Covid-19: முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் மீண்டும் பள்ளிக்கு திரும்புதலை பிரெஞ்சு அரசாங்கம் திணிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பெரும் தொற்றுநோய் இருந்தபோதிலும் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக, வகுப்புகளை மறுதொடக்கம் செய்வதற்கு முன்னர் எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் பிரெஞ்சு அரசாங்கம் கைவிடுகிறது. COVID-19 பெரும் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அண்மையில் அதிகரித்த போதிலும் இது தொடர்கிறது, பிரான்சில் மட்டும் செப்டம்பர் 12 அன்று 10,000 க்கும் மேற்பட்ட பெரும் தொற்றுக்குள்ளானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொள்கையின் அர்த்தம் என்ன என்பது ஸ்பெயினில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது, அங்கு COVID-19 நோயின் மீள் எழுச்சியானது மிகவும் அதிகமாக தொற்றிவருகிறது. மாட்ரிட்டின் வலதுசாரி பிராந்திய பிரதம மந்திரி இசபெல் அயுசோ அறிவித்தார்: "கிட்டத்தட்ட எல்லா குழந்தைகளுக்கும், ஏதோ ஒரு வகையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகக்கூடும்." கட்டாயமாக பள்ளிக்குத் திரும்புவதற்கு கட்டாயப்படுத்துதல் என்னும் கொள்கையை தொழிலாள வர்க்கம் எதிர்க்காவிட்டால், ஸ்பெயினிலும் ஐரோப்பா முழுவதிலுமுள்ள குழந்தைகள் மற்றும் அவர்களுடைய குடும்பங்களுக்கும், உண்மையில் இந்த நிலைமைதான் காத்திருக்கிறது.

பிரான்சில் செப்டம்பர் பள்ளி ஆண்டில் பள்ளிக்கு மீண்டும் திரும்பவேண்டுமென்பதற்காக, தொலைதூரக் கல்வி கைவிடப்படுகிறது; அனைத்து மாணவர்களும் அதிக கூட்டமான வகுப்பறைகளில் இருக்க வேண்டியாகவுள்ளது. ஜூன் மாதத்தில் பகுதி பள்ளி மீண்டும் திறக்கப்பட்டபோது, ஆசிரியர்கள் வகுப்பறைகளுக்கு இடையில் சென்றுவர வேண்டியதாக இருந்தது, இப்போது மாணவர்கள் நெரிசலான தாழ்வாரங்கள் வழியாக வகுப்புகளுக்கு இடையில் செல்ல வேண்டியிருக்கும். அமைச்சர் முன்னர் எதிர்த்த வகுப்புகளை "ஒன்று கலத்தல்" என்பது இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

பள்ளி பேருந்துகள், பொழுதுபோக்கு செயற்பாடு மற்றும் உணவுக் கேண்டீன்களுக்கு, “ஒன்று கலத்தல்” என்பதும் ஒரு விதியாக உள்ளது. சாத்தியமான போது, முடிந்தவரை சில மாற்றங்களுடன் சமூக அடைப்பிற்கு முன்பு போல எல்லாம் நடக்கிறது. தொற்றுநோயிற்கான வெடிப்பு பள்ளிகளில் உருவாகிக் கொண்டிருக்கிறது, நடுத்தர மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசங்கள் மட்டுமே பாதுகாப்புத் தடையாக இருக்கின்றன, இருப்பினும், போதிய சமூக இடைவெளி பின்பற்றப்படாவிட்டால் முகக்கவசங்களும் பயனற்றவையாகும்.

எல்லா வகையிலும் பெற்றோரை வேலைக்குத் திரும்பும்படி கட்டாயப்படுத்தும் பொருட்டு, கோவிட்-19 தொற்று பாதிப்பால் வகுப்புகள் மூடப்பட்டால், குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள எதுவும் திட்டமிடப்படவில்லை. செப்டம்பர் 7 திங்கள்கிழமையன்று BFM டிவியில் கல்வி அமைச்சர் Jean-Michel Blanquer அப்பட்டமாகக் கூறினார்: "பள்ளி மூடப்பட்டால் நாங்கள் பெற்றோரை விடுப்பில் விட வேலை செய்கிறோம்". பெற்றோர் விடுப்பு என்பது ஊதியம் செலுத்தப்படாத விடுப்பு, எனவே தொழிலாளர் குடும்பங்களுக்கு இது ஒரு பெரிய செலவு!

