முன்னோக்கு

விஞ்ஞானம் உண்மையில் என்ன சொல்கிறது: கோவிட்-19 ஐ கட்டுப்படுத்துவதற்கு பள்ளிகளை மூடுவது மிக முக்கியம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

10,000 க்கும் மேற்பட்ட சிகாகோ ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பொதுப் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான நகரத்தின் முயற்சியை எதிர்ப்பதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், முழு அமெரிக்க ஊடகங்களும் கல்வியாளர்களை நேரில் பள்ளிப்படிப்பை மீண்டும் தொடங்குமாறு அழுத்தம் கொடுக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன.

அமெரிக்காவின் ஒவ்வொரு பெரிய தேசிய செய்தித்தாளும், அவர்களின் அரசியல் தொடர்பைப் பொருட்படுத்தாமல், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது பாதுகாப்பானது என்று பொய்யாகக் கூறி கடந்த வாரத்தில் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இந்த அறிக்கைகள் பள்ளிகள் பாதுகாப்பானவை என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) அறிவித்துள்ளது என தவறாகக் கூறுகின்றன. பாதுகாப்பைப் பற்றிய கல்வியாளர்களின் கவலைகள் விஞ்ஞான எதிர்ப்பு பயமுறுத்தலை அடிப்படையாகக் கொண்டவை என்று கூறி ஆசிரியர்களை அவதூறு செய்கிறார்கள்.

இந்த பிரச்சாரத்தின் மிக மோசமான வெளிப்பாடு செவ்வாயன்று Chicago Tribune ஆசிரிய தலையங்கம் ஆசிரியர்கள் "விஞ்ஞானத்தை புறக்கணிக்கிறார்கள்" என்று குற்றம் சாட்டினர். ஆசிரியர்கள் "குழந்தைகளுக்கான குரலாக இருப்பதாக" பொய்யாகக் கூறுவதாகவும், "உண்மையான விஞ்ஞானம்" "ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வீட்டிலேயே இருப்பதை நியாயப்படுத்துவது கடினமாக்குகிறது" என்றும் கட்டுரை வலியுறுத்தியது.

Chicago Tribune தலையங்கம் Washington Post ல் வெள்ளிக்கிழமை தலையங்கத்தில் இருந்து பேப்பட்ட புள்ளிகளை எதிரொலித்து, "கோவிட்-19 ஆபத்து வகுப்பறையில் இல்லை, ஆனால் சமூகத்தில் உள்ளது" என்றது.

New York Times இன் டேவிட் புரூக்ஸ் எழுதினார்: “அனைத்து ஆய்வுகளும் பள்ளிகள் பாதுகாப்பாக இருக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது. "நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் அறிக்கை இந்த உண்மையை உறுதிப்படுத்தியுள்ளது" என்று புரூக்ஸ் கூறினார். பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு கல்வியாளர்கள் எதிர்ப்பை அறிவிப்பது "அமெரிக்காவில் அடிக்கும் புத்திஜீவித எதிர்ப்பின் அலை" என்று கூறினார்.

இந்த மூன்று பத்திகளும் Journal of the American Medical Association ல் (JAMA) வெளியிடப்பட்ட ஒரு கருத்தை தவறாக சித்தரிப்பதை அடிப்படையாகக் கொண்டுள்ளன. பள்ளிகள் பாதுகாப்பானவை என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறுகிறது என்று மூச்சுவிடாது அறிவிக்கும் இந்த தலையங்கங்கள் மற்றும் கருத்துப்பக்கங்கள் எதுவும், அவர்கள் குறிப்பிடும் கருத்துத் துண்டின் அடிப்பகுதியில் தாம் மேற்கோள் காட்டும்: "இந்த அறிக்கையின் கண்டுபிடிப்புகளும் முடிவுகளும் மற்றும் அதன் ஆசிரியர்கள் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை." என்ற மறுப்பை காட்டவில்லை.

அமெரிக்காவில் பள்ளிகளை மீண்டும் திறக்கும் முயற்சியில் முன்னணியில் இருக்கும் பைடென் நிர்வாகம் கூட, JAMA அறிக்கையை ஊடகங்கள் தவறாகப் பயன்படுத்துவதிலிருந்தும், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் நோயுற்றநிலையும் இறப்பும் பற்றிய வாராந்திர அறிக்கையில் (MMWR) வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்விலிருந்தும் தன்னைத் தூர விலக்கிக் கொள்ள நிர்பந்திக்கப்பட்டது.

