மரணத்திற்கு வழிவகுக்கும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட முதல் நாளில் அதற்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

விடுமுறைக்கு பின்னர் நேற்று பிரான்ஸ் முழுவதும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், மக்ரோன் நிர்வாகத்தின் மரணத்திற்கு வழிவகுக்கும் பள்ளி மீண்டும் திறக்கும் கொள்கைக்கு எதிராக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் வெகுஜன எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. ஆசிரியர்களின் கூட்டங்கள் நேற்று காலை பள்ளிகளில் கூடி வைரஸ் பரவாமல் தடுக்க பாதுகாப்பான நிலைமைகள் இல்லாததை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்ய தீர்மானித்தனர். மாணவர் மண்டபங்கள், வகுப்புகள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் மாணவர்கள் நெரிசலாக நிரம்பி சிக்கியிருப்பதைக் காட்டும் படங்கள் இணையத்தில் பரவலாக பகிரப்படுகின்றன.

பிரான்சில் 30,000 க்கும் அதிகமான மக்கள் மற்றும் ஐரோப்பா முழுவதும் 200,000 பேர்கள் கொல்லப்பட்ட முதலாவது அலையைக் காட்டிலும் இரண்டாவது அலை பெரியதாக இருக்கும் என்று அரசாங்கத்தின் விஞ்ஞான சபை எச்சரித்து இருந்தபோதிலும், அரசாங்கம் பள்ளிகளை மீண்டும் திறக்கிறது. பிரான்சில் இப்போது 37,000 க்கும் அதிகமான மக்கள் வைரஸால் இறந்துள்ளனர், மேலும் 416 இறப்புகள் திங்களன்று பதிவாகியுள்ளன.

மாணவர்களின் உளவியல் நலனைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாக அரசாங்கத்தின் இழிந்த கூற்றுக்கள் இருந்தபோதிலும், பள்ளி மீண்டும் திறக்கப்படுவது முற்றிலும் மாறுபட்ட அக்கறைகளால் இயக்கப்படுகிறது: பெற்றோர்கள் தொடர்ந்து பணியாற்ற முடியும் என்பதை உறுதிப்படுத்தவும், மற்றும் தொற்றுநோய் முழுவதும் பெரும் நிறுவனங்கள் தொடர்ந்து இலாபத்தைப் பெற முடியும் என்பதற்காகவும், இதன் விளைவாக எவ்வளவு உயிர்கள் இழக்கப்படுகின்றன என்பதைப் பொருட்படுத்தாமல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.

Students gather outside on the first day of the return to school

திங்களன்று காலை பிரான்ஸ் முழுவதிலுமுள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டங்களில், மக்ரோன் அரசாங்கத்திற்கு எதிரான டஜன் கணக்கான உள்ளூர் வேலைநிறுத்தங்கள் தொடர்பாக ஒரு ட்டுவீட்டர் தகவல் தெரிவிக்கிறது.

Balzac de Mitry-Mory பள்ளியில், நேற்று காலை 8 மணிக்கு 24 ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பாரிசிற்கு அருகே உள்ள Clichy-sous-Bois இல் Romain Rolland பள்ளியில், மேலும் 22 ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வாக்களித்தனர். பாரிசிற்கு அருகே உள்ள Epinay-sur-Seine உள்ள Feyder பள்ளியில் 47 ஆசிரியர்கள் காலை 8 மணிக்கு 100 சதவிகிதம் வேலை நிறுத்தம் செய்ய வாக்களித்தனர். இதில், 1,600 மாணவர்களில், 60 பேருக்குத்தான் வகுப்புகள் நடந்தன. பாரிசின் வடக்கேயுள்ள Pantin இல் உள்ள Berthelot பள்ளியில், "எதுவும் நடக்காதது போல்" வகுப்புகளுக்குத் திரும்பவேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிராக 28 ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்தனர்.

Chelles உள்ள Bachelard பள்ளியில், 20 ஊழியர்கள் தொற்றுநோயால் ஏற்பட்ட பாதுகாப்பற்ற நிலைமைகள் மற்றும் “சுகாதார நெறிமுறையை மதிக்காதது” காரணத்திற்காக தங்கள் “வேலைநிறுத்த உரிமையை” பதிவு செய்தனர்.

