கொரோனா வைரஸ்  குறித்த அமெரிக்க அரசாங்க சதி வெளிப்படுத்தல், சமூக நோயெதிர்ப்பு சக்தியை பெருக்கும் ஐரோப்பிய ஒன்றிய கொள்கையை அம்பலப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

COVID-19 வைரஸ் இன் ஆபத்து குறித்து ட்ரம்பும் மற்றய அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகளும் பகிரங்கமாக பொய் கூறியுள்ள வெளிப்படுத்தல்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) அரசியல் ரீதியாக குற்றவியல் கொள்கைகளை அம்பலப்படுத்துகின்றன. தங்கள் அமெரிக்க சகாக்களுக்குக் கிடைத்ததைப் போன்ற உத்தியோகபூர்வ விளக்கங்களுக்கான அணுகலை அவர்கள் கொண்டிருந்தாலும், அவர்கள் அதே பொய் மூட்டைகளை மீண்டும் உருவாக்கி, தங்கள் குடிமக்களின் வாழ்க்கையிலும் அதே அப்பட்டமான புறக்கணிப்பை வெளிப்படுத்தினர், "சமூக நோயெதிர்ப்பு சக்தி (herd immunity)" பெருக்கும் கொள்கையை ஆதரித்தும், அதாவது, மக்கள் தொகையில் வைரஸின் கட்டுப்படுத்தப்பட்ட பரவலை உண்டாக்குதல்.

வைரஸ் வேகமாக பரவிய போதிலும் தொழிலாளர்கள் வேலைக்கும் மற்றும் குழந்தைகள் பள்ளிக்கு திரும்ப வேண்டும் என்று இப்போது கோரும் ஐரோப்பிய ஒன்றிய (EU) அதிகாரிகளுக்கு இது ஒரு எச்சரிக்கையாகும். COVID-19 பற்றிய அவர்களின் கூற்றுக்கள் பயனற்றவை. ட்ரம்ப்பைப் போலவே, அவர்களிடமும் ஒரு போலி பொது அறிக்கைப் பதிவுகள் உள்ளது, இது தொற்றுநோயை அற்பமாக்குவதோடு, அவர்கள் தனிப்பட்ட முறையில் பெறும் மருத்துவ தகவல்களுக்கு அப்பட்டமாக முரண்படுவதோடு, பங்குச் சந்தைகளையும், தொழிலாளர்களின் உயிர் வாழ்வின் செலவில் பெரும் செல்வந்தர்கள் செல்வத்தையும் அதிகரிக்கின்றார்கள்.

பிரபல அமெரிக்க பத்திரிகையாளரான பாப் வூட்வார்ட் வெளியிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் பற்றிய இந்த அம்பலப்படுத்தல்கள், அமெரிக்க ஜனாதிபதியின் COVID-19 பற்றிய தனிப்பட்ட அறிவை மையமாகக் கொண்டுள்ளன. உளவுத்துறை விளக்கங்கள் மற்றும் சீன அதிகாரிகளுடனான கலந்துரையாடல்களால் அவைகள் வழங்கப்பட்டன. ட்ரம்ப்பைப் போல தகவல்களை ஐரோப்பிய அதிகாரிகளுக்கு அணுக முடியவில்லை என்று சொல்வது வெறுமனே நம்பத்தகுந்ததல்ல.

ஜனவரி 28 அன்று, உளவுத்துறை அதிகாரிகள் ட்ரம்பிடம் இந்த தொற்றுநோய் "உங்கள் ஜனாதிபதி காலத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கும்" என்று கூறினார்கள். பிப்ரவரி 7 ம் தேதி, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இந்த நோய் குறித்து எச்சரித்ததாக ட்ரம்ப் வூட்வார்ட்டிடம் கூறினார், “இது கொடிய விஷயம். இது உங்கள் கொடூரமான காய்ச்சலைக் காட்டிலும் ஆபத்தானது ... இது ஐந்து சதவிகிதம் [இறப்பு விகிதம்] மற்றும் ஒரு சதவிகிதம் மற்றும் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவானது" என்று அவர் மேலும் கூறினார், “இது காற்று வழியாக பரவுகிறது, பாப். அதைத் தொடுவதை விட இது எப்போதும் கடினமானது.”

