பொருளாதார நெருக்கடி, அதிகரித்துவரும் சமூக எதிர்ப்பின் மத்தியிலல் இந்திய அரசாங்கம் வரவு-செலவுத் திட்டத்தை முன்வைக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தியாவின் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசாங்கம் ஏப்ரல் 1 முதல் அமுலுக்குவரும் 2021-2022 க்கான வரவு செலவுத் திட்டப் பட்டியலை நேற்று தாக்கல் செய்துள்ளது.

இந்திய பொருளாதாரம் பல்வேறு நெருக்கடிகளால் சூழப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் கோவிட்-19 தொற்றுநோயை பேரழிவுகரமான முறையில் அரசாங்கம் தவறாக கையாண்டதன் மூலம் பெரியளவில் அதிகரித்திருக்கின்றன. இவைகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கின்றன: மோசமான கடன்களால் மூழ்கடிக்கப்படிருக்கும் ஒரு வங்கி அமைப்பு; ஒரு பாரியளவிலான வேலைவாய்ப்பின்மை மற்றும் வேலையின்மை நெருக்கடிகள்; நுகர்வோர்களுக்கான தேவையில் வீழ்ச்சி மற்றும் மூலதனத்தில் குறைந்துவரும் முதலீடு.

2016, அக்டோபர் 14 அன்று புதுடெல்லியில் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை (தனிப்பிரிவு பொறுப்பு) அமைச்சர், திருமதி. நிர்மலா சீதாராமன் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றுகிறார் (விக்கிமீடியா பொது)

ஆகஸ்ட் 2019 முதல் மோடி செயல்படுத்திவரும் முதலீடு மற்றும் முதலாளித்துவ வளர்ச்சியை புதுப்பிப்பதற்கான இந்தியாவின் வலதுசாரி பாஜக அரசாங்கம் மற்றும் ஆளும் வர்க்கத்தின் தீவிர பெருவணிக சார்பு நடவடிக்கைகளுக்கு எதிரான வெகுஜன ஆதரவு அலை இந்தியாவின் தீவிர வலதுசாரி பாஜக அரசாங்கத்திற்கும் ஆளும் வர்க்கத்திற்கும் சற்றும் குறைவான தொந்தரவாக இருக்கவில்லை.

நவம்பர் 26 அன்று, பெரும்பாலான வேலைநிறுத்தப் போராட்டங்களை சட்டவிரோதமாக்கவும் மற்றும் தொழிலாளர்கள் படையை நாட்கூலிகளாக மாற்றும் ஒரு தொழிலாளர் “சீர்திருத்த” சட்டம் உட்பட அரசாங்கத்தின் வர்க்கப் போருக்கான கொள்கைகளை எதிர்ப்பதற்கான ஒரு நாள் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் இந்திய முழுவதிலுமிருந்து பத்து மில்லியன்கணக்கான தொழிலாளர்கள் இணைந்தார்கள். செப்டம்பர் இறுதியில் தொழிலாளர் சட்டத்தை திருத்திய அதே சமயம் பாராளுமன்றத்தில் அரசாங்கம் அவசரமாக கொண்டுவந்த மூன்று வணிக சார்பு வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டன. இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் வெகுஜன கிளர்ச்சி நடத்தி வருகின்றனர்.

“நல்வாய்ப்பு வளம் மற்றும் நம்பிக்கை தரக்கூடிய நிலமாக இந்தியா நன்கு தயாராக இருக்கிறது” என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அவருடைய வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்யும்போது கவலைப்படாமல் பேசினார்.

