உலக வங்கி: கோவிட்-19 மூலம் தெற்காசியாவின் பொருளாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட தெற்காசியா பொருளாதார பிரதான பார்வை, வீழ்ச்சி 2020 அறிக்கையானது 1.38 பில்லியன் மக்கள் அல்லது உலக மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியைக் கொண்ட ஒரு பிராந்தியத்தில் கோவிட்-19 மூலம் கூர்மையான பொருளாதார தாக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

“அடித்து துவைக்கப்பட்ட அல்லது நொறுக்கப்பட்ட? அறிவிக்கப்படாத மற்றும் கோவிட்-19,” என்று தலைப்பிடப்பட்ட அறிக்கை, தென் ஆசியா அதன் மிக மோசமான மந்தநிலையை அனுபவித்து வருவதாகவும், அதன் பொருளாதார நடவடிக்கைகள் “கிட்டத்தட்ட ஸ்தம்பித்து நிற்கும்” நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறுகிறது. இந்த ஆண்டு பிராந்திய பொருளாதாரம் 7.7 சதவீதமும், இந்தியா 9.9 சதவீதமும், மாலைதீவு 19.5 மற்றும் இலங்கை 6.8 சதவீதமும் சுருங்கும் என்று முறையாக மதிப்பிட்டுள்ளது.

தென் ஆசியா 2021 ஆம் ஆண்டில் 4.5 சதவிகிதத்தால் மீட்சியடையும் என்றாலும், அதன் தனிநபர் வருமானம் 2019 ஐ விட 6 சதவீதம் குறைவாகவும், அதன் மக்கள் தொகை அந்த ஆண்டை விட மிகவும் ஏழ்மையாகவும் இருக்கும் என்று உலக வங்கி நம்பிக்கையுடன் எதிர்ப்பார்க்கிறது .

மொத்த தொழிலாளர்களில் முக்கால்வாசி பேர் அமைப்புமுறை சாரா துறையில் இருப்பதாக மதிப்பிட்டுள்ள அந்த அறிக்கை, “2020 ஆம் ஆண்டில் வேறு எந்த பிராந்தியத்தையும் விட தென் ஆசியாவில் மிக அதிக அளவுள்ள ஏழைகளின் வரிசையில் கூடுதலான மக்கள் சேர்க்கப்படுவார்கள்” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

தென் ஆசிய பொருளாதார குவி மையம்

அக்டோபர் 14 அன்று, தென் ஆசியாவில் எட்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைராஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் மற்றும் 1,25,000 பேர் இறந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. எப்படியிருந்தாலும் இத்தகைய பதிவுகள் நம்பத்தகுந்தவையாக இல்லை. ஏனேனில் சோதணைகள் குறைவாக இருப்பதும் மற்றும் அரசாங்கத்தின் உத்தரவால் நோய்த் தொற்றை குறைத்துக் காட்டுவதற்கு வேண்டுமென்றே தரவுகளை சேகரிப்பதில் அலட்சியம் காட்டப்படுகிறது.

இந்தியாவில் மில்லியன் கணக்கான வேலைகள் அழிக்கப்பட்டிருக்கின்றன, நகர்ப்புற வறுமையில் கூர்மையான அதிகரிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன மேலும் “புதிய ஏழைகள்” உருவாகியுள்ளனர் என்று “அடித்து துவைக்கப்பட்ட அல்லது நொறுக்கப்பட்ட? அறிவிக்கப்படாத மற்றும் கோவிட்-19,” என்ற அறிக்கை தெரிவிக்கிறது.

தொற்றுநோய்க்கு முன்னர் ஏற்கனவே மந்தமாக இருந்த இந்திய பொருளாதார வளர்ச்சி, ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டுவரை முன்எதிர்பார்க்காத வகையில் கிட்டத்தட்ட 25 சதவீத அளவுக்கு சுருக்கம் கண்டது. இந்த காலாண்டில் 18.9 மில்லியன் நிரந்தர வேலைகள் அழிக்கப்பட்டிருப்பதாக. ஒரு தற்சார்பான அமைப்பான இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் (Centre for Monitoring Indian Economy - CMIE) கூற்று இருக்கிறது.

