அரசியலமைப்பு பாதுகாப்புக்கான அலுவலகத்தின் அறிக்கை 2019: ஜேர்மன் உளவுத்துறை நாஜி பயங்கரவாத ஆபத்தை குறைத்துமதிப்பிட்டு சோசலிச அரசியலை தாக்குகின்றது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜேர்மனிய உள்துறை மந்திரி ஹார்ஸ்ட் சீஹோஃபர் (கிறிஸ்தவ சமூக ஒன்றியம்) மற்றும் அரசியலமைப்பு பாதுகாப்புக்கான அலுவலகத்தின் (Verfassungsschutz) தலைவர் தோமஸ் ஹால்டென்வாங் ஆகியோரால் ஜூலை 9 அன்று முன்வைக்கப்பட்ட 2019 ஆண்டிற்கான அதன் அறிக்கை, ஜேர்மனியில் ஜனநாயக உரிமைகளுக்கு மிகப்பெரிய ஆபத்து ஜேர்மனியின் உளவுத்துறை சேவை மற்றும் ஏனைய அரச பாதுகாப்பு அமைப்புகளில் இருந்து உருவாகிறது என்பதை அனைவருக்கும் தெளிவுபடுத்துகின்றது.

அறிக்கை கவனம் செலுத்தும் 2019 ஆம் ஆண்டு, வலதுசாரி பயங்கரவாதத்தின் எழுச்சியின் ஆண்டாக குறிப்பிடப்படலாம். ஆனால் இந்த அச்சுறுத்தல் குறித்த ஒரு வார்த்தையும் அரசியலமைப்பு பாதுகாப்புக்கான அலுவலகத்தின் அறிக்கையில் காணப்படவில்லை. மாறாக, அது வலதுசாரி தீவிரவாதத்தை எதிர்க்கும் மற்றும் முதலாளித்துவத்தை விமர்சிக்கும் மற்றும் சோசலிசக் கொள்கைகளை ஆதரிக்கும் அமைப்புகளை 'இடதுசாரி தீவிரவாதிகள்' என கண்டனம் செய்வதில் கவனம் செலுத்துகிறது.

Germany Constitution Protection Report

உள்துறை அமைச்சகத்திற்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சி (SGP — Socialist Equality Party) கொண்டு வந்த வழக்கின் முக்கியத்துவத்தை புதிய அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. கடந்த ஆண்டின் தொடக்கத்தில், SGP, 2017 இல் அரசியலமைப்பு பாதுகாப்புக்கான அலுவலகத்தின் அறிக்கை தம்மை 'இடதுசாரி தீவிரவாதி' என்று அடையாளம் காணப்பட்டதை நிராகரித்தது. அந்த நேரத்தில் நாங்கள் பின்வருமாறு எச்சரித்தோம்:

SGP மீதான அதன் தாக்குதலுடன், இந்த குற்றம்மிக்க அரசாங்க முகமை தற்போதைய பிற்போக்குத்தனமான சமூக மற்றும் அரசியல் நிலைமையை விமர்சிக்கும் எவருக்கும் எதிராக வழக்குத் தொடர அடிப்படையை வழங்கும் சிந்தனைக் குற்றங்களுக்கு ஒரு புதிய வகையான சட்ட வழக்குத் தொடர்வதற்கான ஒரு முன்னுதாரணத்தை அமைக்க விரும்புகிறது. வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் மார்க்சிச இலக்கியங்களை கிடைக்கச் செய்யும் புத்தக விற்பனையாளர்கள் அல்லது விமர்சனரீதியான கலைஞர்கள், செய்தித்துறையினர்கள் மற்றும் புத்திஜீவிகள் மீது வழக்குத் தொடரப்படும். ... அரசு எந்திரத்தில் வலதுசாரி சதி நிறுத்தப்படாவிட்டால் மற்றும் SGP பாதுகாக்கப்படாவிட்டால் நீண்டகால விளைவுகளை கொண்ட நடவடிக்கைகள் வெள்ளமென திறந்துவிடப்படும்.

