மக்ரோன் நிர்வாகம் புதிய பிரெஞ்சு அமைச்சரவையை அறிவிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் நிர்வாகம், அமைச்சரவை மறுஒழுங்கமைப்பு மற்றும் வெளிச்செல்லும் பிரதமர் எட்வார்ட் பிலிப்பின் இராஜினாமா, ஆகியவற்றை அறிவித்த மூன்று நாட்களுக்குப் பின்னர், புதிதாக உள்வரும் பிரெஞ்சு பிரதமர் ஜோன் காஸ்டெக்ஸ் (Jean Castex) நேற்று இரவு 7 மணிக்கு தனது அமைச்சரவையில் 31 அமைச்சரவை உறுப்பினர்களை அறிவித்தார்.

காஸ்டெக்ஸ் வெள்ளிக்கிழமை நியமனம் செய்யப்பட்டதிலிருந்து, முந்தைய அரசாங்கத்தின் தொழிலாள வர்க்க எதிர்ப்புக் கொள்கைகளின் விரிவாக்கத்துடன் புதிய அமைச்சரவை அறிவிக்கப்படும் என்பது ஏற்கனவே தெளிவாக உள்ளது. புதிய அமைச்சரவை மக்ரோன் நிர்வாகத்தின் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தும் கொள்கையை மேற்பார்வையிடும் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது வணிக நடவடிக்கைகள் மீதான எந்தவொரு கட்டுப்பாடுகளையும் முடிவுக்குக் கொண்டுவரும். பொருளாதார ரீதியாக, தொற்றுநோய்களின் போது பெருவணிகத்திற்கும் வங்கிகளுக்கும் ஆதரவளிக்க நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்கள் வழங்கப்பட்டுள்ள நிலைமைகளின் கீழ். ஓய்வூதியங்கள், கல்வி, வேலையின்மை உதவி மற்றும் சமூக பாதுகாப்பு உள்ளிட்ட சமூக திட்டங்கள் மீதான பாரிய தாக்குதல்களை பூரணப்படுத்தப்போவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜூலை 3 ம் தேதி பாரிஸில் புதிய பிரெஞ்சு பிரதமர் ஜோன் காஸ்டெக்ஸ் (வலது) பதவியேற்றபோது மற்றும் அவரது முன்னோடி எட்வார்ட் பிலிப் (AP Photo/Michel Euler) [AP Photo/Michel Euler]

அமைச்சரவை அறிவிப்புக்கு முன்னர், பாரிஸின் வடகிழக்கில் தொழிலாள வர்க்கத்தின் லா குர்னேவ் (La Courneuve) புறநகரில் உள்ள பொலிஸ் தலைமையகத்திற்கு காஸ்டெக்ஸ் ஞாயிற்றுக்கிழமை மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டார். “குடியரசின் அரசாங்கத்திற்கு ஆதரவைக் காட்டுவதற்காக”, அவர்களைப் பார்க்க வந்ததாக காஸ்டெக்ஸ் போலீசாரிடம் கூறினார். “எங்களிடமிருந்து நீங்கள் செயல்களை எதிர்பார்க்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். அவை கிடைக்கும். எங்களிடமிருந்து அங்கீகாரத்தையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறீர்கள். அவை தவறாமல் கிடைக்கும்”. "நீங்கள் செல்ல முடியாத பகுதிகள்" இருக்கிறதா என அவர் போலீசாரிடம் கேட்டார்.

பாரிஸில் பல்லாயிரக்கணக்கானோரின் ஆர்ப்பாட்டங்கள் உட்பட, அமெரிக்காவில் ஜோர்ஜ் ஃபுளோய்ட் கொல்லப்பட்டதன் மூலம் தூண்டப்பட்ட பொலிஸ் வன்முறைக்கு எதிராக சர்வதேச அளவில் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் எழுந்ததை அடுத்து, அப்பட்டமான போலிஸ் ஆதரவு அறிக்கை வந்துள்ளது. பிரெஞ்சு ஆர்ப்பாட்டங்கள், 2016 இல் 24 வயதான இளைஞர் அடாமா ட்ரொரே கொல்லப்பட்டதற்கு நீதி கோரியுள்ளன. செயிண்ட்-டெனி (Saint-Denis) இன் தேர்வு குறிப்பாக ஆத்திரமூட்டும் வகையில் இருந்தது, ஏனெனில் இந்த பகுதி பிரான்சில் ஏழை மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாள வர்க்க இளைஞர்களை பொலிஸ் துன்புறுத்துவதில் மிகவும் மோசமான பகுதிகளில் ஒன்றாகும்.

