பங்களாதேஷ் தொழிற்சங்கம் துறைமுக தொழிலாளர்களின் தேசிய வேலைநிறுத்தப் போராட்டத்தை நிறுத்திவிட்டது; அசாம் ரயில்வே தொழிலாளர்கள் திருவிழா கொடுப்பனவைக் கோருகிறார்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தியா: பஞ்சாப் அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் வழக்கமான வேலைவாய்ப்பை கோருகிறார்கள்

அக்டோபர் 16 அன்று சங்ரூரில், நிரந்தர வேலைகளுக்கான நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கோரிக்கையை மாநில அரசு நிறைவேற்றவேண்டும் எனக் கோரி பஞ்சாப் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஒப்பந்த ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களல்லாத தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்துக்கு ஜனநாயக ஆசிரியர் முன்னணி அழைப்பு விடுத்திருந்தது. இது மே மற்றும் ஜூன் மாதங்களில் அரசாங்கத்திற்கு கோரிக்கைகளின் குறிப்புகளை அனுப்பியிருந்தது, ஆனாலும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. ஆர்ப்பாட்டக்காரர்கள் பதவி உயர்வு மற்றும் வீட்டிலிருந்து வேலைக்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய ஆசிரியர்களை சிறப்பு இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அசாம் மாநில இரயில்வே தொழிலாளர்கள் திருவிழா கொடுப்பனவை கோருகின்றனர்

அக்டோபர் 18 அன்று அசாம் மாநிலத்தின் பல நகரங்களிலுள்ள 52 வேலைத் தளங்களில் வடகிழக்கு எல்லை ரயில்வே தொழிலாளர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், துர்கா பூஜைக்காக (ஒரு மத விழா) போனஸை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களின் கோரிக்கையை அரசாங்கம் புறக்கணித்தால் முழு ரயில் தொடர்பு அமைப்பையும் நிறுத்தப்போவதாக அவர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். .

அடுத்த நாள் தக்ஷின் ரயில்வே ஊழியர் சங்கத்தால் அணி திரட்டப்பட்ட தொழிலாளர்கள் அதே போனஸைக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஹரியானா ஆட்டோ ஆலை தொழிலாளர்கள் தொழிலாளர் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்

அக்டோபர் 15 ம் தேதி ஹரியானா மாநிலத்தின் குருகிராமில் உள்ள சிறிய செயலகத்திற்கு வெளியே பெல்சோனிகா ஆட்டோ காம்பனென்ட் இந்தியா (BACI) ஆலையைச் சேர்ந்த தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். BACI ஊழியர் சங்கத்தின் எட்டு அலுவலக பொறுப்பாளர்கள் எட்டு மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர், மேலும் மற்ற தொழிலாளர்களும் அவர்கள் பணிநேரம் முடித்தவுடன் இவர்களுடன் இணைந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் இந்திய அரசாங்கத்தின் சமீபத்திய தொழிலாளர் சட்டங்களை எதிர்ப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. புதிய சட்டம் தொழிலாளர்களின் உரிமைகளை பலவீனப்படுத்துகிறது. தொழிலாளர்களை சுரண்டுவதற்கு முதலாளிகளுக்கு ஒரு சுதந்திரத்தை வழங்குகிறது மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று அந்த தொழிற்சங்கம் கூறியது.

நிறுவனத்தின் 1,200 தொழிலாளர்களை உள்ளடக்கிய மூன்று ஆண்டு ஒப்பந்தத்திற்காக தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த நிறுவனம் மறுப்பதற்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 20 மாதங்களாக எந்த பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை.

ஆந்திர பிரதேச மாநில நகராட்சி தொழிலாளர்கள் வழங்கப்படாத ஊதியத்தை கோருகின்றனர்

ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சித் தொழிலாளர்கள் கடந்த இரண்டு வாரங்களாக வழங்கப்படாமலிருக்கும் மூன்று மாத சம்பளத்தை உடனடியாக வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்காக நவம்பர் 2 ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளனர்.

