கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான கிரேக்க இளைஞர்களின் போராட்டங்களில் Révolution Permanente (NPA) அமைதியைப் பின்பற்றுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்,

வலதுசாரி பிரதம மந்திரி கிரியாக்கோஸ் மிட்சோடாகினதும் (Kyriakos Mitsotakis) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் (EU) COVID-19 வைரஸ் பெருந்தொற்று நோய்க்கு குற்றவியலான பள்ளிக்கு மீண்டும் செல்லுதல் மற்றும் சமூக நோயெதிர்ப்பு சக்திப் பெருக்கும் கொள்கைகளுக்கு (herd immunity policies) எதிராக பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் நடத்துகின்ற வேலைநிறுத்தங்களும் உயர்நிலைப் பள்ளி ஆக்கிரமிப்புகளும் கிரேக்கம் முழுவதிலும் பரவி வருகின்றன.

இந்தப் போராட்டம் தொடங்கிய இரண்டு வாரங்களுக்குப் பின்னரும், பிரெஞ்சு மற்றும் சர்வதேச ஊடகங்கள் அதுபற்றி காது கேளாத மெளனத்தைக் காத்து வருகின்றன. ஆர்ஜென்டினாவிலுள்ள சோசலிச தொழிலாளர் கட்சி ((PTS) மற்றும் அதனுடைய இஸ்குவெர்டா டியாரியோ (Izquierda Diario) வலைத் தளத்துடனும் தொடர்புடைய பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் (NPA) கன்னையாக உறவாடும் Révolution Permanente வலைத் தளமும் இந்தக் குற்றமுள்ள மெளனத்திற்கு உடந்தையாக உள்ளன. பெருந்தொற்று நோய்க்கு எதிரான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டங்களுக்கு விரோதமான வெகுஜன ஊடகங்களுடன் NPA மற்றும் அதன் இலத்தீன் அமெரிக்க கூட்டாளிகளும் அணிவகுத்து நிற்கின்றனர்.

கிரேக்கம் முழுவதும் 700 க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களின் பிரிவுகள் ஒற்றுமையுடன் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன, அதே நேரத்தில் மேம்படுத்தப்பட்ட வேலை நிலைமைகளையும் கோருகின்றன. ஏதென்ஸில் பிரையஸ் துறைமுகத்திலுள்ள தொழிலாளர்கள் 24 மணிநேரமும் அனைத்து கப்பல்களையும் தடுத்தனர், மேலும் ஒரு வேலைநிறுத்தம் கிரேக்க தீவுகளுக்கு சேவை செய்யும் ஏதென்ஸிலிருந்து 58 விமானங்களை இரத்து செய்யக்கோரி ஒலிம்பிக் ஏர் நிறுவனத்தைக் கட்டாயப்படுத்தியது. மேலதிக ஊழியர்களையும், பெருந்தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்கான விஞ்ஞானரீதியான அணுகுமுறையையும் கோரி மருத்துவமனை மருத்துவர்கள் சுகாதார அமைச்சின் முன் அணிவகுத்துச் சென்றனர்.

கிரேக்கத்தில் பல தொடர்புகளைக் கொண்டிருக்கும் NPA இன் மௌனம் இன்னும் குறிப்பிடத்தக்கது. OKDE-ஸ்பார்டகோஸ் (OKDE-Spartakos) கட்சி நேரடியாக NPA உடன் இணைந்திருக்கும், மற்றும் மத்தியதர வர்க்க Antarsya கூட்டணியின் ஒரு பகுதியாகும், அதன் உயர் பள்ளி ஆக்கிரமிப்பு பற்றிய துண்டுப் பிரசுரங்கள் ஆன்லைனில் காணப்படுகின்றன. 2015இல் சிக்கன-ஆதரவு சிரிசா ("தீவிர இடதுகளின் கூட்டணி") தேர்ந்தெடுக்கப்பட்டதை NPA ஆதரித்தது மற்றும் பாராட்டியது; சிரிசாவின் முக்கிய ஐரோப்பிய கூட்டாளியான பொடெமோஸின் (Podemos) சிக்கன ஆதரவு அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஸ்பானிய Anticapitalistas கட்சியின் மூலம் அது இன்னும் சிரிசாவுடன் இறுக்கமாகத் தொடர்பு கொண்டிருக்கிறது.