மக்ரோன் நிர்வாகம் தனது சிக்கனத் திட்டத்திற்கு எதிராக பெருகிவரும் சமூக ஆர்ப்பாட்டங்கள் மீதான அதன் மிருகத்தனமான பொலிஸ் ஒடுக்குமுறையை தக்க வைத்துக் கொள்ளும் என்பதற்கான தெளிவான சமிக்ஞையை அனுப்புகிறது, மேலும் காவல்துறை தொடர்ந்து நிஜமான பணி சுதந்திரத்தை தடையின்றி அனுபவிக்கும்.

கிறிஸ்தோப் காஸ்டனேருக்குப் பதிலாக கன்சர்வேடிவ் குடியரசுக் கட்சியின் உறுப்பினரான 37 வயதான ஜெரால்ட் டார்மனின் (Gérald Darmanin) ஐ புதிய உள்துறை மந்திரி என நேற்று காஸ்டெக்ஸ் அறிவித்தார். கடந்த ஆண்டு "மஞ்சள் சீருடை" ஆர்ப்பாட்டங்கள் மற்றும் இரயில் மற்றும் பொதுத்துறை வேலைநிறுத்தங்கள் மீதான பொலிஸ் வன்முறை ஒடுக்குமுறைகளை காஸ்டனேர் ஆதரித்தார், ஆனால் ஜோர்ஜ் ஃபுளோய்ட் போராட்டங்களின் போது பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து இனவெறி தொடர்பான தெளிவான வழக்குகளை அரசாங்கம் பொறுத்துக் கொள்ளாது எனக் கூறியது காவல்துறையினரிடையே எதிர்ப்பைத் தூண்டியது. தீவிர வலதுசாரி தேசிய பேரணி (National Rally) இன் ஆதரவின் கோட்டையாக இருக்கும் பொலிஸ் தொழிற்சங்கங்கள், காஸ்டனேருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தன, அவர் தனது அறிக்கைகளை சில நாட்களில் பின்வாங்கினார்.

பாதுகாப்பு, கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் நிதி ஆகியவற்றின் பிற முக்கிய அமைச்சகங்கள் புளோரன்ஸ் பார்லி, மிஷேல் ஃபுளோங்கேர், ஒலிவியே வெரோன் மற்றும் புருனோ லு மேர் ஆகியோரின் கைகளில் அனைத்தும் மாறாமல் உள்ளன. 2007-2010 வரை நிக்கோலா சார்க்கோசியின் வலதுசாரி நிர்வாகத்தின் கீழ் ஒற்றுமை மற்றும் சமூக ஒத்திசைவு அமைச்சராக இருந்த ரோஸ்லின் பாச்லோ-நார்க்கன் (Roselyne Bachelot-Narquin) கலாச்சார அமைச்சகத்தை நடத்துவார்.

காஸ்டெக்ஸ் அரசாங்கத்தின் திசைவழியை வெளிப்படுத்த, வார இறுதியில் Journal de Dimanche பத்திரிகைக்கு ஒரு நேர்காணலை வழங்கினார். தொற்றுநோய் "நமது பொருளாதார இறையாண்மையை மீண்டும் பெறுவதற்கான அவசரத் தேவையை நிரூபித்துள்ளது" என்று அவர் கூறினார், மேலும் மக்ரோனின் கீழ் ஏற்கனவே தொடங்கப்பட்ட சீர்திருத்தங்களிலிருந்து "மேலும் செல்வது" அவசியம் என்றும் கூறினார். "நாங்கள் ஏற்கெனவே செய்ததிலிருந்து ஒரு அரசியல் முறிவில் இல்லை, ஆனால் எதிர்கொள்ள எங்களுக்குத் தெரியும் என்பதை நாம் காட்டவேண்டும். அதற்கு வெளிப்படையாக எங்கள் வழிமுறைகளில் வளர்ச்சி தேவைப்படுகிறது”.

