பாரிஸில் அகதிகள் எதிர்ப்பு பொலிஸ் கலவரம்: தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்,

பெருமளவு ஆயுதமேந்திய கலகப் பிரிவு போலீசார் திங்கள்கிழமை இரவு பாரிஸில் குடியரசு சதுக்கத்தில் ஒரு கூடார முகாமிற்குள் புகுந்து ஒரு பாசிச தாக்குதலை நடத்தினர், இது சர்வதேச அளவில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பாதுகாப்பு இல்லாத அகதிகளை அவர்களின் கூடாரங்களில் வைத்து போலீசார் காட்டுமிராண்டித் தாக்குதல் நடத்தியதோடு, அவர்களை பாரிஸ் தெருக்களில் விரட்டியடித்து, கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் நகரசபை அதிபதரிகள் தப்பியோடிய அகதிகளிடம் பேச முயன்றபோது, அவர்கள் போலீஸ் சுற்றிவளைப்பின் பின்னால் வைக்கப்பட்டனர். மேலும், அரசாங்கத்தின் எதோச்சதிகார "விரிவான பாதுகாப்பு சட்டம்" ஆனது பொது இடங்களில் போலீசாரை படம் பிடிப்பதை தடை செய்வதற்காக, ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 45,000 அபராதம் ஆகியவைகள் அடங்கலாக நிறைவேற்றியிருந்தாலும், போலீசார் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர், பொலிசார் தமது செயற்பாட்டை மூடிமறைப்பதற்காக பத்திரிகையாளர்களை தாக்கினர், மற்றும் ஊடகவியலாளர் ரெமி புஸினை தரையில் தள்ளி அவரை அடித்து தாக்கியது வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

பொதுமக்கள் சீற்றம் பெருகியதும், குடியரசு சதுக்கத்தில் எதிர்ப்புக்கள் வெடித்தபோது, பல பத்திரிகைகளும் அரசியல்வாதிகளும் திடீரென்று போலீஸ் மிருகத்தனத்திற்கு தங்கள் ஆட்சேபனைகளை மீண்டும் கண்டுபிடித்தனர். நியூ யோர்க் டைம்ஸ் ஆனது பிரான்சில் "அடக்குமுறையை நோக்கிய சறுக்கலை" விமர்சித்தது. "பொருத்தமற்ற மற்றும் மிருகத்தனமான பலாத்காரத்தை பயன்படுத்துவது" பற்றி உள்துறை அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தில், "துரதிர்ஷ்டவசமாக, இந்த நிகழ்வு ஏற்கப்பட முடியாதது, முன்னுதாரணம் இல்லாமல் இல்லை" என்று பாரிஸ் சோசலிஸ்ட் கட்சி (PS) மேயர் ஆன் இடால்கோ கூறினார்.

ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (LFI) கட்சி "தங்களுடைய மனித உரிமைகளை மட்டுமே கோருகின்ற மக்களுக்கு" எதிரானது என்று வன்முறையை விமர்சித்தது.

ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் அரசாங்கம் இப்போது தனது சொந்த நடவடிக்கையை விமர்சிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, நெருக்கடியை தனக்கு சாதகமாக மாற்ற முயற்சிக்கிறது. உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மனன் விசாரணைக்கு உறுதியளித்துள்ளார், அவர் "அதிர்ச்சியடைந்துள்ளார்" என்று கூறினார், மற்றும் "விரிவான பாதுகாப்பு சட்டமானது" ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் அரசியலமைப்பு சபையில் காவல்துறையினரை படப்பிடிப்பு செய்வதற்கான தடையை ஒரு சவாலாக சமர்ப்பிப்பதாக பிரதமர் ஜோன் காஸ்டெக்ஸ் உறுதியளித்துள்ளார்.

இவை அனைத்தும் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் தூங்க வைப்பதற்கான தவறான வாக்குறுதிகளாகும். இது, அகதிகள் மீதான மிருகத்தனமான அரசு தாக்குதலானது, மோசமாக இயற்றப்பட்ட சட்டத்தால் ஊக்குவிக்கப்பட்ட ஒரு சில மோசமான போலீஸ்காரர்களால் "அதிகப்படியான வன்முறை பொலிஸ் மயமாக்கல்" என்ற தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வு அல்ல. COVID-19 தொற்றுநோயால் உந்தப்பட்ட உலகளாவிய பொருளாதார சரிவின் பின்னணியில், தொழிலாள வர்க்கத்திற்கும் நிதி பிரபுத்துவத்திற்கும் இடையில் சர்வதேச அளவில் அடக்கமுடியாத மோதல் உருவாகி வருகிறது, பாசிச பொலிஸ் அரசுகளை கட்டியெழுப்ப சக்திவாய்ந்த பிரிவுகள் துணைபுரிகின்றன. சோசலிச புரட்சியா அல்லது முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனமா என்ற மாற்றீட்டுகள் தெளிவாக முன்வைக்கப்படுகின்றன.

