கிய பங்கு வகித்தவரான பாஜக தலைவர்களில் ஒருவரான கபில் மிஸ்ரா குற்றம்சுமத்தியுள்ளார். கோவிட்-19 பரிசோதனை அதிகாரிகளுக்கு யாரெல்லாம் அறிவிக்கவில்லையோ அவர்கள் சுட்டுக்கொல்லப்படவேண்டும் என்று கர்நாடகாவின் பாஜக முதலமைச்சரின் அரசியல் செயலாளர் எம்.பி. ரேணுகாச்சார்யா தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்களுக்கு அறிவித்திருக்கிறார். “வைரஸ் பரவலுக்கு யாரெல்லாம் காரணமோ அவர்கள் துரோகிகள். துப்பாக்கி குண்டு போட்டு சுட்டுத்தள்ளுவது தவறல்ல” என்று ரேணுகாச்சார்யா கூறியுள்ளார்.

ஒரு மத கூட்டத்தை நடத்துவதன் மூலம் டெல்லி அரசு விடுத்த முடக்கம் குறித்த உத்தரவுகளை தப்லிகி ஜமாஅத் மீறிவிட்டது என்று பலரால் கூறப்படுகிறது. ஆனால் இது அதிகபட்சமாக ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அறிக்கையாக இருக்கிறது. முடக்க உத்தரவுக்கு முன்னர் அரசாங்கத்தின் அனுமதியுடன் தப்லிகி ஜமாஅத் மாநாடு மார்ச் 16 இல் நடத்தப்பட்டது என்ற உண்மையையும் புறக்கணிக்கிறது. தப்லிகி ஜமாஅத் போல அல்லாமல், மக்களின் உயிர்வாழ்வு ஆபத்திலுள்ளது என்றும் மற்றும் அவர்களுக்கு அறிவுறுத்தி மோடி தேச அளவில் முடக்கத்தை அறிவித்ததன் பின்னர் தான் உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஒரு பெரிய மத கூட்டத்தில் பங்குபற்றியிருந்தார். அதில் சமூக இடைவெளி முறை கடைப்பிடிக்கப்படவில்லை என்று என்று The Wire ஊடகம் குறிப்பிட்டிருந்தது.

இந்த அம்பலபடுத்தலுக்கு பதிலடியாக, ஆதித்யநாத் The Wire பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜனுக்கு எதிராக “போலி செய்திகள் ” பரப்பினார் என்று குற்றச்சாட்டுக்களை வைத்தார்.

பெரும் வணிகங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் இலாபங்களின் தேவைகளுக்கு கீழ்படிந்ததாக உழைக்கும் மக்களின் வாழ்வுகள் இருக்க வேண்டும் என்ற அதன் வற்புறுத்தலின் ஆதிக்கத்தின் கீழ் கோவிட்-19 தொற்றுநோய்க்கு பாஜக வகுப்புவாதத்தை தூண்டிவிடுவதுடன் ஒரு மோசமான எதிர்செயலும் ஆற்றுகிறது. ஸ்ராலினிச சிபிஎம் மற்றும் சிபிஐ ஆதரவுபெற்ற காங்கிரஸ் கட்சி தலைமையிலான எதிர்கட்சிகள் இரண்டு வெவ்வேறுபட்ட மனநிலைகளிலிருக்கின்றன. ஒரு நாள் எதிர்கட்சிகள் மோடியை விமர்சிக்கின்றார்கள் மற்றும் மறுநாள் தொற்றுநோயை எதிர்த்து போராடுவது என்ற பெயரில் அவருடைய அரசாங்கத்துடன் ஒற்றுமையை வலியுறுத்துகின்றன.

இதற்கு காரணம், அவர்கள் இந்திய முதலாளித்துவத்தை விடாப்பிடியாக பாதுகாப்பதனால், அது ஒரு ஆபத்து நிறைந்த செயலுக்கு தூண்டுகிறது. வெகுஜனங்களின் பார்வையில் அரசியல் நம்பகத்தன்மையின் சிறிதளவிலான மிச்ச மீதமுள்ள எதையும் இழக்கநேரிடும் என்ற அச்சத்தில் பாஜகவுடன் மிக நெருக்கமுடன் அடையாளம் காண எதிர்கட்சிகள் துணியவில்லை, அரசாங்கத்தின் மீதான அவர்களுடைய கவனக்குறைவான விமர்சனங்கள் அவர்கள் எதிர்பார்க்காத விதமாக தொழிலாள வர்க்கத்தின் எழுச்சிக்கு ஒரு தூண்டுதலாக செயல்படும் என்பதால் அவர்கள் இன்னும் அதிகமாக அச்சப்படுகிறார்கள், அது விரைவாக அவர்களது கட்டுப்பாட்டை கடந்து சென்றுவிடும்.

ஆசிரியர் பரிந்துரைக்கும் கட்டுரைகள்

இந்தியா முழுவதும் COVID-19 பூகோள தொற்றுநோய் அதிகரிக்கையில் வணிக நிறுவனங்கள் வேலைக்கு உடனடியாக திரும்பும்படி அழுத்தம் கொடுக்கின்றன

[22 April 2020]

மோடியின் ஆதரவாளர்கள் டெல்லியை வகுப்புவாத வன்முறையில் மூழ்கடிக்கையில், ட்ரம்ப் அவரை புகழ்கிறார்

[26 February 2020]

இந்தியாவில் வகுப்புவாத பிற்போக்குத்தனத்திற்கு எதிரான போராட்டம் என்பது சோசலிசத்திற்கான போராட்டமாகும்

[21 December 2019]

Loading