மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
1971 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸில் பிளாசா மிராண்டாவில் நடந்த லிபரல் கட்சி தேர்தல் பேரணியில் குண்டுவெடிப்பு என்ற தலைப்பில் வரலாற்றாசிரியர் டாக்டர் ஜோசப் ஸ்காலிஸ் இந்த வாரம் நிகழ்த்தவுள்ள பொது விரிவுரையில் கலந்து கொள்ள உலக சோசலிச வலைத் தளம் எங்கள் வாசகர்களை ஊக்குவிக்கிறது. இந்தக்குண்டுவெடிப்பானது 1972 இல் ஜனாதிபதி ஃபேர்டினாண்ட்மார்க்கோஸால் இராணுவச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான ஒரு முக்கியமான ஆரம்பத்தை குறித்ததுடன், இது நாட்டின் வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய நிகழ்வுகளில் ஒன்றாக இருந்தது.
தென்கிழக்கு ஆசிய ஆய்வுகளுக்கான UC Berkeley மையத்தின் அனுசரணையுடனான இந்த விரிவுரை, புதன்கிழமை மார்ச் 3, 5 PM PST (வியாழன், மார்ச் 4, 9 AM பிலிப்பைன்ஸில்; வியாழக்கிழமை, மார்ச் 4, நண்பகல் AEDT ஆஸ்திரேலியாவில், இந்தியாவில் புதன்கிழமை 6:30 AM,பிரான்ஸில் புதன்கிழமை 2 AM) நடைபெறும்.
கூட்டத்திற்கு நீங்கள் இங்கே பதிவு செய்யலாம்: https://cutt.ly/plazamiranda
கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்காலிஸ், பிலிப்பைன்ஸ் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (CPP) பாசிசவாத பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிக்கோ டுரேற்றவுக்கு 2016 இல் வழங்கிய ஆதரவிற்கும், மார்க்கோஸின் சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கு ஸ்ராலினிச கட்சிகளானCPP மற்றும் PKP இன் பாத்திரத்திற்கும் இடையேயுள்ள ஒற்றுமைகளை ஆய்வு செய்து ஒரு விரிவுரையை வழங்கினார். இந்த விரிவுரைக்கு ஒரு நாள் முன்னதாக, CPP நிறுவனர் ஜோஸ் மரியா சிஸன், அவர் ஒரு CIA முகவர் என்ற அவதூற்றின் அடிப்படையில் ஸ்காலிஸ் மீது ஒரு வன்ம நோக்கமுள்ள தாக்குதலைத் தொடுத்தார்.
இதே வழியில், பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPP) தலைமை தகவல் அதிகாரி மார்கோ வல்பூனா, இந்த வார விரிவுரையிலிருந்து மக்களைத் திசை திருப்புவதற்கான தீவிர முயற்சியாகCIAசார்பாக ஸ்காலிஸ் செயல்படுவதாக மீண்டும் இழிவுபடுத்தினார். இதற்கான காரணம் வெளிப்படையானது. பிளாசா மிராண்டா குண்டுவெடிப்பை கவனமாக ஆராய்ந்த தனது 2017 முனைவர் ஆய்வுக் கட்டுரையின் ஒரு அத்தியாயத்தில், மிகப்பெரும்பான்மையான வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில், குண்டுவெடிப்பிற்கு CPPதான் காரணம் என்பதை வெளிப்படுத்துகிறது என ஸ்காலிஸ் நிறுவிக் காட்டினார்.
பிளாசா மிராண்டா குண்டுவெடிப்பு குறித்த ஸ்காலிஸின் வரலாற்று ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை பற்றி பிலிப்பைன்ஸில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் கார்லோஸ் கோன்டே கவனம் செலுத்தி, நடைபெறவிருக்கும் விரிவுரை குறித்த WSWS கட்டுரையைப் அவர் ட்டுவிட்டரில் பகிர்ந்து கொண்டார்."இந்த கூற்று நிறுவப்பட்டால், அது மார்கோஸிற்கு பிந்தைய பிலிப்பைன்ஸின் வரலாற்றை தலைகீழாக மாற்ற உதவும்" என்று அவர் எழுதினார்.
