கோவிட்-19 க்கு நேபாள அரசாங்கத்தின் எதிர்வினை குறித்து அதிகரிக்கும் மக்கள் கோபம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நிர்வாகம் தவறியதைக் கண்டித்த ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைது செய்வதற்கும் போராட்டங்களை நிறுத்துவதற்கும் பிரதம மந்திரி ஷர்மா ஓலியின் நேபாள அரசாங்கம் போலிஸை அணிதிரட்டியுள்ளது.

மிக சமீபத்திய உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, 28 மில்லியன் மக்கள்தொகை கொண்ட நேபாளத்தில் 22,972 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளும் 75 இறப்புகளும் உள்ளன. அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாத ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது தற்காலிக தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளில் அடைக்கப்பட்டுள்ளனர், இப்போது அவை வைரஸ் அபாய மையங்களாக மாறிவிட்டன.

ஜூலை 31 அன்று, “கோவிட் -19 நேபாளம்: போதும் போதும்” பேஸ்புக் குழுவுடன் இணைந்த இளைஞர்கள், தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பிரதமரின் இல்லத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சமூக ஊடகக் குழுவின் உறுப்பினர்கள் வெகுஜனங்களின் நிலை குறித்த அரசாங்கத்தின் அலட்சியத்தை கண்டனம் செய்ததோடு, நாடு முழுவதும் அதிகரித்து வரும் தற்கொலைகள் குறித்து கவலைகளை எழுப்பினர். வேலை அழிப்புகள் மற்றும் அதன் விளைவாக வருமான இழப்பு தொடர்பாக அரசாங்கத்தின் 74 நாள் கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் 1,200 க்கும் மேற்பட்டோர் தங்களை தாமே கொன்றனர்.

விரைவான நோயறிதல் சோதனைக்கு பதிலாக, மிகவும் பயனுள்ள பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன் சோதனையின் பயன்பாட்டை அரசாங்க சுகாதார அதிகாரிகள் அதிகரிக்க வேண்டும் என்று எதிர்ப்பாளர்கள் கோரினர்.

ஒப்பீட்டளவில் நேபாளத்தின் குறைந்த எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுகளுக்கு ஒரு முக்கிய காரணம், வரம்புக்குட்பட்ட சோதனை தான். நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (NCP) அரசாங்கம் ஜூலை முதல் ஒரு நாளைக்கு 10,000 சோதனைகளை நடத்துவதாக முன்னர் கூறியிருந்தாலும், சோதனை ஒரு நாளைக்கு வெறும் 4,000 மட்டுமே செய்யப்பட்டது, இது உலகின் மிகக் குறைந்த விகிதங்களில் ஒன்றாகும்.

பாதிக்கப்பட்ட நபர்களை முறையாகத் தொடர்புகொள்வதையும், துன்புறுத்தப்பட்ட மற்றும் தாக்கப்பட்ட பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட தலித்துகளுக்கு பாதுகாப்பான தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளையும் வழங்கும்படியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர். தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்கு அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாகக் கூறும் 10 பில்லியன் ரூபாய் குறித்து நிதி வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

ஊடக அறிக்கையின்படி, ஆர்ப்பாட்டத்தை போலிசார் தாக்கினர், அப்பகுதிக்கு எப்போதாவது வரும் நபர்கள் உட்பட சுமார் 50 இளைஞர்களை தடுப்பு காவலில் வைத்தனர். ஆலோக் சுபேடி, காத்மாண்டு போஸ்ட்டிடம் கூறியது போல்: “காவல்துறையினர் என்னைக் குற்றம் சாட்டி என்னை அவர்களின் வேனில் ஏற்றியபோது நான் பிக் மார்ட்டில் [ஒரு உள்ளூர் டிபார்ட்மென்ட் ஸ்டோரில்] இருந்தேன்.”

தடுப்பு காவலில் வைக்கப்பட்டவர்கள் அன்று மாலை பின்னர் விடுவிக்கப்பட்டனர். போலிஸ் தாக்குதல் ஸ்ராலினிச என்.சி.பி நிர்வாகத்தின் அச்சங்களை சுட்டிக்காட்டுகிறது, இளைஞர்களின் போராட்டங்கள் வெகுஜன அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஒரு அணிதிரட்டல் மையமாக மாறும் என்று அஞ்சினர்.

"கோவிட் -19 நேபாளம்: போதும் போதும்!", என்ற அமைப்பு 209,000 க்கும் மேற்பட்ட பேஸ்புக் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. பிரதானமாக குழுவில் சம்பந்தப்பட்ட நடுத்தர வர்க்க இளைஞர்கள் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணைந்திருக்கவில்லை, இது நேபாள இளைஞர்களிடையே ஸ்தாபனக் கட்சிகள் தொடர்பான பரவலாக அதிருப்தி இருப்பதற்கான மற்றொரு அறிகுறியாகும்.

எவ்வாறாயினும், இந்த இளைஞர்களை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான பயனற்ற முயற்சிகளில் திசை திருப்ப இந்த அமைப்பு முயற்சிக்கிறது. 29 வயதான திரேந்திர ஸ்ரேஸ்தா ஊடகங்களுக்கு கூறினார்; "அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று நாங்கள் கோரவில்லை", ஆனால் "அவர்கள் செய்வது போதுமானதல்ல” என்றார்.

இந்த இயக்கத்தை அரசியல் ரீதியாக கடத்த முயற்சிக்கும் நேபாள காங்கிரஸ் கட்சி இந்த அமைப்புக்கு தனது “ஆதரவை” தெரிவித்துள்ளது. ஸ்ராலினிச NCP யைப் போலவே, நேபாள சுகாதார அமைப்பின் ஆபத்தான, பாழடைந்து போன நிலைக்கு காங்கிரஸ் அரசாங்கங்களும் சமமாக பொறுப்பாளிகளாக இருக்கின்றன.

