இந்தியாவின் எதிர்க்கட்சிகள் சீனாவுடன் எல்லை மோதலில் மோடியின் போர்க்குணமிக்க நிலைப்பாட்டை ஆதரிக்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம், ஒலி வடிவை இங்கே கேட்கலாம்.

சர்ச்சைக்குரிய எல்லையில் ஜூன் 15 இராணுவ மோதலைத் தொடர்ந்து பல தசாப்தங்களாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதட்டங்கள் மிகக் கூர்மையடைந்த நிலையில், இந்தியாவின் எதிர்க்கட்சிகள் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் கடுமையான சீன எதிர்ப்பு நிலைப்பாட்டை ஆதரிக்க விரைந்துள்ளன.
சீனாவை எதிர்ப்பதில் மோடி "பலவீனம்" ஆக இருக்கிறார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டும் நிலையிலும் கூட காங்கிரஸ் கட்சி மற்றும் இரட்டை ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்ட் (சிபிஎம்) ஆகியவை இந்தியாவின் தீவிர வலதுசாரி பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) அரசாங்கத்திற்கு ஆதரவளித்துள்ளன.

இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள லடாக் மற்றும் சீனாவின் அக்சாய் சின் பிராந்தியத்தின் சந்திப்பில் அமைந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கில் ஒரு மலைப்பாதையில் ஏற்பட்ட மோதல்கள், இருபுறமும் டஜன் கணக்கான மரணங்களை விளைவித்ததாக கூறப்படுகிறது. மோதலுக்குப் பின்னர், பிரதமர் மோடியும் அவரது இந்து மேலாதிக்க பாஜகவும் சீனாவுக்கு "உரிய பதிலை" அளிக்கப் போவதாக சூளுரைத்தனர். "எங்கள் தாய்நாட்டைப் பாதுகாக்கும் போது செய்த மிக உயர்ந்த தியாகம் ... வீணாகாது" என்று மோடி அச்சுறுத்தும் விதமாக பேசினார்.

மோடியின் போர்க்குணமிக்க பிரகடனங்கள் மற்றும் இராணுவ அச்சுறுத்தல்கள் சீனாவை மட்டும் குறி வைத்தது அல்ல, ஆனால் அது உள்நாட்டு அரசியலை கூர்மையாக வலது பக்கம் தள்ளுவதையும் கூட நோக்கமாகக் கொண்டுள்ளன. கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் அரசாங்கத்தின் அழிவுகரமான தவறான முடக்கம் ஆகியவற்றால் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் புதிதாக வேலையில்லாமல் இருப்பதோடு, பொருளாதாரம் பாதாள வீழ்ச்சியில் இருக்கும் போது, அகால நிலையில் மீண்டும் வேலைக்குத் திரும்புவதை அமுல்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்துக்கு "புத்துயிரளிக்க" மற்றும் முதலீட்டாளர் சார்பு சீர்திருத்தங்களில் ஒரு “பெருமளவிலான பாய்ச்சல்” செய்வதற்கும் மோடி உறுதியளித்துள்ளார்.

சீனா மீதான பாஜகவின் கடுமையான தாக்குதல்கள் ஒரு பிற்போக்குத்தனமான பேரினவாத சூழ்நிலையைத் தூண்டிவிட உதவுகின்றன, அவை தொழிலாள வர்க்கத்தை அச்சுறுத்துவதற்கும் அதன் வர்க்கப் போர் நிகழ்ச்சி நிரலுக்கான எதிர்ப்பை "தேச விரோதம்" என்று முத்திரை குத்தவும் பயன்படுத்தலாம் மற்றும் பயன்படுத்தப்படும். பெய்ஜிங்குடன் பதட்டங்களைத் தூண்டுவதன் மூலம், சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ-மூலோபாய தாக்குதலுக்கு இந்தியாவை இன்னும் முழுமையாகப் பயன்படுத்துவதற்கான மக்கள் எதிர்ப்பை முறியடிக்க மோடி அரசாங்கம் முயல்கிறது.