ஸ்காலிஸின் கண்டுபிடிப்பானது அது குண்டுவீச்சுக்கு காரணம் என்று ஆதாரங்களை அளித்த முன்னாள் கட்சி உறுப்பினர்கள் உட்பட எவரையும் அவதூறு செய்துள்ள CPPஇன் சிடுமூஞ்சித்தனம், சந்தர்ப்பவாதம் மற்றும் குற்றத்தன்மை ஆகியவற்றின் மீதான ஒரு கடுமையானகுற்றச்சாட்டாக இருக்கும் என்பதையும்ஒருவர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மார்கோ வல்பூனாவின் அவதூறுகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஸ்காலிஸின் பேஸ்புக் இடுகையின் சற்று திருத்தப்பட்ட பதிப்பை நாங்கள் கீழே வெளியிடுகிறோம், மேலும் விரிவுரைக்கு பதிவு செய்ய எங்கள் வாசகர்களை மீண்டும் ஊக்குவிக்கிறோம்.
பெப்ரவரி 24 அன்று, பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPP) தலைமை தகவல் அதிகாரி மார்கோ வல்புவேனா, பிலிப்பைன்ஸில் 1971 பிளாசா மிராண்டா குண்டுவீச்சு குறித்த எனது நடைபெறவிருக்கும் விரிவுரையை முன்கூட்டியே நிராகரிப்புச் செய்து ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டார்.
இந்த ஆண்டு குண்டுவெடிப்பின் ஐம்பதாம் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது, இது பிலிப்பைன்ஸ் வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய மற்றும் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்த குண்டுவெடிப்பானது, ஆட்கொணர்வு மனுவை மார்கோஸ் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யவதற்கு சாக்குப்போக்கை வழங்கியது, மேலும் நாட்டில் சர்வாதிகாரத்தை திணிப்பது தொடர்பான அரசியல் போராட்டத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஒரு வருடம் கழித்து, மார்கோஸ் இராணுவச் சட்டத்தை அறிவித்தார்.
இந்த தலைப்பின் தீவிரமான உணர்திறன் கொண்ட தன்மையினால், CPP ஆனது பதிலளிக்க என் விரிவுரை வழங்கப்படும் வரை காத்திருக்கவில்லை, ஆனால் ஒரு தனிமனித தாக்குதல்கள் (ad hominems) மற்றும் தந்திரமான வாய்வீச்சு சொற்களைப் பயன்படுத்தி முன்கூட்டியே என் உயர்ந்த புலமையை நிராகரிப்பு செய்ய முயன்றது. "பொய்களை" வாந்தியெடுப்பவர், "பிலிப்பைன்ஸ் இராணுவம் மற்றும் அமெரிக்க CIA இன் நீண்டகாலமாக வெளிப்படுத்தப்பட்ட பொய்களை மீண்டும் மீண்டும் கொண்டு வரும்" ஒரு "ட்ரொட்ஸ்கிச வெறியர்" என்று வல்புவேனா என்னைக் கூறிப்பிட்டார். "பிலிப்பைன்ஸ் வரலாற்றின் ஒரு வெட்கமற்ற கம்யூனிச-விரோத பதிப்பை" அவர் உருவாக்குகிறார் என்றும் குற்றம் சாட்டினார்.
CPP இன் அறிக்கையைப் படிப்பவர்கள் தங்களைக் தாங்களே பின்வரும் கேள்வியை கேட்டுக்கொள்ள வேண்டும்: CPP ஏன் என்னை மிகவும் அதிகமாக தாக்குகிறது, என் விரிவுரையில் கலந்து கொள்ளுவதிலிருந்து முன்கூட்டியே பொதுமக்களை தடுக்க ஏன் முயற்சிக்கிறது? மக்கள் கேட்கக்கூடாது என்று CPP விரும்பும் விடயம் என்ன?
கட்சியின் நிறுவனரும் சித்தாந்த தலைவருமான ஜோமா சிஸன், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான் ஆற்றிய உரையின் போது இதே பாணியில் நடந்து கொண்டதோடு, 2016 தேர்தலில் டுரேற்றக்கு CPP இன் உற்சாகமான ஆதரவின் வரலாற்று பின்னணியையும் ஆய்வு செய்தார். நான் என் உரை நிகழ்த்துவதற்கு முன், சிஸன் என்னை தாக்குவதற்கு ஆங் பயான் (Ang Bayan) பத்திரிகையின் ஒரு முழு பிரதியையும் அர்ப்பணித்தார். கட்சி எப்போதும் டுரேற்றவை ஆதரித்தது என்பது ஒரு "அப்பட்டமான பொய்" என்று அவர் கூறினார்.
எனது விரிவுரையில், ஏராளமான சான்றுகளுடன், டுரேற்றவின் எழுச்சிக்கு கட்சி எவ்வாறு உதவியது என்பதையும், அவரது ஜனாதிபதி பதவி மற்றும் போதைவஸ்த்துகளுக்கு எதிரான போர் ஆகிய இரண்டையும் உற்சாகமாக ஆதரித்ததையும் நான் நிறுவிக் காட்டினேன். 7,000 க்கும் மேற்பட்ட மக்கள் இப்போது விரிவுரையைப் பார்த்துள்ளனர்.