உத்தியோகபூர்வ நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் வழிகாட்டுதல்கள் அல்ல, மேலும் “நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் எவ்வாறு திறக்கப்படலாம் என்பது குறித்த முறையான பரிந்துரைகள் அல்லது தேவைகளை நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிடவில்லை என்று வியாழக்கிழமை செய்தியாளர் மாநாட்டில் வெள்ளை மாளிகை பேச்சாளரான Jen Psaki தெரிவித்தார். விஸ்கான்சினில் உள்ள ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் அடிக்கடி வெளியிடும் அறிக்கைகளைப் போலவே ஒரு அறிக்கையையும் வெளியிட்டார்கள். ”இந்த அறிக்கை சிகாகோ போன்ற நகர்ப்புறங்களுக்கு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட பொருந்தக்கூடிய தன்மையைக் கொண்டிருந்தது என்பதை வலியுறுத்துகிறது.

உண்மையில், விஞ்ஞான ஆதாரங்களின் பெரும்பான்மையான முன்மாதிரியானது, பள்ளிகளை மூடுவது, பிற முக்கிய சமூக இடைவெளி நடவடிக்கைகளுடன் கோவிட்-19 இன் பரவலைக் குறைக்க வழிவகுக்கிறது என்பதைக் காட்டுகிறது.

COVID Monitorல் தகவல் வெளியீட்டாளரான ரெபேக்கா ஜோன்ஸ் மற்றும் அவரது குழுவினர் ஆவணப்படுத்தியுள்ளபடி, நாடு முழுவதும் உள்ள மழலைகள் பள்ளியிலிருந்து 12ம் தர பாடசாலைகளில் கிட்டத்தட்ட 600,000 மாணவர்களும் ஊழியர்களும் கோவிட்-19 க்கு சாதகமாக பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

நவம்பர் 19, 2020 இல் Nature இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், பள்ளிகளை மூடுவது கோவிட்-19 ஐ தடுப்பதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகும் என கண்டுபிடித்துள்ளது. "உலகளாவிய கோவிட்-19 அரசாங்க தலையீடுகளின் செயல்திறனை தரவரிசைப்படுத்துகையில்" அந்த அறிக்கை "அமெரிக்காவில் பள்ளி மூடல்கள் கோவிட்-19 நிகழ்வுகளையும் இறப்புகளையும் சுமார் 60 சதவிகிதம் குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது." எனக்குறிப்பிட்டது.

Nature கட்டுரை, ஜூலை மாதம் JAMA வெளியிட்ட “மாநிலம் தழுவிய பள்ளி மூடல் மற்றும் அமெரிக்காவில் கோவிட்-19 சம்பவங்கள் மற்றும் இறப்புக்கு இடையிலான தொடர்பு”, என்ற ஆய்வை மேற்கோள்காட்டி, இது “பள்ளி மூடல் கோவிட்-19 இன் தொற்றினதும் மற்றும் இறப்பினதும் குறிப்பிடத்தக்க சரிவுடன் தொடர்புடையது" என்றது.

Science இதழில் வெளியிடப்பட்ட மற்றொரு சமீபத்திய ஆய்வில், சமூக ஒன்றுகூடல்களை 10 பேருக்கு மட்டுப்படுத்துவது தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான மிகச் சிறந்த முறையாகும். அத்துடன் பள்ளிகளையும் பல்கலைக்கழகங்களையும் மூடுவதன் மூலமும், பின்னர் “மிகவும் தேவையற்ற வணிகங்களை” மூடுவதன் மூலமும் இது மிகவும் பயனுள்ள முறையாகும், என்றது.