இந்த மதிப்பீடு இப்போது முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவம் மற்றும் பிற அரசு நிறுவனங்களில் வலதுசாரி பயங்கரவாத வலைப்பின்னல்களை பற்றிய புதிய விவரங்கள் வெளிவராமல் ஒரு நாள் கூடக் கடக்கவில்லை. இடதுசாரி வழக்கறிஞர்கள் மற்றும் அரசியல்வாதிகள் 'NSU 2.0' கையெழுத்திட்ட மரண அச்சுறுத்தல்களைப் பெறுகின்றனர். NSU 2.0 நவ-நாஜி பயங்கரவாதக் குழுவான National Socialist Underground பற்றிய குறிப்பாகும். இந்த கடிதங்களின் ஆசிரியர்கள் மிரட்டல் சூழ்நிலையை உருவாக்க போலீஸ் உள்ளக கணினிகளிலிருந்து பெறப்பட்ட தனிப்பட்டோரின் தகவல்களைப் பயன்படுத்துகின்றனர்.

அரசு எந்திரத்திற்குள் வலதுசாரி சதி மற்றும் அதை எதிர்கொள்ள அரசாங்கம் மறுப்பது ஆகியவை சர்வதேச கவனத்தையும் கவலையையும் ஈர்த்துள்ளன. நியூ யோர்க் டைம்ஸ் போன்ற சர்வதேச ஊடகங்கள் கூட இப்போது ஜேர்மனியில் ஒரு பாசிச சதித்திட்டத்தின் ஆபத்து குறித்து செய்தி வெளியிட்டுள்ளன.

இரகசிய சேவை மற்றும் அரசு எந்திரத்திற்குள் வலதுசாரி சதி

நாஜி சர்வாதிகாரத்தின் வீழ்ச்சிக்கு 75 ஆண்டுகளுக்குப் பின்னர், ஜேர்மனியில் பாசிசம் மீண்டும் ஒரு கடுமையான ஆபத்து என்பதை, 2019 ஆம் ஆண்டில் ஒரு வலதுசாரி பயங்கரவாதத்தின் அலை பொதுமக்களுக்கு காட்டியுள்ளது. எவ்வாறாயினும், அரசியலமைப்பு பாதுகாப்புக்கான அலுவலகத்தின் அறிக்கை இதைப்பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை.

வலதுசாரி பயங்கரவாதத்தின் வளர்ச்சியானது வைமர் குடியரசின் இருண்ட நாட்களை நினைவுபடுத்துகிறது என்ற போதிலும், ரைச்ஸ்வெயர் (இராணுவம்) உடன் நெருங்கிய உறவைக் கொண்ட துணை இராணுவப் பிரிவுகள், பின்னர் ஹிட்லரின் பயங்கரவாத ஆட்சியின் முக்கிய ஆதரவுத்தளமாக மாறி பின்னர், இடதுசாரி தொழிலாளர்கள் தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகளை அச்சுறுத்தி மற்றும் கொலையும் செய்தது.

  •  ஜூன் 2, 2019 அன்று, காசெல் மாவட்டத் தலைவர் வால்டர் லுப்கே கொலை செய்யப்பட்டார். பிரதான சந்தேக நபரான ஸ்டீபன் எர்ன்ஸ்ட் புதிய நாஜி வட்டங்களில் தீவிரமாக இயங்கியவராவார். அவ்வட்டங்கள் இரகசிய சேவை தகவல் வழங்குபவர்களால் நிறைந்திருந்தன. அவர் மூன்று தசாப்தங்களாக இரகசிய உளவுச்சேவையின் கண்காணிப்பில் இருந்தார்.
  •  அக்டோபர் 9, 2019 அன்று, வலதுசாரி தீவிரவாதி ஸ்டீபன் பாலியட் ஹால நகரில் ஒரு யூத வழிபாட்டுத் தலத்திற்கு வெளியே இரண்டு வழிப்போக்கர்களை சுட்டுக் கொன்றார். யோம் கிப்பூர் என்ற யூதர்களின் தினத்தை கொண்டாடும் 70 யூதர்களை படுகொலை செய்வதற்கான அவரது திட்டம் தோல்வியடைந்தது. ஏனெனில் கட்டிடத்தின் பாதுகாப்பு கதவினால் அவரால் உள்ளே சென்று தாக்கமுடியவில்லை.
  • பெப்ரவரி 19, 2020 அன்று, மற்றொரு நவ-நாஜி ரோபியாஸ் ராத்ஜென், ஹனாவ் நகரில் புலம்பெயர்ந்த பின்னணியை கொண்ட ஒன்பது பேரை சுட்டுக் கொன்றார்.