இந்தப் போராட்ட இயக்கம் குறித்து NPA மெளனமாக இருக்கவில்லை, ஏனெனில் NPA அதன் இருப்பை அறிந்திருக்கவில்லை, மாறாக மூலதன முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்திற்கு கவனத்தை ஈர்க்க வேண்டாம் என்று NPA முடிவு செய்துள்ளது. கிரேக்கத்தில் போராட்டமானது ஐரோப்பா முழுவதும் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வங்கிகள் மற்றும் ஆளும் வர்க்கத்தால் சுமத்தப்பட்ட முன்கூட்டிய வேலைக்கு மற்றும் பள்ளிக்கு திரும்பும் கொள்கைக்கு எதிரான ஐரோப்பிய அளவிலான மற்றும் சர்வதேச போராட்டமாக உருவாகும் சாத்தியம் உள்ளது.

ஆனால் Révolution Permanente இன் மெளனம் 2009 இல் NPA நிறுவப்பட்டதிலிருந்து வலதுநோக்கிய பரிணாமத்தை கவனத்துடன் பின்தொடர்ந்ததை எவரும் ஆச்சரியப்படப் மாட்டார்கள். நேட்டோவின் பினாமிப் போர்களில் லிபியா மற்றும் சிரியாவில் இஸ்லாமியவாதப் படைகளுக்கு ஆதரவு கொடுக்கத் தொடங்கிய குறுகிய காலத்திற்குப் பின்னர், 2015 இல் NPA ஆனது இந்த வலைத் தளத்தை தொடங்கியது. சிஐஏ ஆதரவு பெற்ற இஸ்லாமியவாதிகளாக இருந்த "புரட்சியாளர்களை" ஆயுதபாணியாக்குமாறு பாரிசிற்கு NPA இன் செய்தித் தொடர்பாளர் ஒலிவியே பெசன்ஸநோ அழைப்பு விடுத்த பின்னர், NPA பிப்ரவரி 2014 இல் உக்ரேனில் நேட்டோவின் பாசிச-தலைமையிலான ஆட்சிக் கவிழ்ப்பிற்கு ஆதரவு கொடுத்ததோடு, ஜனவரி 2015 இல் கிரேக்கத்தில் சிரிசா தேர்ந்தெடுக்கப்படவும் ஆதரவு அளித்தது.

சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தனது தேர்தல் வாக்குறுதிகளை சிரிசா காட்டிக்கொடுத்தும் சமூக வெட்டுக்களில் பில்லியன் கணக்கான யூரோக்களை விதித்தமையால் கிரேக்க பொது மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளை பேரழிவிற்கு உட்படுத்திய பின்னர், இப்பொழுது கோவிட்-19 வைரஸால் அச்சுறுத்தப்படுவதை NPA ஆனது அதன் இடதில் ஆபத்தை உணர்ந்துள்ளது. ஆர்ஜென்டின PTS உடன் ஒத்துழைப்பதற்கான ஒரு இழிந்த முயற்சியின் ஒரு புதிய தயாரிப்பு வடிவமாக Révolution Permanente வலைத் தளத்தை இது நிறுவியது.

தன்னுடைய முந்தைய அரசியல் குற்றங்களை மூடி மறைக்கும் ஒரு சிடுமூஞ்சித்தனமான முயற்சியில், NPA ஆனது நேர்மையற்ற முறையில் Révolution Permanente வலைத் தளத்தில் NPA ஏற்கனவே பாராட்டி இருந்த போர்களைக் கூட கண்டனம் செய்தது.