எவ்வாறாயினும், பல மாதங்களுக்குப் பின்னர், கொடூரமான காய்ச்சலுடன் ஒப்பிட்டு, ட்ரம்ப் மற்றும் பிற அமெரிக்க அதிகாரிகள் பகிரங்கமாக ஒரு தொகைப் பொய்களைக கூறினார்கள். ஆனால் அவை ஐரோப்பிய அதிகாரிகளிடமும் கூறப்பட்டன. COVID-19 ஐ வைரஸைப் பற்றிய பயம் காய்ச்சல் வைரஸை விட மோசமானது என்றும் வலியுறுத்தப்பட்டது. வைரஸைப் பற்றி பேசிய ட்ரம்ப், "பீதியை" அதாவது நிதிச் சந்தைகளில் வீழ்ச்சி தொடர்பான பீதியை, தவிர்ப்பதற்காக "எப்போதும் அதைக் குறைத்துக் காட்ட விரும்புவதாக" வூட்வார்ட்டிடம் கூறினார்.

அமெரிக்க அரசு உச்சிமாநாட்டில் இந்த சதித்திட்டத்தின் வெளிப்பாடுகளுக்கு, முக்கிய ஐரோப்பிய செய்தித்தாள்களின் ஆரம்ப எதிர்வினையானது அறிக்கையை போலவே அசாதாரணமானதாக இருந்தது. நவம்பர் 2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் இந்த அறிக்கை ட்ரம்பிற்கு தீங்கு விளைவிக்குமா மற்றும் ஜனநாயகக் கட்சிக்கு பயனளிக்குமா என்பதாக கிட்டத்தட்ட வெளியிடப்பட்ட ஆழமற்ற கட்டுரைகள் அனைத்தும் கிட்டத்தட்ட கவனம் செலுத்தியுள்ளன.

ஜேர்மனின் Süddeutsche Zeitung பத்தரிகையானது தனது கட்டுரைக்கு "ட்ரம்பைப் பற்றிய வூட்வார்ட்டின் புத்தகம் பைடெனுக்கு ஒரு பரிசு" என்று தலைப்பிட்டது. அது எழுதியது: “ட்ரம்ப் அமெரிக்க மக்களிடம் பொய் சொன்னார். ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடென் எப்படி இதை குறைந்தளவிலாவது பார்க்கிறார்." வூட்வார்டின் அறிக்கையைப் பற்றி விவாதித்தபின், Süddeutsche Zeitung (SZ) அதனுடைய சொந்த தலைப்புக்கே முரணாக, இது பைடெனுக்கு பயனளிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று கட்டுரையின் முடிவு இருந்தது: அதாவது வூட்வார்டின் அம்பலப்படுத்தல்கள் ட்ரம்பின் மறுதேர்தலுக்கு என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது, நவம்பரில், நாம் முதலில் கண்டுபிடிப்போம்."

ட்ரம்ப் இன் வெட்கக்கேடான அம்பலங்களுடன் வெளிவரும் நிகழ்வை உலகம் "இப்போது நன்கு அறிகிறது” என்று லு மொன்ட் என்ற பிரான்ஸ் பத்திரிகை கூறியது. அது இவ்வாறு முடிக்கிறது: "அச்சுறுத்தலின் உண்மை குறித்து ஜனாதிபதி தனது சக குடிமக்களிடம் பொய் கூறினார் என்பதை இந்தச் சான்றுகள் காட்டுகின்றன, அதே நேரத்தில் நாட்டின் பொருளாதாரத்தில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் அறிந்திருந்ததோடு, நடவடிக்கைகளை தாமதப்படுத்தியதாக அடிக்கடி குற்றமும் சாட்டப்பட்டிருக்கிறார்".

இந்த கட்டுரைகள் எதுவும் வெளிப்படையான கேள்வியை முன்வைக்கவில்லை: இந்த அறிக்கைகள் ட்ரம்பை ஒரு பொய்யர் என்று அம்பலப்படுத்தினால், அதே விஷயங்களை அறிந்த மற்றும் ட்ரம்ப்பைப் போன்ற அறிக்கைகளை வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளைப் பற்றி இது என்ன கூறுகிறது?

