ஐரோப்பாவில் COVID-19 வைரஸ் இறப்புக்களின் பெரும் அலைவீசுகையில், பிரெஞ்சு அரசாங்கம் பொது முடக்கத்தை நிராகரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வியாழக்கிழமை, பிரெஞ்சு பிரதமர் ஜோன் காஸ்டெக்ஸ் மற்றும் சுகாதார மந்திரி ஒலிவியே வெரோன் ஆகியோர் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் தீர்மானித்த சுகாதார நடவடிக்கைகளை முன்னைய நாள் ஒரு தேசிய பாதுகாப்பு கூட்டத்தில் வெளியிட்டனர்.

ஐரோப்பா முழுவதும் பரவியுள்ள COVID-19 இறப்புகளின் சூறாவளியைத் தடுக்க முழுப் பொது முடக்கத்திற்கு (lockdown) பெரும் மக்கள் ஆதரவு உள்ளது. ஒரு எலேப் (Elabe) கருத்துக் கணிப்பில் 83 சதவீத பிரெஞ்சு மக்கள் பொது முடக்கத்தை எதிர்பார்க்கிறார்கள், 75 சதவீதம் பேர்கள் மாலை 6 மாலை ஊரடங்கு உத்தரவுக்கு பதிலாக ஒரு பொது முடக்கத்தை விரும்புகிறார்கள். பெரும்நிறுவனங்களின் இலாபங்களுக்கு அச்சுறுத்தலாக ஒரு பொது முடக்கத்தை எதிர்க்கும் ஊடக பிரச்சாரத்தின் நீரோட்டம் இருந்தபோதிலும், 52 சதவிகிதத்தினர் பல பிராந்திய பொது முடக்கங்களுக்கு நாடு முழுவதும் விருப்பம் தெரிவித்தனர்.

ஆயினும்கூட, பொதுமக்களின் கருத்தை நசுக்கும் வகையில் அரசாங்கம் நாடு தழுவிய மாலை 6 மணி ஊரடங்கு உத்தரவை மட்டும் அமுல்படுத்த முடிவு செய்ததுடன் பள்ளிகளையும் அத்தியாவசியமற்ற தொழிற்துறைகளையும் தொடர்ந்து திறந்து வைத்துள்ளது. சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்களின்படி, COVID-19 பரவலானது பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் மூன்றில் இரண்டு பங்கு பரவுதல்களை ஏற்படுகின்றன என்பதை காட்டும் நிலையில், இது பாரிய தொற்றுக்கள் அதிகரிக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது - கொரோனா வைரஸ் மிகவும் தொற்றும் பிரிட்டிஷ் திரிபு வகை வைரஸ் ஐரோப்பா முழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது.

பல டிரில்லியன் யூரோக்கள் வங்கி மற்றும் பெருநிறுவன பிணையெடுப்புகளை அங்கீகரிப்பதற்கு கையெழுத்திட்ட தொழிற்சங்க அதிகாரத்துவங்களால் அங்கீகரிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மக்ரோனின் கொள்கைகள் அரசியல் ரீதியாக குற்றகரமானவையாகும். மக்ரோனின் கணக்கீடுகளில் அவர்களுடைய உயிர்கள் எதுவும் கணக்கிடவில்லை என்பது உழைக்கும் மக்களுக்கு இன்னும் வெளிப்படையாகத் தெரிகிறது. தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான நடவடிக்கை மட்டுமே பெருந்தொற்று நோய்களை தடுத்துநிறுத்த விஞ்ஞானரீதியான அடிப்படையில் ஒரு கொள்கையை அமுல்படுத்த முடியும்.

கூட்டத்தில், காஸ்டெக்ஸ் தொடங்கியதாவது, "நாங்கள் இன்று 15,000 தினசரி தொற்றுக்களுக்கு மேல் இருக்கிறோம், இது 5,000 நாள்தோறும் தொற்றுக்களின் மூன்று மடங்கு இலக்காகும்." COVID-19 காரணமாக "தினசரி 2,500 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்" என்றும் அவர் தெரிவித்தார். இப்போது 1,000 தினசரி இறப்புகளைக் காணும் ஜேர்மனி, பிரான்சில் 400 உடன் ஒப்பிடும்போது, பிரிட்டன் உட்பட புதிய திரிபு வகை வைரஸால் பேரழிவிற்குள்ளான பல அண்டை நாடுகளை விட பிரான்சின் நிலைமை சிறந்தது என்று அவர் கூறினார்.