இந்த குளிர்காலத்தில், விதிக்கப்பட்ட ஓய்வூதிய வெட்டுக்கள் தீவிரமடையும் என்று அவர் சமிக்ஞை செய்தார்: “ஒரு விஷயத்தை நாங்கள் மறுபரிசீலனை செய்வோம் என்று சொல்வது பின்வாங்குவதாக அர்த்தமல்ல. இதன் பொருள், புதிய சூழ்நிலைகளுக்கு நாம் எவ்வாறு மாற்றியமைக்க முடியும் என்பதைக் காண்பிப்பது. உதாரணமாக, நெருக்கடி, எங்கள் ஓய்வூதிய முறையின் பற்றாக்குறையை கடுமையாக மோசமாக்கியுள்ளது. சமூக பங்காளிகளுடன் [தொழிற்சங்கங்களுடன்] உரையாடலை மறுதொடக்கம் செய்ய விரும்புகிறேன், இது இன்றியமையாதது. … குறைந்தபட்சம், நாங்கள் ஒரு புதிய சமூக நிகழ்ச்சி நிரலை அமைக்க வேண்டும்”.

இந்த சிக்கன திட்டத்தை நடைமுறைப்படுத்த அவர் தொழிற்சங்கங்களுடன் நெருக்கமாக பணியாற்றுவார் என்று காஸ்டெக்ஸ் சுட்டிக்காட்டினார்: "தொழிற்சங்கங்களுடனும் முதலாளிகள் அமைப்புகளுடனும் நான் திறந்தமனதுடன் உள்ளேன், இதனால் நாங்கள் ஒன்றாக முன்னேறமுடியும்".

தொற்றுநோய் காரணமாக, டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில், பாரிய இரயில் மற்றும் பொதுத்துறை வேலைநிறுத்தங்களை தூண்டிய ஓய்வூதிய வெட்டுக்களை மக்ரோன் நிர்வாகம் தற்காலிகமாக ஒத்திவைத்தது. வெட்டுக்கள் வெற்றிகரமாக ஓய்வூதிய வயதை இரண்டு ஆண்டுகளாக உயர்த்துவது மற்றும் புள்ளிகள் அடிப்படையிலான முறையை அறிமுகப்படுத்துதல் ஆகியவை உண்மையான ஓய்வூதிய அளவை தொடர்ந்து குறைக்க அனுமதிக்கும். வேலையின்மை உதவி நலன்களை குறைப்பதற்கும் மற்றும் முதியோர் பராமரிப்பாளர்களுக்கான "சார்புநிலை" திட்டத்திற்கு கூடுதலாக, இந்த வெட்டுக்களை விரைவாக தொடர விரும்புவதாக காஸ்டெக்ஸ் சுட்டிக்காட்டினார்.

காஸ்டெக்ஸ் ஒரு நீண்ட சாதனைப் பதிவைக் கொண்டுள்ளார். 2005 மற்றும் 2007 க்கு இடையில், சார்க்கோசி அரசாங்கத்தின் மருத்துவமனை அமைப்பின் சீர்திருத்தத்திற்கு அவர் தலைமை தாங்கினார், அதில் “செயல்பாட்டு விலை நிர்ணயம், T2A” என்ற மருத்துவமனை மாதிரியை அறிமுகப்படுத்தினார். இது பொது மருத்துவமனை நிதி மாதிரியை மாற்றியது, அவர்களின் நிதி அனைத்தும் நிகழ்த்தப்பட்ட செயல்பாடுகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் ஒரு குறிப்பிட்ட அளவு விலை நிர்ணயிக்கப்பட்டது. இந்த சீர்திருத்தம் சுகாதாரப் பாதுகாப்பு முறையில் பேரழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தியது, அறுவை சிகிச்சை செய்த உடனேயே நோயாளிகளை வீட்டுக்கு அனுப்ப பொது மருத்துவமனைகளை நெருக்குவதற்கும், மற்றும் "குறைவான செயல்திறன்" கொண்டவை என கருதப்படும் மருத்துவமனைகளை மூடுவதற்கும் வழிவகுத்தது.