முதலாவதாக, COVID-19 தொடர்பான ட்ரம்ப் பெற்ற தகவல்களின் தொனியை ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் நன்கு அறிந்திருந்தன. உண்மையில், நேட்டோவின் இராணுவ கூட்டணியை வலுப்படுத்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சமீபத்திய ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களை செலவிடுவதாக உறுதியளித்துள்ள நிலையில், நேட்டோ எதிர்கொள்ளும் பொதுவான அச்சுறுத்தல்களுக்கு ஏற்கனவே தங்கள் புலனாய்வு அமைப்புகளின் அறிக்கைகளின் நெருக்கமான ஒருங்கிணைப்பை அவர்கள் முடுக்கிவிட்டுள்ளனர்.

கடந்த டிசம்பரில், COVID-19 வைரஸ் தோன்றுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, நேட்டோ கூட்டணி தனது வலைத் தளத்தில் "நேட்டோ புலனாய்வுக்கான ஒரு புதிய சகாப்தம்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. "நேட்டோவின் உயர்மட்ட அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட உளவுத்துறையின் தரம் மற்றும் பயனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பரந்த சீர்திருத்தங்களை" அது அறிவித்தது. நேட்டோவின் நட்பு சக்திகள் "ஒரு பொதுவான அணுகுமுறையானது உளவுத்துறை பகிர்வு, உற்பத்தி ஒருங்கிணைப்பு மேம்படுத்தல், அறிகுறிகள் மற்றும் எச்சரிக்கைகளை வலுப்படுத்துதல், மற்றும் மேலாண்மை மற்றும் நிர்வகிப்பை மேம்படுத்துதல்” ஆகியவற்றில் உடன்பட்டதாக தகவலையளித்தது.

இந்த தொற்றுநோய் தொடர்பாக சீன அதிகாரிகள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். பிப்ரவரி 13 அன்று, ஷி உடனான COVID-19 கலந்துரையாடல் குறித்து ட்ரம்ப் வூட்வார்ட்டுடன் பேசிய கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பின்னர், வைரஸ் பற்றி விவாதிக்க சீன வெளியுறவு மந்திரி வாங் யி பேர்லினுக்குச் சென்று ஜேர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெலை சந்தித்தார். சீன வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, மேர்க்கெல் "சீனாவின் தீர்க்கமான மற்றும் பலமான பதிலையும் மகத்தான முயற்சிகளையும் பாராட்டினார்", மேலும் COVID-19 தொடர்பாக "சீனாவிற்கு ஆதரவு, உதவி மற்றும் அவற்றுடன் வேலை" செய்வதாக உறுதியளித்தார்.

இந்த நிலைமைகளின் கீழ், அமெரிக்க புலனாய்வு சேவைகள் ஜனவரி மாதத்தில் தொற்றுநோயை முக்கிய உலகளாவிய அச்சுறுத்தலாகக் கருதின என்பதையும், சீன அதிகாரிகள் COVID-19 வைரஸ் கொடிய அச்சுறுத்தல் என்று விளக்கினர் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த அதிகாரிகள் அறிந்திருக்கவில்லை என்று கூறுவது நம்பத்தகுந்ததல்ல.

ஆயினும்கூட, ஐரோப்பிய அதிகாரிகள் ட்ரம்பின் சதியை அம்பலப்படுத்துவதை தவிர்ப்பது மட்டுமல்லாமல், அவர்கள் நன்கு அறிந்திருந்தனர், அவர்கள் பல சந்தர்ப்பங்களில் வைரஸைக் குறைத்து மதிப்பிட்டுள்ளனர். ட்ரம்ப்பைப் போலவே, வங்கிகளுக்கும் நிதியப் பிரபுக்களுக்கும் இலாபப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர்க்க அவர்கள் முயன்றனர்.

ஆரோக்கியமான பெரியவர்கள் அல்லது குழந்தைகளுக்கு ஆபத்தானவை அல்ல என்றும் இலேசான நோய்களுடன் COVID-19 வைரஸை தொடர்ந்து அவர்கள் சமன் செய்துள்ளனர். ஜனவரி 23 அன்று, ஜேர்மனிய சுகாதார மந்திரி ஜென்ஸ் ஸ்பான் COVID-19 ஐ கொடூரமான காய்ச்சலுடன் ஒப்பிட்டார்: "இதுவும் ஒரு ஆபத்து ஒவ்வொரு நாளும் இதை கொண்டுள்ளோம்." பிப்ரவரி 24 அன்று, மேர்க்கெல், வாங் சந்தித்த பதினொரு நாட்களுக்குப் பின்னர், சமூக இடைவெளிக்கு எதிராக ஸ்பான் மீண்டும் பேசினார், இந்த முறை COVID-19 ஐ அம்மை நோயுடன் ஒப்பிட்டார். Tagesschau ஐ மேற்கோள் காட்டினார் அதாவது, "தட்டம்மை COVID-19 ஐ விட தெளிவாக தொற்றக்கூடியது, ஆனால் அம்மை நோய் தொற்றால் நகர அடைப்பு ஏற்படுத்தப்படுவதில்லை.”