பொலிஸ் படப்பிடிப்பிற்கான தடையை நீக்கியிருந்தாலும், அது மக்ரோன் அரசாங்கத்தின் தீவிர வலதுசாரி பரிணாமத்தை முடிவுக்கு கொண்டுவரப்போவதில்லை. மாணவர்களின் பல்கலைக்கழக ஆக்கிரமிப்புகளுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 45,000 டாலர் அபராதமும் விதிக்க அவர் சட்டங்களை இயற்றி வருகிறார், மேலும் தொற்றுநோய்களின் போது கைவிடுவதாக அவர் உறுதியளித்த ஓய்வூதியங்களில் கடுமையான வெட்டுக்களை புதுப்பிக்கிறார். "விரிவான பாதுகாப்பு" சட்டமானது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக ட்ரோன்களை நிறுத்துவதோடு, தேசிய, நகராட்சி மற்றும் துணை இராணுவ போலீஸ் மற்றும், தனியார் பாதுகாப்பு அமைப்புகளின் அவசர கூட்டு ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை அமைக்க இச்சட்டம் வழிவகுக்கிறது.

450,000 ஆயுதமேந்திய படைகள் மக்களுக்கு எதிராக நிறுத்தப்பட்டுள்ள நிலையில்,லு மொன்ட் இவ்வாறு எழுதியது, பிரான்ஸில் "150 குடிமக்களுக்கு (இது 2018 இல் 280 க்கு ஒன்று) ஒரு போலீஸ்காரர் உள்ளார்," என்று எழுதியது, அது "ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பு தலைவராக" மாற்றுகிறது என்று கூறுகிறது.

ஜூலை 14, 2017, பாரிஸில் உள்ள சாம்ப்ஸ் எலிசே வீதியில் பாஸ்டி தின இராணுவ அணிவகுப்பின் போது பிரெஞ்சு இராணுவத் தளபதி ஜெனரல் பியர் டு வில்லியே மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன்[Credit: Etienne Laurent/Pool Photo via AP, File]

பாரிய பொலிஸ் அரசு கட்டியெழுப்பப்படும் நிலையில், ஓய்வு பெற்ற நவ பாசிச தலைமை தளபதி ஜெனரல் பியர் டு வில்லியே அதிவலது சஞ்சிகையானCurrent Values க்கு கூறிய கருத்துக்கள் குறித்து அது ஆராய்கிறது.

கடந்த ஆண்டு, மக்ரோன் அரசாங்கம் சமூக சமத்துவமின்மையை எதிர்த்து "மஞ்சள் சீருடை" ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த இராணுவத்திற்கு அதிகாரம் கொடுத்த பின்னர், டு வில்லியே தொழிலாளர்களுக்கு எதிராக இன்னும் "உறுதியான" நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்தார். கலகப்படை போலீசார் 10,000 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்த பின்னரும், 4,400 பேர் இந்த போராட்டங்களில் காயமுற்ற பின்னரும், அவர் இரயில்வே மற்றும் கல்வி வேலைநிறுத்தங்களுக்கு எதிராக கடுமையான அடக்குமுறை நடவடிக்கை எடுக்கக் கோரினார்: அதாவது "வழிநடத்துபவர்களுக்கும் மற்றும் கீழ்ப்படிபவர்களுக்கும் இடையே ஒரு இடைவெளி உருவாகியுள்ளது. இந்த இடைவெளி ஆழமானது. 'மஞ்சள் சீருடையாளர்கள்' ஏற்கனவே இதற்கு முதல் அறிகுறி ... நாம் ஒழுங்கை மீட்டெடுக்க வேண்டும்; இந்த வழியில் தொடர முடியாது."

கடந்த வாரம் டு வில்லியேCurrent Values பத்திரிகையிடம் நெருக்கடி மிகவும் ஆழமாக உள்ளது, "ஆழ்ந்த மாற்றங்கள்" தவிர்க்க முடியாதவை. "இன்று பாதுகாப்பு நெருக்கடி தொற்றுநோயால் அதிகரித்துள்ளது மட்டுமல்ல, ஒரு பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியிலும், நமது தலைவர்கள் எந்த பரந்த நம்பிக்கையையும் அனுபவிக்கவில்லை."