”அந்த மாதிரி வேறு எதுவும் இல்லை” என்று வாக்குறுதி அளித்து நிதி மற்றும் ஆபத்தான அரசியல் செயல்பாடு ஆகியவற்றுக்காக சீதாராமன் முயன்றார். பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்வதற்கான ஒரு முயற்சியாக, அவர் குறிப்பாக உள்கட்டமைப்பு செலவினங்களைப் போன்று அரசாங்கத்தின் செலவினங்களை உயர்த்தியிருப்பதுடன் மேலும் மோசமான நிலையிலிருக்கும் வங்கித் துறைகளுக்கு மேலதிக நிதிகளை உட்செலுத்தியிருக்கிறார். அதே நேரத்தில், மானியங்களை குறைப்பதன் மூலமும் மற்றும் பூகோள மற்றும் உள்ளூர் மூலதனத்தின் நீண்டகால கோரிக்கையான பிற முதலீட்டாளர் சார்பு கொள்கைகளை முன் தள்ளி செல்ல அழுத்தம் கொடுப்பதன் மூலம் சர்வதேச கடன் மதிப்பீட்டு மூகமைகளை (international credit-rating agencies) சமாதானப்படுத்த முயன்றார். அந்த முகமை மதிப்பற்ற பத்திரங்களின் நிலைக்கு இந்திய அளவீட்டை குறைப்பதாக அச்சுறுத்தியது.

பெருவணிகத்தை மகிழ்ச்சிப்படுத்துவதற்கு, அரசாங்கத்தின் நிதி நிலைமை விரைவாக மோசமடைந்து வருகின்ற போதிலும், வணிக நிறுவனங்களுக்கு அல்லது பணக்காரர்களுக்கு வரி அதிகரிப்பு இல்லை என்று அறிவித்துள்ளது. 10 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் நோய்த்தொற்றுக்கு பாதிக்கப்பட்டும் மற்றும் 150,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருக்கும், கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிராக போராடுவதற்கு தேவையான நிதி நடவடிக்கைகளுக்கு தற்காலிக கட்டணமாக வசூலிக்கப்படும் “தொற்றுநோய் செஸ்” (pandemic cess) தொடங்குவதற்கான திட்டங்களை கைவிடுவதும் இதில் அடங்கியிருக்கிறது.

வரவு-செலவு திட்ட அறிக்கையின் கூர்மையான வலது சாரி உந்துதலை அடிக்கோடிட்டுக் காட்டும்வகையில், அரசாங்கமும் (வரவு செலவுத் திட்ட அறிக்கை குறித்து பல பத்திரிகைகளின் தலையங்கங்கள் பரிந்துரைத்தது போல) விவசாயிகளின் கோபத்தைக் தீர்ப்பதற்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தவில்லை மேலும் அது வேலையின்மை நெருக்கடிகளை முற்றிலுமாக புறக்கணித்துள்ளது. உண்மையில், வரவிருக்கும் வரவு-செலவுத் திட்டத்தில், எந்தவொரு கிராமப்புற குடும்பத்தின் ஒரு உறுப்பினருக்கும் வருடத்திற்கு 100 நாட்களுக்கு குறைவில்லாத, குறைந்தபட்ச ஊதிய வேலைகளை வழங்க வேண்டிய மகாத்மாகாந்தி தேசிய ஊரக வளர்ச்சி உத்தரவாதத்திற்கான செலவினங்களை குறைத்துவருகிறது. பல வருடங்களாக, இந்த திட்டத்தில் பெருந்திரளானவர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் அவர்களால் “உத்தரவாத திட்டத்தினை” அடைய முடியாத காரணத்தால் மில்லியன் கணக்கானவர்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

கடனால் சூழப்பட்டும் மற்றும் பொருளாதார மந்தநிலைகளிலிருந்து வெளியே விடுவிப்பதற்காக பற்றாக்குறை செலவினங்களை அதிகரிப்பதற்கும் அரசாங்கத்திடம் சில காலமாக கெஞ்சிக்கொண்டிருந்த இந்திய பெருவணிகங்கள் வரவு-செலவுத் திட்ட அறிக்கைக்கு உற்சாகத்துடன் பதிலளித்திருக்கின்றன. நிதி, வங்கி மற்றும் வாகன பங்குகளின் லாபத்தால் வழிநடத்தப்படும் இந்தியாவின் முதன்மை பங்கு குறியீடான சென்செக்ஸ் 5 சதவீதம் உயர்ந்தது.