கழிவு சேகரிப்பைக் கண்காணிக்கும் உண்மையான நேர கண்காணிப்பு கருவி (Real Time Monitoring System - RTMS) மூலம் நகராட்சி அதிகாரிகள் தங்களைத் துன்புறுத்துவதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறைந்தபட்ச ஊதியத்தை மாதத்திற்கு 24,000 ரூபாயாக (326 அமெரிக்க டாலர்) உயர்த்தவும், RTMS முறையை ஒழிக்கவும், ஒப்பந்தத் தொழிலாளர்களை முழுநேர வேலைகளுக்கு மாற்றவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பங்களாதேஷ்: துறைமுக தொழிற் சங்கங்கள் தேசிய வேலைநிறுத்தத்தை தீர்மானமின்றி நிறுத்துகின்றன

பங்களாதேஷ் நீர் போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பு (BWTWF) மற்றும் பங்களாதேஷ் லைட்ரேஜ் தொழிலாளர் சங்கம் ஆகியவை அவர்களது 11 கோரிக்கைகள் குறித்து தீர்வு இல்லாமல் மூன்று நாட்களுக்குப் பிறகு 200,000 நீர் போக்குவரத்து தொழிலாளர்களின் தேசிய வேலைநிறுத்தத்தை நிறுத்திவிட்டன.

சடோகிராம் மற்றும் மோங்லா போன்ற முக்கிய துறைமுகங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள துறைமுகங்களில் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். மில்லியன் கணக்கான டன் சரக்கு போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன.

வேலைநிறுத்தம் செய்தவர்கள் 2016 ஆம் ஆண்டில் அரசிதழ் (gazette) இல் அறிவிக்கப்பட்டதற்கு ஏற்ப சம்பளம் வழங்கல், கப்பல் நிறுத்துமிட அனுமதி, நியமனக் கடிதங்கள் மற்றும் அடையாள அட்டைகள், இந்தியாவுக்குச் செல்லும் கப்பல் தொழிலாளர்களுக்கு உணவுக்கு கொடுப்பனவு வழங்குதல் மற்றும் பணியிட விபத்துக்களில் கொல்லப்பட்ட தொழிலாளர்களுக்கு ஒரு மில்லியன் டக்கா (11,798 அமெரிக்க டாலர்) இழப்பீடு வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கைகளில் ஒன்றான உணவுக்கான கொடுப்பனவுகளை வழங்குதல் என்ற கோரிக்கையை மட்டும் முதலாளிகள் ஒப்புக் கொண்ட பின்னர் தொழிற்சங்கங்கள் விரைவாக வேலைநிறுத்தப் போராட்டத்தை முடித்துக்கொண்டுவிட்டன.

துர்கா பூஜா திருவிழா காரணமாக பயணிகள் போக்குவரத்துக் கப்பல்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் சேரவில்லை.

பங்களாதேஷ்வேலையற்ற உதவிபள்ளிஆசிரியர்கள்உண்ணாவிரதப்போராட்டம்

அக்டோபர் 13 முதல் வேலைவாய்ப்பு கோரி நூற்றுக்கணக்கான வேலையற்ற தொடக்கப்பள்ளி உதவி ஆசிரியர்கள் டாக்காவில் உள்ள தேசிய பத்திரிகைகயாளர் சங்கத்திற்கு வெளியே உண்ணாவிரததப் போராட்டம் செய்துள்ளனர். ஆட்சேர்ப்புக்கு தேவையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதாகக் கூறிய உதவி ஆசிரியர்கள், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தைத் தொடரப்போவதாக உறுதி அளித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டம் செய்த சணல்ஆலைத் தொழிலாளர்களின் மீது பங்களாதேஷ் பொலிஸ்தாக்குதல்

திங்களன்று குல்னா-ஜஷோர் நெடுஞ்சாலையில் நடந்த போராட்டத்தை கலைக்க பொலிசார் தடியடி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான சணல் ஆலைத் தொழிலாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பலத்த காயமடைந்தனர். குறைந்தது 22 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளதுடன் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசாங்கத்திற்கு சொந்தமான மூடப்பட்ட சணல் ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரினர்.