உண்மையில், நடந்து கொண்டிருப்பது ஒரு சர்வதேச பேரழிவு. இந்த வாரம் ஐரோப்பாவானது 600,000 COVID-19 இறப்புக்களைக் கடந்தது, நவம்பர் 12 திகதியன்று 300,000 அளவு இறப்புக்களை அடைந்தது, நவம்பர் 28 ல் 400,000 ஆகவும் மற்றும் டிசம்பர் 22 இல் 500,000 என்ற அளவுகளை எட்டியது. ஐரோப்பாவில் மூன்று வாரங்களுக்கு ஒரு முறை சுமார் 100,000 பேர்கள் இறந்துகொண்டிருக்கும் நிலையில், ஐரோப்பாவில் இறப்புக்களின் எண்ணிக்கை இந்த குளிர்காலத்தில் ஒரு மில்லியனை எளிதாக எட்டக்கூடும். பிரான்சில் இந்த பெருந்தொற்று நோய் இன்னும் அதிகரிக்கவில்லை என்றாலும், ஜனவரி மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட அரை மில்லியன் நோயாளிகள், 75,000 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர், 12,000 பேர் இறந்துள்ளனர்.

ஆயினும்கூட, தேசிய விஞ்ஞானக் குழுவின் தலைவரான பேராசிரியர் Jean- François Delfraisy, "நாம் ஒரு தீவிர அவசர நிலையில் இல்லை" என்று வலியுறுத்தினார். "மூன்று கடினமான மாதங்கள்" இருக்கும் என்றும், "கோடைக்குப் பின்னர்" நிலைமை மேம்படும் என்றும் கூறிய டெல்ஃபிராஸி ஒரு பொது முடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். "நாங்கள் பள்ளிக்குத் திரும்புவதைத் தொடர பரிந்துரைக்கிறோம். ஆங்கில வைரஸ் பரவுவது பற்றிய தரவுகள், பள்ளிகளை மூடுவதற்கு நம்மை தள்ளுவதற்கு போதுமான தெளிவானதாக இல்லை என்று நாங்கள் நினைக்கிறோம்."

எனவே, உணவகங்கள், பார்கள், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் கலை அரங்கங்கள் போன்ற தளங்களை மூடியிருக்கும் அதே நேரத்தில், பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற தொழிற்துறை உற்பத்திகள் திறந்திருக்க வேண்டும் என்று காஸ்டெக்ஸ் மற்றும் வொரன் வலியுறுத்தினர். தடுப்பூசிகளைக் காட்டிலும் வைரஸை நிறுத்துவது குறைவான முக்கியத்துவம் வாய்ந்தது என்று காஸ்டெக்ஸ் வாதிட்டார்: "இந்த நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்கான நம்பிக்கையின் முக்கிய ஆதாரமான தடுப்பூசியை இப்போது நாம் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதமாக நம்பலாம்."

எவ்வாறெனினும், பிரான்சில் தடுப்பூசிகள் போடுவது அவலமான மிகவும் மெதுவாக உள்ளன. ஜனவரி 6ம் திகதிக்குள் பிரான்சில் 5,000 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக வெளியான போது மக்ரோன் அரசாங்கம் உலகளாவிய சிரிப்பாக மாறியது. இந்த தாமதத்தை காஸ்டெக்ஸ் பாராட்டினார் - இல்லங்களில் ஓய்விலுள்ளவர்கள் தடுப்பூசிகளை மையமாகக் கொண்டிருப்பதாலும், சம்மதத்தைப் பெறுவதற்கு ஒரு நீண்ட நடைமுறையை விதித்ததாலும், முதியோர் முதுமை மறதி நோயால் மதிக்கப்படுவதாகவும் - இது “தேசிய சுகாதார ஆணையம் வகுத்துள்ள கொள்கைகளையும் முன்னுரிமைகளையும் மதிப்பதற்கான தேர்வு” என்றும் கூறினார்.

தடுப்பூசிகள் மீதான "இன்றைய புள்ளிவிவரங்கள்" இல்லை என்பதை ஒப்புக்கொண்ட அதே நேரத்தில், "ஜனவரி இறுதிக்குள் தடுப்பூசி போடப்பட உள்ள ஒரு மில்லியன் மக்களை நாங்கள் இலக்காகக் கொண்டிருக்கிறோம்" என்று வெரோன் உறுதியளித்தார். 75 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று அவர் கூறினார். ஆனால் மக்ரோன் அரசாங்கம் இந்த வேகத்தை அடைந்தாலும், பிரான்சில் சுமார் 66 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட மாட்டாது என்றும், இன்னும் ஆபத்தில் இருக்கும் என்றும் இது அர்த்தப்படுகிறது.

