ஜேர்மன் இடது கட்சி தீவிர வலதுசாரி AfD ஏற்றுக்கொள்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கொரோனா வைரஸ் தொற்று கடுமையாக வர்க்க பதட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிர்களை இழந்த நிலையில், நூறாயிரக்கணக்கானோர் சுகாதாரப் பிரச்சினைகளுடன் போராடுகிறார்கள். மேல்மட்ட 10 சதவிகிதத்தினர் தம்மை இழிவான முறையில் செல்வந்தர்களாகிக்கொள்கையில் மில்லியன் கணக்கானவர்கள் வருமான இழப்பைச் சந்தித்துள்ளனர். மீண்டும் திறக்கும் கொள்கையுடன், ஆளும் உயரடுக்கு அதன் இலாபங்களுக்கு உத்தரவாதம் அளிக்க மனித உயிர்களை தியாகம் செய்கிறது.

இந்த நிலைமைகளின் கீழ், அரசியல் போக்குகளின் வர்க்க தன்மை அப்பட்டமாக வெளிப்படுத்தப்படுகின்றது. தனது புதிய புத்தகமான சுய-நீதியுள்ளவர்களில் (The Self-Righteous Ones), இடது கட்சி அரசியல்வாதி ஸாரா வாகன்கினெக்ட், ஜேர்மனிக்கான தீவிர வலதுசாரி மாற்றீட்டின் (AfD) புலம்பெயர்ந்தோர்-விரோத மற்றும் தேசியவாத நிலைப்பாட்டை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு, பரந்தளவிலானோர் நோய்த்தொற்றுக்குள்ளாக்கப்பட வேண்டும் என்ற கொள்கையின் கூர்மையான ஆதரவாளராக வெளிப்படுகிறார். சனிக்கிழமையன்று வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தில் இடது கட்சியின் முன்னணி தேர்தல் வேட்பாளராக 61 சதவீத பிரதிநிதிகளால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது அவரது பிற்போக்குத்தனமான கருத்துக்கள் கட்சியின் பெரும்பான்மையினரால் பகிர்ந்து கொள்ளப்படுவதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த தேர்வுக்கான வாக்களிப்பதற்கு முன்னர், இடது கட்சி நாடாளுமன்ற பிரதிநிதி நீமா மொராசாட், வாகன்கினெட்டின் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட சிலபகுதிகளை ட்விட்டரில் வெளியிட்டார். புதன்கிழமை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட இந்த புத்தகம், "எங்களுக்கு வாக்களிக்கும் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், இனவெறியை எதிர்ப்பதற்கும் பிரச்சாரம் செய்யும் நூறாயிரக்கணக்கான மக்களுக்கு எதிரான போர் அறிவிப்பு" என்று மொராசாட் கூறினார். கட்சியின் கூட்டாட்சி விவகாரங்களின் தலைவர் ஜோர்க் ஷிண்ட்லரும் புத்தகத்தில் எழுதப்பட்ட கருத்துக்களில் இருந்து தன்னை விலக்கிக் கொள்ள முயன்றார்.

ஆனால் வாகன்கினெக்டின் தொடர்ச்சியான தீவிர வலதுசாரி கிளர்ச்சியூட்டலும் அவரது புதிய பாதையும் இடது கட்சியின் வேலைத்திட்டத்திற்கு முரணாக இல்லை. அவர் அகதிகளுக்கு எதிராக கிளர்ச்சியூட்டினால், AfD தழுவி, வலதுசாரி தீவிரவாத கொரோனா வைரஸ் மறுப்பாளர்களுடன் ஒன்றிணைகையில், அந்த வேலைத்திட்டத்தை திணிக்க இந்த தீவிர வலதுசாரி கழிவுகளை அணிதிரட்ட முற்படும் நிலைப்பாட்டில் இருந்தே அவர் அவ்வாறு செய்கிறார்.