Clichy இல் உள்ள Jean Jaurs பள்ளியில், ஆசிரியர்கள் வெளிநடப்பு செய்தனர், நிர்வாகமானது பள்ளி மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்று குடும்பத்தினரிடம் கூறியது. Lagny இல் உள்ள Von Donghen பள்ளியில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் செய்வதாக மிரட்டியதால் வகுப்புகள் இரத்து செய்யப்பட்டன. பாரிசின் வடக்கே உள்ள Flora Tristan பள்ளியில், காலை 8.30 மணிக்கு அரைவாசி பள்ளி ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கொடுத்தனர். Nanterre உள்ள Joliot-Curie பள்ளியில், ஆசிரியர்கள் மதிய நேரத்தில் ஒரு வேலைநிறுத்தத்திற்கு 53-3 என்று வாக்களித்தனர். Noisy-le-Sec இல் உள்ள Olympe de Gouges பள்ளியில் 30 ஆசிரியர்கள் காலையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். Bagnolet இல் உள்ள Eugène Hénaff பள்ளியில் 18 ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

லியோனிலுள்ள Alice Guy பள்ளியில், மாணவர் மன்றம் வகுப்புகளுக்குள் நுழைய மறுத்ததாக கூறப்படுகிறது, மேலும் மொன்பேலியே மற்றும் மார்சேயில் ஆசிரியர்கள் மேற்கொண்டு வேலைநிறுத்த நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக செய்திகள் வந்தன.

பள்ளிகளுக்குள் பாதுகாப்பு நெறிமுறைகள் அடிப்படையில் இல்லாததாக இருக்கின்றன. Le Monde க்கு எழுதிய ஒரு ஆசிரியர் இவ்வாறு கூறினார்: “நான் அவமானப்படுவதாக உணர்கிறேன். ஊடகங்களில் எங்கள் ஆசிரியர்களை ஆதரிப்பதற்காக பெரும் அறிக்கைகள் உள்ளன, உண்மையில் எதுவும் இல்லை. … சுகாதார நெறிமுறை விடுமுறைக்கு முன்பு போலவே இருக்கிறது! வகுப்புகளுக்கு இடையில் மாணவர்கள் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறார்கள், 30 பேர் ஒரு வகுப்பில் நெரிசலாக நிரம்பி இருக்கின்றனர். பொது முடக்கத்தின் தொடக்கத்திலிருந்து எங்களுக்கு ஒரு முறை பயன்படுத்தும் முககவசங்கள் கிடைக்கவில்லை! ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு முககவசங்களுக்கு மட்டுமே எங்களுக்கு உரிமை உண்டு!”

தற்போதுள்ள நெறிமுறைகள் சமூக இடைவெளியை "அது சாத்தியமான அளவிற்கு" மதிக்க வேண்டும் என்று கூறுகின்றன. பள்ளிகளில் மாணவர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், அவைகள் எங்கும் பொருந்தாததாக இருக்கின்றன. பெற்றோர்கள் "தங்கள் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு அவர்களின் வெப்பநிலையை எடுத்துக் கொள்ளுங்கள்" என்றும் 38 டிகிரிக்கு மேல் வெப்பநிலை இருந்தால் "அவர்களை வீட்டிலேயே வைத்திருக்க வேண்டும்" என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏற்கனவே தொற்றுநோய்களுக்குப் பின்னர் பலர் தொற்றுக்குள்ளானவர்கள் அறிகுறியற்றவர்களாகவும் அல்லது அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றவர்கள் என்பது அனைவரும் அறிந்திருப்பதால், பள்ளிகளில் வைரஸ் பரவுவதைத் தடுக்க இது போன்ற முறைகள் எதுவும் செய்யாது.

நெறிமுறைகளானது "ஒரே குழுவில் (வகுப்பு அல்லது ஆண்டு மட்டத்தில்) மூடிய இடங்களிலோ அல்லது வெளிப்புறத்திலோ சமூக இடைவெளி தேவையில்லை" என்று கூறுகிறது.

ஆறு வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் முகக்கவசங்களை அணியும்படி செய்யப்படுகிறார்கள், இது, இளம் மாணவர்கள் தொற்றுநோயோ அல்லது வைரஸால் ஆபத்தில்லை என்ற அரசாங்கத்தின் முன்னைய பொய்களுக்கு முரணாக இருக்கின்றன.

"ஒரு நாளைக்கு ஆறு மணிநேரம் முகக்கவசத்துடன் இருப்பது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும், தெருவில் இருக்கும்போது, அவர்கள் அதை அணிய வேண்டியதில்லை" என்று Abbeville உள்ள மழலைகள் பள்ளி ஆசிரியரான Haydée Leblanc என்பவர் France3 இடம் கூறினார். “பின்னர் அவர்கள் முகக்கவசத்தை தொட்டு தங்கள் நேரத்தை செலவிடுவார்கள்! இதற்கு முன்பு, சிறு குழந்தைகளுக்கு முகக்கவசத்தை அணிவது எதிர்-விளைவுகளைத்தான் உருவாக்கும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது, ஏனென்றால் அவர்கள் உண்மையில் தங்கள் கைகளால் வைரஸை வேகமாகப் பரப்பலாம். வெளிப்படையாக கோட்பாடு மாறிவிட்டது.” இது ஒரு மக்கள் தொடர்பு பகட்டுவித்தை என்பதைக் குறிப்பிட்டு, "குடும்பங்களுக்கு உறுதியளிக்க சுகாதார நெறிமுறையில் ஏதாவது சேர்ப்பது எல்லாவற்றிற்கும் மேலாக உள்ளது" என்று அவர் கூறினார்.