ஆகஸ்ட் மாதம் ஆலைகளை மீண்டும் திறக்கக் கோரி நூற்றுக்கணக்கான சணல் ஆலைத் தொழிலாளர்கள் மற்றும் சணல் விவசாயிகள் குல்னா மற்றும் டாங்கைலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஜூலை மாதம், அரசாங்கம் அரசுக்கு சொந்தமான 25 சணல் ஆலைகளை அவை நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி மூடியுள்ளது. ஒரே இரவில் சுமார் 50,000 தொழிலாளர்கள் வேலை இழந்தனர், ஆயிரக்கணக்கான சணல் விவசாயிகளுக்கு வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆலைகள் பொது மற்றும் தனியார் உரிமை அல்லது குத்தகையின் கீழ் மீண்டும் திறக்கப்படும் என்று அரசாங்கம் கூறுகிறது.

பாகிஸ்தான்: லேடி சுகாதார தொழிலாளர்கள் ஏழுநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர்

செவ்வாயன்று இஸ்லாமாபாத்தில் தேசிய சட்டமன்றத்திற்கு வெளியே நடந்த 500 க்கும் மேற்பட்ட தேசிய திட்ட சுகாதார ஊழியர்கள் கூட்டமைப்பு உறுப்பினர்களின் ஏழு நாள் வேலைநிறுத்தம் மற்றும் உள்ளிருப்பு போராட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. லேடி சுகாதார தொழிலாளர்கள் (Lady Health Workers -LHW) திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் தங்கள் தொழில்துறை நடவடிக்கையை முடித்துக் கொண்டனர். அவர்கள் ஊதிய உயர்வு, மேம்பட்ட சேவை அமைப்பு மற்றும் பணிக் கொடை மற்றும் பணியிலிருக்கும்போது பாதுகாப்பு ஆகியவற்றைக் கோரினர்.

பாகிஸ்தான் முழுவதும் LHW திட்டத்தில் 100,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். நிரந்தர சுகாதார வசதிகள் இல்லாத பெரும்பாலான கிராமப்புறங்களில், LHW தடுப்பூசிகள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளை இயங்கும் பிரிவாக வழங்குகிறது. ஒரு மாதத்திற்கு சுமார் 20,000 ரூபாய் (123.27 அமெரிக்க டாலர்) மட்டுமே சம்பளம் பெறும் இத் தொழிலாளர்கள், பாகிஸ்தான் தொழிலாள வர்க்கத்தின் மிகவும் சுரண்டப்பட்ட பிரிவுகளில் ஒரு பிரிவினராவர். நிரந்தர பதவிகளுக்கான பல வருட போராட்டங்களுக்குப் பிறகும், இன்னும் சிலர் ஒப்பந்தமுறையில்தான் பணியில் உள்ளனர்.

இலங்கை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சாலை மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

நுவரெலியா மாவட்டத்தின் முக்கிய தேயிலைத் தோட்டப் பகுதியான கோட்மலேவில் உள்ள ஹெல்போடா தோட்டத்தின் வடக்குப் பிரிவில் திடீரென தொழிற்சாலை மூடப்பட்டதால் வேலை இழந்த சுமார் 30 தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அக்டோபர் 16 ம் தேதி தொழிற்சாலைக்கு வெளியே உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். தோட்டத்தின் வேறு ஏதேனும் ஒரு பிரிவில் மீண்டும் வேலைவாய்ப்பு வேண்டுமென கோரினர். அவர்களுக்கு மற்ற பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆதரவளித்து இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்ட நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Loading