"இந்த அடக்கப்பட்ட வெறுப்புகள் அனைத்தும் ஒரே நேரத்தில் வெடிக்க முடியும் என்பதால் ... பிரான்சில் மட்டுமல்ல, உலகம் முழுவதும்", "நாம் சிந்தித்துப்பார்க்க முடியாதவற்றை சிந்தித்துப்பார்க்க வேண்டும்" என டு வில்லியே கூறினார்.

இதற்கு என்ன பொருள் என்று கேட்கப்பட்டதற்கு, டு வில்லியே வெளிப்படையாக ஒரு நவ பாசிச சர்வாதிகாரத்திற்கு ஒப்புதல் தெரிவித்தார்: அதாவது "சட்டத்தின் ஆட்சி என்பது வெளிப்படையாக ஒரு நல்ல விஷயம், ஆனால் சில நேரங்களில் நீங்கள் மூலோபாய ரீதியாகவும் சிந்திக்க வேண்டும்."

COVID-19 வைரஸ் தொற்று நோய் உலக வரலாற்றில் ஒரு தூண்டுதல் நிகழ்வாகும். ஏற்கனவே தொற்று நோய் வருவதற்கு முன்னர், சமூக சமத்துவமின்மையின் தாங்கமுடியாத மட்டங்களுக்கு எதிரான ஒரு சர்வதேச வர்க்கப் போராட்டம் ஆளும் உயரடுக்கை ஆழமாக உலுக்கியிருந்தது. இப்பொழுது இறப்புக்கள் அதிகரித்து, பொருளாதாரம் சரிந்து கொண்டிருக்கும் போது, பெருமந்த நிலை மற்றும் 1930களின் பாசிச சகாப்தத்திற்கு பின்னர் பார்த்திராத விகிதத்தில் சமூகத் துயரங்கள் அதிகரித்து வருகின்றன. அப்பொழுது நிதியப் பிரபுத்துவமானது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அதனுடைய சலுகைகளை பாதுகாக்க பாசிச, வர்க்க அடிப்படையிலான கொள்கையைப் பின்தொடர்ந்ததுடன், உலகப் போரில் முடிவடைந்த ஒரு தசாப்தத்தில் அவற்றின் போட்டியாளர்களுக்கு எதிரான இராணுவ மோதலுக்குள் சென்றது.

வங்கி பிணையெடுப்பிற்காக டிரில்லியன் கணக்கான யூரோக்கள் மற்றும் டாலர்களை பொது நிதியிலிருந்து பறிமுதல் செய்யும் அதே வேளையில், உலகின் ஆளும் உயரடுக்கினர் தொற்றுநோய்களுக்கு மத்தியில் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் பணிகளுக்கும் மற்றும் பள்ளிகளுக்கும் திரும்புவதற்கு உத்தரவிடுகின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் 2 டிரில்லியன் பிணையெடுப்புக்குப் பின்னர், பிரான்சின் செல்வந்தர்கள் தொற்றுநோய்களின் போது ஏற்பட்ட ஆரம்ப பொறிவிலிருந்து தங்களுடைய இழப்புகளை ஈடுசெய்துள்ளனர்: பேர்னார் ஆர்னோ மற்றும் குடும்பத்தினர் 142 பில்லியன் டாலர்களாகவும், பிரான்சுவாஸ் பெத்தான்கூர் 72 பில்லியன் டாலர்களாகவும், பிரான்சுவாஸ் பினோ 46 பில்லியன் டாலர்களையும் கொண்டுள்ளனர் என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும், இந்த வைரஸ் பரவுவதை தடுக்க, நீண்ட கால சமூக முடக்கத்திற்கு நிதியளிக்கவும் தொழிலாளர்களுக்கும், சிறு வணிகர்களுக்கும் முழு நிதி உதவியளிக்கவும், சுகாதார பராமரிப்பு அல்லது பணிகளுக்கு பணம் இல்லை என்று தொழிலாளர்களுக்கு கூறப்படுகின்றது. பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஐரோப்பா முழுவதிலுள்ள தொழிற்சங்கங்கள் ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்புகளுக்கு பகிரங்கமாக ஒப்புதல்களை வழங்கி, மேலும் பள்ளிக்கு மீண்டும் செல்லும் பிரச்சாரத்திற்கு ஆதரவு கொடுத்தன. இதன் விளைவாக, அமெரிக்காவில் 265,891 மக்கள் COVID-19 வைரஸினால் இறந்துள்ளனர், ஐரோப்பாவில் 365,639 பேர்களும் இது வரவிருக்கும் குளிர்கால மாதங்களில் வெடிப்புத் தன்மையாக உயரவுள்ளது.