வியாழக்கிழமை பிராந்திய பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், மக்ரோன், "அதன் சுதந்திரம், அதன் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பை விரும்பாத ஒரு நாடாக நாங்கள் இருக்க முடியாது, மேலும் ஐரோப்பாவின் மற்ற பகுதிகளை விட நம் வாழ்நாள் முழுவதும் குறைவாக வேலை செய்யும் நாடாகவும் நாம் இருக்க முடியாது" என்று அறிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் முழுவதும் 500 பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான பிணை எடுப்புகளுக்கு செலுத்தப்பட்ட பணத்திற்கு அல்லது செல்வங்களுக்கான வரிகளில் அதிகரிப்பு இருக்காது என்று மக்ரோன் ஏற்கனவே அறிவித்துள்ளார், அதில் ஐந்தில் நான்கு பங்கு நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதமாக வழங்கப்பட்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பெருநிறுவன மற்றும் நிதி உயரடுக்கிற்கு ஒப்படைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்கள், ஓய்வூதியங்கள், சமூக உதவி திட்டங்கள், வேலைகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஊதியங்கள் மீதான விரைவான தாக்குதலின் மூலம் செலுத்தப்பட வேண்டும் என்பதாகும்.

COVID-19 தொற்றுநோயை உடனடியாக நிறுத்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் முதலாளித்துவ அரசாங்கங்களின் வரலாற்று தோல்வி தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான முதலாளித்துவத்தின் சர்வதேச தாக்குதலுக்கு களம் அமைக்கிறது. பொது நிதியில் ட்ரில்லியன் கணக்கான யூரோக்கள் பிணையெடுப்புகளில் வங்கிகளுக்கும் பெரிய நிறுவனங்களுக்கும் ஒப்படைக்கப்பட்டு வரும் நிலையில், நெருக்கடிக்கு தொழிலாளர்கள் பணம் செலுத்துமாறு கூறப்படுகிறார்கள். பிரான்சில் மட்டும், 11 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் குறுகிய கால வேலையில் உள்ளனர், மேலும் பெரு நிறுவனங்களில் வெகுஜன பணிநீக்கங்களுக்கு முன்பே 400,000 க்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர்.

இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சமூக நெருக்கடியின் நிலைமைகளின் கீழ் உள்ளது, இதுதான் பிரான்சிலும் சர்வதேச அளவிலும் தொற்றுநோய்க்கு மத்தியில் வளர்ந்து வருகிறது. ஏற்கனவே, எயர்பஸ், எயர் பிரான்ஸ், ரெனோல்ட் மற்றும் சனோஃபி உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் பாரிய பணிநீக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, அவை பல்லாயிரக்கணக்கான அல்லது நூறாயிரக்கணக்கான கூடுதல் வேலைகளை அழிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சில்லறைத் துறையில் நூறாயிரக்கணக்கான வேலைகள் நிரந்தரமாக அழிக்கப்படக்கூடும் என்று பல்வேறு மதிப்பீடுகள் காட்டுகின்றன.

தொழிலாள வர்க்கத்தினுள் இந்த வேலைத்திட்டத்திற்கு எந்த ஆதரவுத் தளமும் கிடையாது. இந்த வேலைத்திட்டத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பின் சமூக வெடிப்புக் குறித்து வலதுசாரி நாளேடான லு பிகாரோ எச்சரித்தது.

"இந்த நெருக்கடியின் சமூக தாக்கம் ஏற்கனவே முதுகு சிலிர்க்க வைக்கிறது" என்று லு பிகாரோ கூறுகிறது. "மேலும், ஒரு சமூக வெடிப்புக்கு தரை முன்பை விட பழுத்திருக்கிறது”. … 2018 குளிர்காலத்தில் 'மஞ்சள் சீருடையாளர்களின்' கிளர்ச்சியும், ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிரான சமீபத்திய போராட்டமும் - இந்த கோடையில் ஜனாதிபதி மீண்டும் தொடங்க உத்தேசித்துள்ள பணியும் பொது மக்கள் கருத்தில் அழியாத தடயங்களை விட்டுள்ளது. …. பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியின் தீவிரத்தினால் பாதிக்கப்பட்டுள்ள, ஏற்கனவே தியாகம் செய்யப்பட்ட இளைஞர்களிடமிருந்து தொடங்கி, …. மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் அணிதிரட்டப்பட்டால் ஒரு மோசமான நிலைக்கு நாம் அஞ்சலாம்”. ஒரு தீப்பொறி, "சுடரைத் தூண்டும்…" என்று அது எழுதியது.

Loading