பொது நலனின் இந்த அலட்சியத்தின் அடிப்படையில், காஸ்டெக்ஸ் ஒரு பொது முடக்கத்தை நிராகரித்தார்: "நாடு முழுவதும், சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கி ஒரு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரும். இது இரவில் சமூகத் தொடர்பை மேலும் குறைப்பதை நோக்கமாகக் கொண்டது, ஆனால் பகல் நேரத்தில் பொருளாதார நடவடிக்கைகள், கல்வி மற்றும் நடமாட்டங்களை தொடர்ந்து அனுமதிக்கிறது."

பெற்றோர்கள் வேலை செய்யவிடாமல் வைத்திருப்பது பொருளாதாரத்தைச் சீர்குலைத்துவிடும் என்பதால், பள்ளி மூடல்களை தான் அனுமதிக்கப் போவதில்லை என்று காஸ்டெக்ஸ் தெளிவுபடுத்தினார். பள்ளிகள் முழுமையாக திறந்தநிலையில், பல்கலைக்கழகங்கள் சிறிய வகுப்புகளுக்கான முதல் ஆண்டு மாணவர்களுக்கு மீண்டும் திறக்கப்படும், பின்னர் படிப்படியாக முழு மாணவர்களுக்கும் திறக்கப்படும் என்று அவர் கூறினார். அவர் கூறியதாவது: பள்ளிகளை மூடுவது என்பது கடைசிக் காலத்தில் தான் கருதப்பட முடியும். சில நாடுகள் இதைச் செய்தார்கள் என்று எனக்குத் தெரியும். எனது நிலைப்பாடு என்னவென்றால், உண்மையில், பள்ளிகளை மூடுவதற்கு சுகாதார நிலைமை மிகவும் தீவிரமாக இருக்க வேண்டும், ஏனெனில், சுகாதார விளைவுகள் உட்பட- பள்ளிகளை மூடுவது பயங்கரமானது என்பதை நாம் அறிவோம்."

பரந்தளவிலான மரணங்கள் குறித்த மக்ரோன் ஆட்சியின் அதிர்ச்சியூட்டும் அலட்சியம் பெருகிய முறையில் பாசிச தன்மைக்கு சான்றளிக்கிறது. நிலைமை "மிகவும் தீவிரமானது" என்று காஸ்டெக்ஸ் கூறினாலும், "தீவிர அவசரநிலை" இருப்பதாக டெல்ஃப்ரைஸி மறுக்கிறார், COVID-19 ஐரோப்பாவில் ஒவ்வொரு மாதமும் 100,000 க்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர்.

கொரோனா வைரஸின் பிரிட்டிஷ் திரிபு வகை தீவிர நடவடிக்கை எடுப்பதற்கு போதுமான அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்ற அரசாங்கத்தின் வாதம் விஞ்ஞானிகளுடன் முரண்பட்ட பொய்யாக இருக்கிறது. ஏற்கனவே, பிரான்சில் சுமார் இரண்டு சதவிகித நோய்த்தொற்றுகள் புதிய திரிபு வகையிலிருந்து வந்தவை என்று மதிப்பிட்டுள்ளது, இது 50-70 சதவிகிதம் அதிக தொற்றுகளை ஏற்படுத்தும் நோய் மற்றும் பிரிட்டனில் இறப்புக்கள் அதிகரிக்க வழிவகுத்தன. இந்த விகிதம் பாரிஸ் பகுதியில் ஆறு சதவீதமாகவும், மார்சைய் பிராந்தியத்தில் ஐந்து சதவீதமாகவும், லியோன் பிராந்தியத்தில் மூன்று சதவீதமாகவும் உயர்கிறது.