பாகிஸ்தானும் ஏற்கனவே மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது குறிப்பாக அதன் சேவைத் துறை, அதன் ஒட்டுமொத்தப் பொருளாதாரம் 1.5 சதவீத சுருக்கம் மற்றும் வறுமையில் ஒரு தீவிரமான அதிகரிப்பும் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நுகர்வோர் விலை பணவீக்கம் (consumer price inflation ) ஏற்கனவே 10.7 சதவீதமாக உயர்ந்துள்ளது மேலும் இந்த ஆண்டு இதுவரை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 13.8 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

பங்களாதேஷின் பொருளாதார வளர்ச்சி 2019 இன் 8.1 இலிருந்து இந்த ஆண்டு 2 சதவீதமாக வீழ்ச்சியடையும் என்றும் மேலும் “வேளாண்மை அல்லாத துறையில் தினசரி மற்றும் சுயதொழில் உழைப்பாளர்கள் மற்றும் உற்பத்தித் துறையின் சம்பளம் பெறும் தொழிலாளர்கள்” மீது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் வறுமை “கணிசமான அளவு அதிகரிக்கும்” என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலக வங்கியின் கூற்றுப்படி, கோவிட்-19க்கு உடனடி முன்னரான வழக்கமான வருவாயுடன் ஒப்பிடம்போது, பங்களாதேஷ் இல் மாத சம்பளம் மற்றும் தினசரி தொழிலாளர்களின் சராசரி வருமானங்கள் 37 சதவீதமாக சரிந்துள்ளது. இது நாட்டின் 166 மில்லியன் மக்கள்தொகையில் 26 மில்லியனாக உள்ள சுமார் 68 சதவீத நேரடியாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் டாக்கா மற்றும் சிட்டாகாங் நகரங்களில் குவிந்திருக்கின்றனர்.

அமெரிக்க தலைமையிலான 20 வருட ஆக்கிரமிப்பு மற்றும் ஆக்கிரமிப்பால் ஏற்கனவே பேரழிவை முகங்கொடுத்துக்கொண்டிருக்கிற ஆப்கானிஸ்தானில், நலிவடைந்திருக்கும் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் கோவிட்-19 ஆல் வர்த்தக ரீதியிலான இடையூறுகள் ஆகியவற்றால் வருவாயில் ஒரு 30 சதவீத வீழ்ச்சியை அனுபவிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

2019 இல் 2.3 சதவீதமாக வளர்ச்சியடைந்திருந்த இலங்கைப் பொருளாதாரம், 2020 இன் முதல் காலாண்டில் 1.6 சதவீதம் சுருங்கியுள்ளது என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இந்த வீழ்ச்சி கட்டுமானம், ஆடை, சுரங்க மற்றும் தேயிலை தொழில்கள் ஆகியவற்றின் பலவீனமான செயல்பாடுகளால் உந்தப்பட்டிருக்கிறது. வரவு செலவு கணக்கின் பற்றாக்குறை 2019 இல் 6.8 சதவீதத்திலிருந்து 11.1 சதவீதமாக பெருகும் என மதிப்பிடப்பட்டுள்ளது மற்றும் மொத்த உள்ளநாட்டு உற்பத்திக்கு கடன் வீதம் (debt-to-GDP) 2019 இல் 86.8 சதவீதத்திலிருந்து 100 சதவீதத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூடிஸ் (Moody’s) இலங்கையின் கடன் பெறு தகுதி நிலையை செப்டம்பர் 28 இல் B2 விலிருந்து CAA1 ஆக தரமிறக்கியிருப்பது, தற்பொழுதுள்ள பொருளாதார நெருக்கடி எவ்வாறு தொற்று நோயால் மோசமடைந்திருக்கிறது என்பதை மேலும் எடுத்துக் காட்டுகிறது. இலங்கையின் கடன் பெறு தகுதி நிலை என்பது வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத நிலைக்கு சற்று மேலேயும் மற்றும் ஈராக், அங்கோலா, காங்கோ மற்றும் மாலி போன்றவற்றின் அதே நிலையில் இருக்கிறது.

ஆடைத் தொழில் ஏற்றுமதிகள், சுற்றுலா மற்றும் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புதல் போன்றவற்றிலிருந்து தொடர்ந்து வருவாய் பலவீனமாக இருப்பதாக மூடிஸ் குறிப்பிட்டிருப்பதுடன் மேலும் “முதலீட்டாளர் மனோபாவத்திற்கு” மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக “அரசாங்க கொள்கையின் நம்பகத் தன்மை” இருப்பதாக கூறியுள்ளது.

வெளிப்புற கடன் சேவைக்கான கொடுப்பனவுகள் 2020 மற்றும் 2025 க்கு இடையில் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு அடையும் நிலையில், அரசாங்கத்தின் பணப்புழக்கம் மற்றும் வெளிப்புற அபாயங்கள் உக்கிரமடையும் என மூடிஸ் மதிப்பிடுகிறது.

இராஜபக்ஷ அரசாங்கம் தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட வேலையிழப்புகள் குறித்த எந்தவொரு புள்ளிவிபரங்களையும் வெளியிடாத நிலையில், யூலையில் உற்பத்தி துறையில் மட்டும் கிட்டத்தட்ட 4,00,000 வேலையிழப்புகள் எற்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை குறிப்பிட்டுள்ளது. அமைப்புசாரா துறையில் சுமார் 40 சதவீதம் இலங்கை தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இது மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

சுமார் 515,600 மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் மாலைதீவு மிகப்பெருமளவில் சுற்றுலாத்துறையை நம்பியிருக்கிறது. இதில் நேரடியாக 20,000 பேர் வேலை செய்கிறார்கள். இதில் பருவகாலத் தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் விருந்தினர் மாளிகை தொழிலாளர்கள் உள்ளடங்கமாட்டார்கள். கோவிட்-19 இந்த துறையை செயலிழக்க வைத்திருப்பதுடன் மற்றும் பல்லாயிரக்கணக்கான வேலைகளை அழிக்க வழிவகுத்திருக்கிறது.

