பள்ளிகள் திறப்புக்கு எதிரான ஐரோப்பிய அளவிலான வேலைநிறுத்தத்திற்கு!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பின்வரும் அறிக்கை திங்களன்று நடைபெற்ற கூட்டத்தில் பாதுகாப்பான கல்வி நடவடிக்கைக் குழுக்களின் இணைய வலையமைப்பால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வணிகங்கள், பள்ளிகள் மற்றும் பகல்நேர பராமரிப்பு மையங்களை தொடர்ந்து மூட ஆளும் வர்க்கம் மறுப்பது முன்னோடியில்லாத பேரழிவிற்கு வழிவகுத்தது. புதிய கொரோனா வைரஸ் திரிபுகள் ஐரோப்பா முழுவதும் பரவி வருகின்றன மற்றும் சுகாதார அமைப்புமுறைகள் சரிவின் விளிம்பில் உள்ளன, ஜேர்மனி இப்போது அமெரிக்காவை விட சதவீத அடிப்படையில் அதிக இறப்புகளைக் கொண்டுள்ளது. பல ஜேர்மன் மாநிலங்களில், அதிக எண்ணிக்கையிலான சடலங்களால் தகனம் செய்யுமிடங்கள் முற்றிலும் நிரம்பியுள்ளன. இதற்கிடையில், பாரிய இறப்புகளுக்கு விருந்து வைக்கும் வகையில் பங்குகளின் விலைகள், தொடர்ந்து புதிய உச்சங்களை நோக்கி செல்கின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து, ஜேர்மனியில் மட்டும் உத்தியோகபூர்வமாக கிட்டத்தட்ட 20,000 COVID மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

விஞ்ஞானரீதியாக, அத்தியாவசிய பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளைக் குறைப்பதும், வைரஸ் மற்றும் ஆபத்தான வைரஸ் பிறழ்வுகளைக் கட்டுப்படுத்த பள்ளிகள் மற்றும் பகல் நேர பராமரிப்பு மையங்களை மூடிவைப்பது அவசியம் என்பதில் எந்த கேள்விக்கும் இடமில்லை. ஆயினும்கூட அனைத்து வகையான அரசாங்கங்களும் வணிகங்களை திறந்து வைத்து, பள்ளிகள் மற்றும் பகல் நேர பராமரிப்பு மையங்களை பேனாக்களை வைத்திருக்கும் இடமாக மாற்றுகின்றன, ஏனெனில் பெற்றோர்கள் பாதுகாப்பற்ற பணியிடங்களில் வேலை செய்ய வைக்கப்பட முடியும். பல கூட்டாட்சி மாநிலங்களில், பள்ளிகள் பெரும்பாலும் பிப்ரவரி 1 ம் திகதியிலேயே மீண்டும் திறக்கப்பட உள்ளன.

செல்வந்தர்களின் நலன்களை மக்களின் சுகாதாரத்திற்கு முன்னால் வைக்கும் இந்தக் கொள்கையை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் பாதுகாப்பை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறோம். ஸ்தாபக கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான பாதுகாப்பான கல்வி நடவடிக்கைக் குழுக்களை அனைத்து பள்ளிகள் மற்றும் பகல் நேர பராமரிப்பு மையங்களில் நிறுவப்பட வேண்டும், அந்த நிறுவனங்கள் திறக்கப்பட உள்ளதால் விரைவிலேயே வேலைநிறுத்தங்களுக்கு ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.

இந்தப் பெருந்தொற்று ஒரு சர்வதேச நிகழ்வு, மற்றும் ஒரு சர்வதேச விடையிறுப்பு இதற்குத் தேவைப்படுகிறது. கிரேக்கம், போலந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பள்ளி வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களுக்கு நாங்கள் ஒற்றுமையுடன் நிற்கிறோம், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் பல நகரங்களில் நடவடிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். நடவடிக்கைக் குழுக்கள் நெருக்கமாக இணைந்து வேலை செய்ய வேண்டும் மற்றும் ஒரு ஐரோப்பிய அளவிலான பள்ளி வேலைநிறுத்தத்திற்கு தயாரிப்பு செய்ய வேண்டும்.