பல ஆண்டுகளாக கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக, வாகன்கினெக்ட் இடது கட்சியின் தொழிலாளர் எதிர்ப்பு கொள்கைகளின் உருவாக்குனர்களில் ஒருவராவார். தனது முழு நாடாளுமன்றக் குழுவோடு சேர்ந்து, வங்கி பிணையெடுப்புகளை அவசர அவசரமாக நிறைவேற்ற வாக்களித்தார். இது நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களை பொதுப் பணத்தில் இருந்து பெரும் பணக்காரர்களின் பைகளுக்கு திருப்பிவிட்டது. மாநில அளவில் அரசாங்கங்களுடன் இடது கட்சியின் பங்களிப்புடன் ஊதியக் குறைப்பு, மருத்துவமனைகள் மற்றும் வீட்டுவசதிகளை தனியார்மயமாக்கி, காவல்துறையை கட்டியெழுப்புவதற்கான தீவிர ஆதரவாளராவார்.

இந்த கொள்கைகள் வாகன்கினெக்டின் கிளர்ச்சியூட்டலுக்கு அடிப்படையாகும். தீவிர வலதுசாரிகளின் பாரம்பரியத்தில், அவர் தன்னை சாதாரண மனிதனின் சார்பாக கதைப்பவராக தன்னை சித்தரித்துக்கொண்டு சுயநீதியுள்ள உயரடுக்கைக் கண்டிக்கிறார். அதே நேரத்தில் அவர் உண்மையில், ஆளும் வர்க்கத்தின் நிகழ்ச்சி நிரலை தேசியவாதத்தை ஊக்குவிப்பதன் மூலமும், ஊதியங்கள் மீதான தாக்குதல்களுக்கு புலம்பெயர்ந்தோரைக் குற்றம் சாட்டுவதன் மூலமும், ஜேர்மன் மூலதனத்தை அதன் வெளிநாட்டு போட்டியாளர்களுக்கு எதிராக பாதுகாப்பதன் மூலமும் முன்வைக்கின்றார்.

அவர் தனது புத்தகத்தின் பொது விவாதங்களில் கவனம் செலுத்துவதில் மகிழ்ச்சி அடையும் இடது கட்சி மற்றும் பசுமைக் கட்சியின் அடையாள அரசியலைப் பற்றிய வாகன்கினெக்டின் விமர்சனங்கள் இந்த வலதுசாரி நிலைப்பாட்டில் இருந்து வெளிப்படுகிறது. அடையாள அரசியல் தொழிலாளர்களைப் பிளவுபடுத்துகிறது மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தை தடுக்கிறது என்ற உண்மையை அவர் விமர்சிக்கவில்லை. மாறாக, புலம்பெயர்ந்தோரை விலக்குவதையும், வேலை சந்தையில் அவர்களுக்கு எதிரான பாகுபாட்டையும் ஆதரிப்பதன் மூலம் அவர் இந்த பிளவுகளை ஆதரிக்கிறார். இந்த வழியில், அவர் கவனத்தை இதற்கான இடது கட்சியின் பொறுப்பிலிருந்து திசை திருப்புகிறார்.

உதாரணமாக, இடது கட்சி சமூக ஜனநாயகவாதிகளுடன் கூட்டாக, பேர்லினில் உள்ள பொதுத்துறை ஊழியர்களின் ஊதியத்தை 12 சதவீதம் வரை குறைத்தது. ஒரு வலதுசாரி தீவிரவாதியைப் போலவே, வாகன்கினெக்ட் வெளிநாட்டினரை இதற்கு பொறுப்பாளிகள் என்று அறிவிக்கிறார். மேலும் பல பகுதிகளில் ஊதியக் குறைப்புக்கள் “ஜேர்மனிக்கு அதிக அளவில் குடியேறியதன் காரணமாக மட்டுமே” என்று கூறுகின்றார். "திறந்து உலகம் மற்றும் பன்முகத்தன்மை பற்றிய தாராளவாத-இடது கதையாடல்களால் அவர்களுக்கு (தொழிற்சங்கங்கள்) புலம்பெயர்ந்தோரின் வேலைவாய்ப்பு பிரச்சினையை எழுப்பக்கூடத் துணியவில்லை" என்று அவர் கூறினார்.