இவ்வாறு, சிரியாவில் போருக்கு அதன் முந்தைய ஆதரவைக் குறிப்பிடாமல், Révolution Permanente ஒரு கட்டுரையில், "தொழிலாளர் இயக்கம், இளைஞர்கள் மற்றும் பிரான்சிலுள்ள அனைத்து ஒடுக்கப்பட்டவர்களின் பார்வையிலிருந்து, முதலும் மற்றும் முக்கியமாக சிரியாவிலும், பிராந்தியத்திலும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சிகளை அது கண்டிப்பதோடு, எந்த பிரெஞ்சு இராணுவத் தலையீட்டையும் எதிர்ப்பது பற்றிய ஒரு கேள்வியாகவும் இருக்கிறது. சிரியாவில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கு எந்த வெற்றியும் உள்நாட்டில் சுரண்டுபவர்களுக்கும் ஒடுக்குபவர்களுக்கும் வெற்றியாகும். எங்கள் பிரதான எதிரி வீட்டில் தான் இருக்கிறார்!" என்று எழுதியது.

இந்த காலகட்டம் முழுவதும் சிரியாவில் NPA யினுடைய உற்சாகமான ஆதரவைப் பெற்று வந்த தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் "பிரதான எதிரி" என்பதுதான் என்று Révolution permanente ஆனது இந்த விடயத்தை மட்டும் எழுப்பவில்லை.

இந்த இழிந்த அறிவிப்புகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் அவர்களின் பங்குக்கு நன்றி கூற வேண்டும், கடந்த ஆண்டு குளிர்காலத்தில் இரயில்வே தொழிலாளர்கள் மற்றும் பாரிஸ் வெகுஜன போக்குவரத்துக்கள் ஆகியவைகளின் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்வதில் Révolution Permanente இன் ஆதரவாளர்கள் இணைந்திருந்தனர். அவர்கள் வேலைநிறுத்தங்களை ஒரு முட்டுச் சந்துக்கு கொண்டு சென்றனர், அவர்களுக்கு எந்த முன்னோக்கும் இருக்கவில்லை. பிரான்சில் மே-ஜூன் 1968 இல் நடந்ததற்குப் பின் இந்த மிக நீண்டதொரு கால வேலைநிறுத்தத்திற்கு பின்பே, இரயில்வே தொழிலாளர்களின் வேலை மற்றும் ஊதிய உத்தரவாதங்களை மக்ரோன் பலவந்தமாக அழிப்பதன் மூலமாக இரயில்வே அமைப்பு முறையை போட்டிக்குத் திறந்துவிட்டதுடன், தேசிய இரயில்வேயை (SNCF) பகுதியளவில் தனியார்மயமாக்கினார்.

இந்த ஆண்டு இலையுதிர்காலத்தில், ஆளும் வர்க்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் தலைமையிலான பள்ளிக்கு மீண்டும் செல்லும் நடவடிக்கைக்கு "இடது" மூடிமறைப்பை அவர்கள் வழங்கினர், இளைஞர்களிடையே எதிர்ப்பைத் தூண்டிவிட்டு, பள்ளிக்கு மீண்டும் செல்லும் நடவடிக்கையில் பயன்படுத்தப்படும் சுகாதார நெறிமுறைகளை (health protocols) மேம்படுத்துவதற்கான திவாலான முன்னோக்குக்கு பின்னால் உள்ளனர். இலவச முகக்கவசங்கள் மற்றும் பரிசோதனை போன்ற இந்த "போர்க்குணமிக்க" கோரிக்கைகள் இருந்தபோதிலும், அவைகள் உத்தியோகபூர்வ கொள்கையுடன் சிறிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருந்தன. "வைரஸுடன் வாழ கற்றுக்கொள்வது அவசியம்" என்ற ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுடைய கொள்கையுடன் அடிப்படையில் அவர்கள் உடன்பட்டனர்.