காஸல், ஹால மற்றும் ஹனாவ் ஆகிய இடங்களில் நடந்த கொலைகள் பனிப்பாறையின் முனை மட்டுமே. 2019 ஆம் ஆண்டில், யூத எதிர்ப்பு குற்றங்களின் எண்ணிக்கை 20 ஆண்டுகளுக்கு முன்பு பதிவுகள் தொடங்கியதிலிருந்து மிக உயர்ந்த நிலையை எட்டியது. ஒவ்வொரு நாளும் சராசரியாக ஐந்து முதல் ஆறு வரை யூத எதிர்ப்பு குற்றங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

வலதுசாரி பயங்கரவாத வலைப்பின்னல்கள் அரசு எந்திரத்துடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளன. Uniter குழு மற்றும் பல்வேறு வலைத் தள உரையாடல் குழுக்கள் மூலம் ஜேர்மனியின் உயரடுக்கு சிறப்புப் படைகளில் (KSK) ஒரு சிப்பாய் நிறுவிய “ஹனிபால்” (Hannibal) வலையமைப்பில், நூற்றுக்கணக்கான படையினர், காவல்துறை அதிகாரிகள், உளவுத்துறை முகவர்கள், நீதிபதிகள், இராணுவ மேம்ப்படையினர் மற்றும் பலர் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆயுதங்களை பதுக்கி வைத்திருக்கிறார்கள், அரசியல் எதிரிகளின் பட்டியல்களை பராமரிக்கிறார்கள் மற்றும் “Day X.” அன்று ஒரு சதித்திட்டத்திற்குத் தயாராகிறார்கள்.

ஆனால் இந்த ஆண்டு ஜூன் 30 அன்று, பாரிய ஆயுதங்கள் மற்றும் நாஜி நினைவுச்சின்னங்கள் பதுக்கிவைக்கப்பட்டது பற்றிய கூடுதல் தகவல்கள் வெளிவந்த பின்னர், ஜேர்மனியின் பாதுகாப்பு மந்திரி KSK இன் ஒருபகுதியை கலைக்க நிர்பந்திக்கப்பட்டதாக உணர்ந்தார்.

அரசியலமைப்பு பாதுகாப்புக்கான அலுவலகத்தின் அறிக்கை இதைப் பற்றி எதுவும் கூறவில்லை. ஜேர்மன் குடியரசு நிறுவப்பட்டதிலிருந்து ஒரு வலதுசாரி தீவிரவாதியால் செய்யப்பட்ட ஒரு பெரிய அரசியல்வாதியின் கொலை லுப்கவின் கொலையாகும். 388 பக்க அறிக்கையில் இதுபற்றி குறிப்பிட ஒரு பக்கம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பக்கம்கூட டோர்ட்முண்ட் நகரில் ஒரு தெளிவற்ற தீவிர வலதுசாரிக்குழுவின் செயற்பாட்டிற்கு முக்கியமாக கவனம் செலுத்துகிறது.

'ஹனிபால்' வலைப்பின்னல் பற்றியும் குறிப்பிடப்படவில்லை. “KSK,” “Northern Cross,” “Hannibal,” “Franco A.,” “NSU 2.0” and “Combat 18” போன்ற தீவிர வலதுசாரிகளுடன் தொடர்புபட்ட முக்கிய சொற்களை ஒருவர் காணமுடியாது. இவை பற்றி குறிப்பிடப்படவே இல்லை.

சீஹோஃபர் மற்றும் ஹால்டென்வாங் ஆகியோர் அறிக்கையை முன்வைத்தபோது வலதுசாரி தீவிரவாதத்தால் ஏற்படும் அச்சுறுத்தலைக் குறிப்பிடுவதைத் தவிர்க்க முடியவில்லை. 'ஜேர்மனியில் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்' தற்போது வலதுசாரி தீவிரவாதம், இனவாதம் மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவற்றிலிருந்து வருகிறது என்று சீஹோஃபர் அறிவித்தார். தீவிர வலதுசாரி வலைப்பின்னல்களை நிறுவுவதில் இரகசிய சேவையின் முக்கிய பங்கை மூடிமறைப்பதே அவற்றைப்பற்றி வெறும் வார்த்தையளவில் குறிப்பிடப்படுவதன் நோக்கமாகும்.