இறுதியாக, தொற்றுக்களின் எண்ணிக்கை மிக விரைவாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது, அரசாங்கம் கடந்த வியாழக்கிழமை தனியார் துறையில் ஓரளவு பகுதி வேலையின்மையை மீண்டும் செயல்படுத்துவதாகவும், அரசு ஊழியர்களுக்கு, பெற்றோர்களில் ஒருவருக்கு, ஒரு வகுப்பு அல்லது பள்ளி மூடப்பட்டால் வரவு இன்மையை அங்கீகரித்து ஏற்பதாக அறிவித்தது. ஒரு சமூக வெடிப்பைத் தடுப்பதே இதனுடைய நோக்கமாக தெளிவாக இருந்தது.

வகுப்புகள் மற்றும் பள்ளிகளை மூடுவதற்கான அளவுகோல்கள் தெளிவாக இல்லை. பிராந்திய சுகாதார நிறுவனத்துடன் (l’Agence Régionale de Santé) கலந்தாலோசித்து கல்விக்கான உள்ளூர் நிர்வாகம் (le rectorat) இந்த முடிவுகள் எடுக்கப்படுகின்றன. மூடப்பட்ட வகுப்புகள் மற்றும் பள்ளிகளின் பட்டியலை வெளியிட அமைச்சகம் மறுக்கிறது மற்றும் எப்போதாவது சம்பந்தப்பட்ட வகுப்புகள் மற்றும் பள்ளிகளின் எண்ணிக்கை குறித்த வரையறுக்கப்பட்ட தெளிவற்ற தரவை மட்டுமே வழங்குகிறது.

ஆண்டு தொடக்கத்தில் கோவிட்-19 இன் முதல் அலைகளைப் போலவே, மூடிமறைப்பதற்கான அதே விருப்பத்தை அவர்கள் கொண்டிருப்பதை காணலாம், ஓய்வுபெறும் வயோதிபர்களின் வீடுகளின் நிலைமையை அறிய இயலாமல் உள்ளது. உள்ளூர் தகவல்களுக்கு பிராந்திய பத்திரிகைகளுக்கு நாம் திரும்ப வேண்டியுள்ளது. "சிவப்பு பேனாக்கள்" என்ற ஆசிரியர்களின் செயல்பாட்டுக் குழுவும் தேசிய அளவில் மூடுதல்களின் அதிகாரபூர்வமற்ற வரைபட பயன்பாட்டு செயலியை வழங்குகிறது.

7 ஆம் தேதி, பள்ளி ஆண்டு தொடங்கியதிலிருந்து கொரோனா வைரஸ் காரணமாக 28 பள்ளிகளும் 262 வகுப்புகளும் மூடப்பட்டதாக Blanquer அறிவித்தார்.

"சிவப்பு பேனாக்கள்" குழு ஞாயிற்றுக்கிழமையன்று பாதிக்கப்பட்ட 1,200 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பட்டியலை அடையாளம் கண்டுகொண்டது. இது ஒரு வகைப்படுத்தப்பட்ட தொற்றுநோய் வெடிப்பு ஆகும். நாங்கள் சுட்டிக்காட்டிய முக்கியமான “ஒன்று கலத்தல்" என்ற நிகழ்வு இருந்தபோதிலும், அமைச்சகம் கிட்டத்தட்ட வகுப்புகளை மட்டுமே மூடுகிறது, ஆனால் இது தொற்றுநோய்களின் அபாயங்களை அதிகரிக்கிறது.