ஒட்டுமொத்த வரவு-செலவுத் திட்டம் 34.8 டிரில்லியன் ரூபாய் (3 473 பில்லியன் அமெரிக்க டாலர்) ஆகும். இது 34.5 டிரில்லியன் ரூபாயிலிருந்து ஒரு சாதாரண அதிகரிப்பாக இருக்கிறது. இதை மார்ச் 31 இல் முடிவடையும் 2020-21 நிதியாண்டில் தற்போதய அரசாங்கம் செலவழிப்பதற்காக திட்டமிட்டிருக்கிறது. தொற்றுநோய் இருப்பதால், பல புதிய அவசர செலவின நடவடிக்கைகளை அறிவிப்பதற்கு அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறது ஆனால் நூறு மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் அவர்களுடைய வேலைகளை மற்றும் அல்லது வருமானத்தை இழந்திருக்கின்ற நிலையில் பஞ்ச பாணியிலான நிவாரணத்தை விட கொஞ்சம் கூடுதலாக வழங்கிவிட்டு அவற்றில் பெரும் பகுதி உயரடுக்குகளை பிணையெடுப்பதற்கே பயன்பட்டிருக்கின்றன.

இருந்தபோதிலும், 2020-21 க்கான அரசாங்கத்தின் நிதிப் பற்றாக்குறை, கடந்த பிப்ரவரி மதிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 3.5 சதவீதத்திலிருந்து இப்போது கணிக்கப்பட்டுள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.5 சதவீதமாக அதிகரித்து இருக்குமாயின் அதற்கு காரணம் அதிகரித்த செலவினங்களைவிட வருவாயில் ஏற்படும் பாரிய வீழ்ச்சி தான். பெரும்பாலான பெரும் பொருளாதார நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் அவசர செலவு நடவடிக்கைகள் உண்மையில் மிகவும் சிறியளவாக இருந்தன, அதற்கு சமூக செலவினங்கள் குறித்த பாஜகவின் விரோதபோக்கு மற்றும் சர்வதேச கடன் மதிப்பீட்டு முகமைகளுக்கு பயம் ஆகியவை காரணமாக இருக்கின்றன.

வரவு செலவுத் திட்டப்படி கடன் வாங்கல் 18.4 டிரில்லியன் ரூபாய்க்கு (250 பில்லியன் அமெரிக்க டாலர்) அல்லது 2020 -21 நிதியாண்டில் மொத்த செலவீனத்தில் 54 சதவிகிதம், அது 8 டிரில்லியனாக (109 பில்லியன் அமெரிக்க டாலர்) தொடக்கத்திலிருந்த மொத்த வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டை விட இரண்டு மடங்காகும்.

வரும் ஆண்டுகளில் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.8 சதவீதமாக இருக்கும் என்று சீதாராமன் முன் கணிக்கிறார்.

வரவு செலவுத் திட்ட அறிக்கையில் முக்கியமானவைகள் பின்வருமாறு:

• நெடுஞ்சாலைகள், பாலங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்பு வசதிகளுக்கான மூலதனச் செலவினங்களில் 5.5 டிரில்லியன் ரூபாய்க்கு (75 பில்லியன் அமெரிக்க டாலர்) ஒரு 34 சதவீத அதிகரிப்பு.

• 2.23 டிரில்லியன் ரூபாய் (30 பில்லியன் அமெரிக்க டாலர்) சுகாதார பராமரிப்பு செலவுகள் இரண்டு மடங்குக்கு மேலாக அதிகமாகும். இருந்தபோதிலும், இது கடுமையான நிலைமைகளில் மிகவும் குறைவானதாகும். முதலாவது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 சதவீதத்தைவிட குறைவு, இந்தியாவின் தற்போதைய சுகாதார பாராமரிப்பு செலவினம் உலகளவில் பார்க்கும்போது மிகவும் குறைவாகும். இரண்டாவது, சுத்தமான தண்ணீர் மற்றும் சுற்றுச் சூழலுக்கு செலவழிப்பதைப் போன்று சுகாதார பராமரிப்புக்கு மறைமுக தொடர்பு நிதியைப் போல கோவிட் 19க்கு எதிராக மக்களுக்கு வழங்கும் தடுப்பூசியின் ஒரு முறைக்கான செலவை சுகாதார வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் சேர்த்துள்ளது. இவைகள் வெட்டப்படுகின்றன, சுகாதார செலவினமானது 2020-21 இல் 721 பில்லியன் ரூபாய்களிலிருந்து (10 பில்லியன் அமெரிக்க டாலர்) 2021-22 இல் 796 பில்லியன் ரூபாய்களாக (11 பில்லியன் அமெரிக்க டாலர்) மட்டுமே அதிகரித்துள்ளது. அதாவது சுகாதார பராமரிப்பு செலவு தனிநபருக்கு 1 டாலராக அதிகரிக்கின்றது.

• அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை (முதலீட்டை திரும்பப் பெறுதல் மற்றும் முழுவதும் தனியார்மயமாக்கல்) 1.75 டிரில்லியன் ரூபாய்க்கு (24 பில்லியன் அமெரிக்க டாலர்) விற்பதற்கான ஒரு பெரிய திட்டம். “நான்கு மூலோபாய துறைகள்” தவிர அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் அதிலிருந்து நீக்குவது அரசாங்கத்தின் தற்போதைய இலக்காக இருப்பதாக சீதாராமன் கூறியுள்ளார்.

ஏற்கனவே கடந்த டிசம்பரில் மோடி அரசு அனைத்து அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் நிர்வாகங்களுக்கும் தங்கள் நிறுவனங்களின் பங்கு மதிப்புகளை அதிகரிப்பதிலும் பங்குதாரர்களுக்கு அவர்களின் ஈவுத்தொகை கட்டணத்தை உயர்த்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தல்களை அனுப்பியிருக்கிறது. ஏர் இந்தியா மற்றும் பிற அரசாங்க நிறுவனங்களை விற்பதற்கான பாஜக அரசாங்கத்தின் முயற்சிக்கு முன்பு விலக்களித்திருந்த இலாப-பசியுள்ள மாபெரும் நிதி முதலீட்டாளர்களின் பானையை போதுமான அளவு இனிப்பாக்குவதற்காக இத்தகைய உத்தரவுகள் வழங்கப்பட்டன.

• முதல் முறையாக அரசாங்கம் இரண்டு பொதுத்துறை வங்கிகளையும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தையும் தனியார்மயமாக்கும்.

• உணவு, சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கு மானியங்களில் கடுமையான வெட்டுக்கள் செய்யப்பட்டுள்ளன. மொத்த செலவினம் தற்போதைய நிதியாண்டில் 6.5 டிரில்லியன் ரூபாயிலிருந்து (88 பில்லியன் அமெரிக்க டாலர்) 2021-22 இல் வெறும் 3.7 டிரில்லியன் ரூபாயாக (50 பில்லியன் அமெரிக்க டாலர்) செங்குத்தாக வீழ்ச்சியடைவதற்கு இருக்கிறது.

• ஆயுத தளவாடங்களுக்கான செலவு 2021-22 இல் 20 பில்லியன் அமெரிக்க டாலருக்கு சற்று குறைவாக 20 சதவீதத்தால் அதிகரிக்கிறது. நடப்பு நிதியாண்டின் போக்கில், சீனாவுடனான எல்லை தகராறு காரணமாக மோடி அரசாங்கம் அவசரகால ஆயுத கொள்முதல் செய்வதற்காக வரவு செலவுத் திட்ட அறிக்கையில் இல்லாத 200 டிரில்லியன் ரூபாய் (3 பில்லியன் டாலர்) கூடுதலாக செலவிட்டுள்ளது.

2010 முதல், இந்தியாவின் இராணுவச் செலவு அதிகரித்துள்ளது, உலகின் ஒன்பதாவது இடத்திலிருந்து இராணுவத்திற்காக பெரியளவில் செலவு செய்வதில் மூன்றாவதாக முன்னிலையில் இருக்கிறது.

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் பல ஆண்டுகளாக கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகிறது. 2019-20 நிதியாண்டில், இது 4.2 சதவீதமாகக் வீழ்ச்சியடைந்தது, இது 2008 பூலோள நிதி நெருக்கடிக்குப் பின்னர் உடனே வந்த பதினொரு ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவாகும்.