குட்டி முதலாளித்துவ பகுதியினரிடையே நாஜிக்கள் ஒரு பரந்த ஆதரவை அனுபவித்த வைய்மர் குடியரசின் இறுதிமுடிவான நாட்களில் போலல்லாமல், இன்று பெரும்பான்மையான மக்கள் வலதுசாரி தீவிரவாதிகளுடன் திகிலுடனும் வெறுப்புடனும் நடந்துகொள்கிறார்கள். தீவிர வலதுசாரி மற்றும் நவ-பாசிஸ்டுகளை வலுப்படுத்துவது எல்லாவற்றிற்கும் மேலாக அரசு எந்திரத்திற்குள் ஒரு சதித்திட்டத்தின் விளைவாகும். இந்த சதித்திட்டத்தின் முன்னணியில் பெரும் கூட்டணி அரசாங்கம் உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக இரகசிய சேவையை உள்ளடக்கிய பாதுகாப்பு முகமைகளை அதன் அரசு கைக்கொண்டுள்ளது. இந்த சதித்திட்டத்தின் முன்னணியில் பெரும் கூட்டணி அரசாங்கம் உள்ளது. பெரும் கூட்டுஅரசாங்கமானது எல்லாவற்றிற்கும் மேலாக இரகசிய சேவையை உள்ளடக்கிய பாதுகாப்பு முகமைகளை அரசாங்க கையாக கொண்டுள்ளது. அதன் அரசியல் கையாக ஜேர்மனிக்கான தீவிர வலதுசாரி மாற்று (AfD) கட்சி உள்ளது.

ஜேர்மனியில் வலதுசாரி தீவிரவாதத்தின் எந்தவொரு தீவிரமான பகுப்பாய்வும் இரகசிய உளவுத்துறையிலிருந்தே தொடங்கப்பட வேண்டும். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் NSU நடத்திய தொடர் கொலைகள் வெளிச்சத்திற்கு வந்தபோது, NSU இல் இருந்த பயங்கரவாதிகள் உருவாகிய நவ-நாஜி பிரிவினரை உளவுத்துறையின் தகவல்வழங்குபவர்களே கட்டியமைத்து மற்றும் நிதியளித்தும் உள்ளனர் என்பது தெளிவாகத் தெரிந்தது.

NSU ஐச் சுற்றியுள்ள சூழலில் குறைந்தது பல டஜன் தகவலறிவிப்பவர்கள் தீவிரமாக இருந்தனர். அவர்களில் சிலர், பயங்கரவாதிகள் மறைமுகமாக வாழ்ந்தபோது அவர்களுடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டிருந்தனர். ஹெஸ்ஸ மாநில உளவுத்துறையின் ஊழியரான ஆண்ட்ரியாஸ் டெம்ம (Andreas Temme), NSU வின் கொலைகளில் ஒன்று காஸல் நகரில் நடந்தபோது கூட குற்றம் நடந்த இடத்தில் இருந்திருக்கின்றார். பின்னர், வால்டர் லுப்க படுகொலை செய்யப்பட்டபோது, டெம்ம தனது அரசாங்க அலுவலகத்தில் பணிபுரிந்தார். சந்தேகத்திற்கிடமான கொலையாளியான ஸ்டீபன் எர்ன்ஸ்ட், காஸலில் உள்ள அதே நவ-நாஜி வட்டங்களில் இருந்து வந்தவராவார். அதனையே டெம்ம உளவு பார்த்திருந்தார். இது எதுவும் அரசியலமைப்பு பாதுகாப்புக்கான அலுவலகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

இரகசிய சேவையின் தலைவராக ஹால்டென்வாங்கின் முன்னோடியான, ஹான்ஸ்-ஜோர்ஜ் மாஸன், செம்னிட்ஸ் நகரில் ஒரு நவநாஜி ஆர்ப்பாட்டத்தை பகிரங்கமாக ஆதரித்த பின்னர் 2018 இல் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போதிருந்து, அவர் AfDஇன் நிகழ்வுகளில் நட்சத்திர விருந்தினராக பகிரங்கமாக தோன்றினார். ஹால்டென்வாங் ஐந்து ஆண்டுகளாக மாஸனின் உதவியாளராக இருந்து, அவருடன் நெருக்கமாக ஒத்துழைத்திருந்தார்.