கோவிட்-19 ஐ மற்றய நோய் அறிகுறிகளிலிருந்து வேறுபடுத்துவது மற்றொரு சிக்கலாகும், இது அதிக முக்கியத்துவத்தை எடுக்கப்போகிறது. கோடைகாலத்தின் முடிவில் குழந்தைகளுக்கு ஜலதோஷம் (rhumes) தோன்றத் தொடங்கும். அதே வேளையில் இந்த நோய் அறிகுறிகளுக்கு பள்ளிக்கான அணுகல் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவ நிலையங்கள் தொலைபேசி அழைப்புகளால் மூழ்கியுள்ளன.

உடல் வெப்பநிலை 38° C க்கு மேல் இருந்தால் குழந்தையை வீட்டிலேயே வைத்திருக்க வேண்டும் என்பது பெற்றோருக்கான அறிவுறுத்தல்களாக உள்ளன. மறுபுறம், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி அதிபர்களுக்கான வழிகாட்டுதல்கள் COVID-19 ஐ குறிக்கக்கூடிய பல்வேறு “மருத்துவ அறிகுறிகளை” குறிக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக ஆரம்பப் பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகளில் கல்வி நிறுவனங்கள் அதிகமான குழந்தைகளுக்கான அணுகலை மறுக்கின்றன.

கோவிட்-19 க்கு எந்தக் கட்டத்தில் குழந்தையை சோதிக்க வேண்டும் என்று தெரியாத பெற்றோர்கள் இதற்காக பீதியடைகிறார்கள். இது நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கான லீவு நாட்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. எவ்வாறாயினும், விடுமுறை நாட்கள் குறைவாகவே உள்ளன, மேலும் வேலை ஒப்பந்தத்தில் முதலாளியின் பொறுப்பு குறிப்பிடாவிட்டால், பெற்றோர்களே செலவுகளை ஏற்க வேண்டும்.

அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே கோவிட்-19 வைரஸ் தொற்றுநோயாக இருக்கிறது, இது குழந்தைகளுக்கு எப்படியிருந்தாலும் பெரியவர்களை விட அதிகமாக அறிகுறியற்ற தொற்று வெளிப்படுத்தல் இருப்பதால், இந்த நடவடிக்கைகளானது தொற்றுநோயைத் தடுக்காது. கோவிட்-19 மற்றும் குளிர்கால நோய்களுக்கு இடையிலான குழப்பம் கோவிட்-19 வைரஸ் தொற்றுக்களின் அதிகரிப்பு மற்றும் குளிர்கால நோய்களின் வருகையுடன் சேர்ந்து அதிகரிக்கும்.

பள்ளி ஆண்டு தொடங்குவதற்கு சற்று முன்பு, பிரதமர் Jean Castex ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வழங்குவதை விட சிறந்தது எதுவுமில்லை என்றார்: அதாவது "தாத்தா மற்றும் பாட்டி பள்ளியில் குழந்தைகளை அழைத்துச் செல்வதைத் தவிர்ப்போம்".

வயதானவர்களைப் பாதுகாப்பதற்கான சமூக இடைவெளியின் தற்போதைய தொலைக்காட்சி பிரச்சாரம், இந்த கருத்துக்களை மிகச்சரியாக விளக்குகிறது மற்றும் பிரெஞ்சு ஓய்வு பெற்றவர்கள் பெரிய, வசதியான அடுக்குமாடி குடியிருப்புகள் அல்லது பட்டு மாடங்களில் வாழ்கிறார்கள் என்ற தோற்றத்தையும் அளிப்பதோடு, இது அவர்களின் குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளுடனான தொடர்பை விவேகத்துடன் பேணுவதற்கு அனுமதிப்பதாகவும் என்ற தோற்றத்தையும் கொடுக்கிறது. இவைகள் அனைத்தும் முதலாளித்துவ வர்க்கம் தொழிலாள வர்க்கத்தின் நிலைமையைப் பார்க்கும் அவமதிப்புக்குரிய ஒரு தொகுப்பாகும்.