2019 ஆகஸ்ட்-செப்டம்பர் இல், மறுதேர்தலில் வெற்றிபெற்றதுடன் மற்றும் புதிய வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்த சிறிது காலத்திலேயே, வளர்ச்சியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளின் அவசரத் தேவையை கண்டுகொள்ளத் தவறியதற்காக மோடி அரசாங்கம் பெருவணிகத்தின் கடும் விமர்சனத்திற்கு உள்ளான பின்னர் போக்கை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பெருநிறுவன வரி விகிதங்கள் கிழக்கு ஆசியாவிற்கு ஏற்ப வெட்டப்பட்டு கொண்டுவரப்படும் மேலும் அதன் தனியார்மயமாக்கல் உந்துதலின் ஒரு பாரிய வேகத்துடன் முடுக்கி விடப்படும் என்றும் அது அறிவித்தது.

தொற்றுநோயும் மற்றும் அதற்கு அரசாங்கத்தின் அழிவுகரமான பதிலிறுப்பும் எதிர்பார்த்திராத வகையில் பொருளாதார சுருக்கத்தை ஏற்படுத்தியது, இது பத்து மில்லியனுக்கும் கூடுதாலான இந்தியர்களை முழுமையான வறுமைக்குள் தள்ளியுள்ளது. ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 23.9 சதவீதமாகக் வீழ்ச்சியடைந்திருக்கிறது.

மோடி அரசாங்கத்தின் புள்ளிவிவர அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2021 நிதியாண்டில் பொருளாதாரம் 7.7 சதவிகிதமாக சுருங்கிவிடும். சர்வதேச நாணய நிதியம் போன்ற மற்றவைகள் இம்முழு நிதியாண்டில் அது இரட்டை இலக்க சுருக்கத்தை அடையும் என்று கூறியுள்ளன.

கடந்த மூன்று தசாப்தங்களாக தவறான வழியில் செல்வத்தை ஈட்டுகிற இந்தியாவின் ஆளும் வர்க்கம் கடைப்பிடித்துவரும் மூலோபாயத்தின் இரண்டு மைய அச்சுகளை இரட்டிப்பாக்குவதன் மூலம் இந்திய முதலாளித்துவத்தை உலுக்கும் நெருக்கடிக்கு மோடி அரசாங்கம் பதிலளித்துள்ளது: உலகளாவிய மூலதனத்திற்கான இந்தியாவை மலிவான தொழிலாளர் புகலிடமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட சமூக ரீதியாக தீங்கு விளைவிக்கும் சந்தை சார்பு, முதலீட்டாளர் சார்பு சீர்திருத்தங்களை திணித்தல்; 2005 முதல் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் "பூகோள மூலோபாய கூட்டணியில்" எப்போதும் நெருக்கமான உறவுகளை உருவாக்குதல்.

வரவு-செலவுத் திட்டத்தை அறிவிப்பதற்கு முன், சீதாராமன் மற்றும் அதிகளவு எண்ணிக்கையிலான மற்ற மூத்த அமைச்சரவை அமைச்சர்கள் கடந்த டிசம்பர் CII கூட்டு உச்சிமாநாட்டின்போது இந்திய மற்றும் வெளிநாட்டு வணிகத் தலைவர்களுடன் நெருக்கமாக கலந்துரையாடியுள்ளார்கள். இது இந்திய தொழில்கள் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது (Confederation of Indian Industries - CII). இந்த உச்சிமாநாடு பெருவணிகங்களுக்கும் மற்றும் ஊழல், எதெச்சதிகாரம் மற்றும் வகுப்புவாத மோடி அரசாங்கத்திற்கும் இடையில் உள்ள உறவுகளின் நெருக்கத்தை எடுத்துக் காட்டியுள்ளது.

இந்த உச்சிமாநாட்டில் அவரது உரையில், வரவு-செலவு திட்டத்திற்கான அடிப்படை உத்தரவுக்காக கூடியிருந்த முதலாளிகளிடம் சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். “வரவு-செலவுத் திட்டம் ஒரு தொற்றுநோய் ஏற்பட்டதற்கு பின்னர், உங்களுடைய கருத்துக்களை மற்றும் விருப்ப பட்டியலை நான் பெறவில்லையையென்றால்... முன்னொருபோதும் இல்லாத மாதிரியான ஒரு வரவு-செலவுத் திட்டத்தை வரைவது எனக்கு சாத்தியமாக இருந்திருக்காது” என அவர் கூறியுள்ளார்.

Loading