முதன்முறையாக, அரசியலமைப்பு பாதுகாப்புக்கான அலுவலகத்தின் அறிக்கை AfD க்குள் இரண்டு குழுக்களை 'சந்தேகத்திற்கிடமான வழக்குகள்' என்று பெயரிட்டது: அவையாவன இப்போது முறையாக கலைக்கப்பட்ட Flügel (பிரிவு), மற்றும் Young Alternative எனப்படும் AfD இன் இளைஞர் இயக்கம் ஆகும். ஆனால் இது வெறுமனே வலதுசாரி தீவிரவாத சதித்திட்டத்தின் உண்மையான அளவை மறைப்பதை நோக்கமாகக் கொண்டது.

இந்த அறிக்கை, தீவிர வலதுசாரிகளின் அச்சுறுத்தலைக் குறைத்து மதிப்பிடுவது, 19,000 பேர் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள Reichsbürger (“Reich Citizens”) பற்றிய அத்தியாயத்திலும் இது வெளிப்படுகிறது. அவர்கள் ஜேர்மன் குடியரசின் அரச அதிகாரத்தை Reichsbürger எதிர்ப்பதுடன், அவர்கள் பெரிதும் ஆயுதம் ஏந்தியவர்களாக இருப்பதுடன் மற்றும் ஜேர்மனியின் எல்லைகளை முன்னைய ஜேர்மன் குடியரசின் வழியே மறுவடிவமைக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர். அதாவது, போலந்தின் பெரிய பகுதிகளை மீண்டும் கைப்பற்றுவது இந்த எல்லைகளை மீள்வடிவமைப்பதில் அடங்கும். அரசியலமைப்பு பாதுகாப்புக்கான அலுவலகத்தின் அறிக்கை அதைப்பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறது, 'எவ்வாறாயினும், இந்த குழுவின் பெரும்பாலான பிரிவினரை பொறுத்தவரையில், வலதுசாரி தீவிரவாத சித்தாந்தத்தின் செல்வாக்கு மிகக் குறைவாகவோ அல்லது இல்லாததாகவோ தோன்றுகிறது.'

அரசியலமைப்பு பாதுகாப்புக்கான அலுவலகத்திற்கு எதிரான SGP இன் வழக்கு

SGP மற்றும் பிற 'இடதுசாரி தீவிரவாத' அமைப்புகள் மீதான உளவுத்துறை சேவையின் தாக்குதல், தீவிர வலதுசாரி பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை குறைத்து மதிப்பிடுவதிலிருந்து பிரிக்கமுடியாததாகும்.

பெனிட்டோ முசோலினி 1919 இல் இத்தாலியில் தனது பாசிசக் கட்சியை நிறுவியதிலிருந்து, இத்தகைய இயக்கங்களின் பணி எப்போதுமே சோசலிச மற்றும் முற்போக்கான சக்திகளை வன்முறையில் அடக்குவதில் உள்ளது. அவை வரலாற்றுரீதியான மார்க்சிச எதிர்ப்பை தேசியவாதம், இனவாதம் மற்றும் யூத-விரோதத்துடன் இணைக்கின்றன. அதன் இலக்கு தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துதலும் மற்றும் சமூக பதட்டங்களுக்கான பலிக்கடாக்களை நோக்கி திசைதிருப்புவதுமாகும். ஜேர்மனியில், இது மனித வரலாற்றில் மிகப் பெரிய குற்றமான யூதப்படுகொலைக்கு Holocaust வழிவகுத்தது.

இரகசிய சேவை SGP யைத் தாக்குவது ஏனெனில் அது ஜேர்மன் ஆளும் உயரடுக்கின் வலப்பக்க நோக்கிய திருப்பத்தை எதிர்ப்பதுடன், இந்த ஆபத்தான வளர்ச்சிக்கு இதனால் மக்களிடையே நிலவும் பரவலான எதிர்ப்பிற்கு குரல் கொடுக்கிறது. இவ்வாறான தாக்குதல் மூலம் சமூக சமத்துவமின்மை, சுற்றுச்சூழல் சேதம், அரசு அடக்குமுறை, இராணுவவாதம் மற்றும் முதலாளித்துவத்தால் ஏற்படும் பிற அநீதிகளுக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பும் அச்சுறுத்தப்பட வேண்டும், அடக்கப்பட வேண்டும் என அது கருதுகின்றது.