தொற்றுநோயியல் நிபுணர் விட்டோரியா கொலிசா அப்பட்டமாக, “எங்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் தேவைப்படும்” என்றார். அவர் விளக்கினார்: "நிலைமை மிக விரைவாக மிகவும் சிக்கலானதாக மாறும். இந்த திரிபு வகை மிகவும் தொற்றுநோயாக இருப்பதால், அது மார்ச் மாதத்திற்குள் ஆதிக்கம் செலுத்தக்கூடும்… இப்போது தொடங்குவதற்கு நாம் செயற்பட வேண்டும், ஏனென்றால் அதற்குள் இந்த நிகழ்வு மிக அதிகமாக இருக்கும், மேலும் வைரஸின் சுழற்சி கட்டுப்படுத்த மிகவும் கடினமாக இருக்கும்.”

தொற்றுநோயியல் நிபுணர் பாஸ்கால் கிரெப்பி, "தொற்றுநோய் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற எண்ணம் உள்ளது, ஆனால் பிரிட்டிஷ் திரிபு வகை அதை மாற்றும்." ஒரு நாளைக்கு 100,000 தடுப்பூசிகளுக்கு அழைப்பு விடுத்து வெரோனால் முன்மொழியப்பட்ட வேகத்தின் மூன்று மடங்கு என்று அவர் மேலும் கூறினார், “பிரச்சாரம் உண்மையில் வேகப்படுத்தப்பட வேண்டும்… விநியோக சிக்கல்கள் இருந்தால், நாங்கள் முடியும் வரை தடுப்பூசி போட வேண்டும். குளிர்சாதன பெட்டிகளை விட தடுப்பூசிகள் நோயாளிகளின் கைகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.”

இன்னும் பெரிய பேரழிவைத் தவிர்க்க தொழிலாள வர்க்கத்தின் அரசியல் அணிதிரட்டல் தேவைப்படுகிறது. ஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அதற்கு அப்பாலும் இத்தாலியில் இருந்து பரவிய பாரிய திடீர் வேலைநிறுத்தங்கள் 2020 ஆண்டு வசந்த காலத்தில் இந்த வைரஸ் பரவுவதை கிட்டத்தட்ட நிறுத்திவிட்டன. எவ்வாறிருந்த போதினும், மே மாதம் பொது முடக்கங்களில் இருந்து முன்கூட்டியே வெளியேறியமை —அதன் பின்னர் COVID-19 தொற்றுக்களுக்கான தொடர்புகளை அடையாளம் காண்பதற்கு, பரிசோதிப்பதற்கு மற்றும் தடமறிவதற்கு எந்தவொரு பயனுள்ள அமைப்பையும் ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் அமைக்கவில்லை— அதன் பாரிய மீளெழுச்சிக்கு அனுமதிக்கிறது.

சிறு வணிகங்களுக்கு ஏற்படும் தாக்கத்தை சுட்டிக்காட்டி, கட்டுப்படுத்துவதற்கான பொருளாதார செலவு மிக அதிகமாக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியது. இது ஒரு மோசடி என்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இது, நிதியப் பிரபுத்துவத்தை வளப்படுத்துவதற்கான ஒரு கொள்கைக்கு ஒரு பொய்ப் புகழ் கொடுக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. COVID-19 ஆல் மூழ்கிக்கொண்டிருக்கும் மருத்துவமனைகளை காப்பாற்றுவதற்காக, அரசானது சிறு வணிகங்களை மூடிவிட்டது, அதே நேரத்தில் அத்தியாவசியமற்ற தொழிற்துறை உற்பத்தியானது வங்கிகளுக்கும் பெருநிறுவனங்களுக்கும் இலாபங்களை வழங்க திறந்தநிலையில் வைக்கப்பட்டிருந்த அதே நேரத்தில் ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்பில் 2 டிரில்லியன் யூரோக்களைப் பெற்றது.

வைரஸின் மீள் எழுச்சியைத் தடுக்க, பணியிடங்களிலும் பள்ளிகளிலும், தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாகவும், சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்கத்தில் ஒரு சர்வதேச அரசியல் இயக்கத்தை உருவாக்குவதற்கும் சுயாதீன பாதுகாப்புக் குழுக்களை உருவாக்குவது அவசியம். சுகாதாரக் கொள்கையை தீர்மானிக்கும் அதிகாரம் உட்பட, திவாலான மற்றும் தோல்வியுற்ற ஆளும் உயரடுக்கிலிருந்து தொழிலாள வர்க்கத்திற்கு அதிகாரம் மாற்றப்பட வேண்டும், இதனால் சமூகத்தின் முழு வளங்களும் தொற்றுநோயைத் தடுப்பது போன்ற முக்கியமான சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பயன்படுத்தப்பட முடியும்.

Loading