இத்தகைய சமத்துவமின்மை, ஜனநாயக ஆட்சி வடிவங்களுடன் பொருந்தாது, அவைகள் சிதைந்து கொண்டிருக்கின்றன. ஜோர்ஜ் ஃபுளோய்ட் போலீஸ் படுகொலை தொடர்பாக நாடு தழுவிய போராட்டங்களுக்கு எதிராக இராணுவத்தை சட்டவிரோதமாக நிறுத்த முயற்சித்த பின்னர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2020 தேர்தல்களில் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து, பென்டகன் தலைமையை அச்சுறுத்தியதுடன், மிச்சிகன் கவர்னர் கிரெட்சென் விட்மர் உட்பட உயர்மட்ட அதிகாரிகளை படுகொலை செய்ய முயன்ற அதி-வலது குடிப்படைகளை ஆதரித்தார். ஆட்சி கவிழ்ப்பு அச்சுறுத்தலுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பைத் திரட்டுவதற்கான எந்தவொரு முயற்சியும் ஒருபுறம் இருக்க, ஜனநாயகக் கட்சி பொதுமக்களை எச்சரிப்பதைக்கூட நனவுபூர்வமாக தவிர்த்துள்ளது.

பிரான்சிலும் ஐரோப்பாவிலும் தீவிர வலதுசாரி பொலிஸ் அரசுகள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், மெலன்சோனின் LFI போன்ற போலி-இடது கட்சிகள் டு வில்லியே இன் பாசிசக் கொள்கைக்கு மாற்றீடு அல்ல, அவை மக்ரோனின் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவுடன் செயல்படுத்துகிறன. மக்ரோன் தீவிர வலதுசாரி திருப்பத்தை தலைமை தாங்குகிறார், நாஜி-ஒத்துழைப்பு சர்வாதிகாரி பிலிப் பெத்தானை "ஒரு சிறந்த சிப்பாய்" என்று புகழ்ந்துரைத்த அவர், "மஞ்சள் சீருடை" ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்க கலகப் பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். மெலோன்சோனின் நாடாளுமன்றக் குழுவே 2015-2017 PS இன் அவசரகால நிலையை ஆதரித்தது, இதன் போது, தற்போதைய போலிஸ் எந்திரம் தயாரிக்கப்பட்டு, கடுமையான PS இன் தொழிலாளர் சட்டத்தை குறிவைத்து சமூக எதிர்ப்புக்களுக்கு எதிராக முதலில் பயன்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்வுகள், 2017 ஜனாதிபதித் தேர்தல்களில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரெஞ்சு பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியின் (Parti de l’égalité socialiste - PES) பகுப்பாய்வை உறுதிப்படுத்துகிறது. அது மக்ரோன் மற்றும் நவ பாசிச வேட்பாளரான மரின் லு பென்னுக்கு இடையிலான இரண்டாவது சுற்றுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை ஒரு செயலூக்கமான பகிஷ்கரிப்பிற்கும் மற்றும் அணிதிரள்விற்கும் அழைப்பு விடுத்தது.

ஒரு நவ-பாசிச ஜனாதிபதி மரின் லு பென் நிறுவும் தீவிர வலதுசாரி ஆட்சிக்கு மக்ரோனின் அரசாங்கம் உண்மையான மாற்று அல்ல என்று PES எச்சரித்தது. மக்ரோனின் பாசிச அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக, தொழிலாளர்களை எச்சரிக்க மறுத்த LFI போன்ற போலி-இடது குழுக்களின் பிற்போக்குத்தனமான பாத்திரத்தை அது எதிர்த்தது. இது சரியென நிரூபணமாகியிருக்கிறது.

பெருந்தொற்று நோய்க்கும் சர்வாதிகார அச்சுறுத்தலுக்கும் எதிரான ஒரே முன்னோக்கிய வழி, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை சர்வதேச அளவில் அணிதிரட்டுவதாகும். பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் சுயாதீன பாதுகாப்புக் குழுக்கள் தலைமையிலான ஒரு சர்வதேச பொது வேலைநிறுத்தத்திற்கான போராட்டமானது, பணிக்குத் திரும்புவதற்கான பிரச்சாரத்தை நிறுத்தவும், தொற்றுநோயைத் தடுக்கவும் தீவிர வலதுசாரி மற்றும் பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டத்திற்கும் அழைப்புவிடுகிறது. மக்கள்தொகைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பிற்போக்குத்தனமான சதிகளில் தங்களை குற்றவாளிகளாகக் காட்டிக் கொண்ட ஆளும் உயரடுக்குகளின் சொத்துக்கள் தொழிலாள வர்க்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டு, அவைகள் சமூகத் தேவையைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்பட வேண்டும்.

Loading