சீன அரசாங்கத்தின் “ஆக்கிரமிப்பை” கண்டனம் செய்வதற்கும், கூடுதல் துருப்புக்கள் மற்றும் போர் பொருட்களை சர்ச்சைக்குரிய எல்லைக்கு விரைந்து அனுப்புவதற்கும் ஆதரவாக எதிர்க்கட்சிகளை தனது அரசாங்கத்தின் பின்னால் அணிதிரட்ட மோடி ஜூன் 19 அன்று ஒரு “அனைத்து கட்சி கூட்டத்தை” கூட்டினார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ், சிபிஐ மற்றும் சிபிஎம் தலைவர்கள் மற்றும் 15 க்கும் மேற்பட்ட பிராந்திய மற்றும் சாதி கட்சிகள் கலந்து கொண்டன. "எங்கள் எல்லைகளை பாதுகாக்கும் படையினருடன் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக நிற்கிறோம், அவர்களின் தைரியம் மற்றும் துணிச்சலில் முழு நம்பிக்கையை வெளிப்படுத்துகிறோம்" என்று மோடி கூட்டத்தில் கூறினார்.

கூட்டத்திற்குப் பின்னர் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, அனைத்து கட்சிகளும் “இந்த நேரத்தில் பிரதமரின் தலைமையின் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தின, அரசாங்கத்துடன் ஒற்றுமையாக நிற்பதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தின.”

இந்து மேலாதிக்க பாஜக முதல் ஸ்ராலினிஸ்டுகள் வரை நீடிக்கும் இந்திய அரசியல் ஸ்தாபனத்தின் ஒற்றுமை குறித்த இந்த வெளிப்படையான பிரகடனத்தின் உண்மைத் தன்மையை பங்கெடுத்த எந்த கட்சிகளும் சவால் செய்யவில்லை. ஏனென்றால், அனைத்து கட்சிகளும், அவற்றுக்கு இடையில் சிறிய தந்திரோபாய வேறுபாடுகள் இருந்தாலும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களை நிலைநிறுத்துவதில் உறுதியாக உள்ளன.

"அனைத்து கட்சி" கூட்டத்தில் பங்குபற்றியவர்கள் வழங்கிய விவரத்தின்படி, "இடைக்கால" காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ஆயுதப் படைகளுக்கு "இறுதி மரியாதை" செலுத்தியும் பாஜக அரசாங்கத்திற்கு "ஆதரவை உறுதிப்படுத்தியும் பேசினார். எவ்வாறாயினும், மே 5 அன்று லடாக்கிற்குள் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்.ஐ.சி) வழியாக சீனா ஊடுருவியதாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெற அரசாங்கம் "விரைவில் மற்றும் உடனடியாக வந்திருக்க வேண்டும்" என்று அவர் அறிவித்தார். காங்கிரஸ் இன்னும் தீவிரமான பதிலை ஆதரித்திருக்கும் அந்த கட்டத்தில், காந்தியின் கூற்றுப்படி, "முழு தேசமும் ஒரு பாறை போல் ஒன்றாக நின்று நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளில் அன்றைய அரசாங்கத்தை முழுமையாக ஆதரித்திருக்கும்."

எதிர்க்கட்சிகளுடனான ஆலோசனைகளை முறைப்படுத்த மோடியை அவர் கேட்டுக்கொண்டார், "அதன் மூலமாக நாம் உலகிற்கு ஒற்றுமை மற்றும் ஐக்கியமாக இருக்கும் ஒரு படத்தை முன்வைக்க முடியும்."

ஜூன் 23 அன்று கூடிய காங்கிரஸ் செயற்குழு, ஆயுதப்படைகளுடன் கட்சியின் “ஊசலாட்டமற்ற உறுதியான ஐக்கியத்தை” மீண்டும் வலியுறுத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த குழு "தேசிய பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக உறுதியளிக்கிறது."
காங்கிரஸ், சமீப காலம் வரை இந்திய முதலாளித்துவத்தின் பிரதான அரசாங்கக் கட்சியாக இருந்தது, மோடியைப் பற்றி ஏதாவது விமர்சனம் செய்திருந்தால் அது வலது பக்கத்தில் இருந்து தான் செய்துள்ளது.