ஜூலை 31 ஆர்ப்பாட்டம் சமீபத்திய மாதங்களில் நடந்த பல ஆர்ப்பாட்டங்களில் ஒன்றாகும். ஜூன் 9 அன்று, ஓலியின் இல்லத்திற்கு வெளியே சுமார் 150 பேர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இது தண்ணீர் பீரங்கிகள் மற்றும் தடியடிகளைப் பயன்படுத்தி காவல்துறையினரால் தாக்கப்பட்டது. ஜூன் மாதத்தில், நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வீதிகளில் இறங்கினர்.

ஜூலை 31 ஆர்ப்பாட்டம் சமீபத்திய மாதங்களில் நடந்த பல ஆர்ப்பாட்டங்களில் ஒன்றாகும். ஜூன் 9 அன்று, ஓலியின் இல்லத்திற்கு வெளியே சுமார் 150 பேர் தரை –அமர்வு போராட்டம் நடத்தினர். அது தண்ணீர் பீரங்கிகள் மற்றும் கொம்புகளைப் பயன்படுத்தி காவல்துறையினரால் தாக்கப்பட்டது. ஜூன் மாதத்தில், நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வீதிகளில் இறங்கி போராடினர்.

ஜூலை 31 கைதுகள் குறித்த பரவலான கோபத்திற்கு பதிலளிக்கும் வகையில் துணை போலிஸ் சூப்பிரண்டு ரோஷன் கட்கா ஊடகங்களுக்கு கூறுகையில் தனது அலுவலர்கள், சீரற்ற முறையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்படுவதை முடிவுக்கு கொண்டுவருவார்கள் என்று கூறினார்.

இந்த உத்தரவாதங்கள் பயனற்றவை.

ஜூன் மாதம், படான் தர்பார் சதுக்கத்தில் உண்ணாவிரதம் நடத்தியதற்காக ஐந்து எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர், ஜூலை 30 அன்று நீதிமன்றங்களில் "தகவல் அறியும் உரிமை" மனுவை தாக்கல் செய்ய சென்ற மற்றொரு குழு கைது செய்யப்பட்டது. அந்த கைதுகளுக்கு காவல்துறை அதிகாரிகளிடம் வாரண்ட் இல்லை, காவலில் இருந்தபோது இளைஞர்கள் கடுமையாக நடத்தப்பட்டனர்.

அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு இயக்கம், COVID-19 தொடர்பாக அது போதியளவில் செயல்படவில்லை என்பதுடன் மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை, ஆனால் நாட்டின் மில்லியன் கணக்கான வறுமையில் வாடும் குடிமக்கள் மீது தொற்றுநோய்களின் பேரழிவு தரும் பொருளாதார தாக்கம் குறித்த அரசாங்கத்தின் அலட்சியத்திற்கும் எதிரானது. நேபாளத்தின் பொருளாதாரம் கிட்டத்தட்ட முற்றிலும் சுற்றுலா மற்றும் வெளிநாட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தை நம்பியுள்ளது. இந்த மூலங்களிலிருந்து வருவாய் அனைத்தும் சரிந்துவிட்டது.

இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து திரும்ப முடியாதவர்கள் உட்பட நேபாளத்திலிருந்து குடியேறிய தொழிலாளர்கள் ஒரு மோசமான சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர். நேபாள உச்சநீதிமன்றம் பலமுறை அழைப்பு விடுத்த போதிலும், சிக்கிய இந்த தொழிலாளர்களுக்கு குறிப்பிடத்தக்க உதவிகளை வழங்க ஸ்ராலினிச NCP அரசு மறுத்துவிட்டது.

சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அரசாங்கம் எந்தவொரு முக்கியமான நிதி நிவாரணத்தையும் வழங்கவில்லை. நகர்ப்புற தொழிலாளர்கள், நாள் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள், அதே போல் சிறு கடைக்காரர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட சிறு தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் கடுமையான நிலைமை மிக மோசமானதாக உள்ளது.

வளர்ந்து வரும் வெகுஜன அதிருப்தியை எதிர்கொண்டுள்ள, NCP அரசாங்கம் அதிகரித்து வரும் சமூக நெருக்கடியிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப பேரினவாதத்தையும் மத குறுங்குழுவாதத்தையும் தூண்டிவிடுகிறது. இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா மற்றும் பிற இந்து தீவிரவாதிகளால் கூறப்பட்டபடி, புராண இந்து கடவுளான ராமர் அயோத்தியில் பிறக்கவில்லை ஆனால் ஒரு நேபாள கிராமத்தில் தான் என்று ஜூலை 13 அன்று ஓலி கூறினார், இது இந்திய “கலாச்சார அத்துமீறல்” என்று ஓலி அறிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்த ஸ்ராலினிச NCP நிர்வாகத்தின் போதியளவற்ற மற்றும் அலட்சியமான எதிர்வினை ஒரு விபத்து அல்ல. தெற்காசியா மற்றும் சர்வதேச அளவில் அதன் சகாக்களைப் போலவே, நேபாள ஆளும் உயரடுக்கு கொரோனா வைரஸ் பேரழிவை எதிர்கொள்ளும் உழைக்கும் மக்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களின் தலைவிதியில் அக்கறை காட்டவில்லை, ஆனால் இலாப அமைப்பைப் பாதுகாப்பதற்கும் முதலாளித்துவ வர்க்கத்தை மேலும் வளப்படுத்தவும் உறுதி பூண்டுள்ளது.

Loading