இந்த மாதம் மாண்ட்ரியால் பல்கலைக்கழகத்தின் டாக்டர் சிமோனா பிக்னாமி மற்றும் ஜோர்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஜான் எஃப். சாண்ட்பேர்க் ஆகியோரால் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், 10 முதல் 19 வயது வரையிலான குழந்தைகளில் தொற்றுக்கள் 30 முதல் 49 வயதுக்குட்பட்ட பெரியவர்களிடையே அதிகரிப்பதற்கு முற்காரணம் என கண்டறிந்துள்ளது. இதன் பொருள் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் அவர்களின் பெற்றோருக்கு தொற்று ஏற்பட்டதே தவிர எதிர்மாறாக அல்ல. "பள்ளி வயது குழந்தைகளிடையே கோவிட் பரவுவது இதன் விளைவாக அல்லாது, சுற்றியுள்ள சமூகங்களில் பொதுவான தொற்றுநோயை நிர்ணயிக்கும் ஒரு முக்கிய தீர்மானிப்பதாக இருக்கின்றது".

இங்கிலாந்தில், டிசம்பரில் பெரியவர்களை விட குழந்தைகளுக்கு அதிக தொற்று விகிதம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்ட பின்னர், பிரதம மந்திரி பொரிஸ் ஜோன்சன் “சிக்கல் என்னவென்றால், பள்ளிகள் பரவுவதற்கான காரணிகளாக செயல்படக்கூடும், இதனால் வீடுகளுக்கு இடையே வைரஸ் பரவுகிறது.” என்று ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது.

அமெரிக்கா முழுவதும் பள்ளி மாவட்டங்கள் கோடையிலும் இலையுதிர் காலத்திலும் மீண்டும் திறக்கப்பட்டு, பரவலான சமூக பரவலுக்கு மத்தியில் அமெரிக்காவின் இறப்பு எண்ணிக்கை 450,000 க்கும் அதிகமாக உயர்வதற்கு உதவியது.

தடுப்பூசிகளை எதிர்க்கக்கூடிய சில வடிவங்கள் உட்பட, கோவிட்-19 இன் புதிய விகாரங்கள் அமெரிக்காவில் வேரூன்றியுள்ள நிலையில், பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான பிரச்சாரம் இப்போது மிகவும் குற்றகரமானது.

Meet the Press Sunday நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை பேசிய பைடெனின் இடைக்கால குழுவின் முன்னாள் ஆலோசகரும் பொது சுகாதார மற்றும் தொற்று நோய் நிபுணர் மைக்கல் ஓஸ்டர்ஹோம், இந்த புதிய விகாரங்கள் காரணமாக எதிர்பார்க்கப்பட்ட எழுச்சியை ஐந்தாவது தர சூறாவளியுடன் ஒப்பிட்டார். "நீங்களும் நானும் 70 பாகை, முற்றிலும் நீல வானம், மென்மையான காற்றுடன் இந்த கடற்கரையில் உட்கார்ந்திருக்கிறோம்" என்று ஓஸ்டர்ஹோம் கூறினார். "ஆனால் என்னால் 450 மைல் தொலைவில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட தரத்தில் சூறாவளியை காணக்கூடியதாக உள்ளது" என்றார்.

"இந்த நாட்டில் இதுவரை நாம் காணாத ஒன்றை நாங்கள் காணப்போகிறோம்," என்று அவர் கூறினார். "எடுத்துக்காட்டாக, எங்களது தொற்று மிக உயர்ந்த எண்ணிக்கையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை விட இரு மடங்கு அதிகமான மக்களை இங்கிலாந்து மருத்துவமனையில் சேர்த்துள்ளது" என்று கூறினார்.

"நாங்கள் அனைவரும் இப்போது தளர்த்திக் கொண்டிருக்கிறோம் ... அந்தக் கப்பலையும் நாங்கள் திருப்ப வேண்டும்" என்று ஓஸ்டர்ஹோம் கூறினார். "இந்த நாட்டில் நாங்கள் கார் மரத்தில் மோதிய பின்னர் பிரேக்குகளை அழுத்துவதில் மிகவும் சிறந்தவர்கள்" என்றார்.

இந்த வெளிப்படையான எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், பைடென் நிர்வாகம் அதன் சொந்த முன்னாள் ஆலோசகரின் ஆலோசனையை அப்பட்டமாக புறக்கணித்து வருகிறது. பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான அதன் முயற்சிகளுடன் இது முழு வேகத்தில் முன்னேறி வருகிறது. பைடெனின் தேசிய பொருளாதார குழுவின் இயக்குனர் பிரையன் டீஸ், "பெற்றோர்கள்… மீண்டும் வேலைக்குச் செல்ல நாங்கள் பள்ளிகளைத் திறக்க வேண்டும்" என்று அறிவித்தார்.