சீனப் படைகளால் "எந்தவிதமான ஊடுருவலும் இல்லை, ஆக்கிரமிப்பும் இல்லை, எங்கள் பகுதிகளைக் கைப்பற்றவும் இல்லை" என்று அனைத்து கட்சி கூட்டத்தில் மோடி கூறினார். இது "தாய்நாட்டை" இராணுவம் பாதுகாப்பதற்கான மோடியின் பாராட்டு என்று வெளிப்படையாகக் கருதினாலும், சீன அரசாங்கத்தின் நிகழ்வுகள் குறித்த பதிவுக்கு இது சலுகை அளிப்பதாக கூறி தாக்குவதற்கு காங்கிரஸ் அதனை பிடிதுக்கொண்டது, அதாவது மக்கள் விடுதலை இராணுவ வீரர்கள் ஒருபோதும் எல்.ஏ.சி யை மீறவில்லை, கல்வான் பள்ளத்தாக்கில் மோடி கூறியவாறாக சீனப் படைகள் எல்.ஏ.சியைக் கடக்கவில்லை என்றால், பெய்ஜிங் அதை தனது நிலைப்பாட்டுக்கான “ஒரு ஊர்ஜிதமாக” பயன்படுத்தும் என்று ஒரு காங்கிரஸ் அறிக்கை அறிவித்தது. மேலும் அந்த அறிக்கை “இந்திய பிரதேச இறையாண்மை பேச்சுவார்த்தைக்கு உரியதல்ல” என்று ஆணித்தரமாக குறிப்பிட்டது.

எல்லைப் பிரச்சினையை கையாள்வது தொடர்பாக அரசாங்கத்தை தாக்குவதில் காங்கிரஸின் பிற்போக்குத்தனமான தன்மை, சோனியாவின் மகனும், 2019 தேசியத் தேர்தலில் கட்சியின் பிரதமர் வேட்பாளருமான ராகுல் காந்தியின் ட்வீட்டில் சுருக்கமாகக் வெளிப்படுத்தப்பட்டது. "நரேந்திர மோடி," என்று கூறுவதற்கு பதிலாக அவர் ”சரணடையும் மோடி" என்று அழைக்கப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி கூறினார்.

மோடியைப் பற்றிய காங்கிரஸின் போர்க்குணமிக்க விமர்சனங்கள் உத்தியோகபூர்வ அரசியலை வலதுபுறமாக வேகமாக தள்ள உதவுகின்றன, இந்திய முதலாளித்துவத்தின் இரு பிரதான கட்சிகளும் இராணுவத்திற்கு ஆதரவை வெளிப்படுத்துவதில் மற்றும் தொழில்களிலும், "தாய்நாட்டின்" ”ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு” மேலும் சீனாவை கண்டனம் செய்வதில் ஒருவருக்கொருவர் முந்திக்கொள்வதில் போட்டி போடுகின்றனர்.

அதே நேரத்தில், இந்திய முதலாளித்துவத்தின் பெரும் வல்லரசாகும் அபிலாஷைகளை நிலைநிறுத்துவதற்கான ஒரு திறமையான வாகனமாக காங்கிரஸ் தன்னை மேம்படுத்துகிறது. The Print வலைத் தளத்திற்கான ஒரு கருத்துத் தொகுப்பில், காங்கிரஸின் மூத்த தலைவரும் அதன் வெளியுறவுத் துறையின் தலைவருமான மனீஷ் திவாரி, "இழந்த தசாப்தம்" என்று புலம்பினார், அதில் சீனாவின் எழுச்சியைத் தடுக்க இந்தியா தனது நட்பு நாடுகளுடன் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது. அமெரிக்கா மற்றும் இந்தியா உட்பட வாஷிங்டன் தலைமையிலான ஆசிய-பசிபிக் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிவற்றால் வழிநடத்தப்பட்ட ஒரு மூலோபாய உரையாடலை "குவாட்" என்று அழைப்பதை முழு அளவிலான இராணுவ கூட்டணியாக மாற்றுவதை ஆதரித்த திவாரி, அது பெய்ஜிங்கிற்கு ஒரு “அனுகூலமான தாக்கத்தை” ஏற்படுத்தவதற்காக "தோன்றி வரும்" ஆசிய முழுவதற்குமான ஒரு “மூலோபாய கட்டமைப்பாக" கருதலாம் என்றார்.

காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கங்களே பல ஆண்டுகளாக இந்திய-அமெரிக்க இராணுவ-மூலோபாய உறவுகளை விரிவுபடுத்தின, 2006 இல் "இந்திய-அமெரிக்க பூகோள மூலோபாய கூட்டாண்மை" தொடங்கப்பட்டது உட்பட. 2014 ல் ஆட்சிக்கு வந்த மோடியின் கீழ், இந்தியா சீனாவை மூலோபாயமாக சுற்றி வளைத்து அச்சுறுத்துவதற்கான வாஷிங்டனின் உந்துதலில் பெருகிய முறையில் ஒரு முன்னிலை அரசாக மாற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவின் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களின் வழக்கமான பயன்பாட்டிற்கு இந்தியா தனது தளங்களைத் திறந்து விட்டது மற்றும் தென் சீனக் கடல் தகராறில் அமெரிக்காவின் பின்னால் அணிதிரண்டு நிற்கிறது, மேலும் அமெரிக்கா, ஜப்பான், மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் மேலும் மேலும் விரிவடையும் பின்னலாக இரு தரப்பு, முத்தரப்பு மற்றும் நாற்தரப்பு இராணுவ – பாதுகாப்பு உறவுகளை வளர்ச்சி செய்துள்ளது.

இந்திய அரசு மற்றும் இந்திய முதலாளித்துவத்தை பாதுகாப்பதில் இரட்டை ஸ்ராலினிச கட்சிகளான சிபிஐ மற்றும் சிபிஎம் சற்றும் அர்ப்பணம் குறைந்தவைகள் அல்ல.

மோதல்கள் நடந்து இரண்டு நாட்களுக்கு பின்னர் சிபிஐ வெளியிட்ட ஒரு அறிக்கையில் ‘நமது எல்லைகளை பாதுகாப்பதற்காக” இறந்த இருபது இராணுவ சிப்பாய்களின் “தியாகம்”. “எப்போதுமே மறக்கப்பட மாட்டாது” என்று கூறியது.

அனைத்துக் கட்சி கூட்டத்தில், சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சீனாவுடனான மோதலில் "நமது இராணுவ அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இறந்ததற்கு இரங்கல்" தெரிவித்ததன் மூலமாக இந்திய இராணுவம் மற்றும் அரசுக்கு ஸ்ராலினிஸ்டுகளின் கோழைத்தனமான ஆதரவை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

"உயர் மட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டும் என்று அவர் கோரினார், இதனால் எல்லையில் அமைதியையும் சமாதானத்தையும் பேணுவதற்கு எல்.ஏ.சி யின் தெளிவான எல்லை நிர்ணயம் உட்பட நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்." என்று அவர் கோரினார். இந்து மேலாதிக்க மற்றும் மோசமான தொழிலாள வர்க்க விரோத மற்றும் அமெரிக்க சார்பு மோடி "அரசாங்கம் அமைதிக்காக செயல்பட வேண்டும்" என்றும் அவர் "அழைப்பு விடுத்தார்".

"பேச்சுவார்த்தைகள்" மற்றும் "சமாதானத்திற்கான" விண்ணப்பங்களுக்கு பின்னால், "எல்.ஏ.சி.யின் தெளிவான எல்லை நிர்ணயம்" குறித்த சிபிஎம் இன் கோரிக்கை ஸ்ராலினிஸ்டுகளின் விசுவாசம் எங்குள்ளது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி காட்டுகிறது. அந்த பிராந்தியத்தில் இந்திய முதலாளித்துவத்தின் பிற்போக்குத்தனமான பிராந்திய உரிமைகோரல்களுக்கு அவை முழுமையாக ஆதரவளிக்கின்றன, இது சீனாவுடனான போட்டி மற்றும் மோதலை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும்.

மோடி மீதான காங்கிரஸின் தாக்குதல்களை கிளிப்பிள்ளை போல் எடுத்து ஸ்ராலினிஸ்டுகளும் அவர் சீனாவுக்கு சலுகைகளை வழங்குவதாக குற்றம் சாட்டியுள்ளனர். ஜூன் 21 அன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை, சிபிஎம் அரசியல் பணியகம் "ஊடுருவல் இல்லை, ஆக்கிரமிப்பு இல்லை, நமது பகுதிகளைக் கைப்பற்றவில்லை" என்றால், "ஏன் [இந்திய மற்றும் சீன எல்லைப் படைகளுக்கு இடையிலான மோதல்]? எங்கள் துணிச்சலான வீரர்களின் தியாகம் ஏன்? ” என்று கேட்டது.

அந்த அறிக்கை தொடர்ந்தது, “பிரதமரின் கருத்துக்கள் நமது துணிச்சலான வீரர்களின் வீரத்தின் செயலின் நியாயத்தன்மைக்கு பெரும் பின்னடைவாக அமைந்தன. மேலும், இது சர்ச்சையை தீர்ப்பதற்கான நமது இராஜதந்திர முயற்சிகளின் வலிமையை பலவீனப்படுத்தி உள்ளது.”