SGP இன் வழக்குக்கான அதன் பதிலில், உள்துறை அமைச்சகம் அனைத்து சோசலிச, முற்போக்கான மற்றும் இடதுசாரி சிந்தனைகளையும் அடக்குவதை வெளிப்படையாக ஆதரித்தது. இது 'ஒரு ஜனநாயக, சமத்துவ மற்றும் சோசலிச சமுதாயத்திற்காக வாதிடுதல்' மற்றும் 'ஏகாதிபத்தியம்' மற்றும் 'இராணுவவாதம்' என்று அழைக்கப்படுவதற்கு எதிரான கிளர்ச்சி, மற்றும் 'வர்க்கரீதியில் சிந்தித்தல்' மற்றும் 'சமரசமற்ற எதிரெதிரான வர்க்கங்கள் பற்றிய நம்பிக்கை' ஆகியவை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவித்தது.

SGP வழக்கு தொடர்பான தீர்ப்பு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கிற்கு பொறுப்பான பேர்லினில் உள்ள நிர்வாக நீதிமன்றம் விசாரணைக்கு இன்னும் தேதி வெளியிடவில்லை. எவ்வாறாயினும், உள்துறை அமைச்சகம் 2019 உளவுத்துறை அறிக்கையில் சில மாற்றங்களைச் செய்து வழக்குக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அதன் 2017 மற்றும் 2018 அறிக்கைகள் பின்வருமாறு கூறியது:

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக, தேசியவாதம், ஏகாதிபத்தியம் மற்றும் இராணுவவாதம், அத்துடன் சமூக ஜனநாயகம், தொழிற்சங்கங்கள் மற்றும் இடது கட்சிக்கு எதிராக, 'முதலாளித்துவம்' என்று அவதூறாகக் கூறப்படும் தற்போதுள்ள அரசு மற்றும் சமூக ஒழுங்கிற்கு எதிராக SGP தனது வேலைத்திட்டத்திற்கான கிளர்ச்சியை முன்னெடுக்கின்றது.

இந்த பத்தி சமீபத்திய அறிக்கையிலிருந்து நீக்கப்பட்டது. அதன் இடத்தில், அறிக்கை பின்வருமாறு கூறுகிறது:

SGP ஒரு மார்க்சிச வர்க்க பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டு அடிப்படை அரசியலமைப்புச் சட்டத்துடன் இணக்கமற்ற வர்க்கப் போராட்டத்திற்கு பிரச்சாரம் செய்கின்றது. முதலாளித்துவத்தை ஒரு பொருளாதார அமைப்பாக தூக்கி எறிவதற்கு மட்டுமல்லாமல், சுதந்திரமான ஜனநாயக சமூக ஒழுங்கை முறியடிக்கவும் கட்சி அழைப்பு விடுக்கிறது.

ஒரு பாரபட்சமான நீதிமன்றத்திற்கு கூட இடது கட்சி மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி மீதான விமர்சனங்களை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவிப்பது கடினம் என்பதை உள்துறை அமைச்சகத்தின் வல்லுநர்கள் உணர்ந்துள்ளனர். ஆனால் ஒரு 'மார்க்சிச வர்க்க பகுப்பாய்வு' பற்றிய கண்டனம் உளவுத்துறை எதைப்பற்றி கவலை கொண்டுள்ளது என்பதை இன்னும் தெளிவாகக் கோடிட்டுக் காட்டுகிறது.

முதலாளித்துவத்தை சுதந்திரத்துடனும் ஜனநாயகத்துடனும் சமரசம் செய்ய முடியாது என்பது ஒவ்வொரு நாளும் தெளிவாகி வருகிறது: வர்க்க பதட்டங்கள் கூர்மையாகி வருகின்றன, மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வேலைகளையும் வாழ்வாதாரங்களையும் இழப்பதாக அச்சுறுத்தப்படுகிறார்கள், ஒரு சில வங்கிகள் மற்றும் தனியார் முதலீட்டு நிதிகள் நூறாயிரக்கணக்கானோரின் தலைவிதியை தீர்மானிக்கின்றன. பணக்காரர்கள் தொடர்ந்து பணக்காரர்களாக உள்ளனர், மேலும் மக்கள்தொகையில் முதல் 10 சதவீதம் பேர் அனைத்து செல்வங்களிலும் 56 சதவீதத்தை கொண்டுள்ளார்கள்.