ஆசிரியர்கள் தொலைதூரக் கற்றலைக் கைவிட்டு, நேரில் கற்றலைத் தொடர வேண்டும் என்று கோருவதில் ஜனநாயகக் கட்சியினருடனோ அல்லது குடியரசுக் கட்சியினருடனோ இணைந்திருந்தாலும் ஊடகங்களின் ஒருமித்தகருத்து, முதலாளித்துவ வர்க்கத்தின் சமூக நலன்களுக்கு மீண்டும் திறக்கும் உந்துதல் எவ்வளவு முக்கியமானது என்பதைக் காட்டுகிறது. நிதிய தன்னலக்குழு கடந்த ஆண்டில் டிரில்லியன் கணக்கான டாலர்களை பிணையெடுப்புப் பணமாகக் கொடுத்துள்ளது. இது ஒரு பெரிய பங்குச் சந்தை குமிழியைத் தூண்ட உதவுகிறது.

ஆனால் முற்றிலும் பில்லியனர்களின் செல்வவூட்டலுக்காக கட்டப்பட்ட இந்த ஏமாற்றுத்திட்டம் மனித உழைப்பிலிருந்து பெறப்பட்ட செல்வத்தின் தொடர்ச்சியான உட்செலுத்துதல் இல்லாமல் தொடர முடியாது. கோவிட்-19 உடன் பணிபுரியும் தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்களுக்கு தொழிலாளர்கள் திரும்பி வர வேண்டும் என்ற அறிவிப்பில் அரசியல் ஸ்தாபகத்தின் அனைத்து பிரிவுகளும் ஒன்றுபட்டுள்ளன.

பாதுகாப்பற்ற வேலைக்கு திரும்புவதை எதிர்த்துப் போராடும் ஆசிரியர்கள் தங்கள் சொந்த நலன்களுக்காக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சமூகத்தின் நலன்களுக்காகவும் செயல்படுகிறார்கள். எந்தவொரு பகுத்தறிவான சமூக ஒழுங்கமைப்பும் பள்ளிகளையும், அத்தியாவசியமற்ற வணிகத்தையும் மூடி, பாரியளில் பரிசோதிப்பது, தொடர்பு தடமறிதல் மற்றும் தடுப்பூசி ஆகியவற்றின் மூலம் தொற்றுநோயை கட்டுப்படுத்த கூடியதும், அதேநேரத்தில் அனைத்து ஊழியர்களுக்கும் முழு ஊதியத்தையும் வழங்குவதோடு, குழந்தைகளுக்கு வீட்டிலிருந்து கல்வி கற்பதற்கு தேவையான சமூக வளங்களை ஒதுக்கும்.

சிகாகோ ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் நாடு முழுவதும் எடுத்துள்ள நிலைப்பாட்டை ஆதரிக்க பெற்றோர்கள், சமூகத்தினர் அனைவரும் மற்றும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கமும் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். சிகாகோ ஆசிரியர்கள் முழு தொழிலாள வர்க்கத்துக்காகவும் போராடுகிறார்கள் என்பதை அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் அறிவார்கள். தங்கள் போராட்டத்தை தொடரவும் விரிவுபடுத்தவும் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளின் ஆதரவும் அவர்களுக்கு தேவை.

ஆளும் வர்க்கத்தின் வேலைக்குத் திரும்பு என்ற பிரச்சாரத்தை எதிர்ப்பதில், சிகாகோ ஆசிரியர்கள் ஒரு அடிப்படை உண்மையை தெளிவுபடுத்துகிறார்கள்: தொழிலாள வர்க்கம் உயிர்களைக் காப்பாற்றுவதற்கும், தொற்றுநோயை தடுப்பதற்கும் ஆதரவாக இருப்பதை குறிக்கிறது. அதே நேரத்தில் முதலாளித்துவ வர்க்கமும் முதலாளித்துவமும் மனித உயிர்களை இலாபத்திற்காக தியாகம் செய்யக் கோருகின்றன.

Loading