வாகன்கினெக்ட் வெறுமனே "முதலில் ஜேர்மனியர்களுக்கான வேலைகள்" என்ற முழக்கத்தை மட்டும் ஏற்றுக்கொள்ளவில்லை மாறாக வலதுசாரி தீவிரவாத AfD அரசியல்வாதிகளை வெளிப்படையாக பாதுகாக்கிறார். "பொது விவாதங்களில் வலதுசாரி அரசியல்வாதிகளை தாக்கப் பயன்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் ஆதாரமில்லாமல் வலியுறுத்தல்கள்" "பெரும்பாலும் மிகைப்படுத்தப்பட்டவை" என்று அவர் கூறினார். எடுத்துக்காட்டாக, AfD இணைத் தலைவர் ஜோர்க் மொய்த்தன் “ஜேர்மனியில் ஒரு புதிய வகை பாசிசத்தை அறிமுகப்படுத்த விரும்புகிறார்” என்ற எச்சரிக்கை முற்றிலும் நியாயமற்றது என்று கூறுகின்றார்.

புத்தகம் முழுவதும், அவர் சாராம்சத்தில் AfD யின் தீவிர வலதுசாரி வேலைத்திட்டம், ஒரு ஜேர்மன் மேலாதிக்க கலாச்சாரத்தைப் பற்றிய கொந்தளிப்புகள் மற்றும் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு எதிராக நிற்க வேண்டிய ஒரு வலுவான தேசிய அரசிற்கான வேண்டுகோள்களை முன்வைக்கிறார்.

சமீபத்திய மாதங்களில், தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கடைசி மீதமுள்ள கட்டுப்பாடுகளை கைவிடுவதை உறுதி செய்வதற்காக, தீவிர வலதுசாரி “பக்கவாட்டு சிந்தனையாளர்” (Querdenker-Demonstranten) என்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், கொரோனா வைரஸ் மறுப்பாளர்கள் மற்றும் தடுப்பூசி எதிர்ப்பு ஆதரவாளர்களை அணுகுவதற்காக வாகன்கினெக்ட் தனது யூடியூப் நிகழ்ச்சியான “Wochenschau” ஐப் பயன்படுத்தினார்.

"இளம் மற்றும் ஆரோக்கியமான மக்களை தடுப்பூசி எடுக்க ஊக்குவிப்பது குற்றமாகும் என்று நான் நினைக்கிறேன். இதன் நீண்டகால விளைவுகள் முற்றிலும் தெளிவாக இல்லை," என்று அவர் டிசம்பர் 10 அன்று கூறினார். சில்லறை விற்பனை நிலையங்களை மூடுவதால் எதுவும் அடையப்படவில்லை, ஆனால் "எங்கள் பொருளாதார அடிப்படையை அழித்துவிட்டது” என்று அவர் ஜனவரி 7 அன்று வலியுறுத்தினார். பின்னர் பிப்ரவரி 4 ஆம் தேதி, பள்ளிகள் மற்றும் பணியிடங்கள் மூடப்பட்டதன் விளைவாக தொற்று விகிதங்கள் சரிந்ததற்கான எந்த ஆதாரத்தையும் அவர் நிராகரித்தார்; மார்ச் மாதத்தில் PCR சோதனைகள் வெளிப்படையான நோய் அறிகுறிகள் இல்லாத தன்மையைக் கண்டறிவதால் தொற்று விகிதங்கள் மிகைப்படுத்தப்பட்டதாக அவர் அறிவித்தார்