சிஸன் என்னை ஒரு CIA முகவர் என்று பலமுறை கண்டிப்பதன் மூலம் இதற்கு பதிலளித்தார், மேலும் எனது ஆராய்ச்சிக்கு CIA நிதியுதவி அளித்தது என்பது “அனைத்து UC பேர்க்லிக்கும்” தெரியும் என்று கூறினார்.
நான் எனது ஆராய்ச்சி டாக்டர் பட்டத்தை (PhD) பெற்ற, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய ஆய்வுகளுக்கான UC Berkeley துறை நிர்வாகமானது சிஸனின் அவதூறு குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக என்னை பாதுகாக்கும் ஒரு பொது அறிக்கை வெளியிட்டது:
"பேர்க்லியில் உள்ள எங்களுக்கு இது பற்றி எதுவும் தெரியாது. இந்த தீங்கிழைக்கும், பொறுப்பற்ற மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் நிராகரிக்கிறோம்.
"Fulbright கற்கை உதவித்திட்டத்தின் ஒரு முன்னாள் அறிஞரான ஸ்காலிஸ், பிலிப்பைன்ஸ் கம்யூனிசத்தின் வரலாறு பற்றிய புரிதல்களை மாற்றியமைத்த ஒரு திறமையான வரலாற்றாளர் ஆவார். ஒரு விருது பெற்ற ஆசிரியர், ஸ்காலிஸ் பெருந்தன்மை மற்றும் பிலிப்பைன்ஸ் பற்றிய தனது ஆழமான அறிவை பகிர்ந்து கொள்ள அவரது அர்ப்பணிப்பு, எங்கள் தென்கிழக்கு ஆசிய ஆய்வுகள் திட்டத்தில் எண்ணற்ற மாணவர்களின் வாழ்க்கையை மேலும் மாற்றியமைத்துள்ளது.
"நாங்கள் ஜோசப் ஸ்காலிஸுடன் நிற்கிறோம்."
நடைபெறவிருக்கும் எனது பேர்க்லி விரிவுரைக்கு CPP இன் பதில், திரும்பத்திரும்ப செய்யப்படும் ஒன்றாகும். இது பொய்கள் மற்றும் குற்றஞ்சாட்டுதலால், எனது புலமையை நிராகரிக்கவும், எனது சான்றுகளையும் வாதங்களையும் ஆராய்வதிலிருந்து மக்களைத் தடுக்கவும் முயற்சிக்கிறது. அவர்களின் அடிப்படை அரசியல் நிலைப்பாடு என்னவென்றால், இரண்டு சாத்தியமான சிந்தனைப் பள்ளிகள் மட்டுமே உள்ளன. ஒன்று வரலாறு பற்றிய CPP இன் பதிப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், அல்லது நீங்கள் இராணுவத்தினதும் மற்றும் CIA இனதும் முகவராகும்.
இந்த வழியில்தான் CPP ஆனது அதன் வரலாற்றைப் பற்றிய எனது மார்க்சிச ஆய்வை "கம்யூனிச எதிர்ப்பு" என்று முத்திரை குத்த முயற்சிக்கிறது. CPP ஆனது "பிலிப்பைன்ஸ் இடது" என்ற வார்த்தையை தனியுரிமை உணர்வோடு பயன்படுத்துகிறது. CPP ஐ தவிர வேறு ஒரு இடதும் இல்லை, சிஸன் தான் அதன் தீர்க்கதரிசி. இதனால்தான் கட்சியின் பங்கு பற்றிய எனது வரலாற்று அம்பலப்படுத்தல் சிஸனை மிகவும் மோசமாகக் காட்டுகிறது. ஏனென்றால் அவரோ அவரது கட்சியோ பெயருக்கு தகுதியற்றவர் என்பதை இது நிரூபிக்கிறது.
விரிவுரைக்கும் உரையாடலுக்கும் பதிவுசெய்து கலந்து கொள்ள நான் உங்களை ஊக்குவிக்கிறேன். ஆதாரங்களை நீங்களே எடைபோடுங்கள். அவதூறு மற்றும் பொய்களுக்குப் பின்னால் தங்கள் சொந்த வரலாற்றை தொடர்ந்து மறைக்க முடியும் என்று நினைக்கும் கட்சித் தலைவர்களால் உங்களை அச்சுறுத்த அனுமதிக்காதீர்கள்.
மீண்டும் நீங்கள் இங்கே பதிவு செய்யலாம்: https://cutt.ly/plazamiranda