இந்த நிலைமைகளின் கீழ், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே பெருகிவரும் எதிர்ப்பு, SGP இன் சோசலிச வேலைத்திட்டம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் ஒன்றிணைந்துபோகும் என்று ஆளும் வர்க்கம் அஞ்சுகிறது. இதனால்தான் மார்க்சிச சிந்தனை அரசியலமைப்பிற்கு முரணானது என்று அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட உள்ளது.

இந்த வரைவாக்கம் நேரடியாக AfDஇன் வேலைத்திட்டத்திலிருந்து வரக்கூடும். அதனுடன் உளவுத்துறை ஹால்டென்வாங்கின் முன்னோடியான மாஸனின் கீழ் நெருக்கமாக ஒத்துழைத்துள்ளது. இது நாஜிக்களின் பிரச்சாரத்திலிருந்தும் எடுக்கப்படுகின்றது. அவர்களின் மக்கள்சமூகத்தினர் (“people’s community”) என்ற சித்தாந்தம் வர்க்கப் போராட்டத்தின் மறுப்பு மற்றும் அதை வன்முறையாக அடக்குவதை அடிப்படையாகக் கொண்டது. நாஜிக்களின் அரசியல் மற்றும் கருத்தியல் நீதித்துறையைப் போலவே, உளவுத்துறைக்கும் அதன் சட்டவிரோத நடவடிக்கைக்கு தண்டனை வழங்கப்படுவதில்லை, மாறாக வர்க்க ரீதியில் சாதாரணமாக சிந்திப்பதை குற்றவாளியாக்குகிறது.

ஆனால் வர்க்கப் போராட்டம் SGP இன் பிரச்சாரத்தின் விளைவாக இல்லை. அது சமூகத்தின் துருவமுனைப்படுத்தலுக்கான சர்வதேச பிரதிபலிப்பாக புறநிலைரீதியாக உருவாகிறது. இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்த எழுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், ஜேர்மன் முதலாளித்துவம் சர்வாதிகாரம் மற்றும் போர் மூலம் தீர்க்க முயன்ற அதே பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாரியளவில் அதிகரித்துள்ள சர்வதேச பதட்டங்கள் மற்றும் பெருகிவரும் வர்க்க மோதல்களுக்கு அது இராணுவவாதம் மற்றும் சர்வாதிகாரத்துடன் இது மீண்டும் பதிலளிக்கிறது.

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க விரும்பும் மற்றும் தீவிர வலதுசாரிகளின் எழுச்சியை எதிர்ப்பவர்கள் அனைவரையும் இரகசிய சேவையின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக உள்துறை அமைச்சகத்திற்கு எதிரான அதன் வழக்குக்கு ஆதரவளிக்க SGP அழைப்புவிடுகின்றது.

SGP மற்றும் பிற அனைத்து இடதுசாரிக் குழுக்களின் கண்காணிப்பையும் உளவுத்துறை நிறுத்த வேண்டும் என்றும், ஜனநாயக விரோத சதித்திட்டங்களுக்கான இந்த வலதுசாரி விளைநிலம் கலைக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம்.

மேலதிக வாசிப்பிற்கு:

வலதுசாரி சதியை தடுத்து நிறுத்துவோம்! அரசியலமைப்பு பாதுகாப்பு இரகசிய சேவைக்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சியை பாதுகாப்போம்! [PDF]
[26 July 2019]

German Socialist Equality Party answers legal document from Verfassungsschutz Secret Service
[28 August 2019]

Socialist Equality Party files lawsuit against German secret service
[12 March 2019]

ஜேர்மன் இரகசிய சேவையின் உளவுபார்ப்புக்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கிறது
[10 January 2019]

வலதுசாரி சதியை தடுத்து நிறுத்துவோம்! அரசியலமைப்பு பாதுகாப்பு இரகசிய சேவைக்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சியை பாதுகாப்போம்! [PDF]

Loading