இந்த ஆதாரமற்ற கூற்றுக்கள் அனைத்தும் கொரோனா வைரஸ் மறுப்பாளர்களிடையே நன்கு அறியப்பட்டவையும், அவை விஞ்ஞானிகளால் நீண்ட காலத்திற்கு முன்பே நிராகரிக்கப்பட்டவையுமாகும். நுண்ணியிரியலாளர் மெலனி பிரிங்க்மானின் கணக்கீடுகளின்படி, 65 வயதிற்கு உட்பட்ட மக்கள் பெருமளவில் தொற்றுநோயை தொடர அனுமதிக்கும் வாகன்கினெக்டின் கொள்கையை ஒருவர் அனுமதித்தால், இளைய வயதினரில் 180,000 பேர் வரை தங்கள் உயிர்களை இழக்கும் அபாயம் உள்ளது. பிப்ரவரியில் நடந்த “Anne Will” தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் கூறியது போல, “நாங்கள் நமது பொருளாதாரத்தை அழிக்கக்கூடாது” என்பதால் இந்த இறப்பு எண்ணிக்கை வாகன்கினெக்டிற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய வேண்டிய விலை என்றார்.

(அடையாள அரசியல் என்பது சிறிய மற்றும் இன்னும் மூர்க்கத்தனமான சிறுபான்மையினரின் மீது கவனம் செலுத்துவதைக் குறிக்கிறது. அவை ஒவ்வொன்றும் அதன் அடையாளத்தை சில விசித்திரங்கள் மூலம் காண்கின்றன, இதன் மூலம் அது பெரும்பான்மை சமுதாயத்திலிருந்து வேறுபடுகிறது, மேலும் அது தான் ஒரு பாதிக்கப்பட்டவர் எனக் கூறுகிறது) வாகன்கினெக்ட் தனது புதிய புத்தகத்தின் மேற்கோள் காட்டியதை AfD பிரதிநிதி டானியல் ராய் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த படத்தை வெளியிட்டார்

வாகன்கினெக்ட் தனது இனவெறி, தேசியவாதம் மற்றும் பாரியளவிலான நோய்த்தொற்றிற்கான மூலோபாயத்திற்காக AfD யிடமிருந்து பாராட்டுக்களை வென்றதில் ஆச்சரியமில்லை. சாக்சோனி-அன்ஹால்ட் மாநில நாடாளுமன்றத்தில் ஒரு AfD துணைத் தலைவரான டானியல் ராய், வாகன்கினெக்ட்டின் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட பகுதியையும் மற்றும் வாகன்கினெக்ட் மற்றும் AfD சின்னத்துடன் ஒரு படத்தை வெளியிட்டார். வலதுசாரி தீவிரவாதிகளின் ’வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலக் கட்சி ட்விட்டரில், “ஸாரா வாகன்கினெக்ட் தலையில் ஆணியை அடித்தார்” என்று எழுதியது.

எவ்வாறாயினும், முன்னணி வேட்பாளராக அவரது தீர்க்கமான தேர்தல் இந்த வலதுசாரி நிலைப்பாடுகளையும் இடது கட்சியால் ஆதரிக்கிறது என்பதை தெளிவுபடுத்துகிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து, பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் சமூக நோய் எதிர்ப்பு சக்தியின் மனிதாபிமானமற்ற கொள்கையை சுமத்தியுள்ளன. இது பெருநிறுவன இலாபங்களை மனித வாழ்வை விட முக்கியமானதாக முன் வைக்கிறது. இதன் விளைவாக, சமூக சமத்துவமின்மை முன்னோடியில்லாத அளவை எட்டியுள்ளது. அதே நேரத்தில் 80,000 பேர் வைரஸால் இறந்துள்ளனர். பாரியளவில் புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துவதையும், அடக்குமுறை அரச எந்திரத்தை வலுப்படுத்துவதையும் கட்சிகள் முடுக்கி விடுகின்றன.