பள்ளிகள் மற்றும் மழழையர் பள்ளிகளிலுள்ள ஆபத்தான சூழ்நிலையை பொது போக்குவரத்து மற்றும் பணியிடங்களிலுள்ள பிரச்சனைகளிலிருந்து பிரிக்க முடியாது. செவிலியர்கள், பஸ் ஓட்டுநர்கள் மற்றும் இறைச்சி பதப்படுத்தும் தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் மிகவும் மோசமான சூழ்நிலையில் தங்கள் வாழ்க்கையை நிலைநிறுத்திக் கொண்டிருக்கையில், ஜேர்மன் கூட்டாட்சி குடியரசின் வரலாற்றில் மிகப்பெரிய வெகுஜன பணிநீக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, ஊதியங்கள் குறைக்கப்படுகின்றன. அரசாங்கமும் பெருநிறுவனங்களும் சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து உயர்மட்டத்திற்கு செல்வத்தை முன்னோடியில்லாத வகையில் மறுபகிர்வு செய்வதற்கு பெருந்தொற்று நோயைப் பயன்படுத்துகின்றன.

எனவே, பள்ளிகளில் எதிர்ப்பு போராட்டமானது தொழிலாளர்களின் பாதுகாப்பான பணியிடங்களுக்கானதும் மற்றும் அவர்களுடைய வேலைப் பாதுகாப்பு போராட்டங்களுடனும் இணைக்கப்பட வேண்டும். முதலாளித்துவத்தின் இலாபத்திற்கான தர்க்கத்திற்கு எதிராக மக்களின் தேவைகளையும் சுகாதாரத்தையும் பாதுகாக்கும் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான ஒரு பரந்த அணிதிரட்டலின் பாகமாக அது இருக்க வேண்டும். பெருநிறுவனங்களுக்கு பில்லியன் கணக்கான யூரோக்களை மாற்றுவதற்குப் பதிலாக, பெரும் சொத்து செல்வங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும், மேலும் பின்வரும் கோரிக்கைகள் செயற்படுத்தப்பட வேண்டும்:

பெருந்தொற்றுநோய் கட்டுப்பாட்டிற்குள் வருவதற்கு முன்பு பள்ளிகள் மற்றும் பகல் நேர பராமரிப்பு மையங்கள் திறக்கப்படக்கூடாது! ஆரம்பத்தில், நிகழ்வு மதிப்பு 25 க்கும் குறைவாக இருக்கும் போது, சிறிய, நிலையான கற்றல் குழுக்களில் நேருக்கு நேர் கற்பித்தல் கருத்தில் கொள்ளப்பட வேண்டும், விஞ்ஞான சான்றுகளின் அடிப்படையில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதாக கருதவேண்டும். ஆபத்தான குழுக்கள் சிறப்பாக பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் நீண்ட காலத்திற்கு நேருக்கு நேர் கற்பித்தலிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்.

பாதுகாப்பான மற்றும் சிறந்த கல்விக்கு பில்லியன் முதலீடு! தொற்றும் விகிதங்களைக் குறைப்பதை எதிர்கொண்டிருக்கும் போது பாதுகாப்பான நிலைமைகளை உறுதிப்படுத்த, பள்ளிகள் மற்றும் பகல் நேர பராமரிப்பு மையங்களில், குறிப்பாக ஆயிரக்கணக்கான புதிய ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களை பணியமர்த்துவதில் பில்லியன் கணக்கான முதலீடு செய்யப்பட வேண்டும். அவர்களின் ஊதியங்கள் கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டும்.

தங்களுடை குழந்தைகளை பராமரிக்க வேண்டிய பெற்றோருக்கு முழு இழப்பீடு! பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கவனிப்பதற்கு முழு இழப்பீடு அளிக்க வேண்டும். தொழிலாளர்கள், சுயதொழில் புரிபவர்கள், சிறு தொழில் செய்பவர்கள் ஆகியோர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் போது இழப்பீடு வழங்க வேண்டும். ஏழை குடும்பங்களுக்கு டிஜிட்டல் கற்றல் சிறப்பு ஆதரவு மற்றும் உயர்தர உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்.

பெருந்தொற்று நோயின் போது பரீட்சை அழுத்தம் மற்றும் கற்றல் அழுத்தம் கொடுக்கக்கூடாது! ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் இந்த பெருந்தொற்று நோய் பரவி வருவதால், வழக்கமான தேர்வுகள் சாத்தியமில்லை. உயிரிழப்புக்கள், நிதி கஷ்டம், நோய் தொற்றும் அபாயம் என பல இலட்சம் குடும்பங்களை கடுமையாக பாதித்துள்ளது. ஆசிரியர்கள் மற்றும் பல மாணவர்களின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், போதுமான கற்றல் நிலைமைகள் இல்லை. மாற்றுத் தேர்வுத் தரம், இறுதித் தேர்வுகள் குறித்த முடிவை ஒட்டு மொத்த மாணவர்களும் எடுக்க வேண்டும்.

Loading