இந்த அறிக்கைகள், இந்திய அரசுக்கு ஸ்ராலினிஸ்டுகளின் ஆதரவைப் பற்றி நிறைய விஷயங்கள் குறித்து பேசுகின்றன. 1989 முதல் 2008 வரை, ஸ்ராலினிஸ்டுகள் அடுத்தடுத்து வலதுசாரி அரசாங்கங்களை ஆதரித்தனர், அவர்களில் பெரும்பாலோர் காங்கிரஸ் கட்சி தலைமையிலானவை, அவை புதிய தாராளமய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தின மற்றும் வாஷிங்டனுடன் நெருக்கமான உறவுகளைப் பின்பற்றின. ஆனால் பாராளுமன்றத்தில் இந்திய அரசாங்கத்துடன் சேர்ந்து அல்லது அதற்கு எதிராக வாக்களித்தாலும், ஸ்ராலினிஸ்டுகள் கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்திய இராணுவத்தின் பிரமாண்டமான விரிவாக்கத்திற்கு ஆதரவளித்துள்ளனர், அதன் வரவு-செலவுத் திட்டம் உலகின் எந்தவொரு இராணுவத்திற்கு ஒதுக்கப்படுவதில் நான்காவது பெரிய இடத்தில் உள்ளது. பாகிஸ்தானுடனான அதன் பிற்போக்கு மோதலில் சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகியவை இந்திய ஆளும் வர்க்கத்தை கடுமையாக ஆதரித்துள்ளன, இதில் 2016 செப்டம்பர் மற்றும் 2019 பிப்ரவரி மாதங்களில் பாகிஸ்தானில் மோடி உத்தரவிட்ட பொறுப்பற்ற மற்றும் மிகவும் சட்டவிரோத “அதிரடி தாக்குதல்களுக்கு” ஒப்புதல் அளித்தன.

அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற மற்ற அனைத்து பிராந்திய மற்றும் சாதி கட்சிகளும் சீனாவிற்கு எதிரான இந்தியாவின் எல்லைக் கோரிக்கைகளை வலியுறுத்துவதில் மோடி அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு தங்கள் ஆதரவை வலியுறுத்தின.

சீனாவுடன் மோதலுக்கு எதிர்க் கட்சியின் ஏகமனதான ஆதரவு பாஜக அரசாங்கத்தை தைரியப்படுத்தியுள்ளது. எல்லைப் பிராந்தியத்தில் உள்ள ஆயுதப் படைகளுக்கு "சுதந்திரமாக" முடிவெடுக்கும் அதிகாரத்தை அது வழங்கியுள்ளதாக அது சமீபத்தில் அறிவித்தது. மேலும் எல்லை பகுதிகளில் உள்ள இந்திய இராணுவ படைகளை உயர்ந்த உஷார் நிலையில் நிறுத்தியள்ளது மற்றும் முன்னுள்ள தளங்களுக்கு முன்னோக்கி உள்ள தளங்களில் போர் விமானங்களை குவித்துள்ளது. .

கடந்த வியாழக்கிழமை, இந்திய கட்டுப்பாட்டிலுள்ள லடாக்கில் உள்ள டெப்சாங்கில் சீனா மற்றொரு படையணியைத் திறந்துவிட்டதாக இந்திய ஊடகங்கள் கூறின. "பல முனைகளில் இந்தியாவின் வலுவான நிலைப்பாட்டிற்கு" சீனாவின் பதில் இது என்று அறிக்கைகள் கூறின.
இந்த முன்னேற்றங்கள் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை இந்த போட்டி அணு ஆயுத நாடுகளுக்கிடையேயான ஒரு பெரிய போராக விரிவடையக்கூடும் என்ற உண்மையான அச்சுறுத்தலை அடிக்கோடிட்டுக் காட்ட உதவுகிறது, மேலும் இது அமெரிக்கா மற்றும் பிற பிராந்திய மற்றும் பெரும் வல்லரசுகளையும் இழுக்க முடியும். மோடியின் பின்னால் எதிர்க்கட்சிகளின் அணிவகுப்பு அத்தகைய மோதலின் அபாயத்தை அதிகரிக்கிறது, இது பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகளுக்கு பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும்.

Loading