இந்த பிரச்சினைகள் அனைத்திலும், இடது கட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. கட்சியின் ஒரே மந்திரி தலைவர், துரிங்கியா மாநிலத்தில் உள்ள போடோ ராமலோ, பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதில் குறிப்பாக ஆக்கிரோஷமாக உள்ளார். கடந்த ஏழு நாட்களில் 100,000 பேருக்கு 235 தொற்றுக்கள் பதிவாகியுள்ள நிலையில், ஜேர்மனியில் தொற்றுநோய்களின் அதிக விகிதம் அவரது மாநிலத்தில் உள்ளது. பேர்லினிலும் பிரேமனிலும் உள்ள சமூக ஜனநாயகக் கட்சி, பசுமைவாதிகள் மற்றும் இடது கட்சி ஆகியோரால் உருவாக்கப்பட்ட கூட்டணிகளும் வெகுஜன நோய்த்தொற்று கொள்கையை முழுமையாக ஆதரிக்கின்றன.

துரிங்கியா, நாடுகடத்தலில் பல ஆண்டுகளாக மக்கள் தொகையில் ஒரு கூடிய விகிதத்தைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாகும். ஆப்கானிஸ்தான் போன்ற போர் மண்டலங்களுக்கு கூட அரசு நாடு கடத்துகின்றது. இடது கட்சி அரசாங்கத்தில் இருக்கும் ஒவ்வொரு மாநிலத்திலும், தொற்றுநோயை மீறி அகதிகள் மனிதாபிமானமற்ற முகாம்களில் அடைக்கப்பட்டு, நாளாந்தமும் அடிப்படையில் மரண அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர். பேர்லினில், சமூக ஜனநாயகக் கட்சி / இடது கட்சி / பசுமை அரசாங்கம் ஒரு புதிய பொலிஸ் சட்டத்தை ஏற்றுக்கொண்டது. அது ஒரு பொலிஸ் அரசுக்கு வழி வகுக்கிறது.

இந்த வலதுசாரிக் கொள்கைகளின் அடிப்படையில், இடதுசாரிக் கட்சி நேரடியாக AfD யுடன் ஒத்துழைத்த பல சம்பவங்கள் உள்ளன. கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள், AfD மற்றும் சுதந்திர ஜனநாயகவாதிகள் உள்ளடங்கலாக துரிங்கியாவில் ஒரு கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர், அது ஜேர்மனி மற்றும் சர்வதேச அளவில் சீற்றத்தைத் தூண்டியது. வலதுசாரி தீவிரவாதக் கட்சி மாநில நாடாளுமன்றத்தின் துணைத் தலைவர் பதவிகளில் ஒன்றைப் பெறுவதை ராமலோ தனது வாக்கு மூலத்தில் உறுதிப்படுத்தினார். உள்ளூர் மட்டத்தில், இரு கட்சிகளுக்கிடையில் பல கூட்டணிகள் உள்ளன.

வாகன்கினெக்டினை பற்றி இடது கட்சிக்குள் விமர்சனங்கள் இருக்கின்றன என்றால், இது வெறுமனே தினசரி அடிப்படையில் கட்சி நடைமுறையில் எதை செயல்படுத்துகிறது என்பது பற்றி அவர் வெளிப்படையாகப் பேசுவதால் தான். சமூக செலவின வெட்டுக்கள், பாரிய கொரோனா வைரஸ் தொற்று மற்றும் இராணுவவாதம் ஆகியவற்றை சுமத்துவதற்கு பொறுப்பான அனைத்துக் கட்சி கூட்டணியின் ஒரு பகுதியாக இடது கட்சி உள்ளது. இந்த இலக்கை அடைவதற்கே வாகென்கினெக்ட் வலதுசாரி தீவிரவாத அழுக்குகளை அணிதிரட்டுகின்றார்.

இது கட்சி கூட்டுக்களை நிராகரித்து, சமத்துவமின்மை, போர் மற்றும் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்புவதற்கான அவசரத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த சோசலிச முன்னோக்குக்காக போராட மத்திய தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) பங்கேற்கிறது.

Loading