“சுற்றுலாதுறை வருவாய் யூலை நடுப்பகுதியில் எல்லைகள் திறக்கப்பட்டபின்னரும் அதே சோர்வு நிலையில்தான் இருக்கிறது. யூலை 15க்கும் செப்டம்பர் 15க்கும் இடையில் 13,787 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே வந்திருக்கிறார்கள், ஆண்டுக்கு ஆண்டு 95 சதவீதம் சரிவடைந்துவருகிறது, சர்வதேச வர்த்தக விமானசேவைகள் நாளொன்றுக்கு சராசரி எண்ணிக்கை நான்காக குறைந்துள்ளது (தொற்று நோய் பரவலுக்கு முன்னர் ஒப்பிடும்போது அது 40 ஆக இருந்துள்ளது) மற்றும் அனைத்து உல்லாச விடுதிகளில் பாதி மூடப்பட்டிருக்கின்றன.” என்று உலக வங்கி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

நேபால் மற்றும் பூட்டான் போன்ற பிற தென் ஆசிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு குறித்தும் “அடித்து துவைக்கப்பட்ட அல்லது நொறுக்கப்பட்ட? அறிவிக்கப்படாத மற்றும் கோவிட்-19,” என்ற அறிக்கை குறிப்பிட்டுள்ளது. நேபாளத்தின் பொருளாதார வருவாய் கடந்த ஆண்டு இருந்த 7 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மேலும் பூட்டானின் பொருளாதார வருவாய் கடந்த ஆண்டின் 3.8 சதவீத வளர்ச்சி 1.8 ஆக குறைக்கப்படும்.

தொழிற்துறையில் வளர்ச்சியடைந்த நாடுகளுடன் தென் ஆசியாவை ஒப்பிட்டு அந்த அறிக்கை இவ்வாறு குறிப்பிடுகிறது; “தென் ஆசியா போன்ற குறைந்த வருமானம் பெறும் நாடுகளில் உள்ள மக்கள் சமமற்ற முறையில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஏனெனில் அவர்கள் செறிவான நகர பகுதிகளில் அவர்களுடைய வேலை நிலைமைகளூடாக வைரஸ் தொற்றுக்கு அதிகளவில் பாதிப்புக்குள்ளாகிறார்கள் மேலும் சிறந்த காற்றை சுவாசிப்பதற்கு அவர்களுக்கு குறைவான வாய்ப்புகளே உள்ளன.

“கோவிட்-19 தென் ஆசியாவில் வரும் ஆண்டுகளில் ஆழமாக அதிகரிக்கும்” என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. மேலும் “நிலையான எதிர்காலத்திற்காக” “புத்திசாலித்தனமாக வடிமைக்கப்பட்ட மீட்புத் திட்டங்கள்” வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது.

“புத்திசாலித்தனமாக வடிமைக்கப்பட்ட மீட்புத் திட்டங்கள்” என்ற நம்பிக்கைகள் முதலாளித்துவத்தின் கீழ் ஒரு வீண் கனவாகும். உண்மையில் இந்த தொற்றுநோய் இந்த பிராந்தியத்திலும் மற்றும் சர்வதேச அளவிலும் ஏற்கனவே உருவாகியிருக்கும் பொருளாதார சரிவு நெருக்கடிகளை மேலும் துரிதப்படுத்தியிருக்கிறது.

தென் ஆசிய அரசாங்கங்கள் மற்ற சர்வதேச அளவில் உள்ள சகபாடிகளை போலவே மீண்டும் வேலைக்கு திரும்புவதற்காக “சமூக நோய் எதிர்ப்புசக்தி” எனும் படுகொலைக் கொள்கைகளை அமுல்படுத்திவருகின்றன மேலும் சம்பளம் மற்றும் வேலைகள் குறைப்பு மற்றும் நீண்ட வேலை நேரங்களில் சுரண்டலை அதிகரிக்க நிறுவனங்களுக்கு ஆதரவாக முத்திரை குத்துகிறது

இந்தியாவில் மோடி அரசாங்கம், இலங்கையில் இராஜபக்ஷ நிர்வாகம் மற்றும் இந்த பிராந்தியத்தின் ஒவ்வொரு அரசும், அதிகரித்துவரும் சமூக கோபத்தைப் குறித்து பீதி அடைந்துள்ளதுடன் சர்வாதிகார ஆட்சி வடிங்களை நோக்கி வேகமாக நகர்கின்றன.

Loading