தொழிற்சங்கங்கள் மற்றும் கல்வியாளர்களிடமிருந்தும் NPA இன் அதே சலுகை பெற்ற சமூக அடித்தளத்தை Révolution Permanente ஆனது பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது ஒரு பெஸன்செநோவின் அதே வர்க்க நோக்குநிலையைப் பகிர்ந்து கொள்கிறது, அவர் பிற்பகலில் ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்ட அணிவகுப்பில் கலந்துகொள்கிறார், பின்னர் மாலையில் பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி (PS) போன்ற ஏகாதிபத்திய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பல தசாப்த கால துரோகங்களால் மதிப்பிழந்த பழைய அதிகாரத்துவங்களுக்கு மாற்றீட்டைத் தேடும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை இது திசைதிருப்ப முயல்கிறது, இதனால்தான் தொழிற்சங்க உயர் அதிகாரிகள் மற்றும் அவர்களின் அரசியல் ஆலோசகர்களின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிக்கக்கூடிய எந்தவொரு வெகுஜன இயக்கத்தையும் தவறாக வழிநடத்தி நெரிக்கிறது.

ஐரோப்பா முழுவதும் ஆயிரக்கணக்கான மரணங்கள் மற்றும் நூறாயிரக்கணக்கான பெருந்தொற்றுகளுக்கு வழிவகுக்கும் ஒரு பிற்போக்குத்தனமான பொது சுகாதாரக் கொள்கைக்கு அவர்கள் அளித்த ஆதரவின் பின்னால், அதிகாரத்துவவாதிகள் மற்றும் கல்வியாளர்களின் பொருள்சார் வர்க்க நலன்கள் உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் டிரில்லியன் யூரோக்கள் பெருந்தொற்று பிணை எடுப்புக்களானது தொழிற்சங்கங்களுக்கும் பணிக்குழு (works council) கூட்டங்கள் மூலமாகவும் பல்கலைக்கழகங்களுக்கான ஆராய்ச்சி சபைகள் மூலமாகவும் வழங்கப்படும் என்பதை அறிந்த அவர்கள், ஐரோப்பிய ஒன்றியக் கொள்கையை ஆதரிக்கின்றனர். தொழிலாளர்களுக்கு எதிரான ஒரு கொடிய கொள்கையை ஆதரிப்பதன் மூலம், அவர்கள் வழக்கமான நிதியுதவியை தொடர்ந்து பெறுவார்கள். சுருக்கமாக வேறுவார்த்தையில் கூறுவதானால், அவர்கள் முற்றிலும் ஊழல் நிறைந்தவர்கள் மற்றும் பல ஆண்டுகளாக தங்களுக்கான தீனியை எப்பொழுதும் பெற்றுக்கொண்டிருந்தார்கள்.

COVID-19 பெருந்தொற்று நோய்களில் NPA ஆற்றிய பங்கு குறித்து சோசலிச சமத்துவக் கட்சி(PES - Parti de l’égalité socialiste) தனது எச்சரிக்கைகளை மீண்டும் வலியுறுத்துகிறது. முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள் பின்பற்றும் குற்றவியல் கொள்கைகளுக்கு எதிராக வர்க்கப் போராட்டத்தின் வெடிப்புகள் மற்றும் இளைஞர்களின் போராட்டங்கள் உலகம் முழுவதும் நடந்து வருகின்றன.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் சர்வதேச அளவில் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக தங்களை ஒழுங்கமைக்க வேண்டியது அவசியமாகும், தொழிலாளர்களுக்கு அதிகாரத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பொது வேலைநிறுத்தத்தைத் தயாரிப்பதற்காக, அவர்களின் பணியிடங்கள் அல்லது பள்ளிகளில் சாமானிய மற்றும் பாதுகாப்புக் குழுக்களை அமைக்க வேண்டும். அத்தகைய முன்னோக்கு மட்டுமே தொழிலாளர்கள் வைரஸை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான சர்வதேச வளங்களைக் கட்டுப்படுத்துவதை உறுதி செய்யும். அத்தகைய போராட்டத்தை நடத்துவதற்கு Parti de l’égalité socialiste (PES) இன் அவசியமான புரட்சிகர தலைமை மிக முக்கியமானது, ஏனெனில் PES ஆனது அரசு எந்திரம் மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் ஒரு கருவியாக இருக்கும் NPA இன் தலைமை போன்றது அல்ல.

Loading