மார்ச் 5 ம் தேதி, பிரெஞ்சு அரசாங்க செய்தித் தொடர்பாளர் சிபெத் என்டியே கூறினார்: "COVID-19 உடன் பாதிக்கப்பட்ட 80% மக்கள் ஒரு மோசமான சளி அல்லது மிக மோசமான காய்ச்சலை மட்டுமே கொண்டிருப்பார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ... நாங்கள் நாட்டை நிறுத்தப் போவதில்லை".

அதே நாளில், அவரது அரசாங்கம் ஒரு கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி மூலோபாயத்தை ஆதரித்தபோது, பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன், பிரிட்டனானது "கன்னத்தை சமாளிக்கலாம், அனைத்தையும் ஒரே நேரத்தில் எடுத்து நோயை அனுமதிக்க முடியும்" என்று கூறினார். பல கடுமையான நடவடிக்கைகளை எடுக்காமல், மக்களிடையே பரவ விட வேண்டும் என்று கூறுங்கள்”.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசாங்கங்கள், பெரிய பிரிட்டன் மற்றும் சுவீடனைத் தவிர, அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும், ஐரோப்பிய ஒன்றியம் முழுதும் கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி (herd immunity) கொள்கையை நடைமுறைப்படுத்த முயன்றுள்ளது. மார்ச் 11 அன்று, மேர்க்கெல் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை அழைத்து அப்பட்டமாகக் கூறினார்: "மக்கள் தொகையில் அதிக சதவீதம் 60 முதல் 70 வரை வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்." ஐரோப்பிய ஒன்றியம் 510 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டிருப்பதால், ஐரோப்பாவில் 300 மில்லியனுக்கும் அதிகமான COVID-19 வைரஸ் பாதிப்பிற்குள்ளாவர்கள் என்று ஏற்றுக்கொள்வதாகும்.

COVID-19 பற்றிய ட்ரம்பின் பொய்கள் அம்பலமாவது, இந்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளும் பொதுமக்களை ஏமாற்றிவிட்டனர் என்பதைக் காட்டுகிறது, அதே நேரத்தில் மில்லியன் கணக்கான இறப்புகளுக்கு வழிவகுக்கும் தொற்றுநோயை தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்வதாகிறது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக குழுவின் எச்சரிக்கைகள் மற்றும் அரசியல் பணிகளை இவைகள் நிரூபிக்கின்றன. ஏற்கனவே பிப்ரவரி 28 அன்று, ஒரு அறிக்கையை ICFI வெளியிட்டது, "கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு ஒருங்கிணைந்த உலகளாவிய அவசர பதில்!" என்பதில் தொற்றுநோயின் பரவலான நோக்கம் குறித்து அது இவ்வாறு எச்சரித்தது. தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் பிறருக்கும் வைரஸிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை ஒதுக்குமாறு அழைப்பு விடுத்தது.

ஜோன்சன், மேர்க்கெல் மற்றும் பலர் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்க (herd immunity) உத்திகளைப் பாதுகாப்பதற்கு எதிராக பதிலளித்து WSWS எழுதியது: “இந்த அறிக்கைகள் வெளிப்படுத்துவது திறமையின்மை அல்ல, அரசியல் குற்றமாகும். நாஜி மூன்றாம் குடியரசின் வீழ்ச்சிக்கு எழுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், நிதியப் பிரபுத்துவத்தில் தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒரு பாசிச அணுகுமுறை நிலவுகிறது, இது பண்டைய ரோம் அதன் அடிமைகளை நோக்கிய அணுகுமுறையைய பிரதிபலிக்கிறது: அதாவது இறக்கும் வரை வேலை செய். "மேர்க்கெலுக்கான தனது பதிலில், வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு பணியிடங்களில் பாரிய பொதுச் செலவுகள், தனிமைப்படுத்தல்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அமைப்பு ஆகியவற்றிற்கு அது அழைப்புவிடுத்தது.