குறைந்த வருமானம் கொண்ட கீழ்தட்டு மக்கள் வாழும் சுற்றுப்புறங்கள் ஏற்கனவே தொற்று நோயை எதிர்கொண்டு பெரும் விலையை செலுத்தியுள்ளன. பெரும்பாலும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்கள் உள்ளடைப்பு பூட்டுதலின் போது பொருளாதாரத்தை இயங்க வைப்பதில் முக்கிய பங்கு வகித்தனர். அவர்கள் மற்றய தட்டு மக்களை விட மிகவும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றய நகராட்சிகளை விட ஏழ்மையான நகராட்சிகளில் இறப்பு இரு மடங்கு அதிகமாக இருப்பதாக ஒரு ஆய்வு காட்டுகிறது. மோசமான வாழ்க்கை நிலைமைகள் மற்றும் மோசமான பணியிட நிலைமைகள் ஆகியவைகள் தான் இந்த வேறுபாட்டிற்கு பின்னால் இருக்கும் வழிமுறைகளாகும்.

மிக வறிய தொழிலாள வர்க்கம் வசிக்கும் சுற்றுப்புறங்களில், வீட்டுவசதிகள் முழுமையாகத் தடைபட்டுள்ளது மற்றும் பல குடும்பங்கள் பல தலைமுறைகளாக, கூட்டாக ஒன்றாக இங்கு வசிப்பதை காணலாம். இது பெரும்பாலும் வெளிநாட்டு குடியேற்றத் தொழிலாளர்களைப் பற்றியதாக உள்ளன, அவர்கள் வீட்டுவசதிகளை அணுகுவதில் அதிக சிரமங்களைக் கொண்டுள்ளனர் மற்றும் தலைமுறைகளுக்கு இடையில் இணைந்து வாழுகின்ற சம்பிராயங்களையும் கொண்டுள்ளனர். வீட்டுப் பெரியவர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்த்தாலும், தொற்றானது மீண்டும் தொழிலாள வர்க்க சுற்றுப் புறங்களிலுள்ள குடும்பங்களைத் தாக்கும், இந்த முறை அவர்களின் குழந்தைகள் வழியாக, அதாவது தொற்றுநோயானது கல்வி அமைப்பு முறையினூடாக பாய்ந்து பரவும்.

தொற்றுநோய் மீண்டும் எழுந்திருக்கும் வேளையில், அரசாங்கம் தொழிலாளர்களின் முதுகில் மோசமான சேமிப்பை திணிப்புச் செய்து வருகிறது. நோயினால் பாதிக்கப்படக்கூடிய நபர்கள் என்ற வகைகளை வெகுவாகக் குறைப்பதற்காக, ஒருவர் நாள்பட்ட நோயும் இருக்கும் பட்சத்தில் தான், பகுதி நேர வேலையின்மையால் பயனடையக்கூடியவராக இருப்பார். இந்த ஆணையானது செப்டம்பர் 1 முதல் பொருந்தும் என்று முடிவு செய்ததுள்ளது. நோய் பாதிக்கப்படக்கூடிய நபர்களின் உறவினர்களுக்கான விடுப்பு அனுமதிகளும் அகற்றப்படுகின்றன.

நிலைமை குறிப்பாக ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களுடன் குழந்தைகளுடன் தொடர்பில் இருப்பது ஒரு பிரச்சினையாகும். உடல்நலத்தில் பலவீனமாக இருக்கக் கூடியவர்கள் ஒரு பெரிய நகரத்திலோ அல்லது புறநகர்ப்பகுதிகளிலோ வாழ்ந்தால், நெரிசலான பொது போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள், மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் தம்மை நோய்க்கு தாக்கப்படக்கூடியதாக அவர்கள் இருப்பார்கள். ஆரம்ப பள்ளிகளில் நிலைமை இன்னும் ஆபத்தானது, அங்கு மாணவர்கள் முகமூடி அணிய மாட்டார்கள் மற்றும் உடல் தொடர்பு அதிகமாக இருக்கும்.

Loading