Students wait in line to enter the canteen at a school yesterday.

மக்ரோன் நிர்வாகமானது ஆயிரக்கணக்கானவர்களுக்கு கூடுதலாக நோய் தொற்றுக்களையும் மற்றும் இறப்புக்களையும் ஏற்படுத்தும் என்று தெரிந்தே ஒரு கொள்கையை பின்பற்றுகிறது. பள்ளிகள் வைரஸ் பரவுவதற்கான நோய்க்காவியாக செயற்படும், எண்ணற்ற குழந்தைகள் தொற்றுநோய்க்கு உள்ளாகி விடுவார்கள், மேலும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் தொற்றுநோய் பாதிப்பு ஏற்படும்.

அத்தியாவசியமற்ற வணிகங்களையும் பள்ளிகளையும் திறந்து வைத்திருக்கும்போது, மக்கள்தொகையின் பகுதியளவு பொது முடக்கம் வைரஸின் பரவலைக் கணிசமாகக் குறைக்காது என்பதை அரசாங்கத்தின் சொந்த விஞ்ஞான ஆலோசனைக் குழுக்களின் அறிக்கைகள் தெளிவுபடுத்தும் அதேநேரம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. பாஸ்டர் நிறுவனமானது பகுதியளவு பொது முடக்கம் வைரஸின் இனப்பெருக்கம் விகிதத்தை 0.9 ஆகக் கொண்டு வரும் என்று மதிப்பிட்டுள்ளது, “அவநம்பிக்கையான சூழ்நிலையுடன்” இது அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் 1.2 க்கு மட்டுமே கொண்டு வரப்படும், அதாவது வைரஸின் தொடர்ச்சியான அதிவேக பரவல் நடைபெறுகின்றது.

குழந்தைகளும் நோய்வாய்ப்பட்டு இறந்து விடுவார்கள். வைரஸால் இளைஞர்களுக்கு ஆபத்து இல்லை என்ற அதிகாரபூர்வ கூற்றுக்கள் பொய்களாகும். 19 வயதிற்கு உட்பட்ட 170 பேர்கள் தற்போது COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரெஞ்சு சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர், அவர்களில் 23 பேர் அவசரகால பராமரிப்பில் உள்ளனர். இளைஞர்களுக்கு வைரஸினால் ஏற்படும் நீண்டகால உடல்நல பாதிப்புகள் குறித்து இன்னும் அறியப்படவில்லை.

பிரான்சின் ஊழல் நிறைந்த தொழிற்சங்க அதிகாரத்துவங்களானது பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு எதிரான போராட்டத்திற்கு விரோதமானவைகளாக இருக்கின்றன. மக்ரோன் நிர்வாகத்துடன் அதன் மீண்டும் திறக்கும் கொள்கை குறித்து அவர்கள் தொடர்ந்து கலந்துரையாடி வருகின்றனர், மேலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் வெகுஜன எதிர்ப்பை அணிதிரட்ட எதுவும் செய்யவில்லை. அக்டோபர் 30 ம் திகதி, தொழிற்சங்கங்கள் இழிந்த முறையில் நவம்பர் 2 மற்றும் 7 க்கு இடையில் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அங்கீகாரம் அளித்தன. ஆனால் அதனுடைய நோக்கம் ஆசிரியர்களிடையே வளர்ந்து வரும் எதிர்ப்பின் மீது கட்டுப்பாட்டைப் பேணுவதற்கான சில வழிமுறைகளை வழங்குவதாகும்.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே வளர்ந்து வரும் வேலைநிறுத்த இயக்கம் ஐக்கியப்படுத்தப்பட்டு ஒழுங்கமைக்கப்பட வேண்டும். அதற்காக, ஆசிரியர்கள் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமான தங்களுடைய சொந்த அமைப்புகளான சாமானிய பள்ளி பாதுகாப்பு குழுக்கள் தேவையாகும்.

அத்தியாவசியமற்ற தொழிற்துறைகளை மூடுவதற்கும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை வீட்டிலேயே பாதுகாப்பாக தங்க வைப்பதற்குமான போராட்டமானது வெகுஜன வேலைநிறுத்த நடவடிக்கையில் ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்களின் பரந்த அடுக்குகளை அணிதிரட்ட வேண்டும். பிரான்சிலுள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சிறந்த கூட்டாளிகள் ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் ஐரோப்பா மற்றும் அதற்கு அப்பாலுமுள்ள அவர்களது சகாக்களாகும். ஒரு ஐரோப்பிய பொது வேலைநிறுத்தத்திற்கும், தொழிலாள வர்க்கம் அரச அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும், COVID-19 வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக ஒரு விஞ்ஞானக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கும் தொழிலாளர்களை தயாரிக்கவும் அணிதிரட்டவும் இந்த சக்திகள் போராட முடியும்.

Loading