மார்ச் மாதத்தில், இத்தாலியை மையமாகக் கொண்ட வேலைநிறுத்தங்களின் அலைகளானது ஐரோப்பா முழுவதும் பரவி, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன தலையீடு மட்டுமே ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களை பூட்டுதல் நடவடிக்கைகளை எடுக்க கட்டாயப்படுத்தியது. எவ்வாறாயினும், ஐரோப்பிய ஒன்றியம், வேலைக்கு திரும்புவதற்காக இடைவிடாமல் வற்புறுத்தியது, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியால் வங்கிகள் மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு பிணை வழங்க ட்ரில்லியன் கணக்கான யூரோக்களுக்கு வாக்களித்தது. முக்கியமாக ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் உட்பட வெளிப்படையாக இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதே நேரத்தில், மூடல்களின் பொருளாதார தாக்கத்தை சமாளிக்க சிறு தொழில்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு போதுமான நிதிகளை மறுத்தனர்.

லண்டனின் இம்பீரியல் கல்லூரியின் Nature இல் வெளியிடப்பட்ட ஆய்வுகள், சமூக முடக்கம் ஐரோப்பாவில் சுமார் 3 மில்லியன் உயிர்களைக் காப்பாற்றியுள்ளன என்று மதிப்பிட்டது. ஜேர்மன் உள்துறை அமைச்சகமானது மார்ச் 18 அன்று தயாரித்த 17 பக்க உள் குறிப்பு பல மில்லியன் உயிர்கள் ஆபத்தில் உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. இந்த குறிப்பு பின்னர் அமைச்சின் வலைத் தளத்தில் வெளியிடப்பட்டது. "COVID-19 ஐ நாங்கள் எவ்வாறு கட்டுப்படுத்துகிறோம்" என்ற தலைப்பில், அது தெரிவிக்கிறது, "பெரும்பாலான வைராலஜிஸ்டுகள், தொற்றுநோயியல் நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் அரசியல் விஞ்ஞானிகள், நாங்கள் ஒன்றும் செய்யாவிட்டால் என்ன நடக்கும் என்று கேட்டபோது, ஒரு பேரழிவு சூழ்நிலையில் பதிலளிக்கவும் ஜேர்மனியில் மட்டும் 2020 ல் மில்லியனுக்கும் மேலாக மக்கள் இறந்துவிடுவார்கள்” என்றும் தெரிவித்தார்கள்.

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இப்போது குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அழைத்துச் செல்லவும், அவர்களது பெற்றோரை மீண்டும் வேலைக்குச் செல்லவும் கட்டாயப்படுத்தியுள்ள நிலையில், ஐரோப்பிய ஆளும் வர்க்கம் மீண்டும் மக்களுக்கு எதிராக சதி செய்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் உள்ள அரசாங்கங்கள் இனி எந்த கட்டுப்பாடும் இருக்காது என்று கூறியுள்ளன. எதிர்பாரத விதமாக ஸ்பெயினின் அதிகாரிகள், ஏற்கெனவே மது பள்ளிக்குச் செல்லும் கொள்கை முடிவுகள் "கிட்டத்தட்ட எல்லா குழந்தைகளும்" பாதிக்கப்படுவதாகக் கூறியுள்ளன.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், குடிமக்களின் முதுகில், ஐரோப்பிய ஒன்றியம் பிணை எடுப்புகளுக்கு நிதியளிப்பதற்கும் நிதிய பிரபுத்துவத்தை வளப்படுத்துவதற்கும் மில்லியன் கணக்கான மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க சதி செய்கிறது. ஐரோப்பா முழுவதும் உள்ள தொழிலாளர்கள் எச்சரிக்கப்பட வேண்டும்: ஆளும் வர்க்கமும் அதன் அரசியல் ஸ்தாபகமும் மீண்டும் ஒரு பாரிய சமூக குற்றத்தைத் தயாரிக்கின்றன. ஒரு புரட்சிகர மற்றும் சோசலிச முன்னோக்கில் நிறுவப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான சர்வதேச அணிதிரட்டலின் அடிப்படையில் மட்டுமே இதை எதிர்த்துப் போராட முடியும்.

Loading